Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஷோபாசக்தியின் “வெள்ளிக்கிழமை” என்ற சிறுகதை

Featured Replies

அண்மையில் ஷோபாசக்தியின் “வெள்ளிக்கிழமை” என்ற சிறுகதையினை வாசித்தேன். முன்னரும் பலதடவை யாழ் களத்தில் கூறியதைப் போல, சமகால ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஷோபாசக்திக்கு நிகராய், இல்லை அருகாய்க் கூட எவரையும் என்னால் காணமுடியவில்லை (இது எனது அபிப்பிராயம் மட்டுமே). அந்த வகையில், எனது அபிப்பிராயத்தில், வெள்ளிக்கிழமை சிறுகதை, ஷோபாசக்தின் பிரமிப்பூட்டும் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது.

மிகவும் சிக்கலான இக்கதையிற்கு எனது புரிதல் மட்டுமே சரியான அர்த்தம் என்று நான் கூறவரவில்லை. எனது புரிதலை பகிர்ந்து மட்டும் கொள்கின்றேன். உங்கள் புரிதல்கள் பற்றியும் அறிய ஆவலாய் உள்ளது:

குறிப்பு: எனது புரிதலைப் படிக்கு முன்பு, கதையைக் கீழுள்ள இணைப்பில் படித்து விடுங்கள். (இக்கதையை முற்றாக இரசிப்பதற்கு, ரோல்ஸ்ரோயின் அன்னா கரினினா நாவல் பற்றிய பரிட்சயமும் அவசயிம்.)

http://www.shobasakthi.com/shobasakthi/?p=140

எனது புரிதல்

அன்னா கரினினா பற்றி இக்கதையில் கதாசிரியர் ஆரம்பம் தொட்டுக் குறிப்பிடுவதன் காரணம் வாசகரை அன்னா கரினினா மனநிலைக்கு இட்டுச் செல்வதற்காகவும், “வெள்ளிக்கிழமை” கதை ஷோபாசக்தி உருவாக்கிய தமிழ் அன்னாக் கரினினா என்பதைக் கட்டியம் கூறுவதற்குமாகவே என்பது எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை, “வெள்ளிக்கிழமை” கதையின் வெள்ளிக்கிழமை கதாபாத்திரம் என்பது, உண்மையில் ஒரு தமிழ் அன்னா கரினினாவே தான்.

கதையில், மெத்ரோவில் வயலின் வாசிக்கும் வெள்ளைக்காரிக்கு அன்னா என்று கதாசிரியர் செல்லப் பெயர் வைப்பது உண்மையில் என்னை மயிர்க்கூச்செறியச் செய்த அற்புத நுட்பம். எப்படியெனின், அன்னாக் கரினினா என்ற நாவலால் ஆட்கொள்ளப்பட்டு, அந்நாவல் கொடுத்த மனநிலையில் இருந்து தனது சமூகத்தைப் பார்க்க விளையும் கதாசிரியர், தனது அன்னாகரினினா தாக்கத்தை மெத்ரோ வயலின் பெண்ணாய் உருவகித்து, தனது அன்னாக் கரினினா தாக்கத்தை எல்லாம் அந் த வயலின் பெண் வாயிலாக மட்டுமே பேசிவிடுகிறார். மேலும் வயலின் பெண்ணிற்கு அன்னா என்று பெயரிட்டு நிப்பாட்டி விட்டுத் தனது சமூகம் பற்றித் தானும் கதை சொல்வதால், “என்ரை சமூகத்தைப் பற்றி அன்னா கரினினா மனநிலைக்குத்; தெரியாத சங்கதிகள் எனக்குத் தெரியும் என்று” திமிராகவும் கூடக் கூறி விடுவது போலிருப்பது அற்புதம். அதை இப்படியும் பார்க்கலாம், அன்னாக் கரினினா மனநிலையை மெத்ரோவில் வயலினோடு நிறுத்தி விட்டு, லா சப்பலில் கதாசிரியர் தனது அன்னாக் கரினினாவுடன் தான் தான் நடக்கிறார். புல்லரிக்கும் திறமை.

