Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கலை நிறுத்த வேண்டும்

Featured Replies

கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ மயமாக்கல் உடனடியாக

நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச்சட்டப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெவித்தார்.

சம்பந்தன் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது: திருகோணமலை மாவட்டம் நாலாபுறம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ சூழலுக்குள் சிக்குண்டுள்ள இங்குள்ள தமிழ் மக்களின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் திட்டமிடப்பட்டவகையில் இடிக்கப்பட்டு வருகின்றன. தூர் சங்குவேலிப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க சிவன்கோவிலின் சிவலிங்கங்கள் இடித்து உடைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான திட்டமிடப்பட்ட தீய செயல்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே ஆட்சி நடத்தப்படுகின்றது. கிறிஸ்தவ ஆலயங்களும் உடைக்கப்படுகின்றன. தாக்குதல்களுக்கு இலக்காகின்றன. கோவில்கள் இடிக்கப்படுவதானது தெய்வ நிந்தனை மட்டுமல்ல, அது மத நிந்தனையுமாகும்.

இராணுவ மயமாக்கல் காரணமாகவே புராதன வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலயங்கள் இடிக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை செய்வதற்கே இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இராணுவமயமாக்கலை நிறுத்தி அதியுயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்க வேண்டும். மாகாண ஆளுநர்களாக அரச அதிபர்களாக படை அதிகாகளை நியமிப்பதன் விளைவுகளே இதுவாகும்.

படங்கல்....

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=113:2009-12-09-10-04-13&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுபுரியல்ல. இப்படியெல்லாம் பாராளுமன்றத்தில சொல்லி சிங்களவன் செய்வான் என்றிருந்தால்.. நாங்கள் ஏன் ஆயுதம் தூக்கி அடிபட்டு அழிஞ்சம்..! பாராளுமன்றத்தில கத்தி உலகம் கேட்கும் என்றால் தந்தை செல்வா கத்தேக்கையே கேட்டிருக்க வேணும்.

நடக்கிறது நடக்கும்..! எனி அதைத்தடுக்கிற சக்தி தமிழனிடம் இல்லை..! இன்னொரு பிரபாகரன் படை கொண்டு வரும் வரை அது சாத்தியமும் இல்லை. இது வெறும் அரசியல் முழக்கங்களாகவே இருந்து இறுதில் பாராளுமன்ற நகர்வின் முடிவோடு சமாதியாகிவிடும்..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் கருத்தறிந்து அவர்களது நிலைபாட்டில் நின்று அவர்களோடு இணைந்து செயல்படும் உலக நாடுகளின் மத்தியில் வெற்றிகரமாகச் செயல் படக்கூடிய புலம் பெயர்ந்த அமைப்புகளால் மட்டும்தான் இருண்டுபோன எங்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். இனகொலைக்கு பின்னர் மேற்க்கு நாடுகளில் எங்கள் இளைய தலைமுறை முன்னின்ற பெரும் எழுச்சி ஏற்பட்டபோதும் ஏன் எல்லாம் கானல் நீராகிப் போனது?

ஏன் மேற்க்கு நாடுகள்கூட தங்கள் அழுத்தங்களைக் குறைத்து வருகின்றன?

அரசுகள் ஓரளவுக்குமேல் தங்கள் நலன்களை மீறிச் செயல்ப்படாது. மேற்க்கு நாடுகளுடனான எங்கள் இராஜதந்திர தோல்விகளில் இருந்து பாடம் படிக்கும் வகையிலும் வெற்றிகரமான அமைப்பாக மேம்படும் வழிவகைகளைக் கண்டுகொள்ளும் வகையிலும் கருத்தரங்குகள் மகாநாடுகள் மற்றும் காங்கிரஸ் அடிப்படையிலான கலந்துரையாடல்கள் தீர்மானங்கள் எதுவும் இடம் பெறவில்லை. திரும்பவும் எல்லாம் மேற்க்கு நாடுகள் நிராகரித்து விட்ட மேலிருந்து கீழ் (Top to Bottum)அணுகுமுறையாகவே இடம் பெறுகிறது. சுயவிமர்சனம் இல்லாமல் மேற்க்கு நாடுகளால் தடை செய்யப் பட்ட அமைப்பின் ஊடாக அதன் தொடற்ச்சியாக மட்டுமே நாம் செயல் படுவோம் என்கிற சேதி எந்த ஒரு நாட்டுக்கும் உகந்ததாக இல்லை. இதுகாறும் நாங்கள் திரட்டிய சக்தி எல்லாமே கூட உயர்த்திய பதாகைகள் மூலம் இதே சேதியைத்தான் மேற்க்கு நாடுகளுக்குச் சொல்லியிருக்கிறது.

