Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2009 அறிக்கை - ராம்

Featured Replies

தளபதி ராம் மற்றும் தளபதி நகுலன் படையினரின் பிடியில் இருக்கிறார்களா இல்லையா என்பதை எம்மால் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் படையினரின் பிடியிலும் இருக்கலாம் அல்லது முன்னர் போன்று அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கலாம்.

ஆனால் தமிழீழ விடுதலைக்காய் எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிய செயற்பட்ட இந்தத் தளபதிகளை களமுனைகளில் வீரசாதனைகளைப் படைத்த தளபதிகளை துரோகிகளாகச் சித்தரிக்க இங்கே யாழ். களத்திற்குள் புகுந்துள்ள சில ஒட்டுண்ணிகள் முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்பதற்காகவே மேலே உள்ள எனது பதிவு அமைந்துள்ளது. (படையினரின் பிடியில் தளபதி ராம் மற்றும் தளபதி நகுலன் ஆகியோர் இல்லை என்று நான் வாதிடவில்லை). வெளியகப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையோ அல்லது தலைமைச் செயலகத்தின் அறிக்கையோ இந்த ஒட்டுண்ணிகள் தெரிவிப்பதைப் போன்று இவர்களை துரோகிகளாகவோ அல்லது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தகுதியற்றவர்களாகவே சித்தரிக்கவில்லை.

மற்றொரு திரியில் தயா எழுதிய கருத்து

என்ன காட்டுக்கை இறங்கி இராணுவம் ஏன் அடிக்க வில்லை எண்டு கேக்கிறீர்களோ...??? தமிழினம் உருப்பட்ட மாதிரித்தான்...

சர்வதேசத்தில் இதையும் விட அறிவான பலர் இலங்கைக்கு ஆலோசனை சொல்ல இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

காடுகளுக்கு இராணுவம் இறங்கி போராடி இருந்தால் ஒருவேளை இராணுவம் இராம் அண்ணையை கொலை செய்ய முடியும்... அதில் இருந்து எல்லாம் அவர் தப்பி விட்டார் எண்றால் அவர் பெரிய செல்வாக்கானவராக எழுவதை தடுக்க முடியாது... சிங்கள இராணுவத்துக்கு எதிராக போராடும் வீரராக தமிழர்களால் இராம் அண்ணை மதிக்க படுவார்... அப்படியானால் புலிகளின் எழுச்சியும் இடம்பெறும்... இதை இடம் பெறாது தடுக்க வேண்டுமா...??

இப்போது இலங்கை படைகள் வகுந்த திட்டம் போதுமானது.... மிகவும் நேர்த்தியானதும் ஆகும்... இராம் தங்களின் பிடியில் எண்று செய்திகளை கசிய செய்வது... தங்களின் பக்கம் இருக்கும் புலிகளின் புலநாய்வாளர்கள் எண்று சிலரால் இராம் இராணுவத்துடன் தான் இருக்கிறார் எண்று மற்றய( வெளிநாட்டில் உள்ள) புலிகளை நம்ப செய்வது... அதனூடாக மக்களின் ஆதரவை முழுமையாக இராம் அண்ணை தலைமையிலான புலிகளுக்கு இல்லாது செய்வது...

மக்களின் ஆதரவு இல்லாது போராடும் அமைப்பு என்பது எப்படியானது எண்றால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஓடிப்போன ஒட்டுகுழுக்களுக்கு சமன்... இன்னும் ஒருவருடத்துக்கு இராம் அண்ணையால் தாக்கு பிடிக்க முடியலாம்... அதன் பின்னர் வெளியில் வந்து இருக்கும் போராளிகளுக்காக கொள்ளைகள் அடிக்கவேண்டி இருக்கலாம்... அதையும் நாங்கள் விமர்சிப்போம்... வெளிநாட்டில் உள்ளை புலிகள் எண்று சொல்லி கொள்பவர்கள் இராம் அண்ணை உண்மையில் போராடுகிறார், இராணுவத்தின் பிடியில் இல்லை என்பதை அறியும் காலம் வந்தால் கூட எங்களுக்கு முன் வந்து சொல்லப்போவது இல்லை.. காரணம் ஈகோ.. தங்களின் மீதான மக்களின் நம்பிக்கை இழக்க வேண்டி வரும் என்பதால்.... கொஞ்சக்காலத்தில் விரக்தியுற்று இராம் அவர்கள் தானாக இலங்கை படைகளிடம் சரண் அடைந்து கொள்வார்... விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முடக்க போர் யுக்தியில் மிகச்சிக்கனமானதும் சாத்தியபாடானதுமான நல்ல திட்டம் இதுதான்... புலிகள் அதோடு இலங்கையில் இருந்து அப்போது அகற்றப்பட்டு இருப்பார்கள்..

