Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:மாவோயிஸ்ட் தலைவர்

Featured Replies

இலங்கைத் தீவு பல்லின மக்களுக்கானது என்பதனையேற்று.......

எண்டு உங்கட குஞ்சியப்பர்தான் மட்டும்தான் சொல்லிகொண்டிருக்கிறார்.. :)

  • Replies 71
  • Views 5.3k
  • Created
  • Last Reply

என்ட குஞ்சியப்பர் சொல்லுரார் சிறிலங்கா சிங்களவனுக்குத்தான் சொந்தமாம்,

சிறிலங்கா பல்லினசமுகத்திற்கு சொந்தம் என்று எந்த கொம்பனுக்கும் உரிமை கோர ஏலாதாம்

  • கருத்துக்கள உறவுகள்

எண்டு உங்கட குஞ்சியப்பர்தான் மட்டும்தான் சொல்லிகொண்டிருக்கிறார்.. :)

குஞ்சியப்பர் தனது வீட்டுத் திண்ணையில் படுக்கமுடியாமல் அந்தரிக்க வைத்தவர்கள் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்கின்றார்.

பிரித்தானியா ஒரு பல்லின நாடாக இருக்க முடியுமென்றால் இலங்கையும் பல்லின நாடாக இருக்கலாம். ஆனால் தனியச் சிங்களவர்கள் மட்டும்தான் இருக்கப் போகின்றார்கள் என்று சொல்லுபவர்கள் இரு இனத்திலும் உள்ள அதி தீவிர இனவாதப் போக்குள்ளவர்கள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரின் அழிவையும் கோரங்களையும் சந்தித்த மக்களின் முதுகில் சவாரி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சுயகெளரவத்துடன் வாழ ஏதாவது சிறு உதவிகூட செய்யாமல் வெறும் வார்த்தைகளால் வீரம் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து விவாதிப்பது கூட நேரவிரயமே.

உண்மை..

சும்மா இங்கை இருந்து கூவுறது தான் மிச்சம்..

எனக்கு இதை பார்க்க வடிவேலு,லிவிங்ஸ்டன் காமடி தான் ஞாபகத்துக்கு வருது

http://www.youtube.com/watch?v=fXM9PyF0ozo

வவுனியாவில் இருக்கும் மக்கள் மீளக்குடியேறாமல் அப்படி நடக்க சாத்தியமே இல்லை...

