Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் நிலையை எண்ணி நான் மவுனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது: கலைஞர் உருக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக முதல்வர் கருணாநிதி தமிழீழ போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், நக்கீரன் இதழுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில் ரணில் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

2005 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோல்வி அடைய சுமார் 7லட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாத நிலைதான் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின?எங்கே போய் முடிந்தன?என்பதை எண்ணிப்பார்த்து நான் மவுணமாக அழுவதை யார் காதில் விழப்போகிறது.

நம்முடைய மவுன வலிதான் யாருக்கு தெரியப்போகிறது? என்று முதல்வர் கருணாநிதி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20921

ஈழத்தமிழர்களுக்காக பாடுபடவேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய்விட்டார்களே:கலைஞர் ஆதங்கம்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ஈழத்தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து இலங்கை பிரச்சனைக்காக திமுக நடத்திய அறப்போரட்டங்களும், எடுத்த வாதப்போராட்டங்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையும் தூக்கி எறிந்த நிலைகளையும், இரு முறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களையும் நினைவூட்டியுள்ளார்.

நக்கீரன் இதழுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்ததோடு, 2005ல் நடந்த அதிபர் தேர்தலின் போது பிரபாகரன் தமிழ் மக்களை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடச்செய்தார் என்று சொல்லியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார்.

ரணில் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கடைபிடிக்காததுதான் தோல்விக்கு காரணம்என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தமது உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் நான் இதை எழுதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

கலைஞரை நினைத்து சிரிக்கிறதா அழுகிறதா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

5 வருட கதையை இப்போ வடுகிறார்

இவர் நினைத்திருந்தால்..............

இந்த வருடத்தில்

5மாதத்தன் முன்பு

5 நிமிடத்தில் எல்லோரையும் காப்பாற்றியிருக்கலாம்.......

கலைஞர்

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.உங்கள் திரைக் கதை வசனம் இப்போ இப்படிப் போகிறதா..?ஓ மௌனக் கண்ணீர் விடுகிறியளா...நீங்களா..எங்களுக்காக ஆ..ஆ..ஆ இது உலகத்தில் 8வது அதியசயமுங்கோ. :):)

தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தமது உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் நான் இதை எழுதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

அது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை. சில வேளை நிறைந்த ஆயுளுடன் இருந்தும் தமிழர்களின் உயர்வுக்கு ஏதும் பாடுபடாத தன்னை நினைத்து சொன்ன ஒப்புதல் வாக்குமூலமோ இது?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க

கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,

கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க

சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!

உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து

செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ

கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,

தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க

துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,

ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட

தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்

சப்பாணிக் கழுதையே - இனி

எப்போதும் மறவாது தமிழினம் - உனை

எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!

தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,

முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்

முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்

சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!

எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்

வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்

சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்

சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று

உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்

மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை

உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்

ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்

அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை

கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்

இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!

தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!

முடிந்தது உன் ஆட்சி!

மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!

அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை

அப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!

அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!

அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!

அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது

சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

:):)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் அனுப்பிவைத்தான் பாரப்பா

தமிழர்களை அழித்துவிட்டான் டெல்லிக்காரன் தானப்பா

கருனாநிதி கதைப்பதெல்லாம் பொயயப்பா

அந்தக் கபடனைனே நம்பவேணடாம் நீயப்பா.

அவன் மிகவும் மோசமான தே.. பயல் கேளப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வெளியில் தெரிய அழுதால் சோனியா கோவித்து விடுவாளா? காங்கிரஸ் இப்பொழுது திமுகவை மதிப்பதில்லை.அடத்த தேர்தலில் அதைக் கழட்டி விட்டு அடுத்த தேர்தலைச் சந்திக்கவேண்டி வந்தாலும் என்று இப்பவே அத்திவாரம் போடுகிறார். சோழியன் குடுமி சும்மா ஆடாதப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழடு வேறை என்னத்துக்கோ பிளான் பண்ணுது.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வறிக்கையில், ஈழத்தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து இலங்கை பிரச்சனைக்காக திமுக நடத்திய அறப்போரட்டங்களும், எடுத்த வாதப்போராட்டங்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையும் தூக்கி எறிந்த நிலைகளையும், இரு முறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களையும் நினைவூட்டியுள்ளார்.

