Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வரலாறும் போரும் உதவி தேவை.

Featured Replies

இலங்கை வரலாறும் போரும் உதவி தேவை.

நண்பரொருவரின் மகன் தனது உயர்தர வகுப்பிற்கான ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரிக்கின்றார். அதற்கு இலங்கையின் பண்டைய வரலாறுகள் சம்மந்தமாக,ஐரோப்பிய சரித்திரப் பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்துள்ளார். அவற்றை நான் நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது பார்க்க முடிந்தது. அவற்றில் பல சரித்திரப் பேராசிரியர்களின் கட்டுரைகளில், இலங்கையில் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த இயக்கர், நாகர் போன்றோரின் எந்த வரலாறும் இல்லை. தற்போது இலங்கையில் வாழும் சிங்கள இனத்தவர்களின் மூதாதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே குறிப்புகள் உள்ளன. சிலரின் ஆய்வில் விஜயன் வட இந்தியாவிலிருந்து இலங்கை வந்த இளவரசெனென்பதும்,பின் அவன் தென்னிந்திய தமிழ்ப் பெண்ணையே திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப் பட்டுளள்ளது.

எனவே இலங்கையின் சரியான வரலாறு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ( ஜேர்மன் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் )ஏதாவது இணையத்தில் எடுக்க முடியுமா ?? நண்பனின் மகன் எழுதும் ஆய்வுக் கட்டுரையில் தகவல்கள் எடுக்கப்பட்ட ஆவணங்களும் அதன் பக்க விபரங்களும் குறிப்பிடப் பட வேண்டும். விக்கிபீடியா தகவல்களை ஆதாரமாக இணைக்க முடியாது. எனவே இது பற்றிய ஆதாரமான தகவல்கள் தெரிந்தவர்கள் அவை பற்றிய விபரங்களை தயவுசெய்து இங்கே இணைத்து உதவவும். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமா உங்களுக்குத் தெரியாத வரலாறா?

இங்கு வந்து உதவி கேட்கிறீங்களே!!

உண்மைய புரட்டி எடுக்கிறவங்க

தங்களவிட்டா ஒருத்தரும் இல்லை எண்டுறவங்க!!

சரியா வழி காட்டுவாங்கண்ணு நினைக்கிறீங்களா!! :(

  • தொடங்கியவர்

மதி மாமோ,

களத்திலை இலங்கை வரலாறை விரல் நுனியில் வைத்திருப்பது போல், முன்பு சிலர் பிளந்து கட்டுவினம். உண்மையில் ஒரு ஆய்வவிற்காக அது பற்றிய தகவல்களை அறிவதற்காகவே உதவி கேட்டேன். கேட்ட பின்தானே எல்லாமே புரிகின்றது.

மதி மாமோ,

களத்திலை இலங்கை வரலாறை விரல் நுனியில் வைத்திருப்பது போல், முன்பு சிலர் பிளந்து கட்டுவினம். உண்மையில் ஒரு ஆய்வவிற்காக அது பற்றிய தகவல்களை அறிவதற்காகவே உதவி கேட்டேன். கேட்ட பின்தானே எல்லாமே புரிகின்றது.

நான் சும்மா றீல் விட்டனான் யாராவது நம்புவார்கள் என்று .

சிங்களவன் 10000 வருடங்களுக்கு முதலே அங்க வாழத்தொடங்கிவிட்டான்

தமிழன் சிறிலங்காவில 200 வருடங்களுக்கு முதல்தான் அங்கு வாழத்தொடங்கினவன்

ஒரு நாட்டை தமிழனுக்கு எடுக்கலாம் என்று சண்டித்தனம் பண்னிபார்த்தாம் சரிவரவில்லை.

சீ சீ அந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைதான் இப்ப.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதி மாமோ,

களத்திலை இலங்கை வரலாறை விரல் நுனியில் வைத்திருப்பது போல், முன்பு சிலர் பிளந்து கட்டுவினம். உண்மையில் ஒரு ஆய்வவிற்காக அது பற்றிய தகவல்களை அறிவதற்காகவே உதவி கேட்டேன். கேட்ட பின்தானே எல்லாமே புரிகின்றது.

மாமோ எல்லாரும் விரல் நுனியிலதான் வச்சிருந்தவை தோள்பட்டையே போயிடுச்சு அப்புறம் கையென்ன விரலென்ன! நீங்க பாத்தீங்கதானே 89ம் ஆண்டு நடந்ததுகளையே இங்க சொல்ல விருப்பமில்லாம மூடி மறைச்சி வேறையார்மேலோ பழியப்போட்டு தப்பிக்க நினைக்கிறாங்க. இவங்க உண்மை சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கிறீங்களா? எங்க உரிமைக்காகத்தான் நாங்க போராட வெளிக்கிட்டநாங்கன்னு இங்க கனபேருக்கு தெரியாது. அதையே மூடிமறைச்சி தனிநாடு தமிழீழம் எண்டதுக்க புதைச்சிட்டாங்க இப்ப நடக்கிறதெல்லாம் இந்த களவாடி இயக்கம் காசு சுருட்டவிடுற புலுடா. நடக்கிறதெல்லாம் இவளவுகாலமும் சொன்ன பொய்யயும் புரட்டயும் மெய்யாக்கிறதுதான். இவங்க டீல் போட்டே நம்ம போராட்டத்த அழிச்சவங்க, வெஸ்மினிஸ்டரில கடந்த மே ஒண்ணாம்தேதி போட்ட டீலே என்னண்ணு தெரியாதபோது 2000 வருசத்துக்கு முன்னம் என்ன டீல் போட்டிருப்பாங்கன்னு எந்தச்சாத்திரி சொல்லுவான்?

