Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளின் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளைய பிள்ளையின் அனைத்து பதில்களும் அருமை. :)

கிறிஸ்தவம் என்பது, நாம் கண்ணால் காணும், செய்யும் விடயங்களுக்கு அப்பால்பட்டது. அதனை சாதாரண வார்த்தைகளில் விளக்குவதும் கடினம். அந்த உணர்ச்சி அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வேறுபடும். உணர்ச்சியை விளங்கப் படுத்துவது முடியாது. அவரவர் உணர்ந்தால் முட்டும் உண்டு.. :lol: நாம் இப்போதைய விஞ்ஞான அறிவைக் கொண்டு விளக்கமுடியாது ஏனெனில் விஞ்ஞானம் கூட மட்டுப் படுத்தப் பட்டது. பலவிடயங்களுக்கான விளக்கம் மனிதனுக்கு சரியாகத் தெரியாது, விளங்கப் படுத்தவும் முடியாது.

மற்றயது சூசை, மேரிக்கு வேறு பிள்ளைகள் உண்டு என விவிலியம் கூறுகிறது. இது இயேசுவின் சீடர்கள் ஒருமுறை உமது தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க வந்திருக்கிறார்கள் எனக் கூறியபோது எனது வசனத்தைக் கேட்டு அதன் படி நடபவர்களே எனது தாயும் சகோதரர்களும் என ஏசு கூறினார்.

  • Replies 88
  • Views 17.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில் சர்ச்சைக்கு உரிய விடயம் அவர் கடவுளின் பிறப்பா இல்லையா என்றது தான். இதை தவிர அவர் மேரிக்கு பிறந்து இருக்கலாம்...மாரிக்கும் பிறந்து இருக்கலாம்.... ஒரு பெண்ணை மணம் முடித்து இருக்கலாம், பிள்ளை கூட பெற்று இருக்கலாம். பிறந்ததில் இருந்து சிலுவையில் உயிரை விடும் வரை அவர் மனிதனாகவே இருந்து மாண்டார் என்று தானே இருக்கு. எங்களுக்கு மேரியை பற்றியோ மாரியை பற்றியோ வாதம் தேவை இல்லை. ஏன் என்றால் மேரியை கடவுளாக்க யாரும் முயலவில்லை. கத்தோலிக்கர் மட்டும் இயேசுவின் தாய் தகப்பனிலும் ஏனேய புனிதர்களிலும் ஒரு வித பக்தி பிடிப்புடன் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் கூட விளக்கம் கேட்டால், இயேசுவை கடவுளின் மகன் என்றும், எல்லாவற்றிற்கும் மேல் ஒரு கடவுள் = படைப்பாளி இருக்கிறார் என்றும் தான் சொல்வார்கள்.

பிரச்சனை மேரி கன்னியாக எப்படி ஒரு மனிதப் பிறப்பை அளித்து.. புனிதமானார் என்பதுதான்..??! உலகத்தில எத்தனையோ பெண்கள்.. கணவனுக்கு அறியாமல்.. கள்ளமா உறவாடி பல குழந்தைகளை பெத்துக்கிட்டு.. குப்பையில.. வீதியில.. கிணறுக்க.. வைத்தியசாலையில போட்டிட்டு ஓடியிடுறாங்க.. அந்த வகையில.. இதுவும் இடம்பெற்றிருக்கலாம் இல்லையா..??!

கடவுள் வந்து.. கன்னி மேரியை ரேப் பண்ணி.. பிறந்த குழந்தை ஜேசு என்றால்.. அதை நம்புறதும்.. எருமை மாடு ஏரேப்பிளேன் ஓடிக்கிட்டு இருக்காம் என்பதை நம்புறதும் ஒன்று..!

எங்கையோ நடந்த தப்பை மறைச்சு.. ஒரு மததையே உருவாக்கிட்டாங்க. ஜேசு ஒரு தத்துவவாதி என்பதை நானும் மறுதலிக்கல்ல. ஆனால் அவரைச் சுற்றி பின்னப்பட்டுள்ளவை பல அழகான புனை கதைகள்.. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்பதுதான் உண்மை.. யதார்த்தம்..!

ஜேசு தத்துவ ஞானியாக இருக்க.. மேரி கன்னியாக.. புனிதையாக காட்டப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜேசுவை கடவுளின் மகனாகக் காட்ட.. மேரி புனிதமாகக் காட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதைத்தான் விவிலியம் உட்பட கிறீஸ்தவ மத நூல்கள் சொல்கின்றன.

கிறீஸ்தவம் ஒரு காலத்தில் அறிவியலை எதிரியாகக் கருதி ஒரு மதம். பல அறிவியல் கண்டுபிடிப்புக்களை மத நம்பிக்கையின் பால் ஏற்க மறுத்ததுமன்றி பல அறிவிலாளர்களை கொலை கூடச் செய்திருக்கிறது. அந்தளவுக்கு வேறு எந்த மதங்களும் நடந்து கொள்ளவில்லை என்று கூறலாம்.

இன்றும் கூட வத்திகான் மனிதம் பற்றி மனிதர்களை நோக்குவதில்லை. ஈராக்கில் மடிபவன்.. இஸ்லாமியன் என்பதற்காக மெளனம் காக்கும் வத்திகான்.. ஜோர்ஜியாவில் பிரச்சனை என்றவுடன் கிறீஸ்தவ பின்னணி உள்ள நாடு என்றவுடன் அறிக்கை விட்டு காத்துக் கொள்ளும்..! அழுத்தம் கொடுக்கும்..! இவர்கள் எப்படி ஜேசுவின் தத்துவத்தை கையாளும் கூட்டமாக நோக்கப்படுகிறார்களோ தெரியவில்லை...! :lol::)

ஜேசுமீது அபத்தம் சுமத்தாமல் அவரை ஒரு தத்துவஜானியாக நீங்கள் ஏற்று கொண்டது மிகவும் வரவேற்க தக்கது.

