Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவரான நகுலனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவரான நகுலனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

கடந்த மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளில் ஒருவரான நகுலன் அவர்கள் முதல் முறையாக தமிழ் ஊடகங்களுக்கு ஒரு சிறிய நேர்காணலை அளித்துள்ளார். ராம் மற்றும் நகுலன் ஆகியோர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்குவதாக இணையத்தளத்தில் வெளியான செய்திகளை அவர் முற்று முழுதாக மறுத்துள்ளார். இம் முறை தளபதி ராமிடம் இருந்து மாவீரர் தின உரை வெளிவர இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் தமது ஆயுதங்களை மௌனித்த பின்னர், கிழக்கு மாகாணத்தில் இருந்து செயல்படும் நகுலன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்கு ஒரு தெளிவுபடுத்தலை ஏற்படுத்த விரும்பியதற்கு அமைவாகவே இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது. எப்போதுமே ஒரு பக்க நியாயத்தை கேட்பது நீதியன்று, குற்றம் சுமத்தப்பட்டவரும் தனது கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்கப்படவேண்டும், அவர் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற நோக்கில் இந்த நேர்காணலை பிரசுரிக்கிறோம்.

என்று மின்னஞசலில் கிடைக்கப்பெற்ற இணைப்பு

http://www.yarl.com/forum3/uploads/mp3/nagulan.mp3

இதில் உள்ள உண்மை, பொய்மைகளுக்கு அப்பால் ........

.......... மே 18இற்கு முன்னர் இருந்து ஒவ்வொரு தளபதிகளுடன், புலம்பெயர் தேசங்களில் இருந்து ஒரு சிலர் தொடர்பில் இருந்தார்கள். மே 18உடன் அத்தொடர்புகளில் பல நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. இது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அம்பாறை காடுகளிலிருந்து இரு தளபதிகள் மட்டும் சிலருடன் தொடர்ந்து(ஏறக்குறைய ஒவ்வொரு நாளும்) தொடர்பில் இருக்கிறார்கள். அவர் ஏதாவது தொடர்புகளை புலம்பெயர்ந்தவர்களுடன் ஏற்படுத்த வேண்டுமெனில், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஊடாகத்தான் ஏற்படுத்த முடியும்.

.... இதை புரியாமல், சரியான விசாரணைகள் அற்று குற்றச்சாட்டுகள்!!!!!!!! ஏன்???????????

இன்றும், தொடங்கியதை தொடர, எமக்காக புறப்பட்டவர்கள் சிலர் அங்கிருக்கிறார்கள், என்ற நம்மிக்கையில் ...........

Edited by Nellaiyan

இவ்வறிக்கையை யாரும் பொருட்படுத்தவேண்டாம்,

இங்கே மேலதிக விடையங்களை சொல்ல முடியாது,

விரைவில் சில விபரங்கள் சொல்லுவேன் காத்திருங்கள் தமிழீழ மக்களே.

இதில் உள்ள உண்மைஇ பொய்மைகளுக்கு அப்பால் ........

.......... மே 18இற்கு முன்னர் இருந்து ஒவ்வொரு தளபதிகளுடன்இ புலம்பெயர் தேசங்களில் இருந்து ஒரு சிலர் தொடர்பில் இருந்தார்கள். மே 18உடன் அத்தொடர்புகளில் பல நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. இது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அம்பாறை காடுகளிலிருந்து இரு தளபதிகள் மட்டும் சிலருடன் தொடர்ந்து(ஏறக்குறைய ஒவ்வொரு நாளும்) தொடர்பில் இருக்கிறார்கள். அவர் ஏதாவது தொடர்புகளை புலம்பெயர்ந்தவர்களுடன் ஏற்படுத்த வேண்டுமெனில்இ அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஊடாகத்தான் ஏற்படுத்த முடியும்.

.... இதை புரியாமல்இ சரியான விசாரணைகள் அற்று குற்றச்சாட்டுகள்!!!!!!!! ஏன்???????????

இன்றும்இ தொடங்கியதை தொடரஇ எமக்காக புறப்பட்டவர்கள் சிலர் அங்கிருக்கிறார்கள்இ என்ற நம்மிக்கையில் ...........

தனித் தொடர்புகள்,பொறுப்பாளர்கள் மீது தனிப்பட்ட விசுவாசம், பிரதேச வாதம்.

எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டுதே!

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பாம்புதானே

தங்கள் பங்குக்கு அடியுங்கள்.....

