Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை - பருத்தியன்

Featured Replies

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.

ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.

கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்... முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின்

விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.

ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.

சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.

ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர்தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத்தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.

திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் "பயங்கரவாதம்" என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் "பயங்கரவாதிகள்" இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் "விடுதலைப் போராளிகள்" என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள

இளையோரின் விடுதலை உணர்வை அறுத்தெறியவென்று

கட்டாக்காலிகள் படையொன்று புலம்பெயர் மக்களிடையே ஊடுருவி உள்ளது.

எங்களை விற்ற பெருமைக்குரிய ஆனந்த சங்கரி,அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், மற்றும் சில பத்திரிகையாளர்கள் பேச்சுரிமை என்று சொல்லி தம் உடம்பையே விற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.

கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்... முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின்

விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.

- எங்கள் ஆரம்ப காலங்களை பற்றி நீங்கள் குறிபிட்டது உண்மை. போரின் வலி அப்போது தெரியவில்லை. மாதகணக்கில் படிப்பு இல்லை, பள்ளிக்கூடமே இல்லை, இரவு ரெண்டு மணிக்கு ஷெல் அடிச்சால் ஓடி போய் பங்கருக்க இருக்கோனும், பங்கருக்க மேல் படில இருந்தால் கலர் கலராய் மேலால ஷெல் பறக்கிறதை விநோதமாய் பார்க்க விரும்பும் வயதில் - பங்கருக்க இருந்து அம்மா சொல்லுவா - கடவுளிட்ட பிராத்தனை பண்ணுங்கோ "செத்தால் எல்லாரும் ஒன்றாக சாக வேணும்" என்றேக்க கூட - "ஏன் இப்படி சொல்றா - கடவுளே விடியிறதுக்குள்ள ஒரு மட்ட தேளையும் காணமல் இருந்தாலே காணும்". என்று மட்டும் தான் நினைக்க தோணும் வயதில் கண்ட போர் காட்சிகள், அவலங்கள் எல்லாதிற்கும் வளர்ந்தால் பிறகு தான் அவற்றின் வலி தெரிந்தது.

- நல்ல கருத்துகளை கொண்ட கட்டுரை பருத்தியன். இங்கும் பதிந்ததற்கு நன்றி. அற வழி என்பது நேர்மையானது/மேன்மையானது என்று நினைக்கிறேன், அற வழியுடன் சிறு சிறு நரி வழியையும் (- எமக்குள் அல்ல!)..... நாம் ஒன்றாக நின்று சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக கையாண்டு, எதிரியின் பலத்தை குறைக்க வேண்டும். தனிய அற வழி மட்டும் தான் என்றால் - இந்த அநியாய உலக அரசியலில், அக்கறை இல்லாத தற்போதைய மனிதரின் மத்தியில் எமது தலைமுறையின் காலத்தில் நாம் வெல்வது கடினம். எதிரியின் ஈனத்தனத்தை கையாள என்றாலும் நரி வழிகள் கொஞ்சம் தேவை படுகிறது.

ஆக்கபூர்வமான உங்கள் எழுத்திற்கு எனது பாராட்டுகளும், நன்றியும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியன்...உங்களுடைய இந்த ஆக்கம் வீரியம் மிக்கதாகவும் மிகவும் தெளிவானதாகவும் இருக்கிறது.

அடுத்த போராட்டங்களை இளைஞர்களே எடுக்கவேண்டும். நடாத்த வேண்டும். எல்லா மக்களின் ஒத்துழைப்புடனும்.