இராம் அண்ணை இராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள் என்பது சரியாக கூட இருக்கலாம்... ஆனால் அவர் உண்மையில் இலங்கை இராணுவத்தில் பிடிபடாமல் இருந்தால்.... அதுக்கு யார் பொறுப்பு...?? இதுதான் இப்போதய பலகோடி ரூபா பெறுமதியான கேள்வி...

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர் நாள் உரை

ஜ வெள்ளிக்கிழமைஇ 27 நவம்பர் 2009இ 01:14.34 Pஆ புஆவு +05:30 ஸ

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில்இ எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக. இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர் நாள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் உரையின் முழுவடிவம்:

தலைமைச் செயலகம்இ

தமிழீழ விடுதலைப் புலிகள்இ

தமிழீழம்.

நவம்பர் 27இ 2009

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’இ ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும்இ தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும்இ தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்புஇ மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது.

தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நில ஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக் கொண்டிருக்கஇ சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர்இ கதிரவெளிஇ வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள்இ மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும்இ சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்புஇ அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள்இ ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவுஇ மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள்இ பாடசாலைகள்இ மக்கள் கூடுமிடங்கள்இ மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள்இ இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள்இ தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான்இ தரைஇ கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்இ சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில்இ தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும்இ ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும்இ அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றிஇ மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும்இ ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல்இ இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும்இ ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல்இ உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல்இ தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பதுஇ அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரைஇ புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு இ சொத்திழப்புஇ வாழ்விட இழப்புஇ சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களேஇ

வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவதுஇ கைது செய்வதுஇ கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்துஇ மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியானஇ நியாயமானஇ கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம்இ குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிய மனிதப்பேரழிவைச் செய்துஇ தமிழர்களின் மனவுறுதியை உடைத்துஇ தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம்இ தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்துஇ இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடுஇ மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும்இ சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

அதேநேரம்இ தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்துஇ புதிய சூழல்கள்இ புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளைஇ எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களேஇ

புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளேஇ தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களேஇ உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களேஇ மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம்இ எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம்இ தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில்இ எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

சும்மா இருந்துகொண்டு ஊர்வலம்செய்தால் வெளிநாடு தலையிடுமா?

ஊர்வலம் செய்து ஆர்ப்பாட்டம் ஈடுபட்டு வெளிநாட்டை தலையிடசெய்த அழகு மே மாதம் பார்த்தனாங்கள்தானே!!

ராமின் அறிக்கை இங்கு கொஞ்ச புழுக்களை பாராளுமன்றகனவில் வைத்திருக்க உதவுமேதவிர முகாமில்வாடும் மக்களுக்கு ஒன்றும் செய்யாது.

நேற்று பார்த்தோம்தானே!மாவீரர்நாளைக்கூட வாக்குச்சாவடி மாதிரி வாசலில்நின்று செய்த அழகுதான் இனி போராட்டம்.

உங்கள் வாக்கு ராமுக்கே!

உங்கள் வாக்கு உருத்திராவுக்கே!!

ஜெயவேவா!!

இந்த அறிக்கையில் சிங்கள படையினரின் நிர்பந்தத்தில் அவர் இருக்கிறார் அல்லது படையினருடன் சேர்ந்து இயங்குகிறார் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர். எந்த வசனம் உமக்கு அப்படியொரு விளக்கததைத் தருகிறது?

உன்ர கருத்தை உண்மையென்று நிறுவ பொய்களை அவிடடு விடவேண்டாம். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று முடிந்த பின்னர், செல்வராசா பத்மநாதன் அவர்களின் வழிகாட்டலில் போராட்டம் தொடரும் எண்டும், புலம்பெயர்ந்த மக்களின் ஒத்துழைப்பைக் கேட்டும் ஒற்றுமையை வலியுறுத்தியும் கேணல் ராம் அவர்கள் தனது கையால் எழுதிய அறிக்கை யாழ். உட்பட பல ஊடகங்களில் வந்தன. செல்வராசா பத்மநாதன் அவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறைவேற்றுச் செயலராக நியமித்து கேணல் ராம் மற்றும் கேணல் சுரேஸ் ஆகியொரினால் அறிக்கை வெளியிடப்பட்டது. கேபி அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் கூட கேணல் ராமின் பெயரிலேயே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முழுப்புசணிக்காயை சோற்றுக்கை புதைக்ககிற வேலை வேண்டாம்.

