Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுநாவல்-வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thanks for the 2000 people who have red my novel. Thanks for the 4 people who have sent 10$ each (amoung them 2 are Indian Tamils). I made myself fool again. Its OK. My short novels will be available at Chennai Bookfair 2010.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ரிஸ்னா என்பதை அனார் என மாற்றி வாசிக்கவும். திருத்தி விடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாகக் கருத்து எழுத முடியவில்லை. ஏகப்பட்ட இடங்களில் தேடலில் தவிக்கும் மனித உணர்வைக்காண்கிறேன். பத்தோடு பதினொன்றாய் பார்க்கமுடியாமல் நின்று நிலைக்க வைத்திருக்கிறது உங்கள் படைப்பு. பின்னோக்கிய ஞாபகக்கிளறல் அங்கம் 7 வரை தொடர்ந்தாலும் இன்னும் மேற்கொண்டு நகர்ந்தாலும் அலுக்காமல் வாசிக்கத் தூண்டுகிறது. உங்கள் குறுநாவல் முழுமையையும் படித்தே தீரவேண்டும் என்று ஓர் ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. தொடருங்கள்... இந்தப் பதிவு என்பது முழுமையான விமர்சனப்பார்வையல்ல. படைப்பாளியின் ஆளுமையை உணர்த்தும் ஒரு பதிவே...

தோழர் பொயட் தொடரும் உங்கள் பதிவிற்காக என்னைப் போல் பலர் காத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் நல்ல தரமான சிறுகதையைப் படித்த திருப்தி.அண்மையில் கூட ஒரு நட்போடு பேசும் வாய்ப்புக் கிடைத்தபோது நான் இவ்வாறன விடயங்கள் பற்றித்தான் பேசினேன்,எப்போதும் பேசிக்கொள்வேன்.ஊரில் வீட்டுக்கதவை சாடையாக சாத்திவிட்டு நின்மதியாக மென்மையான தென்றல் காற்று வீசிக்கொண்டு இருக்கும் போது பத்திரிகையோ,அல்லது கதைப் புத்தகங்களோ படிக்கும் சுவாரஸ்யம் நாங்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கிடைப்பதில்லை.காரணம்....தேடல்க

ள் கூறைந்து கொண்டுபோவதும்...மனித மனங்கள் ஏதோ ஒரு காரணத்தால் வேறு சில விடயங்களில் நாட்டம் கொள்வதனாலும் எண்டு நினைக்கிறேன்.இதை விட வேறு விபரித்து சொல்லப் போனால் நமக்கு அடிக்கத் தான் வருவார்கள்.எது எப்படி இருப்பினும் கதையைக் கொண்டு போகும் விதம் நன்று.சில..சில இடங்களில் வாசிப்பவர்களையே கண் கலங்கச் செய்கிறது உங்களின் சிறு கதை.உங்கள் பணியைத் தொடருங்கள் காத்திருந்து படிப்போம்.நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கவிஞர் மீண்டும் எங்களை யாழ்ப்பாணத்து வாழ்க்கையிலும்..யாழ்ப்பாணத்த

ு தெருவிலும் விட்டுள்ளீர்கள்..

முழுதும் வாசித்து விட்டு உங்கள் தனிமடலுக்கும் பதில் போடுகிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே இவ்வளவு சில்மிசங்களா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிஞர் வல்வை சாகரா, யாகினி, ஜீவா,

உங்கள் கருத்துக்கள் உண்மையும் படைப்பாற்றலுக்கு ஊட்டமுமானவை. தொடர்ந்து வாசியுங்கள். அன்புடன் - ஜெயபாலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே இவ்வளவு சில்மிசங்களா??

சில்மிசமா? அப்படியென்றால் என்ன ஜீவா? எனக்கு துறவு மனசு என்றாலும் உங்கலைப்போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா? நீங்கள் உங்கள் சொந்தக் கதைகலைச் சொல்லும்போது ஈயடிச்சான் கொப்பியாக கண்ணை மூடிக் கொண்டு பிரதி பண்ணிவிடுகீறேன். கேழ்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது இதுதானா? சொந்த அனுபவத்தை வைத்தூ எழுதுவதென்றால் கந்தன்கருணை திருவிழையாடல் பட்டணத்தார் என்று புராணக் கதைகள்தான் எழுதமுடியூம் நண்பரே - ஜெயபாலான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே!

உண்மையிலேயே உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதியோ,அனுபவமோ எனக்கு இல்லை...ஆனாலும் உங்கள் கதை மூலம் உண்மையாகவே எமது சொந்த உணர்வு

போல உணர முடிகிறது..உங்கள் கதையோடு இணைந்திருந்த போதெல்லாம் கதை வாசிக்கிறேன் என்ற எண்ணத்தை விட எனது சொந்தக் கதையை இரை

மீட்பது போலவே உணருகிறேன்..ஆனாலும் கதையில் இழையோடிய சாதி,சிங்கள ராணுவம் போன்றவற்றை உணரவில்லை...