ஒரு பெரிய பின்னடைவு ஏன் வந்தது என்று சிந்தித்த முடியாமல் எல்லாம் புலிகளால் தான் என்று பரப்புரை செய்யவென்று ஒரு கூட்டம் களமிறங்கியுள்ளகு அவர்களுக்கு எதுவும் விளங்காது தல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடுப்புமுகாமில் உள்ள மக்களை விடுவிக்காதுவிட்டால் நவீன(??) ஆயுதங்களை வழங்கப் போவதாக கணபதி சொல்லிஉள்ளார்.இப்போது மிரட்டல்விடும் கணபதி எமதுமக்கள் கடும் மரணத்துக்குள்ளும் சிதைவுகளுக்குள்ளும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஏப்ரல் மே மாதங்களில் ' சுயநிர்ணய உரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாதுவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்' என்று ஏன் அறைகூவல் விடவில்லை?.சரி அதை விடுவம். மாவோயிஸ்ட்டு என்று சொல்லும் கணபதி மாவோ சே துங்கின் தேசமான சீனா எமது மக்களை அழிப்பதற்கு சிறீலங்காவுக்கு கொடுத்த உதவிகளுக்காக சீனாவை பகிரங்கமாக கண்டிப்பாரா??இந்த மாவோயிஸ்ட்டுக்கள் கம்யுனிஸ்டுகள் எல்லாரும் எப்படியான கோமாளிகளாக இந்தியாவில் இருக்கினம் என்று ஈழத்தமிழன் தெரிந்துகொள்ள வேண்டும்.இந்தக் கணபதியின் குரு 'கொண்டபள்ளி சீதாராமையா' ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளில் 'மக்கள் யுத்தக்குழு' என்ற ஆயுத எதிர்வினை அமைப்பொன்றை நடாத்திவந்தார்.1983ல் பின்தளமாக இந்தியா பாவிக்கப்பட ஆரம்பித்ததும் வேதாரணியத்தில் எல்லா ஈழ இயக்கங்களும் இறங்கின.அந்த நேரத்தில் 303 ரைபிளும் நாட்டு எறிகுண்டுகளுடனும் மல்லாடிக் கொண்டிருந்த 'சீதாராமையா' தன்னுடைய வலதுகையான நெல்லூர் மாதவராவை வேதாரணியத்துக்கு அனுப்பியிருந்தார்.அவரும் வேதாரணியம் வந்து பரகத்லாட்ஜ்ஜில் தங்கிக்கொண்டு வேதாரணியம் எம்.எல.ஏ மீனாட்சிசுந்தரம் வீட்டில் வந்து இறங்கிநின்ற பிளட்,ரெலோ,ஈ.பி.ஆh.எல.எவ்.,ஈரோஸ் அமைப்புகளுடனும் வேதாரணியம் ராஜேந்திரதேவர் வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளுடனும் கதைத்து நவீனஆயதங்களை தங்களுக்கு தருமாறும் தாங்கள் சில உள்ளுர்உதவிகளை செய்து தருவதாகவும் நீண்டடடடடடட கலந்துரையாடல்களை நடத்தினார்.விடுதலைப்புலிகள் இவரின் கோரிக்கையை உடனேயே நிராகரித்து மறுத்தனர். ஆனால் மாதவராவின் மாக்சிச சொல் பிரயோகங்கள் தோழர் தோழர் என்ற தேன் வசனங்களில் மற்றச்சில இயக்கங்கள் விழுந்தன.இது நடந்து ஏறத்தாள நான்குமாதங்களின் பின் இதே மாதவராவை எல்லா இயக்கங்களும் சென்னை மெரீனா கடற்கரைக்கு முன்னால் இருந்த 'ரோ' அலுவலகத்திலும் நுங்கம்பாக்கம் 'சாஸ்த்திரி பவனிலும்' வேறுமுகத்துடன் கண்டபோது திடுக்கிட்டார்கள்.இதைப் போலவே பொன்பரப்பி தமிழரசன்,தஞ்சாவுர் லெனின்,சேலம் சிவலிங்கம் போன்றவர்களின் குத்துக்கரணங்கள் ஆயிரம். அதுகளை விட்டு முகாம்களுள் உள்ள எம் மக்களை மீட்கும் அல்லது வெளிஎடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.

Edited by four four bravo

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுக்கூர்மை மிக்க தமிழினமாகிய நாம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பது தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றோம். இன்னும் மந்திரவித்தையால் மாங்காய் பிடுங்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இருக்கும் மக்கள் மீளக்குடியேறாமல் அப்படி நடக்க சாத்தியமே இல்லை...

எல்லாம் இருக்கட்டும்

நாம் மாறிவிட்டோமா?

கடவுள் வந்தாலும் நம்மை காப்பாற்ற முடியுமா இன்றைய நிலையில்???

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

வெளிநாட்டிலிருக்கும் நாம் எமது பலத்தை அறியாதிருக்கின்றோம்

இந்த மக்கள் ஓரளவேனும் குடியேற்றப்படுவதற்கு நாம் ஆகக்கூடுதல் அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும்அதன்மூலம் அவர்கள் சிறிதுசிறிதாகிலும் குடியேற்றப்பட்டால்.........????

அங்கு மின்சார வசதிகள் தொலைபேசி மற்றும் இன்ரனெற் வசதிகள் வரசெய்துவிட்டால்.......????

அதற்குபின் பெருமளவிலான இன அழிப்புக்களை செய்யாது தடுக்கக்கூடிய பலமும் எம்மிடமுண்டு

எல்லாம் இருக்கட்டும்

நாம் மாறிவிட்டோமா?

கடவுள் வந்தாலும் நம்மை காப்பாற்ற முடியுமா இன்றைய நிலையில்???

