Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை

எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி? என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.

`அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும்... கடந்த 18.5.2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவைத் தொடர்ந்து, நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் கட்டியமைத்து வருகிறோம்.

இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசாரப் போரை கடந்த 30 ஆண்டு போராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதே வேளையில், எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்க உரை, வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.'

புலிகள் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கை முள்கம்பிகளில் சிக்கியிருக்கும் அகதிகள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் என்று அனைவரது எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டிருக்கிறது இந்த அறிக்கை. என்ன ஆகப்போகிறது நவம்பர் 27 அன்று? யார் வந்து உரை நிகழ்த்தப்போகிறார்கள்? பிரபாகரனா? அவர் உயிருடன் இருக்கிறாரா? ஆம் எனில், தோன்றுவாரா? அடுத்தகட்ட திட்டத்தை அறிவிப்பாரா? நம்பிக்கை அளிப்பாரா? அனைத்து சந்தேகங்களும், குழப்பங்களும், அச்சங்களும் நவம்பர் 27 அன்று விலகும் என்று துடிதுடிப்புடன் காத்துக்-கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

நவம்பர் 27 அன்று ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் அன்று, பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கடுமையான போர்ச்சூழல் நிலவியபோதும், பிரபாகரன் உரை நிகழ்த்தினார். இந்த முறை அதைவிடக் கடுமையான சூழல். வருவாரா வரமாட்டாரா? என்பது மட்டுமல்ல கேள்வி. இருக்கிறாரா, இல்லையா? என்பதும் பலருடைய கேள்வி.

அந்த சந்தேகத்துக்கே இடமில்லை, பிரபாகரன் பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் பத்திரமாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிமானிகளும்கூட. சற்று முன்னால்வரைகூட, பிரபாகரன் நிச்சயம் மாவீரர் தின உரையாற்றுவார் என்றுதான் இவர்கள் சொல்லி வந்தனர். இணையதளங்களில் இது பற்றிய பல அறிவிப்புகளும் வலம் வந்தன. பிரபாகரனுக்கு அவசரப்பட்டு வீரவணக்கம் செலுத்தவேண்டாம், கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், மாவீரர் தினம் நெருங்கி வரும் சூழலில், ஒரே வரியில் தங்கள் வாதத்தை முடித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஆனால், மாவீரர் தின உரை நிகழ்த்தமாட்டார். அது அவருடைய பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்னும் கேள்விகளுக்குப் பதிலில்லை.

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு இவர்களிடம் வலுவான ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை. அல்லது, அளிக்கத் தயங்குகிறார்கள். அல்லது, மறுக்கிறார்கள். ஆனால், மாவீரர் உரையாற்ற மாட்டார் என்பதில் மட்டும் சர்வநிச்சயமாக இருக்கிறார்கள். புலிகள் தரப்பில் இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இரண்டாவது தரப்பினர், பிரபாகரனுக்குப் பதிலாக பொட்டு அம்மானை முன்னிறுத்துகிறார்கள். இலங்கை அரசு பொட்டு அம்மான் மரணத்தை இன்று வரை அதிகாரபூர்வமாக, ஆதாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது இந்த வாதத்துக்கு வலு சேர்க்கிறது. `நிச்சயம் இறந்துவிட்டார், ஆனால் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே. பிரபாகரனின் உடலையே நம்பாத புலி ஆதரவாளர்களால் இந்த வாதத்தை குறைந்தபட்சம் பரிசீலிக்கக்கூட முடியவில்லை. இந்நிலையில், பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெள்ளை ஆடை தரித்து அருகருகே அமர்ந்திருக்கும் படம் வெளிவந்து, பரவலாக ஊடகங்களில் பரப்பப்பட்டது கூடுதல் உத்வேகத்தை அளித்தது. எனவே, அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பொட்டு அம்மான் நவம்பர் 27 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்துவார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உரை நிகழ்த்த மாட்டார்கள். ஆனால், உரை மட்டும் புலிகள் லெட்டர்பேடில் வந்து சேரும் என்கிறார்கள் மூன்றாவது தரப்பினர். அந்த உரையில், இருவரும் உயிருடன் இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அந்த உரை விளக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள், இந்த மூன்றாவது கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மாவீரர் தின உரை நிகழ்த்தப்படும். புலிகளின் அடுத்தகட்ட திட்டம் வெளியிடப்படும். யார் மூலமாக என்பது முக்கியமல்ல.