ஆனாலும் 750ம் இலக்க பஸ்ஸில் நெல்லியடியில் ஏறி யாழ்ப்பாணம் போய் வரும் வரை ஆறேழு,இடங்களில் வயது வேறுபாடின்றி ஏறி இறங்கி எமது தேசிய,மாணவர்

அடையாள அட்டைகளை சிங்கள ராணுவம் தேய்ச்சதிலிருந்தே..தமிழர் மீதான அடக்குமுறை அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டே

இருக்கிறது.

அதேபோல முஸ்லிம் மக்களையும் யாழில் பார்த்ததில்லை ஆனால் இப்போதும் சிலர் கல்வி,வியாபாரம் போன்ற தேவைகளுக்காக இருக்கிறார்கள்..

எங்களுடனும் இரண்டு முஸ்லிம் நண்பர்கள் படித்தார்கள்..விடுமுறைக்கு போட்டு வரும் போது ஊத்தப்பம் என்று கொண்டு வந்து தருவார்கள்.

கவிஞரே கேள்வியில் எழுதினேன் என்கிறீர்கள் நம்பவே முடியவில்லை அவ்வளவு இயல்பான எழுத்து நடை....உண்மையாகவே எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..யாழின் கிராமத்துக் காற்றையும்,மண்வாசனையையும்,எம

் மக்களின் வாழ்க்கை முறையையும் மேற்கைத் தேச குளிர் காற்றையும் ஆடம்பர வாழ்க்கையையும் ஒருசேர வாசித்த திருப்தி

இக் கதை படிக்கும் அனைவரையும் மீண்டும் தமது பழைய நினைவுகளை நோக்கி அவற்றை மீண்டும் நினைக்கத் தோன்றும் வகையில் உயிரோட்டமாய் எழுதி உள்ளீர்கள்.

இக் கதை படிக்கும் போது ஒரு புத்துணர்ச்சி எம்மைத் தூண்டுகிறது. கவிஞரே விசா,ரிக்கற் இல்லாமல் எங்களை யாழ்ப்பாணம் கூட்டி கொண்டுபோய்

கூட்டிக் கொண்டுவந்து விட்டீர்கள். :lol:

வாழ்த்துக்கள் கவிஞரே. மலை மீது ஏற்றிய தீபம் போல உங்கள் படைப்புகள் ஒளி கொடுக்கட்டும்..

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில்மிசமா? அப்படியென்றால் என்ன ஜீவா? எனக்கு துறவு மனசு என்றாலும் உங்கலைப்போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா? நீங்கள் உங்கள் சொந்தக் கதைகலைச் சொல்லும்போது ஈயடிச்சான் கொப்பியாக கண்ணை மூடிக் கொண்டு பிரதி பண்ணிவிடுகீறேன். கேழ்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது இதுதானா? சொந்த அனுபவத்தை வைத்தூ எழுதுவதென்றால் கந்தன்கருணை திருவிழையாடல் பட்டணத்தார் என்று புராணக் கதைகள்தான் எழுதமுடியூம் நண்பரே - ஜெயபாலான்

:lol: :lol: :lol:

அழுதிடுவேன் கவிஞரே :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

அழுதிடுவேன் கவிஞரே :lol: :lol:

அழுவதா? அழவேண்டாம் ஜீவா. ஏனென்றால் எப்போ நீங்க செய்த சில்மிசங்கலை நினைத்து மனம் வருந்தினீர்களோ அப்பவே மன்னிக்கப் பட்டு விட்டீர்கள். என்போல துறவு நாட்டம் வேண்டியதில்லை ஜீவா. முடியலை என்றால் காலை அல்லது மதிய உணவோடு எலுமிச்சம் பழ விதைகள் ஐந்து சாப்பிட்டு வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே!

் மக்களின் வாழ்க்கை முறையையும் மேற்கைத் தேச குளிர் காற்றையும் ஆடம்பர வாழ்க்கையையும் ஒருசேர வாசித்த திருப்தி

இக் கதை படிக்கும் அனைவரையும் மீண்டும் தமது பழைய நினைவுகளை நோக்கி அவற்றை மீண்டும் நினைக்கத் தோன்றும் வகையில் உயிரோட்டமாய் எழுதி உள்ளீர்கள்.

இக் கதை படிக்கும் போது ஒரு புத்துணர்ச்சி எம்மைத் தூண்டுகிறது. கவிஞரே விசா,ரிக்கற் இல்லாமல் எங்களை யாழ்ப்பாணம் கூட்டி கொண்டுபோய்

கூட்டிக் கொண்டுவந்து விட்டீர்கள். :lol:

வாழ்த்துக்கள் கவிஞரே. மலை மீது ஏற்றிய தீபம் போல உங்கள் படைப்புகள் ஒளி கொடுக்கட்டும்..