நல்ல ஆக்கம் பருத்தியன். காலத்துக்கு ஏற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இளைஞ்ஞர்களின் காலம்

  • கருத்துக்கள உறவுகள்

பல பல்கலைகழக இளைஞர்/யுவதிகள் கடந்த பனிக்காலத்தில் மிக மிக உத்வேகமாக பல போராட்டங்களில் கலந்து கொண்டார்கள். காவல்துறை, மீடியாவுடன் அவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மிக உணர்ச்சி வசமானவை. பலவற்றை கண்கூடாக கண்டவன். இதே உறவுகள் சிறிது சோர்வுற்றாலும் மீண்டும் களத்தில் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. நன்றி பருத்தியன் காலத்தின் தேவை அறிந்த கட்டுரையை வரைந்தமைக்கு. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோரின் கடமை தெளிவாக உள்ளது.. அதே நேரத்தில் தாயகத்தில் வாழும் இளையோர் என்ன வகையில் போராட்டத்திற்கு பங்களிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை.. தாயகத்தில் உள்ளவர்களுடன் இணைந்து செயற்பட முடியாத தற்போதைய நிலை தொடர்ந்தால் சிந்தனை இடைவெளியும் அதிகரிக்கும். எனவே மக்களை மீண்டும் தத்தமது சொந்த நிலங்களில் குடியமரப் பண்ணுவதே தற்போது முக்கியமானதாகும். இதன் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியான் காலத்திற்கேற்ற விடயங்களை உள்ளடக்கிய உங்களின் கட்டுரை வரவேற்புக்குரியது. கொஞ்சநாளா யாழ்களத்தில எழுதுறாக்களின் நோக்கமும் சிந்தனையும் மாங்கனி மாங்கொட்டை ஆராச்சியில இருந்ததால மனக்கிலேசமடைஞ்சிருந்தனான். இதிலவேதின என்னெண்டா இந்த ஆராச்சிக்காறரெல்லாருமே சுயத்தில சமூகசிந்தனையும் விடுதலைவேட்கையுமுள்ளவர்கள். ஏன்தான் இப்ப இந்த இக்கட்டானநேரத்தில இப்பிடியான ஆராச்சியில நிக்கினம்? யாழில பழையமாதிரி ஆரோக்கியமான விடயங்களை எழுதுங்கோ. முந்தி போராட்டம் களத்தில வலுச்சேர்த்தது மட்டும்தான் புலத்தில. இப்ப போராட்டம் புலத்தில வலுச்சேர்க்கமட்டும்தான் அவர்களாலமுடியும்.

  • தொடங்கியவர்

இளையோரின் விடுதலை உணர்வை அறுத்தெறியவென்று

கட்டாக்காலிகள் படையொன்று புலம்பெயர் மக்களிடையே ஊடுருவி உள்ளது.

இப்படியான துரோகக் கூட்டங்கள் எப்போதுமே எம் இனத்திற்கு சாபக்கேடு மாதிரி தொடர்கின்றார்கள்.

இவைகளை இனங்கண்டு ஒதுக்கிவைக்கவேண்டும்

எந்தக் கட்டாக்காலிகளாலும் நமது உணர்வை நாம் இழக்கக் கூடாதென்று ஒவ்வொரு இளையோரும் தமக்குள் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்

- எங்கள் ஆரம்ப காலங்களை பற்றி நீங்கள் குறிபிட்டது உண்மை. போரின் வலி அப்போது தெரியவில்லை. மாதகணக்கில் படிப்பு இல்லை, பள்ளிக்கூடமே இல்லை, இரவு ரெண்டு மணிக்கு ஷெல் அடிச்சால் ஓடி போய் பங்கருக்க இருக்கோனும், பங்கருக்க மேல் படில இருந்தால் கலர் கலராய் மேலால ஷெல் பறக்கிறதை விநோதமாய் பார்க்க விரும்பும் வயதில் - பங்கருக்க இருந்து அம்மா சொல்லுவா - கடவுளிட்ட பிராத்தனை பண்ணுங்கோ "செத்தால் எல்லாரும் ஒன்றாக சாக வேணும்" என்றேக்க கூட - "ஏன் இப்படி சொல்றா - கடவுளே விடியிறதுக்குள்ள ஒரு மட்ட தேளையும் காணமல் இருந்தாலே காணும்". என்று மட்டும் தான் நினைக்க தோணும் வயதில் கண்ட போர் காட்சிகள், அவலங்கள் எல்லாதிற்கும் வளர்ந்தால் பிறகு தான் அவற்றின் வலி தெரிந்தது.

