Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிவாஜிலிங்கம் அறிவிப்பு?

Featured Replies

சம்மந்தர் போட்டியிடாவிட்டால் சிவாஜிலிங்கம் களமிறங்குவார். இரண்டு சிங்கள தேசியவாதிகளை ஆதரிக்காது ஒரு தமிழன் களமிறங்குவது அவசியம்.

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயே‌ச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முள்வேலி முகாம்களில் உள்ள எந்த தமிழர்களையும் அவர்களுடைய வாழ்விடங்களில் இலங்கை அரசு மறு குடியமர்த்தம் செய்யவில்லை.

அவர்களை 50 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர் என்று முகாம்களில் இருந்து விடுவித்தார்கள். அவ்வாறு முகாம்களிலிருந்து வெளியேறிய மக்கள் வீடு, வாச‌லின்றி வசிப்பிடங்கள் ஏதுமின்றி அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எங்கு செல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

எனவே ஐ.நா.மன்றமும், இந்திய அரசும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அங்குள்ள தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைத்து தர வேண்டும். அவர்கள் ஏற்கனவே வசித்த வாழ்விடங்களில் அவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

முள்வேலி முகாம்களில் உள்ளவர்களை தவிர, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களும், தமிழ் இளம் பெண்களும் தனி இடங்களில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. அவர்களை பற்றிய முழு விவரங்களையும் இலங்கை அரசு வெளியிட வேண்டும். இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி வசதி பெற உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு வெளியேற்றியதே தவிர, தமிழக எம்.பி.க்கள் குழுவின் பயணத்தால் அல்ல. தமிழக எம்.பி.க்கள் குழு அங்கு நேரில் சென்று அந்த காரியத்தை செய்ய முடியும் என்றால் போர் முடிந்த 4 மாதங்களாக இங்கிருந்து ஏன் அவர்கள் அந்த காரியத்தை செய்யவில்லை.

இப்படி தமிழர்கள் மிகவும் அவதிப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்றொழித்த அதிபர் ராஜபட்சேவும், முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்சேவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படுகொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும். ராஜபக்சேவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும். இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயே‌ச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் எ‌ன்று சிவாஜிலிங்கம் கூ‌றினா‌ர்.

http://tamilskynews.org/index.php

ஆகா தமிழன் வீரத்துக்கு குறைவில்லை வெல்டன் சிவாஜிலிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அடுத்த துருப்புச் சீட்டுத்தான் ......

இப்போ .... சிவாஜிலிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் என்றுமில்லாதவாறு ஈழதமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதை காணமுடிகிறது என்னவாக இருக்கும் ??? :D:D

  • தொடங்கியவர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இந்திய "ராஜ்ய சபா"வில் ஒரு புலம்பல் செய்துள்ளார். இலங்கைப் பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணவேண்டும் என்பதுதான் அந்த பிதற்றல். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாணா வேண்டுமாம். அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் முக்கால் வாசிக்கு மேற்பட்டவர்களுக்கு 13வது திருத்தம் என்றால் என்ன வென்றே தெரியாது. அமைச்சருக்கே அதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பது சந்தேகம். அவரது உதவியாளர்கள் சொன்னதைச் சொல்லியிருக்கலாம்.

பலபலி எடுத்த 13வது திருத்தம்

இலங்கைக்கு இந்தியா அமைதிப்படை என்னும் வெறி நாய்களை அனுப்பி பல கொலைகள் பாலியல் வல்லுறவுகள் சொத்தழிப்புகள் செய்து இலங்கையின் அரசியல் அமைப்பில் 13வது திருத்தம்(திருகுதாளம்) செய்யப் பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யும் போதே இலங்கைக்கு இந்தியா திரைமறைவில் சொல்லிவிட்டது இதை நிறைவேற்றத் தேவையில்லை என்று. இன்றுவரை அது நிறைவேற்றப் படவில்லை. அதை நிறைவேற்ற இதுவரை இந்தியா இலங்கைக்கு எந்த வற்புறுத்தல்களும் மேற்கொள்ளவில்லை. 22வருடங்களாக அதை நிறைவேற்றத் திராணியில்லாத இந்தியா இபோது மீண்டும் அதைப் பற்றிப் பிதற்றுகிறது. அதற்கும் அப்பால் சென்று தீர்வுகாணவேண்டுமாம். கூரையில் ஏறிக் கோழி பிடிக்க திராணியில்லாத இந்தியா வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டப் போகிறதாம்.

