Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகமும் ஈழத்தமிழரும் மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்கினி சுப்பிரமணியத்துடனான கலந்துரையாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

seeman_greet_010509.jpg

மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்.

தரவிறக்கம் செய்து கேட்பதற்கு

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னர் நான் செவ்வி கண்டவர்கள் நரைத்த தாடிக்காரர்கள் என்று பலர் குறைப்பட்டுக்கொண்டார்கள்..என

வேதான் இம்முறை தாடியே இல்லாத அக்கினி சுப்பிரமணியம் அவர்களுடனான ஒரு கலந்துரையாடலை செய்து போட்டிருக்கிறேன்..என்னுடன் கலந்துரையாடலில் இணைந்திருந்தவர் சாந்தி ரமேஸ் வவுனியன். நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கலந்துரையாடலில் பங்கு கொண்டு , அக்கினி சுப்பிரமண்யம் அவர்களின் செவ்வியைத் தந்த சாத்திரிக்கும் சாந்தி ரமேசுக்கும் நன்றிகள்.

"புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது" என்று கருத்து வைக்கும் சில யாழ்கள உறுப்பினர்கள் ,தமிழீழ ஆதரவாளர் அக்கினி சுப்பிரமண்யம் அதை ஏன் செய்யவில்லை, இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாலும் கேப்பினம்.

:lol:கந்தப்பண்ணை சத்தியமாய் நான் கேட்க மாடடேன். ஏனென்றால் பேட்டி கண்டவையும் சரி, பேட்டி கொடுத்தவரும் சரி பார்க்கிறவை காதிலை பூ வைக்கிறதெண்ட முடிவோடை தான் செயல்ப்படுகினம். அதிலை பிறகென்ன கேள்விக்கு இடமிருக்கு ??

போற போக்கிலை அக்னி சுப்பிரமண்யம்; கலைஞரை தான் தான் முதல்வர் ஆக்கி விட்டனான் எண்டு சொன்னாலும், அதைப் பற்றி விலாவாரியாக விளக்கும் படி பேட்டி கண்டவை கேட்பினம் பாருங்க!! அப்பறம் அதிலை நான் வந்து என்ன கேள்வி கேட்க முடியும் ?? வேண்டுமானால் தங்களைப் போல் "சிங் சாங்" போடச் சொல்லுகின்றீர்களா ??:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணை அக்கினியின் கருத்தை கேட்டிருக்கிறோம். கதைச்சிருக்கிறம் அவ்வளவுதான். அதுக்கு இப்பிடி சிங்சாங் பாட்டெல்லாம் :)

வசம்பண்ணை அக்கினியின் கருத்தை கேட்டிருக்கிறோம். கதைச்சிருக்கிறம் அவ்வளவுதான். அதுக்கு இப்பிடி சிங்சாங் பாட்டெல்லாம் :D

இதுக்காக ஏன் கோவிக்கிறீங்க சாந்தி அக்கா

அவரால முடிஞ்சது அவ்வளவுதான் :)

அதுக்காக அவர் மீது அக்னி(சுப்பிரமணியத்தை)யை

ஏவி விட்டிடாதங்கோ :wub:

வசம்பண்ணை அக்கினியின் கருத்தை கேட்டிருக்கிறோம். கதைச்சிருக்கிறம் அவ்வளவுதான். அதுக்கு இப்பிடி சிங்சாங் பாட்டெல்லாம் :lol:

சாந்தியக்கோய்,

சிங்சாங் என்று நான் குறிப்பிட்டது கந்தப்புவிற்கு. நீங்களிருவரும் கைநிறையப் பூக்களோடு அடுத்தவர் காதிலை வைக்க நிற்கிறியள் எண்டு தான் குறிப்பிட்டேன்.

உதாரணமாய் குமுதம்.கொம் எடுக்கும் பேட்டிகளை கேட்டுப் பாருங்கள். பேட்டி எடுப்பதென்பது பேட்டி கொடுப்பவரின் ரீல்களை கேட்டுத் தலையாட்டுவது மட்டுமல்ல. கொஞ்சம் எதிர்க் கேள்விகளும் கேட்க வேண்டும். உதாரணமாக இந்திய எல்லைக்குள் ஒரு கப்பல் நுழைய வேண்டுமென்றால் அதற்கு இந்திய மத்திய அரசு தான் அனுமதிக்க வேண்டும். அது தெரியாதவர் போல் அவரும் பிதற்றுகின்றார். நீங்களும் ஆமோதிப்பது போல் பேட்டி எடுக்கின்றீர்கள். அதுபோல் செஞ்சிலுவைச்சங்கம் பொருட்களைப் பொறுப்பெடுத்து கப்பலிலுள்ள பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இறக்கி பொருட்களை வெளியிலெடுப்பதற்கு, கப்பலி்ல் என்னென்ன பொருட்கள் வந்தன என்ற பட்டியல் துறைமுக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொருட்களைக் கொடுத்தவர்கள் அந்தப் பட்டியலை கொடுக்கவில்லை. இது பற்றி பிரித்தானியாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டதற்கும் அதற்குரிய தகுந்த பதிலை அவர்கள் தரவில்லையென்று செஞ்சிலுவைச் சங்கம் விசனம் தெரிவித்திருந்தது. கப்பலில் போனவரொருவர் திரும்பி வந்து தீபம் தொலைக்காட்சியிலே பொருட்களை அரசாங்கம் பொறுப்பெடுக்க வச்சிட்டம். இனி அவை மக்களுக்குப் போனாலும் வெற்றி போகாட்டிலும் வெற்றி என்று பிதற்றினார். இவையெல்லாம் உங்களுக்கோ சாத்திரிக்கோ தெரியாமல் தானோ நீங்கள் பேட்டி எடுத்தனீங்கள் ?? ஆக மொத்தத்தில் "வணங்காமண்" பற்றி உங்களிருவருக்கும் "ஒரு மண்ணும்" தெரியாமல்த் தான் அக்னியிடம் விபரம் கேட்கின்றீர்கள் போல..... :lol: :lol:

Edited by Vasampu

இதுக்காக ஏன் கோவிக்கிறீங்க சாந்தி அக்கா

அவரால முடிஞ்சது அவ்வளவுதான் :lol:

அதுக்காக அவர் மீது அக்னி(சுப்பிரமணியத்தை)யை

ஏவி விட்டிடாதங்கோ :lol:

மருமோனுக்கும்

5 சதத்துக் குதிரை ஆறு கடக்கப் பாயும் என்று பிளந்து கட்டினால்த் தான் பிடிக்குமாக்கும். :lol: சத்தியமாய் எனக்கு உந்த பிளந்து கட்டுற விடயம் பிச்சுப் போட்டாலும் வராது மருமோன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக ஏன் கோவிக்கிறீங்க சாந்தி அக்கா

அவரால முடிஞ்சது அவ்வளவுதான் :lol:

அதுக்காக அவர் மீது அக்னி(சுப்பிரமணியத்தை)யை

ஏவி விட்டிடாதங்கோ :lol:

மருமகன் இதுக்கெல்லாம் கோவிக்கிறதோ ? நீங்கள் அக்கினியாகாமல் பார்த்துக்கொள்வதுதான் சரிபோலபடுகிறது. :lol:

சாந்தியக்கோய்,

சிங்சாங் என்று நான் குறிப்பிட்டது கந்தப்புவிற்கு. நீங்களிருவரும் கைநிறையப் பூக்களோடு அடுத்தவர் காதிலை வைக்க நிற்கிறியள் எண்டு தான் குறிப்பிட்டேன்.

உதாரணமாய் குமுதம்.கொம் எடுக்கும் பேட்டிகளை கேட்டுப் பாருங்கள். பேட்டி எடுப்பதென்பது பேட்டி கொடுப்பவரின் ரீல்களை கேட்டுத் தலையாட்டுவது மட்டுமல்ல. கொஞ்சம் எதிர்க் கேள்விகளும் கேட்க வேண்டும். உதாரணமாக இந்திய எல்லைக்குள் ஒரு கப்பல் நுழைய வேண்டுமென்றால் அதற்கு இந்திய மத்திய அரசு தான் அனுமதிக்க வேண்டும். அது தெரியாதவர் போல் அவரும் பிதற்றுகின்றார். நீங்களும் ஆமோதிப்பது போல் பேட்டி எடுக்கின்றீர்கள். அதுபோல் செஞ்சிலுவைச்சங்கம் பொருட்களைப் பொறுப்பெடுத்து கப்பலிலுள்ள பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இறக்கி பொருட்களை வெளியிலெடுப்பதற்கு, கப்பலி்ல் என்னென்ன பொருட்கள் வந்தன என்ற பட்டியல் துறைமுக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொருட்களைக் கொடுத்தவர்கள் அந்தப் பட்டியலை கொடுக்கவில்லை. இது பற்றி பிரித்தானியாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டதற்கும் அதற்குரிய தகுந்த பதிலை அவர்கள் தரவில்லையென்று செஞ்சிலுவைச் சங்கம் விசனம் தெரிவித்திருந்தது. கப்பலில் போனவரொருவர் திரும்பி வந்து தீபம் தொலைக்காட்சியிலே பொருட்களை அரசாங்கம் பொறுப்பெடுக்க வச்சிட்டம். இனி அவை மக்களுக்குப் போனாலும் வெற்றி போகாட்டிலும் வெற்றி என்று பிதற்றினார். இவையெல்லாம் உங்களுக்கோ சாத்திரிக்கோ தெரியாமல் தானோ நீங்கள் பேட்டி எடுத்தனீங்கள் ?? ஆக மொத்தத்தில் "வணங்காமண்" பற்றி உங்களிருவருக்கும் "ஒரு மண்ணும்" தெரியாமல்த் தான் அக்னியிடம் விபரம் கேட்கின்றீர்கள் போல..... :lol: :lol:

பூக்களையில்லை நாங்கள் துப்பாக்கி ரவைகளையா தர முடியும். யார் காதில் யார் பூவை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அது அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்யலாம்.