ஜீவா, வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த கதையையும் இன்னுமொரு 400 பக்க நாவலுக்கும் சில கவிதைகளுக்குமாக மூன்றுதடவை கடன்பட்டுக் கனடா சென்றேன். லணடன் நூலகத்துக்குச் சென்று வாசித்திருக்கிறேன். அதன்பின்னர் பயனம் செய்ய எனக்கு பணவதி இருக்கவில்லை. சீரீயஸாக எழுதுவது மிகவும் நேரம் பணம் செலவாகும் விடயம். நம்பிக்கை அடிப்படையில் ஒன்லைனில் தங்கள் இசையை வெளியிட்டு வெற்றி பெற்ற சில வெள்லையர்களைன் கதையை கேழ்விப்பட்டுத்தான் நான் ஒன்லைனில் பாலையை வெளியிட்டேன். அதன்மூஉலம் என் எழுத்து பணிக்கு மூலதனம் கிடைக்கும் என நம்பியிருந்தேன். என்னால் அதிகமாக எழுத முடியாமல் இருந்ததற்க்கு எனது நேரத்தை அரசியல் இராணுவ ஆய்வுகளில் வீணாக்கியதும் எழுத்துக்கான கலப் பணிக்கு வசதிகள் இல்லாமல் இருந்ததும்தான். என்போலவே ஈழத்தின் எழுத்தாளர்கள் கலைஜர்கள் நிலமையும் உள்ளது. தீபச் செல்வன்போன்ற இளம் கலைஞர்கள் எழுதும் கடிதங்கள் கவலை தருகிறது. அவர்களது துணிச்சலையும் ஆற்றல் மிக்க எழுத்தூக்கலையும் வியப்பவர்கள் அவர்கலது உழைப்பை சுரண்டுவதை ஒருபோதும் நினைவு கூருவதில்லை.

என்னுடைய இந்த முயற்ச்சி வெற்றி பெறுமோ தெரியவில்லை. புத்தகம் வாங்கும் தமிழக தமிழர்களை மட்டும் நம்பியே ஈழத் தமிழர்களின் சிருஸ்டிகளும் வெளியிடப் படுகிறது என்பது ஒரு தேசத்தின் வெட்க்கக் கேடு அல்லவா?

இந்த முயற்ச்சி வெற்றி பெற்றால் புதிய அத்தியாயம் ஒன்று உருவாகும் என்னாலும் அடுத்த படைப்புக்கான பயணங்களை வெளிக்கல வேலைகலைச் செய்ய முடியும். கலைஞர்கலின் உழைப்பைச் சுரண்டாத ஒரு ஈழத் தமிழர் தலைமுறையை எதிர்பார்த்து வாழ்த்துகிறேன்.

"நமக்குத் தொழில் கவிதை

நாட்டுக்கு உழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்."

Teliphone : 00919941484253

E mail : visjayapalan@gmail.com

Postbanken, Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account number. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number : NO 6105325118328,

My paypal is : visjayapalan@gmail.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக கவிஞரே

என்னாலான உதவி கண்டிப்பாகச் செய்வேன்.

உங்களைப் போல இளங்கவி அண்ணா கூட எனது உடன் பிறவா சகோதரர் போல அவரும் உங்களை போன்ற மனநிலையிலேயே உள்ளார்...

இது எமது கலைஞர்களின் துரதிஸ்டமா அல்லது எமது இனத்தின் சாபக் கேடா தெரியவில்லை.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக கவிஞரே

என்னாலான உதவி கண்டிப்பாகச் செய்வேன்.

உங்களைப் போல இளங்கவி அண்ணா கூட எனது உடன் பிறவா சகோதரர் போல அவரும் உங்களை போன்ற மனநிலையிலேயே உள்ளார்...

இது எமது கலைஞர்களின் துரதிஸ்டமா அல்லது எமது இனத்தின் சாபக் கேடா தெரியவில்லை.. :lol:

யார் சொன்னது நான் கவலைப் படுவதாக? கலைஞர்களைச் சுரண்டும் ஈழத் தமிழரின் வரலாற்றை மாற்றவே முனைகிறேன்.

தமிழகத்தில் வறுமைக்கு மத்தியிலும் கலைஞர்கள் கலைப் பணியால் வாழ முடிகிறது. ஈழம் ஒரு இனமாக முழுமை அடையாதமைதான் இதற்க்குக் காரணம். போராளிகள்கூட இதைக் கண்டு கொள்ளவில்லை. நான் கவிஞன் என்பதால் அல்ல என்னுடைய இராணுவ அரசியல் ஆய்வுகளுக்காவே அவர்கள் என்னை மதித்தார்கள்.