அதிகாரப் பரவலாக்கம் என்பது கெட்டவார்த்தை

சிங்களவர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்பது மிகமிக கெட்டவார்த்தை. அதை பற்றிப் பேசுபவர்கள் தேசத் துரோகிகிள். 13வது திருத்தம் என்பது அதிகாரத்தில் சிறிதளவு பரவலாக்கம் செய்கிறது. ஆனால் ஒட்டு மொத்த முழு அதிகாரமும் இலங்கை குடியரசுத் தலைவரிடமும் இலங்கைக் பாராளமன்றத்திடமும் இருக்கும்.

வாக்குறுதியை மீறிய அயோக்கிய இந்தியா

இலங்கையின் வடகிழக்கு மகாணங்களை இணைத்து தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கப் படும் என்று வாக்குறுதி அளித்த இந்தியா வடகிழக்கை பிரித்தபோது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்தது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதக் குழுக்களை ஆயுதங்களை கையளிக்கும் படியும் இலங்கைத் தமிழர்களின் பாது காப்புக்கு தான் பொறுப்பு என்றும் 1987இல் உறுதி கூறிய இந்தியா அதன் பின் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப் படுவதற்குக் காரணமாக இருந்தது. இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் உலகில் எங்கு நடந்தது?

இன்னும் ஒரு திருகுதாளம்.

இப்போது இந்தியா "13வது அரசியல் அமைப்பிற்கு அப்பால்......" என்ற பதத்தைப் பாவிப்பது இன்னும் மோசமான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய இந்திய மலையாளப் பார்பனக் கொள்கை வகுப்பாளர்கள் தயாராகுகிறார்கள் என்றே எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் என்றுமில்லாதவாறு ஈழதமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதை காணமுடிகிறது என்னவாக இருக்கும் ??? :D:D

முன்னுக்கும் , பின்னுக்கும் ...... ஆப்பு வைக்கத்தான் ...... :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

1

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிறீ லங்கா அதிபர் மகிந்தராஜபக்ச்ச மீதான நண்பர் சிவாஜிலிங்கத்தின் கோபம் நியாயமானது. எனினும் மகிந்த மீதான கோபத்தை நிறைவேற்றும் வழி தேர்தலில் மகிந்த வெற்றிபெற உதவுவதா அல்லது ஆரது வெற்றி வாய்ப்பை சிக்கலாக்குவதா என்ற வரலாற்றுக் கேழ்வி இனக்கொலை ஆபத்துக்கும் இன ரீதியான கூட்டு தண்டணைகளுக்கும் முகம்கொடுத்து நொந்து நூலாகிப் போன இலங்கைத் தமிழர் முன்னே உள்ளது. மகிந்தவின் வெற்றி சர்வதேச சமூகமும் தமிழர்களும் செயல்படுவதற்க்கான கொஞ்ச நஞ்ச வெளியையும் spae இல்லாதொழித்துவிடும்.

இந்த தேர்தல் வெற்றி தமிழரை முழுமையாக அடக்கவும் இந்தியாவை வெளியேற்றி சீனாவை உறுதியாக இஅலங்கையில் காலூன்ற வைக்கவும் மகிந்த ராஜபக்சவுக்குத் தேவைப் படுகிறது. மீண்டும் அத்தகைய ஒரு தவறை இந்தியா செய்தாலும் நாம் செய்யக்கூடாது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

.

மகிந்தவின் தோல்வி ஏற்கனவே .... யாழ் களத்தின் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அடுத்தது யார் என்று பார்த்தால் ...... எதிர்க்கட்சியான பொது வேட்பாளர் சரத் தான் நாம் விரும்பியோ ....

விரும்பாமலோ ..... வரப்போகின்றார். இந்த கூட்டமைப்பு இன்னும் இந்தியாவின் சீலைத்தலைப்பில் தொங்க்கிக் கொண்டிருக்காமல்...

சொந்த முடிவெடுப்பது அனைத்து தமிழருக்கும் நல்லது.

கூட்டமைப்பில் நல்ல மூளை வளர்ச்சியான ஆட்களை ஒட்டுக்குழு சுட்டுக்கொன்றது கவலையான விடயம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் மகேஸ்வரன் உட்பட.

தமிழ் அரசியல்வாதிகள் கொஞ்சம் சேவ் எடுத்து புதுமையாக சிந்திப்பது வருங்கால தமிழருக்கு நல்லது.

இதுக்கும் உங்களுக்கு லாயக்கு இல்லை என்றால் நஞ்சை குடிச்சு சாகுங்கள்.