எங்களை தவறான உலக நாடுகளா அல்லது உலக நாடுகளில் இருந்து தனிமைப் படுகிற எங்கள் தவறான அணுகுமுறையா தோற்கடித்தது என்கிற வரலாற்றுக் கேழ்விக்கு பதில் என்ன? புலத்தில் அல்லலுறும் மக்களின் இன்றைய முன்னுரிமைகள் என்ன? இந்த கேழ்விகளின் பதிலில் இருந்துதான், உயர்த்தும் ஆயிரம் பதாகைகளில் இருந்தோ வெளியிடும் பிரகடனங்களில் இருந்தோவல்ல இந்தக் வரலாற்றுக் கேழ்விக்கான பதிலில் இருந்துதான் வெற்றியின் பாதையை நாம் கண்டு கொள்ள முடியும்.

இன்று புலத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் கருத்தறிந்து அவர்களது நிலைபாட்டில் நின்று அவர்களோடு இணைந்து செயல்படும் உலக நாடுகளின் மத்தியில் வெற்றிகரமாகச் செயல் படக்கூடிய புலம் பெயர்ந்த அமைப்புகளால் மட்டும்தான் இருண்டுபோன எங்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.

இப்போது இயங்கும் அமைப்புகளின் வெளித்தோற்றம் ஏற்புடையதாக இருக்கின்றதா?

புதிய அமைப்புகள் உருவாக்கவேண்டுமா?

Edited by kalaivani

இருண்டுபோன எங்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.

மே 19 இற்குப்பின் தான் எமது வாழ்வு இருண்டுபோனதாக உணர்கின்றீர்களா?

Edited by kalaivani

இனகொலைக்கு பின்னர் மேற்க்கு நாடுகளில் எங்கள் இளைய தலைமுறை முன்னின்ற பெரும் எழுச்சி ஏற்பட்டபோதும் ஏன் எல்லாம் கானல் நீராகிப் போனது

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைவாணி, நான் ஒன்றும் அரசியல் அறிஞனோ தீர்க்கத்ரிசியோ அல்ல. எனக்குப் பட்டதை விவாதத்துக்கு விட்டு விவாதத்தினூடாக கற்றுக்கொள்கிறதே நோக்கம். என்கருத்து பழைய அமைப்போ அல்லது புதிய அமைபுகளோ இன்று புலத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் கருத்தறிந்து அவர்களது நிலைபாட்டில் நின்று அவர்களோடு இணைந்து செயல்படும் உலக நாடுகளின் மத்தியில் வெற்றிகரமாகச் செயல் படக்கூடிய வல்லமையைப் பெறவேணும். சர்வதேச இராஜதந்தரிகளும் அறிஞர்களும் பாசிச சொல்லாடல் என வெறுப்புறன் அடையளப் படுத்திய ஏகப்பிரதிநிதித்துவம் நாங்கள் மட்டும்தான் இயங்கலாம் போன்ற சொல்லாடல்களையும் நடைமுறைகளையும் நிராகரிக்க வேண்டு,ம்..பல்வேறு அமைப்புகள் உருவாகட்டும் எத்தனை அமைப்புகள் உருவாகினாலும் அவற்றுடன் ஐக்கிய பட்டு முன்செல்வோம் என்கிற அணுகுமுறை தான் நீண்ட கால அடிப்படையில் நம் இளைய தலைமுறைகளிடம் எடுபடும். அதுதான் எதிர்கால வெற்றிக்கான உத்தியாக இருக்கும் என்கிறது என் நம்பிக்கை. என்னிடம் நேரம் மிச்சமில்லை. தொடர தனிமடல்போடுங்கள் visjayapalan@gmail.com

விவாதம் என்றீர்கள் ஐயா. பிறகென்ன தனிமடல்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

[விவாதம் என்றீர்கள் ஐயா. பிறகென்ன தனிமடல்?] சபாஸ்.

சரியான கேழ்வி நுணாவிலான்.

