Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினை விதைத்துமா வினை அறுப்பது?!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிகளைக் கொடுத்தவனை விட மருந்து போடுபவனை மனசுக்குப்பிடித்துத்தானே போகின்றது? “ஒரு வகையில் அது தவறுதான் என்று கொண்டாலும்.....’போலியாய் வாழ்வதைவிட நிஜத்துடன் வாழ்வது நிம்மதி தானே?!

அப்படி போடுங்கோ.....வாழ்வுதான் முக்கியம் .நாமும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ விடவேண்டும் ''.....

வாழு! வாழவிடு” என்பதற்காகத்தானே போராட்டமே! அப்படியிருக்கும் போது தன் பாதியென்று வருபவளை ‘விரோதி போல் நடத்தினால் அந்த உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் ஏற்றால் போல் ஓர் உற்றதுணை வேண்டித்தானே இருக்கிறது?

  • Replies 92
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பதிகளிடையே இடைவெளிகள் ஏற்படுவதும் போவதும் சாதாரணமான ஒன்று. அதற்காக குறுக்குசால் ஓட்டுவது சரி என்று சொல்ல முடியுமா? அப்படியென்றால் எல்லக் குடும்பங்களிலும் குறுக்குசால் தவிர்க்க முடியாமல் போய்விடும்..! :lol:

இந்தக் கதையில் வரும் நிச்சயிக்கப்பட்ட ஆண் தவறு செய்பவராகவே வைத்துக்கொண்டாலும், அத்தவறுக்கு இப்பெண் செய்யும் தவறு பிராயச்சித்தம் ஆகாது. பெண்ணுக்கு ஆறுதல் அளிக்கச் சென்றவர் தன் காதலை வெளிப்படுத்துவது conflict of interests ஆகும்..! :)

இரண்டாமவருடன் காதல் அளவுக்கும் போகத்துணிந்த பெண்ணுக்கு, முதலாமவரிடமிருந்து தானாக்ப் பிரியும் அளவுக்கு சிந்தனை வளர்ச்சி இல்லையா? இனிமேல் பிரிந்தால் இரண்டாம் நாயகனின் தூண்டுதலின் பேரில்தான் பிரிந்து சென்றார் என்று கொள்ளப்பட வேண்டும். இச்செயல் ஏற்புடையதல்ல. நியாயத்தன்மை குறைந்தது. :unsure:

தவறு செய்பவராகவே வைத்துக்கொண்டாலும் அல்ல” அவர் தவறு செய்பவர்.

இதில் ஒருவர் மீது மட்டும் குற்றம் சாட்டிவிட்டுட்டுபோகவல்ல இப்படியெல்லாம் நடப்பதற்கான அடிப்படைக்காரணம் எது? அதைக் களைய முடியுமா என்பதற்காகத்தான் நிகழ்வுகளின் நிதர்சனங்களை ‘கதையாக எழுதினேன்.

முதல் குற்றம்: அந்த நிச்சயிக்கப்பட்டவன் மீதுதான் ‘நிச்சயிக்கப்பட்டவளை அவன் பயன்படுத்தியதே ‘ஏடி எம் மெஜின்” மாதிரித்தான் பணத்துக்காக.

- ‘உன்ர நிறத்துக்கு உன்னை நான் ஏற்றுக்கொண்டதற்கே பூப்போட்டுக்கும்பிடவேண்டும

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் படித்தவுடன் எண்ணத்தில் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்..! :unsure:

களவொழுக்கத்துக்கு கவிதை ஒரு கேடா? :lol:

டங்கு அண்ணை “ ஒழுக்கத்திற்கான வரைவிலக்கணத்தை கூறுங்களேன்” காதலில் தான்வெற்றி பெறவில்லை என்பதற்காக எல்லோராலும் ‘தங்கம்மா அப்பாக்குட்டி” ஆகமுடியாது.

பெண்கள் வெறும் உடல் சுகத்துக்காக தேடி அலைபவர்கள் அல்லர். ‘தாசி குலத்தில் பிறந்துமே தான் ஒருவனோடு மட்டுமே வாழவேண்டுமென்று நோக்கம் கொண்டு வாழ்ந்தவள் ‘மாதவி”. அது பெண்ணின் பெருமையைத்தான் காட்டுகின்றது.

