Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புள்ளியை களவெடுப்பது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளியை களவெடுப்பது யார்?

உண்மை தெரிஞ்சாகணும்.......

காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை.

எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை.

என்ன நடக்குது இங்கே....

இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?

Edited by தமிழ் சிறி

  • Replies 76
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புள்ளியை களவெடுப்பது யார்?

உண்மை தெரிஞ்சாகணும்.......

காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை.

எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை.

என்ன நடக்குது இங்கே....

இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?

புள்ளி முறையை மாற்றி விட்டனர் போலும். உங்களுக்கு இப்ப ஒரு புள்ளியை வழங்கி மீண்டும் உங்கள் புரொபைலுக்கு போய் பார்த்தால் அதனை காணவில்லை

சரி சரி, தேத்தண்ணி கூட குடிக்க முடியாத புள்ளியை பற்றி கவலையை விடுங்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லுறிங்கள் சிறி அண்ணா . புரியும் படி சொல்லுங்கோ... :)

இனிப் புள்ளிகள் இடப்படுவது அந்தந்த கருத்துகளிலும்/பதில்களிலும் மாத்திரம் பிரதிபலிக்கும். உறவுகள் வாசிக்கும் போது அந்த இடுகை அல்லது கருத்து தொடர்பாக + இனை அல்லது - இனை அழுத்தி தங்கள் பிரதிபலிப்பை தெரிவிக்க முடியும்

உதென்னெ புள்ளி போடுற விளையாட்டு யூனிவர்சிட்டிக்கு கட் அவுட் மார்க்சோ.. நம்மட ஆக்கள் மற்றவனுக்கு புள்ளிபோட்டு தூக்கிவிட்டதாய் வரலாறு இல்லை. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவமானப்படுத்தியதாகவே வரலாறு இருக்கிது. அவனவன்.. தனது மனபலம், விடாமுயற்சி மூலமே முன்னேறி முன்னுக்கு வந்து இருக்கிறான். நம்மவர்கள் தூக்கிவிட்டதாய் சொல்லமுடியாது. இந்தவகையில உந்த புள்ளிபோடுற விளையாட்டு.. அதுவும்... முக்கால்வாசி வெட்டி ஒட்டல் விளையாட்டுக்கள்.. உதுகளுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நாசமாய்ப்போக வாழ்த்துகள்! :)

உதென்னெ புள்ளி போடுற விளையாட்டு யூனிவர்சிட்டிக்கு கட் அவுட் மார்க்சோ.. நம்மட ஆக்கள் மற்றவனுக்கு புள்ளிபோட்டு தூக்கிவிட்டதாய் வரலாறு இல்லை. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவமானப்படுத்தியதாகவே வரலாறு இருக்கிது. அவனவன்.. தனது மனபலம், விடாமுயற்சி மூலமே முன்னேறி முன்னுக்கு வந்து இருக்கிறான். நம்மவர்கள் தூக்கிவிட்டதாய் சொல்லமுடியாது. இந்தவகையில உந்த புள்ளிபோடுற விளையாட்டு.. அதுவும்... முக்கால்வாசி வெட்டி ஒட்டல் விளையாட்டுக்கள்.. உதுகளுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நாசமாய்ப்போக வாழ்த்துகள்! :wub:

மச்சி...

இதனை பாருங்கள் இணைப்பு

இப்படியானவற்றுக்கு தரப்படும் அங்கீகாரமே நல்ல பயனுள்ள பதிவுகளை யாழில் exclusive ஆக தர உதவும்...!! குற்றம் சொல்வதை விட, மாற்றம் கொண்டு வருவது மேல் மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி...

இதனை பாருங்கள் இணைப்பு

இப்படியானவற்றுக்கு தரப்படும் அங்கீகாரமே நல்ல பயனுள்ள பதிவுகளை யாழில் exclusive ஆக தர உதவும்...!! குற்றம் சொல்வதை விட, மாற்றம் கொண்டு வருவது மேல் மச்சான்

அப்ப இதுவும் ஒரு தரப்படுத்தல் முறை என்று சொல்லுங்கோ,அதிஉயர் வாசகர்களுக்கும்,அதிஉயர் படைப்பாளிகளுக்கும் தான் யாழ் இனி வர்வேற்பளிக்கும் போல தெரிகிறது.