வணங்காமண் பற்றி தெரிஞ்சதை சொல்லி தெரியாததை தெரிவிக்க நானோ சாத்திரியோ வணங்காமண்ணை இலங்கை வரை கொண்டு சென்றவர்கள் அல்ல.

உங்கள் கேள்விக்கு அக்கின அவர்கள் மின்னஞ்சலில் சாத்திரிக்கும் எனக்கும் அனுப்பிய பதில் இங்கே பதிவிடுகிறேன். (தனது கருத்தை இப்பகுதியில் இணைக்கும்படி அக்கினி தந்த அஞ்சல் இங்கே. இதில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் அதற்கான தனது விளக்கங்களை தருவார் என நம்புகிறேன்)

கருத்துக்களம் வசம்புவுக்கு அக்னியின் பதில்.

கீழ்கண்ட செய்தியினை எம் சார்பாய் கருத்துகளத்தில் ஏற்றவும்.

அக்னி

---------------

வசம்பு:

வசம்பு என்ற தமிழ் நண்பர் என்னைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லையென்பதை அவர் எழுத்தில் தெரிகிறது.

நான் வசம்புக்கு நேரிடையாகவே பதிலளிக்க கருத்துக்களத்தில் பதிவு செய்தேன். ஆயினும், எனக்கு 'பதில் தர' அனுமதியில்லை என்று வந்ததால், எனது பதிலை, உங்களுக்கு அனுப்புகிறேன். இன்னும் அய்யம் இருப்பின், என்னுடன் அவர் நேரிடையாக பேசலாம் அல்லது என் மின்னஞ்சலுக்கும் எழுதலாம். இதையெல்லாம் விட்டு விட்டு எதோ முழுமையாக தெரிந்தவர் போல் பேசுவதும், எழுதுவதும் தைரியமுள்ள தமிழனுக்கு அழகல்ல. உண்மையாக சொல்ல வேண்டுமெனில், வசம்புக்கு அடிப்படையாக எதுவும் தெரியவில்லை என்பது தெரிகிறது. அதனால் தான் அவர் தேவையில்லாத வார்த்தைகளை எழுதும்போது பயன்படுத்துகிறார் என்றும் புரிகிறது.

வசம்புவின் வினாவுக்கு....

"செஞ்சிலுவைச்சங்கம் பொருட்களைப் பொறுப்பெடுத்து கப்பலிலுள்ள பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இறக்கி பொருட்களை வெளியிலெடுப்பதற்கு, கப்பலில் என்னென்ன பொருட்கள் வந்தன என்ற பட்டியல் துறைமுக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொருட்களைக் கொடுத்தவர்கள் அந்தப் பட்டியலை கொடுக்கவில்லை. இது பற்றி பிரித்தானியாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டதற்கும் அதற்குரிய தகுந்த பதிலை அவர்கள் தரவில்லையென்று செஞ்சிலுவைச் சங்கம் விசனம் தெரிவித்திருந்தது. கப்பலில் போனவரொருவர் திரும்பி வந்து தீபம் தொலைக்காட்சியிலே பொருட்களை அரசாங்கம் பொறுப்பெடுக்க வச்சிட்டம். "

