Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்க குழு தலைவராக சிவத்தம்பி

Featured Replies

இவரைப் பற்றி பெரிதாக எனக்குத் தெரியாது அதைவிட ஈழத்து தமிழர்கள் என்றவகையில் எப்படி இதை எதிர்கொள்கின்றீர்கள்?

சிலர் சில கருத்துக்களை தட்ஸ் தமிழில் வைத்துள்ளனர் வாசிக்க.

என் கருத்து இது க...க...க...கருணாநிதி செய்யும் மோசடி என்றே சொல்வேன்.291009%20003.jpg

கருணாநிதியும் கனிமொழியும் செய்யும் துரோகத்திற்கு தயவு செய்து தமிழைச்சாட்டி யாரும் துணைபோக வேண்டாம்.

ci595417439.JPG

நன்றி globaltamilnews.net

Edited by kssson

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன் நொந்துபோயுள்ள வேளையில் இதற்கு நான் செல்லமாட்டேன் என்று கூறினால் சிவத்தம்பி அவர்கள் கண்ணியத்துக்குரியவராவார். இல்லையேல் தமிழின் பெயர் சொல்லி அந்த இனத்தையே கேவலப்படுத்தும் செயலில் பங்கேற்ற ஒருவராவார். கண்ணியமா கேவலமா? தெரிவு அவர் கையில்.

Edited by காட்டாறு

ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

புத்திஜீவிகள் எந்தவகைத் தாளம் போடப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

புத்திஜீவிகள் எந்தவகைத் தாளம் போடப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

எதிர்ப்பைக் காட்டி எதனைச் சாதிக்கமுடியும்? கோபத்தில் மண் அள்ளித் திட்டினால் எல்லாம் சரியாகிவிடுமா?

தமிழ் நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ள ஒரு கட்சியைப் பகைத்து பெரும்பான்மையான தமிழரின் ஆதரவை இழப்பது தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

கருநாய்நிதிக்கு ஆதரவாக இருந்தாலும் அவனால் எந்தவிதமான பயனும் நமக்கு இருக்கப்போவதில்லை. அவனால் அவன் குடும்பம் மட்டுமே நன்மை பெறும்.

அந்த கேவலமான மனிதனும் தமிழினத்தின் மிகப்பெரும் துரோகியும் வேண்டுமானால் தமிழ் நாட்டுக்கு தலைவனாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால் உலகத் தமிழர்களின் தலைவன் என்ற செத்துப்போன இமேஜை உயிர்ப்பிக்க அவன் போடும் நாடகத்தை ஏற்றுக்கொள்வது.. உலகத்திலேயே கேவலம் வாய்ந்த செயல். ஈழத்தமிழர்கள் அதற்கு ஒத்துழைத்தால் அது விபச்சாரத்திலும் கேவலமானது.

சகோதர யுத்தம்!

போர் நின்றுவிட்டது!

மழை நின்றும் தூவானம் விடாதல்லவா!

இலங்கை தமிழர்கள் சிங்களவரின் இரக்கத்தைப் பெற்று வாழவேண்டும்!

இலங்கை தமிழர்களின் வாழ்க்கை செழிக்கிறது!

இப்படி எல்லாம் நம்மை கொச்சைப் படுத்திய நாயை நாம் அரவணைக்க வேண்டுமென்றால்...? அதிலும் பார்க்க தமிழ் மொழியை தூக்கி எறிந்துவிட்டு சிங்களவராக மாறி மகிந்தவின் காலை நக்கி வாழலாம்.

ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிர்ப்பைக் காட்டவேண்டும்.புத்திஜீவிகள் எந்தவகைத் தாளம் போடப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

எதிர்ப்பைக் காட்டி எதனைச் சாதிக்கமுடியும்? கோபத்தில் மண் அள்ளித் திட்டினால் எல்லாம் சரியாகிவிடுமா?தமிழ் நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ள ஒரு கட்சியைப் பகைத்து பெரும்பான்மையான தமிழரின் ஆதரவை இழப்பது தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

இந்நகாலகட்டத்தில் ஆருமையாக காய் நகர்துகிறார் கருனாநிதி அதில்யார் தமிழ் உலகை தம்வசம் கவருகிறார்களோ... யாம் அறியோம்..:lol:

மெய் பொருள்காண்பது அறிவு.... இதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.... :)