பெண்ணை இப்படி மட்டமாக எல்லாம் எடை போடாதீர்கள். எங்கள் சமுதாயத்தில் இன்னும் பலர் கண்ணகியாகத்தான் இருக்கின்றார்கள் ‘வருவான் வருவான் என்னிடம் திரும்பி திருந்தி வருவான் என்ற எதிர்பார்ப்போடு” ‘பணத்துக்காக மட்டும் ஒருத்தி என்று நினைத்துக்கொண்டு நடக்கின்ற ஆண்கள் ஏராளம் ஏராளம்.

‘நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை” என்று ஆண்கள் பாடிக்கொண்டு இன்னொரு பெண்ணை மிக இலகுவாக சிக்க வைத்து விடுவார்கள்.

ஆனால் பெண்கள் அந்த உணர்வோடு எந்த ஆணுடனும் பழகுவதில்லை. முதல் காதல் ஏமாற்றப்பட்டு விட்டாலே அடுத்த காதலுக்குதயாராவதில்லை பெண்கள் தன் மனப்புண்ணை ஆற்ற சில நேரங்களில் தோழிகளும் ஒரு சில பேருக்கு நட்புரீதியான தோழனும் அமைவது உண்டு. அதுவே பிறகு ‘எனக்காக வாழும் இவனுக்காக வாழ்ந்தால் என்ன ?” என்கின்ற எண்ணத்தை வார்த்துவிட்டுசென்று விடுகிறது.

‘எத்தனை எத்தனையோ பெண்களின் மனக்குமுறல்களை நான் நேரிடையாகக் கண்டு கேட்டு இருக்கின்றேன். ‘வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதை மட்டுமே நிலை நிறுத்தி எதையும் ஆராயாமல் கட்டிக்கொடுத்த பெற்றோர் மீது எனக்கு மிகப்பெரும் கோபம் உண்டு.

அதைப்பற்றியெல்லாம் ஆறுதலாக எழுதுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல Erotic ஆக போகுது தமிழ் தங்கை. தொடருங்கள். :lol:

நுணா அண்ணா,

இதுகதை என்று சொல்வதை விட நிகழ்காலத்தொகுப்புகளின் வடிவமைப்பு என்று சொல்லலாமோ?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” மனச்சாட்சியோடு வாழ்பவர்களுக்கு. இல்லையா? தனக்கு நிச்சயிக்கப்பட்டவன் ஒரு வாரமாக இவளை அழைக்கவில்லை. இவள் அழைத்தும் பயனில்லை என்னதான் ஆகிவிட்டதோ என்ற ஏக்கத்தோடு அவனுடைய அறையில் தங்கியிருக்கும் இன்னொரு நண்பனை அழைத்து வினாவுகின்றாள். | அட கதை இப்படிப்போகுதா? இவன் எதையோ மறைக்கிறானா என்ற கண்ணோட்டத்தில் அந்த இடையில் புகுந்து விளையாடும் வில்லங்கமான ஆட்களும் உண்டு.

இது புரியாமல். தவித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் கண்ணீரை சோகத்தைக் கண்ட ஒருவன் ‘ என்ன முகமெல்லாம் வாட்டமா இருக்கு என்று கேட்க மாட்டானா/ இல்லை ஒன்றுமில்லை என்று மறைத்தாலும். அவளுக்கு நெருகமானவர்களிடமாவது இவளைப்பற்றியொரு அக்கறையில் விசாரிக்கும் ஒரு நல்ல நட்பு இருக்க கூடாதா?

‘ஏன் இந்த சமுதாயம் காதலைக் கட்டிலோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப்பார்க்கி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கப்பா.

தங்கைச்சி கதை நல்லகதை.

கு.சா...எதற்கும் அக்கம் பக்கம் யாரின்ட வீட்டையாது சத்தம் கொஞ்சம் அதிகமாக வந்தால் ...நீங்கள் அவர்களுட்ன் உங்கள் உறவை வளர்த்துகொள்ளுங்கோ?

கவிதை .கதை என்று எழுதி கொடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்பவராகவே வைத்துக்கொண்டாலும் அல்ல” அவர் தவறு செய்பவர்.

நீங்களே சொல்லியிருக்கிறீங்கள் இது உண்மைக்கதை என்று.. அப்படி இருக்கும்போது, பெண்ணின் பக்க நியாயத்தை வைத்தே நீங்கள் கதையை எழுதியுள்ளதாக எனக்குப் படுகிறது. நிச்சயிக்கப்பட்ட அந்த முதலாவது ஆணின் தரப்பையும் விசாரித்தால்தான் தீர்ப்பு எழுத முடியும். அதுவரையில் "தவறு செய்பவராகவே வைத்துக்கொண்டாலும்" தான்..! :)

இதில் ஒருவர் மீது மட்டும் குற்றம் சாட்டிவிட்டுட்டுபோகவல்ல இப்படியெல்லாம் நடப்பதற்கான அடிப்படைக்காரணம் எது? அதைக் களைய முடியுமா என்பதற்காகத்தான் நிகழ்வுகளின் நிதர்சனங்களை ‘கதையாக எழுதினேன்.