பதில்: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் உள்ளவர்களுக்கு, இந்தியாவிலிருந்து வணங்கா மண் நிவாரணப் பொருட்களை 'ஆவணப்படி' அனுப்பியது இந்திய செஞ்சிலுவைச் சங்கம். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தை சார்ந்தவர்களை டெல்லியிலிருந்து சென்னைக்கு வரவழைத்து வந்து, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தேவையான ஆவணங்களை கப்பல் முகவர் முன்னிலையில் தயாரித்தது, அந்த ஆவணங்களிலே நாமும் கையெழுத்து இட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கப்பல் முகவர் மூலம் அனுப்பி வைத்திட அனைத்து வேளைகளையும் நாமே நேரிடையாக நின்று செய்தோம். மாற்றுக்கப்பலான, கேப். கொலாராடா கப்பல் ஜீலை 8ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு, கொழும்புவுக்கு ஜீலை 9ம் இரவு சென்றடைந்தது. ஆனால், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு, ஆவணங்களை ஜீலை 8ம் தேதியே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது. ஆயினும், பணம் கட்டுவதில் சில சிக்கல் லண்டன் கருணைத்தூதுவன் அமைப்பு ஏற்படுத்தியதால்தான், உடனே அவ்வாணங்களைக் கொண்டு எடுக்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் எடுக்க இயலவில்லை. ஆனால், பின்னர் அனைத்து பிரச்சனைகளையும் கலைந்தவுடன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆவணத்தை வைத்து எடுக்க முயற்சிக்கவில்லை. இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், ஏன் வசம்பு தேவையில்லாமல் வம்பு இழுக்கிறார். சென்னையில் என்ன என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக அறிந்தவர் போல் அவர் பேசுவது, நமக்கு ஆச்சரியமாய் உள்ளது. ஏனெனில், லண்டன் கருணைத்தூதுவன் அமைப்பிற்கே நாம் இங்க என்ன நடந்து வருகிறது என சொன்னால்தான் தெரியும். அவ்வப்பொழுது நாம் அவர்களுக்கு தெரிய படுத்தியும் வந்துள்ளோம். அனைத்து ஆவணங்களும் கருணைத்தூதுவனுக்கு அனுப்பியும் வைத்துள்ளோம். அதேபோல், இங்கிருக்கும் தமிழக முதல்வருக்கு ஏதேனும் வணங்கா மண் பற்றிய செய்திகள் தெரிய வேண்டுமெனில், இன்று வரை தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு கீழ் இயங்கும் பொதுச் செயலகத்தின் செயலாளர், சென்னைக் கோட்டையிலிருந்து எங்கள் மனிதம் அமைப்பிற்கு தொலைபேசி செய்து கேட்டுக் கொண்டு செயல் படுகின்றனர். ஏன், சில தினங்களுக்கு முன் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முகாமிற்கு செல்லவேண்டி, இந்திய பிரதமரை சந்தித்தது தெரிந்திருக்கும். அவர்கள் திங்கள் சந்திக்கும் முன், ஞாயிறு மாலை தமிழக அரசின் கோட்டையில் உள்ள அரசு செயலகத்திலிருந்து செயலாளர் எங்களுடன் தொடர் கொண்டு, அன்றைய வணங்கா மண் நிலை குறித்து தெரிந்து கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்செய்தியை சொன்னார்கள். பிறகுதான், நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்திய பிரதமரை சந்தித்து, முகாம் மக்கள் பிரச்சனைகளைக்குறித்து சொல்லி பின்னர் வணங்கா மண் செய்தியையும் தெரியப்படுத்தினர். இவ்வளவு செயல்பாடுகளை இங்கிருந்து, ஒரு ரூபாயும் வசம்பு போல் உள்ள தமிழீழ மக்களிடத்தில் இதுவரை வாங்காமல், உணர்வு ரீதியில் செயல்படும் எங்களைப் பார்த்து 'பிதற்றுவதாய்' சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

அத்தோடு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஏதோ விசனப்படுவதாயும் சொல்கிறார். வசம்புக்கு தெரியுமா, இதுவரை நாங்கள் சென்னையிலிருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு தொடர்பு கொண்டாலும், அவர்கள் இன வெறி அடிப்படையில், எங்களிடமோ அல்லது லண்டன் கருணைத்தூதுவன் அமைப்பினரையோ இதுவரை தொடர்பெடுக்க மறுக்கின்றனர். அதேபோல், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமும் அவர்கள் பேச மறுக்கின்றனர். மும்பையில் உள்ள கப்பலின் முகவரான ஒரு சீக்கியரிடம் மட்டுமே சில சமயம் தொடர்பெடுக்கின்றனர். சிங்களன் இன வாதி என்பது இதில் முழுமையாக தெரிகிறது. ஆனால், தமிழன் புத்தி உண்மையை முழுமையாக தெரியாமலேயே எழுத்தில் வெளிப்படுகிறது.

இப்படி தொடர்புகூட வைத்துக் கொள்ளக்கூடாது என நினைத்து செயல் படும் சிங்கள மயமான செஞ்சிலுவைச் சங்கத்தினரின் நோக்கமே, நிவாரணப் பொருட்கள் தமிழனுக்கு கிடைக்கக்கூடாது என்பது தான். கடந்த 26ம் தேதி - கொழும்பு பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 80 நாட்கள் கழித்து, நிவாரணப் பொருட்களை கைகழுவி விடுவதாய் இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவிக்கிறது. அதேபோல, வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் குறித்த அனைத்து முடிவுகளும், இலங்கை அதிபரின் சிறப்புச் செயலாளர் கோதைபாய் ராசபக்சேவும், பசிலும் தான் இறுதி முடிவெக்க அமைத்தப்பட்டுள்ளனர். இதில் தான் சிங்களவனின் சூட்சமமும், கால தாமதப்படுத்தி, இலங்கையால் முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பொருட்களை என்ன அழுத்தம் இருப்பினும், தமிழனுக்கு சேர்க்கக்கூடாது என்ற எண்ணத்திற்கு உங்களைப் போலவர்கள்தான் 'சிங்சாங்' அடிக்கின்றீர்கள் என சந்தேகம் எழுகிறது. இனியாவது, முழுமையாக செய்திகளை தெரிந்து கொண்டு, பின்னர் செயல்படுவீர்கள் என நினைக்கிறேன்.

வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் இன்னும் மக்களுக்கு சேரவில்லையே என்ற ஆதங்கம் இன்னும் எம் மனதை உளுக்கி எடுக்கிறது. அதற்காக பல வழிகளில், நாம் செயல்பட்டு வருகிறோம். நாளையும் (தினமலர் முதல் பக்கத்தில்) கூட வணங்கா மண் குறித்த சிறப்பு செய்தி வர உள்ளது.