உலகில் மிகவும் குறைந்த நேரம் (3 மணித்தியாலம்) சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து சாதனை பெற்ற கலைஞர் எத்தனை காலம் தான் ஈழத்தமிழர்களுக்காகப் பதவி இழந்ததாகச் சொல்லப்போகிறார்?

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

- சே.பாக்கியராசன்

கீற்று

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி

கிழடு வேறை என்னத்துக்கோ பிளான் பண்ணுது..... இவன்ட அக்கபோர் தாங்கமுடியலலலலலலலலலல முடியலலலலலலல

karunanithi-6hours-hunger-strike.jpg

தலைமாட்டில் இருப்பது மனைவி மற்றவர் துனைவியாம்... கலைஞர் அதையாவது உருப்படியா செய்தாரே...

  • கருத்துக்கள உறவுகள்

தலைமாட்டில் இருப்பது மனைவி மற்றவர் துனைவியாம்... கலைஞர் அதையாவது உருப்படியா செய்தாரே...

ஐயோ

ஐயோ

எதில சந்தேகப்படுறது என்றே தங்களுக்கு தெரியல

எனக்கு சரியான வெட்கமா இருக்கு......

இதில உருப்படியா என்று கேள்வ வேற.....

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் நிலையை எண்ணி நான் மவுனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது: கலைஞர் உருக்கம்

யார் காதிலயும் விழாது..! ஏனெண்டால் உண்மையில் அழுதால்தானே சத்தம் வாறதுக்கு? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் மவுனவலியும் கருணாநிதியின் முதுகுவலியும்!

‘நாம்’ மற்றும் ‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு’ என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. இதுகிட்டத்தட்ட கருணாநிதி ஆதரவாளர்களால் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்வாகவே தெரிகிறது. ‘நக்கீரன்’கோபால் புத்தகவெளியீட்டில் கருணாநிதிக்கு வாழ்த்துப்பா இயற்றியதாக தெரிகிறது.

முன்னர் “சகோதரயுத்தம்” என்று சுருங்கசொல்லி விளங்கவைத்ததை இப்பொழுது விளாவரியாக எழுதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழினதலைவர் கருணாநிதி. விடுதலைபுலிகளின் தவறான முடிவுகளே ஈழத்தமிழர்களின் துயரிற்கு காரணம் என்றும் ஈழத்தமிழர் நிலை குறித்து தான் மவுனமாக அழுவதாகவும் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் அரைப்பக்கத்தை அந்த அறிக்கைக்கு ஒதுக்கி இருக்கின்றன. ஈழத்திற்கு தனது கட்சியும் தானும் செய்த உதவிகளை வழமை போலவே பட்டியலிட்டிருக்கிறார். எல்லாம் குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பானவை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்படியே சகோதரயுத்தம் பற்றி நீட்டி முழங்குகிறார். போராளி இயக்கத்தில் “முதல் துரோகி” என்று அடையாளம் கானப்பட்டவரும் பிரபாகரனை சுட்டார் என்று ‘இந்து’ பத்திரிக்கையால் புகழாரம் சூட்டப்பட்ட மாத்தையாவை மாவீரன் “மாத்தையா” என்று பட்டம் கொடுத்திருக்கிறார். கருணாவோடு புலிகள் சண்டை போட்டதை வருத்தத்துடன் கூறும் கருணாநிதி. அப்படியே ரணில் போல வருமா? என்கிறார் கருணாவோடான சகோதரயுத்தத்தின் சூத்திரதாரி ரணில் என்று தலைவருக்கு தெரியாது போல!

sidmparamஇப்படியே பக்கத்துக்கு பக்கம் நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கலாம். அதனால் பலன் ஒன்றும் இல்லை. இவருக்கு எப்பெல்லாம் மவுனவலி வரும் எப்பெல்லாம் முதுகுவலி வரும் என்று தமிழனுக்கு தெரியாதா என்ன? இவ்வளவு நீண்ட கடிதத்தில் சிங்களவனின் இனப்படுகொலை பத்தி ஒருவரிகூட தேடினாலும் கிடைக்காது. ராஜீவ் ஈழத்தமிழர்கள் பிரச்சனை என்ன என்று எனக்கு விசாரித்து சொல்லுங்கள் நான் “தீர்த்து வைக்கிறேன்” என்று சொன்னாராம் அதுவும் ராஜீவ்-விகரமசிங்கே ஒப்பந்தத்திற்கு பிறகு. ராஜீவ் அதற்கு முன்னரே “பிரபாகரனை போட்டுதள்ளு!” என்று உத்தரவிட்டது தலைவருக்கு தெரியாது போலும்.