சிங்கள அரசு நடத்துற உளவியல் போரில் தளபதி ராம் ஓர் ஆயுதமாகப்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக உமக்குத் தெரியுறதை எமக்கும் கொஞ்சம் காட்டும் பார்ப்பம்.

இந்த அறிக்கை புலம்பெயர்ந்தவர்களின் எழுச்சியை அடக்க அல்லது ராஜபக்ச மற்றும் அவரின் கூட்டாளிகளை போர் குற்றவளிகாக அறவிக்க வேண்டுமென்ற குரலை திசை திருப்ப என்ன சொல்லப்பட்டிருக்கு? நீயேன் இல்லாத பொய்களையெல்லாம் அவிட்டு விடுகிறாய்??

அப்படிச் சொல்லுற அதிகாரத்தை உனக்கு யார் தந்தது?? 25 ஆண்டுகளாய் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்திருக்கும் தளபதிக்கோ அல்லது அமைப்பிற்கா உழைத்துக் கொண்டிருப்பவர்களிற்கோ அதிகாரம் கிடையாதெனச் சொல்லுற உரிமை எந்த ஒட்டுண்ணிக்கும் வழங்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதும் சிங்கள படையினரின் கூற்று அந்தக் கூற்றை தலைமைச் செயலகத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனரே! அவர்களும் சிங்கள புலனாய்வுத்துறையினருக்காக உழைக்கிறார்களா?

தன்னை வழிநடத்திய தலைவனுக்கு, மாவீரர்களுக்குரிய மதிப்பை அவர்களிற்கு வழங்க வேண்டுமென்று கற்றுத்தந்த தலைவனுக்கு தலைவரின் வீரச்சாவை உண்மையாக எண்ணி அல்லது உறுதிப்படுத்தி அந்தத் தளபதி மதிப்பளிக்க முற்படுகிறார். ஆனால் தலைவரிற்கு எந்த மதிப்பும் வணக்கவும் வழங்கக்கூடாது என்பதில் சிங்களத் தரப்பு எப்படிச் செயற்படுகிறதோ அதைவிட மேலாக எம்மவர்கள் செயற்படுகிறார்கள். (எடுத்துக்காட்டாக நீரே இங்கே எமது இனத்தின் தலைவரை, எமது நாட்டின் தலைவரை, எமது மக்களின் விடியலுக்காக எவ்வளவோ தியாகங்களை புரிந்து போராடிய தலைவரை தேசியத் தலைவர் என்று குறிப்பிடமாமல் பிரபாகரன் என்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் என்றும் குறிப்பிட்டு சிறுமைப்படுத்துகிறீரே)

தேசியத் தலைவரின் எண்ணங்களிற்கு செயல்வடிவம் கொடுப்போம் என்றும் மாவீரர்களின் கனவை நனவாக்குவோம் என்றும் சொல்லியிருக்கிறாரே! தேசியத் தலைவரின் எண்ணம் தமிழீழ விடிவு என்று உமக்குத் தெரியாதோ? மாவீரர்கள் கனவு தமிழீழத் தாயகம் என்று என்று உமக்குத் தெரியாதோ? ஒரு புலி 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று சொல்லியிருக்கிறார். அதற்குரிய பொருள் என்னவென்று உன்ர மரமண்டைக்கு எறவில்லையா?

வடிவா அறிக்கையை வாசித்துப் பார். வழிநடத்தச் சொன்னதாக அறிக்கையில் சொல்லப்படவில்லை. எமது போராட்டத்தின் தொடர்ச்சியையும் மாவீரர்கள் விட்டுச் சென்ற பணியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள் என்றே தலைவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பியை தலைவராக அல்ல விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயலராகத்தான் அறிவித்தார்கள். அறவித்தவர்களில் ஒருவர் தளபதி சுரேஸ் மற்றையவர் இதே கேணல் ராம் தான்.

தலைவரின் எண்ணங்களிற்குச் செயல்வடிவம் கொடுப்போம், மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என்று தெரிவித்துள்ளாரே!

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளில் வருங்கால நடவடிக்கைகள் எதுவும் பட்டியலிடப்படுவதில்லை. ராம் அவர்கள் என்னென்ன செய்யப்போகிறார்கள் என்பதை சிங்களத் தரப்பால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆதங்கத்தில்தானே நீர் இதை எழுதியுள்ளீரோ?.