அப்ப இதுவும் ஒரு தரப்படுத்தல் முறை என்று சொல்லுங்கோ,அதிஉயர் வாசகர்களுக்கும்,அதிஉயர் படைப்பாளிகளுக்கும் தான் யாழ் இனி வர்வேற்பளிக்கும் போல தெரிகிறது.

தரப்படுத்தல் என்பது அதிகாரம் செறிந்த ஒரு முறையின் மூலம் அமுல்படுத்தப் படுவது... வாசகரின் சனநாயக தெரிவின் மூலம் அல்ல..

அதியுயர் வாசகர்/ அதியுயர் படைப்பாளிகள் என்றால் என்ன புத்தன்?

Edited by நிழலி

அது சரி நிழலி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=67332 உதுக்கு எத்தினை பேர் பச்சை குத்தி இருக்கிறீனம்? உதுக்கு பச்சை குத்தி என்ன செய்கிறது?

உந்த குத்தல் விளையாட்டு ஆரம்பத்தில எனக்கும் என்ன என்று விளங்க இல்லை. யாழ் உறவுகள் முனிவர்ஜீ, தமிழ்மாறன், ஜீவா, ரதி, கலைவாணி, நேசன், நெல்லையன், நெடுக்காலபோவான், நிழலி - நீங்கள்தான், இன்னும் பலருக்கு தாராளமாக சிகப்பு குத்தி அழகு பார்க்கப்பட்டு இருந்திச்சிது. பிறகு நான் கலைஞன், மச்சான் ரெண்டு ஐடிக்களையும் பாவிச்சு ஒவ்வொரு நாளும் பச்சை பச்சையாய் குத்தி எல்லார் கட் அவுட் மார்க்சையும் சிகப்பை நீக்கி சைபருக்கு வர வைச்சது. எங்கட வாக்காளர் பெருமக்கள் பச்சை குத்துறதைவிட சிகப்பு குத்தி வயித்து எரிச்சலை தீர்க்கிறதிலதான் குறியாய் இருக்கிறீனம் எண்டுறது கண்கூடு. இந்தநிலையில உந்த பச்சை குத்தல் மூலம் உருப்படியாய் ஒன்றுமே நடைபெறப்போவது இல்லை எண்டுறது தெளிவு. :wub:

நான் கீழ இரண்டு கருத்துக்கள் எழுதி இருந்தன். உதில ஒண்டுக்கு மூண்டு சிகப்பு குத்தலும், ஒன்றுக்கும் நாலு சிவப்பு குத்தலும் விழுந்து இருக்கிது. பச்சை குத்துறதைவிட ஒளிஞ்சுநிண்டு சிகப்பு குத்துறதுதான் நம்மோட ஆக்களுக்கு பிடிச்சு இருக்கிதுபோல.

சுசி அக்கா, இணைப்புக்கு நன்றி. உதை மினக்கட்டு எழுதின ஆளுக்கு பெயர் ஒண்டும் இல்லையோ? லங்காசிறியில இந்தக்கட்டுரை இணைக்கப்பட்டு இருக்கிது. இதேகட்டுரை வெப்துனியாவிலும் இருக்கிது. யார் யாருண்டதை வெட்டி ஒட்டுறாங்கள்? வலைத்தளங்கள் கடைசி எழுதியவரிண்ட பெயரையாவது போட்டு அவருக்கு மதிப்பு கொடுக்கலாமே? http://tamil.webdunia.com/miscellaneous/yoga/articles/0912/12/1091212007_1.htm

பொழுதுபோகிறதுக்கு லங்காசிறீ தவிர வேற வலைத்தளம் ஒன்றுக்கும் அக்காமார் போறது இல்லையோ? இங்குபோனால் நீங்கள் லங்காசிறீ வலைத்தளத்தில் வெட்டி ஒட்டப்படும் செய்திகள் எல்லாவற்றையும் - அவற்றின் மூலத்தை - அசலை காணலாம்: http://news.google.ca/news?edchanged=1&ned=ta_in

யாழில இணைக்கப்படுறதில 90% வெட்டி ஒட்டல்.. உதில பச்சை குத்தி ஊக்குவிக்க என்ன இருக்கிது? லங்காசிறீ யாருண்டையோ ஆக்கங்களை திருடி தங்கட தளத்தில ஒட்டிது. மூலத்தையும் குறிப்பிடுவது கிடையாது. லங்காசிறீ ரசிகர்கள் அதை இஞ்ச ஒட்டி அழகு பார்க்கறீனம். உப்பிடி வெட்டி ஒட்டல் கருத்துக்களுக்கு பச்சை குத்தி வேற அழகு பார்க்க வேணுமோ?