காரணம் ஜேசுமீது எனக்கும் ஒரு நல்எண்ணம் எப்போதும் உண்டு. அவர் மிருகங்கள் போல் இருந்த ஒரு மனித இனத்தை மனிதர்களாக மாறுவதற்கு வாழிகாட்டினார். அந்த காலத்திலேயே அப்படியொரு திறமைவாய்ந்தவன் இருப்பின் அவன் வணக்கத்திற்கு உரியவன். தவிர அவரை கடவுளாக்கியதும் பிறப்பின்பால் புனைகதைகளை புனைந்ததும் மதத்தைவைத்து வயிறு வளர்க்க எண்ணிய சில ஆசாமிகள் என்பதில் எனக்கும் எந்த எதிர் கருத்தும் இல்லை. கிட்டதட்ட முருகன் போலவே ஆரியரிடம் இருந்து தமிழரை காப்தற்கு போரிட்ட ஒரு போராளிதான் முருகன் தமிழரை பொறுத்தவரையில் அவரும் எமது ஒரு காவல்தெய்வம்தான். ஆனால் தாமரை தடாகத்தில் தோன்றினார் உமாதேவி தடவினார் என்பதெல்லாம் வெறும் புனைகதைகளே அதை வடிவாக ஆராய்ந்தாலே வெறும் பொய்என்பது தெரிகின்றது காரணம் ஒளவ்வை யின் காலத்தில் முருகன் சிறுவனாக இருக்கிறான்..... ஒளவ்வை கி.மு 200 வருட காலங்களில் வாழ்ந்திருக்கிறார் என்பது ஆதரங்களுடன் இருக்கின்றது ஆனால் சிவமெருமான் நெற்றிகண்ணை திறந்த காலம் என்பது...... அடியும் முடியுமற்றதாக இருக்கின்றது. ஆகவே புனைகதைகளால் பின்பு முருகன் ஆலயங்களுக்குள் நுழைந்தார் என்பதே உண்மை. ஆனால் அவரை வணங்குவதில் எந்த தவறும் இல்லை சாதரண மனித கூட்டத்தினுள் அவர் ஒரு காவல் தெய்வமே. தவிர முதலாம் இராண்டாம் முருகன் என்று இருந்த அரசர்களின் மனைவிமார் வள்ளி தெய்வானையாகின்றார்கள் ஆனால் பின்னாளில் ஒருவருக்கு இரு மனைவி என்றாகிவிடுகின்றது.

கடவுள் உலகத்தை படைத்தாரா இல்லையா என்பது நீண்விவாதம். அதை சுருக்கி படைத்த பின்பு கடவுள் உலகிற்கு வந்தாரா இல்லையா என்றால். இல்லை என்பதே சாத்தியமானது. காரணம் பூரண உலகையும் படைத்திருக்க கூடிய ஜேசு மத்தியகிழக்குடனே நின்றுவிடுகிறார்.....

முகமதுவும் சவூதியோடு நின்றுவிடுகிறார்...... கிருஸ்ணரை எடுத்தால் 10 முறையும் இந்தியாவிற்கே வருகிறார். அவருக்கு ஆப்ரிக்கா ஐரோப்பா பற்றி கவலையே இல்லை. அப்படி இருக்க இவர்களை முழுமுதல் கடவுள்கள் என்று எப்படி எற்றுகொள்ள முடியும்? அந்த அந்த மதங்கள் தோன்றிய இடங்களுக்கு அவர்கள் வந்துதானே போக வேண்டும். ஆக மனிதர்களின் கதைகளில் அவர்கள் வந்து போனார்களே தவிர கடவுள் ஒருபோதும் வரவில்லை அப்படி வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பிரச்சனை மேரி கன்னியாக எப்படி ஒரு மனிதப் பிறப்பை அளித்து.. புனிதமானார் என்பதுதான்..??! உலகத்தில எத்தனையோ பெண்கள்.. கணவனுக்கு அறியாமல்.. கள்ளமா உறவாடி பல குழந்தைகளை பெத்துக்கிட்டு.. குப்பையில.. வீதியில.. கிணறுக்க.. வைத்தியசாலையில போட்டிட்டு ஓடியிடுறாங்க.. அந்த வகையில.. இதுவும் இடம்பெற்றிருக்கலாம் இல்லையா..??!

...! :lol::)

நெடுக்கு அண்ணா ஏன் நீங்கள் எந்த பிரச்சனை எழுதினாலும் உடனையும் அதில் ஒரு தப்பை கண்டு பிடித்து பெண்கள் பற்றி எழுதுகிறிர்கள்...கடவுளிலையும

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

எது பண்ணினாளும் பெண்தான் தப்பு என்று கண்டு பிடியுங்கோ ஏன் ஆண்கள் எல்லாம் ஏமாத்தவில்லையா... இல்லை தப்புத்தான் பண்ணவில்லையா? ஏன் ஆண்களுக்குத்தான் கள்ளமாக குழந்தைகள் பிறக்கவில்லையா?ஆண்கள் எல்லாம் கள்ளமாக உறவாடமால் ஒழுக்கம் உள்ளவர்களாகத்தானே இருக்கிறார்கள்.... பெண்களை குற்றம் சொல்ல முதல் ஆண்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றைதையும் எழுதுங்கோ...