பொருட்கள் தமிழ் மக்களுக்கு சென்றடைய ஏதாவது உங்களால் செய்ய முடியுமாயின் செய்யுங்கள். இல்லாவிடில், வீட்டில் அமைதியாக தூங்குங்கள். செயல்படும் எம் போன்ற சிலரையும், தடுத்து எதிரிக்கு துணை போகாதீர்கள்.

நன்றி

அக்னி

--

www.manitham.net

manitham@manitham.net

மருமோனுக்கும்

5 சதத்துக் குதிரை ஆறு கடக்கப் பாயும் என்று பிளந்து கட்டினால்த் தான் பிடிக்குமாக்கும். :lol: சத்தியமாய் எனக்கு உந்த பிளந்து கட்டுற விடயம் பிச்சுப் போட்டாலும் வராது மருமோன். :lol:

என்ன வசம்பண்ணா

சூடாகிட்டிங்க போல

கூல் கண்ணா கூல் :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கோய்,

சிங்சாங் என்று நான் குறிப்பிட்டது கந்தப்புவிற்கு. நீங்களிருவரும் கைநிறையப் பூக்களோடு அடுத்தவர் காதிலை வைக்க நிற்கிறியள் எண்டு தான் குறிப்பிட்டேன்.

உதாரணமாய் குமுதம்.கொம் எடுக்கும் பேட்டிகளை கேட்டுப் பாருங்கள். பேட்டி எடுப்பதென்பது பேட்டி கொடுப்பவரின் ரீல்களை கேட்டுத் தலையாட்டுவது மட்டுமல்ல. கொஞ்சம் எதிர்க் கேள்விகளும் கேட்க வேண்டும். உதாரணமாக இந்திய எல்லைக்குள் ஒரு கப்பல் நுழைய வேண்டுமென்றால் அதற்கு இந்திய மத்திய அரசு தான் அனுமதிக்க வேண்டும். அது தெரியாதவர் போல் அவரும் பிதற்றுகின்றார். நீங்களும் ஆமோதிப்பது போல் பேட்டி எடுக்கின்றீர்கள். அதுபோல் செஞ்சிலுவைச்சங்கம் பொருட்களைப் பொறுப்பெடுத்து கப்பலிலுள்ள பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இறக்கி பொருட்களை வெளியிலெடுப்பதற்கு, கப்பலி்ல் என்னென்ன பொருட்கள் வந்தன என்ற பட்டியல் துறைமுக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொருட்களைக் கொடுத்தவர்கள் அந்தப் பட்டியலை கொடுக்கவில்லை. இது பற்றி பிரித்தானியாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டதற்கும் அதற்குரிய தகுந்த பதிலை அவர்கள் தரவில்லையென்று செஞ்சிலுவைச் சங்கம் விசனம் தெரிவித்திருந்தது. கப்பலில் போனவரொருவர் திரும்பி வந்து தீபம் தொலைக்காட்சியிலே பொருட்களை அரசாங்கம் பொறுப்பெடுக்க வச்சிட்டம். இனி அவை மக்களுக்குப் போனாலும் வெற்றி போகாட்டிலும் வெற்றி என்று பிதற்றினார். இவையெல்லாம் உங்களுக்கோ சாத்திரிக்கோ தெரியாமல் தானோ நீங்கள் பேட்டி எடுத்தனீங்கள் ?? ஆக மொத்தத்தில் "வணங்காமண்" பற்றி உங்களிருவருக்கும் "ஒரு மண்ணும்" தெரியாமல்த் தான் அக்னியிடம் விபரம் கேட்கின்றீர்கள் போல..... :lol: :lol:

வணக்கம் வசம்பு நாங்கள் எடுத்தது பேட்டியல்ல..கலந்துரையாடல்.. அதனை தெளிவாக ஒலிப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளார் சாந்தி.. மற்றும்படி பேட்டி என்பது எப்படி எடுக்கவேண்டும் என்ற உங்கள் ஆலேசனைகளிற்கு நன்றிகள்.. இதற்கு முதல் தமிழ் மாணவர் பேரவை சத்திய சீலனிடமும் டென்மார்க் தர்மகுலசிங்கம் அவர்களிடமும் பேட்டி எடுத்து இதே பகுதியில் இணைத்துள்ளேன்..அவற்றையும் கேட்டு விட்டு எப்படி பேட்டி எடுப்பது என்று எனக்கு சொல்லித்தாருங்கள் அடுத்த பேட்டியை அப்படியே தயாரிக்கிறேன் மற்றும்படி அக்கினி யின் பதில் எனக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்..மேலதிக சந்தேககங்கள் எதுவானாலும் தான் பதில் தர காத்திருப்பதாக சொன்னார்..நன்றி வணக்கம்...