என்னை பொறுத்தவரை தமிழர் ஒருவர் போட்டி போடனும்... எங்கட வாக்கு சிங்களவனுக்கு போக விடேலா... சரத்... மகிந்த ரண்டுபேரும்; எங்கட இனத்த அழிச்சவங்க தான்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போட்டி போடுறதிலை பிரச்சினையில்லை .

போட்டி போட்டாலும் தோற்கப்போவது நிச்சயம்.

அதனால் வெல்லப் போகும் கூட்டமைப்புடன் ஒரு முடிவுக்கு வருவது நல்லது .

நாங்கள் கனக்க யோசிச்சால் ..... தாடி ,கருணா அம்மான் முன்னுக்கு போய் நிற்பினம்.

பிறகு தோத்த மகிந்தா , தமிழருக்கு உரிமை கொடுக்க சொல்லி குரல் குடுப்பார் , நாங்கள் அதுக்கு கொடி ஆட்டிக் கொண்டே இருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பில் நல்ல மூளை வளர்ச்சியான ஆட்களை ஒட்டுக்குழு சுட்டுக்கொன்றது கவலையான விடயம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் மகேஸ்வரன் உட்பட.

தமிழ் அரசியல்வாதிகள் கொஞ்சம் சேவ் எடுத்து புதுமையாக சிந்திப்பது வருங்கால தமிழருக்கு நல்லது.

இதுக்கும் உங்களுக்கு லாயக்கு இல்லை என்றால் நஞ்சை குடிச்சு சாகுங்கள்.

:D:D:D:lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத பட்சத்தில் சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும், தமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத பட்சத்தில் தாம் நேரடியாக தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இந்தத் தேர்தலில் நிராகரிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கபட்டிருந்த மக்கள் தற்காலிக முகாம்களுக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் தமிழர்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதகா அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இடம்பெயர் முகாம்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும், புலிகளின் சார்பில் நிதி திரட்டியதாகவும் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டு வருவதாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net

என்னை பொறுத்தவரை தமிழர் ஒருவர் போட்டி போடனும்... எங்கட வாக்கு சிங்களவனுக்கு போக விடேலா... சரத்... மகிந்த ரண்டுபேரும்; எங்கட இனத்த அழிச்சவங்க தான்....

உண்மை...

சிங்களவன் ஒருவனை தமிழர்கள் எல்லாமாக சேர்ந்து தெரிவு செய்து போட்டு உலகுக்கு சொல்ல போகினம் நாங்கள் எல்லாம் சிங்கள தலைமையை ஏற்று கொண்டு விட்டோம், ஆகவே அந்த நல்லவர் தரும் தீர்வை நாங்கள் மனதார ஏற்று கொள்கின்றோம்... எங்களின் பிரச்சினைகளை நாங்கள் தெரிவு செய்த எங்களின் தலைவர் தீர்த்து விடுவார் எண்டு..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தின் இந்த அறிவிப்பு தடுமாறும் தமிழர் கூட்டமைப்புக்கும் அதனை தற்போது வழிநடத்துகின்ற இந்தியாவுக்கும் பலத்த அடி.கூட்டமைப்பை ஒரு தெளிவான நிலையெடுக்க உதவும்.ரோ சிவாஜிலிங்கத்தைப் போட்டுத் தள்ளினாலும் ஆச்சரியமில்லை.ஆகவே அவர் தன் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.சக உறுப்பினர் உள்ளே இருக்கும் பொழுது கூட்டமைப்பு அவரின் விடுதலை பற்றிய வேலைகளை செய்யாமல் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக பேசுவது வேதனையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

மகிந்தவின் தோல்வி ஏற்கனவே .... யாழ் களத்தின் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மகிந்தாவின் தோல்வி யாழ்களக்கருத்துக் கணிப்பின் மூலம் தெரிகிறதா? சிரிப்பாய் இருக்கிறது. யாழில் கருத்துக்கணிப்பில் பங்கு பெற்றவர்கள் எல்லோரும் ( நான் உட்பட) வெளினாடுகளில் இருக்கும் சிறுபான்மைத்தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் தோல்வி யாழ்களக்கருத்துக் கணிப்பின் மூலம் தெரிகிறதா? சிரிப்பாய் இருக்கிறது. யாழில் கருத்துக்கணிப்பில் பங்கு பெற்றவர்கள் எல்லோரும் ( நான் உட்பட) வெளினாடுகளில் இருக்கும் சிறுபான்மைத்தமிழர்கள்.

இதே விடை சிங்கள தளத்திலும் கிடைக்க பெற்றது ஆகையால் மகிந்த் தோற்பாரோ?சிரிப்பாய் இருக்கிறது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.