இது என்னுடைய சொந்தக் கதையா என்று கேட்டதாக ஞாபகம். இது என்ன் காலத்தின் கதை. நான் எனது தோழியர்கள் தோழர்கள் எல்லோருடயவும் கதை. வாழ்க்கை முழுக்க ஆழுமைகள் மிக்க பெண்களின் தொழமையூம் கருணையுமாகத்தான் கலைமகள் எனக்கு அருளினாள். என்னுடைய வரப்பிரசாதம் எல்லாம் என்வாழ்நாளின் ஆரம்ப காலாங்களில் இருந்தே நான் சந்தித்த சந்தித்து வருகிற தோழியர்கள் இட்ட பிச்சைதான். இதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த சங்க்கடமும் இல்லை.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

//அவள் கூரையின்மீது நிலா ஒளிர்கின்றது//

கதையினை முழுமையாக வாசித்து முடிக்கவில்லை கவிஞரே.

'ஈழத்துமண்ணும் எனது முகங்களும்' அறிமுகம் தந்த உங்கள் எழுத்துக்கள்.

இன்று தசாப்தங்கள் கழிந்த பொழுதில் அன்றைய காலத்து நமது மண்ணின் ஞாபகங்களோடு சாதியம் போராட்டம் காதல் பல்கலைக்கழக வாழ்வென நீள்கிறது கதை. முழுவதும் படித்துவிட்டு மிகுதிக்கருத்து வரும்.

ஈழத்து எழுத்துக்களில் நாவல் என்பது ஓர் பெரிய குறையாகவே இருக்கிறது. சிறுகதை போல் நாவல் நமது எழுத்தாளர்கள் மினக்கெடவில்லையென்பது இன்றும் பெரிய இடைவெளிதான். உங்கள் முயற்சி வெற்றிபெற பாராட்டுக்கள் கவிஞ.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழ தோழியரின் வேண்டுகோளுக்கு இணங்க நாவலை ஒருங்கிணைத்துள்ளேன்

ஜெயபாலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழ தோழியரின் வேண்டுகோளுக்கு இணங்க நாவலை ஒருங்கிணைத்துள்ளேன்

ஜெயபாலன்

இங்கு கருத்தெழுதியிருந்த ஜீவா யாகினி வல்வைசாகரா சாந்தி அனவருக்கும் நன்றி, ஜீவா மற்றும் ஜாகினியின் கருத்துக்கள் ஒருங்கிணைப்பின்போது விடுபட்டு விட்டது. அவர்கள் மீண்டும் தங்கள் கருத்தை பதிவு செய்தால் மகிழ்வேன். சாந்தி ஈழத் தமிழர்கள் மத்தியில் நாவல்கள் இல்லை என்றீர்கள். ஈழத் தமிழர்கள் வலுவான ஒரூ தேசிய இனமாக முழுமை அடைய முடியுமானால் அவர்கள் தங்கள் கலைஇஞர்கலை தேடவும் அவர்கள் உழைப்புக்கு விலைதரவும் முன்வருவார்கள். அப்போது நிச்சயம் ஈழத்துக் கலைகள் வளரும். நாவல் காவியங்கள் உரூவாகும் சூழல் மேம்படும். கலைஞர்கள் பட்டினி கிடந்து காவிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் அது அவர்கள் தலை எழுத்து என்கிற ஈழத் தமிழரின் அணுகுமுறை காவியச் சூழலை உருவாக்காதூ. தமிழதமிழர்கள் கண்டூக்கொள்ளாமல் இருந்திருந்தால் இன்று என்னை உங்களூக்குத் தெரிந்திருக்காது. என்னுடைய பல நாவல் க்காவிய முயற்ச்சிகள் நிதி நெருக்கடியால் மூடங்கீப்போயூள்ளன. தீபச் செல்வன் போன்ற இன்றய இளைய தலைமுறை கலைஞர்களுக்கும் இந்த தலைவிதி வேண்டாம். புதிய காலக் கட்டத்தில் நமது கவிஞர்கள் ஒன்லைனில் தங்கள் படைப்பை விற்று நிலை பெற உதவுங்கள். எனது முயற்ச்சிகள் ஒன்லைனில் முதலில் வாசியுங்க்கள் பிடித்தால் விலைதாருங்கள் என்கிற ஒரு திட்டம் தொடர்பான பரிசோதனைதான். இத்தகைய ஒரு திட்டம் இளைய தலைமுறை கலைஞர்களுக்கு வழிகாட்டும் என நம்புகிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக இருளில் சாதி இருக்கவில்லை என்று சொல்லும் கதைகளை நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருளில் ஆணும் பெண்ணும் மட்டுமே இருப்பதாகப் பாட்டி சொல்லுவாள்

இருளில் சாதிமட்டுமல்ல

சிறிலங்காவில் இருளில் இனவெறியும் இருந்ததில்லை

என்று பாட்டிக்கு தெரிய வாய்பிருந்திருக்கா.......