Edited by sathiri

என்ன வசம்பண்ணா

சூடாகிட்டிங்க போல

கூல் கண்ணா கூல் :lol: :lol:

செல்ல மருமோன்,

உப்படி அநியாயத்திற்கு லொள்ளுப் பண்ணலாமோ?? இங்கே யார் சூடாகியிருப்பதென்று மருமோனுக்கு புரியவில்லையோ ?? இல்லை மாமிக்குப் பயந்து என்ரை காலை வாருகின்றீரோ ?? பேரீச்சம் பழத்தி்கு போகும் வணங்காமண் எழுதிய சாந்தியக்காவிற்கு, நான் எழுதிய உண்மைகள் ஏன் பொறுக்கவில்லை ??ஆனாலும் மருமோனின் தீர்க்கதரிசனத்தைப் பாராட்டடத் தான் வேண்டும். என் மீது அக்னியை (சுப்ரமணியத்தை) ஏவி விடாதைங்கோ என்று நீங்கள் சொன்னதை சரியாகத் தான் சாந்தியக்காவும் புரிந்து செய்துள்ளார். என்றாலும் அதுவும் நன்மைக்கே. அக்னியாரும் தன் பங்கிற்கு என் மீது வெழுத்து வாங்கியிருக்கின்றார். எனி நான் போட்டு வாங்க வேண்டாமோ ?? அக்னியார் தன் மடலில் என்னை வேண்டுமானால் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார். ஆனால் சாந்தியக்கா பதிலை இங்கே இணைக்கும் போது தொலைபேசி இலக்கத்தை சுட்டுவிட்டாவோ அல்லது தொலைத்த விட்டாவோ தெரியவில்லை. எனக்கு சாத்திரம் பார்த்து தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிக்கத் தெரியாது. சாந்தியக்கா அவ்விலக்கத்தை பகிரங்கமாக இணைக்க விரும்பாவிட்டால், எனக்கு தனிமடலிலாவது தந்துதவலாம் தானே ?? அக்னியாரிட்டை நானும் பல கேள்விகள் கேட்க இருக்கு. அதனால் அவரை நான் பேட்டி கண்டு யாழிலை இணைப்பதும் நல்லது தானே ??

வணக்கம் வசம்பு நாங்கள் எடுத்தது பேட்டியல்ல..கலந்துரையாடல்.. அதனை தெளிவாக ஒலிப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளார் சாந்தி.. மற்றும்படி பேட்டி என்பது எப்படி எடுக்கவேண்டும் என்ற உங்கள் ஆலேசனைகளிற்கு நன்றிகள்.. இதற்கு முதல் தமிழ் மாணவர் பேரவை சத்திய சீலனிடமும் டென்மார்க் தர்மகுலசிங்கம் அவர்களிடமும் பேட்டி எடுத்து இதே பகுதியில் இணைத்துள்ளேன்..அவற்றையும் கேட்டு விட்டு எப்படி பேட்டி எடுப்பது என்று எனக்கு சொல்லித்தாருங்கள் அடுத்த பேட்டியை அப்படியே தயாரிக்கிறேன் மற்றும்படி அக்கினி யின் பதில் எனக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்..மேலதிக சந்தேககங்கள் எதுவானாலும் தான் பதில் தர காத்திருப்பதாக சொன்னார்..நன்றி வணக்கம்...

வணக்கம் சாத்திரியார்,

நீங்கள் எடுத்தது பேட்டியல்ல என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் அக்னியார் தனது இணையத்தில் இதை நேர்காணல் (பேட்டி) என்றே போட்டுள்ளார். உங்கள் வாதப்படி பார்த்தாலும் கலந்துரையாடல் ஒரு பக்கத்தார் மட்டுமே கதைக்க முடியுமோ ?? கலந்துரையாடல் என்பதே பல விடயங்களை விவாதிப்பதே. அந்த விதத்தில் வணங்காமண் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களையும் விவாதித்திருக்கலாமே ?? அது தான் கலந்துரையாடல் என்று நான் நினைக்கின்றேன். மேலும் நீங்கள் என்னை விருந்திற்கு அழைத்து, உணவைத் தருகின்றீர்கள். அப்போது உணவு எப்படி என்று நீங்கள் வினாவினால், எனக்கு பரிமாறப்பட்ட உணவைப் பற்றிய கருத்தைத் தான் என்னால் சொல்ல முடியும். அப்படி அந்த உணவு பற்றிய குறைகளை நான் சுட்டிக் காட்டினால், நீங்கள் நேற்றுச் சமைத்த உணவு மற்றும் முந்தநாள் சமைத்த உணவு நீர் சாப்பிட்டனீரோ என்று என்னுடன் வாதம் செய்தால் என்ன செய்ய முடியுயும் ?? எனது கருத்தானது தங்களால் கலந்துரையாடல் என்று இணைக்கப்பட்ட அக்னி சுப்ரமணியத்தினுடனான கலந்தரையாடல் பற்றியதே.

அக்னியாருடன் சில விடயங்களைப் பறிமாற எனக்கும் விருப்பம் தான். அவரும் அதை தனது கருத்தில் தெரிவித்துமுள்ளார். ஆனால் தொலைபேசி இலக்கத்தை (கைத்தொலைபேசியல்ல) தந்தால்த் தானே என்னாலும் தொடர்பு கொள்ள முடியும் ?? அக்னியாரும் மறந்து விட்டாரோ ?? தாங்களாவது தந்துதவினால் மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவிற்கு அக்கினியின் பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்..

வசம்புக்கு பதிவுக்கு நமது கருத்து. கருத்துக்களத்தில் பதியவும்.

