Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போராடி தோல்வி

Featured Replies

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி- இலங்கை 411 ரன் குவித்தது

ராஜ்கோட், டிச. 15-

இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விரட் கோலி இடம் பெற்றார்.

இலங்கை அணியில் காயம் காரணமாக முரளீதரனும், காய்ச்சல் காரணமாக மலிங்காவும் ஆடவில்லை. இலங்கை அணி கேப்டன் சங்ககரா `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் ஆட அழைத்தார். ஷேவாக்கும், தெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷேவாக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார். குலசேகரா, பெர்னாண்டோ வீசிய ஓவர்களில் தலா 2 சிக்சர்கள் அடித்து ரசிகர்ளுக்கு விருந்து படைத்தார். ஜெயசூர்யா பந்தில் தெண்டுல்கர் தனது முதல் சிக்சரை அடித்தார். இருவரது அதிரடியான ஆட்டத்தால் ரன் மளமள என்று உயர்ந்தது.

இதனால் 14.3 ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கர் 69 ரன்னில் (63 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அவர் தனது 92 அரை சதத்தை அடித்தார். அப்போது ஸ்கோர் 153 (19.3) ஆக இருந்தது. அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார்.

மறுமுனையில் இருந்த ஷேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 98 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து 102 ரன்னை (66 பந்து) தொட்டார். இதில் 12 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும்.

212-வது ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 12-வது சதம் ஆகும். இலங்கைக்கு எதிராக 3-வது செஞ்சூரியை அடித்தார்.

இதே போல கேப்டன் டோனியும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். சிக்சர், பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார். இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 29.1 ஓவரில் 250 ரன்னை தொட்டது. டோனி 34 பந்தில் 50 ரன்னை (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஷேவாக்கும், டோனியும் தொடர்ந்து நன்றாக ஆடி னார்கள். 34.1-வது ஓவரில் இந்தியா 300-வது ரன்னை குவித்தது.

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷேவாக் 150-வது ரன்னை தவறவிட்டார். அவர் 146 ரன்னில் ஆட்டம் இழந்தார். 102 பந்தில் (17 பவுண்டரி, 6 சிக்சர்) இந்த ரன்னை எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்- டோனி ஜோடி 156 ரன் எடுத்தது. அடுத்து ரெய்னா களம் வந்தார்.

அடுத்தடுத்து `அவுட்' ஷேவாக் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் டோனியும் பெவிலியன் திரும்பினார். அவர் 53 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்தார். 5-வது வீரராக களம் இறங்கிய காம்பீர் 11 ரன்னில் `அவுட்' ஆனார்.

அடுத்து ரெய்னா 16 ரன்னிலும், ஹர்பஜன்சிங் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் 43.1 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 352 ரன் என்ற நிலையில் இருந்தது. கோலி 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 27 ரன் எடுத்தார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன் குவித்து சாதனை படைத்தது. ஜடேஜா 17 பந்தில் 2 சிக்சருடன் 30 ரன் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் இந்தியா குவித்த அதிக ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்தியா 413 ரன் குவித்து இருந்தது. சர்வதேச அணிகளில் இது 5-வது மிகப்பெரிய ரன் ஆகும்.

பின்னர் 415 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும் தாரங்காவும் களம் இறங்கினார்கள் இருவரும் தொடக்கம் முதல் அடித்து விளையாடினார்கள். தில்சானின் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இலங்கை அணி 7.2 ஓவரில் 50 ரன்னை தொட்டது. தில்சான் 38 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இலங்கை அணி 12 ஓவரில் 100 ரன்னை தொட்டது. பின் தில்சான் 73 பந்தில் சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரியும் 1 சிக்சரும் அடங்கும். அப்போது இலங்கை அணி 20 ஓவரில் 158 ரன் எடுத்திருந்தது.

எதிர்முனையில் இருந்த தாரங்கா 51 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவருக்கு 10 ரன்னில் கேட்ச் பிடிக்க இந்திய வீரர்கள் தவறினர். இலங்கை அணியின் ஸ்கோர் 24 ஓவரில் 188 ரன் இருக்கும்போது தொடக்க ஜோடி பிரிந்தது. தாரங்கா 60 ரன்னில் ரெய்னா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடரந்து கேப்டன் சங்ககரா களம் இறங்கினார்.

இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை துவசம் செய்தனர். குறிப்பாக சங்ககரா ஒரு பாலுக்கு இரண்டு ரன் வீதம் சிக்சர் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இதனால் 414 ரன்னை சுலபமாக சேஸ் செய்வதுபோல் ரன் விகிதம் சென்றது. இலங்கை அணி இலங்கை அணி 36 ஓவரில் 300 ரன்னை கடந்தது. இலங்கை அணியில் ஸ்கோர் 316 ரன்னாக இருக்கும்போது சங்ககரா 90 ரன்னில் அவுட் ஆனார்.

அவர் இந்த ரன்னை 43 பந்தில் 10 பவுண்டரி 5 சிக்சருடன் அடித்தார். அடுத்து தில்சான் 160 ரன்னிலும், ஜெயசூர்யா 5 ரன்னிலும், ஜெயவர்த்தனே 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இலங்கை அணி 41 ஓவரில் 347 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்திருந்தது.

அடுத்து கந்தாம்பி மாத்யூஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். 401 ரன் இருக்கும்போது கந்தாம்பி 24 ரன்னி ரன் அவுட் ஆனார் அவரைத் தொடர்ந்து சமரவீரா களம் இறங்கினார். இவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டது.

முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 2வது பந்தில் 2 ரன்னும் 3 பந்தில் 2 ரன்னும் எடுக்கப்பட்டது. 4வது பந்தில் மாத்யூஸ் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 5வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை நெக்ரா வீசினார். குலசேகரா எதிர்கொண்டார். கடைசி பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இதனால் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

source:maalaimalar

--

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி நாணய சுழச்சியில் வென்றும் துடுப்பாட்ட‌த்திற்கு சாதகமான மைதானத்தில் ஏன் பந்து வீச்சை முதல் தெரிவு செய்தார்கள்...ஏன் சனத் ஆர‌ம்ப துடுப்பாட்டகார‌ராய் களம் இறங்கவில்லை... இது முழுக்க முழுக்க சங்கர‌காராவின் பிழை...போயும் போயும் இந்தியாவோடு தோத்திருக்கிறார்கள் :unsure:

இலங்கை அணி நாணய சுழச்சியில் வென்றும் துடுப்பாட்ட‌த்திற்கு சாதகமான மைதானத்தில் ஏன் பந்து வீச்சை முதல் தெரிவு செய்தார்கள்...ஏன் சனத் ஆர‌ம்ப துடுப்பாட்டகார‌ராய் களம் இறங்கவில்லை... இது முழுக்க முழுக்க சங்கர‌காராவின் பிழை...போயும் போயும் இந்தியாவோடு தோத்திருக்கிறார்கள் :(

இலங்கை அணித் தலைவர் சங்கக்கார நாணயச் சுழற்சியில் வென்று முதலில் இந்தியாவை ஆட அழைத்ததில் தவறேதுமில்லை. தாம் நாணயச் சுழற்சியில் வென்றிருந்தாலும் முதலில் தான் பந்து வீச்சையே தெரிவுசெய்திருப்பேன் என டோனி கூறியிருந்தார். ஏனெனில் துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருப்பது ஆடுகளத்தின் காலைநேர ஈரத்தன்மை மட்டுமே ஆகும். போட்டியின் முதல் 30 நிமிடங்கள் வரையான காலப்பகுதியில் மட்டுமே இந்த நிலை பொதுவாக காணப்படும். இந்த ஈரத்தன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய உதவியாயிருக்கும். வெயில் ஏற ஏற ஈரம் காய்ந்துவிட பந்து வீச்சாளர்களினால் எதுவும் செய்துவிட முடியாத நிலையிருக்கும். அதன் பின்னர் ஆடுகளம் துடுப்பாட்டத்தின் சொர்க்கபுரியாக மாறிவிடும். துடுப்பாட்டக்காரர்கள் தவறு செய்து தாமாகவே தமது விக்கட்டை தரைவார்த்தால் தவிர பந்துவீச்சாளர்களல் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