நானும் ஆயிரம் பிரச்சினைகள் பணிகளுக்குள் போதை பொருளுக்கு அடிமையானதுபோல யாழ்களம் வருவது வாசிப்பது எழுதுவதை இன்னும் விட முடியாமல் தொடர்கிறேன். இதற்க்கு எனக்கு ஈழத்தமிழர்களோடு சம்பந்தப்பட யாழ்க் களம் ஒரு ஊடகமாக இருந்ததும் யாழ்க் கள நிர்வாகம் எனது சுதந்திரத்தில் கைவைக்காமல் இருப்பதும்தான் காரணம். ஆரம்பத்தில் இருந்தே விடுதலை ஆர்வமுள்ல நண்பர்கள் சிலர்

யாழ்க்களம் கடும்போக்காளரது அதில் எழுதாதே என்று சொல்லி வந்தார்கள். எனினும் அவர்கள் ஆதரிக்கும் தமிழ் ஆங்கில ஊடகங்களில்

எங்களைப்போன்ற வாசகர்களின் கருத்துக்கோ விவாதங்களுக்கோ இடமில்லை. நாம் எல்லாம் அறிந்தவர்கள். நாம் எழுதுவதை நீ வாசி என்கிற யதார்த்த வாதிகளின் போக்கைவிட விவாதத்துக்கு இடமழிக்கும் கடும்போக்காளர்கள் முக்கியமானவர்கள் என்றே தோன்றுகிறது. நமது தமிழ் ஆங்கில ஊடகங்கள் விவாதங்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் அவை தொடர்பான விவாதங்களுக்கும் இடமளித்திருந்தால் இந்த நாட்க்கள் அழகானதாக இருந்திருக்கும். ஆனாலும் யாழ்க்களத்திலும் விவாதங்களை விரும்பாத சிலர் தங்கள் கை நிறைய மலத்தை வைத்துக் கொண்டு அலைகிறார்கள் அல்லவா? உண்மையிலேயே எனக்கு நேரமில்லை. திண்ணைக்கு வராதே என்று சொன்ன நண்பர்களால் என் நேரம் கொஞ்சம் மீதமாகி இருக்கு. *** அதனால்தான் தனி மடல் பற்றி குறிப்பிட்டேன். மற்றும்படி ஒன்றுமில்லை.நேரமில்லை நேரமில்லை நேரமென்பதில்லையே. ஆனாலும் உங்களோடு கலந்துரையாட விருப்பம்.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

.

-----

திண்ணைக்கு வராதே என்று சொன்ன நண்பர்களால் என் நேரம் கொஞ்சம் மீதமாகி இருக்கு.

------

பொயற் அண்ணை ,

யாழ்களம் திண்ணையை யாருக்காவது விற்றுவிட்டதா ? அல்லது குத்தகைக்கு கொடுத்துள்ளதா ?

திண்ணை எல்லாருக்கும் பொதுவானது . அங்கு யாராவது வரவேண்டாம் என்றால் .....

நீங்கள் போகாமல் இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

Edited by தமிழ் சிறி

நன்றி கலைவாணி, நான் ஒன்றும் அரசியல் அறிஞனோ தீர்க்கத்ரிசியோ அல்ல. எனக்குப் பட்டதை விவாதத்துக்கு விட்டு விவாதத்தினூடாக கற்றுக்கொள்கிறதே நோக்கம். என்கருத்து பழைய அமைப்போ அல்லது புதிய அமைபுகளோ இன்று புலத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் கருத்தறிந்து அவர்களது நிலைபாட்டில் நின்று அவர்களோடு இணைந்து செயல்படும் உலக நாடுகளின் மத்தியில் வெற்றிகரமாகச் செயல் படக்கூடிய வல்லமையைப் பெறவேணும். சர்வதேச இராஜதந்தரிகளும் அறிஞர்களும் பாசிச சொல்லாடல் என வெறுப்புறன் அடையளப் படுத்திய ஏகப்பிரதிநிதித்துவம் நாங்கள் மட்டும்தான் இயங்கலாம் போன்ற சொல்லாடல்களையும் நடைமுறைகளையும் நிராகரிக்க வேண்டு,ம்..பல்வேறு அமைப்புகள் உருவாகட்டும் எத்தனை அமைப்புகள் உருவாகினாலும் அவற்றுடன் ஐக்கிய பட்டு முன்செல்வோம் என்கிற அணுகுமுறை தான் நீண்ட கால அடிப்படையில் நம் இளைய தலைமுறைகளிடம் எடுபடும். அதுதான் எதிர்கால வெற்றிக்கான உத்தியாக இருக்கும் என்கிறது என் நம்பிக்கை. என்னிடம் நேரம் மிச்சமில்லை. தொடர தனிமடல்போடுங்கள் visjayapalan@gmail.com