Boîte de réception Répondre

M A N I T H A M

afficher les détails 20:01 (Il y a 24 minutes)

அன்பு நண்பர் வசம்புக்கு, வணக்கம்.

இந்த 'போட்டு வாங்கும் வேலை'யை முன்னமே நீங்கள் செய்யவில்லையே எனத்தான் வருத்தப்படுகிறேன். அப்படி இருந்திருந்தால், உங்கள் தவறான பதிவுக்கு நான் எதிர்வினை செய்ய வேண்டிய வேலை இருந்திருக்காது. காலதாமதம் ஆனாலும், இப்போதாவது வணங்காமண் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருப்பது, மகிழ்வைத் தருகிறது.

உங்கள் 'போட்டு வாங்கும் வேலை'க்காக காத்திருக்கிறேன்.

ஆனால், உங்கள் தற்போதைய பதிவிற்கு என்னுடைய பதிலில் உள்ளவைகளை பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் இப்போது பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

மற்றொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டுமென்று, நான் பதிலளிக்கவில்லை. உங்கள் பதிவில் இருந்த வார்த்தைகளும், தவறான செய்திகளுமே என்னை அப்படி பதில் எழுதத்தூண்டியது. மற்றையபடி, நீங்கள் உள் மனதில் நினைப்பது போன்று யாரும் என்னிடம் உங்களுக்கு பதில் தர கேட்டுக் கொள்ளவில்லை.

மேலும், எங்களுடைய இணையத்தில் பேட்டி என சொல்லப்பட்டிருப்பது பற்றி என்னிடம் கேட்டிருக்கலாம். சுட்டிக்காட்டியாதற்கு நன்றி, விரைவில் அதை கலந்துரையாடல் என மாற்றுகிறேன்.

கண்டிப்பாய் சாந்தியோ, சிறீயோ எனது தொடர்பு எண்ணை உங்களுக்கு தருவார்கள். அவர்களிடம் நீங்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். நான் என்னுடைய முந்தைய பதிலில் என்னுடைய தொலைபேசி இலக்கத்தை தராதது, கருத்துக்களம் ஒரு பொது மேடை. அதில் இடம் பெற வேண்டாம் என்று தான் விட்டு விட்டேன். நீங்கள் சாந்தியையோ சிறீயையோ தொடர்பெடுத்து தெரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

அக்னி

இனி வசம்பு அவர்களிடம் என்னிடம் கேட்டதற்கான பதில் .. விருந்தினரிற்கு இன்று சமைத்த சோறு மட்டும் கொடுக்காமல் முன்னர் சமைத்த பழஞ்சோறும் இருக்கின்றது அதையும் சாப்பிட்டு உங்கடை கருத்தை சொல்லுங்கோ என்றுதான் கேட்டிருந்தேன்..சுடு சோத்திலை குறை கண்டு பிடிக்கிறியே முடிந்தால் பழைய சோத்திலை கண்டு பிடிபார்ப்பம் என்றுகூறவில்லையே?? அதே நேரம் வணங்கா மண்பற்றி நான் அறிந்த விடயங்கள் இங்கு ஊடகங்களில் பலரும் அறிந்ததுதான்..ஆனால்இறுதியாக இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு அந்தக் கப்பலை மனிதம் அமைப்பினரே திருப்பி அனுப்பிய நடவடிக்கைகளில் முழுதாக் பங்கேற்றிருந்தனர் என்பதால் அதைப்பற்றிய விபரங்களை அவர் சொல்வதை கேட்டேன்..

அக்கினின் தொ.பே.மற்றும் வேறு தொடர்பு வழிகளும் வசம்பு உங்களிற்கு தனிமடலில் இட்டிருக்கிறேன்..நன்றி வணக்கம்..

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினின் தொ.பே.மற்றும் வேறு தொடர்பு வழிகளும் வசம்பு உங்களிற்கு தனிமடலில் இட்டிருக்கிறேன்..நன்றி வணக்கம்..

வசம்பு சிறி உங்களுக்கு அக்கினியின் தொபே விபரம் தனிமடலிட்டுள்ளார். இதனால் நான் தனிமடலில் தர வேண்டியதில்லை.

இங்கு சிறியோ நானோ அக்கினியை உங்களில் அவித்துவிடவில்லை. நீங்கள் அவிந்தால் அது உங்கள் பிழை. அக்கினி உங்கள் கருத்தை வாசித்துவிட்டே உங்களுக்கு பதில் எழுதியிருக்கிறார். இதை விதண்டாவாதம் செய்து மருமோனையும் துணைக்கு கூப்பிட்டு நீ்ங்கள் சிங்சாங் போடுவதற்கு பதில் எழுத எனக்கு நேரமில்லை.

நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். இதை சொல்ல வேண்டும் இதனால் மடக்கி கேள்வி கேட்க வேண்டுமென்றெல்லாம் அரசியல் செய்யவில்லை.

நன்றி வணக்கம்.