மவுனமாக அழுவதாக சொல்லுகிறார் ஈழத்தை நினைத்தா? அல்லது எப்படியும் காங்கிரசு நம்மளை கலட்டி விட்டுருவானுங்க போல தெரியுதேன்னா? யாமறியோம். சத்தமாக அழுதால் முதாலளியம்மா கோவிச்சுவாங்க போல. இந்தியரசிற்கும் ஈழத்தமிழர் துயரிற்கும் எவ்விததொடர்பும் இல்லை எல்லாம் புலிகள் எடுத்த முடிவுகளே காரணம் என்றும் கதைவிட்டுட்டு இருக்கார்.அப்படியே இனவெறியன் ராசபக்சேவிற்கும் அவனது தளபதிக்கும் பிரச்சனை என்றால் பிராணாப் உடனே ஓடோடி சென்று பஞ்சாயத்து பண்ணுகிறாரே அது ஏனென்று நம்ம தமிழின தலைவர் விளக்கின நல்லது . “கலைஞர் சொன்னதில் என்ன பிழை இங்கே இருக்கிற உணர்வாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்….” என்று சுபவீக்கள் விளக்கம் அளிப்பார்கள்.

முழுக்கமுழுக்க திராவிடகொள்கைகள் நீர்த்துபோன, தமிழ் இனமே அழிந்தாலும் தன் குடும்பமே தனக்கு முக்கியம் என்று சுருங்கிப்போன கருணாநிதியுடன் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். ஈழத்தில் சுமூகநிலை, அகதிமுகாம்கள் அருமை என்றெல்லாம் முன்னர் மவுனமாக சிரித்தவர் “எல்லா பிரச்சனைக்கும் புலிகளே காரணம்!” என்று இன்று மவுனமாக அழுதிருக்கிறார். துரோகிகளை அடையாளம் கண்டுகொள்வதொடு துரோகிகளின் கூட்டாளிகளையும் அடையாளம் காணவேண்டியது தமிழர்களின் கடமை.

— தமிழன்பன்

http://www.meenagam.org/?p=16676

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களின் வேதனை – மீனகம் கனி

மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆகின என்று எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது”என்று கூறியிருக்கிறார். பிஞ்சு குழந்தைகள் தலை,கால், கை என அங்கங்கள் சிதறுண்டு முடங்களாக கிடக்கும்போது,… கன்னிப் பெண்கள் சிங்கள காமப் பிசாசுகளால் மேயப்பட்டு வெளியாக கிடக்கும் போது, எம் அண்ணாக்கள் மனச்சாட்சியற்ற கொலைவெறியர்களால் கை,கால்கள் கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்படும் போது எல்லாம் வடிக்காத முதலைக் கண்ணீரை விடுதலைப்புலிகள் அரசியலில் எடுத்த முடிவின் விளைவுகளை எண்ணி வடித்தார் என்று சொல்வது கலைஞர் தான் ஒரு அரசியல் நடிகர் என்பதை உலகிற்கு பறை சாற்றுவதாகவே தெரிகிறது.

“விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது” நேரடியாகவே கலைஞரை கேட்கும் கேள்வி எமது பாதுகாவலரான தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிற்கு நீங்கள் வழங்கிய ஆதரவு என்ன? அது மிக லேசாக தெரிந்தது என்றால் அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லுங்கள். அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் புலித்தேவன் போன்றவர்களின் மரணத்துக்கு நாங்கள் தான் காரணம் என்று. அதை விட்டு ஏதோ ஆதரவு வழங்கினோம் என்று மக்களை ஏமாளிகள் ஆக்காதீர்கள்.

எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையே வேலையாக வைத்து அரசியல் நடத்தும் நீங்கள் தமிழகத்தமிழர்களிற்கு என்ன உரிமையை வாங்கி கொடுத்திருக்கிறீர்கள். இலவச தொலைக்காட்சி, துவிச்சக்கரவண்டி என்று சொல்லி பணத்தை கொடுத்து மக்களை அதிகாரத்துக்கும் பணத்துக்கும் பணிய வைத்து ஆட்சி நடத்துகிறீர்களே தவிர நீதியையும் அவர்களின் உண்மையான உரிமைகளையும் மறைத்து தமிழக மக்களை ஒரு மாய வலைக்குள் தான் வைத்திருக்கிறீர்கள். காவேரி நீருக்கு பிரச்சனை, முல்லைப்பெரியார் அணை பிரச்சனை, கிருஷ்ணா நீர் பிரச்சனை என்று அத்தியவசியமான தண்ணீர் தமிழக மக்களுக்கு கிடைப்பதே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து கொண்டிருக்கும் சூழலில் கேட்டால் நான் தந்தி அனுப்பிகிறேன் என்று மட்டும் கூறி மௌனமாகிவிடுகிறீர்கள்.