மேலும், வயலின் பெண்ணின் வயலின் வாசிப்பைச் சுமார் என்றும், சில தருணற்களில் இசை அறுந்து போகிறது என்றும் வர்ணிப்பதன் வாயிலாக, கதாசிரியர், குறும்புத் தனமாய் அனாக்கரினினா ஒன்றும் வெல்லமுடியாப் படைப்போ, ஒப்பீடற்ற படைப்போ ஆகி விடாது என்று சற்று சபை “அடக்கமும்” செய்து தான் செல்கிறார். அற்புதம்.

ரோல்ஸ்ரோயின் அன்னா கரினினா நாவல் ஆராயும் கேள்விகளில் ஒன்று: எமது இதயத்தில் நாம் போற்றி வைத்திருக்கும் பெறுமதிகள் அல்லது மாயைகள் எல்லாம் மாயைகள் என்று நாம் அறிகையில், எவ்வாறு நாம் வாழ்வது? ஏதை நாம் பற்றிக் கொள்வது என்பது.

வெள்ளிக் கிழமை கதாபாத்திரம், எமது தமிழ் சமூக வரைவிலக்கிணங்களை மீறியது. மணமான அன்னா கரினினா திருமண பந்தம் என்ற வரைவிலக்கணத்தோடு நேரடியாய் முரண்படும் விடயங்களில் திருமண பந்தத்தின் வரைவிலக்கணத்தைப் போற்றும் சமூகத்திற்குள் வாழத் தலைப்பட்டதைப் போல, வெள்ளிக்கிழமையும் “உங்களைப் போன்ற ஆக்களால தான் தமிழரிற்கு இஞ்ஞ அவமானம்” என்று சாதாரன தெருவழித் தமிழ் இளைஞன் இகழும் வகையில் வாழ்கின்றார். அன்னாவை வாட்டி எடுத்த சமூகத்தின் வசைகள் போன்றே, வெள்ளிக்கிழமை என்ற தமிழரும் லா சப்பலில் வாட்டி எடுக்கப்படுகிறார். சமூக வசவுகளின் முடிவில் அன்னா புகையிரதம் முன் பாய்ந்ததைப் போலவே “வெள்ளிக்கிழமையும் பாய்கிறார்”.

லாசப்பல் பிச்சை எடுப்பு முடிந்து வெள்ளிக்கிழமை மெத்ரோவிற்கு மீண்டபோது, அன்னா “யேய் சரா சரா” என்ற ஸ்பானிய பாடலை வயலினில் வாசித்துக் கொண்டிருப்பதாகக் கதாசிரியர் சொல்லுகின்றார். இந்த ஸ்பானிய பாடல் வரிகளின் சுமாரான மொழிபெயர்ப்பு ஏறத்தாள “நடக்கிறது நடந்து தான் தீரும்” என்ற வகையில் அமையும். வயலின் பெண் வெள்ளிக்கிழமையைப் பார்த்துச் சிரிக்கிறாள், அந்தச் சிரிப்பு வெள்ளிக்கிழமை என்ன செய்ய உத்தேசித்துள்ளார் என்பதை அன்னா அறிந்திருந்தாள் என்றும் அர்த்தப்படுத்தப்படக்கூடிய வகையில் அமைகிறது. வெள்ளிக்கிழமை ரெயில் பாயுமுன் நடாத்திய சடங்கும் அன்னாவிற்குப் புரிகிறது, ஆனால் அவரைத் தடுக்க அவள் முயலவில்லை. “நடக்கிறது நடந்து தான் தீரும்”.

இன்னொரு விதத்தில் பார்த்தால் சமூகத்தின் வசைபாடலின் வலி பற்றி அன்னா அறிந்திருந்ததாலும், அன்னாக் கரினினாவில் அன்னா பாத்திரமும் ரெயில் முன் பாய்ந்தது என்பதாலும், அன்னா உருவகம் வெள்ளிக்கிழமை பாய்வதைத் தடுக்கமாட்டாது என்பது ஏற்புடையது.