யாராக இருந்தாலும், மக்களை ஏமாற்றுவது இனி மிக மிக கடினம், மக்கள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு இது போன்ற நேர்காணல்கள் உதவி புரியாது. எனவே பொறுப்புள்ளவர்கள் நிதானமாக செயற்படவேண்டும்.

செயல்கள் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பதற்கான முயற்சியாக இந்த நேர்காணல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதேவேளை நீங்கள் குறிப்பிட்டதுபோல்

மக்கள் தெளிவாக இருந்தால்....

எதுவும் எடுபடாது

மாவீரர் நாள் என்பது எவருக்கும் சொந்தமானது அல்ல

அது எமது தேசியநினைவெழுச்சிநாள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மாவீரர் உரை குடுக்க வெளிக்கிட்டால் மாவீரர் ஆர் குடுக்கிறவர் ஆர் எண்டெல்லே தெரியாமல் போகும்.

இந்த நேர்காணலின் நோக்கம் என்னவென்பதனை... அதனை உன்னிப்பாக கேட்பவர்களுக்கு இலகுவாகவே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவார்கள்...???

நன்றாகவே புரிகிறது!

தலைவரின் வீரச்சாவு உண்மையென்றால் அல்லது தலைவர் உரையாற்ற வரமாட்டார் என்றால் அமைப்பை வழிநடத்தும் ஒருவர் உரையாற்றுவதில் தவறு எதுவுமில்லையே?

விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியிருக்கும் ஒருசில மூத்த உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்றபடியால் படையினரின் பிடியில் அவர் இல்லையென்றால், அவர் உரை நிகழ்த்துவதில் எந்தத் தவறும் இல்லை.

இங்கே மேலதிக விடையங்களை சொல்ல முடியாது,

இந்தப் பூச்சாண்டி காட்டுறவேலையை கொண்டுபோய் உங்கட தளத்திலை வைச்சிருங்கோ!!

தராக்கி, உண்மையை சொல்லுங்கள். யார் நீங்கள்? எத்தனை இணையத்தளங்களை தொடக்குவதும், மூடுவதுமாக இதுவரை இருக்கிறீர்கள்? விடுதலை புலிகளின் செயலாளர் எனவும் அறிக்கை விட்டீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள். தயவுசெய்து ராமண்ணாவோ, நகுலனோ சிறிலங்கா படைகளினால் கைது செய்யப்பட்டார்கள் என்று ஆதாரங்கள் இருப்பின் வெளியிடுங்கள். வதந்திகளை உருவாக்காதீர்கள்/பரப்பாதீர்கள். அவர்கள் எமக்காக புறப்பட்டவர்கள், அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்!!

ஏன், தளபதி ராம் மாவீரர் நாள் உரை நிகழ்த்தக்கூடாது?? யார் இருக்கிறார்கள், அப்போ உரை நிகழ்த்த?? இந்த ராம் செய்த சாதனைகள் உங்களுக்குத் தெரியுமா?? உங்கள் பிரதேச வாதங்களை குப்பையில் தூக்கி போடுங்கள்.

ராமண்ணா, அங்கிருப்பின், அவருக்கு இன்று, எவருக்கும் இல்லாத தகுதி இருக்கிறது, மாவீரர் நாள் உரை நிகழ்த்த இருக்கிறது!

தெரியாது எண்டால் தெரியாது எண்டு சொல்ல பழகுங்கள்... :lol:

ஏன், தளபதி ராம் மாவீரர் நாள் உரை நிகழ்த்தக்கூடாது?? யார் இருக்கிறார்கள், அப்போ உரை நிகழ்த்த?? இந்த ராம் செய்த சாதனைகள் உங்களுக்குத் தெரியுமா?? உங்கள் பிரதேச வாதங்களை குப்பையில் தூக்கி போடுங்கள்.

ராமண்ணா, அங்கிருப்பின், அவருக்கு இன்று, எவருக்கும் இல்லாத தகுதி இருக்கிறது, மாவீரர் நாள் உரை நிகழ்த்த இருக்கிறது!

யார் மாவீரர் நாள் உரைநிழ்த்துவது என்பதல்ல பிரச்சனை, என்ன உரை நிகழ்த்தப்

போகின்றார்கள் என்பது தான் முக்கியம்;,மே 17 இற்குப்பின் பலர் பல உரைகள் நிழ்த்திக்கொண்டுதானே இருக்கின்றார்கள்!!!!!

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன ராமில் மட்டும் அப்படி ஒரு பாசம்?