பேசுபவர்கள் பேசிக்கொண்டு விமர்ச்சிக்கு கொண்டும் இருந்தார்கள்.. அதை கேட்ப்பவர்கள் கேட்டுக்கொண்டும் குழம்பிக்கொண்டும் இருந்தார்கள்... ஆனால் சிறிய விகிதமாக இருந்த செயற்படுபவர்கள் எதுக்கும் நேரம் இல்லாது செயற்பட்டு கொண்டு இருந்தார்கள்...

ஆனால் இண்டைக்கு செயற்படுபவர்கள் அரிதாகிப்போய்.. பேசுபவர்களும் அதைக்கேட்டு குழம்புபவர்களுமாக போய் கொண்டு இருக்கின்றது...

இதுக்கை தமிழீழம் பற்றிய பேச்சு வேறு அடிக்கடி வருகிறது...

நான் உங்களுக்கு சுந்தந்திரம் பெற்று தருவேனாக இருந்தால் அது உண்மையில் உங்களின் சுதந்திரம் கிடையாது. நீங்கள் சிங்களவனிடம் அடிமையாக இருந்து இடம்மாறி எனக்கு அடிமையாக மாறுகிறீர்கள்... என்பதை பலர் புரிந்து கொள்வது இல்லை...

இதை புலிகள் பல முறை தெளிவு படுத்தினர்... எல்லாரும் புலிகளாக வேண்டும் எண்று பல முறை கோரிக்கை வைத்தனர்... அப்ப எல்லாம் வீதிக்கு இறங்கி ஒரு கொடியை கூட பிடிக்க முடியாதவை இப்ப தமிழீழம் பெறுவினம் எண்ட நம்பிக்கை எனக்கில்லை...

உள்ளூரிலை ஓணான் பிடிக்க முடியாதவை வெளியூரிலை வந்து முதளை பிடிப்பினமாம் எண்டால் நம்ப முடிகிறதா...??

Edited by தயா

என்னைப்பொறுத்தவரை

வெளிநாட்டிலிருக்கும் நாம் எமது பலத்தை அறியாதிருக்கின்றோம்

இந்த மக்கள் ஓரளவேனும் குடியேற்றப்படுவதற்கு நாம் ஆகக்கூடுதல் அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும்அதன்மூலம் அவர்கள் சிறிதுசிறிதாகிலும் குடியேற்றப்பட்டால்.........????

அங்கு மின்சார வசதிகள் தொலைபேசி மற்றும் இன்ரனெற் வசதிகள் வரசெய்துவிட்டால்.......????

அதற்குபின் பெருமளவிலான இன அழிப்புக்களை செய்யாது தடுக்கக்கூடிய பலமும் எம்மிடமுண்டு

இப்போ நீங்கள் விரும்புறீங்களோ இல்லையோ உங்களுக்கு எல்லாம் இருந்த பலம் மீதான பாரம் இரட்டிப்பு ஆக்க பட்டு கொண்டு இருக்கிறது...

நீங்கள் முன்னம் எல்லாம் தமிழர்களையும் தமிழர்களின் போராட்டத்தையும் சுமந்தீர்கள்... ஆனால் இப்போது எல்லாம் தமிழரை விட மூண்று மடங்கு அதிகமான சிங்களவரையும் சேர்த்து சுமக்கிறீர்கள்...

தமிழர்களை அழிக்க சிங்களவர் சர்வதேசத்திடம் பெற்று கொண்ட ஆதரவின் சுமை தமிழர்கள் மீதுதான் இறக்கி வைக்க பட்டு கொண்டு இருக்கிறது... முன்னரும் நடந்தவைதான்.. ஆனால் அதுதான் இனிமே நிரந்தரம்...

இலங்கை மீது சுமந்த்தப்படும் எந்த அழுத்தங்களில் ஏற்கனவே அழுந்தி போய் இருக்கு தமிழர் மீதுதான் இன்னும் அழுத்தங்களை கொண்டு வருகிறது... அந்த அழுத்தம் புலம்பெயர்ந்தவர்களின் காசுப்பைகளை பதம் பார்ப்பதை தவிர்க்க முடியாது...