- நல்ல கருத்துகளை கொண்ட கட்டுரை பருத்தியன். இங்கும் பதிந்ததற்கு நன்றி. அற வழி என்பது நேர்மையானது/மேன்மையானது என்று நினைக்கிறேன், அற வழியுடன் சிறு சிறு நரி வழியையும் (- எமக்குள் அல்ல!)..... நாம் ஒன்றாக நின்று சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக கையாண்டு, எதிரியின் பலத்தை குறைக்க வேண்டும். தனிய அற வழி மட்டும் தான் என்றால் - இந்த அநியாய உலக அரசியலில், அக்கறை இல்லாத தற்போதைய மனிதரின் மத்தியில் எமது தலைமுறையின் காலத்தில் நாம் வெல்வது கடினம். எதிரியின் ஈனத்தனத்தை கையாள என்றாலும் நரி வழிகள் கொஞ்சம் தேவை படுகிறது.

ஆக்கபூர்வமான உங்கள் எழுத்திற்கு எனது பாராட்டுகளும், நன்றியும். :lol:

எமது சின்னவயசுக் காலங்கள் தான் பாழாகிப் போய்விட்டது. இனிவரும் இளந்தலைமுறைக் குழந்தைகளுக்கும் அந்த வலிகள் நேராமல் காப்பது இளையோரான நமது கடமை.

"உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள்" என்றுதான் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு நான் அறவழியோடு அறிவுவழியும் வேண்டுமென்று சொன்னதில் "அறிவுவழி" என்பதில் நீங்கள் குறிப்பிட்ட "நரி வழியும்" அடக்கம்.

நன்றிகள் பல

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்

பருத்தியன்...உங்களுடைய இந்த ஆக்கம் வீரியம் மிக்கதாகவும் மிகவும் தெளிவானதாகவும் இருக்கிறது.

அடுத்த போராட்டங்களை இளைஞர்களே எடுக்கவேண்டும். நடாத்த வேண்டும். எல்லா மக்களின் ஒத்துழைப்புடனும்.

நல்ல ஆக்கம் பருத்தியன். காலத்துக்கு ஏற்றது.

இளையோர்களால் சாதிக்கமுடியும். அதற்கு பெரியோர்களும் துணைபுரிவார்கள். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் எதிகாலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நன்றி

இது இளைஞர்களின் காலம்

இளையோர்கள் கையில் நம் இனத்தின் எதிர்காலம்.

நன்றி ஜான்சிராணி.

பல பல்கலைகழக இளைஞர்/யுவதிகள் கடந்த பனிக்காலத்தில் மிக மிக உத்வேகமாக பல போராட்டங்களில் கலந்து கொண்டார்கள். காவல்துறை, மீடியாவுடன் அவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மிக உணர்ச்சி வசமானவை. பலவற்றை கண்கூடாக கண்டவன். இதே உறவுகள் சிறிது சோர்வுற்றாலும் மீண்டும் களத்தில் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. நன்றி பருத்தியன் காலத்தின் தேவை அறிந்த கட்டுரையை வரைந்தமைக்கு. :lol:

உண்மைதான் நுணாவிலன், அவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்போது நிச்சயம் அதனை வெளிப்படுத்துவார்கள்.

நன்றி நுணாவிலன்.

  • தொடங்கியவர்

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோரின் கடமை தெளிவாக உள்ளது.. அதே நேரத்தில் தாயகத்தில் வாழும் இளையோர் என்ன வகையில் போராட்டத்திற்கு பங்களிப்பார்கள் என்பது தெளிவாக இல்லை.. தாயகத்தில் உள்ளவர்களுடன் இணைந்து செயற்பட முடியாத தற்போதைய நிலை தொடர்ந்தால் சிந்தனை இடைவெளியும் அதிகரிக்கும். எனவே மக்களை மீண்டும் தத்தமது சொந்த நிலங்களில் குடியமரப் பண்ணுவதே தற்போது முக்கியமானதாகும். இதன் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

கிருபன், தற்போதைய நிலைமையில் அவர்களினால் வெளிப்படையாக செயற்பட முடியாது என்பதே உண்மையான நிலைமை. ஆயினும், மறைமுகமாக எவ்வளவோ உதவிகளை போராட்டத்திற்கு தாயக உறவுகள் கஷ்டத்திற்கு மத்தியிலும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். சாதகமான சூழ்நிலை ஏற்பட்டால் இன்னும் அதிகமாக தமது உச்சப் பங்களிப்பினை செய்வார்கள்.