நல்ல காலம் காட்டில் காலுன்ற கால் காணுமே எதற்கு இவர்களிற்குச் சாப்பாடு என்று கேட்காமல் விட்டுவிட்டீரே! அவர் தனக்கு காட்டுக்கை காசு அனுப்புங்கோ எண்டு கேட்கவில்லை. முன்னர் வழங்கிய பங்களிப்புக்கள் போல தொடர்ந்து வழங்குங்கோ எண்டு சொல்லியிருக்கிறார். அதாவது புலம்பெயர்ந்தவர்கள் முன்னர் அனைத்துலக ரீதியில் செயற்பட்ட செயற்பாட்டார்களிற்கு நிதி உள்ளிட்ட பங்களிப்புக்களை வழங்கியது போன்று இனியும் வழங்குங்கள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

போராடி உயிர்களை இழந்து, உடல் உறுப்புக்களை இழந்து, சொத்தழிவுகளை எதிர்கொண்டு நாம் வென்றெடுக்கும் அந்தத் தீர்வு இந்த அழிவுகள் இல்லாமல் கிடைக்க, உலக நாடுகள் உதவவேண்டும் என்று தளபதி ராம் கோரிக்கை விடுக்கிறார். தமிழரின் உடல்கள் வெடிகணைகளால் சிதைந்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறதும், கண்ணுக்கு முன்னாலையே தமது உறவுகளை இழந்து எமது மக்கள் அலறு காட்சிகள் கொஞ்சக் காலமாக உங்களைப் போன்றவர்களால் பார்க்க முடியாமல் நல்ல அவஸ்த்தைப் படுகிறீர்கள் எண்டு விளங்குது. போராட்டமில்லாமல் தீர்வா! வேண்டவே வேண்டாம். எங்கட சனம் செத்துப்போறதை நாங்கள் வெளிநாட்டிலை பாதுகாப்பாக இருந்துபார்த்து ரசிக்க வேணும். அதுதான உங்களிற்கு வேணும்.!

இதன்மூலம் நீர் உமது நோக்கத்தை தெளிவாக்கிவிட்டீர். இராணுவத்துடன் இருந்தாலும் ராம் அவர்கள் புறக்கணிக்கபட வேண்டியவர். அப்படி இல்லாது சுயமாக நின்றாலும் அவர் புறக்கணிக்கப்படவேண்டியவர். இதைத்தானே சொல்லுறீர்? தமிழீழ தாயகத்தில் இருக்கும் விடுதலைப் புலிகளின் மிஞ்சிய உறுப்பினர்களால் போராட்டம் இனி முன்னெடுக்கப்படக் கூடாது. இனித்தமிழர்கள் தலையெடுக்கவே கூடாது. இதுதான் சிங்களப் பேரினவாத்தின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டிற்கு நன்றாக ஒத்துழைப்புக் கொடுக்கிறீர். தேசியத் தலைவர் அவர்களின் வீட்டில் முன் சென்று எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள் எண்டு எமது மக்கள் கோரிக்கை வைக்கவில்லை. மாறாக தலைவர் அவர்களே போராட்டத்தை கையில் எடுத்தார். வெற்றிகரமாக முன்னெடுத்தார். தமிழர்கள் அவருக்கு ஒத்துழைப்பை மாத்திரம் கொடுத்தார்கள். இப்படித்தான் உலகில்; போராட்டங்கள், போராடும் தலைவர்களால், அமைப்புக்களால் தலைமையேற்று செய்யப்பட்டன.

இதையெல்லாம் எங்கையையா கண்டு பிடிச்சீர். ஆரேனும் உமக்கு உளவு பார்க்கிற ஆரையும் தளபதி ராமோடை வைச்சிருக்கிறீரோ.

தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோர் படையினரின் படையினரின் பிடியில் இல்லையென்றால் அவர்களே தாயகத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வல்லமை படைத்தவர்கள்.

தேசியத் தலைவர் புலம்பெயர் மக்களிடம் கடந்த ஆண்டு ஏதோ கேட்டுள்ளார். என்னெண்டு ஒருக்கா வாசித்துப்பாரும்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

தளபதி ராம் அவர்களின் செயற்பாடுகளை முடக்க வேணும். இனிப்போராட்டம் தலையெடுக்கக்கூடாது. அதுக்கு அவருக்குக்கிடைக்கிற உதவிகள் தடுக்கப்படவேணும். அதற்காக அவரிற்கு துரோகிப்பட்டம். அது சரிப்பட்டுவரவில்லை என்றால் (தேசியத் தலைவர் அவர்களால் கேணல் நிலைக்கு உயர்த்தப்பட்டு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட) மூத்த தளபதி ஒருவருக்கும் போராட்டத்தை வழிநடத்துறதுக்கு லாய்க்கில்லை அவரை ஒதுக்குவோம். சிங்களப் புலனாய்வாளர்களின் வேலைகளை நன்றாகத் திறம்படச் செய்கிறார்கள். யாழ். களம் இவர்களிற்கு நன்றாக ஒத்துழைக்கிறதா? அல்லது மட்டுறுத்துனர்கள் நிர்வாகிகள் தொடர்ந்து நித்திரை கொள்கிறார்களா?