யாழில நானும்தான் எத்தனையோ நம்மவர் படைப்புக்கள் பற்றியெல்லாம் திரிகளை இணைக்கிறன். யாரைய்யா ஒருத்தன் மினக்கட்டு பதில் கருத்து எழுதுறான்? யாராச்சும் ஒருத்தர் இருவர்.. ஏதோ அனுதாபப்பட்டு ஏதாச்சும் எழுதுவீனம். நமது கலைஞர்கள் கொட்டாவிவிட்டுக்கொண்டு இருக்கிறீனம். பக்கத்திவீட்டு பெடிச்சி வயசுக்கு வரமுன்னம் யாரோடையோ ஓடிப்போயிட்டான் என்று ஏதாச்சும் எழுதினால் விழுந்தடிச்சு பதிலுகள் வரும். யாழில கருத்துக்கள் எழுதுகிற ஆக்களிண்ட நிலமை, ரசனை உப்பிடி இருக்கிது. உந்தக்கேவலத்தில உந்தக்கேவலத்தில பச்சையும் சிகப்பும் புள்ளி குத்தலாம். வாயில வருகிது.. :wub:

இளைஞன் உந்தக்குத்தல் விளையாட்டுக்களை அனுமதிக்கிறதை விட்டுப்போட்டு வேற ஏதாச்சும் உருப்படியாய் செய்யலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தல் என்பது அதிகாரம் செறிந்த ஒரு முறையின் மூலம் அமுல்படுத்தப் படுவது... வாசகரின் சனநாயக தெரிவின் மூலம் அல்ல..

அதியுயர் வாசகர்/ அதியுயர் படைப்பாளிகள் என்றால் என்ன புத்தன்?

நீங்கள் போட்ட இணைப்பில் மச்சான்,ரதி ஆகியோரின் பின்னூட்டலை இங்கு தருகிறேன்

கதையின் முடிபு என்று பார்த்தால்.. கதையை சில குறியீடுகளாக - அதாவது சாதாரணமாக கதையை பார்ப்பவர்களின் மண்டையினுள் விளங்கிக்கொள்ள முடியதவாறு இறுதிப்பகுதியை அமைத்து இருக்கின்றார். இதற்கு ஓர் வாசகரின் பின்னூட்டலே சாட்சி. அதில் எங்கள் மரமண்டைகளுக்கு புரியுமாறு கதை முடிவை விளக்குமாறு வாசகர் எழுதி இருந்தார்

.சிலருக்கு கதை இலகுவாக புரியும் ,சிலர் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்ர இலக்கில் கதை எழுதுவார்கள் அது எல்லோராலும் இலகுவில் புரிந்து கொள்ளமுடியாது.அப்படி எழுதுபவர்கள் அதிஉயர் படைப்பாளிகள் அதை இலகுவாக புரிந்து கொள்பவர்கள் அதிஉயர் வாசகர்கள்

அது சரி புத்துமாமா. நீங்கள் எனக்கு பச்சை குத்துங்கோ. நான் உங்களுக்கு பச்சை குத்துறன். ரெண்டுபேரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ளுவம் ஒருகாலத்தில. பிறகு யாழ் இணையத்தில வாசகர்கள் பச்சைகுத்தி எங்களை ஊக்குவிச்சார்கள் எண்டு சொல்லி யாழையும் பெருமைப்படுத்தலாம்.

குத்திபோட்டன் மச்சி பச்சையை

உங்களுக்கும் பச்சை குத்தியாச்சிது. அப்ப ரெண்டு பேருக்கும் நோபல் பரிசு நிச்சயம் எண்டு சொல்லிறீங்கள்..? :wub:

நீங்கள் போட்ட இணைப்பில் மச்சான்,ரதி ஆகியோரின் பின்னூட்டலை இங்கு தருகிறேன்

.சிலருக்கு கதை இலகுவாக புரியும் ,சிலர் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்ர இலக்கில் கதை எழுதுவார்கள் அது எல்லோராலும் இலகுவில் புரிந்து கொள்ளமுடியாது.அப்படி எழுதுபவர்கள் அதிஉயர் படைப்பாளிகள் அதை இலகுவாக புரிந்து கொள்பவர்கள் அதிஉயர் வாசகர்கள்