வெள்ளிக்கிழமை, தான் ரெயில் முன் பாயுமுன்னர் சடங்கு நடாத்திய புகைப்படமானது, பத்து பதினைந்து வருடங்களின் முன்னர் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம். இப்புகைப்படத்தில் அவர் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வித்தில் உருவம் கொண்டிருந்தார். இப்போது அந்த உருவம் தன்னிடம் இல்லாமையால் தான் சமூகம் தன்னை தினமும் வசைபாடி இழக்காரம் செய்து கொல்கிறது என்பதை அவர் உணர்;ந்தார். “உங்களைப் போல ஆக்களால தான் தமிழரிற்கு அவமானம்” என்றிகழ்ந்த தமிழ் இளைஞன் மீது வெள்ளிக்கிழமை லாசப்பலில் துப்பியிருந்தார். அந்த இளைஞனை நோக்கிய அவரது துப்பலானது, இப்படித்தான் வாழவேண்டும், இது இப்படித்தான் போன்ற வரைவிலக்கணங்களை வெள்ளிக்கிழமை வெறுத்தார் என்பதையே காட்டிநிற்கின்றது. ஆனால், வரைவிலக்கணத்திற்குக் கட்டுப்படாததால் சமூகம் தந்த வேதனை அவரைச் சாவு பற்றிச் சிந்திக்கச் செய்தது. சமூகத்தின் வரைவிலக்கணங்களை வெறுக்கும் ஒருவர் அந்தச் சமூகம் தன்னை இகழ்வதை வேதனையாய், சாகும் அளவிற்கு வேதனையாய்க் கருதகிறார் எனும் போது, உண்மையில் அச்சமூகத்தின் அனைத்து வரைவிலக்கணங்களையும் பெறுமதிகளையும் அவர் கடந்து விடவில்லை என்றே தோன்றுகின்றது. அந்தவகையில், சாவதற்கு முன் சமூகம் தன்னை இறுதியாக ஏற்றுக் கொண்ட வடிவத்திற்கு, சமூகம் புனித சடங்காகக் கருதும் சடங்கை நடாத்தி விட்டு ரெயில் முன் பாய்கிறார். இதை இன்னொரு விதத்தில் பார்த்தால், செத்ததன் பின்னர் ஆரும் தனது படத்திற்கு விளக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் சமூகம் சொல்லிக் கொடுத்த ஒரு பெறுமதியைக் காவிக்கொண்டிருந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம். மேலும், அவ்வாறு வைக்கப்படும் படம், சமூகம் தன்னை இறுதியாக ஏற்றுக்கொண்ட வடிவத்தின் படமாகவே இருக்கவேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை விரும்பியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ரெயில் முன் பாய்ந்து, பொலிஸ் வந்து விசாரிச்சுச் சென்ற மறு வெள்ளி, வெள்ளிக்கிழமை மீண்டுவருகிறார் என்பது சிலசமயம் சில வாசகரிற்குக் குழப்பமாய் அமையலாம். ஆனால் ரெயில் முன் வெள்ளிக்கிழமை பாய்ந்தபோது, “சக்” என்று ஒரு சத்தம் வயலின் பெண்ணிற்குக் கேட்டதாய் மட்டும் தான் கதாசிரியர் சொன்னார். எனவே “யேய் சரா சரா” என்ற் பாடலைப் போல, எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தி எம்மிடம் இல்லை, நடக்கிறது நடந்து தான் தீரும். வெள்ளிக்கிழமை சாக முடிவெடுத்துப் பாய்ந்திருக்கலாம், ஆனால் அவர் அன்று சாகமுடியாது போனது அவரை மீறியது. மற்றவர்களிற்கு, ரயில் முன் பாய்ந்தவர் மீண்டு வந்தது அதிர்ச்சியாய் இருக்கையில் அன்னாவிற்கு மட்டும் அது புரிகிறது. அவளும் ரெயில் முன் பாய்ந்தவள் தானே. புhய்வது பாய்பவரின் கையில் இருப்பினும், ரெயில் மோதி இறப்பது எமது கையில் இல்லை.

நீளமாய் பதிவு போட்டு யாழ்கள வாசகரைக் கடுப்பேற்படுத்தக்கூடாது என்ற புரிதலில் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். ஆனால் இக்கதையின் ஒவ்வொரு வரி பற்றியும் ஒரு பந்தி எழுதலாம். அத்தனை அற்புதமான கதை.

Edited by Innumoruvan

இணைப்பிற்கு நன்றி இன்னுமொருவன் உங்கள் புரிதல் அறிமுகம் சிறப்பானது. பலகோணங்களில் சிந்தனையை தூண்டும் சமூகம் சார்ந்த ஒரு படைப்பு.