இலங்கை வரலாறும் போரும் உதவி தேவை.

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே குறிப்புகள் உள்ளன.

இந்தியாவிலையே 5000 வருசத்துக்கும் முன்னம் பழமை வாய்ந்தது எண்டு ஒரு மொழி இருந்தது எண்டால் அது சிங்களம் மட்டும் தான்... :lol:

சிந்துவெளி நாகரீகம் மெகஞ்சதாரோவோ, ஹரப்பாவோ இலங்கை சிங்கள நாகரீகத்துக்கு பிறகுதான் தோண்றியது எண்டால் பாருங்கோவன்...

5000 வருசத்துக்கும் முன்னம் இருந்த லெமூரிக் கண்டமே பொய்...

சமஸ்கிருதம், தமிழ் எல்லாம் சிங்களத்தை தழுவித்தான் வந்தது...

Edited by தயா

  • தொடங்கியவர்

இந்தியாவிலையே 5000 வருசத்துக்கும் முன்னம் பழமை வாய்ந்தது எண்டு ஒரு மொழி இருந்தது எண்டால் அது சிங்களம் மட்டும் தான்... :lol:

சிந்துவெளி நாகரீகம் மெகஞ்சதாரோவோ, ஹரப்பாவோ இலங்கை சிங்கள நாகரீகத்துக்கு பிறகுதான் தோண்றியது எண்டால் பாருங்கோவன்...

5000 வருசத்துக்கும் முன்னம் இருந்த லெமூரிக் கண்டமே பொய்...

சமஸ்கிருதம், தமிழ் எல்லாம் சிங்களத்தை தழுவித்தான் வந்தது...

நான் எழுதியதையே முன்னுக்கும் பின்னுக்கும் வெட்டிவிட்டு, தங்கள் மனம் போல எழுதியுள்ளீர்கள். ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் எழுதி வெளிவந்த பல புத்தகங்களில் இருந்ததையே நான் குறிப்பிட்டேன். அந்தத் தகவல்கள் தவறானவையாக இருந்தால், ஆதாரங்களுடன் சரியான தகவல்களை தந்துதவுங்கள் எனத்தான் நானும் கேட்டிருந்தேன். அப்படி மாறுபாடான தகவல்கள் ஆதாரத்துடன் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை நண்பரின் மகனின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். சரியான தகவல்களை தர வக்கில்லாது விட்டால் இப்படித் தரங்கெட்டத் தனமாக எழுதிச் சுகம் காண்பதுவோ தங்களின் ஆதாரங்கள்.

எனது நண்பரின் மகனுக்கு முன்பாகவே பல தமிழ் மாணவர்கள் (10 மாணவர்களுக்கு மேல்) எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் கூட "இலங்கையில் வாழும் சிங்கள இனத்தவர்களின் மூதாதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே" குறிப்பிடப்பட்டுள்ளதையும் நண்பரின் மகன் என்னிடம் காட்டினார். அவர்கள் தமக்கு ஆதாரமாகக் கிடைக்கும் தகவல்களையே வைத்து ஆய்வுகளைச் சமர்பிக்க முடியும்.

எம்மனம் போன போக்கில் ஆய்வுகளைச் சமர்பிக்க ஐரோப்பா ஒன்றும் இலங்கையில்லை. ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு ஆதாரம் தான் முக்கியம் என்பதை தாங்கள் இதுவரை தெரிந்திருக்காவிட்டால், இனியாவது தெரிந்து கொள்ள முயற்சியும்.

வசம்பு

எனக்கு தெரிந்த/ தேடுதலில் கிடைத்த புத்தகங்களை பட்டியல் இட்டிருக்கிறேன். அவற்றை எவ்வாறு/எங்கு சுவிஸில் பெறலாம் என்பது எனக்கு தெரியாது.

1. Sri Lanka : history and the roots of conflict

edited by Jonathan Spencer.

Year: 1990

Routledge

2. LIBERATION TIGERS OF TAMIL EELAM (LTTE): AN ELUSIVE QUEST FOR A 'HOMELAND'

Historical Period: 1980's-2008

Authors: Hussain, Syed Rifaat.

Journal of South Asian & Middle Eastern Studies 2008 31(3): 68-97 30p.

3. ETHNO-POLITICAL CONFLICT IN SRI LANKA.

Historical Period (1950-2008)

Authors: Imtiyaz, A. R. M. and Stavis, Ben.

Journal of Third World Studies 2008 25(2): 135-152 18p.

4. JATHIKA HELA URUMAYA AND ETHNO-RELIGIOUS POLITICS IN SRI LANKA.

Authors: DeVotta, Neil and Stone, Jason.

Historical Period: 1956-2005

Source: Pacific Affairs 2008 81(1): 31-51 21p.

5. Title:'OTKRYTIE' PORTUGAL'TSAMI TSEILONA V XVI VEKE.

Translated Title:The Portuguese 'discovery' of Ceylon in the 16th century.

Source: i Noveishaia Istoriia 2007 (1): 198-210 13p.

6. Title:CONTROVERSIES IN SRI LANKAN HISTORY.

Authors: Strathern, Alan.

Historical Period: 1c-20c

Source:History Compass 2004 2(Asia)

7. Title: Blowback: Linguistic Nationalism, Instituional Decay, and Ethnic Conflict in Sri Lanka.

Authors: DeVotta, Neil.

Historical Period: 1948-90's

Publication Information: Stanford: Stanford U. Pr., 2004. 276 pp.

8. Title: ETHNIC DIFFERENTIATION, RELATIVE DEPRIVATION AND PUBLIC POLICIES IN SRI LANKA.

Authors:Islam, Nasir.

Source: Canadian Review of Studies in Nationalism 1990 17(1-2): 15-30 16p.