இந்த விசயத்தில் ஆண்களை மிஞ்சியவர்கள் பெண்கள் என்று எழுதி சுஜி அம்மணியின் கோபத்துக்கு ஆளாகனுமா எண்டு யோசிக்கிறன். யோசிச்சுக்கொண்டே

இந்த விசயத்தில் ஆண்களை மிஞ்சியவர்கள் பெண்கள் என்று எழுதி சுஜி அம்மணியின் கோபத்துக்கு ஆளாகனுமா எண்டு யோசிக்கிறன். யோசிச்சுக்கொண்டே

ஆமாம் கறுப்பி உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் தப்பு பண்ணுகிறார்கள்... இந்த விசயத்திலும் ஆண்களை விட பெண்களே மிஞ்சியவர்கள் ... ஆமாம் உலகத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம் கள்ளமாக உறவாடி குழந்தை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுத்தானே போகிறார்கள்.... பாதிக்கு பாதி நல்ல பெண்களும் இருக்கிறார்கள் கெட்ட ஆண்களும் இருக்கிறார்கள் இதில் யார் மின்சியவர்கள் என்று பார்க்க போனால் ஒவ்வொருத்தர் மேலையும் தப்புகள் இருக்கும்... கை போன திசைக்கு கீபோட்டை தட்டுவது போல....

எனக்கு என்றால் புரியவில்லை பெண்கள் என்றால் ஆண்களை குற்றம் சொல்லுவதும் ஆண்கள் என்றால் பெண்களை குற்றம் சொல்லுவதும் இதுதான் பிழைப்பா இருக்கும்... அதுவும் யாழில் ஒரு சிலர் தரம் குறைவாக இப்ப கூடுதலாக பெண்களை பற்றி எழுதுவதை அவதானிக்க கூடியதாக இருக்கு....

எழுதுபவர்கள் எல்லாம் ஆண்கள்தானே அதுதான் இப்ப இப்படியான எழுத்துக்களும் கூடுதலாக வருகுது.... ஆண் தப்பு பண்ணினால் அவனுக்கு முடி மறைக்கும் எல்லா கெட்ட குணங்களும் எப்படி தன் காரியத்தை முடி மறைப்பது என்றும் தெரிந்து இருக்கும்....

இன்னும் ஒரு சிலர் குழந்தை பெறுவது ஒரு தண்டையாம் பெண்களுக்கு அதையும் விட்டு வைக்க மாட்டிர்களோ என்று எழுதுகிறார்கள்... அவர்கள் பண்ணும் தப்புக்கு இதுதான் தண்டைனையாம்...

இதை எழுத முதல் ஜோசியுங்கள் பெண்கள் குழந்தை பெறவில்லை என்றால் உங்களுக்கு எல்லாம் அப்பா என்ற அத்தஸ்த்தே வந்து இருக்காது... தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது அதை கூட விட்டு வைக்கவில்லை

எங்கே மற்றவர்கள்... பெரிய பெரிய எழுத்தளார்கள் இப்ப வருவார்களே... பெண்களே ஆண்களை விட மிஞ்சியவர்கள் என்று... இதுதான் சாட்டு என்று மனசிலை ஒன்றை வைத்து வெளிய எழுத வருவார்கள்... இன்னும் நேரம் இருக்கு போல...

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை மேரி கன்னியாக எப்படி ஒரு மனிதப் பிறப்பை அளித்து.. புனிதமானார் என்பதுதான்..??! உலகத்தில எத்தனையோ பெண்கள்.. கணவனுக்கு அறியாமல்.. கள்ளமா உறவாடி பல குழந்தைகளை பெத்துக்கிட்டு.. குப்பையில.. வீதியில.. கிணறுக்க.. வைத்தியசாலையில போட்டிட்டு ஓடியிடுறாங்க.. அந்த வகையில.. இதுவும் இடம்பெற்றிருக்கலாம் இல்லையா..??!

கடவுள் வந்து.. கன்னி மேரியை ரேப் பண்ணி.. பிறந்த குழந்தை ஜேசு என்றால்.. அதை நம்புறதும்.. எருமை மாடு ஏரேப்பிளேன் ஓடிக்கிட்டு இருக்காம் என்பதை நம்புறதும் ஒன்று..!

எங்கையோ நடந்த தப்பை மறைச்சு.. ஒரு மததையே உருவாக்கிட்டாங்க. ஜேசு ஒரு தத்துவவாதி என்பதை நானும் மறுதலிக்கல்ல. ஆனால் அவரைச் சுற்றி பின்னப்பட்டுள்ளவை பல அழகான புனை கதைகள்.. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்பதுதான் உண்மை.. யதார்த்தம்..!

ஜேசு தத்துவ ஞானியாக இருக்க.. மேரி கன்னியாக.. புனிதையாக காட்டப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜேசுவை கடவுளின் மகனாகக் காட்ட.. மேரி புனிதமாகக் காட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதைத்தான் விவிலியம் உட்பட கிறீஸ்தவ மத நூல்கள் சொல்கின்றன.

கிறீஸ்தவம் ஒரு காலத்தில் அறிவியலை எதிரியாகக் கருதி ஒரு மதம். பல அறிவியல் கண்டுபிடிப்புக்களை மத நம்பிக்கையின் பால் ஏற்க மறுத்ததுமன்றி பல அறிவிலாளர்களை கொலை கூடச் செய்திருக்கிறது. அந்தளவுக்கு வேறு எந்த மதங்களும் நடந்து கொள்ளவில்லை என்று கூறலாம்.

இன்றும் கூட வத்திகான் மனிதம் பற்றி மனிதர்களை நோக்குவதில்லை. ஈராக்கில் மடிபவன்.. இஸ்லாமியன் என்பதற்காக மெளனம் காக்கும் வத்திகான்.. ஜோர்ஜியாவில் பிரச்சனை என்றவுடன் கிறீஸ்தவ பின்னணி உள்ள நாடு என்றவுடன் அறிக்கை விட்டு காத்துக் கொள்ளும்..! அழுத்தம் கொடுக்கும்..! இவர்கள் எப்படி ஜேசுவின் தத்துவத்தை கையாளும் கூட்டமாக நோக்கப்படுகிறார்களோ தெரியவில்லை...! :) :)

நீங்கள் ஏன் இன்னும் phallic stage தாண்டாத பிள்ளை மாதிரி, rape சீனெல்லாம் ஜோசிச்சு பார்க்கிறியள் - ஏற்கனவே சொன்னேன் "கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்தது உண்மையென்றால்...... படுக்காம ஒரு பெண் கருத்தரிக்க வைக்க முடியாதா?" - இது அந்த மதத்தை நம்புவர்களின் சார்பில் இருந்து.