ஆடு பகை குட்டி உறவோ? :lol:

அண்ணே இதுவரை ஒரு நாளும் புலிகள் எந்த விடயமும் சொல்லி செய்வதில்லை இப்பமட்டும் மாவீரர் உரைக்குமட்டும் ஏன் இந்த விளம்பரம்?

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அண்மையில் இலங்கையில் சிலரை சந்தித்ததால் சொல்கிறேன்.மாயையில் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்கிறோம் என்பது மட்டும் உண்மை. வடிவாக சம்பல் அரைக்கிறார்கள்.காட்டில் இருந்த வானொலி செய்தி சாத்திரிக்கோ, சாந்தியக்காவுக்கோ கிடைக்காமல் போனது அதிசயமோ இல்லை அதிர்வோ.

என்ன இவர்கள் ஒரு இணையதளம் திறந்து பேசுமளவை விடநேரடியான அனுபவம் கொண்டவன்.பார்ப்போம்>.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணத்தில் செயற்படப் போனவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் சாந்தியக்கா ஒரு சிறுகதையே எழுதியிருந்தா. உண்மையில் அதைச் சிறுகதையாக நான் பார்க்கவில்லை. உண்மை நிலைமை அதைவிடவும் கடினமானதே.

இங்கே தளபதி ராமுக்கு தகுதியுண்டா, அவர் சரியானவரா இல்லையா என்பதன்று பிரச்சனை. எங்கிருக்கிறார் என்பதே பிரச்சனை. அவரும் மற்றவர்களும் எப்படி சூழ்ச்சியில் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை அறிவதற்கான காலம் தூரத்திலில்லை என்றே நினைக்கிறேன். அதுவொன்றும் தனியே ராமுக்கான சூழ்ச்சித்திட்டமன்று, ஒட்டுமொத்த இயக்கத்தின் வீழ்ச்சிக்கான சூழ்ச்சித் திட்டமே. எமது நீண்டகால ஆயுதப் போராட்ட வரலாற்றையே கேலிக்குள்ளாக்கும் சம்பவங்களை நாம் கேட்கத்தான் போகிறோம்.

இவர்கள் சிறிலங்கா அரசின் பிடிக்குள் இல்லாமல் தனித்துத்தான் இயங்குகிறார்கள் என்றால் ஏன் சிறிலங்கா அரசும் அதன் நட்பு நாடுகளும் இன்னமும் இவர்களை விட்டு வைத்திருக்கிறது, இவர்களை அழிக்க ஒரு துரும்பையும் பயன்படுத்தாமலிருக்கிறது என்ற கேள்வியை நாம் யாரும் யோசித்தும் பார்ப்பதில்லை.

***

இவ்வருட மாவீரர் நாள் மிகவும் கோமாளித்தனமாகப் போகுமோ என்ற ஐயமுண்டு. ஆனாலும் அதன்முடிவில் ஒரு தெளிவு பிறக்குமென்பது என் நம்பிக்கை.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அண்மையில் இலங்கையில் சிலரை சந்தித்ததால் சொல்கிறேன்.மாயையில் புலம் பெயர்ந்தவர்கள் வாழ்கிறோம் என்பது மட்டும் உண்மை. வடிவாக சம்பல் அரைக்கிறார்கள்.

உண்மையான வார்த்தைகள் நுணாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் மாவீரர் நாள் உரைநிழ்த்துவது என்பதல்ல பிரச்சனை, என்ன உரை நிகழ்த்தப்

போகின்றார்கள் என்பது தான் முக்கியம்;,மே 17 இற்குப்பின் பலர் பல உரைகள் நிழ்த்திக்கொண்டுதானே இருக்கின்றார்கள்!!!!!

தலைவரின் வீரச்சாவு உண்மையென்றால் அல்லது தலைவர் உரையாற்ற வரமாட்டார் என்றால் அமைப்பை வழிநடத்தும் ஒருவர் உரையாற்றுவதில் தவறு எதுவுமில்லையே?

விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியிருக்கும் ஒருசில மூத்த உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்றபடியால் படையினரின் பிடியில் அவர் இல்லையென்றால், அவர் உரை நிகழ்த்துவதில் எந்தத் தவறும் இல்லை.

!!