ஒரு தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட 3 மணி நேரம் மினக்கெட்டு பார்க்கும் எமக்கு, ஏன் ஒரு படைப்பை கொஞ்சம் மினக்கெட்டு புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது?... நான் க.பொ.தரம் உயர் பீடத்தில் கணிதம் படிக்கும் போது, ஒரு கணக்கு விளங்காவிடின் 72 மணி நேரத்துக்கும் மேலாக முயன்று பார்த்துள்ளேன். அப்படித்தான் என் நண்பர்களும் முயன்றனர். ஏனெனில் அது வாழ்வாதார பிரச்சனையாக தோன்றியது

ஆனால், இலக்கியம் என்றவுடன் அது அம்புலிமாமா கதை போலத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்? விளங்காவிடினும் வாழ்வு பொய்க்காது என்பதாலா? மற்ற மொழிகளில் எல்லாம் பெரும் உயர் விருதுகளை அடையும் போது தமிழ் மட்டும் இன்னும் இப்படி இருப்பது ஏன்? 30 வருட போராட்ட வாழ்விலும் எம்மால் உலகுக்கு வழங்கப்பட்ட உயர் இலக்கிய படைப்பு எது? ரஷிய மொழியில் போர்க்காலத்தில் வந்த உலக தன்னிகரற்ற நாவல்களை எம் இலக்கியம் வென்றிருக்க வேண்டாமா?

ஏனெனில், எமக்கு உழைப்பைத் தரும் படிப்பை மட்டுமே பாத்து பழகிப்போய் விட்டோம். கொஞ்சம் மினக்கெட்டு புரிந்து கொள்ளப்படும் இலக்கியப் படைப்பால் ஐந்து சதமேனும் பெறமுடியாது என்பதால் அவற்றை விலக்கி விட்டோம். வீட்டில், "கதைப் புத்தகம் படிக்காமல் போய் பள்ளிக்கூட புத்தகம் படி, பாசாகி கம்பஸ் என்ரர் பண்ணலாம்" என்று சொல்லும் பெற்றோரின் அறிவுரையைத் தான் இன்றும் தொடர்கின்றோம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி...

இதனை பாருங்கள் இணைப்பு

இப்படியானவற்றுக்கு தரப்படும் அங்கீகாரமே நல்ல பயனுள்ள பதிவுகளை யாழில் exclusive ஆக தர உதவும்...!! குற்றம் சொல்வதை விட, மாற்றம் கொண்டு வருவது மேல் மச்சான்

முதலில் பார்த்தபோது -1 ஆக இருந்தது. இன்னுமொருவனின் பதிவை வாசிக்காமலேயே ஷோபாசக்தியின் பெயரைப் பார்த்தவுடன் யாரோ புள்ளிபோட்டது போலத் தோன்றியது.

"Prejudice is a great time saver. You can form opinions without having to get the facts"

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், இலக்கியம் என்றவுடன் அது அம்புலிமாமா கதை போலத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்? விளங்காவிடினும் வாழ்வு பொய்க்காது என்பதாலா? மற்ற மொழிகளில் எல்லாம் பெரும் உயர் விருதுகளை அடையும் போது தமிழ் மட்டும் இன்னும் இப்படி இருப்பது ஏன்? 30 வருட போராட்ட வாழ்விலும் எம்மால் உலகுக்கு வழங்கப்பட்ட உயர் இலக்கிய படைப்பு எது? ரஷிய மொழியில் போர்க்காலத்தில் வந்த உலக தன்னிகரற்ற நாவல்களை எம் இலக்கியம் வென்றிருக்க வேண்டாமா?

சிறுபத்திரிகை இலக்கியம் வேறு, ஜனரஞ்சக இலக்கியம் வேறு உங்களுக்குத் தெரியும்தானே நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

53 Views

பார்வைகள் என்ர பகுதியில் எதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?பல தடவைகள் சென்று ஒரு செய்தியை பார்வையிட்டாலும் எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருப்பதன் மர்மம் என்ன? எனது கணனியில் எதாவது பிழையா?அல்லது யாழிலா? :wub:

முதலில் பார்த்தபோது -1 ஆக இருந்தது. இன்னுமொருவனின் பதிவை வாசிக்காமலேயே ஷோபாசக்தியின் பெயரைப் பார்த்தவுடன் யாரோ புள்ளிபோட்டது போலத் தோன்றியது.