கடவுளின் மகன் இயேசு என்பதும் - எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டிகிட்டு இருக்கு என்றதும் ஒரே மாதிரி யதார்த்தம் என்கிறீர்கள்.

எனது வாதத்திற்கு நல்ல வரிகள் எடுத்து கொடுத்ததற்கு நன்றி! யதார்த்தம் என்பதை ஒவ்வொருவரும் உள்வாங்கும் விதத்தை பொறுத்து ஆள் ஆளுக்கு மாறும்.

-எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதாம் என்று ஒரு சராசரி மனிதனிடம் சொன்னால் "சும்மா போ அங்கால" என்று தான் பதில் சொல்லுவான்.

-எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதாம் என்று ஒரு விஞ்ஞானிஇடம் சொன்னால் - ஜெனெடிக் இன்ஜினியரிங் மூலம் நடத்தி காட்டலாம் என்று சொல்ல கூடும்.

-எங்கட வீட்டில வந்து எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதாம் என்று சொன்னால் - "ஸ்ரீ லங்கன் எயர்ல்ய்ந்ஸா/ அல்லது பலாலி லயநெயரா?!" என்று தான் கேட்பம்!! ஏன் என்றால் தெரிந்தவர்கள் பலரை நாங்கள் சொந்த பெயர் சொல்லி கதைப்பது இல்லை. எங்களுடைய யதார்த்தத்தில் சாக்கு கல்யாணம் முடிக்கும், துள்ளுமண்டைமீன் காணி வாங்கி வீடு கட்டும்..வெந்தயம் வீடு தேடி வந்து இருந்து கதைச்சிட்டு போகும்... இதேன்..., கோவா ரோட்டால போகேக்க கை காட்டிட்டு போகும்! :)

:)

- -- --

நாங்கள் எங்களுக்கு இதுவரை கிடைத்த அறிவை வைத்து தான் - இப்படி நடந்து இருக்குமா இல்லையா என்று ஒன்றை தீர்மானிக்கிறோம். எங்களுக்கு அது சரியாக படலாம். ஆனால் சரியாக படுவதெல்லாம் தான் தெட்ட தெளிவாக உண்மையானதாய் இருக்கும் என்று நாண்டு கொண்டு நிக்க ஏலாது.

சிலருக்கு பச்சை/ சிவப்பு நிறங்களை பிரித்து பார்க்க இயலாது. அவர்களை பொறுத்தவரை அந்த குறையை குறையாக உணர்ந்து இருப்பார்களா? சிலருக்கு காது சுத்தமாக கேட்டே இராது அவர்கள் பிறந்ததில் இருந்து. அவர்களின் உலகில் சத்தங்கள் இல்லாததை அவர்கள் உணர்வார்களா? அவர்களின் யதார்த்தமும் மற்றவர்களின் யதாத்தமும் ஒன்றா?

மூளை/ எண்ணம்/ சிந்தனை எதற்கு இடம் கொடுக்கிறதோ - அது தான் யதார்த்தம் அவர் அவருக்கு.

-உங்களுக்கு: கடவுள் வந்து rape பண்ணினால் தான் கன்னி ஒருத்தி கடவுளின் பிள்ளையை பெற முடியும்.

-கிறிஸ்தவர்களுக்கு: கடவுள் என்ற ஒன்று இருந்தால், அதன் வல்லமையால் கன்னி ஒருத்தி கருத்தரிக்க முடியும்.

-எனக்கு: உலகில் மனிதனாக பிறந்த ஒருவரை ஏன் கடவுளாக்கினார்கள்? அவர் என்ன சொன்னார்/ என்ன செய்தார்/ அவர் சொல்லியதாக எழுத பட்ட கருத்துகளின் அர்த்தம்/ ஆழம் என்ன? சிலுவை மரணத்தை தவிர்த்திருக்க கூடியும் அதை தழுவியதின் காரணம் என்ன? அவரின் சீடர்கள் என்று இருந்தவர்கள் அவரின் போதனைகளை பரப்புவதற்காக தங்கள் உயிரையும் கொடுத்து மாண்டதன் மனப்பான்மை என்ன?

இதெல்லாம் தவிர, எனக்கு வத்திக்கான் சபையிலோ அல்லது ஏதும் ஒரு மத அமைப்பிலோ நம்பிக்கை என்று ஒன்றும் இல்லை. உண்டியல்ல காசு போடு, தோப்புகரணம் போடு, போன்றதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை - அது எந்த மதமாய் இருந்தாலும்.

ஒரு மனித பிறப்பை - ஒரு நல்ல மனித பிறப்பை - கடவுளாக்கி இருக்கலாம். என்னை பொறுத்த வரை - null hypothesis படிச்சு இருப்பியள் தானே. அது போல தான் நானும் ஒன்றுமில்லாமல் ஆராய தொடங்கி.... "எனது அறிவிற்கு அப்பாற்பட்டு- ஆனால் இருக்கலாம்" என்ற நிலையை பற்றி இருக்கிறேன்!

கடவுள் என்பதன் அர்த்தமே நாம் விளங்கிய மாதிரி - மனித உருவத்தில் ஒரு பெரிய மனுஷன் என்பதை நான் ஏற்று கொள்ளவில்லை. உருவத்திலோ/ செயலிலோ/ எமக்கு விளங்காத ஒன்றாக தான் இதுவரை இருந்து இருக்கிறது. அது எமது மனசாட்சி/ அறிவுகூர்மை/ தன்னம்பிக்கை எல்லாமுமாய் சேர்ந்த எம்மில் ஒரு பாகமாகவே இருக்கலாம்.