நிச்சயமாகக் களைய முடியும். ஆணோ பெண்ணோ.. அவர்கள் செய்வது சரியோ தவறோ.. முதலில் தவறான இடம் என்று தாங்கள் கருதும் இடத்திலிருந்து வெளிவரும் நேர்மைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். ஓரிடத்தில் கஷ்டப் பட்டால் இன்னொரு நல்ல இடம் அகப்படும்வரை அடக்கி வாசிப்பதும், பின்னர் மரம் தாவுவதும் சரியாகப் படவில்லை. :lol:

முதல் குற்றம்: அந்த நிச்சயிக்கப்பட்டவன் மீதுதான் ‘நிச்சயிக்கப்பட்டவளை அவன் பயன்படுத்தியதே ‘ஏடி எம் மெஜின்” மாதிரித்தான் பணத்துக்காக.

ஏ டி எம் இயந்திரம் மாதிரி எத்தனையோ பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நடத்துகிறார்களே. எங்கிருந்தோ வந்தவன் செய்ய மாட்டானா? பிடிக்காட்டில் இவ எதுக்கு காசைக் குடுக்கிறா? :unsure:

- ‘உன்ர நிறத்துக்கு உன்னை நான் ஏற்றுக்கொண்டதற்கே பூப்போட்டுக்கும்பிடவேண்டும
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கை,

தினை விதைத்துமா வினை அறுப்பது கதையின் அங்கம் 1,2 சாதரணமகா படித்தேன்.எனக்கும் இப்படியான கதைகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.எனக்கு இவற்றில் எல்லாம் அனுபவமும் கிடையாது.மன்னிக்க வேண்டும் ஒரு பெண்ணாயிருந்து கொண்டும் இப்படி எழுதுகிறாளே எண்டு நினைக்காதீர்கள் யாரும்.எனக்கு மனதில் சரி எண்டு பட்டால் சரி தான் பிளை எண்டு பட்டால் பிழை தான்.நான் ஆண் பெண் பேதம் பார்க்க மாட்டன்.பார்க்கப் போனால் நம்மவர்கள் வேற்று இனத்தவர்களை மிஞ்சிவிடுவார்கள் போல் உள்ளது.காரணம்....கதையின் அங்கம் 3 தலையைக் கிறுக்கச் செய்து விட்டது.ஒரு பக்கத்திற்கு இரண்டு நாணயங்கள் உண்டு...எண்டு பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.அதேபோல்

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லாத மனம் ஒப்பீடு செய்யாதா?! ‘வார்த்தைக்கு வார்த்தை வதைப்பவனை விட! வார்த்தைகளால் கவிதை வடிப்பவனைப் பிடிக்காதா?!

தமிழ் தங்கை நீங்கள் முதலாமவர் பற்றி அதிக தகவல் தராததால் வாசகர்கள் பிழையான திசையில் சிந்திக்கிறார்கள் என நினைக்கிறேன். உண்மை சம்பவம் என்று வேறு கூறுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு அண்ணை “ ஒழுக்கத்திற்கான வரைவிலக்கணத்தை கூறுங்களேன்” காதலில் தான்வெற்றி பெறவில்லை என்பதற்காக எல்லோராலும் ‘தங்கம்மா அப்பாக்குட்டி” ஆகமுடியாது.

தங்கம்மா அப்பாக்குட்டி அளவுக்கு போக வேண்டாம்..! முதல் காதல் சரிவரேல்லையா, வெளியே வாங்க.. பிறகு அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கலாம்..! அது மாதிரி இல்லாமல் உள்ளேயே கிடந்து உளல வேண்டியது..! மற்ற எல்லாரும் அச்சோ.. என்ன ஒரு தியாகியப்பா இந்தப் பெண் எண்டு சொல்லுறமாதிரி நடக்க வேண்டியது..! பிறகு ஒரு நாள் எஸ்கேப்..! என்ன வகையான சிந்தனை இது? :D

பெண்கள் வெறும் உடல் சுகத்துக்காக தேடி அலைபவர்கள் அல்லர். ‘தாசி குலத்தில் பிறந்துமே தான் ஒருவனோடு மட்டுமே வாழவேண்டுமென்று நோக்கம் கொண்டு வாழ்ந்தவள் ‘மாதவி”. அது பெண்ணின் பெருமையைத்தான் காட்டுகின்றது.