உங்களின் இந்த செயற்பாடுகளால் மௌனமாக அழவேண்டியவர்கள் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தானே தவிர நீங்கள் இல்லை. எமது தமிழக உறவுகளிற்கு நாளை குடிக்க தண்ணீர் இல்லையே என்ன செய்யப்போகிறார்களோ என்று மௌனமாக அழுதுகொண்டிருக்கிறோம் நாங்கள். எமது தேசிய தலைவரை விமர்சிக்குமளவிற்கு அவரிற்குள்ள மக்களின் மீதான பற்று உங்களிற்கு இல்லை என்றே நான் கருதுகின்றேன்.

“தமிழர்களின் கோரிக்கை என்னவென்று சொல்லாமல் இழுத்தடித்தார் பிரபாகரன்” என்று கூறியிருக்கிறீர்கள் கோரிக்கை என்னவென்று சொல்லாமலா தமிழீழம் தமிழீழம் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு மாவீரனையும் களத்திற்கு அனுப்பினார். அதைவிட தமிழீழக் கனவோடும் கோரிக்கையோடும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பல பேச்சுவார்த்தைகளிற்கு ஆட்களை அனுப்பி வைத்து சமாதானத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க சிங்கள இனவெறியனுடன் பேச்சு நடத்தி எம்மினத்தை கொச்சைப்படுத்தி காட்டிக்கொடுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறாரே எம்மினத்துரோகி கருணாவை பார்த்தும் கூடவா உங்களால் இப்படியெல்லாம் கூறமுடிகிறது! இதை கூறும் நீங்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களின் கோரிக்கை என்னவென்று தெரிந்தாவது வைத்திருக்கிறீர்களா?

சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் வரப்போகும் சீன ஆட்சியை தடுப்பதற்காக ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் இப்படி பேசியாவது ரணிலை மயக்கும் திரைக்கதை வசனமா கலைஞரே “தமிழ் மக்களை தேர்தலில் வாக்களிக்க விட்டிருந்தால் ரணில் வெற்றி பெற்றிருப்பார். அவர் சமாதானத்தை கொண்டு வந்திருப்பார்” என்று நீங்கள் கூறுவது. நீங்கள் சொல்லுவதைக் கேட்பதற்கு, நாம் தலைவரை உங்கள் அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளவில்லை. முப்பது வருட தலைமுறை தலைமுறையாக தலைவரின் நடவடிக்கைகள், வழிகாட்டல்கள் என நேரடியாக அனுபவித்தவர்கள் நாங்கள். தலைவருக்கு தூரநோக்கு பார்வை இல்லை. போரில் வீரம் இருந்ததே தவிர விவேகம் இல்லை என்றெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டிய தேவை உங்களிற்கும் இல்லை. நீங்கள் சொல்லி கேட்க வேண்டிய தேவை எங்களிற்கும் இல்லை.

முப்பதாண்டு காலத்திற்கு மேலான யுத்தத்தில் எத்தனை எத்தனை அனுபவத்தை பெற்ற எம் தலைவருக்கு உங்களை மாதிரி பணத்துக்காகவும் பதவிக்காகவும் பணிந்து போக மட்டும் தெரியாதே தவிர எம் இனத்தின் அடுத்த தலைமுறை எவ்வாறு வாழப்போகிறது என்றெல்லாம் அவர் நன்றாகவே அறிந்து வைத்திருக்குமளவிற்கு அவர் தூரநோக்கு பார்வை கொண்டவர். செம்மொழி மாநாடு நடத்துவதற்காகவும் அந்த மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள ஈழத்தமிழ் ஏதிலிகள் வரவேண்டும் அதை வைத்து அரசியல் நடத்தலாம் என்ற எண்ணத்திற்காகவும் 10 கோடியை கொடுத்தவுடன் எமது தலைவரைப் பற்றியோ எம் பாதுகாவலர்களைப் பற்றியோ தவறான அபிப்ராயத்துடன் நீங்கள் அறிக்கை விடுவது திரைப்பட வசனத்திற்கு பொருந்துமே தவிர தமிழீழ மக்களின் உணர்வுக்கு பொருத்தமற்றது.