Historical Period: 1950's-80's

  • தொடங்கியவர்

நன்றி குளக்காட்டன் உங்கள் உதவிகளுக்கு. நீங்கள் இணைத்திருக்கும் புத்தகங்கள் இங்கு எடுப்பது சிரமமானதே. உங்களால் இப்புத்தகங்கள் ஏதாவதில் இலங்கையின் பூர்வீக குடிகள் பற்றிய சேய்திகள் இருந்தால் அவற்றை Scan செய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமா ?? உங்களைச் சிரமப்படுத்துகின்றேன் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். உங்களால் முடிந்தால் உதவுங்கள். மீண்டும் உங்கள் உதவிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

எனது நண்பரின் மகன் தனது ஆய்விற்காக எடுத்த ஜேர்மன் மொழியில் வந்த புத்தகங்களில் முக்கியமானவை இரண்டு.

அவை : 1) Der Bürgerkrieg in Sri Lanka - JAKOB Rösel

2) Der Tamilen-Singhalesen Konflikt auf Sri Lanka - DIETMAR Fricke

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

மகாவம்சம் - சில செய்திகள்

21 May 2007

--------------------------------------------------------------------------------

சிறிலங்காவின் புதிய அதிபராக, அன்று மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும்.

பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்ககூடும்.

“முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளவை எவை? ”- என்பவை குறித்து நாம் அறிந்து கொள்வது சற்று தெளிவைத் தரக்கூடும்.

இலங்கைத் தீவின் வரலாற்றை விபரிக்கின்ற வரலாற்று நூல் ஆவணங்களில், முதன்மையாகத் திகழ்வது மகாவம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மகாவம்சம் இலங்கை வரலாற்றினைச் சிலவிடத்து நம்பகத்தன்மையோடும், பலவிடத்து நம்பகமற்றதாகவும் விபரிக்கின்றது - என்று கலாநிதி க.குணராசா குறிப்பிடுகின்றார். மகாவம்சம் குறித்துக் கலாநிதி க.குணராசா எழுதிய ஆய்வு நூலையும், அதற்கு உதவிய சில உசாத்துணை நூல்களையும் நாம் நன்றியுடன் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றோம். பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.

மகாவம்சம் பாளி மொழியில், செய்யுள் வடிவில் பாடப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது.

மகாவம்சம் விபரிக்கின்ற மூலக்கதைகளைக் கூறாமலேயே, மகாவம்சம் கூறுகின்ற இலங்கை வரலாற்றை அறிய முடியும். சிங்கள இனத்திற்கு அவமானம் தருகிற சம்பவங்கள் என்று கருதி, பலர் சில மூலக் கதைகளைத் தவிர்த்தும், புதுக்கியும், ஏன் திரித்தும் கூட எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மகாவம்சம் சொல்வதை ஏற்பதும், ஏற்காமல் போவதும் வேறு விடயமாகும். ஆனால், மகாவம்சத்தின் புனிதத்தன்மையைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலர் ஏற்கனவே உள்ள மகாவம்சத்தை, புதுப்பிக்க முற்படும் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையின் வரலாறு குறித்துப் பேசுகின்ற மகாவம்சத்தின் வரலாறு என்ன என்பது குறித்து முதலில் கவனிப்போம்.

இலங்கையில் பௌத்த மதம் பரவி, நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும், மன்னர்களின் வரலாற்றுக் கதைகள், அவர்களது பணிகள் குறித்தும் ஏடுகளில் எழுதியதோடு மட்டுமல்லாது, வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இவை காலம் காலமாகப் பேணப்பட்டு வந்ததோடு, “அட்டகதா” என்று அழைக்கப்பட்டும் வந்தன. இவ்வாறு பல்வேறு பௌத்த விகாரைகளில் பேணப்பட்டு வந்த ‘அட்டகதாக்கள்’, ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா-மகாவம்சம்’ என்று அழைக்கப்படலானது.

‘அட்டகதா-மகாவம்சத்தின்’ ஏட்டுப்பிரதிகளைத் தழுவிப் பின்னாளில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டளவில்தான் தீபவம்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். தீபவம்சத்தின் ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்குக் காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ முழுமை பெற்றிருக்கக் கூடும்.

இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலில் இருந்துதான், தற்போதைய மகாவம்சம் என்கின்ற நூல் உருவாகியுள்ளது. தீபவம்சத்தை மீள் ஒழுங்கு செய்ததுதான் மகாவம்சம் என்று பிளீற் (குடுநுநுவு) கூறுவார். இன்னொரு வகையில் சொல்லப் போனால் ‘தீபவம்சம் என்கின்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம்’ என்றும் கூறலாம்.

இவ்வாறு பல பௌத்த பிக்குகள் காலம் காலமாக, ஏடுகள் ஊடாகவும், வாய்மொழி ஊடாகவும் பேணி வந்த செய்யுள்கள் ‘அட்டகதா’ என்றும், பின்னர் ‘அட்டகதா-மகாவம்சம்’ என்றும் அதன் பின்னர் ‘தீபவம்சம்’ என்றும், ஈற்றில் ‘மகாவம்சம்’ என்றும் ஒருங்கிணைக்கப்பட்டு மீள் ஒழுங்கு செய்யப்பட்டன. மீள் ஒழுங்கைச் செய்து மகாவம்சத்தை உருவாக்கியவர் மகாநாம தேரர் என்று சில ஆய்வாளர்கள் கருதுவார்கள். மகாநாம தேரர்தான் மகாவம்சத்தின் மூல ஆசிரியர் எனக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கருதுகின்ற ஆய்வாளர்களும் உண்டு.

இது ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் உருவான வரலாறு ஆகும்.!