மன்னிக்கவும்.. இரண்டாம் காதலன் இதழ் சுவைத்தது அந்தப் பெண்ணுக்கு உடல் சுகமா அல்லது உணர்வுபூர்வமான ஆறுதலா? இரண்டாவது வகை எண்டால், இதுவரைக்கும் எனக்குத் தெரியாமல் போச்சே..! :lol::unsure:

:)

பெண்ணை இப்படி மட்டமாக எல்லாம் எடை போடாதீர்கள். எங்கள் சமுதாயத்தில் இன்னும் பலர் கண்ணகியாகத்தான் இருக்கின்றார்கள் ‘வருவான் வருவான் என்னிடம் திரும்பி திருந்தி வருவான் என்ற எதிர்பார்ப்போடு” ‘பணத்துக்காக மட்டும் ஒருத்தி என்று நினைத்துக்கொண்டு நடக்கின்ற ஆண்கள் ஏராளம் ஏராளம்.

நான் எங்கே பெண்களை மட்டமாக எடை போட்டேன்? :rolleyes: இந்தக்கதையில் வரும் பெண்ணைத்தான் சற்று நேர்மைக்குறைவாக எடை போட்டேன்..!

வருவான் வருவான் எண்டு காத்திருக்கினமா? அதாவது ஒண்டில் அவன் திருந்தி வரவேணும், இல்லாட்டில் அடுத்த பஸ் வர வேணும்..! நல்லாயிருக்கு இந்தக்கதை..! :D

‘நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை” என்று ஆண்கள் பாடிக்கொண்டு இன்னொரு பெண்ணை மிக இலகுவாக சிக்க வைத்து விடுவார்கள்.

அதுதான் ஆணின் வேலையே..! விலங்குகளைப் பாருங்கோ.. அங்கே ஆண் சிங்கமும் அதைத்தான் செய்யும்..! பெண்சிங்கம்தான் தன் துணையை செலக்ட் பண்ணும்..! ஆனால் அது தன் துணை தோற்கும்வரை அடுத்த ஆண்சிங்கத்தை உள்ளே விடாது..! இரண்டு சிங்கங்களை ஒரே தடவையில் உள்ளே விட்டதை நான் டிஸ்கவரி சனலில் இன்னும் பார்க்கவில்லை..! பெண்களும் அத்தகைய நேர்மையைக் கொண்டிருக்க வேணும் எண்டு நினைக்கிறன்..! :)

ஆனால் பெண்கள் அந்த உணர்வோடு எந்த ஆணுடனும் பழகுவதில்லை. முதல் காதல் ஏமாற்றப்பட்டு விட்டாலே அடுத்த காதலுக்குதயாராவதில்லை பெண்கள் தன் மனப்புண்ணை ஆற்ற சில நேரங்களில் தோழிகளும் ஒரு சில பேருக்கு நட்புரீதியான தோழனும் அமைவது உண்டு. அதுவே பிறகு ‘எனக்காக வாழும் இவனுக்காக வாழ்ந்தால் என்ன ?” என்கின்ற எண்ணத்தை வார்த்துவிட்டுசென்று விடுகிறது.

அதெல்லாம் சரி.. ஆனால் பிடிக்காத ஒரு இடத்தில் வாழ்ந்துகொண்டு இன்னொரு இடத்தில் அதற்கான ஆறுதலைத் தேடுவது, சமுதாயத்தில் பல குழப்பங்களுக்கு வழிகோலும்..! :lol:

‘எத்தனை எத்தனையோ பெண்களின் மனக்குமுறல்களை நான் நேரிடையாகக் கண்டு கேட்டு இருக்கின்றேன். ‘வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதை மட்டுமே நிலை நிறுத்தி எதையும் ஆராயாமல் கட்டிக்கொடுத்த பெற்றோர் மீது எனக்கு மிகப்பெரும் கோபம் உண்டு.

அதைப்பற்றியெல்லாம் ஆறுதலாக எழுதுகின்றேன்.