இதை இன்னொரு விதத்தில் பார்த்தால்இ செத்ததன் பின்னர் ஆரும் தனது படத்திற்கு விளக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் சமூகம் சொல்லிக் கொடுத்த ஒரு பெறுமதியைக் காவிக்கொண்டிருந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம். மேலும்இ அவ்வாறு வைக்கப்படும் படம்இ சமூகம் தன்னை இறுதியாக ஏற்றுக்கொண்ட வடிவத்தின் படமாகவே இருக்கவேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை விரும்பியுள்ளார்.

ஒருவன் சமூகத்தில் கீழ்நிலைக்கு போனபின்னார் அவனிற்காக யாரும் சடங்குகள் செய்யப்போவதில்லை. சடங்குகள் விலகிக்கொள்ளும். அவர் தனக்காக தானே செய்தார் என்றும் உணரமுடியும். சடங்குகள் சம்பிரதாயங்கள் வசதிவாய்ப்புகளுடனும் சமூக அங்கீராரத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் தான் உயிர்வாழும் என்பதை வெள்ளிக்கிழமை உணர்ந்திருந்தார். இந்த சிறுகதையில் இந்த விசயம் சமூகம் குறித்த ஒரு முக்கிய குறியீடு. கதையில் ஒரு வீடியோக் கடையின் முன்புறத்தில் கார்த்திகைப் பூவும் கையுமாக பிரபாகரன் நின்றிருக்கும் ‘போஸ்டர்’ ஒட்டப்பட்டிருந்தது என்ற வசனம் இந்தக் குறியீட்டை விளங்கிக் கொள்ள அவசியமானது.

வெள்ளிக்கிழமை ரெயில் முன் பாய்ந்துஇ பொலிஸ் வந்து விசாரிச்சுச் சென்ற மறு வெள்ளிஇ வெள்ளிக்கிழமை மீண்டுவருகிறார் என்பது சிலசமயம் சில வாசகரிற்குக் குழப்பமாய் அமையலாம். ஆனால் ரெயில் முன் வெள்ளிக்கிழமை பாய்ந்தபோதுஇ “சக்” என்று ஒரு சத்தம் வயலின் பெண்ணிற்குக் கேட்டதாய் மட்டும் தான் கதாசிரியர் சொன்னார். எனவே “யேய் சரா சரா” என்ற் பாடலைப் போலஇ எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தி எம்மிடம் இல்லைஇ நடக்கிறது நடந்து தான் தீரும். வெள்ளிக்கிழமை சாக முடிவெடுத்துப் பாய்ந்திருக்கலாம்இ ஆனால் அவர் அன்று சாகமுடியாது போனது அவரை மீறியது. மற்றவர்களிற்குஇ ரயில் முன் பாய்ந்தவர் மீண்டு வந்தது அதிர்ச்சியாய் இருக்கையில் அன்னாவிற்கு மட்டும் அது புரிகிறது. அவளும் ரெயில் முன் பாய்ந்தவள் தானே. புhய்வது பாய்பவரின் கையில் இருப்பினும்இ ரெயில் மோதி இறப்பது எமது கையில் இல்லை.

வெள்ளிக்கிழமை இறந்திருக்கலாம் என்னுமொரு வெள்ளிக்கிழமையை எதிர்கொண்டிருக்கலாம். நாம் வெள்ளிக்கிழமைப் பாத்திரமாகவே மாறிக்கொண்டிருக்கின்றோம் என்ற பொருள் மறைந்திருப்பதாகவே உணரமுடிகின்றது.

வணக்கம் இன்னுமொருவன்,

கதையை வாசித்தேன். இணைத்தமைக்கு நன்றி. கதை பற்றிய உங்கள் விமர்சனமும் சுவாரசியமாய் இருக்கிறது.