யாழ் நாவல் படித்தத்ல் ஒர் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

பொயற்,

நான் ஏற்கனவே ஒரு இடத்தில் எனது கருத்தை முன்வைத்து விட்டேன்.இருந்தாலும் மீண்டும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.உங்களின் கதையில் வரும் கதாபாத்திரங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதும் தெரிகிறது.உங்கள் கதையைப் படிக்கும் பொழுது கூட ஒருக்கா யாரையாவது சுற்றினால் என்ன என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு எழுதி உள்ளீர்கள்.இளையவர்களுக்கு தெரிந்த ஒண்டு என்றால் அது தானே..வீடுகளில் மட்டை அடி தராமல் பச்சைக் கொடி காட்டினால் சந்தோசம் தான்.எது எப்படி இருப்பினும்.உங்களின் இப்படியான படைப்புக்களை அடிக்கடி தந்து உதவினால் நன்று.உங்களுக்கு என்றும் என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.நன்றி.

Edited by yagini

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே குறுநாவலின் முழுமையான பதிவை பார்வையிடும் முன்னர் ஒரு பதிவை இட்டிருந்தேன். இப்போது இக்குறுநாவலை வாசித்துவிட்டு என் சிற்றறிவுக்குப் பட்டதை இங்கு எழுதுகிறேன் இது ஒரு முழுமையான விமர்சனப் பார்வையாகாது என்பது எனக்குத் தெரியும் இருப்பினும் இக்குறுநாவல் பற்றி எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை எழுதுகிறேன் அவ்வளவே. உங்களின் குறுநாவல் சொல்ல முற்பட்ட விடயங்களை நான் சரியாக கிரகித்து இருக்கிறேனா என்பது எனக்குத் தெரியவில்லை. குறை குற்றம் இருப்பின் தோழர் பொயட் மன்னித்து கொள்ளுங்கள்.

பொதுவாக தேடல்களை நோக்கியே மனம் ஓடிக் கொண்டிருக்கும். இன்பம், பொருள், வாழ்வு, நிம்மதி என்று தேடல்களுக்குள் உள்ளடங்கியதே மனித வாழ்வு. தேடல்களே மனித வாழ்வின் அசைவை நிர்ணயிக்கின்றது. போயட் அவர்களின் குறுநாவல் தேடலிலேயே ஆரம்பிக்கிறது. “சாரங்கா” இரண்டரை தசாப்தங்களின் முன் காதலியாய் சந்தித்தவளை இன்னொருவனின் மனைவியாக காலம் மாற்றி எழுதியபின் சந்திக்கத் துடிக்கும் நரைத்த முடிக்குள் உலவும் யாழ்ப்பாணத்து இளைஞனின் கதை. சராசரி யாழ்ப்பாணத்து இளைஞன், யுவதியூடாக புரையோடிக்கிடந்த சாதி, சமூக பின்னல்களை ஆங்காங்கே பிளேடுகள் கொண்டு அறுத்திருக்கின்றது இக்குறுநாவல். எழுதாத பக்கங்களாக இருக்கும் பல கதைகளை பாட்டிகள் சொல்லும் கதைகளாக இணைத்துச் சென்றிருப்பது கதையின் கருப் பொருளிற்கு பலத்தைச் சேர்த்திருக்கின்றது. பாலன் சாரங்காவிடம் “கனடா போய்விட்டால் அற்றுப் போய்விடுமா?” என்று வினவுவது யதார்த்தத்தில் இன்றும் உயிர்த்துக் கிடக்கின்றது.

ஆசையும், ஆவலும் வெட்கத்தை அறியாது. இளமையும், இருளும் அக்கம் பக்கம் அறியாது. அந்தக்காலத்தில் காதல் சிட்டுகள் ஒதுங்கும் சரணாலயமாக மனோகரா தியேட்டர் இருந்தது என்று இக்கதையினூடே தெரிவித்திருப்பது இங்கு கருத்தெழுதும் பல உறுப்பினர்களுக்கு தத்தம் இளமைக்காலத்தை ஞாபகப்படுத்தியிருக்கூடும்.

பாலனின் தேடல் சாரங்காவைச் சந்திப்பதாகவே இக்குறுநாவல் நகர்ந்தாலும் தமிழர் போராட்ட, சமூக, சாதி என்று பல முனைகளில் தேடல்களை முடுக்கி விட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பாலனின் தேடலில் முகங்காட்டிப் போகும் கடந்தகாலங்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலின் ஒரு பக்கத்தை மட்டும் மட்டுப்படுத்தி இருக்கின்றது. கவர்ச்சியான சில்மிசங்களுடன் பயணிக்கும் காதல் வாழ்வு சாதிய நெருப்பில் சிக்குண்டு கருகுவதும், சமூகப்பயம் கடல் கடந்தால் கவலையில்லை என்பது மாதிரியான எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நிச்சயமாக அவற்றைக்கடந்து வந்தவர்களாலேயே தெளிவுறக் கூறமுடியும். குறுநாவலின் ஒவ்வொரு அங்கமும் முடிவுறும்போது இவர்களின் சந்திப்பு எப்படி அமையப் போகிறது என்று ஒருவிதத் திகைப்பை உருவாக்கியே நகர்ந்திருக்கின்றது. நாவலில் முழுமையாக பாலன் மட்டுமே நினைவுகளை மீட்டிச் சென்றிருப்பதனால் சாரங்காவின் உள்ளத்தை முழுமையாக அறிய முடியவில்லை. குறுநாவல் என்பதனால் எழுத்தாளர் கதையின் நாயகனை மட்டுமே மட்டுப்படுத்திவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு கவிஞனின் பார்வை குறுநாவலில் பல இடங்களில் சிலிர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இக்குறுநாவலை வாசிக்கும் பலருக்கு இதழ்கடையில் முறுவல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. சாரங்கா பாலன் சந்திப்பு எப்படி இருந்தது என்று தோழர்களே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொயற்,