jdp kly; Clhf ehk; tpthjpg;gJ vkf;fpilahd fUj;Jg; gupkhw;wkhfj;jhd; ,Uf;Fk;. aho; epWthfk; mDkjpj;jhy; gy;NtW tplaq;fs; njhlu;ghf ,q;NfNa fUj;Jf;fisg; gupkhwpf;nfhs;syhk;.

Edited by kalaivani

திருகோணமலையை இராணுவ மயமாக்கி கனகாலமாச்சு...

இப்ப சிங்கள மயமாக்கள் நடக்குது...

நான் கண்டதுகளை நினைச்சா வயிறு எரியுது.

Edited by Sooravali

நாடுகளால் தடை செய்யப் பட்ட அமைப்பின் ஊடாக
இங்கு எழுதப்படும் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்ற கட்டத்துக்குள் ஒருசிலரால் கொண்டுவரமுயற்சிக்குப்படுவதுமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒன்றுதான்

தமிழ்மக்களுக்கு நேர்மையுடன் அர்ப்பணப்புடன் 30வருடங்களுக்கு மேலாக செயற்பட்ட அமைப்பு.

அதை தடைசெய்த காரணிகள் தடைசெய்தநாடுகளுக்கு மட்டுமே தெரிந்த பரகசியம்.

எமது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியும் தங்களுக்காக உண்மையுடனும் இதயசுத்தியுடனும் செயற்பட்டவர்கள் யார்? என்று.

***

உலகவரலாற்றில் நிரந்தரமாகவே வெறுக்கப்பட்டதும் நிரந்தரமாக ஆதரிக்கப்பட்டதுமான அமைப்பு எதுவே இல்லை.

நாம்தான் முயலவேண்டும்.

பொய்களையும் புனைவுகளையும் சொல்லி தம்மை ராசதந்திர விம்பங்களுக்குள் பெரிதாக்கும் வீரர்கள் மே19க்கு பிறகு அதிகமாய் வலம்வருகிறார்கள்.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சர்வதேசம் சர்வதேம் என்று சொல்லித்தான் நாங்கள் இன்றைக்கு இந்த நிலமையில் இருக்கிறம்.சர்வதேசத்தைப் பற்றிக் கவலைப் படாமல் இராணுவம் வன்னியைச் சுற்றி வளைத்த போது கொழும்பில் நாலு இடங்களில் குண்டுகள் வெடித்திருந்தால் சர்வதேசம் சொல்லாமலே சிறிலங்கா நிற்பாட்டியிருக்கும். சர்வதேசமும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வாங்கோ என்று காலில் விழாத குறையாய் கேட்டிருக்கும்.நாங்கள் மிகவும் நல்லவர்களாக இருந்ததுதான் நடந்த பிழை.ஈராக் ஆப்கான் போன்ற இடங்களில் அவர்கள் சர்வதேசத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை.அங்கே ஒவ்வொரு வெளிநாட்டு இராணுவம் விழ விழ இங்கே அரசுகளுக்கு பத்திரிகைகள் தலையிடி கொடுக்கின்றன. சிறிலங்கா அரசை பேர்க் குற்றத்திற்காக விசாரிக்க வேண்டும் என்ற சொன்ன அமெரிக்கா இப்ப என்ன சொல்லுது.அதையெல்லாம் தூக்கிப் பிடிச்சமெணடா சிறிலங்காவை நாங்கள் இழந்துவிடுவோம் என்று வெட்கமில்லாமல் சொல்லுது.இந்த கோட்சூட் போட்ட கள்ளரை அனுசரிச்சு போகவேணுமெண்டு சொல்லாதையுங்கோ பொய்ட் அவர்களே.உங்களுக்கு புலிகளை முன்னிறுத்தினது பிடிக்கவில்லை என்று சொல்லுங்கோ.எங்கட பிரச்சனையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுவந்தது புலிகளின் போராட்டம்தான். எந்தக் காரணமும் இல்லாமல் சிறிலங்காவில் புலிகளைத் தடைசெய்ய முன்னமே தடை செய்த சர்வதேசத்தை நம்பி பிரயோசனம் இல்லை.இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் புலிகள் மலையாக வளர்ந்தவர்கள்.இப்ப சர்வதேசம் இன்னுமொரு பகையைத் தேவையில்லாமல் தேடிவிட்டது.தமிழர்கள் தலிபான்கள் பாணியில் மாறினால் நிலமை மிக மோசமாகும் அப்படியொரு நிலமையை நோக்கித்தான் தமிழரை எல்லோரும் சேர்ந்து தள்ளி விட்டிருக்கிறார்கள். இல்லையென்றால் கொல்லச் சொன்னவனும் கொன்றவனும் ஜனநாயக தேர்தலில் எதிர் எதிர் நிற்பார்களா? யாராவது ஒருவருக்கு வாக்குப் போடுங்கோ என்று சர்வதேசம் சொல்லுமா?