கதை பற்றி கூறுவதானால்... மிகவும் வித்தியாசமான கதை, வித்தியாசமான கோணத்தில் அணுகப்பட்டு இருக்கிறது, வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. எனினும்.. கதையில் என்னமோ எனக்கு சினிமாத்தனத்தை உணர முடிகின்றது. உதாரணத்திற்கு கதாசிரியர் வெள்ளிக்கிழமையை மணித்தியாலக்கணக்கில் பின் தொடர்ந்து அவதானிப்பதை சொல்லலாம். மற்றையது... முதல் பின் தொடர்தலிலேயே அதிர்ச்சியான ஓர் முடிவை காணுதல்... இப்படி பல.

அதற்காக.. கதை சுவாரசியம் அற்றது என்று இல்லை. வாசித்துக்கொண்டு சென்றபோது சினிமாபடம் பார்ப்பது போலவே அடுத்து என்ன நடைபெறப்போகின்றது அடுத்து என்ன நடைபெறப்போகின்றது என்று பார்க்கத்தூண்டும் - வாசிக்கத்தூண்டும் ஆர்வத்தை உணரமுடிந்தது.

கதையின் முடிபு என்று பார்த்தால்.. கதையை சில குறியீடுகளாக - அதாவது சாதாரணமாக கதையை பார்ப்பவர்களின் மண்டையினுள் விளங்கிக்கொள்ள முடியதவாறு இறுதிப்பகுதியை அமைத்து இருக்கின்றார். இதற்கு ஓர் வாசகரின் பின்னூட்டலே சாட்சி. அதில் எங்கள் மரமண்டைகளுக்கு புரியுமாறு கதை முடிவை விளக்குமாறு வாசகர் எழுதி இருந்தார்.

உங்கள் விமர்சனம் என்று பார்த்தால்.. உங்களைப்போன்ற ஓர் வாசகரை அதுவும் இவ்வளவு திறமையாக பல்வேறு குறியீடுகளை அவதானித்து மற்றவர்களுக்கும் விளக்கம் - பொழிப்புரை வழங்கக்கூடிய வாசகரை பெற்று இருப்பதற்கு கதாசிரியர் மிகவும் கொடுத்து வைத்தவர். நீங்கள் பொழிப்புரை வழங்கி இருக்காவிட்டால் நிச்சயம் இந்தக்கதையை ஓர் நொண்டிக்கதையாகவே படித்து சுவைத்திருக்கவேண்டி ஏற்பட்டு இருக்கும்.

கதையை இப்படியும் பார்க்கலாம். ஓர் ஓவியன்... அல்லது.. யாராவது சும்மா இரண்டு கிறுக்கல்களை கிறுக்கிவிட்டு போகலாம். ஆனால்.. கலை இரசனை உள்ளவர்கள் அதை பல்வேறு கோணங்களில் பார்த்து மகிழ்ந்து விமர்சனம் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஷோபாசக்தியின் “வெள்ளிக்கிழமை” என்ற சிறுகதையினை வாசித்தேன். முன்னரும் பலதடவை யாழ் களத்தில் கூறியதைப் போல, சமகால ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஷோபாசக்திக்கு நிகராய், இல்லை அருகாய்க் கூட எவரையும் என்னால் காணமுடியவில்லை (இது எனது அபிப்பிராயம் மட்டுமே). அந்த வகையில், எனது அபிப்பிராயத்தில், வெள்ளிக்கிழமை சிறுகதை, ஷோபாசக்தின் பிரமிப்பூட்டும் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது.

மிகவும் சிக்கலான இக்கதையிற்கு எனது புரிதல் மட்டுமே சரியான அர்த்தம் என்று நான் கூறவரவில்லை. எனது புரிதலை பகிர்ந்து மட்டும் கொள்கின்றேன். உங்கள் புரிதல்கள் பற்றியும் அறிய ஆவலாய் உள்ளது:

குறிப்பு: எனது புரிதலைப் படிக்கு முன்பு, கதையைக் கீழுள்ள இணைப்பில் படித்து விடுங்கள். (இக்கதையை முற்றாக இரசிப்பதற்கு, ரோல்ஸ்ரோயின் அன்னா கரினினா நாவல் பற்றிய பரிட்சயமும் அவசயிம்.)

http://www.shobasakthi.com/shobasakthi/?p=140

எனது புரிதல்

அன்னா கரினினா பற்றி இக்கதையில் கதாசிரியர் ஆரம்பம் தொட்டுக் குறிப்பிடுவதன் காரணம் வாசகரை அன்னா கரினினா மனநிலைக்கு இட்டுச் செல்வதற்காகவும், “வெள்ளிக்கிழமை” கதை ஷோபாசக்தி உருவாக்கிய தமிழ் அன்னாக் கரினினா என்பதைக் கட்டியம் கூறுவதற்குமாகவே என்பது எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை, “வெள்ளிக்கிழமை” கதையின் வெள்ளிக்கிழமை கதாபாத்திரம் என்பது, உண்மையில் ஒரு தமிழ் அன்னா கரினினாவே தான்.