உங்களின் இந்தக் குறுநாவலைப் படிக்கும் போது எனக்கு இந்திய எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் ஞாபகங்கள் தான் வருகிறது.காரணம்... ...........முக்கியமாக காதல்.காதலில் வசப்படாதவர்களையே காதலிக்க வைத்து விடுவது போல் தான் அவரின் எழுத்து இருக்கும்.அதுபோல் தான் உங்கள் கதையும் இருக்கிறது.

இதை விட எவராலும் வ.ஐ.ச வை கேவலமாக விமர்சித்து இருக்க முடியாது... ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவதே தவறு...அதிலும் யதார்த்தமான ஈழத்து எழுத்தாளர் ஜெயபாலனை ரமணிச்சந்திரனுடன் ஒப்பிட்ட அறியாமையை என்னவென்பது..... யாகினி, முதலில் சிறந்த படைப்புகளை வாசிக்க பழகுங்கள் அதன் பின் இன்னொருவருடன் ஒப்பிட்டு விமர்சிக்க பழகுங்கள்....

காசுக்கு எவர் கேட்டாலும் எழுதும் ரமணிச்சந்திரன் எனும் வியாபாரியின் எழுத்தை விட, எம் ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச 1000 மடங்கு தரமான இலக்கியவாதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதில் உங்களை வேதனை படுத்தலாம்....ஆனால் வ,ஐ,ச வை ர.ச உடன் ஒப்பிட்ட ரணத்தை விட அது வலிக்காது

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொய்றின் கதையின் விருப்பத்தினால் தான் என்னொருவரை ஒப்பிட்டு எழுதினேனே ஒளிய பொயறின் மனதைப் புண் படுத்தும் அளவுக்கு எழுத வில்லை.அப்படி அவர் மனம் நோக எழுதியிருந்தன் எண்டால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

Edited by yagini

இது விமர்சனம் அல்லவே அல்ல.... என் அனுபவம் மட்டுமே

1

எனக்கு சினிமாப் பாடல்களினை வகை வகையாக ரசிக்க கற்றுத் தந்தது என் அப்பாதான். ஒவ்வொரு பாடலின் இசைக்கும் அப்பால் அதன் அர்த்தங்களை உள்வாங்கி ரசிக்க கற்றுத்தந்தார். அபிராமி அந்தாதி திருப்பதிகத்தில் இருந்து "வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" என்பது போன்ற பாடல்கள் வரை எட்டு வயதுக்கு முதலே ரசிக்க கற்றுக்கொள்ள முதல் விதையை விதைத்தவர் அவர்தான். சைக்கிளில் அவருடன் பயணம் செய்வது என்பது அலாதிப் பிரியமான ஒரு அனுபவம்...அதனூடு அவர் கற்றுத்தந்த வாழ்பனுபவங்களும் ஏராளம்.. கழிந்து போகின்ற பனை மரங்களினூடு தன் பால்ய வயது எப்படி கடந்து போனது என அழகாக சொல்லித்தருவார்

பத்து வயதின் பின் சினிமாப் பாடல்களை விட இயக்கப் பாடல்களும் பிடிக்கத் தொடங்கின. "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்பனவும் "எழுகவே படைகள் எழுகவே" என்பன போன்ற சினிமாப் பாடல்களும் மனசுக்கு பிடிக்கலாயின. ஓவ்வொரு பாடலின் வரியும் இரத்தத்தில் ஊறி எனக்குள் நிரம்பியிருந்தன. எழுச்சி கதைகளும், சேகுவேராவின் சுயசரிதையும் மனதை ஆக்கிரமித்தன.. அதே நேரத்தில் என் மச்சாளினுடனான காதல் இருட்டிலும் வெளிச்சத்திலு ததும்பி தளுவின ...

90 களில் இந்த ரசனையில் மாற்றம் வேண்டி மனம் அவாவியது. ஒரே செக்கை மீண்டும் மீண்டும் சுற்றி வரும் சினிமா பாடல்களும், யதார்த்ததை தவற விடும் புரட்சிப் பாடல்களும் சலிப்பை ஏற்படுத்தின.