இந்த ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கின்றது, அது எதனைச் சொல்கின்றது என்பதனை இப்போது பார்ப்போம்.

மூலநூலான தீபவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உள்ளன. அதேபோல மகாவம்சத்தில் முதலில் 37 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. அத்தோடு மேலும் 63 அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு, எல்லாமாக நூறு அத்தியாயங்கள் மகாவம்சத்தில் தற்போது உள்ளன. 38ம் அத்தியாயத்தில் இருந்து 100வது வரையிலான அத்தியாயங்கள் ‘சூளவம்சம்’ என்ற தொடர் நூலில் உள்ளவையாகும். இவற்றைப் பாளி மொழியில் இருந்து, ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்ப்புச் செய்த வில்லியம் கெய்கர், முதல் 37 அத்தியாயங்களை, ‘மகாவம்சம்’ என்ற தலைப்பில், மொழி பெயர்த்தார்.

மீதி 100 வரையிலான அத்தியாயங்களை ‘சூளவம்சம் தொகுதி ஒன்று’, ‘சூளவம்சம் தொகுதி இரண்டு’ என்று மொழி பெயர்த்தார். பின்னாளில், அதாவது 1889ல், முதலியார் எல்.சி விஜயசிங்க என்பவர், ஜோர்ஜ் ரேனர் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீளாய்வு செய்து மறுபதிப்பாக வெளியிட்டார். ஆனால் முதலியார் விஜயசிங்க ஒரு மாறுதலை, தலைப்புகளின் பெயரில் கொண்டு வந்தார். சூளவம்சம் கூறுகின்ற 38 முதல் 100 வரையிலான அத்தியாயங்களுக்கு ‘மகாவம்சம் தொகுதி இரண்டு’ என்று பெயரிட்டார். முதலியார் விஜயசிங்கவின் கருத்துப்படி நூறு அத்தியாயங்களும் மகாவம்சம் என்ற பொதுப் பெயருக்குள்ளேயே அடக்கமாகி விட்டன.

ஆனால் இங்கே ஓர் உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும். பாளி மொழியில் இருந்து மகாவம்சத்தை ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர், அதனை ஜேர்மன் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தது 1912ம் ஆண்டில்தான். அதற்கு முன்னரேயே பாளி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு ‘மகாவம்ச’ என்ற பெயரில் 1837ல் ஜோர்ஜ் ரேனர் மொழி பெயர்ப்பு செய்ததையும், அதனைத்தான் முதலியார் விஜயசிங்க மீளாய்வு செய்ததையும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

எது எப்படியிருப்பினும், ‘மகாவம்சம் என்கின்ற நூல், கிறிஸ்துவுக்கு பின் 6ம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டுள்ளது’ என்றுதான் வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றார்கள்.

தற்போதைய மகாவம்சத்தில், நூறு அத்தியாயங்கள் (பிற்சேர்க்கையாக) சேர்க்கப்பட்டுள்ள போதிலும், முதல் 37 அத்தியாயங்கள் குறித்து இப்போதைக்கு நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில் அவையே கருப்பொருளாகவும் உள்ளன. இந்த 37 அத்தியாயங்களும் என்ன சொல்கின்றன? அவை தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? என்பவை குறித்து மிகச் சுருக்கமாகத் தர்க்கிக்க விழைகின்றோம்.

மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை விபரிக்கின்றது. மகாவம்சத்தின்படி, மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில், ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில விடயங்கள் புலனாகின்றன. பௌத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்பதும், ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

அன்புக்குரிய நேயர்களே! மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தின் குறிப்புகளின்படி இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர்கள் என்பது புலனாகின்றது. இதனை மனதில் உள்வாங்கிக் கொண்டு அடுத்த சம்பவத்திற்கு வருவோம்.

மகாவம்சத்தின்படி, இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள், குறிப்பிட்ட ஒரு தினத்தில், மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில், புத்தர் அங்கே பிரசன்னமாகிப் பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் “இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களை காப்பாற்றுங்கள்” என்று கெஞ்ச, புத்தர் அவர்களை, மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

இயக்கர்கள் அகன்றதும், அந்த இடத்தில் ‘தேவர்கள்’ கூடுகின்றார்கள். இந்தத் ‘தேவர்கள்’ என்பவர்கள் யார்? பின்னாளில் விஜயன் வருவதற்கு முன்னரேயே ஊடுருவி இருந்த ஆரியர்கள் என்பவர்கள்தான் இந்தத் ‘தேவர்கள்’!. உண்மையில் இந்தியாவிற்குள், கைபர் மற்றும் போலன் போன்ற இமயமலைக் கணவாய்கள் ஊடாக, கிறிஸ்துவுக்கு முன்னர், 2500க்கும் (கிறிஸ்துவுக்கு முன்னர்) 1500க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், ஆரியர்கள் ஊடுருவி விட்டார்கள்.

இந்தியத் திராவிட மக்களைத் தென்புலமாக நகர வைத்ததுடன், விஜயனின் வருகைக்கு முன்னரேயே, இலங்கையின் தென் புலங்களில் ஆரியர்கள் குடியேறினர். ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 483ம் ஆண்டில், விஜயனின் வருகையோடுதான், ஆரியரின் வருகை ஆரம்பமானது என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பிடிவாதமாக உள்ளார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விபரமாக ஆராய்ந்து பார்த்தால், உண்மைகள் வெளிப்படும்.

மகாவம்சத்தின்படி, புத்தர் இரண்டாம் முறையும், இலங்கைக்கு வருகின்றார். இம்முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயப்படுத்திய புத்தர், இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து, நாக மன்னர்களையும், அவரது வீரர்களையும் பயங்கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு, ‘புத்தம்- தர்மம் -சங்கம்’ என்ற போதனைகளை அளிக்கின்றார்.

இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவம்சத்தின்படி, புத்தர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். கல்யாணி என்ற தேசத்தின், நாக மன்னனின் வேண்டுதலை ஏற்று அங்கே செல்வதோடு, பல இடங்களுக்கும் சென்று, அந்த இடங்களை ஆசிர்வதித்துத் திரும்புகின்றார்.

இந்தச் செய்திகளில் மறைந்துள்ள சில உண்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலங்கையின் ஆதிக்குடிவாசிகளாக இயக்கர்களும், நாகர்களும் உள்ளார்கள். மகாவம்சத்தின்படி, இயக்கர்களை அகற்றியது போல், புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், (எ.கா - நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி), மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன.

மகாவம்சத்தின் இரண்டாவது அத்தியாயம், புத்தரின் மூதாதைகள் குறித்தும், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அத்தியாயங்கள் புத்த மத மகாநாடுகள் குறித்தும், ஆறாவது அத்தியாயம் விஜயனின் கதை குறித்தும், ஏழாவது அத்தியாயம் இலங்கைத்தீவில் விஜயன் கரை இறங்குவது குறித்தும் விபரிக்கின்றன. மிகுதி அத்தியாயங்கள் யாவும், சிங்கள மன்னர்கள் பற்றியும், அவர்களது ஆட்சி முறைகள் பற்றியும், தமிழ் மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்கள் குறித்தும் விபரிக்கின்றன.

இப்போது மேற்கூறிய மகாவம்ச அத்தியாயங்கள் குறித்துத் தொகுப்பாக அதேவேளை சுருக்கமாகச் சில தகவல்களைத் தரவிழைகின்றோம்.

விஜயனின் கதை என்பது ஒரு கட்டுக்கதையாகவும், நாடோடிக் கதைகளின் திரிபாகவும் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். விஜயனின் முதல் மனைவியான குவேனி பற்றிய குறிப்புக்கள் எதுவும், மகாவம்சத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட தீபவம்சத்தில் இல்லை. தவிரவும், பின்னாளில் அரசகுலப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணப்பதற்காக, மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னனின் மகளையும், பாண்டிய மன்னனின் அரசப் பிரதானிகளின் பெண் மக்களான எழுநூறு பேரையும் தேர்ந்தெடுத்து, விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் (அல்லது அவ்வேளையில் இருந்த அரசனும் அவனது நண்பர்களும் என்றும் கொள்ளலாம்) மணம் புரிந்தார்கள் என்று மகாவம்சம் சொல்கின்றது.

இது வேறு ஒரு சிக்கலையும் உருவாக்குகின்றது.

விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய மகளிர்கள் என்பதனால், சிங்கள இரத்தத்துடன் பாண்டிய நாட்டுத் திராவிட இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக உருவாகி விட்டது என்ற தர்க்கமும் எழுகிறது அல்லவா? இதனைத் தாங்க முடியாத சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சிலர், பாண்டிய மதுரையை, ‘பாண்டு மதுராவாக்கி’, மகாபாரத பாண்டவர் குலத்தில் தொடர்பு தேடி வருகின்றார்கள். ஆனால் மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவம்சம் குறிப்பிடுகின்ற மற்றைய முக்கிய அம்சங்களில், காமினி அபயன் என்கின்ற துட்ட காமினியும், எல்லாளன் என்கின்ற தமிழ் மன்னனும் அடங்குவர். துட்ட காமினியைத் தனது பாட்டுடைத் தலைவனாகத்தான் மகாவம்சம் விபரிக்கின்றது. அவனது வரலாற்றை விபரிக்கும்போது, இரண்டு அம்சங்களை மகாவம்சம் வலியுறுத்துகின்றது. ஒன்று தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள். மற்றது பௌத்த மதத்திற்கு அவன் ஆற்றிய சேவை.

துட்ட காமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு, புத்த மதத்தை முன்வைத்தான். ‘நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பௌத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கின்றேன்’ என்று அந்தக் காலத்திலேயே மிகக் கவர்ச்சிகரமான கோசத்தைத் துட்ட காமினி முன் வைத்தான்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 145ம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்துவுக்கு முன்னர் 101ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகள், தமிழ் மன்னனான எல்லாளன் ஆட்சி செய்த காலமாகும். எல்லாளனைச் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்தவனுமாகவும், பாளி இலக்கியங்கள் கூறுவதில் உண்மையில்லை. இப்படியொரு சோழன் இந்தியாவில் இருந்ததாக, தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த ஆதாரமுமில்லை. எல்லாளன் என்பவன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மன்னனேயாவான். அவனது நீதி தவறாத ஆட்சி குறித்துப் பல இடங்களில் மகாவம்சமும் கூறுகின்றது. இளைஞனான துட்டகாமினியுடன், 72 ஆண்டுகள் நிரம்பிய எல்லாளன் தனிச் சமர் செய்து இறந்ததன் காரணமாக எல்லாளனின் தோல்வி, தமிழீழ மக்களின் தோல்வியாயிற்று என்று திருச்செல்வம் குறிப்பிடுவார்.

மகாவம்சத்தின் ஊடாக மேலும் சில விடயங்கள் தெரிய வருகின்றன. அனுராதபுர சிம்மாசனத்தில் அமர்ந்து சிங்களவரும், தமிழரும் மாறி மாறி இலங்கையை ஆட்சி புரிந்துள்ளார்கள். மகாவம்சத்தின்படி, இந்த நாட்டைத் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆளும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். இயக்கர்கள், ஆரியர்கள், தமிழர்கள் என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உள்ளார்கள்.