எது எவ்வாறு இருப்பினும், நான் முதலில் சுட்டி காட்டியது - ஒன்றை பற்றி முழுமையாக அறியாமல் அடுத்தவர் நம்பிக்கையை நகைப்பது திறமையான செயல் இல்லை. அதனால் தான்.

(ஆனால் நான் கருணாவையும்/ கூட நிக்கும் உங்கட தும்பிநியையும் பகிடி பண்ணலாம் - அதுக்கு மட்டும் விதி விலக்கு இருக்கு! :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைய பிள்ளையின் அனைத்து பதில்களும் அருமை. :lol:

:) மினக்கட்டு இருந்து வாசிச்சு இருக்கிறியள் போல! நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... அதுவும் யாழில் ஒரு சிலர் தரம் குறைவாக இப்ப கூடுதலாக பெண்களை பற்றி எழுதுவதை அவதானிக்க கூடியதாக இருக்கு....

எழுதுபவர்கள் எல்லாம் ஆண்கள்தானே அதுதான் இப்ப இப்படியான எழுத்துக்களும் கூடுதலாக வருகுது....எங்கே மற்றவர்கள்... பெரிய பெரிய எழுத்தளார்கள் இப்ப வருவார்களே... பெண்களே ஆண்களை விட மிஞ்சியவர்கள் என்று... இதுதான் சாட்டு என்று மனசிலை ஒன்றை வைத்து வெளிய எழுத வருவார்கள்... இன்னும் நேரம் இருக்கு போல...

சுஜி, நீங்கள் இதை தனிப்பட்ட முறையில் எடுத்து அதிகம் ஜோசிக்க வேண்டாம். நெடுக்கிட பெண்கள் பற்றிய கருத்துகளுக்கு ஏதும் காரணம் இருக்கலாம். அல்லது ஆண்களை பற்றிய பிழைகளையும் அவர் இடைக்கிடை சுட்டி காட்டி இருப்பது உங்களுக்கு தெரியாது போய் இருக்கலாம்.

அல்லது பெண்களை பற்றி மனம் போல பேசுவதற்கு கருத்துகளத்தில் சிலர் பெண்ணாக கூட இருக்கலாம் - பெயர்களை பார்த்து கணிப்பிடாமல் கருத்துகளை பார்த்து உணர்ந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

நான் கூறும் கருத்துகளில் ஏதும் உங்களுக்கோ அல்லது எனேயே கருத்துகள உறவுகளுக்கோ தாக்கமாய் இருந்தால், மன்னிக்கவும்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மற்றவர்கள்... பெரிய பெரிய எழுத்தளார்கள் இப்ப வருவார்களே... பெண்களே ஆண்களை விட மிஞ்சியவர்கள் என்று... இதுதான் சாட்டு என்று மனசிலை ஒன்றை வைத்து வெளிய எழுத வருவார்கள்... இன்னும் நேரம் இருக்கு போல...

வணக்கம் சுஜி எனக்கு தெரிந்து கருத்துக்களத்தில் ஒரு பெண்ணும் தாங்கள் ஆணை விட உயர்ந்தவர் என எழுதவில்லை என நினைக்கிறேன்.அவர்கள் தங்களையும் மதித்து சம உரிமை தரும்படி தான் கேட்டு உள்ளார்கள்.நான் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

எந்த மனத்தாக்கமும் இல்லை இளையபிள்ளை... நான் இதை தனிப்பட்ட முறையில் எடுத்து ஜோசிக்கவில்லை.... சிலர் நெடுக்கு அண்ணாவோ மற்றவர்கள் எழுதும் கருத்துக்கு திருப்பி எழுத கூட நினைப்பார்கள்... ஆனால் சில பெண்கள் பயந்து எழுதுவது இல்லை சிலர் நமக்கு ஏன் வேண்டாத வேலை என்று இருப்பார்கள்....

இவர்கள் இப்படி மற்றவர்களின் நம்பிக்கையை இப்படி எழுதுகிறார்களே இதில் எத்தினை பேர் மனம் நோகிறார்கள் என்று நினைக்கவில்லை... கடவுளை நம்புவது நம்பாததும் அவரவர் விருப்பம்... மற்றவர்களின் நம்பிக்கை ஏன் இப்படி எழுத வேண்டும்... உங்களுக்கு நம்பிக்கை இல்லாதது எனக்கு நம்பிக்கை இருக்கும்... ஒவ்வொருவர் மன நிலமை சமந்தமானது... அதை எழுதுபவர்களும் புரிந்து எழுதினால் நாங்களும் புரிந்து கொள்ளுவம்தானே... நன்றி உங்கள் அறிவுரைக்கு...

ரதி நான் நினைக்கிறேன் நீங்கள் தப்பாக புரிந்து விட்டிர்கள் என்று... நான் கறுப்பி சொன்னதுக்குத்தான் சொன்னன்... அவர் சொன்னார் இந்த விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட மிஞ்சியவர்கள் என்று அது எந்த விஷயம் என்று மேல் இருந்து படிக்கவும்... அதைத்தான் நான் கேட்டன் ஏன் பெண் மேலையே பழியை போடுகிறிர்கள் என்று... நான் குடுத்ததில் இருந்து படிக்கவும்...