புலத்தில் ஊடகங்களின் துணையுடன் மக்கள் அணிதிரல்வதைத் தடுப்பதற்கான முயற்சி தொடர்கின்றது. மே 19 இற்குப் பின் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள், சில தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக வெளிக்காட்டின. மக்களிடம் இருந்து எதிர் மறையான கருத்துக்கள் வெளிப்பட்டதும். ஊடக நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கு, மக்களிடமிருந்து நிதிப் பங்களிப்பு, வணிகர்களிடமிருந்து விளம்பரம் மூலம் கிடைக்கும் வரவு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக மீண்டும் பதுங்கியிருக்கின்றன. ஒரு இணையத்தளத்தை இயக்குவதற்கு நிதிப்பிரச்சனை இராது. இன்று கருத்து விதைப்பது மிக மிகச் சுலபமாகிவிட்டது.

இன்று இருக்கும் அனைத்துக் குழப்பங்களுக்கும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் தான் முதன்மைக் காரணம். குழுநிலை அணிதிரள்வதற்குத் துணைபோகின்றவர்களாகவும், தனி நபர் உறவுக்கு முதன்மை கொடுப்பவர்களாகவும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பழி தீர்க்கத்துடிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். மக்கள் பாம்புகளை இனம் கண்டு பால் வார்க்காமல் இருந்தால் மிகவிரைவாகத் தெளிவு எற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தளபதி ராமுக்கு தகுதியுண்டா, அவர் சரியானவரா இல்லையா என்பதன்று பிரச்சனை. எங்கிருக்கிறார் என்பதே பிரச்சனை. அவரும் மற்றவர்களும் எப்படி சூழ்ச்சியில் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை அறிவதற்கான காலம் தூரத்திலில்லை என்றே நினைக்கிறேன். அதுவொன்றும் தனியே ராமுக்கான சூழ்ச்சித்திட்டமன்று, ஒட்டுமொத்த இயக்கத்தின் வீழ்ச்சிக்கான சூழ்ச்சித் திட்டமே. எமது நீண்டகால ஆயுதப் போராட்ட வரலாற்றையே கேலிக்குள்ளாக்கும் சம்பவங்களை நாம் கேட்கத்தான் போகிறோம்.

***

இவ்வருட மாவீரர் நாள் மிகவும் கோமாளித்தனமாகப் போகுமோ என்ற ஐயமுண்டு. ஆனாலும் அதன்முடிவில் ஒரு தெளிவு பிறக்குமென்பது என் நம்பிக்கை.

என்னுடைய கருத்தும் இதுதான்

நன்றி தங்கள் கருத்துக்களுக்கு....

பிரித்தானியாவில்.

இந்த வருடம், வழமைக்கு மாறாக கார்த்திகைப்பூ வீடு வீடாகச் சென்று விற்கப்படுகின்றது?

மக்கள் கார்த்திகைப்பூவை வாங்கி வீட்டில் இருந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் படி சொல்கின்றார்களா?

மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பதற்கான முயற்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்;கு வணக்கம் செலுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் அவா.அதனை யாரும் தடுக்க முடியாது.

புலிகள் இதுவரை எதனையும் சொல்லி விட்டுச் செய்வதில்லை. இப்ப மட்டும் என்ன புதிதாக சொல்லி விட்டு செய்கிறார்கள் என்பதே மக்களால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மாவீர் தின உரையின் சாராம்சத்தில் இருந்து இது போலியானதா உண்மையானதா என்று பகுத்தறியும் சக்தி தமிழீழ மக்களிடம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நகுலனையோ, ராமையோ துரோகிகள் என்று யாரும் சொன்னதில்லை. ஆனால் அவர்கள் தற்போது சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையிருப்பின், அவர்கள் மூலம் வெளிப்படும் கருத்து, அவர்களின் சுயகருத்து இல்லை என்பது தான் நல்லவனின் கருத்தும் என நினைக்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் இயங்குகின்ற நிலையில் இல்லை. சொல்லப் போனால், முக்கியமாக அவர்களின் உணவுத் தேவையை கடந்த 6 மாதமாகப் பூர்த்தி செய்கின்ற நிலை கூட இருப்பதாக நினைக்கவில்லை.

இன்றைய சூழ்நிலையில், புலம்பெயர் தேசங்களில் பிழையாகவோ, சரியாகவோ இயங்குகின்ற தமிழீழக் கட்டுமானங்களைச் சிதைப்பதற்கான செயற்திட்டங்களைத் தான் சிறிலங்கா அரசு மேற்கொள்கின்றது. அதைப் புரிந்து கொண்டு அனைவரும் தெளிவாகச் செயற்படுங்கள். சிறிலங்கா அரசுக்குப் புலிகள் என்பது பிரச்சனையானவர்கள் அல்ல. தமிழீழம் என்பது தான் பிரச்சனை. அந்தக் கோரிக்கைகள் நிலைத்து நிற்கா வண்ணம் அது என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.