இன்றும் கூட சாகமம் காடுகளுக்குள் சண்டை நடக்குதாம், தம்பிலுவில்,திருக்கோயில்,ஆக்கள் சொன்னாங்க, என்ன நடக்குது எண்டு புரியுதில்லை''''

நன்றிகள் மின்னல்!! பின்னி எடுத்திட்டீர்(நான் எதை எழுத வேண்டும் என்று முற்பட்டேனோ) ....

நாளுக்கு ஓர் இணையத்தளம் நடத்தும் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி தராக்கிக்கு, உங்கள் போன்றோரின் குட்டுக்கள் உடைகின்றன. நீங்கள் இங்கு, சிலர் வேதனைகளில் ஏதோ எழுத, அவர்களை துரோகிகளாக்கி சில சில்லறைகள் விசிலடிக்க, இதுதான் சந்தர்ப்பம் என்று சேர்ந்து விசிலடிப்பது போல் உங்கள் தேவைகளை செப்பனே செய்து முடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூத்துக்கள் கனகாலத்துக்கு இல்லை!! புரியுங்கள்!!!

என் கருத்து .......

தளபதி ராம் மற்றும் தளபதி நகுலன் சிங்கள படையினரின் பிடியில் இருக்கிறார்களா இல்லையா என்பது கண்டு பிடிக்க முடியாத ஒன்றல்ல!!! இவர்கள் சிங்கள படையினரின் கைகளில் சிக்கியிருந்தால், அது நிச்சயமாக வெளிவரும். இல்லை இவர்கள் சிங்கள படையினருடன் தான் இருக்கிறார்கள் என்று சொல்பவர்களிடம் உள்ள பண பலத்தை கொண்டு உண்மையை வெளிக்கொணரலாம். மாறாக எமக்காக எல்லாவற்றையும் துறந்து புறப்பட்டவர்களில் ஓரிருவர், இன்னும் அந்த இலக்கை நோக்கி நகர அங்கு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை!

இன்றும் கூட சாகமம் காடுகளுக்குள் சண்டை நடக்குதாம், தம்பிலுவில்,திருக்கோயில்,ஆக்கள் சொன்னாங்க, என்ன நடக்குது எண்டு புரியுதில்லை''''

நீங்கள் சொல்லும் தகவல் வெளியக புலநாய்வு பிரிவின் மீதான நம்பிக்கையை தான் குறை கூறுகிறது...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66320&view=&hl=புலிகளின்&fromsearch=1

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்தின் பின்னர், தன்னுடனிருந்த போராளிகள் சிலருடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களில் மாறிமாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார். ஆனால், காலப்போக்கில், வீரச்சாவுகள், காணாமல் போதல்கள், சிங்களப் படையினரிடம் சென்று சரணடைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

இந்த நிலையில், தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் – மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.

இப்படி பல குழப்பமான விடயங்கள் பல இருந்தாலும் இவைகளை கிண்ட எனக்கு எந்த வகையிலும் உடன்பாடுகிடையாது...

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம்இ கடந்த மே மாதத்தின் பின்னர்இ தன்னுடனிருந்த போராளிகள் சிலருடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களில் மாறிமாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார். ஆனால்இ காலப்போக்கில்இ வீரச்சாவுகள்இ காணாமல் போதல்கள்இ சிங்களப் படையினரிடம் சென்று சரணடைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

இந்த நிலையில்இ தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் – மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம்இ பின்பு அவர்களது ஏற்பாட்டில்இ அவர்களது உதவியுடன் மட்டக்களப்புஇ வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார். இந்த நேரத்தில்இ மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால்இ இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும்இ இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்