கொழும்பில் உங்களின் உறவினர் இருந்தால் அல்லது அண்மையில் போய் வந்தவர்களை கேட்டுப்பாருங்கள்...எல்லா பொருட்களும் அங்கு தமிழர்களுக்கு கிடைக்கும் ஆனால் பொருட்களின் விலை தமிழர்களுக்கு வேறு சிங்களவருக்கு வேறு... அவன் சொல்லும் விலையை கொடுத்து விட்டு வங்கி வரவேண்டியதுதான்... பேரம் பேசும் தகுதியை தமிழர் இழக்கும் முன்னரே இதுதான் நிலை...

இதுக்கு காரணம் வேறு யாரும் இல்லை தமிழர்கள் மட்டுமே...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்புமுகாமில் உள்ள மக்களை விடுவிக்காதுவிட்டால் நவீன(??) ஆயுதங்களை வழங்கப் போவதாக கணபதி சொல்லிஉள்ளார்.இப்போது மிரட்டல்விடும் கணபதி எமதுமக்கள் கடும் மரணத்துக்குள்ளும் சிதைவுகளுக்குள்ளும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஏப்ரல் மே மாதங்களில் ' சுயநிர்ணய உரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாதுவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்' என்று ஏன் அறைகூவல் விடவில்லை?.சரி அதை விடுவம். மாவோயிஸ்ட்டு என்று சொல்லும் கணபதி மாவோ சே துங்கின் தேசமான சீனா எமது மக்களை அழிப்பதற்கு சிறீலங்காவுக்கு கொடுத்த உதவிகளுக்காக சீனாவை பகிரங்கமாக கண்டிப்பாரா?? அதுகளை விட்டு முகாம்களுள் உள்ள எம் மக்களை மீட்கும் அல்லது வெளிஎடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.

ஏப்ரல் மேமாதங்களில் கணபதி ஊருலா போயிட்டார் போல. அதுதான் இப்ப கனவு கலைஞ்சு வந்து ஆயுதம் தரவாறார். பெயருக்கு மாவோவை வைத்துக்கொண்டு உணர்ச்சித்தளத்தில் நின்று இதோ அதோ என ஆக்ரோசம் பேசும் தமிழக அரசியல்வாதிகள் போல நம்மினமும் வாய்ச்சொல்வீரத்தில் இப்போது முதலிடம் என்பது அறிந்துள்ளாரோ என்னவோ.

முகாம்களுக்குள் உள்ள பொதுமக்கள் போராளிகளின் அவலத்தை இங்கிருந்து உணர்ச்சிவசப்படும் அன்பர்கள் புரிந்து கொள்ள வேணும். அவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்க இங்கிருந்து அரசியல் அதிகாரம் தனித்தேசம் என்ற உசுப்பல்கள் அவர்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்காது.

ஏப்ரல் மேமாதங்களில் கணபதி ஊருலா போயிட்டார் போல. அதுதான் இப்ப கனவு கலைஞ்சு வந்து ஆயுதம் தரவாறார். பெயருக்கு மாவோவை வைத்துக்கொண்டு உணர்ச்சித்தளத்தில் நின்று இதோ அதோ என ஆக்ரோசம் பேசும் தமிழக அரசியல்வாதிகள் போல நம்மினமும் வாய்ச்சொல்வீரத்தில் இப்போது முதலிடம் என்பது அறிந்துள்ளாரோ என்னவோ.

தமிழகத்தில் இருக்கும் புலிகள் ஆதரவுத்தளத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்த அவர் விடுத்த அறிக்கை அது...

ஒரு வாரத்துக்கும் முன்னம் ULFA அமைப்புக்கு புலிகள் ஆயுதம் கொடுத்த தகவலை இந்திய படைகள் வெளியிட்டு இருந்தனர்.... அதையும் இதையும் சேர்த்து ஒரு அறிக்கையை விட்டு இருக்கிறார்...

அதுக்கு எங்கட சனம் எதுக்காக இரத்த அழுத்தத்தை கூட்டி கொள்ளுது எண்டுதான் எனக்கு விளங்க இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு எங்கட சனம் எதுக்காக இரத்த அழுத்தத்தை கூட்டி கொள்ளுது எண்டுதான் எனக்கு விளங்க இல்லை...