"Prejudice is a great time saver. You can form opinions without having to get the facts"

எங்கடை பெரிய புள்ளிகளுக்கே நம்மவர் படங்களை திரை அரங்குகளில பார்க்கிறதுக்கு இலவசமாய் டிக்கட்டும் குடுத்து வாங்கோ வந்து பாருங்கோ எண்டு சொன்னால் டீவீடீ அனுப்புங்கோ வீட்டில இருந்து பாத்துப்போட்டு அபிப்பிராயம் சொல்லிறம் எண்டு சொல்லிதுகள். உந்தக்கேவலத்தில மிச்சம் இருக்கிற 95% எருமைக்கூட்டத்தில இலக்கியத்தை ரசிக்கிற கூட்டத்துக்கு எங்கை போறது? சிலது சோபா சக்திதான் தனது கதையை இன்னுமொருவன் இணைச்சு இருக்கிறதை பார்த்துப்போட்டு தனக்கு தானே யாழுக்கு வந்து இல்லாட்டிக்கு யாருக்கும் சொல்லிவிட்டு புள்ளிபோட்டு இருப்பார். அது சரி யாழில சிகப்புபுள்ளி குத்திற ஆக்களுக்கும் இலக்கியம் பற்றி ஏதோ சம்திங் தெரிஞ்சு இருக்கோ? :D

பார்வைகள் என்ர பகுதியில் எதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?பல தடவைகள் சென்று ஒரு செய்தியை பார்வையிட்டாலும் எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருப்பதன் மர்மம் என்ன? எனது கணனியில் எதாவது பிழையா?அல்லது யாழிலா? :wub:

ஓ.. அது இப்ப முன்பு போல பார்வைகள் எண்ணிக்கை உடனடியாய் Refreshபண்ணுப்பட்டு மாறாது. சில மணித்தியாலங்கள் செல்லும் மாறுகிறதுக்கு. கருத்துக்களம் பழைய வடிவத்தில இருந்து மோகனினால் புதிய வடிவத்திற்கு அண்மையில் மாற்றப்பட்டதில இருந்து உப்பிடி இருக்கிது. இதனால மூத்த படைப்பாளிகள் நாங்கள் யாழில நாங்கள் இணைக்கின்ற ஆக்கங்களிண்ட பார்வைகள் கூடிக்கொண்டு போறதை திரில்லிங்காய் Real Timeஇல நாங்கள் பார்த்து மகிழ, ரசிக்க முடியாது. :wub:

- பார்வைகளின் எண்ணிக்கை ஒரு ஐபி இலக்கத்துக்கு ஒரு தடவை தான் எண்ணப்படும். அதாவது, ஒரு ஐபி இலக்கத்திலிருந்து நீங்கள் ஒரு ஆக்கத்தை எத்தனை தடவை பார்த்தாலும் அது ஒரு தடவை தான் எண்ணும். ஒராள் தான் போடுற செய்தியை 10 தரம் திறந்து திறந்து பாத்தாலும் அது ஒரு தடவை பார்க்கப்பட்டதாகவே காண்பிக்கும் :wub:

- புத்தன், இலக்கியத் தரம் வாய்ந்த ஆக்கங்களுக்கு மட்டும் தான் புள்ளி வழங்கவேணும் எண்டில்லத்தானே. உதாரணமாக நீங்கள் எழுதுகிற கருத்துக எனக்கு பிடித்திருந்தால் நான் உங்களுக்கு புள்ளி வழங்கலாம் தானே. சிலவேளைகளில் சிலர் நகைச்சுவையாக கருத்தெழுதுவார்கள் - அது எங்கள ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருக்கும். அப்படியானவற்றுக்கு கூட புள்ளி வழங்கலாம். கருத்துக்களத்தில் பலவகைப்பட்ட உறுப்பினர்கள் இருக்கினம். அதால எல்லாரும் எல்லாத்துக்கும் புள்ளி வழங்க மாட்டினம். தங்களுக்கு எது விளங்கிச்சோ, தங்களுக்கு எது பிடிச்சதோ அதுகளுக்குத்தானே புள்ளி வழங்குவினம். என்ன ஒண்டு, negative புள்ளிகளை தவறான முறையில பயன்படுத்தாட்டி சரி.