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியலை உணராமல் யுத்தத்தின் இறுதி நாட்களின் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துப் பாடியவர்கள்தாம் நாம். இந்திய அரசியலை, உலக அரசியலை உணராமல், இராஜதந்திர ரீதியில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாமல் ஒபாமா காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொடுத்து முள்ளிவாய்க்காலில் அழிவு ஏற்படக் காரணமாக இருந்துவிட்டு தற்போது கோபம்கொண்டு எல்லோரையும் அழிந்து போகுமாறு சாபம் கொடுக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதால் தமிழுக்கு பெரிய இழப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை.ஆனால் கருணாநிதிக்கு ஈழத்தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்.அவர் கலந்து கொண்டால் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி இருக்கும்.தமிழன் இல்லா விட்டால் தமிழை வளர்த்து என்ன இலாபம். சுத்தமான தமிழன் இங்கே செத்துக் கொண்டிருக்கிறான்.தொடரந்து 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டு மக்களை தமிங்கிலம் பேச வைச்சதுதான் அவர் தமிழ் வளர்த்த இலட்சணம்.கருணாநிதி தமிழை வளர்க்கவி;ல்லை. தமிழே அவரை வளர்த்தது.மக்கள் செல்வாக்குள்ள ஒருவரைப் பகைப்பதால் என்ன இலாபம் என்று கேட்பவர்களே இதுவரையில் அவரால் எமக்கு கிடைத்த இலாபத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.பேராசிரியர் கலந்து கொள்வதால் தான் அனுப்பிய தூதுக்குழுவின் முயற்சியால் மக்கள் விடுதலை பெற்று இன்பமாக வாழுகிறார்கள்.அதற்கு இவரே சாட்சி என்று பிரச்சாரப் படுத்தத்தான் இது உதவப் போகிறது.கடைசி நேரத்தில் ஈழத்தமிழர்கள் பெரிதும் மதிக்கின்ற பேராசிரியர் தன் மதிப்பைக் கெடுத்துக் கொள்ள மாட்டார் என்றே எதிர்பார்ப்போம்.ஆய்வரங்கத்தின் தலைமைப் பதவி கொடுப்பதே இறால் போட்டு சுறா பிடிக்கத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு அரசியலை உணராமல் யுத்தத்தின் இறுதி நாட்களின் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துப் பாடியவர்கள்தாம் நாம். இந்திய அரசியலை, உலக அரசியலை உணராமல், இராஜதந்திர ரீதியில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாமல் ஒபாமா காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொடுத்து முள்ளிவாய்க்காலில் அழிவு ஏற்படக் காரணமாக இருந்துவிட்டு தற்போது கோபம்கொண்டு எல்லோரையும் அழிந்து போகுமாறு சாபம் கொடுக்கின்றோம்.

இந்த கரிநாய்நிதியை கெஞ்சி மன்றாடி கண்ணீர் மல்கக் கேட்டும் எதுவும் செய்யாத கையறு நிலையில் தான் அந்த அம்மாவினூடாகவாவது ஏதும் நடக்காதா என ஏங்கினோம்.

தயவு செய்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.

பேராசிரியர் இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதால் தமிழுக்கு பெரிய இழப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை.ஆனால் கருணாநிதிக்கு ஈழத்தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்.அவர் கலந்து கொண்டால் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி இருக்கும்.

:lol::):D

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன குழந்தைக்கு கூட தெரியும் கருணாநிதி எப்படி பட்ட பச்சோந்தி என்று.. :lol:

இன்று கனடிய வானொலி சிரிஆரில் சிவத்தம்பி தனது சுயரூபத்தை விலாவாரியாகக் காட்டியிருக்கின்றார்

புலிகளுக்கும் புலம் பெயர் மக்களும் வெத்து வேட்டுகளாம் தனக்குத் தான் அரசியல் சாணக்கியம் இருக்குதாம்

அதை ஏன் இவ்வளவு காலமும் காட்டவில்லை ? தமிழக கருணாவின் அழைப்பிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாரோ ?

இதை போல் இன்னும் பல கருணாக்கள் இங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன இது கருணாக்கள் துயிலுரியும் காலம்

இந்த பேய் ஆசிரியர்கள் விட்ட தவறினால் தான் பிரபாகரன் உருவானார்

தமிழ்நாட்டு அரசியலை உணராமல் யுத்தத்தின் இறுதி நாட்களின் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துப் பாடியவர்கள்தாம் நாம். இந்திய அரசியலை, உலக அரசியலை உணராமல், இராஜதந்திர ரீதியில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாமல் ஒபாமா காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொடுத்து முள்ளிவாய்க்காலில் அழிவு ஏற்படக் காரணமாக இருந்துவிட்டு தற்போது கோபம்கொண்டு எல்லோரையும் அழிந்து போகுமாறு சாபம் கொடுக்கின்றோம்.

உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டலாமே ? அல்லது சொல்லலாமே ?

பேராசிரியர் சிவத்தம்பி மதிப்புக்குரிய மனிதராக இருக்கின்றார். இருப்பார் என்றும் நம்புவோம்

பேராசிரியா சிவத்தம்பியின் பால் உயரிய மதிப்பும் அன்பும் உள்ளவன். ஒரு சில வெட்கம் கெட்ட பதவிகளுக்காக கேடு கெட்ட அசிங்க அரசியல் வாதிகளின் கால்களில் மண்டியிட்டு எமது மண்ணின் மானத்தை காற்றில் பறக்க விட மாட்டார் என்றே நம்பவோம். தனது சுயநலன்களுக்காக எதையும்,எதையும் செய்யக் கூடிய கோமளி இந்த கருணாகம். புரிந்து கொண்டு விலகுவதே நல்லது அல்து சிவத்தம்பியும் எம் எண்ணங்களில் இருந்து தூக்கி எறியப்படுவார். இன்று மொழியல்ல அந்த மொழிபேசும மக்களின் வாழ்வே முக்கியம். தமிழன் அழிந்த பின் தமிழ் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

tamilsvoice

Posted Today, 06:55 AM

இன்று கனடிய வானொலி சிரிஆரில் சிவத்தம்பி தனது சுயரூபத்தை விலாவாரியாகக் காட்டியிருக்கின்றார்

புலிகளுக்கும் புலம் பெயர் மக்களும் வெத்து வேட்டுகளாம் தனக்குத் தான் அரசியல் சாணக்கியம் இருக்குதாம்

அதை ஏன் இவ்வளவு காலமும் காட்டவில்லை ? தமிழக கருணாவின் அழைப்பிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாரோ ?

இதை போல் இன்னும் பல கருணாக்கள் இங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன இது கருணாக்கள் துயிலுரியும் காலம்

இந்த பேய் ஆசிரியர்கள் விட்ட தவறினால் தான் பிரபாகரன் உருவானார்

இதைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப்பொறுத்தவரையில் சிவத்தம்பிசேர் ஒரு மேதை பதவிக்காகப் பணிந்து போகாதவர். தனிப்பட்டவிதத்தில் நான் அவரை அறிந்தவன். அவர் என் ஆசிரியர் என்பதற்காகச் சொல்லவில்லை. பொதுவாக அவரின் இயல்பு அது. "மானுடத்தின் தமிழ்கூடல்" நிகழ்வின் தலைமைப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட காரணம் என்ன? தேவையற்ற சொற் பிரயோகங்களை விடுத்து நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.

எதிர்ப்பைக் காட்டி எதனைச் சாதிக்கமுடியும்? கோபத்தில் மண் அள்ளித் திட்டினால் எல்லாம் சரியாகிவிடுமா?

தமிழ் நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ள ஒரு கட்சியைப் பகைத்து பெரும்பான்மையான தமிழரின் ஆதரவை இழப்பது தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

:lol: அதை விட இந்தியாவில செல்வாக்கு பெற்ற காங்கிரஸுடன் கூட்டு வைச்சால் தமிழருக்கு நல்லம் .மத்திய பாதுகாப்பு அமைச்சர் தமிழன் சிதம்பரத்துடன் உறவை வளர்க்க வேண்டும் .உந்த கருனாநிதி.திருமா.வைகோ ,நெடுக்ஸ் எல்லாம் சும்மா தமிழ் என்று கத்தத்தான் லாயக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனடிய வானொலி சிரிஆரில் சிவத்தம்பி தனது சுயரூபத்தை விலாவாரியாகக் காட்டியிருக்கின்றார்

புலிகளுக்கும் புலம் பெயர் மக்களும் வெத்து வேட்டுகளாம் தனக்குத் தான் அரசியல் சாணக்கியம் இருக்குதாம்

அதை ஏன் இவ்வளவு காலமும் காட்டவில்லை ? தமிழக கருணாவின் அழைப்பிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாரோ ?