மற்றப்படி நான் பெண்ணையும் தப்பாக நினைக்கவில்லை ஆணையும் தப்பாக எழுதவில்லை.... தப்பு பண்ணுவது சரி சமந்தான்...இதில் யார் மிஞ்சியவர்கள் யார் மிஞ்சாதவர்கள் என்று இல்லை... நெடுக்கு அண்ணா குடுத்த கருத்தில் இருந்து படியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தான் பிழையாக விளங்கிக் கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மனத்தாக்கமும் இல்லை இளையபிள்ளை... நான் இதை தனிப்பட்ட முறையில் எடுத்து ஜோசிக்கவில்லை.... சிலர் நெடுக்கு அண்ணாவோ மற்றவர்கள் எழுதும் கருத்துக்கு திருப்பி எழுத கூட நினைப்பார்கள்... ஆனால் சில பெண்கள் பயந்து எழுதுவது இல்லை சிலர் நமக்கு ஏன் வேண்டாத வேலை என்று இருப்பார்கள்....

இவர்கள் இப்படி மற்றவர்களின் நம்பிக்கையை இப்படி எழுதுகிறார்களே இதில் எத்தினை பேர் மனம் நோகிறார்கள் என்று நினைக்கவில்லை... கடவுளை நம்புவது நம்பாததும் அவரவர் விருப்பம்... மற்றவர்களின் நம்பிக்கை ஏன் இப்படி எழுத வேண்டும்... உங்களுக்கு நம்பிக்கை இல்லாதது எனக்கு நம்பிக்கை இருக்கும்... ஒவ்வொருவர் மன நிலமை சமந்தமானது... அதை எழுதுபவர்களும் புரிந்து எழுதினால் நாங்களும் புரிந்து கொள்ளுவம்தானே... நன்றி உங்கள் அறிவுரைக்கு...

மேலே நீங்கள் சொன்னது மிகவும் உண்மை ஆனால் எனது ஆதங்கம் என்னவென்றால் கருத்துக்களம் என்றால் எல்லோரும் தங்களுக்கு தெரிந்ததைத் தான் எழுதுவார்கள் உங்களுக்கு சரி எனப் பட்டது எனக்கு தப்பாய் படும் மனம் தளராமல் எதிர்த்து எழுத வேண்டுமே தவிர பயந்து போய் எழுதாமல் விடக் கூடாது அத்தோடு எழுதுபவரையும் அவர் எவ்வளவு பிழை,பொய் எழுதினாலும் அவரை அப்படி எழுதாதே என சொல்ல முடியாது என நினைக்கிறேன்

நான் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால் கோவிக்க வேண்டாம்.

சுஜி மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தான் பிழையாக விளங்கிக் கொண்டேன்.

அச்சசோ ரதி இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு... :lol:கருத்து எழுத்துவது அவரவர் உரிமை ரதி இதில் மன்னிப்பு எல்லாம் வேண்டாம்...

Edited by சுஜி

மேலே நீங்கள் சொன்னது மிகவும் உண்மை ஆனால் எனது ஆதங்கம் என்னவென்றால் கருத்துக்களம் என்றால் எல்லோரும் தங்களுக்கு தெரிந்ததைத் தான் எழுதுவார்கள் உங்களுக்கு சரி எனப் பட்டது எனக்கு தப்பாய் படும் மனம் தளராமல் எதிர்த்து எழுத வேண்டுமே தவிர பயந்து போய் எழுதாமல் விடக் கூடாது அத்தோடு எழுதுபவரையும் அவர் எவ்வளவு பிழை,பொய் எழுதினாலும் அவரை அப்படி எழுதாதே என சொல்ல முடியாது என நினைக்கிறேன்

நான் ஏதாவது தப்பாக எழுதியிருந்தால் கோவிக்க வேண்டாம்.

இதில் என்ன கோபிக்க இருக்கு ரதி... இதில் நானும் பயந்து எழுதாமல் விட போவது இல்லை... எதிர்த்து வாதடுவதர்க்கு தைரியம் நிறைய இருக்கின்றது :lol: .... நான் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை யாரையும்... ஆனால் பலர் இதால் மனம் நோகிறார்கள் என்று மட்டுமே சொன்னன்... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனித பிறப்பை - ஒரு நல்ல மனித பிறப்பை - கடவுளாக்கி இருக்கலாம். என்னை பொறுத்த வரை - null hypothesis படிச்சு இருப்பியள் தானே. அது போல தான் நானும் ஒன்றுமில்லாமல் ஆராய தொடங்கி.... "எனது அறிவிற்கு அப்பாற்பட்டு- ஆனால் இருக்கலாம்" என்ற நிலையை பற்றி இருக்கிறேன்!

கடவுள் என்பதன் அர்த்தமே நாம் விளங்கிய மாதிரி - மனித உருவத்தில் ஒரு பெரிய மனுஷன் என்பதை நான் ஏற்று கொள்ளவில்லை. உருவத்திலோ/ செயலிலோ/ எமக்கு விளங்காத ஒன்றாக தான் இதுவரை இருந்து இருக்கிறது. அது எமது மனசாட்சி/ அறிவுகூர்மை/ தன்னம்பிக்கை எல்லாமுமாய் சேர்ந்த எம்மில் ஒரு பாகமாகவே இருக்கலாம்.

எனக்கு ஜேசுவை ஒரு தத்துவவாதியாகக் காண்பதை விட வேறெதுவும் சரி என்று படவில்லை. எனது கேள்விக்கு விடை அதாவது மேரி எப்படி கன்னியாவே இருந்து.. பிள்ளை பெற்றாங்க என்றது.. ஒன்றும் அவ்வளவு இலகுவாக விடை தரக்கூடிய விடயம் அன்று. அதனை வரலாற்றியல் ஆய்வாலர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.. என்பதை அவர்கள் மத்தியில் நிலவும் முரண்பட்ட கருத்துக்கள் சொல்கின்றன.

நீங்கள் எப்படி கடவுள் வந்து குழந்தை உருவாக்கினார் என்று நம்புகிறீர்களோ.. அதே அளவுக்கு அதனை எதிர்க்கவும் எனக்கும் சிந்தனை இருக்கவே செய்யும். ஏனெனில் கடவுள் என்பது என்ன என்பது.. வினாவாகவே இருக்கிறது இந்த உலகில்..