இப்படியான மட்டமான ஆடுகளங்களில் பாதிக்கப்படுவது பந்துவீச்சாளர்கள் தான். அவர்களின் பந்துவீச்சு சராசரி மோசமாகப் பாதிக்கப்படும். மட்டமான ஆடுகளங்களைத் தவிர்த்து, பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் நல்ல உயிரோட்டமான ஆடுகளங்களை அமைப்பதை ICC உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லவிட்டால் கிரிக்கட் துடுப்பாட்டக்காரர்களுக்கு மட்டுமான ஒரு விளையாட்டாக மாறிவிடும் அபாயம் உண்டு.

சனத் ஜெயசூர்யா நடுவரிசையில் களமிறக்கப்பட்டமைக்கு காரணம் அவர் ஓய்வுபெறுவதை நிர்ப்பந்தம் செய்யவேண்டும் என்பதற்காகவேயாகும். சனத் ஒரு சிறந்த வீரர் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் 40 வயதாகிவிட்ட பின்னரும் அவர் அணியில் இடம்பெறுவதை அணியின் தேர்வாளர் அசந்த டி மெல் தவிர எவரும் விரும்பவில்லை என்பதே உண்மை. அணியிலுள்ள பல மூத்த வீரர்கள் கூட விரும்பவில்லை. தாம் அணியில் இருந்தபோது சனத் ஒருபோதும் நடுவரிசையில் ஆட விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று போட்டி துவங்க சற்று முன்னர் நடந்த ஒரு கலந்துரையாடலில் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்து தெரிவித்து இருந்தார். இப் போட்டியிலும் சனத் ஆரம்ப வீரராக களமிறங்க விரும்பியதாகவும், அப்படியாயின் அவர் வீட்டுக்கு ஒரேயடியாக செல்லவேண்டியிருக்கும் என அணிநிர்வாகம் அவருக்கு பதிலளித்ததாகவும் தெரியவருகின்றது. நடுவரிசையில் ஆடி தமது நிலையை உறுதிப்படுத்த முடியாது போனால் இதுவே சனத்தின் இறுதித் தொடராகக் கூட இருக்கலாம். எது எவ்வாறாயினும் அரசியல் அதிகம் செல்வாக்கு செலுத்தும் இலங்கக் கிரிக்கட் சபையில் அரசியல் பலம் இருந்தால் சனத் இன்னும் 10 வருடங்கள் கூட கிரிக்கட் ஆடலாம்.

போயும் போயும் இந்தியாவோடு தேற்று இருக்கிறார்கள் என ரதி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். முதலில் நான் இங்கு இந்தியா அல்லது இலங்கை ஆதரவாளன் இல்லை என்பதனையும், ஒரு பொதுவான தளத்தில் இருந்து இந்த 2 அணிகளை நேக்குபவன் என்பதனையும் சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன். இன்று உள்ள அணிகளில் இந்தியாவும் ஒரு பலம்பொருந்திய அணிதான். இலங்கையை விட சிறந்த துடுப்பாட்ட வரிசை இந்தியாவிடம் உண்டு. பந்துவீச்சு, மற்றும் களத்தடுப்பு இரண்டிலும் இரு அணிகளும் சமநிலையில் தான் உள்ளன. முரளியின் பந்துவீச்சு அண்மைக் காலங்களில் எடுபடவே இல்லை. அடுத்த உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய தகுதி உள்ள அணிகளில் இந்தியாவை எவரும் புறம் தள்ளிவிட முடியாது.

உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் இலங்கை இரண்டாவதாக துடுப்பாடி 3 ஓட்டங்களாலே தான் தோத்திருக்கிறது அதுவும் கடினமான இலக்கான 400 ஓட்டங்களை தாண்டி விட்டது தானே

நானும் Cricinfoஇற்கு இடையிடையே சென்று ஆட்டம் நடந்துகொண்டு இருந்தபோது ஸ்கோர் பார்த்தன். இரண்டு தரப்புமே ஆளாளுக்கு ஏராளம் பிடிகளை - catches நழுவவிட்டிச்சிதுகள். உப்பிடி விளையாடினால்.. ஆயிரம் ஓட்டமும் அடிக்கலாம். பெரிய விசயம் இல்லை :rolleyes:

Edited by மச்சான்

எம்மை சிதறடித்து சின்னாபின்னமாக்கிய, எம் குழந்தைகள் முதல் அப்பு ஆச்சி வரை படுகொலை செய்த/செய்ய உதவிய இரு நாடுகளில் எவர் வென்றால் எவருக்கென்ன? வாய் கிழிய தமிழ் தேசியம் பேசுபவர் கூட, இலங்கை அணிக்காக வக்காளத்து வாங்கும் அரசியல் பரிதாப நிலையை பலமுறை எல்லா இடங்களிலும், என் நண்பர்களிடமும் பார்த்துள்ளேன்

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பது அறியாமை. தலைவர் மகள் இறந்திருக்க கூடாது என்று பிரார்திப்பதற்கும் இலங்கை அணி வெல்ல வேண்டும் என விரும்புவதற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையா?

Edited by நிழலி

யார் ரதி அக்காவுக்கோ பேச்சு விழுகிது? எனக்கு இல்லைத்தானே... :rolleyes: நான் வாழ்க்கையில நீண்டகாலம் மைதானத்தில செலவளிச்ச, நன்றாய் விளையாடக்கூடிய ஓர் விளையாட்டு கீரிக்கட்டு. உதை எப்பிடி மறக்கிறது.. நான் வழமையாக cricinfo.com இற்குபோய் பல்வேறு நாடுகள் பங்குபற்றும் ஸ்கோர் நிலவரங்கள் பார்ப்பது வழமை.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு போராடி வின் பன்னிட்டாங்கள் :rolleyes:

Edited by கிறுக்குபையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான் நிழலி ஆனால் என்ன எனக்கு இனப்பிரச்சனை பற்றி வடிவாய் விளங்கு முன் நான் கிரிக்கட் பார்த்து இலங்கை அணிக்கு ஆதர‌வு கொடுத்து பழகி விட்டது அதை தவிர்க்க முடியவில்லை ஆனால் என்ன முந்தி அவர்கள் விளையாடினால் தொலைகாட்சியில் தேடிப் பிடித்து பார்க்கிறது ஆனால் தற்போது அப்படி அல்ல இந்த செய்தி இதில் இணைத்த பிறகு தான் தற்போது போட்டி நடக்கிறது தெரியும்.தேசியம்,தலைவர் என்பன மூச்சு கிரிக்கட் பொழுதுபோக்கு.

சரி கனக்க பீல் பண்ணாதிங்கோ அக்கா. நீங்களும் எங்களை மாதிரி ஜனநாயக வழியில பெருன்பான்மை தமிழருக்கை அடங்குறீங்கள். உதில பீல் பண்ண என்ன இருக்கிது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை சிதறடித்து சின்னாபின்னமாக்கிய, எம் குழந்தைகள் முதல் அப்பு ஆச்சி வரை படுகொலை செய்த/செய்ய உதவிய இரு நாடுகளில் எவர் வென்றால் எவருக்கென்ன? வாய் கிழிய தமிழ் தேசியம் பேசுபவர் கூட, இலங்கை அணிக்காக வக்காளத்து வாங்கும் அரசியல் பரிதாப நிலையை பலமுறை எல்லா இடங்களிலும், என் நண்பர்களிடமும் பார்த்துள்ளேன்

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பது அறியாமை. தலைவர் மகள் இறந்திருக்க கூடாது என்று பிரார்திப்பதற்கும் இலங்கை அணி வெல்ல வேண்டும் என விரும்புவதற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையா?

ஏன் இவை விழையாடாவிட்டால் எங்களுக்கு கிறிக்கட் தெரியாதாக்கும்.