எழுதுங்க..! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ,பெண்ணோ நிச்சயிக்கப்பட்டவருடன் வாழ பிடிக்கா விட்டால் உடனே விலகி விட வேண்டும்.ஊருக்காகவும் சமுதாயத்திற்கு பயந்து வாழ்வதை விட அந்த பெண் தனக்கு சரியானதை சரியான நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு இரண்டாமவரை பிடித்திருந்தால் அவரை திருமணம் செய்யலாம் ஆனால் முதலில் நிச்சயிக்கப்பட்டவரை விட்டு உடனே விலகி விட வேண்டும்.இந்த பெண் சமுதாயத்திற்கு பயந்திருக்கலாம் அதனால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் அதற்கிடையில் இரண்டாமவர் அப் பெண்ணில் உண்மையாக அன்பு செலுத்திய படியால்[செலுத்தியிருந்தால்] அன்புக்கு ஏங்கிய அப் பெண் அவரது அன்பை ஏற்றியிருக்கலாம்.வாழ்க்கை என்பது தனிய கல்யாணம் முடிக்கிறது,வேலைக்கு போறது,பிள்ளை பெறுவது மாத்திரம் இல்லை அதற்கு மேலே எவ்வளவோ இருக்கிறது ஆனால் எங்கட ஆட்களை பொறுத்த வரை இது மட்டும் இருந்தால் சரி என நினைக்கிறார்கள்.அவரவர் நிலையில் இருந்து பார்த்தால் தான் மற்றவர்களின் நிலை புரியும்.தமிழ்தங்கை முதலாமவர் பற்றி விரிவாக எழுதுங்கள். அது தான் பெண்களின் பிழை ஆண்கள் செய்யும் தவறுகளை விரிவாக சொல்ல மாட்டார்கள் இக் கதையை வாசிக்கும் பலர் நினைக்கிறார்கள் ஆண் குடிகாரனாக இருக்கிறபடியால் சொல்லி திருத்தலாம் தானே அவர்களிடம் ஒரு கேள்வி இதே கல்யாணத்திற்கு முதல் பெண் குடிகாரியாயிருந்தால் கல்யாணத்திற்கு பிறகு திருத்தலாம் என யாராவது ஆண் கட்டுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் முதல் மாப்பிள்ளை நல்ல உடம்பு சுகத்தை குடுக்கலை போல அதுதான்..

அந்த தவிப்பு தான் இந்த ஆணுடன் பழகும் போதே அப்படியே உங்களைக்கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு"டா" .

என்று நெருங்குமளவுக்கு உதவியுள்ளது. இது களவொழுக்கத்தின் நியாயப்படுத்தலாகவே தோணுது.

how could you say that she is in search of peace?

hasn´t she found a man of her choice yet.

she is basically a women who will never find contentment i dont think

she´ll ever be independent. she appears to have an affair with different males

each day. yester day her´s husband today may be you(hero) tomorrow some one else.

இதுதான் இந்த கதாநாயகியின் குணம் போல் தெரியுது.

முதலாமவர் உடம்பு சுகத்தை கொடுக்கா விட்டாலும் அவரொடு தொடர்ந்தும் கல்லானாலும் புருசன் என வாழ வேண்டுமா சொல்லுங்கள். ஆனால் இதே பெண் உடம்பு சுகம் கொடுக்கவில்லை என்று ஆண் வேறு திருமணம் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இலங்கையில் இருக்கும் ஆண்கள் குடித்தாலும் மிஞ்சி மிஞ்சி போனால் பெண்களை அடிப்பார்கள் அதை தவிர பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் சுற்றி வர உறவினர்கள் இருப்பார்கள் அவர்கள் தட்டி கேட்பார்கள் புலம் பெயர் நாட்டில் அப்படி தட்டி கேட்க ஒருவரும் வர மாட்டார்கள் அதை விட புலம் பெயர் நாட்டில் தம்பதியினர் வாழும் வாழ்க்கைக்கும் ஈழத்தில் வாழும் வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.அத்தோடு குடிப்பது மட்டும் புலம் பெயர் நாட்டில் பிரச்சனை இல்லை...தனிய ஆண்கள் மட்டும் பிழை விடுவது இல்லை பெண்களும் பிழை விடுகிறார்கள்... ஆனால் இக் உண்மையாக நடந்த சம்பவத்தை வைத்து எழுதப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாமவர் உடம்பு சுகத்தை கொடுக்கா விட்டாலும் அவரொடு தொடர்ந்தும் கல்லானாலும் புருசன் என வாழ வேண்டுமா சொல்லுங்கள். ஆனால் இதே பெண் உடம்பு சுகம் கொடுக்கவில்லை என்று ஆண் வேறு திருமணம் செய்யலாம்.

அக்கா இங்கு ஒருதரப்பின் கருத்தே முன் வைக்கப்படுகிறது. தவிர குறித்த ஆண் தப்பானவராக இருந்தால் முறைப்படி விவாகரத்து செய்து விட்டு இன்னொருவருடன் வாழலாமே அதை விடுத்து

கட்டினவர் இருக்கும் போது இன்னொருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஏற்க மாட்டார்கள். இது களவொழுக்கம் தானே?