நான் பிரபஞ்சத்தை கடவுள் படைத்தார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை. பிரபஞ்சம் இயற்கையின் அம்சமாக இருக்கிறது என்பதையே ஏற்றுக் கொள்கிறேன்..!

சுஜி...

இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உதாரணம்.. மேரி. அவர் எப்படி கன்னியாக.. இருந்து குழந்தை பெற்றார் என்பதுதான்....??! முடிந்தால் அதற்கு உங்களின் விடையைச் சொல்லுங்கள் கேட்கிறேன். அதற்காக பெண்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்காக நான் இந்தக் கருத்தைப் பதியவில்லை. அப்படி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாயின் பெண்கள் செய்யும் குற்றங்களோடு ஆதாரங்களோடு அதைச் செய்வேன். செய்தும் இருக்கிறேன்.

சமூகத்தில் ஆண்களோடு களவாக உறவாடி.. அபோசன் செய்வதில்லையா பெண்கள்.. குழந்தை பெற்றுக் கொள்வதில்லையா..! அதில் எல்லாம் ஆண்கள் தான் குற்றவாளிகளா..??!

பெண் என்றால் சோனியா காந்தியும் தான் பெண். அவரை சனியாள் என்று பேசுவதை.. நீங்கள் எல்லாப் பெண்களையும் அப்படிச் பேசுவதாகக் கருதுவீர்களா..??! இல்லைத்தானே. பகுத்தறிந்து கொள்கிறீர்கள் தானே. அப்படி ஏன் இதனைச் செய்ய முடியவில்லை.

இங்கு குறிப்பிட்ட உதாரணங்களில் நாம் பெண்கள் என்று வரையறுத்தது.. குறிப்பிட்ட தப்பைச் செய்யும் பெண்களை. ஒட்டுமொத்த பெண்களையும் அல்ல.

உங்களின் ஒரு கருத்தோடு எனக்கும் உடன்பாடே. உலகில் உள்ள அத்தனை பெண்களும் கெட்டவர்கள் அல்ல. அதேபோல் உலகில் உள்ள அத்தனை ஆண்களும் நல்லவர்களும் அல்ல. இரு தரப்பிலும்.. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப.. இயல்பாக.. நல்லவர்களாக.. கெட்டவர்களாக வாழ்பவர்கள் இருக்கின்றனர். அதனை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இங்கு நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில்.. தவறிழைத்துவிட்டு பெண்கள் குழந்தைகளைப் பெற்று குப்பைத் தொட்டியில்.. ஆஸ்பத்திரியில்.. கழிவு வாய்க்காலில்.. வீசிவிட்டுப் போவதை நான் நல்ல செயல் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு பெண் இடமளிக்காமல் ஆண் தப்புச் செய்ய முடியாது. அப்படி தப்புச் செய்திருந்தாலும்.. தண்டனை வாங்கிக் கொடுத்து அவனை இந்த உலகிற்கு இனங்காட்ட வேண்டிய பெண்களே ஆண்கள் தப்பிக்க ஏன் வகை செய்கிறார்கள்..! தம்மிலும் தப்பிருக்கு என்பதனால் தானே..!

இதற்கு மேல்.. மேரி தவிர வேறு பெண்களைப் பற்றி இவ்விடத்தில் நான் அதிகம் உரையாட விரும்பவில்லை. வேறொரு தலைப்பில் இது பற்றி வந்தால் உரையாடிக் கொள்வோம்..!

தப்பை தப்பென்று சொல்ல நானும் எவருக்கும் அஞ்சவோ.. பதுங்கவோ போறதில்லை..! அது பெண் செய்தால் என்ன ஆண் செய்தால் என்ன. தப்பு தப்புத்தான்..! பெண் என்பதற்காக இரக்கப்படவும் மன்னிக்கவும் நான் ஒன்றும்.. பெண் அனுதாபம் தேடும்.. சாதாரண ஆண் கிடையாது. ஆணாக இருக்க முதல் மனிதனாக இருக்க விரும்புகிறேன்..! பெண்ணாக இருக்க முதல் பெண்களும் மனிதர்களாக மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்க முயன்றால்.. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பெண்கள் மீது எழுவது தவிர்க்கப்படலாம்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

------

------

எங்கே மற்றவர்கள்... பெரிய பெரிய எழுத்தளார்கள் இப்ப வருவார்களே... பெண்களே ஆண்களை விட மிஞ்சியவர்கள் என்று... இதுதான் சாட்டு என்று மனசிலை ஒன்றை வைத்து வெளிய எழுத வருவார்கள்... இன்னும் நேரம் இருக்கு போல...

சுஜி ,

ஆண் உயர்வென்றோ , பெண் உயர்வென்றோ கருதாமல் இருப்பதை தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம் விளக்குகின்றது .

மற்றும் படி இவற்றை சீரியஸாக வாசிச்சு ரென்சன் ஆகாதேங்கோ . :lol:

wb37.jpgz_p19-Hindu-Gods.jpgaumatavee.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி ,

ஆண் உயர்வென்றோ , பெண் உயர்வென்றோ கருதாமல் இருப்பதை தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம் விளக்குகின்றது .