வேலை செய்கிற குஜராத்தி இந்தியன் என்றால் கர்பதன் சிங் என்றா ஒரு நாள். அப்போ ஏன் வீதி வீதியாக அவர்களை கொன்று குவித்தீர்கள் என்ற போது பேசா மடந்தை ஆகி விட்டா. அவருக்கு அது விளங்கவில்லை. ஆனால் இன்று நிறையவே தமிழ் செய்திகளை சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு போராடி வின் பன்னிட்டாங்கள் :)

:rolleyes::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::rolleyes::lol:

தமிழ் சிறி அண்ணா ஏன் இப்படி உத்து பாக்கிறிங்கள் :D:)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா ஏன் இப்படி உத்து பாக்கிறிங்கள் :lol::rolleyes:

வின் பண்ணியதை உந்து பாத்தன்.கிறுக்கு. :):rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை சிதறடித்து சின்னாபின்னமாக்கிய, எம் குழந்தைகள் முதல் அப்பு ஆச்சி வரை படுகொலை செய்த/செய்ய உதவிய இரு நாடுகளில் எவர் வென்றால் எவருக்கென்ன? வாய் கிழிய தமிழ் தேசியம் பேசுபவர் கூட, இலங்கை அணிக்காக வக்காளத்து வாங்கும் அரசியல் பரிதாப நிலையை பலமுறை எல்லா இடங்களிலும், என் நண்பர்களிடமும் பார்த்துள்ளேன்

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பது அறியாமை. தலைவர் மகள் இறந்திருக்க கூடாது என்று பிரார்திப்பதற்கும் இலங்கை அணி வெல்ல வேண்டும் என விரும்புவதற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையா?

நிழலி அண்ணா நீங்கள் ரொம்ப நல்லா காமடி பண்ணக்கூடியவர் அதுக்காக இது கொஞ்சம் ஓவர் தான் போங்க..

தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் பொழுதுபோக்குக்காக கூட இந்திய,இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியை ரசிப்பது கூட தவறு என்ற தோரணையில் எழுதியுள்ளீர்கள்.அப்போ ஈழ ஆதரவாளர்கள் யாரும் பொழுதுபோக்குக்கு கூட இலங்கை இந்திய போட்டிகளையோ அல்லது கலை,கலாச்சாரநிகழ்வுகளையோ பார்க்கவோ அல்லது அது குறித்து கருத்துபரிமாறக்கூடாது என்கிறீர்களா?

எந்த நாட்டிலை புலம்பெயர்ந்து இருந்தாலும் Nationality என்பதற்கு Srilankan என்று தானே குடுத்துள்ளோம் யாராவது தமிழீழம் என்று குடுக்கலைத்தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

வின் பண்ணியதை உந்து பாத்தன்.கிறுக்கு. :D:)

lol :)

Natianality என்று Sri Lankan என்று கொடுக்க வேண்டியுள்ளமை சட்டரீதியான கட்டாயம் என்பதால் தான். அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வரைக்கும் தான். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், சிறீ லங்கன் விமான சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதும், சிறீ லங்கன் பொருட்களை புறக்கணி என்று கேட்பதும் கூட தவறுதான்

இலங்கை, இந்திய அணிகளிற்கிடையான எந்தவொரு தேசியத்தை நிலைநிறுத்தும் போட்டியையும் நான் என்றுமே பொழுதுபோக்கிற்காயினும் பார்ப்பது இல்லை. இந்த நாடுகளின் பொழுபோக்குக்குரிய கலையம்சமான நிகழ்வுகளுக்கும், ஒரு நாட்டின் தேசியத்தை நிலை நிறுத்த நடாத்தப்படும் கிரிக்கெட் போன்ற நிகழ்வுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. அதுவும் இலங்கை கிரிக்கெட் அணி என்பதும், அதன் விளையாட்டு என்பது முற்று முழுதான சிங்கள பெளத்த இனவாத அரசின் முகமூடியாகத்தான் என்றும் இருந்தன / இருக்கின்றன. மே 18 இன் பின்னும் உங்களுக்கு அவை வெறும் பொழுதுபோக்காகான விளையாட்டாக தெரிவது தான் எம் தமிழருக்கான சிறப்பு குணாதிசயம். எந்த ஒரு சிங்களவனும், தமிழ் தேசியத்தை நிலை நிறுத்தக் கூடிய எந்தவொரு விடயத்தையும் மூர்க்கமாக எதிர்ப்பான். நாம் தமிழர்கள் தான் எல்லாவற்றுக்கும் ஒரு நொண்டிச் சாட்டு வைத்துக் கொண்டு மரத்துப் போய் கிடப்போம்

இதே விடயத்தை யாழில் பலமுறை கதைத்துள்ளார்கள். ஆகக் குறைந்தது இந்த திரியையாவது பார்க்கவும்

இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை அரசியலாக்காத நாட்டில் விளையாட்டை விளையாட்டாக ரசிப்பதில் தவறில்லை. ஆனால் தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை விளையாட்டும் குறிப்பாக கிரிக்கெட் அரசியலின் ஒரு அம்சம்.