நான் நினைக்கிறேன் எந்த ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணட்த்திற்கு முதல் எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் திருமணத்திற்கு பின்னும் இன்னொருவருடன் தொடர்பு

வைப்பதை ஆணும் சரி,பெண்ணும் சரி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஏன் பெண் இவ்வாறு நடப்பதால் தான் ஒருவேளை அவர் கணவர் சந்தேகத்தில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது?

எது எப்படியோ ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி பிடிக்காது விடின் முறைப்படி விவாகரத்து பண்ணிவிட்டு எது செய்தாலும் தவறில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமுதாயத்தில் இப்படியெல்லாம் நடக்கின்றது என்பதைத் தெளிவாக்கவே இந்தக்கதை; உண்மையான கருவைக்கொண்டு எழுதினேன். அதனால் இதிலுள்ள கருத்துக்களை இப்படி நடக்கின்றவர்கள் எத்தகைய எதிர்விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும் என்பது உங்கள் ஒவ்வொருவர் வார்த்தைகளிலும் இருந்து தெரியவருகின்றது.

நான் உணர்ந்த கரு இந்த மூன்று பாத்திரம்.

நிச்சயிக்கப்பட்டவன்: செய்த செய்யும் தவறுகள்

பெண்: எத்தகைய நிலைகளை எதிர் நோக்குகின்றாள்

மூன்றாமவன்: இந்தப்பெண் எத்தனை அலட்சியப்படுத்தினாலும் அவள் மீதான காதலை விட்டுவிடாதது...இதை வைத்தே இந்தக்கதையை எழுதினேன் ஆகவே ‘செல்லம்/குட்டி” என்பதெல்லாம் சுவைக்காக எழுதப்பட்டவை.

‘அந்த ஆணுக்குரிய கெட்ட பழக்கங்கள் ‘குடி” மட்டுமே அல்ல கூடா நட்பு,சூதாட்டம்(பல நாட்கள் அங்கேயே இருந்தும் கூட விடுவது உண்டு).

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்ற

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா இங்கு ஒருதரப்பின் கருத்தே முன் வைக்கப்படுகிறது. தவிர குறித்த ஆண் தப்பானவராக இருந்தால் முறைப்படி விவாகரத்து செய்து விட்டு இன்னொருவருடன் வாழலாமே அதை விடுத்து

கட்டினவர் இருக்கும் போது இன்னொருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஏற்க மாட்டார்கள். இது களவொழுக்கம் தானே?<<<<

நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே போட்டிருந்தேன்; கல்யாணம் கட்டிப்போட்டினம் எண்டு சொல்லவே இல்லையே?

நான் நினைக்கிறேன் எந்த ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணட்த்திற்கு முதல் எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் திருமணத்திற்கு பின்னும் இன்னொருவருடன் தொடர்பு

வைப்பதை ஆணும் சரி,பெண்ணும் சரி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஏன் பெண் இவ்வாறு நடப்பதால் தான் ஒருவேளை அவர் கணவர் சந்தேகத்தில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது?

எது எப்படியோ ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி பிடிக்காது விடின் முறைப்படி விவாகரத்து பண்ணிவிட்டு எது செய்தாலும் தவறில்லை.

[/quo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாமியண்ணை.

ஆனால் இதில் எது கிளு கிளுப்பு எண்டுதான் விளங்கேல்லை எனக்கு:blink:

வேண்டாம் சோலி வேண்டாம்.

என்ரை படிப்பறிவை வைச்சு உங்கடை பொன்னான கேள்விக்கு நான் மண்ணாங்கட்டி பதிலை சொல்ல றோட்டலை போறதொண்டு வந்து

ஐசே கதையை கதையாய் பாக்கோணும் எண்டு எனக்கு புத்திமதி சொல்ல ................