மற்றும் படி இவற்றை சீரியஸாக வாசிச்சு ரென்சன் ஆகாதேங்கோ . :)

wb37.jpg

அதிலும் பாருங்கள்.. ஆண் சாந்தமான பசுவை அடையாளமாக்கி இருக்கிறான். பெண்.. சீறிப்பாயும் சிங்கத்தை அடையாளமாக்கி இருக்கிறாள்..! அர்த்தநாரிசு வரம்.. இதனையும் சொல்வதைக் கவனிக்க தவறக் கூடாது..! :lol::)

எப்படித்தெரியும் இது ஆண் பசு என்றும். பெண் சிங்கம் என்றும்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தெரியும் இது ஆண் பசு என்றும். பெண் சிங்கம் என்றும்

சிவபெருமானின் அடையாளம்.. காளைப்பசு.. பசு (பெண்) அல்ல. ஆண் சிங்கத்திற்குத்தான் சடை அதிகம்...! பெண் சிங்கத்திற்கு அதிகம் சடையில்லை..! :lol::)

(சிங்கத்தோடு ஒப்பிடும் போது காளைப் பசு சாந்தமானது..!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் பாருங்கள்.. ஆண் சாந்தமான பசுவை அடையாளமாக்கி இருக்கிறான். பெண்.. சீறிப்பாயும் சிங்கத்தை அடையாளமாக்கி இருக்கிறாள்..! அர்த்தநாரிசு வரம்.. இதனையும் சொல்வதைக் கவனிக்க தவறக் கூடாது..! :lol::)

ஐயோ ..... சிவபெருமானே ........ smiley-angelic011.gif என்னை காப்பாத்து .

என்னால முடியலை நெடுக்ஸ் . :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி ,

ஆண் உயர்வென்றோ , பெண் உயர்வென்றோ கருதாமல் இருப்பதை தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம் விளக்குகின்றது .

மற்றும் படி இவற்றை சீரியஸாக வாசிச்சு ரென்சன் ஆகாதேங்கோ . :lol:

wb37.jpg

:)

சிறி அண்ணா போட்ட படம் - அது: பசு = ஆண்மையில் உள்ள மென்மையையும்...சிங்கம் = பெண்மையில் உள்ள வீரத்தையும் - உணராதவர்களுக்கு குறிப்பிட்டு காட்டுவதற்கு என்று நினைக்கிறேன்.

எனது கூற்று தவறாக இருக்கலாம்.

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இங்கு நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில்.. தவறிழைத்துவிட்டு பெண்கள் குழந்தைகளைப் பெற்று குப்பைத் தொட்டியில்.. ஆஸ்பத்திரியில்.. கழிவு வாய்க்காலில்.. வீசிவிட்டுப் போவதை நான் நல்ல செயல் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு பெண் இடமளிக்காமல் ஆண் தப்புச் செய்ய முடியாது. அப்படி தப்புச் செய்திருந்தாலும்.. தண்டனை வாங்கிக் கொடுத்து அவனை இந்த உலகிற்கு இனங்காட்ட வேண்டிய பெண்களே ஆண்கள் தப்பிக்க ஏன் வகை செய்கிறார்கள்..! தம்மிலும் தப்பிருக்கு என்பதனால் தானே..!

இதற்கு மேல்.. மேரி தவிர வேறு பெண்களைப் பற்றி இவ்விடத்தில் நான் அதிகம் உரையாட விரும்பவில்லை. வேறொரு தலைப்பில் இது பற்றி வந்தால் உரையாடிக் கொள்வோம்..!

தப்பை தப்பென்று சொல்ல நானும் எவருக்கும் அஞ்சவோ.. பதுங்கவோ போறதில்லை..! அது பெண் செய்தால் என்ன ஆண் செய்தால் என்ன. தப்பு தப்புத்தான்..! பெண் என்பதற்காக இரக்கப்படவும் மன்னிக்கவும் நான் ஒன்றும்.. பெண் அனுதாபம் தேடும்.. சாதாரண ஆண் கிடையாது. ஆணாக இருக்க முதல் மனிதனாக இருக்க விரும்புகிறேன்..! பெண்ணாக இருக்க முதல் பெண்களும் மனிதர்களாக மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்க முயன்றால்.. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பெண்கள் மீது எழுவது தவிர்க்கப்படலாம்..! :lol::)

மனிதனாக இருந்து - என்னால் தப்பு தப்பு என்று இதை தீர்ப்பிட முடியவில்லை.

வளர்ந்த ஆணும் பெண்ணும், சுயபுத்தியுடன் உடலுறவு கொள்வது மனித இயல்பு.

ஒரு தாய் தனது பிரசவம் முடிந்த கையோடு பிள்ளையை எங்கேயும் எறிந்து விட்டு போகிறார் என்றால்:

1. அவருக்கு ஆதரவாய் உதவி செய்ய சமுதாயம் தவறி விட்டது - அது அந்த

குழந்தையின் தகப்பன் முதல் அந்த தாயை சுற்றி இருந்த சமூகம் வரை.

அல்லது,

2. அவர் தாய்மையின்/ பிரசவத்தின் பாதிப்பால் மனநோயடைந்துள்ளார். இது மருத்துவ கோளாறாக இருக்கலாம்.

இதில் எங்கு தீர்ப்பிட இடம் இருக்கு? :)

பெண் சிங்கம்: பெண் சிங்கத்துக்கு முகத்தில் ரோமங்கள் அடர்த்தியாக இருக்காது என்று நினைக்கிறன்.

800px-Female_lion_side.jpg

ஆண் சிங்கம்: ஆண் சிங்கத்துக்கு முகத்தில் ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும் என்று நினைக்கிறன்.

male-lion.jpg

தலையில் கொம்பு இருக்கிறது எல்லாம் ஆண் பசுவா?

:lol:

---------

சிறி அண்ணா ஒரு சந்தேகம், கேட்டல் பிழையாக நினைக்கக் கூடாது... இந்து மதத்தில் பொதுவாக ஆண், பெண் கடவுள்கள், பசு, சிங்கம், மையில் எலி எல்லாம் அலங்காரம் பண்ணிய சிலைகள் படங்கள் பார்த்து இருக்கிறேன்... ஏன் அப்படி அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள்? கடவுள்களுக்குப் பல கைகள் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார்கள்... ஏதாவது விசேட காரணங்கள் இருக்கிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.