எல்லாருடைய இரத்த அழுத்தத்தையும் ஒருக்காப் பாத்தால் விளங்கும்.

உண்மை..

சும்மா இங்கை இருந்து கூவுறது தான் மிச்சம்..

எனக்கு இதை பார்க்க வடிவேலு,லிவிங்ஸ்டன் காமடி தான் ஞாபகத்துக்கு வருது

http://www.youtube.com/watch?v=fXM9PyF0ozo

:Dஅட அட நீங்க எங்கேயோ போயிட்டீங்க............. :D

இதுக்கு மேல் இந்த இடுகைக்குள் தயவு செய்து எல்லோரும் மண்டைய போட்டு குழப்பறதை நிப்பாட்டிக்கொள்வோம்.

திரிபு படுத்தப்பட்ட பரபரப்பான பேட்டியின் அடிப்படையில் பல பிழயான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

கீழ் இணைதிருப்பதே சரியான மொழி பெயர்ப்பு.

புலிகளின் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டம் முன்னெழும் : மாவோயிஸ்ட் செயலாளர் கணபதி

தமிழ்மணம் பரிந்துரை : 3/3

Pathivu Toolbar ©2009thamizmanam.com

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இன் பொதுச் செயலாளர் கணபதி Open சஞ்சிகையின் October 17, 2009 பிரதிக்கு வழங்கியிருந்த செவ்வியின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. லால்காரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்திய அரசின் தாக்குதல்கள், நேபாள அரசியல் நிலமை, புலிகளின் தோல்வி என்பவை குறித்துப் பேசும் நீண்ட செவ்வியை தமிழகப் பத்திரிகைகளான மாலை மலர் போன்றவை திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தன. அதன் ஒரு பிரதியாக்கம் இனியொருவிலும் பதிவு செய்யப்பட்டமைக்காக வருந்துகிறோம்.

இலங்கையில் புலிகளின் பின்னடைவிற்குக் காரணம் என்ன?

புலிகளின் தோல்லிவிக்கும் குறிக்கத்தக்க அழிவிற்கும் பின்னர் தனியான தன்னாதிக்கமுள்ள தமிழ் ஈழத்திற்கான இயக்கம் பாரிய பின்னடைவிற்கு உள்ளாகியுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. தமிழர்களும் போராட்டமும் இப்போது தலைமையில்லாதுள்ளது.

பெருந்திரளான தமிழ் மக்கள் தேசிய வேட்கையுடன் தனியான தமிழ் தேசத்தில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இன்று வரைக்கும் தமிழ் ஈழத்தை கோருவதற்காக ஏற்பட்ட அதே நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தேசத்திற்கும், கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் எதிரான தனது இனவாதக் கொள்கைகளை சிங்கள சோவனிச அரசு மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதும் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுமான முதல் வாரத்தில் அதையொட்டி இலங்கை அரசாலும் சோவனிசக் கட்சிகளாலும் இல்லங்கை முழுவதும் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் அணிவகுப்புக்களும், கொண்டாட்டங்களும், அப்பாவிச் சிங்கள மக்களின் சிந்தனையை நச்சூட்டும் சோவனிசக் கருத்துக்களை வளர்த்தெடுக்கும் எல்லைவரை தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் உருவாக்கி வளர்த்த தேசிய வெறுப்புணர்வைச் சுட்டிநிற்கிறது.

இலங்கை அரசு தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக முன்வைக்கும் அதே சதித்திட்டமுள்ள கருத்தைத் தான் இஸ்ரேலிய சியோனிச அரசும் முன்வைக்கிறது. நிலமற்ற சிங்கள மக்கள் தமிழ் பிரதேசங்களில் குடியேற்றப்படுவார்கள்.

முழு இலங்கையினதும் குடியியல் எல்லைகள் மாற்றமடையப் போகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் புதிய எழுச்சிக்கான தளம் இன்னமும் விளைநிலம் போல எஞ்சியுள்ளது.