யாழ்ப்பாணத்தை சந்திரிக்கா - ரத்வத்தையின் படையினர் கைப்பற்றிய பின் செய்த முதற்காரியம் சிறீலங்கா அணியின் முன்னணி வீரர்களைக் கொண்ட ஓர் அணியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி கிரிக்கெட் விளையாடியாதுதான். அந்தளவுக்கு சிறீலங்காவைப் பொறுத்தவரை கிரிக்கெட் அரசியல் மயப்பட்டு நிற்கிறது. கிரிக்கெட் வீரர்களும் அரசியலில் குதிப்பதும் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளாக இருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சிறீலங்காவின் கிரிக்கெட் வரலாற்றில் சிறீலங்கா - இந்தியாவை (இந்திரா காந்தி காலத்தில் ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். ஒரு சஞ்சிகையில் வாசித்து அறிந்த விடயம்.. இது.) வென்ற போது அப்போதைய சிறீலங்காவின் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச அவர்கள் அந்த நாளை பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய நாள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் அவரது காலத்தில் தான் அவர் ஜனாதிபதியாக இருந்த போதுதான் அவர் இந்தியாவுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்து இந்தியப் படைகளை சிறீலங்கா மண்ணில் இருந்து வெளியேற்றினார். அப்போதைய காலத்தில் இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகளும் கூட ரத்தாகின.

உலக அரங்கில் கிரிக்கெட்.. கால்பந்து விளையாட்டுக்கும் அப்பால் அரசியலாகி நிற்பது என்னவோ விரும்பியோ விரும்பாமலோ நடந்தேறித்தான் வருகிறது. அண்மையில் பிரிட்டனுக்கும் சிம்பாபேக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக இங்கிலாந்து சிம்பாபேவுடனாக கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை ரத்துச் செய்திருந்தது. இவ்வாறு அரசியல் நிலைப்பாடுகளோடு கிரிக்கெட் ஒருங்கிணைப்படுவது உலகில் நடந்துதான் வருகிறது. அந்த வகையில் சிறீலங்கா அணிக்கான அல்லது இந்திய அணிக்கான தார்மீக ஆதரவென்பது ஒரு தமிழனாக வழங்கப்பட முடியாத ஒன்றாகவே உணர்வளவில் இருக்கிறது.

ஆனால் நான் கண்டிருக்கிறேன்.. எம்மவர்களில் பலர் சிறீலங்கா அணிக்கு இன்றும் ஆதரவளித்து வருவதை. ஆனால் நான் எப்போதும் அதற்கு ஆதரவளிப்பதில்லை.

ஒருமுறை கொழும்பில் யுனியில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த போது சிறீலங்கா அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க என்னை அறியாமலே கைதட்டி விட்டேன். அருகில் இருந்த சிங்களவர்களின் கோபக்கணைகள் என்னைத்தாக்க.. எழுந்து அப்பால் நகர்ந்துவிடுவமோ என்று எண்ணினேன். அப்போது ஒரு சிங்களவன் கத்தினான்.. இதனால் தான் பண்டாரநாயக்கா எல்லோரையும் சிங்களம் படிக்கச் சொன்னதாக. ஆனால் இறுதியில் எனது முஸ்லீம் நண்பர்களும் அவ்விடத்திற்கு வர சிங்களவர்கள் கம் என்று இருந்துவிட்டார்கள். முஸ்லீம்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் அணியையே ஆதரிக்கிறார்கள்..! அது சிங்களவர்களுக்கும் தெரியும் என்பதால் அடக்கி வாசிப்பார்கள். ஆனால் தமிழர்களில் நிறைய கோடரிக்காம்புகள் இருப்பது சிங்களவனுக்கும் தெரியும்.