ஒரு நாள் மாலையில் என் நண்பன் ஒருவன் ஈழத்து இலக்கியம் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தான். கேட்க கேட்க ஆவலாக இருந்தது... அவனது பேச்சின் இடையில் வ.ஐ.ச ஜெயபாலன் என்றும் சேரன் என்றும் சிவசேகரம் என்றும் சோலைக்கிளி என்றும் அடிக்கடி சொன்னான்

அவனின் அனுசரனையில் முதன் முதலில் உங்களின் 'சூரியனோடு பேசுதல்", "நமக்கொன்றொரு புல்வெளி" ஆகிய தொகுப்புகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாழ்வில் மனம் தேடிக்கொண்டிருந்த புதிய ரசனைக்கான களத்தை உங்களின் ஆக்கங்கள் தான் திறந்து வைத்தன. ஒரு ஆரம்பம் உங்களின் எழுத்துகளால் தொடங்கியது. அதன் காலநீட்சியில் நூற்றுக்கணக்கான தரமான பிறரின் ஆக்கங்களை படித்ததும் மொழி பெயர்பு இலக்கியங்களை நாடிச் சென்றதும் உங்களின் எழுத்துகள் என் மனதில் திறந்த கதவினூடுதான் எனச் சொல்வதில் நிச்சயம் நான் பெருமை கொள்வேன்

2

சாரங்கா என்னும் பெயர் இனி மறக்காது.......... கனடாவின் தெருக்களிலும், ஈழத்தமிழர் வாழ்கின்ற அனைத்து தேசங்களின் தெருக்களிலிலும் இருக்கும் தமிழ் மக்களின் வீடுகளில் ஆயிரகணக்கான சாரங்காக்களும், இடை நடுவில் பிரிந்து இன்றும் அழுகின்ற 'பாலன்களும்' இருக்கின்றனர். சாதீயத்தாலும் 80களின் பின் வந்த இராணுவ ஆக்கிரமிப்பாலும் பிரிந்து சென்ற இலட்சக்கணக்கான அவர்களின் கண்ணீர் இன்றும் இலக்கியமாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த அழுகையின் ஒரு இலக்கிய துளிதான் இந்த குறுநாவல்

பாலனின் பாட்டியும், சாரங்காவின் பாட்டியும் குறியீடுகள் மட்டுமே...அவர்கள் தான் சாரங்காவை விட வலிதான கதாநாயகிகள். வரலாற்றை சொல்லிச் செல்லும் கதை சொல்லிகள். நாங்கள் இப்படித்தான் இருந்தோம் என்பதை அவர்களின் மூலம்தான் அறிய முடிகின்றது.. பொத்தி பொத்தி வைத்திருக்கும் எம் இருட்டு வாழ்வையும், அதன் அற்புதமான இருப்பியலையும் அதன் பின் வெளிச்சத்தில் நாம் வாழ்ந்த முறைகளையும் அவளையள் (பாட்டிகள்) தான் சொல்லிச் செல்கின்றனர். பல்கலைகழகத்தில் படித்த பாலன் மூலமும், சாரங்கா மூலமும் சொல்ல முடியாமல் போன செய்திகளைக் கூட அவர்களின் பாட்டிகள் மூலம் தான் எமக்கு உங்களால் சொல்ல முடிகின்றது என்பதில்தான் இருக்கின்றது எம் இன்றைய வாழ்வின் முகமூடித்தனம். பாட்டிகளின் வாழ்வைத்தான் பேரன்களும் பேத்திகளும் இன்றும் வாழ்கின்றனர். நாமும் இன்று வாழ்கின்றோம். முகத்தை பொத்தி, மனசை பொத்தி, காமத்தை பொத்தி வெற்று புனிதம் காத்து, சாதியத்தின் பெயரால் நிலவுடமையின் தொடர்ச்சியை பேணும் எம் வாழ்வை இந்த பாட்டிகள் தான் வெளிக்காட்டுகின்றனர்

3

இந்தக் கதையை வாசிக்க எனக்கு 1 மணித்தியாலமும் 30 நிமிடமும் எடுத்தன.. ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் புகுந்து என்னை தேட முடிந்தன. என் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என அனைவரும் இந்த வரிகளில் ஒளிந்து என்னுடன் மீண்டும் கதைத்துக் கொண்டனர். ஊரில் என் வீட்டின் சின்ன வளவினுள் இருந்து மாவும், பிலாவும் என்னுடன் உரையாடின... ஊரில் அத்தி மரத்தின் கொப்பில் குந்தியிருந்து பாட்டுப் பாடும் குயில் கூட நீண்ட காலத்தின் பின் உங்கள் கதை மூலம் என்னை சந்தித்து கொண்டன.

அப்பாவும் வரிகளிற்கிடையில் வந்து போனார்....]"பார் நான் உனக்கு சொன்ன வாழ்வியலை ஒருவன் அற்புதமாக சொல்லிச் செல்கின்றான்" என சிரித்துக்கொண்டே சொன்னார்.... தன் இருட்டு வாழ்வு பற்றி சொன்னதை மகன் ஏற்று தன்னை மதிப்பானோ என்ற கவலை இனி அவருக்கு இருக்காது

கனடாவில் தன் கணவனை பிரிந்து தவிக்கும் என் காதலியின் கண்ணீரைக்கூட இந்த கதைதான் சொல்லிச் செல்கின்றது.... அவளை உடனே ஓடிச்சென்று பார்க்க வேண்டும் போலவும் இருக்கின்றது

4.