நீண்ட காலமெடுத்தாலும், புலிகளின் தோல்விக்கான காரணங்களின் படிப்பினைகளிலிருந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது புத்துயிர்ப்புப் பெறுவது நிச்சயமானது.

பாட்டாளிவர்கச் சிந்தனை முறையையும் பார்வையையும் முன்வைத்து, புதிய தந்திரோபாயங்களை வகுத்த்குக்கொண்டு, பரந்துபட்ட ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளுடனான இணைவைக் கட்டியெழுப்புவதனூடாக ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் விடுதலை என்பது சாத்தியமானதே.

சரியான திசையையும், தலைமையையும் வழங்குவதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு திசைவழியை ஏற்படுத்துவதற்கும் மாவோயிச சக்திகள் தேவையான அளவிற்குப் பலமடைவதனூடாக தன்னாதிக்கமுள்ள தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசை அடைய முடியும்.

தவிர புலிகள் அமைப்பிற்கும் தமது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனாலும் 1980 களின் முதல் காற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த சில நபர்களின் தொடர்புகளூடாக ஆரம்ப நிலைப் பயிற்சிகளை மேற்கொண்டோம், தவிர, தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்கு எமது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்துள்ளோம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்:

http://www.openthemagazine.com/article/nation/we-shall-certainly-defeat-the-government

http://inioru.com/?p=6781

புலம்பெயர் தமிழர்களே!

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

நாம் இனத்திற்காக எதைச்செய்தோம்.ஆம் இறுதிப்போர்இடம் பெற்றபோது வீதியில் இறங்கினீர்கள்.அதை விட என்ன செய்தீர்கள்.

உங்கள் மனச்சாட்சியைக்கேட்டுப்பாருங்கள்.ஒவ்வொருமுறையும் இரத்தக்களரி ஏற்படும் போதுதான் நம்மவர்கள் உணர்ச்சிப்பட்டு எழுந்துள்ளோம்.உங்கள் உணர்ச்சிக்காக இன்னும் தமிழரை நரபலி எடுக்கவிடுவதா? சொல்லுங்கள் உறவுகளே.... சொல்லுங்கள்.நாம் தூரத்தில் எதைச்செய்வது, எப்படிச்செய்வது என்று மனதைச்சாந்திசெய்து சம்பாதிக்கச்சென்றுவிட்டீர்களா? இப்போராட்டம் நம்மைநம்பித்தான் உள்ளது என்பதை ஏன் மறந்தீர்கள் ?உங்கள்பிஞ்சுகளை நச்சுவாயுத்தீயில் பொசுக்கினானே எதிரி அதை ஏன் உலகுக்கு சொல்லத்தயங்குகிறீர்கள்.ஒரு நாளில் ஒரு மணித்தியாலத்தையாவது இனத்திற்காக செலவலிக்க ஏன் தயங்குகிறீர்கள்.கொண்டாட்டங்களுக்கும் களியாட்டங்களுக்கும் செலவலிக்கும் நேரத்தைக்கணக்கிட்டுப்பாருங்கள்.நம்மினத்தை அழித்த எதிரி அமெரிக்கா வரவுள்ளான்.

என்ன செய்யப்போறீர்கள்? உங்களால் அவனைத்தடுக்கமுடியுமா?தடுத்தேயாகவேண்டும். இப்படி ஏதாவதுசெய்யுங்கள்.வீண்செய்திகளைப்படித்து வீணாகாதீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிபு படுத்தப்பட்ட பரபரப்பான பேட்டியின் அடிப்படையில் பல பிழயான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

கீழ் இணைதிருப்பதே சரியான மொழி பெயர்ப்பு.

புலிகளின் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டம் முன்னெழும் : மாவோயிஸ்ட் செயலாளர் கணபதி

தமிழ்மணம் பரிந்துரை : 3/3

ஆதாரம்:

http://www.openthemagazine.com/article/nation/we-shall-certainly-defeat-the-government

http://inioru.com/?p=6781

இணைய இணைப்பு : http://www.nakkheera...ws.aspx?N=18946

ம் நக்கீரனும் பொய்செல்லுது..........