கே.பி.யால் இப்போதைக்குத் தொடர்புகொள்ள முடியாது. உலகெங்குமுள்ள இலங்கைத் தமிழர்கள் நவம்பர் 27ஐ ஆர்வத்துடன் எதிர்நோக்குவார்கள். அவர்களை ஏமாற்றமுடியாது. இனி புலிகளால் காந்திய வழியில் மட்டும்தான் போராட முடியும், புலிகளால் மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய எந்தவொரு அமைப்பாலும் இனி இலங்கையில் செயல்படமுடியாது என்று சர்வதேச ஊடகங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இருந்தாலும், இன்னொரு ஆயுத எழுச்சி இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்தப் போர், விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் கடுமையானது. இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் தமிழர்களின் எதிர்காலம் குறித்தும் அவநம்பிக்கை அகலமாகவும் அழுத்தமாகவும் பரவிக்-கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாவீரர் தினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்னொரு காரணமும் இருக்கிறது. இலங்கையில் இப்போது கடுமையான அதிகாரப்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. புலிகள் அழித்தொழிப்புப் போர் மூலம் கிடைத்த வெற்றி யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இலங்கை அதிகார அமைப்பு பிளவுபட்டுக் கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தை புலிகள் தவறவிடக்கூடாது. தவறவிடவும் மாட்டார்கள்.

அதே சமயம், சில தீர்மானமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திலும் புலிகள் இருக்கிறார்கள். சுயவிமர்சனங்களும் மறுபரிசீலனைகளும் தேவைப்படும் சமயம் இது. நடந்து முடிந்த அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும், புதிய யுக்திகளை வடிவமைப்பதற்கும் நிச்சயம் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். இலங்கை குறித்து மட்டுமல்ல, இந்தியா குறித்தும் சர்வதேச நடுநிலைமையாளர்கள் குறித்தும் நடந்து முடிந்த போரில் அவர்களது பங்களிப்பு எத்தகையது என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். ஒருவேளை, பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உயிருடன் இருந்தாலும், மாவீரர் தினம் அன்று இருவரும் நிச்சயமாகத் தோன்றமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்!

- மருதன்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

http://www.meenagam.org/?p=16921

:)முன்பு பிரபாகரன் வருவார். இப்போ பொட்டு வருவார். எனி வருவார் ஆனால் வரமாட்டார். :D

:D இப்படி மாத்தி மாத்தி எதையாவது எழுதினால்த் தானே, ஊடகங்களுக்கும் துட்டு வரும். :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் வியாபாரம் செய்கிறார்கள் எம்மை வைத்து :)

எங்கட பிரச்னையை சர்வதேசப் படுத்தவேண்டும் படுத்தவேண்டும் திரிந்தோம்இ இப்ப ஆர் அழுத்தினாலும் பிசகண்டு பிடிக்கிறோம்.

அவர்வருவார் இவர் வருவார் எண்டு நாங்களே அழைக்கிறோம்இ இதுக்குள் இன்னொருத்தனை பார்த்து iடுமைமinசுழஅ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசபக்‌ஷ யுண்டா தான்

நாம் கெட்டது நம்மால்தால் வேறு எவரையும் தேடவேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாபாரத்திலகூட ஏகபோக உரிமை கேக்கிறாங்கப்பா. :)

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் லிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் வழமை போலவே கொள்கை விளக்க உரை எதிர் வரும் 27ம் திகதி இடம்பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் விடுதலைப் புலிகளின் கொள்கை பிரகடனம் எவ்வாறு வெளியிடப்படவுள்ளது என்பதை சர்வதேச சமூகமே ஆர்வத்துடன் எதிர்hபாhத்திருக்கின்றது.

இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பினை மகிந்த ராஜபக்ச வெளியிட்டால் கொள்கை விளக்க உரையில் தேர்தல் முடிவுகளை மாற்றும் விதமான சில முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு அச்சமடைந்துள்ளது.

எனவே மாவீரர் தின உரை நிறைவடையும் வரை தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் மாவீரர் தின உரைக்கு முன்பாக தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கொள்கை விளக்க உரையில் மாற்றங்ளை ஏற்படுத்தவும் விடுதலைப் புலிகள் தரப்பு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இம்முறை வெளியிடப்படவுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்க உரையானது ஸ்ரீலங்காவின் நடைபெறவுள்ள எந்த தேர்தல் முடிவினையும் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாகவே இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர் கால் தமிழ் மக்களின் தெரிவுகள் குறித்து தெளிவான முடிவுகளை விடுதலைப்புலிகளி; மாவீரர் தின உரை பிரதிபலிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

http://www.pathivu.com/news/4247/54/.aspx

என்னப்பா இது?

இப்ப எங்களைவிட சிங்களவனுக்குத்தான் மாவீரர் உரை முக்கியமாய் தேவைப்படுது போலை கிடக்கு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது?

இப்ப எங்களைவிட சிங்களவனுக்குத்தான் மாவீரர் உரை முக்கியமாய் தேவைப்படுது போலை கிடக்கு :)

ஐயா இது வந்திருக்கிறது குமுதம் பதிவு தளங்களில.