புலிகள் மீதான பயங்கரவாத்ச் சாயத்தை தலைவர் உயிரை கொடுத்துத் தான் கழுவமுடியும் அதே நேரம் அதிகளவான மக்கள் அழிவின் ஊடாக இலங்கை அரசு பயங்கரவாதியாகும். அதன் பின்னரான தொடர்ச்சியில் புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் சுதந்திரப்போராட்டத்துக்கு தலைமை ஏற்று வெற்றி பெறும். புலநாய்வுத்துறையின் பல கணக்குகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாகவே முடிந்தது. இறுதி யுத்தத்தில் எதிரியிடம் பிடிபடமால் அதிகளவு உயிர்தப்பியவர்கள் இந்தத் துறையினரே. எந்தவகையிலும் இவர்களின் கூற்று நம்பகத்தன்மையற்றது. போராட்ட வீழ்ச்சியையும் புலநாய்வுத்துறையையும் பிரித்துப் பார்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான பயங்கரவாத்ச் சாயத்தை தலைவர் உயிரை கொடுத்துத் தான் கழுவமுடியும் அதே நேரம் அதிகளவான மக்கள் அழிவின் ஊடாக இலங்கை அரசு பயங்கரவாதியாகும். அதன் பின்னரான தொடர்ச்சியில் புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் சுதந்திரப்போராட்டத்துக்கு தலைமை ஏற்று வெற்றி பெறும். புலநாய்வுத்துறையின் பல கணக்குகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாகவே முடிந்தது. இறுதி யுத்தத்தில் எதிரியிடம் பிடிபடமால் அதிகளவு உயிர்தப்பியவர்கள் இந்தத் துறையினரே. எந்தவகையிலும் இவர்களின் கூற்று நம்பகத்தன்மையற்றது. போராட்ட வீழ்ச்சியையும் புலநாய்வுத்துறையையும் பிரித்துப் பார்க்கமுடியாது.

தலைமை வன்னிக்கு வாவென்று கூப்பிட ஒளிச்சு இத்தாலிக்கு ஓடிவந்த புலநாய் ஆட்களைக் குழப்பும் அறிக்கையை நிறுத்தினாலேயே பல குழப்பங்கள் தீரும். இந்தப் புலநாய் அறிவழகன் என்ற பெயரைக் கொண்ட மறைந்த ஒரு புலனாய்வு மாவீரரின் பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டு அடுத்த தலைமைக் கனவில் குட்டையைக் குழப்புவதை நிறுத்துவிக்க யாராவது முயற்சி செய்யுங்கள். அனைத்துலகச் செயலகத்து நோர்வேத் தலைவனையும் இந்தப் புலநாய் தனது கையில் வைத்து விளையாடும் விளையாட்டைப் புரிந்து புலத்துப்புலிகள் செயற்படுவது பல குழப்பங்களிலிருந்து மீளுவதற்கான பாதையைத் தெளிவாக்கும்.

நீங்கள் சொல்லும் தகவல் வெளியக புலநாய்வு பிரிவின் மீதான நம்பிக்கையை தான் குறை கூறுகிறது...

இப்படி பல குழப்பமான விடயங்கள் பல இருந்தாலும் இவைகளை கிண்ட எனக்கு எந்த வகையிலும் உடன்பாடுகிடையாது...

வெளியகப்புலனாய்வு என்ற பெயரை வைத்துக் குலைத்துக் கொண்டிருக்கும் புலநாயின் குரைப்பு மட்டுமே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

இவைகளைக் கிண்டாது விடுவீர்களானால் எல்லாவற்றையும் இந்தப் புலநாய் புதைகுழிதோண்டிப் புதைத்துவிடும்.

புலிகள் மீதான பயங்கரவாத்ச் சாயத்தை தலைவர் உயிரை கொடுத்துத் தான் கழுவமுடியும் அதே நேரம் அதிகளவான மக்கள் அழிவின் ஊடாக இலங்கை அரசு பயங்கரவாதியாகும். அதன் பின்னரான தொடர்ச்சியில் புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் சுதந்திரப்போராட்டத்துக்கு தலைமை ஏற்று வெற்றி பெறும். புலநாய்வுத்துறையின் பல கணக்குகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாகவே முடிந்தது. இறுதி யுத்தத்தில் எதிரியிடம் பிடிபடமால் அதிகளவு உயிர்தப்பியவர்கள் இந்தத் துறையினரே. எந்தவகையிலும் இவர்களின் கூற்று நம்பகத்தன்மையற்றது. போராட்ட வீழ்ச்சியையும் புலநாய்வுத்துறையையும் பிரித்துப் பார்க்கமுடியாது.