நல்ல குறும் நாவல் ஜெயபாலன்..... சில கேள்விகள் மனதில் எழுந்த்தாலும் அதை கேட்பது சரியில்லை என்பதாலும் கேட்காமல் விடுகின்றேன்.

உங்கள் அரசியல் எனக்கு எப்பவுமே பல கேள்விகளினூடு புரியப்படவும் எதிர்த்துக் கொள்ளவும் வேண்டியது....ஆனால் உங்கள் இலக்கியம் என்பது அற்புதமானது

நீங்கள் ஈழ இலக்கியத்தின் சொத்து.. பலமும் பலவீனமும் ஒருங்கே கொண்ட உன்னத இலக்கியவாதி (உண்மையான மனுசன்) நீங்கள் ........ கபடம் நிறைந்த ஷோபா சக்தி போன்றவர்களை விட நேர்மையான இலக்கியம் படைப்பவர். உங்களிடம் இருந்து இன்னும் இன்னும் பெரும் படைப்புகளை எதிர்பார்க்கின்றோம். Marketing என்ற விடயத்தையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் இன்னும் எழுதுங்கள் என வேண்டி நிற்கின்றேன்

: நிழலி

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த புத்தனுக்கும் யாகினிக்கும் பிழபுக்கும் கவிதாயினி வல்வைசாகராவுக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி புத்தன் இருட்டில் ஆணும் பெண்ணுமே இருக்கிறார்கள் என்றது சாதி மொழி இனம் எல்லாவற்றையும் உள்ளடக்கித்தானே. இல்லையா புத்தன்? காதல் வசப்படுகிற தருணத்தில் மட்டுமே மனசு தூய மனித மனசாக மேம்படுகிறதுபோலும். புத்தன் எனக்கு அனுபவம் இல்லை என்றாலும் உங்கள் அனுபவ மொழிகள் முக்கியமானவை ;-))

அன்பின் யாகினி உங்கள் வாழ்த்துக்கள் மக்ழ்ச்சி தருகிறது. ரமணிச்சந்திரனின் கதைகலைப் போலவே எனது கதையிலும் காதலே கோர்க்கும் நாராக உள்ளது என்பது உண்மைதான். கதை தொடுக்கும் நாரைப் பொறுத்து ஒற்றுமை உள்ளதும் ஊன்மைதான் யாகினி. என்றாலும் எனது மாலையில் தொடுத்துள்ளவை காகித மலர்கலல்ல. உயிர் துடிக்கும் பூக்கள். உங்களுக்காக ரமணிசந்திரனின் நாவல்கள் சிலவற்றை வாசித்துவிட்டு விரிவாக பதில் எழுதுகிறேன். உங்கள் கடிததில் நீங்கள் உணர்ந்ததை உண்மைத் தன்மையுடன் எழுதியமை எனக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

மதிப்புக்குரிய பிழம்பு. கோட்பாட்டு அடிப்படையில் நீங்கள் சொன்னது சரியானாலும் கோபப் பட்டிருக்க வேண்டாம். யாகினியார் எங்கள் இளைய தோழனோ தோழியோ. அவர் தனக்குப் பட்டதை சொல்லும் உரிமையை மதித்து எங்கள் விமர்சனங்களை நட்போடு வைப்பது அவசியம். இல்லையா? கவிதாயினி வல்வைசாகரா

உங்கள் பதில் மிகவும் முக்கியமானது. என் நாவலின் deconstruction பக்கங்களை நீங்கள் கவனித்திருப்பது மக்ழ்ச்சி தருகிறது. மேலோர் கட்டிய பிழையான கலாச்சாரத்தை உடத்து புதிதோர் உலகம் செய்ய தூண்டுவது ஒரு கலைஞனின் கடமையல்லவா? எல்லோருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

நீங்கள் உங்கள் கருத்துக்கலை எனது அஞ்சல் முகவரிக்கும் எழுதலாம் visjayapalan@gmail.com / visjayapalan @yahoo.com ? visjayapalan@hotmail.com

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தன் கணவனை பிரிந்து தவிக்கும் என் காதலியின் கண்ணீரைக்கூட இந்த கதைதான் சொல்லிச் செல்கின்றது.... அவளை உடனே ஓடிச்சென்று பார்க்க வேண்டும் போலவும் இருக்கின்றது

: நிழலி

கண்டு கொள்ளுங்கள் பொயட் அடுத்த இலக்கியப்படைப்பிற்கு நிழலியே வழிகோலி விடுகிறார். நிழலி உங்கள் கடந்த காலக் காதலி இதை வாசிப்பாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.