கதையில், மெத்ரோவில் வயலின் வாசிக்கும் வெள்ளைக்காரிக்கு அன்னா என்று கதாசிரியர் செல்லப் பெயர் வைப்பது உண்மையில் என்னை மயிர்க்கூச்செறியச் செய்த அற்புத நுட்பம். எப்படியெனின், அன்னாக் கரினினா என்ற நாவலால் ஆட்கொள்ளப்பட்டு, அந்நாவல் கொடுத்த மனநிலையில் இருந்து தனது சமூகத்தைப் பார்க்க விளையும் கதாசிரியர், தனது அன்னாகரினினா தாக்கத்தை மெத்ரோ வயலின் பெண்ணாய் உருவகித்து, தனது அன்னாக் கரினினா தாக்கத்தை எல்லாம் அந் த வயலின் பெண் வாயிலாக மட்டுமே பேசிவிடுகிறார். மேலும் வயலின் பெண்ணிற்கு அன்னா என்று பெயரிட்டு நிப்பாட்டி விட்டுத் தனது சமூகம் பற்றித் தானும் கதை சொல்வதால், “என்ரை சமூகத்தைப் பற்றி அன்னா கரினினா மனநிலைக்குத்; தெரியாத சங்கதிகள் எனக்குத் தெரியும் என்று” திமிராகவும் கூடக் கூறி விடுவது போலிருப்பது அற்புதம். அதை இப்படியும் பார்க்கலாம், அன்னாக் கரினினா மனநிலையை மெத்ரோவில் வயலினோடு நிறுத்தி விட்டு, லா சப்பலில் கதாசிரியர் தனது அன்னாக் கரினினாவுடன் தான் தான் நடக்கிறார். புல்லரிக்கும் திறமை.

மேலும், வயலின் பெண்ணின் வயலின் வாசிப்பைச் சுமார் என்றும், சில தருணற்களில் இசை அறுந்து போகிறது என்றும் வர்ணிப்பதன் வாயிலாக, கதாசிரியர், குறும்புத் தனமாய் அனாக்கரினினா ஒன்றும் வெல்லமுடியாப் படைப்போ, ஒப்பீடற்ற படைப்போ ஆகி விடாது என்று சற்று சபை “அடக்கமும்” செய்து தான் செல்கிறார். அற்புதம்.

ரோல்ஸ்ரோயின் அன்னா கரினினா நாவல் ஆராயும் கேள்விகளில் ஒன்று: எமது இதயத்தில் நாம் போற்றி வைத்திருக்கும் பெறுமதிகள் அல்லது மாயைகள் எல்லாம் மாயைகள் என்று நாம் அறிகையில், எவ்வாறு நாம் வாழ்வது? ஏதை நாம் பற்றிக் கொள்வது என்பது.

வெள்ளிக் கிழமை கதாபாத்திரம், எமது தமிழ் சமூக வரைவிலக்கிணங்களை மீறியது. மணமான அன்னா கரினினா திருமண பந்தம் என்ற வரைவிலக்கணத்தோடு நேரடியாய் முரண்படும் விடயங்களில் திருமண பந்தத்தின் வரைவிலக்கணத்தைப் போற்றும் சமூகத்திற்குள் வாழத் தலைப்பட்டதைப் போல, வெள்ளிக்கிழமையும் “உங்களைப் போன்ற ஆக்களால தான் தமிழரிற்கு இஞ்ஞ அவமானம்” என்று சாதாரன தெருவழித் தமிழ் இளைஞன் இகழும் வகையில் வாழ்கின்றார். அன்னாவை வாட்டி எடுத்த சமூகத்தின் வசைகள் போன்றே, வெள்ளிக்கிழமை என்ற தமிழரும் லா சப்பலில் வாட்டி எடுக்கப்படுகிறார். சமூக வசவுகளின் முடிவில் அன்னா புகையிரதம் முன் பாய்ந்ததைப் போலவே “வெள்ளிக்கிழமையும் பாய்கிறார்”.