இதை போல் இன்னும் பல கருணாக்கள் இங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன இது கருணாக்கள் துயிலுரியும் காலம்

இந்த பேய் ஆசிரியர்கள் விட்ட தவறினால் தான் பிரபாகரன் உருவானார்

தங்களுக்கு ஒத்தூதாத எல்லோருக்கும் இலகுவாகக் கொடுக்கக் கூடிய பட்டங்கள்/முத்திரைகள் நிறையவே வைத்துள்ளீர்கள். இவ்வளவு அவலத்திற்குப் பின்னும் இன்னும் மாறாத விடாக்கண்டன் / கொடாக்கண்டன் பேச்சுக்களால் யாரை உய்ய வைக்கப்போகின்றீர்கள்?

எல்லோரையும் திட்டிமுடிந்த பின்னர், ஆளில்லாமம் உங்களையே திட்டிக்கொண்டிருக்கப் போகின்றீர்கள். அதற்கான சந்தர்ப்பங்கள்தான் அதிகம் உள்ளன.

உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டலாமே ? அல்லது சொல்லலாமே ?

கருத்துக்களைச் சொல்ல விண்ணர்களாக இருக்கவேண்டியதில்லை. முட்டாள்களுக்கும் கருத்து உண்டு. முட்டாள்தனமான கருத்துக்கள் என்று விரும்பினால் எடுத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அதை விட இந்தியாவில செல்வாக்கு பெற்ற காங்கிரஸுடன் கூட்டு வைச்சால் தமிழருக்கு நல்லம் .மத்திய பாதுகாப்பு அமைச்சர் தமிழன் சிதம்பரத்துடன் உறவை வளர்க்க வேண்டும் .உந்த கருனாநிதி.திருமா.வைகோ ,நெடுக்ஸ் எல்லாம் சும்மா தமிழ் என்று கத்தத்தான் லாயக்கு :)

ஆறு/எட்டு கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் உதிரிக் கட்சிகளை மாத்திரம் நம்பித்தானே நந்திக்கடலில் சகலதையும் இழந்தோம். இந்திய அதிகார வர்க்கத்தினை மீறி எதனையும் செய்யமுடியாது என்பதை அறிய கடந்த மாவீரர் தின உரையை மீண்டும் படிக்கவும்.

  • தொடங்கியவர்

கிருபனைத் தவிர்த்து அனைவரும் ஒருமித்த கருத்தை கூறியுள்ளீர்கள். இதற்காக கிருபனை தவறு என்று கூறுவதை விட இன்னமும் யதார்த்த சிந்தனையை வளர்க்க வேண்டும் என்றே கூறுகின்றேன். எடுத்துக்காட்டாக தி மு க வின் தயவை நாடுவதும், செயலலிதாவிடம் சென்றதை சாடுவதும். சென்ற 2007 தமிழ்செலவன் அண்ணா படுகொலையில் கவிதை எழுதி அச்சடித்து தமிழகமெங்கும் ஒட்டி மீண்டும் ஒட்டியதை கிழித்தது முதல் இன்று உலகத் தமிழ் மாநாடு என துவங்கி பின் அதை உலக செம்மொழி மாநாடு என்று திரிவு செய்தது வரை தமிழன் இந்த ஈடு இணையற்ற தலைவனால் அதுகாலும் பட்ட இன்னலைவிட 2 ஆண்டுகளில் பட்டுக்கொண்டிருக்கும் இன்னல்கள் அளப்பறியது.

செயலலிதாவிடம் சென்றது...ஓர் தவறுதான் ஆனால் நம் நிலை? எப்படியாவது ஆயிரமாயிரம் அன்றாடல் கொலையுறும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒர் உந்தல், துடிப்பு...அந்த நேரத்தில் எதுவும் தெரியாது கண் இருண்டுதான் இருந்தோம்...செயலலிதா நமக்கு இன்றும் என்றும் எதிரிதான் ஆனால் கருணாநிதி போல் துரோகியல்ல...

என் வேண்டுகோள் ஏன் நாம் அனைவரும் சேர்ந்து சிவத்தம்பி அய்யாவிடம் எடுத்துக் கூறி அவரை இதில் கலந்து கொள்ளாது இருக்க செய்ய இயலாது?

அவரின் தொடர்பு மின்னஞ்சலோ தொலை பேசி எண்ணோ தந்தால் நன்றாக இருக்கும்.