என்னத்துக்கு தங்கச்சி தேவையில்லாத சோலியெல்லாம் :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தங்கை எழுந்தமானமாகப் பார்க்க முடியாத கனதியான விடயத்தைக் கருப் பொருளாக எடுத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் கதாப்பாத்திரங்கள் முழுமைப்படவில்லை சொட்டும் கலப்படம் இல்லாத உண்மைக்கதை என்பதை உங்கள் கதையில் உலவும் மூன்று கதாப்பாத்திரங்களைத் தவிர மற்றவர்கள் கூறமுடியாது. இக்கதையை எழுத்துக்குக் கொண்டு வரும் நீங்கள் இவர்களைப் பொருத்தவரை ஒரு பார்வையாளர் மாத்திரமே. நீங்கள் நாலமவரே. ஒரு பார்வையாளர் என்பதால்தான் உங்கள் கதாப்பாத்திரங்களில் தொய்வு தெரிகிறது. உங்கள் எழுத்தோட்டமே இயல்பான வாழ்க்கை முறைக்கு முரண்பட்டதாகத் தெரிகிறது. மிகவும் குழந்தைத்தனமாகவே உங்கள் கதையின் படிமம் நகர்கிறது. நீங்கள் கற்பனையில் குறுநாவல் பாணியில் இத்தகையை எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் ஆரம்ப முயற்சியாக இருக்கக்கூடிய இக்கதையைப் பாராட்ட வேண்டும். சமூக கோட்பாடுகள் என்று கண்ணுக்குத் தெரியாமல் விலங்கிடப்பட்டிருக்கும் விடயம் ஒன்றைச் சல்லடைபோட்டு எழுதவும் தைரியம் வேண்டும். மற்றப்படி நீங்கள் எழுதிச் செல்லும் பாணியில் உதாரணத்திற்காகவேனும் சில சம்பவங்கள் கோர்வையாக்கப்படவேண்டும் அப்போதுதான் நீஙக்ள சொல்லும் கதாப்பாத்திரத்தின் தன்மை வெளிப்படும் இல்லாதிடத்து வாசகர் கேள்விகள் திக்குமுக்காட வைக்கும். தமிழ்த்தங்கை உங்களை ஒரு படைப்பாளியாகப் பார்த்தே இக்கருத்தைக் கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

டங்குவார் வந்து அய் சகாறா அக்கா உங்களை வாரி விட்டுப் போயிருக்கிறார் என்'றுசிண்டு முடியப்பார்ப்பார் பயமாக இருக்கிறது. எனக்குத் தோன்றியதை எழுதினேன் மற்றவர்கள் பார்வை வித்தியாசமாக இருக்கலாம். விமர்சனம் என்பது ஆரோக்கியப்படுத்தும். பார்வைகளை விசாலப்படுத்தும் நீங்கள் அறியாததா?

சகாரா அக்கா,

இதில் கொண்டு வரப்பட்ட பாத்திரங்கள் உண்மையாக இருப்பதால் மிகக்கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது. அவர்கள் யாழ்வாசகர்களாகவும் இருக்கலாமே?

பெண்கள், ”எதுவும் வேண்டாம் என்று விலகியே இருந்தாலும் ,சிக்கல்கள் அவர்களை எப்படிச்சூழ்கின்றன என்பதையும் எங்கள் சமூகத்தில் இப்படியெல்லாம் நடக்கின்றது என்பதைச்சொல்லவும், இதன் மூலம் ஒவ்வொருவருடைய கருத்தும், பார்வையும் எத்தகையதொரு விளக்கத்தை விடையை முன் வைக்கப்போகின்றது என்பதையுமே நான் மிகவும் எதிர்பார்த்து இதை எழுதினேன்.

புனைகதைகள் எழுதி எனக்குப் பழக்கம் இல்லை. ஏதாவது ஒரு நிகழ்வின் தாக்கமே என் எழுத்துக்கு அடிப்படையாக அமையும். அதனாலேயே கவிதைகளாய் எழுதி விடுவது உண்டு. நீங்கள் ஒரு நல்ல படைப்பாளி, திறமை மிக்க எழுத்தாளர் ஆகவே ‘கதை எழுதும் முறை பற்றி நீங்கள் சொன்ன விடயத்தை நான் உள்வாங்கிக்கொள்கின்றேன். ”இதுக்கெல்லாம் “மன்னிப்பு” கேட்பது மிக அதிகம்.

***கருப்பொருளின் விமர்சனத்தை எதிர் நோக்கி இருந்தமையால் உங்கள் கருத்து எந்தவிதமான தாக்கத்தையும் எனக்குள் உண்டு பண்னவில்லை. ‘ மற்றவர்கள் வந்து சிண்டு முடிந்து விட்டு ‘முடிந்து போகும் அளவிற்கு தொய்வான உறவா நம்முடையது?!