  • கருத்துக்கள உறவுகள்

மாவோயிஸ்டுகளுக்கு பயிர்ச்சியளிக்க புலிகள் ஊடுறுவியுள்ளார்களாம்‐ இந்திய உளவுத்துறை‐

26 October 09 02:20 am (BST)

:D:D

இந்திய மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் ஒன்றை வட கிழக்கில் நடத்தி வருகிறது. இந்திய மத்திய அரசு. இந்நிலையில் மாவோயிட் தலைவர் கணபதி ஒரு நேர்காணலில் ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவோம் என்று அறிவித்திருந்தார். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதம், பணம் கிடைப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவும், பயிற்சியும் கிடைத்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் அடர்ந்த வனப் பகுதிக்குள் புலிகள் அமைப்பினர், மாவோயிஸ்டுகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.இந்திய கடல் பகுதி வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவலாம். எனவே கவனமாக இருக்குமாறு ஆந்திரா, தமிழ்நாடு, சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களை ஏற்கனவே மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருந்தது. ஆனால் இந்த பலத்த கண்காணிப்பையும் மீறி நன்கு பயிற்சி பெற்ற 12 விடுதலைப் புலிகள் சமீபத்தில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, மாவோயிஸ்டுகளுடன் இணைந்துள்ளனர்.

இவர்கள் கேரளா வழியாக வடக்கு கடலோர ஆந்திரா, வுக்குள் நுழைந்தனர். பின்னர் 3 பிரிவாக பிரிந்து சென்றுள்ளனர். ஒரு குழு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் கடலோரப்பகுதிக்குள் புகுந்துள்ளது. விடுதலைப் புலிகள், குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும், தற்கொலைப் படைத் தாக்குதலிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதாலும், மாவோயிஸ்டுகளுடன் அவர்கள் கரம் கோர்த்துள்ளதாலும் இந்திய பாதுகாப்புத் துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், புலிகள் தற்போது சேர்ந்துள்ளதால், அது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் சாதகமாக அமையக் கூடும். காரணம், இலங்கை ராணுவத்தினரை எதிர்த்து பல ஆண்டுகளாக கொரில்லா போரில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர்கள் விடுதலைப் புலிகள் அதை தற்போது அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு கற்றுத் தரக் கூடும் என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர்.

மாவோயிஸ்டுகளின் படைப் பிரிவான மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க விடுதலைப் புலிகளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தலாம் எனவும் கருதப்படுகிறது.ஒரு பக்கம் இந்திய ராணுவத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகளை தூண்டி விடுவது, இன்னொரு பக்கம் இலங்கையில் இழந்த களத்தை தென்னிந்தியாவில் உருவாக்கி, மீண்டும் இலங்கையை எதிர்க்கும் பலத்தைப் பெறுவது ஆகிய இரட்டை நோக்கங்களுடன் மாவோயிஸ்டுகளுடன் புலிகள் கை கோர்த்திருக்கலாம் என்று அந்த செய்தி கூறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், மாவோயிஸ தீவிரவாதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் தென் மற்றும் மத்திய பிரதேசங்களில் உள்ள காடுகளில் புலிகளும், மாவோயிஸ் கெரில்லாக்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் பல்வேறு மட்டத்தில் தொடர்புகள் காணப்பட்டமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம், தமிழகம், சட்டிஸ்க்ரா மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் காணப்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், புலிகள் மற்றும் மாவோயிஸ தீவிரவாதிகள் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகள் கடும் ஆபத்தாக அமையக் கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகளை பறிக்கும் திட்டமொன்றில் முனைப்பு காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக இந்தியாவில் ஊடுறுவிக் கொள்வதற்கும், பின்னர் மீண்டும் இலங்கையில் யுத்தத்தை முன்னெடுக்கவும் முயற்சிக்கப்படுவதாவ சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழகத்தை மையமாகக் கொண்டு தமது இராணுவ நடவடிக்ககைளை ஆரம்பிக்க புலிகள் உத்தேசித்திருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்வதற்கு புலிகள் இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16423&cat=1

ஏப்ரல் மேமாதங்களில் கணபதி ஊருலா போயிட்டார் போல. அதுதான் இப்ப கனவு கலைஞ்சு வந்து ஆயுதம் தரவாறார். பெயருக்கு மாவோவை வைத்துக்கொண்டு உணர்ச்சித்தளத்தில் நின்று இதோ அதோ என ஆக்ரோசம் பேசும் தமிழக அரசியல்வாதிகள் போல நம்மினமும் வாய்ச்சொல்வீரத்தில் இப்போது முதலிடம் என்பது அறிந்துள்ளாரோ என்னவோ.