நன்றி கிருபன்

மக்களை மீள குடியமர்த்தி போட்டு விலைக்களிவில் மது பாணங்களையும் புத்த கோயில்களுக்கு போவர்களுக்கு விலைக்களிவு சீட்டுக்களும், பாலியல் ஒளித்தட்டுகளை குறைந்த விலையிலும், குடுத்து சிங்களம் பேச தெரிந்தவர்களுக்கு அதிகாரிகளின் சலுகைகளையும், பதவிகளையும் குடுத்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து போகும்...

அப்படியும் மீறி தமிழ் உணர்வோடை நிற்கும் பெடியளுக்கு நெருக்குதலை ஒட்டு குழுக்கள் ஊடாக குடுத்தால் பெடி தப்பி ஓடி வெளிநாடு போய் நிண்டு தன் வேலையை நாங்கள் இங்க பாக்கிற மாதிரி இங்கை பாக்கும்...

இதை விட வேற என்ன த்தையும் மேலதிகமாக எதிர்பார்க்காதாங்கோ....

Edited by தயா

10 வருட காலமாக இராணுவ பிடியில் இருக்கும் யாழ்மாவட்ட மாணவர்களின் நிலமை தான் இனி வன்னி இளையோரின் நிலமையும் ,புலத்தில இருந்து இளையோர் செய்யும் செயலால் எதாவது நன்மை கிடத்தால் நல்லம்

சாதகமான சூழ்நிலை என்பது இனிமேல் ஏற்படவாய்ப்பேயில்லை,சிங்களவ

Edited by Jil

  • தொடங்கியவர்

பருத்தியான் காலத்திற்கேற்ற விடயங்களை உள்ளடக்கிய உங்களின் கட்டுரை வரவேற்புக்குரியது. கொஞ்சநாளா யாழ்களத்தில எழுதுறாக்களின் நோக்கமும் சிந்தனையும் மாங்கனி மாங்கொட்டை ஆராச்சியில இருந்ததால மனக்கிலேசமடைஞ்சிருந்தனான். இதிலவேதின என்னெண்டா இந்த ஆராச்சிக்காறரெல்லாருமே சுயத்தில சமூகசிந்தனையும் விடுதலைவேட்கையுமுள்ளவர்கள். ஏன்தான் இப்ப இந்த இக்கட்டானநேரத்தில இப்பிடியான ஆராச்சியில நிக்கினம்? யாழில பழையமாதிரி ஆரோக்கியமான விடயங்களை எழுதுங்கோ. முந்தி போராட்டம் களத்தில வலுச்சேர்த்தது மட்டும்தான் புலத்தில. இப்ப போராட்டம் புலத்தில வலுச்சேர்க்கமட்டும்தான் அவர்களாலமுடியும்.

பெரும்பாலும் எல்லாருக்குமே விடுதலையுணர்வு இருக்கின்றது. ஆனால் எந்த நேரமும் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இந்த மாங்கனி ஆராய்ச்சியெல்லாம் அவர்களின் கலையுணர்வாக இருக்கலாம்.

கவலையை மறந்து கொஞ்சம் கலகலப்பாக இருக்க விரும்பியிருக்கலாம்.

நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்

நன்றிகள் பல

  • தொடங்கியவர்

மக்களை மீள குடியமர்த்தி போட்டு விலைக்களிவில் மது பாணங்களையும் புத்த கோயில்களுக்கு போவர்களுக்கு விலைக்களிவு சீட்டுக்களும், பாலியல் ஒளித்தட்டுகளை குறைந்த விலையிலும், குடுத்து சிங்களம் பேச தெரிந்தவர்களுக்கு அதிகாரிகளின் சலுகைகளையும், பதவிகளையும் குடுத்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து போகும்...