நன்றி கலைவாணி, நான் ஒன்றும் அரசியல் அறிஞனோ தீர்க்கத்ரிசியோ அல்ல. எனக்குப் பட்டதை விவாதத்துக்கு விட்டு விவாதத்தினூடாக கற்றுக்கொள்கிறதே நோக்கம். என்கருத்து பழைய அமைப்போ அல்லது புதிய அமைபுகளோ இன்று புலத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் கருத்தறிந்து அவர்களது நிலைபாட்டில் நின்று அவர்களோடு இணைந்து செயல்படும் உலக நாடுகளின் மத்தியில் வெற்றிகரமாகச் செயல் படக்கூடிய வல்லமையைப் பெறவேணும். சர்வதேச இராஜதந்தரிகளும் அறிஞர்களும் பாசிச சொல்லாடல் என வெறுப்புறன் அடையளப் படுத்திய ஏகப்பிரதிநிதித்துவம் நாங்கள் மட்டும்தான் இயங்கலாம் போன்ற சொல்லாடல்களையும் நடைமுறைகளையும் நிராகரிக்க வேண்டு,ம்..பல்வேறு அமைப்புகள் உருவாகட்டும் எத்தனை அமைப்புகள் உருவாகினாலும் அவற்றுடன் ஐக்கிய பட்டு முன்செல்வோம் என்கிற அணுகுமுறை தான் நீண்ட கால அடிப்படையில் நம் இளைய தலைமுறைகளிடம் எடுபடும். அதுதான் எதிர்கால வெற்றிக்கான உத்தியாக இருக்கும் என்கிறது என் நம்பிக்கை. என்னிடம் நேரம் மிச்சமில்லை. தொடர தனிமடல்போடுங்கள் visjayapalan@gmail.com

நாம் தனி மடல் போடுவதற்கு நேரத்தைச் செலவு செய்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

யாழ் நிர்வாகம் இடம் கொடுக்கும் வரை, இங்கேயே எமது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது எனக்கு ஏற்புடையதாக இருக்கின்றது.

நீங்கள் விதைக்கும் கருத்துக்கள், தொடர்பாக உங்களிடமே கேள்வி கேட்கப்படவேண்டியுள்ளது.

எமது விடுதலைப்போராட்டத்தில் நோர்வேஜிய அரசியல் வாதிகளின் பங்கும் காத்திரமான இடத்தைப் பெற்றுள்ளது.

எமது விடுதலைப்போராட்டத்தில் நோர்வேத் தமிழரின் பங்கும் காத்திரமான இடத்தைப் பெற்றுள்ளது.

Edited by kalaivani

பலம் , பன்மை என்பன தொடர்பான விஷயங்கள். கருத்துக்களில் பன்மை தான் பலம். நேரம் கிடைக்கும் போது உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் POET.

சில முகம் தெரியாதவர் விமர்சனங்களால் நீங்களே மனம் உடையும் போது, உங்கள் விமர்சனம் மட்டும் எப்படி இன்முகத்துடன் சம்பந்த்தப் பட்டவர்களால் வரவேற்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும் ? :wub:

... யாழ்க்களம் கடும்போக்காளரது அதில் எழுதாதே என்று சொல்லி வந்தார்கள் ...

:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.