மருமோனையும் துணைக்கு கூப்பிட்டு

சாந்தி அக்கா

நான் துணைக்கும் போகமாட்டேன்,பிணைக்கும் போகமாட்டேன்.

எனக்கு இப்ப சனிமாற்றம் கூடாதாம் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா

நான் துணைக்கும் போகமாட்டேன்,பிணைக்கும் போகமாட்டேன்.

எனக்கு இப்ப சனிமாற்றம் கூடாதாம் :lol::D

இணைக்குப் போனாலும் பிணைக்குப் போகப்படாதெண்டு சொல்லுவினம். நீங்கள் சனிமாற்றத்தாலை பிணைக்குப் போகமாட்டேனென்கிறீர்கள். :lol:

மருமகனே சனிமாற்றமா ? எனக்கு ஏழரை கடைக்கூறாம் :D

இதுக்காக ஏன் கோவிக்கிறீங்க சாந்தி அக்கா

அவரால முடிஞ்சது அவ்வளவுதான் :)

அவராலை முடிஞ்சதென அவள்வளவு இலகுவாய் சொல்லாதையுங்கோ. வசம்பு சக கருத்தாளர் அவரது கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் நளினத்துடன் கூடிய எள்ளலால் ஒருவரை நகைப்பதைத்தான் மறுக்கிறேன்.

சந்தேகங்களோடு சில கேள்விகளை வைத்திருக்கும் வசம்பு அக்கினிபற்றிய அவரது கேள்விகளை தனது வானொலி மூலம் பேட்டியெடுத்துப் போட்டால் நாங்களும் கேட்போம். இங்கு வசம்பு எங்கள் பகைவரில்லை.

Edited by shanthy

எனக்கு உந்த நளினம், எள்ளல் எல்லாம் தெரியாது. கொஞ்சம் குசும்பாய் எழுதுவேன் பெயருக்கேற்றவாறு. அது உங்களுக்கும் ஏற்கனவே தெரியும். எனது வானொலியென்று தாங்கள் கதையளப்பது எதில் சேர்த்தி. அக்னியார் நான் அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்பினால், தமிழைப் புரிந்து கொள்வதிலுமா தங்களுக்குப் பிரைச்சினை ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணை நீங்கள் எந்த ரேடியோவிலை எத்தினை மணிக்கு வாறனீங்கள்? :)

வசம்பு அண்ணை நீங்கள் எந்த ரேடியோவிலை எத்தினை மணிக்கு வாறனீங்கள்? :lol:

:)நான் (என்ரை) றேடியோவில் எத்தனை மணிக்கு வருவேனென்கிற விடயத்தை, என்ரை PA மேடத்தைத் தான் கேட்க வேண்டும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:)நான் (என்ரை) றேடியோவில் எத்தனை மணிக்கு வருவேனென்கிற விடயத்தை, என்ரை PA மேடத்தைத் தான் கேட்க வேண்டும். :lol:

அதையும் ஒருக்கால் உங்கடை அவவிட்டை அதுதான் பீ..ஏ யிட்டை கேட்டு ஒருக்கால் சொல்லுங்கோவன் :D

அதையும் ஒருக்கால் உங்கடை அவவிட்டை அதுதான் பீ..ஏ யிட்டை கேட்டு ஒருக்கால் சொல்லுங்கோவன் :rolleyes:

:)என்ன கு.சா என்ரை பீ.ஏ என்றவுடன் நீங்களும் இரண்டு தரம் கால் போடப் பார்க்கிறியள். உது நல்லாயில்லை சொல்லிப் போட்டேன். :rolleyes: இப்ப என்ரை பீ.ஏ சரியான பிசி. அதாலை அவவை நான் பிடிக்கிறதே ரொம்பக் கஷ்டமாயிருக்குது. :rolleyes: பேசாமல் கருணா அம்மானின் பீ.ஏ போல ஒன்றை பார்க்கலாமோ என்று யோசிக்கிறன். :rolleyes:

Vasampu' date='Oct 6 2009, 10:35 AM' post='544822']

:)என்ன கு.சா என்ரை பீ.ஏ என்றவுடன் நீங்களும் இரண்டு தரம் கால் போடப் பார்க்கிறியள். உது நல்லாயில்லை சொல்லிப் போட்டேன். :rolleyes: இப்ப என்ரை பீ.ஏ சரியான பிசி. அதாலை அவவை நான் பிடிக்கிறதே ரொம்பக் கஷ்டமாயிருக்குது. :rolleyes: பேசாமல் கருணா அம்மானின் பீ.ஏ போல ஒன்றை பார்க்கலாமோ என்று யோசிக்கிறன். :rolleyes:

வசம்புவிற்கு உடனே தோன்றும் உதாரணத்தைப் பாருங்கள். இனம் இனத்தை நாடும்.

வசம்புவிற்கு உடனே தோன்றும் உதாரணத்தைப் பாருங்கள். இனம் இனத்தை நாடும்.

:rolleyes:நானாவது நகைச்சுவைக்காக எழுதுவதோடு சரி. சிலது இதற்கென்றே நாக்கைத் தொங்க போட்டு அலைவதை என்ன சொல்வது ?? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.