எமது இனம் சாகத் துடித்துக்கொண்டிருந்த போது ஆயுதத்தோடு உலகநாடுகளிற்கு பதில் சொல்ல நாமிருக்கிறோம் என்ற தைரியத்தையும் கொடுத்து எம்மின அழிவிற்கு ஊக்குவித்து திறப்பு மாதிரி செயற்பட்ட கருணாநிதி அவர்களே, எதற்கெடுத்தாலும் அவர்கள் சகோதர யுத்தம் புரிந்தார்கள் என்று வசை பாடுகிறீர்களே உங்கள் புதல்வர்கள் இருவர் என்ன யுத்தம் புரிந்து தினகரன் பத்திரிகை நிலையம் எரிக்கப்பட்டு மூன்று பேர் தீக்கிரையாக்கப்பட்டார்கள்?…

தமிழக மக்களை ஏமாற்றி சன் தொலைக்காட்சி என்ற அழுகாச்சி சானல்கள்களை ஆரம்பித்து அரசு ஊடகமான தூர்தர்சன் ஊழியர்களை மிரட்டி சன் தொலைக்காட்சிக்கு இழுத்து இந்திய அரசு ஊடகங்களை நலிவடைய வைத்தீர்கள். பின்னர் பல ஊழியர்களை அரச பயங்கரவாதத்தின் மூலம் மிரட்டி கலைஞர் தொலைக்காட்சிக்கு இழுத்தீர்கள். இது சகோதர யுத்தம் இல்லையா….?

இதன் மூலம் வருவாயை தேடியது போதாதென்று ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள உதயன் சூரியா தொலைக்காட்சிகளை நிறுத்தப்படாமல் உங்கள் குடும்பத்தொழில்களை நடத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லாத போது தண்ணீர் பிரச்சனை வரும்போதெல்லம் தந்தி அனுப்பிறதாக சொல்லி கர்நாடகா ஆந்திரா கேரளா அரசுகளுக்காக ஆதரவாக நிற்கிறீர்கள்.

தமிழக மக்களை ஏமாற்றி பல தொழில்களை ஆரம்பித்த நீங்கள் தமிழகத்தின் உரிமைகளையெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்து உங்கள் குடும்ப நிறுவனங்களான சன், சூர்யா, உதயன்… இந்தியாவின் பல மாநிலங்களில் 50 க்கும் மேற்பட்ட வானொலிகளையும் பேணிப்பாதுகாத்து நடத்துகிறீர்களே இது நியாயம்தானா….?

உங்கள் குடும்பச்சொத்துக்களுக்காக தமிழனின் உரிமைகளை அடகு வைத்த கருணா..நிதி அவர்களே உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழினத்தினை மட்டுமே சொத்தாக கொண்டு தன் குடும்பத்தினை தமிழினத்துக்காக அளித்த தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பெயரினை கூறுவதற்கு கூட உங்களுக்கு தகுதி உண்டா என்று சிந்திப்பீர் முதலில்…

கலைஞர் என்ற பட்டத்தினை உங்களுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் எதற்கு சூட்டினார் என்பது இப்பொழுது எங்களுக்கு விளங்குகிறது.

ஐயா கருணாநிதி அவர்களே!, ஈழத்தமிழர்களின் இரத்தத்தை இரசமாக ருசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் எங்கள் மக்கள் மீதோ பாதுகாவலர்கள் மீதோ அல்லது அவர்களின் நிலமை குறித்தோ ஆதரவும் தரவேண்டாம் ஆர்ப்பரிப்பும் தரவேண்டாம். எங்கள் இரத்தத்தை உங்களிற்கு குடிக்க தந்திருக்கிறோமல்லவா? இதோடு உங்கள் ஆதரவை நிறுத்திக்கொள்ளுங்கள். குடித்த இரத்தத்தை மறைக்க இப்படியெல்லாம் அறிக்கை விடாதீர்கள். தமிழீழ மக்கள் உங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறோம் உங்கள் தவறை மறைக்க எங்கள் கடவுளை குற்றம் சொல்லாதீர்கள்.

— மீனகம் கனி

http://www.meenagam.org/?p=16647

ஆடு நனையுதே என்று கவலைப்பட்டதாம் ஓநாய்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.