சிங்களவங்களுக்கு வழிகாட்டுறாங்களோ இல்லையோ தமிழரில சவாரிசெய்ய பழகியிருக்கிறாங்க..... :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகப் பத்திரிகைகளின் உண்மையான நோக்கம் பணம் சம்பாதிப்பதேயன்றி எமக்காக உரிமை கேட்பதல்ல. அங்கு இன்னும் கனன்று கொண்டிருக்கும் தமிழுணர்வில் காசு சம்பாதிக்கப்பார்க்கிறார்கள் இந்த பத்திரிக்கா தர்ம ஜாம்பவான்கள். நாம் இதைத் தூகிப்பிடித்து அழுவதில் எந்தப்பயனுமில்லை. அதேநேரத்தில் இவ்வாறான செய்திகள் குமுதம் மற்றும் விகடன் பத்திரிக்கைகளை அதிகமாக விலை போகப் பண்ணினாலும் கூட, தமிழகத்து தமிழனின் உணர்வில் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்துமா என்றால் விடை பூச்சியமே!!ஏனென்றால் அவனவன் பிரச்சனை அவனவனுக்கு !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை

முன்பு நடிகைகளை வைத்து கிசுகிசு செய்தி வெளியிட்டு வாசகர்களை கவர்ந்தார்கள்.

இப்ப எங்களை வைத்து கிசுகிசு எழுதுகிறார்கள் .

முன்பு நடிகைகளை வைத்து கிசுகிசு செய்தி வெளியிட்டு வாசகர்களை கவர்ந்தார்கள்.

இப்ப எங்களை வைத்து கிசுகிசு எழுதுகிறார்கள் .

மொத்தத்தில் ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுவதற்கும் குமுதம், பதிவு போல பல ஊடகங்கள் இருக்கத்தான் செய்யும். :):D

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுவதற்கும் குமுதம், பதிவு போல பல ஊடகங்கள் இருக்கத்தான் செய்யும். :):D

நீங்கள் ,கதையோடை கதையாக ..... சந்திலை சிந்து பாடுகின்றீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ,கதையோடை கதையாக ..... சந்திலை சிந்து பாடுகின்றீர்கள். :)

****** புதினம் இனையதளம் உண்மை செய்தியை எழுதி வந்தது.. அந்த இணைய தளத்தையும் மூட பண்ணி போட்டாங்கள் . அடுத்தத்து பதிவு போல.. :D

Edited by yarlpriya
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் ,கதையோடை கதையாக ..... சந்திலை சிந்து பாடுகின்றீர்கள். :)

:Dஏன் தங்களின் கண்ணில் ஏதும் குறைபாடுள்ளதா?? கிருபன் இணைத்திருப்பது பதிவில் வந்த செய்தி என்பது தெரியவில்லையா?? அல்லது பதிவின் கற்பனைச் செய்திகளுக்கும் தங்களைப் போல் ஜால்ரா அடிக்கச் சொல்கின்றீர்களா?? :D

Edited by yarlpriya
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தும் , அதற்கு பதில் எழுதப்பட்ட கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

:wub:ஏன் தங்களின் கண்ணில் ஏதும் குறைபாடுள்ளதா?? கிருபன் இணைத்திருப்பது பதிவில் வந்த செய்தி என்பது தெரியவில்லையா?? அல்லது பதிவின் கற்பனைச் செய்திகளுக்கும் தங்களைப் போல் ஜால்ரா அடிக்கச் சொல்கின்றீர்களா?? :)

22/11/2009, 11:43

நாளை இரவு சுபவேளையில் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

சிறீலங்காவில் ஐனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி நாளை இரவு சுபவேளையில் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவருகிறது.

ஐனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் தாக்கும் நாள் டீசம்பர் 14ம் திகதியாக இருக்கும் எனவும் ஐனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறப்பட்டதாக தெரியவருகிறது. இதேவேளை சகோதரர் பசில் ராஐயபக்ஸ அவர்கள் அறிவித்தல் வெளியானதும் சுதந்திர கட்சி மாவட்ட அமைப்பாளர்களுக்கு வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆராவாரம் செய்யுமாறும் பணித்துள்ளார்.

இதேவேளை 24ம் திகதி விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் எனவும் அதில் ஏன் ஐனாதிபதித்த தேர்தல் முதலில் நடைபெறவுள்ளது எனவும் மகிந்தவின் சிந்தனை, தாம் ஈட்டிய சாதனைகள் தொடர்பாகவும் விரிவாக பிரசாரப்படுத்தப்படும் எனவும் தெரியவருகிறது.

வசம்பு , மேல் உள்ள செய்தியும் பதிவில் வந்தது தான் . :)

Edited by தமிழ் சிறி

வசம்பு, மேல் உள்ள செய்தியும் பதிவில் வந்தது தான். :)

:wub:இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறீர்கள். பதிவும் மக்களை ஏமாற்றுகின்றது என்று நான் சொன்னதில் என்ன தப்பு?? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ,கதையோடை கதையாக ..... சந்திலை சிந்து பாடுகின்றீர்கள். :wub:

:):):wub:

:wub::):)

"சுருட்டுவதே சுகம்" தலைப்பு நிர்வாகத்தால் சுருட்டப்பட்டதை நினைத்து சிரிக்கின்றீர்கள் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சுருட்டுவதே சுகம்" தலைப்பு நிர்வாகத்தால் சுருட்டப்பட்டதை நினைத்து சிரிக்கின்றீர்கள் போல.

அண்ணா உங்களுக்கு தெரியாதது ஒன்று உண்டா? :wub::):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.