நான் எந்த தெற்காசிய கிரிக்கெட் அணிக்கும் அவர்கள் அரசியலை ஊழலை விட்டு வெளியேறாத வரை ஆதரவளிக்கமாட்டேன்..!

Edited by nedukkalapoovan

மிகத் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி நெடுக்ஸ்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Natianality என்று Sri Lankan என்று கொடுக்க வேண்டியுள்ளமை சட்டரீதியான கட்டாயம் என்பதால் தான். அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில் அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வரைக்கும் தான். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், சிறீ லங்கன் விமான சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதும், சிறீ லங்கன் பொருட்களை புறக்கணி என்று கேட்பதும் கூட தவறுதான்

இலங்கை, இந்திய அணிகளிற்கிடையான எந்தவொரு தேசியத்தை நிலைநிறுத்தும் போட்டியையும் நான் என்றுமே பொழுதுபோக்கிற்காயினும் பார்ப்பது இல்லை. இந்த நாடுகளின் பொழுபோக்குக்குரிய கலையம்சமான நிகழ்வுகளுக்கும், ஒரு நாட்டின் தேசியத்தை நிலை நிறுத்த நடாத்தப்படும் கிரிக்கெட் போன்ற நிகழ்வுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. அதுவும் இலங்கை கிரிக்கெட் அணி என்பதும், அதன் விளையாட்டு என்பது முற்று முழுதான சிங்கள பெளத்த இனவாத அரசின் முகமூடியாகத்தான் என்றும் இருந்தன / இருக்கின்றன. மே 18 இன் பின்னும் உங்களுக்கு அவை வெறும் பொழுதுபோக்காகான விளையாட்டாக தெரிவது தான் எம் தமிழருக்கான சிறப்பு குணாதிசயம். எந்த ஒரு சிங்களவனும், தமிழ் தேசியத்தை நிலை நிறுத்தக் கூடிய எந்தவொரு விடயத்தையும் மூர்க்கமாக எதிர்ப்பான். நாம் தமிழர்கள் தான் எல்லாவற்றுக்கும் ஒரு நொண்டிச் சாட்டு வைத்துக் கொண்டு மரத்துப் போய் கிடப்போம்

இதே விடயத்தை யாழில் பலமுறை கதைத்துள்ளார்கள். ஆகக் குறைந்தது இந்த திரியையாவது பார்க்கவும்

இணைப்பு

நிழலி அண்ணா,

வேட்டைகாரன் திரியில் எழுதிய அதே கருத்தே..

நான் கனேடியன் சிற்றிசனாக இருப்பதை விட சிறீலங்கன் சிற்றிசனாக இருப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். கனடியன் போட்ட அகதி பிச்சையான குடியுரிமையை விட நான் பிறந்த இலங்கையின் குடிமகனாக இருக்கவே விரும்புகிறேன்.

நீங்கள் இணைத்த இணைப்பிலுள்ள நெடுக்ஸ் அண்ணாவின் கருத்தே எனது கருத்தும்.

நான் எந்த ஒரு அணிக்கும் ஆதரவு இல்லை ஆனால் எந்த அணி விளையாடினாலும் அதை நான் ஊரில் இருக்கும் வரை பார்ப்பது வழக்கம்.

அட அட நிழலிக்கும், ஜீவாவுக்கும் இடையில இருமுனைப் போர் நடக்குதோ? யாரோ விளையாடினாங்கள்.. யாரோ படம் போட்டாங்கள்.. யாரோ பார்த்தாங்கள்.. சரி அதுக்கு நாங்கள் ஏன் எங்கடை குடும்பியை அறுத்துக்கொள்வான்.

உப்பிடித்தான்.. வட்டுக்கோட்டை தீர்மானமும், நாடுகடந்த அரசும் பிரிஞ்சுபோய் நிற்கிது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிறிலங்கா அணிக்கு சப்போட் பண்ணுவம் ஆனால் சனத் ஜயசூரியா மூக்கு சொறிய விரல எடுத்தால் நடு விரல் காட்டுறான் என்று சண்டையும் பிடிப்போம் :unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.