பன்னிய பிட்டிய எனும் இடத்தில் நடந்த மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கவின் மீதான தாக்குதலுக்கு நேரடியா சம்பந்த பட்ட ஒரு புலநாய்வாளர் வன்னிக்கு தப்பி செண்று இருந்தார்... அவர் வன்னி போனது அதுதான் முதற்தடவை... பரமியின் தாக்குதலின் பின்னர் அவர் புலநாய்வு துறையில் முக்கிய இடம் அவருக்கு... பல இரகசியங்களை அறிந்து கொள்ளக்கூடிய உன்னத இடம் அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது... இறுதி போரின் கடைசி நாட்களில் வெளியில் மக்களோடு மக்களாக வந்த அவர் கடைசி நாள் மக்கள் வெளியேறி வந்தபோது இராணுவத்தோடு இணைந்து நிண்று மக்களில் இருந்து போராளிகளையும் ஆதரவாளர்களையும் பிரித்து எடுக்கும் பொறுப்பில் ஒரு பாதையில் நிண்று இருக்கிறார்...

இலங்கை இராணுவம் எவ்வளவு தூரம் இறங்கி நிண்று வேலை செய்து இருக்கிறது என்பதுக்கு இது நல்ல உதாரணம்... எங்களின் புலநாய்வு துறை அவ்வளவுக்கு ஏமாற்ற பட்டு இருக்கிறது...

இதோடு சம்பந்த பட்ட செய்தி ஒண்று கொஞ்சம் விரிவாக புரிய வைக்கும்...

Police are also probing the anonymous call that the telephone operator at the National Hospital had received warning them to keep the morgue ready for the body of an Army General.

http://sundaytimes.lk/060702/news/n3.0.html

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ராம் தன்னுடைய அறிக்கையை ஒலிவடிவிலும் கொடுத்தது மட்டுமல்ல அறிக்கையிலும் தளபதி ராம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்னார்..ஆனால் தலைமைச்செயலகத்தின் பெயரில் அறிக்கை விட்டவரிற்கு பெயர் கிடையாதா??அல்லது பெயர் இன்னமும் வைக்கவில்லையா?? ஊர் பெயர் கையெழுத்து இல்லாமல் புலிகளின் பெயரில் தலைமைச்செயலகம் என்று அறிக்கை விட்டு யாரை சுத்துகிறார்கள்... தலைமைச் செயலகம் எங்கு இயங்குறது என்றாவது போட்டிக்கலாமே..அதற்காக ராம் எங்கு இருந்து அறிக்கை விட்டவர் என்று கேட்டு புத்திசாலித்தனத்தை காட்டவேண்டாம்; ஏனென்றால் ராம் பல காலமாகவே வாழுமிடம் காட்டுப்பகுதிகள் என்பது அனைவரும் அறிந்த விடயம்..ஆனால் தலைமைச் செயலகம் இருந்தது கிளிநொச்சியில்..அது இப்பொழுது எங்கு இயங்குகிறது?? பிரான்ஸ் நாட்டிலா??? ஏனென்றால் தலைமைச்செயலகம் என்கிற அறிக்கை தயாரிக்கப்பட்டது பிரான்ஸ் நாட்டில்...

Edited by sathiri

வெளியகப்புலனாய்வு என்ற பெயரை வைத்துக் குலைத்துக் கொண்டிருக்கும் புலநாயின் குரைப்பு மட்டுமே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

இவைகளைக் கிண்டாது விடுவீர்களானால் எல்லாவற்றையும் இந்தப் புலநாய் புதைகுழிதோண்டிப் புதைத்துவிடும்.

தங்களின் பாதுகாப்பில் இருந்த இராம் அண்ணையை நாங்கள் ஏமாந்து போய் இராணுவத்தின் புலநாய்வாளர்களிடம் கையளித்தோம் எண்று தங்களின் நிலையை அவர்களே சொல்லும் போது நான் என்னத்தை சொல்ல வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

தயா நீங்கள் சொல்கிறவர்தான் வவுனியவில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து நின்று பல போராளிகளைபிடித்து விசாரணைகள் செய்து மண்டையிலை போட்டவராம்..அவர் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்களில் ஒருத்தர்.. அந்தளவிற்கு இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு புலிகள் அமைப்பில் ஊடுருவியிருந்திருக்கிறார்கள்.. ஆனால் இங்கு தாராக்கி போன்றோர்..தாங்கள் ஏதோ புலனாய்வு பிரிவு போல கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..புலத்திலும் இலங்கை இராணுவத்தின் ஊடுருவல் எந்தளவு வேலை செய்கிறது என்பதற்கு இது ஒரு ஊதாரணம்..