இது அடக்கு முறை... ஒராள் ஒரு நாளைக்கு ஐந்து இடத்திலை தான் பச்சை குத்த முடியும் எண்டு வருகுது... (ஐந்து முறை தான் நான் குத்தினான்) ஆறாவது தடவை முயல விடுகுது இல்லை..

அப்பிடியும் மீறி குத்தினால் இப்பிடி வருகுது...

Action failed: You have reached your quota of positive votes for the day

இது அவ்வளவு நல்லா இல்லை..

Edited by தயா

ஒரு ஐபி முகவரிக்கு ஒரு பார்வை மட்டும் எண்டால் அது நல்லவிசயம். உண்மையில எத்தினைபேர் பார்க்கிறார்கள் எண்டு கணக்கு எடுக்கலாம்.

யாழில பலவிதமான ஆக்கள் இருக்கிறீனம். அவையளில் புள்ளி குத்திற ஆக்களில பலர் தங்களுக்கு எது விளங்காததோ.. எது பிடிக்காததோ அதுக்குத்தான் புள்ளி வழங்குவீனம் எண்டு வடிவாய் உண்மையை சொல்லி இருக்கலாம் இளைஞன்.

இது அடக்கு முறை... ஒராள் ஒரு நாளைக்கு ஐந்து இடத்திலை தான் பச்சை குத்த முடியும் எண்டு வருகுது... (ஐந்து முறை தான் நான் குத்தினான்) ஆறாவது தடவை முயல விடுகுது இல்லை..

அப்பிடியும் மீறி குத்தினால் இப்பிடி வருகுது...

Action failed: You have reached your quota of positive votes for the day

இது அவ்வளவு நல்லா இல்லை..

தலை உது உந்தப்பச்சை எத்தினை ஐடிக்களில குத்தினனீங்கள்? ஒரு ஐடியுக்கு இரண்டு பச்சைத்தான் ஒருநாளைக்கு குத்தலாம். எனக்கு அப்பிடித்தான் வருகிது. இதனால நான் ரெண்டு ஐடியை பாவிச்சு குத்தேக்கை நாலு பச்சைதான் ஒரு நாளைக்கு குத்தலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

தலை உது உந்தப்பச்சை எத்தினை ஐடிக்களில குத்தினனீங்கள்? ஒரு ஐடியுக்கு இரண்டு பச்சைத்தான் ஒருநாளைக்கு குத்தலாம். எனக்கு அப்பிடித்தான் வருகிது. இதனால நான் ரெண்டு ஐடியை பாவிச்சு குத்தேக்கை நாலு பச்சைதான் ஒரு நாளைக்கு குத்தலாம்.

மச்சான், இரண்டு ஐடி நிர்வாகத்துக்கு தெரியாமை எடுக்க என்ன செய்ய வேண்டும்.? :wub:

ஒரு நாளைக்கு ஒரு ஐடியுக்கு மூன்று போடலாம் என்று நினைக்கிறன். ரெண்டு ஐடியில போடேக்க ஒரே ஐபி முகவரி எண்டபடியால நாலுமட்டுமே போடக்கூடியதாக இருக்கிதோ தெரியாது. மாமன் மச்சான், வீட்டு கணணிகள்.. நூலகம் இதர பொதுக்கணணிகளில இருந்து வேற ஐடிக்களை உருவாக்கலாம் தமிழ்சிறீ. ஆனால்.. உப்பிடி மினக்கடுற நேரத்துக்கு நாங்களே ஓர் வலைத்தளத்தை செய்து விருப்பமானதை எழுதுறது பரவாயில்லை. யாழில பலர் இப்ப வாறது எழுதுறது இல்லை. ஏன் எண்டால் அவையளில பலர் தாங்களே வலைத்தளம், கருத்துக்களம் எல்லாம் உருவாக்கி வச்சு இருக்கிறீனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தவிலாசங்களை தந்தீங்களெண்டால் அப்பப்ப நானும் போய் புடுங்குப்படலாமெல்லே :D

முகநூலுக்கு - facebook.com போனீங்கள் எண்டால் எல்லா விசயங்களையும் இலகுவாய் பெற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.