எல்லாள தமிழ் மன்னன் இறந்த 57 ஆண்டுகளுக்குப் பின்னர், அனுராதபுரத்தை ஐந்து தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். மகாவம்சத்தின்படி, சிங்கள மன்னர்களால் பல சைவக்கோவில்களும், சைவச் சின்னங்களும் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் பௌத்த தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே அங்கே ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் என்போர் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவை மகாவம்சம் தந்துள்ள செய்திகளாகும்.

மகாவம்சம் தருகின்ற - மறைமுகமாகத் தருகின்ற - மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.

கருணையே வடிவான புத்தனை, சமநீதிக்காகப் போராடிய புத்தனை, மொழிக் கொள்கையில் தெளிவான புத்தனை, ஆரியர்களை எதிர்த்துத் திராவிடர்களுக்காக குரல் கொடுத்த புத்தனை, ஒரு புரட்சிக்கார புத்தனை, மகாவம்சமும், இன்றைய சிங்கள சிறிலங்கா அரசுகளும், பௌத்த மட பீடங்களும், பிக்குகளும் எவ்வளவு திரிபுபடுத்தியுள்ளனர் என்பதை நேரம் கருதி இயன்ற அளவில் ஒரு வரைமுறைக்குள் வைத்துச் சுட்டிக் காட்ட முனைந்தோம்.

“சிங்களதேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில் அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்து போய்க் கிடக்கின்றது. இலங்கைத்தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடமை என்றும் மகாவம்சம் திரித்து விட்ட புனைகதையில் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கின்றார்கள்

http://www.tamilnation.org/forum/sabesan/070521mahavamsam.htm

  • தொடங்கியவர்

நுணாவிலான்,

மிக்க நன்றிகள். நீங்கள் இணைத்த தகவல்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணையத்தில் முந்திப் பார்த்திருக்கிறேன்.

http://www.tamilnation.org/heritage/index.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பாருங்கோ

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் வரலாறு என்ற ஆராய்ச்சி புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

அதில் அவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் வரையப்பட்ட சான்றுகளை உலகெங்கிலும் தேடிச்சென்று தகுந்த ஆதாரங்களுடனே

எமது வரலாற்றை வெளியிட்டுள்ளார்.

இது உலகெங்கிலும் வாங்கக்கூடிய புத்தகம் எண்டு நினைக்கிறன்

நன்றி

வணக்கம் பாருங்கோ

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் வரலாறு என்ற ஆராய்ச்சி புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

அதில் அவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் வரையப்பட்ட சான்றுகளை உலகெங்கிலும் தேடிச்சென்று தகுந்த ஆதாரங்களுடனே

எமது வரலாற்றை வெளியிட்டுள்ளார்.

இது உலகெங்கிலும் வாங்கக்கூடிய புத்தகம் எண்டு நினைக்கிறன்

நன்றி

தமிழன் எழுதின புத்தகங்களை நாங்கள் படிக்கமாட்டோம்,நம்பவும் மாட்டோம்.சிங்களவன் எழுதின புத்தகம் தான் நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கும் அதைதான் படிப்போமாக்கும்

  • தொடங்கியவர்

இந்த இணையத்தில் முந்திப் பார்த்திருக்கிறேன்.

http://www.tamilnation.org/heritage/index.htm

கந்தப்பு,

மிக்க நன்றி தங்கள் தகவலிற்கு.

வணக்கம் பாருங்கோ

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் வரலாறு என்ற ஆராய்ச்சி புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

அதில் அவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் வரையப்பட்ட சான்றுகளை உலகெங்கிலும் தேடிச்சென்று தகுந்த ஆதாரங்களுடனே

எமது வரலாற்றை வெளியிட்டுள்ளார்.

இது உலகெங்கிலும் வாங்கக்கூடிய புத்தகம் எண்டு நினைக்கிறன்

நன்றி

நன்றி தங்கள் தகவலிற்கு. இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட புத்தகத்தின் பெயர் தெரிந்தால் தயவுசெய்து தந்துதவுங்கள். நான் தேடிப் பார்க்கின்றேன்.

தமிழன் எழுதின புத்தகங்களை நாங்கள் படிக்கமாட்டோம்,நம்பவும் மாட்டோம்.சிங்களவன் எழுதின புத்தகம் தான் நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கும் அதைதான் படிப்போமாக்கும்.

தங்கள் ஆற்றாமையுடன் கூடிய விதண்டாவாதங்களுக்கும் என் அனுதாபங்கள். :):)

நான் எழுதியதையே முன்னுக்கும் பின்னுக்கும் வெட்டிவிட்டு, தங்கள் மனம் போல எழுதியுள்ளீர்கள். ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் எழுதி வெளிவந்த பல புத்தகங்களில் இருந்ததையே நான் குறிப்பிட்டேன். அந்தத் தகவல்கள் தவறானவையாக இருந்தால், ஆதாரங்களுடன் சரியான தகவல்களை தந்துதவுங்கள் எனத்தான் நானும் கேட்டிருந்தேன். அப்படி மாறுபாடான தகவல்கள் ஆதாரத்துடன் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை நண்பரின் மகனின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். சரியான தகவல்களை தர வக்கில்லாது விட்டால் இப்படித் தரங்கெட்டத் தனமாக எழுதிச் சுகம் காண்பதுவோ தங்களின் ஆதாரங்கள்.

எனது நண்பரின் மகனுக்கு முன்பாகவே பல தமிழ் மாணவர்கள் (10 மாணவர்களுக்கு மேல்) எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் கூட "இலங்கையில் வாழும் சிங்கள இனத்தவர்களின் மூதாதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே" குறிப்பிடப்பட்டுள்ளதையும் நண்பரின் மகன் என்னிடம் காட்டினார். அவர்கள் தமக்கு ஆதாரமாகக் கிடைக்கும் தகவல்களையே வைத்து ஆய்வுகளைச் சமர்பிக்க முடியும்.