Edited by sathiri

தயா நீங்கள் சொல்கிறவர்தான் வவுனியவில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து நின்று பல போராளிகளைபிடித்து விசாரணைகள் செய்து மண்டையிலை போட்டவராம்..அவர் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்களில் ஒருத்தர்.. அந்தளவிற்கு இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு புலிகள் அமைப்பில் ஊடுருவியிருந்திருக்கிறார்கள்.. ஆனால் இங்கு தாராக்கி போன்றோர்..தாங்கள் ஏதோ புலனாய்வு பிரிவு போல கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..புலத்திலும் இலங்கை இராணுவத்தின் ஊடுருவல் எந்தளவு வேலை செய்கிறது என்பதற்கு இது ஒரு ஊதாரணம்..

இவர்களை இரட்டை முகவர்கள் எண்று உலகளாவிய ரீதியில் சொல்வார்கள் சாத்து... இரண்டு பக்கமும் வேலை செய்யும் இவர்கள் யாராவது ஒரு பக்கத்துக்குதான் விசுவாசமாக இருப்பார்கள்... அனேகர் அதிக பணமும் வசதியும் கொடுக்கும் சிங்களவருக்கு விசுவாசமாக இருந்து இருக்கிறார்கள்...

Edited by தயா

ராம் தன்னுடைய அறிக்கையை ஒலிவடிவிலும் கொடுத்தது மட்டுமல்ல அறிக்கையிலும் தளபதி ராம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்னார்..

:(

உன்மையிலேயே தலைவர் இல்லை எண்டா, எமக்கு தனிநாடே வேண்டாம், நாடு கிடச்சா நம்ம தமிழன் அத பிச்சு பிச்சு திண்டுடுவான்,

தமிழர அழிக்க சிங்களவன் சும்மா கொஞ்சநாளேக்கு நாட்ட குடுக்கலாம்.. இது தெரியாம அவன் வீணா கஸ்ட படுறான், தலைவர் இருந்தா மட்டுமே தமிழ் ஈளம் சாத்தியம்,

(இந்த கருத்தும் சர்வாதிகார ஆட்சியாளர்களாள நீக்கபடும் எண்டு நம்பிறன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது குழம்பிய குட்டையை இன்னும் குழப்புவதில் முதலிடம் 'புலநாய்வுத்துறைக்கு'

இரண்டாம் இடம் 'ராம்'

மூன்றாம் இடம் உருத்திரகுமார்

ஆறுதல் பரிசு: புலத்துப் பொறுப்பாளவர்களுக்கு

வெற்றிகரமாக தோற்றவர்கள்: சாதாரண தமிழ்மக்கள்

நிரந்தரமாக தோற்றவர்கள்: ஈழத்தமிழர்கள்

Ex-LTTE leader slams Prabhakaran on Heroes' Day

A. Ram, a top LTTE leader now in the custody of the Sri Lankan government, has issued a Heroes’ Day message condemning the way Velupillai Prabhakaran had led the LTTE and the Tamil people, the Tamilnet website reports.

Ram had blamed Prabhakaran’s “uncompromising policy” for the defeat of the Tamil armed struggle and the annihilation of the LTTE in Sri Lanka.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=69294

Ex-LTTE leader slams Prabhakaran on Heroes' Day

A. Ram, a top LTTE leader now in the custody of the Sri Lankan government, has issued a Heroes’ Day message condemning the way Velupillai Prabhakaran had led the LTTE and the Tamil people, the Tamilnet website reports.

Ram had blamed Prabhakaran’s “uncompromising policy” for the defeat of the Tamil armed struggle and the annihilation of the LTTE in Sri Lanka.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=69294

சிங்களவரின் ஊடகம் ஒண்று யாருக்கு சார்பாக எழுதுகிறது என்பது மட்டும் இல்லாது கருத்தியலை யாருக்கு சார்ப்பாக திணிக்க முயல்கிறது என்பதும் தெளிவு... உண்மையில் இராம் அண்ணை இராணுவ பிடியில் இருந்தால் இப்படி எழுத விடப்பட்டு இருக்காது... அதுவும் செய்தித்தடையும் , அரசபடைகளால் மட்டுறுத்தலும் நடக்கும் ஒரு நாட்டில்...

dailymirror இப்ப மட்டும் இல்லை நீண்ட காலமாக தமிழ் மக்களிற்கு ஏற்று கொள்ளும் வண்ணம் கருத்துக்களையும் கட்டுரைகளையும் வரைந்து வருகிறது... அதன் மூலம் தமிழ் ஊடகங்களின் பார்வையையும் தன்மீது வைத்திருக்க செய்து தனது கருத்து திணிப்பை செய்து வருகிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.