முகாம்களுக்குள் உள்ள பொதுமக்கள் போராளிகளின் அவலத்தை இங்கிருந்து உணர்ச்சிவசப்படும் அன்பர்கள் புரிந்து கொள்ள வேணும். அவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்க இங்கிருந்து அரசியல் அதிகாரம் தனித்தேசம் என்ற உசுப்பல்கள் அவர்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்காது.

பெயரில் மட்டும் தான் மண்வாசம்.

தங்களுடைய இலட்சியத்திற்காக சிலுவை சுமக்கும் போராளிகளை பற்றி கதைக்க எமக்கு எந்த தகுதியும் இல்லை.முடிந்தால் மக்களுக்காக ஏதாவது செய்யுங்கள்.

தமீழீழ மக்களுக்கு எதிரான போரை இந்திய ஆளும் வல்லாதிக்கம் ஏன் காலாம் காலமாக நடாத்தி வருகிறது என்பதைப் புரிந்து கொண்டால் , தமிழரின் தோழமைச் சக்திகள் இந்திய உபகண்டத்தில் யார் யார் என்பது தெளிவாகப் புரிந்து விடும்.

இந்தியா எமைக் காக்கும் என்னும் பொய்யுரையை நம்பி நம்பியே தமிழர்களின் போராட்டாம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தோற்கடிக்கப் பட்டுள்ளது.போலித் தமிழ்த்/திராவிட தேசிய முகமூடி அணிந்து, தம்பிக்கு மடல் வரையும் சுய நல அரசியல் வாதிகளை நம்பி நடந்து ஏமாறுவதை விட, இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து மக்களின் பலத்தில் நின்று போராடும் மாவோக்களையும் தலித்துக்களையும், இந்திய காலனிதுவத்தால் அடக்கப்படும் அசாமிய, மணிபூரிய, காஸ்மிரிய தேசிய இன விடுதலைப் படைகளுடன் இணைந்து நாடாத்தப்படும் போரே இந்திய உபகண்டத்தில் அடக்கப்படும் மக்களுக்கான் விடுதலையைத் தரும்.

ஈழத் தமிழர்களின் பொருளாதார பலமும், புலிகளின் தொழில் நுட்பத் திறனும், இந்தியா எங்கும் அடக்கப்படும் மக்களின் விடுதலை அமைப்புக்களின் பூகோள ரீதியான பரவலும் , ஒரு ஒன்று பட்ட போராட்ட வழி முறையின் கீழ் இணைந்து போராடு வதே இந்திய வல்லாதிக்கத்தைத் தோற்கடிப்பதற்கான் ஒரே வழி முறை.தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதாக் கட்ச்சிகளின் சுய நல அரசியலால் சீரழிக்கப்பட்டுள்ளது.இந்தப் பலவீனமான அடித்தளத்தில் இருந்து எம்மால் போராட முடியாது.தேசிய இனங்களின் சுய நிர்ணயம், தேசியப் பொருளாதார வளர்ச்சி, சமுதாய சமத்துவம்,சமதர்மம்,ஜனாயாகம் என்னும் அட்டிப்படையில் இந்திய உபகண்டத்தில் கட்டி எழுப்பப்படும் ஒரு கூட்டு முன்னணியினாலையே தமீழீழ விடுதலை என்பது சாத்தியப்படும்.

புலம் பெயர் தமிழர்கள் புலம் பெயர் தேசங்களில் இதன் அடிப்படையிலையே தமது போராட்ட வழிமுறையையும் மாற்றி அமைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.