எம்மனம் போன போக்கில் ஆய்வுகளைச் சமர்பிக்க ஐரோப்பா ஒன்றும் இலங்கையில்லை. ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு ஆதாரம் தான் முக்கியம் என்பதை தாங்கள் இதுவரை தெரிந்திருக்காவிட்டால், இனியாவது தெரிந்து கொள்ள முயற்சியும்.

மனித நாகரீகங்களின் ஆகக்கூடிய கிடைக்கப்பெற்ற ஆதாரமே 5000 வருடங்களுக்கும் முந்தியதுதான்.. அது இப்ப பாக்கிஸ்தானுக்குஸ் இருக்கும் சிந்து நதிக்கரையின் மெகஞ்சதாரோ , ஹரப்பா நகரங்களின் சுவடுகள்.. அங்கு கிடைத்த மண்தகடுகளில் எழுதப்பட்டு இருக்கும் எழுத்துக்கள், பழங்கால சமஸ்கிருத , தமிழ் பிராமி எழுத்துக்களின் அமைப்பில் இருக்கின்றமையால் தமிழையும் சமஸ்கிருந்தத்தையும் ஒரு சேர உருவான மொழிகள் என்கிறார்கள்...

அது தவிர கிரேக்கம், மத்திய கிழக்கில் யூப்பிதீஸ், தைக்கிறீஸ் நதி நாகரீகங்கள் 4000 வருட பாரம்பரிய பழமைகளை கண்டு பிடித்து இருக்கிறார்கள்...

அதைத்தாண்டி இண்றும் ஒரு சீராக சீனாவில் 4000- 3500 வருடங்களாக வாழ்ந்து வரும் மஞ்சள் நதி நாகரீகங்கள் மட்டுமே இண்றும் இருக்கின்றது...

அதுதவிர தமிழர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த சுவடுகள் அனைத்தையும் தேடி எடுத்து தொகுத்து வரலாற்றை பதிவு செய்து வைத்து இருந்த இடம் தென்னாசியாவிலேயே பெரிய நூலகம் எண்றால் அது யாழ் நூலகம் தான்...

அதைத்தான் சுவடு தெரியாமலே எரித்து விட்டார்களே... பிறகு எங்கை இருந்து ஆதாரங்களை தேடப்போகிறீர்கள்...

ஆதாரத்தை தேடியவர்கள் மட்டும் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள்... அவர்களில் ஒருவரின் தேடியவைகளின் தொகுப்பு...

ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை

http://www.tamilnation.org/heritage/eelam/jaffna_kingdom.htm

தமிழர்களின் வரலாற்றை தேடிய ஒரு பதிவு...

http://www.tamilnation.org/heritage/index.htm

Edited by தயா

  • தொடங்கியவர்

தயா,

முதலில் நீங்கள் இணைத்த இணைப்புகளுக்கு நன்றிகள்.

நீங்கள் மனித நாகரீகம் தோன்றிய கால கட்டத்தையும், நான் கேடட்ட பூர்வீக குடிகள் பற்றிய ஆதாரங்களையும் ஒன்றாக ஒப்பிட்டு குளப்புவதாலேயே தாங்கள் குளம்புகின்றீர்கள். உஙகள் கருத்தே ஏதோ 5000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமே இல்லையென்பது போலல்லவா அமைகின்றது. இது தவறு எனபது உங்களுக்குப் புரியவில்லையா ??

தயா,

முதலில் நீங்கள் இணைத்த இணைப்புகளுக்கு நன்றிகள்.

நீங்கள் மனித நாகரீகம் தோன்றிய கால கட்டத்தையும், நான் கேடட்ட பூர்வீக குடிகள் பற்றிய ஆதாரங்களையும் ஒன்றாக ஒப்பிட்டு குளப்புவதாலேயே தாங்கள் குளம்புகின்றீர்கள். உஙகள் கருத்தே ஏதோ 5000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமே இல்லையென்பது போலல்லவா அமைகின்றது. இது தவறு எனபது உங்களுக்குப் புரியவில்லையா ??

5000 வருடங்களுக்கும் முன்னர் மனிதர்கள் வாழ்ந்த இடக்களின் சுவடுகள் என்பது வேறு நாகரீகங்கள் என்பது வேறு..

மனிதன் வேடுவனாக வாழ்ந்து இருக்கலாம்... ஆனால் அவன் ஒரு அடையாளத்தை பெறுவதை நாகரீகம் என்கிறார்கள், ஒருவன் அடையாளத்தை பெற அறிவியல் ரீதியில் சில அடையாளங்களை அடைந்து இருக்க வேண்டும்... அதில் மொழி முக்கிய பங்காற்றுகிறது... இருவருக்கு இடையில் செய்திகளையும் தகவல்களையும் சம்பாசனைக்கு துணை நிற்பதை தான் மனிதனின் முதல் கண்டு பிடிப்பு... அதன் பின்னர் இருக்க இடம், தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஆடைகளையும் கண்டு கொள்கிறான்...

இதன் பின்னரே அந்த மனிதனை சிங்களவன் தமிழன் எண்று நாங்கள் அடையாளப்படுத்த முயகிறோம்... அதற்கும் முன்னர் மனிதர்கள் கூட ஒருவகை விலங்குகள்தான்...

நான் சொன்ன நாகரீகம் என்பதும் மனிதன் கூட்டாக வாழ கற்று கொண்டு ஒரு சூழலை உருவாக்கிய காலம் கிட்ட த்தட்ட 5000 வருடங்கள் மட்டுமே...