எவர் வந்து என்ன சொன்னாலும் உங்களுக்கும் எனக்குமான நட்பெனும் உறவு எப்போதும் வளர்பிறை நிலவாக வளரவேண்டுமே அன்றி தேய் பிறையாகிவிடக்கூடாது அக்கா. அதனால் அதனையொட்டி நீங்கள் கவலைப்படவே வேண்டாம்.அடுத்தவன் பேச்சை கேட்டு நட்பையோ உறவையோ கொச்சைப்படுத்துவதில் என்றும் என் மனம் உடன்பட்டதில்லை. “ ஆகவே நீங்கள் நிம்மதியாக இதையொட்டு கவலைப்படாமல் இருங்கோ”.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் வந்து அய் சகாறா அக்கா உங்களை வாரி விட்டுப் போயிருக்கிறார் என்'றுசிண்டு முடியப்பார்ப்பார் பயமாக இருக்கிறது.

மற்றவர்கள் வந்து சிண்டு முடிந்து விட்டு ‘முடிந்து போகும் அளவிற்கு தொய்வான உறவா நம்முடையது?!

எவர் வந்து என்ன சொன்னாலும் உங்களுக்கும் எனக்குமான நட்பெனும் உறவு எப்போதும் வளர்பிறை நிலவாக வளரவேண்டுமே அன்றி தேய் பிறையாகிவிடக்கூடாது அக்கா. அதனால் அதனையொட்டி நீங்கள் கவலைப்படவே வேண்டாம்.அடுத்தவன் பேச்சை கேட்டு நட்பையோ உறவையோ கொச்சைப்படுத்துவதில் என்றும் என் மனம் உடன்பட்டதில்லை. “ ஆகவே நீங்கள் நிம்மதியாக இதையொட்டு கவலைப்படாமல் இருங்கோ”.

ஆகா.. ரொனால்டோவை வெளியில நிப்பாட்டிட்டு இவங்க ரெண்டுபேரும் மாறிமாறி கோல் அடிக்கிறாங்களே..! :blink::(

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. ரொனால்டோவை வெளியில நிப்பாட்டிட்டு இவங்க ரெண்டுபேரும் மாறிமாறி கோல் அடிக்கிறாங்களே..! :(:lol:

நானும் அப்பிடித்தான் யோசிச்சனான். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

‘எத்தனை எத்தனையோ பெண்களின் மனக்குமுறல்களை நான் நேரிடையாகக் கண்டு கேட்டு இருக்கின்றேன். ‘வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதை மட்டுமே நிலை நிறுத்தி எதையும் ஆராயாமல் கட்டிக்கொடுத்த பெற்றோர் மீது எனக்கு மிகப்பெரும் கோபம் உண்டு.

எனக்கும் இப்படியான பெற்றோரைப் பார்க்க கோவம் தான் வாறது. அப்பிடி கட்டி வாற பொண்ணுகளை "அவாக்கு விசர் பிடிச்சிட்டுதெண்டு" குடும்ப உறுப்பினர்களோட சேரந்து கலைச்சு விட்டுவிட்டு வேறை பெண் தேடுற ஆண்களும் கறுமம் பிடிச்ச எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். :blink::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி கணவனே கண் கண்ட தெய்வம் என பத்தினிகளாக வாழ்வதால்

தான் "அவர்கள் "தலைக்கு மேல் எகிறுகிறார்கள். பெண் தான் பொறுத்து போகணும்

என்று எழுதி வைத்த விதியாச்சே ......

[பொறுத்தார் பூமி ஆழ்வார்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இப்படியான பெற்றோரைப் பார்க்க கோவம் தான் வாறது. அப்பிடி கட்டி வாற பொண்ணுகளை "அவாக்கு விசர் பிடிச்சிட்டுதெண்டு" குடும்ப உறுப்பினர்களோட சேரந்து கலைச்சு விட்டுவிட்டு வேறை பெண் தேடுற ஆண்களும் கறுமம் பிடிச்ச எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். :blink::lol:

:(

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா.. ரொனால்டோவை வெளியில நிப்பாட்டிட்டு இவங்க ரெண்டுபேரும் மாறிமாறி கோல் அடிக்கிறாங்களே..! :blink::o

அது யாரண்ணை? யாழ்கள வாசகரோ? :( !

பிறகென்ன? பொம்பிளையள் அடிக்கிற கோலாட்டத்தை பார்க்கத்தானே பிரியப்படுறீங்க?:lol:

[பொறுத்தார் பூமி ஆழ்வார்,

ஆழ்வார்கள் நாயன்மார்கள் நாச்சிமார்களோ?

" ஆள்வார்"...

  • கருத்துக்கள உறவுகள்
உள் நுழைந்து அந்தப்பிரச்சனையோடு உடன்பட்டுப்பார்க்கின்றவர்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.