அப்படியும் மீறி தமிழ் உணர்வோடை நிற்கும் பெடியளுக்கு நெருக்குதலை ஒட்டு குழுக்கள் ஊடாக குடுத்தால் பெடி தப்பி ஓடி வெளிநாடு போய் நிண்டு தன் வேலையை நாங்கள் இங்க பாக்கிற மாதிரி இங்கை பாக்கும்...

இதை விட வேற என்ன த்தையும் மேலதிகமாக எதிர்பார்க்காதாங்கோ....

நீங்கள் சொல்லுறதும் உண்மைதான் தயா.

ஆனால், யாழ்ப்பாணத்திலும் தாயகத்தின் ஏனைய இடங்களிலும் இருந்துகொண்டு இன்றும் உணர்வோடு இருந்து போராட்டத்துக்கு உதவிக்கொண்டிருக்கும் பலபேர் இருக்கின்றார்கள்.

தயா! களம் இப்போது புலத்தில்தான். புலத்தில் மேற்கொள்ளும் செயற்பாடுகள்தான் தற்போது அவசியமாகியிருக்கின்றது. அதை நாம் சரிவரச் செய்வோம்.

தியாகங்கள் என்றைக்கும் வீண்போனதில்லை.

நாமும் வெல்வோம்.

  • தொடங்கியவர்

10 வருட காலமாக இராணுவ பிடியில் இருக்கும் யாழ்மாவட்ட மாணவர்களின் நிலமை தான் இனி வன்னி இளையோரின் நிலமையும் ,புலத்தில இருந்து இளையோர் செய்யும் செயலால் எதாவது நன்மை கிடத்தால் நல்லம்

சாதகமான சூழ்நிலை என்பது இனிமேல் ஏற்படவாய்ப்பேயில்லை,சிங்களவ??் அப்படியான சூழ்நிலை ஏற்படவிடப்போவதில்லை .

விடுதலைப் போராட்டம் என்று வருகையில், "சாதகமான சூழ்நிலை" என்பதைவிட "சாதகமான மனநிலை" அதாவது போராட்ட உணர்வு மிக்க மனநிலை என்பதுதான் அவசியம். அது இருந்தால், எந்தவொரு பாதகமான சூழ்நிலையிலும் விடுதலைப் போராட்டம் அழிந்து போகாது.

அப்போராட்ட உணர்வு... வலியையுணர்ந்த வன்னி மக்களிடம் அதிகமாகவே இருக்கும்.

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கைமுறையும் வன்னி மக்களின் வாழ்க்கைமுறையும் வித்தியாசமானது.

ஈழப் போராட்ட வரலாற்றில் அதிகளவு அவலங்களை சந்தித்தவர்கள் வன்னி மக்களே. அவர்கள் அனுபவித்த வலிகள் எப்படி வெளிப்படப்போகின்றன என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பருத்தியன், உங்கள் ஆக்கத்திற்கு நன்றி.

தாயகத்தில் எமது மக்கள் பாரிய அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்டபோது வெளிநாடுகளில் வாழும் இளையோரின் பலத்தை அறிய முடிந்தது. தொடர்ந்து இளையோரின் இன உணர்வு பேணப்பட வேண்டுமானால் தாயகத்திலுள்ள இளையோருடன் நேரடித் தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலை அததற்கு இடமளிக்கப் போவதில்லை. தாயகத்திலுள்ளவர்கள் எது செய்தாலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே சிங்கள அரசால் நோக்கப்படும். எல்லோரும் கூறுவதுபோல் காலம் பதில் சொல்லுமா ?

புலம்பெயர் தேசத்தில் உள்ள எங்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினால்தான் தாயகத்திலுள்ள இளையோர் சுதந்திரக்காற்றினை சுவாசிக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளபோது அதனை மாற்றவேண்டிய கடமை நம் முன்னேதான் உள்ளது. நமது கடமையை சரிவரச் செய்வோமானால் அவர்களின் தொடர்பும், போராட்ட உதவியும் தானாகக் கிடைக்கும்.

காலம் பதில் சொல்லும் என்று தாமதிக்காமல், நாம் விரைந்து முயற்சிப்போம்.

நன்றி இணையவன்

Edited by பருத்தியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.