என்னுடைய விருப்பமெல்லாம் தமிழக கருணா சீக்கிரம் மண்டையைப்போட வேண்டும் திருந்துவான் திருந்துவான் என்று எதிர்பார்த்தோம் திருந்தவில்லை இயற்கையாவது அழைத்துக்கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க பணிக்குழு தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி நியமனம். (நியமனத்தை உறுதிப்படுத்தும் கடிதத் தலைப்பு இணைப்பு)

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16444&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனைத் தவிர்த்து அனைவரும் ஒருமித்த கருத்தை கூறியுள்ளீர்கள். இதற்காக கிருபனை தவறு என்று கூறுவதை விட இன்னமும் யதார்த்த சிந்தனையை வளர்க்க வேண்டும் என்றே கூறுகின்றேன். எடுத்துக்காட்டாக தி மு க வின் தயவை நாடுவதும், செயலலிதாவிடம் சென்றதை சாடுவதும். சென்ற 2007 தமிழ்செலவன் அண்ணா படுகொலையில் கவிதை எழுதி அச்சடித்து தமிழகமெங்கும் ஒட்டி மீண்டும் ஒட்டியதை கிழித்தது முதல் இன்று உலகத் தமிழ் மாநாடு என துவங்கி பின் அதை உலக செம்மொழி மாநாடு என்று திரிவு செய்தது வரை தமிழன் இந்த ஈடு இணையற்ற தலைவனால் அதுகாலும் பட்ட இன்னலைவிட 2 ஆண்டுகளில் பட்டுக்கொண்டிருக்கும் இன்னல்கள் அளப்பறியது.

செயலலிதாவிடம் சென்றது...ஓர் தவறுதான் ஆனால் நம் நிலை? எப்படியாவது ஆயிரமாயிரம் அன்றாடல் கொலையுறும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒர் உந்தல், துடிப்பு...அந்த நேரத்தில் எதுவும் தெரியாது கண் இருண்டுதான் இருந்தோம்...செயலலிதா நமக்கு இன்றும் என்றும் எதிரிதான் ஆனால் கருணாநிதி போல் துரோகியல்ல...

என் வேண்டுகோள் ஏன் நாம் அனைவரும் சேர்ந்து சிவத்தம்பி அய்யாவிடம் எடுத்துக் கூறி அவரை இதில் கலந்து கொள்ளாது இருக்க செய்ய இயலாது?

அவரின் தொடர்பு மின்னஞ்சலோ தொலை பேசி எண்ணோ தந்தால் நன்றாக இருக்கும்.

நல்லது. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றேன்.

கலைஞர் கருணாநிதி நல்லவர் என்றோ அவர் நடாத்தும் செம்மொழி மாநாட்டுக்கு பேராசியர் போகவேண்டும் என்றோ நான் கருத்து வைக்கவில்லை.

தமிழகத்தில் அதிக மக்களாதரவு உள்ள கட்சியொன்றினைப் பகைத்து நமக்கு எதுவித லாபமுமில்லை என்பதுதான் சொல்லக்கூடியது. அதற்காக கலைஞருக்கு வக்காலத்து வாங்கமுயற்சிக்கவில்லை.

கிருபன், அதிக மக்களாதரவு என்பது, மக்களை அறிவிலிகளாக்கி வைத்ததால் ஏற்பட்ட இலாபம்... அது நிரந்தரமானது அல்ல. ஆனால் அறிஞர்களையும் அறிவிலிகளாக்க முடியுமென்றால்...?

நீங்கள் வேறு இடுகையில் கூறிய 50,000 மக்கள் கொலையுண்டதையும் 31/2 இலட்சம் மக்கள் முள்வேலியில் அடைபட்டதையும் (சிவத்தம்பி அய்யா)இவர் தான் மறக்கின்றார் போலும்...அப்படியென்ன நன்னிலை உள்ளது தலைமை பொறுப்பேற்க்க? மேலும் நாம் துயர சூழலில் இருக்கும் போது (என்னதான் எங்கள் மாநகரில் நடப்பதாக இருந்தாலும்)இந்த மாநாடே அருகதையற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கீழே இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பும் , செம்மொழி ஆராய்ச்சியை பற்றியது. மேலும் வாசிக்க .....

இணைப்பில் ஒரு முறை கிளிக் பண்ணவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65424&view=&hl=&fromsearch=1

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்க பார்த்தா செத்தமொழி ஆராய்ச்சிதான் தமிழுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.