  • கருத்துக்கள உறவுகள்

முருகர் குணசிங்கத்தின்...இலங்கையில் தமிழர்..கி.மு300..கி.பி.2000 ம் என்கிற புத்தகம்..இதில் ஆங்கிலத்திலும் தமிழிலும்;..இருக்கிறது..உலகெங்கும் உள்ள நூலகங்களில் எல்லாம் சென்று சேகரித்தவற்றை ஆவணமாக்கியிருக்கிறார்..பாரிசில் புத்தகக் கடைகளில்..கிடைக்கிறது..

வசம்பு,

Sri Lanka

History and the Roots of Conflict

Edited by

Jonathan Spencer

இந்த புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம் தமிழர்கள், சிங்களவர்கள் பற்றி, இப்போது சிங்களவர்கள் என்று சொல்லும் பலர் முன்னர் தமிழர்கள், தமிழில் கையொப்பம் இட்ட பிரதனிகள் தமிழில் கையொப்பம் இட்டவை பற்றி சுருக்கமாக பேசுகிறது.

Chapter two

The generation of communal identities

Elizabeth Nissan and R.L.Stirrat

அதை வாசிக்கும் போது இப்பொது மட்டுமல்ல முன்னரும் தமிழன் தான் தமிழனுக்கு எதிரியாக இருந்திருக்கிறான் என்பதும், அவர்கள் இப்போது சிங்களவர்களாகிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

ஆனால் இந்த புத்தகம் மென்னூலாக (பி டி எf இல்லை) இருப்பதால் என்னால் தரவிறக்கி அனுப்ப முடியாது. ஆனால் உங்கு உள்ள பல்கலைகழகங்களில் மென்னூல்/ மின்னூலை இணையத்தில் பார்க்க/ பிரதியெடுக்க முடியும். உங்களுக்கு தெரிந்த பல்கலைகழக மாணவர்கள் இல்லையா?

Edited by KULAKADDAN

Chapter three

The people of the lion: the Sinhala identity and ideology in history and historiography

R.A.L.H.Gunawardana

அதே புத்தகத்தின் 3 ஆம் அத்தியாயம் சிங்களவர் எனும் பதம் இலங்கையின் வரலாற்றில்/ இலங்கையின் வரலாறை கூறும் புராண கதை நூல்களில் 5 ஆம் நூற்றாண்டின் பின்ன்னர் தான் தோற்றம் பெற தொடங்கியது என்றும் ஆனல் அதற்கு முனரே தமிழரை குறிக்கும் சொற்கள் பவனையில் இருந்ததகவும் பெசுகிறது. ஆனால் தமிழ் நாட்டு ஆதரங்கள் இலங்கையை சிங்களவருடன் தொடர்பு படுத்துவராக கட்டுரை தொடர்கிறது.

உங்குள்ள பல்கலைகழக நூலகங்களின் மென் நூல் சேவை மூலம் இந்த நூலை பெற முடியும் என்றே நம்புகிறேன். முயற்சித்து பாருங்கள்.

எனக்கு உடனடியாக பிரதியெடுத்து, பின் ஸ்கான் பண்ணி அனுப்ப இப்போது இயலாதுள்ளது. மன்னிக்கவும்.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

முருகர் குணசிங்கத்தின்...இலங்கையில் தமிழர்..கி.மு300..கி.பி.2000 ம் என்கிற புத்தகம்..இதில் ஆங்கிலத்திலும் தமிழிலும்;..இருக்கிறது..உலகெங்கும் உள்ள நூலகங்களில் எல்லாம் சென்று சேகரித்தவற்றை ஆவணமாக்கியிருக்கிறார்..பாரிசில் புத்தகக் கடைகளில்..கிடைக்கிறது..

நன்றி உங்கள் தகவலிற்கு. நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ எவராவது சமீபத்தில் சுவிசிற்கு வரவிருந்தால், ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வாங்கி வர முடிடியுமா ?? அதற்குரிய பணத்தை நான் தந்து புத்தகத்தைப் பெற்றுக் கொள்கின்றேன்.

முருகர் குணசிங்கத்தின்...இலங்கையில் தமிழர்..கி.மு300..கி.பி.2000 ம் என்கிற புத்தகம்..இதில் ஆங்கிலத்திலும் தமிழிலும்;..இருக்கிறது..உலகெங்கும் உள்ள நூலகங்களில் எல்லாம் சென்று சேகரித்தவற்றை ஆவணமாக்கியிருக்கிறார்..பாரிசில் புத்தகக் கடைகளில்..கிடைக்கிறது..

இவரின் இந்தப் புத்தகம அநேகமாக எல்லா புலம்பெயர் நாடுகளிலும் கிடைக்கும் என் நினைக்கின்றேன். இங்கு கனடாவிலும் கிடைக்கின்றது. ஒரு முறை வாங்க முயன்று அதன் விலையை விசாரித்தேன்.. 50 டொலர்கள் என்றனர். உந்த 50 டொலருக்கு எமது வரலாறை வேண்டி வாசிப்பதை விட ஒரு chivas வாங்கலாம் என்று திரும்பி போயிட்டேன். இப்பதான் தெரியுது, அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கலாம் என

  • தொடங்கியவர்

எனக்கு உடனடியாக பிரதியெடுத்து, பின் ஸ்கான் பண்ணி அனுப்ப இப்போது இயலாதுள்ளது. மன்னிக்கவும்.

நன்றிகள் குளக்காட்டன். நீங்கள் இவ்வளவு விபரங்களை இணைத்து உதவியதே பெரிய விடயம். நீங்கள் தந்த விபரங்களை, எனது நண்பரின் மகனுக்கு கொடுக்கின்றேன். சிலவேளை அவரால், அவரது நண்பர்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.