லாசப்பல் பிச்சை எடுப்பு முடிந்து வெள்ளிக்கிழமை மெத்ரோவிற்கு மீண்டபோது, அன்னா “யேய் சரா சரா” என்ற ஸ்பானிய பாடலை வயலினில் வாசித்துக் கொண்டிருப்பதாகக் கதாசிரியர் சொல்லுகின்றார். இந்த ஸ்பானிய பாடல் வரிகளின் சுமாரான மொழிபெயர்ப்பு ஏறத்தாள “நடக்கிறது நடந்து தான் தீரும்” என்ற வகையில் அமையும். வயலின் பெண் வெள்ளிக்கிழமையைப் பார்த்துச் சிரிக்கிறாள், அந்தச் சிரிப்பு வெள்ளிக்கிழமை என்ன செய்ய உத்தேசித்துள்ளார் என்பதை அன்னா அறிந்திருந்தாள் என்றும் அர்த்தப்படுத்தப்படக்கூடிய வகையில் அமைகிறது. வெள்ளிக்கிழமை ரெயில் பாயுமுன் நடாத்திய சடங்கும் அன்னாவிற்குப் புரிகிறது, ஆனால் அவரைத் தடுக்க அவள் முயலவில்லை. “நடக்கிறது நடந்து தான் தீரும்”.

இன்னொரு விதத்தில் பார்த்தால் சமூகத்தின் வசைபாடலின் வலி பற்றி அன்னா அறிந்திருந்ததாலும், அன்னாக் கரினினாவில் அன்னா பாத்திரமும் ரெயில் முன் பாய்ந்தது என்பதாலும், அன்னா உருவகம் வெள்ளிக்கிழமை பாய்வதைத் தடுக்கமாட்டாது என்பது ஏற்புடையது.

வெள்ளிக்கிழமை, தான் ரெயில் முன் பாயுமுன்னர் சடங்கு நடாத்திய புகைப்படமானது, பத்து பதினைந்து வருடங்களின் முன்னர் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம். இப்புகைப்படத்தில் அவர் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வித்தில் உருவம் கொண்டிருந்தார். இப்போது அந்த உருவம் தன்னிடம் இல்லாமையால் தான் சமூகம் தன்னை தினமும் வசைபாடி இழக்காரம் செய்து கொல்கிறது என்பதை அவர் உணர்;ந்தார். “உங்களைப் போல ஆக்களால தான் தமிழரிற்கு அவமானம்” என்றிகழ்ந்த தமிழ் இளைஞன் மீது வெள்ளிக்கிழமை லாசப்பலில் துப்பியிருந்தார். அந்த இளைஞனை நோக்கிய அவரது துப்பலானது, இப்படித்தான் வாழவேண்டும், இது இப்படித்தான் போன்ற வரைவிலக்கணங்களை வெள்ளிக்கிழமை வெறுத்தார் என்பதையே காட்டிநிற்கின்றது. ஆனால், வரைவிலக்கணத்திற்குக் கட்டுப்படாததால் சமூகம் தந்த வேதனை அவரைச் சாவு பற்றிச் சிந்திக்கச் செய்தது. சமூகத்தின் வரைவிலக்கணங்களை வெறுக்கும் ஒருவர் அந்தச் சமூகம் தன்னை இகழ்வதை வேதனையாய், சாகும் அளவிற்கு வேதனையாய்க் கருதகிறார் எனும் போது, உண்மையில் அச்சமூகத்தின் அனைத்து வரைவிலக்கணங்களையும் பெறுமதிகளையும் அவர் கடந்து விடவில்லை என்றே தோன்றுகின்றது. அந்தவகையில், சாவதற்கு முன் சமூகம் தன்னை இறுதியாக ஏற்றுக் கொண்ட வடிவத்திற்கு, சமூகம் புனித சடங்காகக் கருதும் சடங்கை நடாத்தி விட்டு ரெயில் முன் பாய்கிறார். இதை இன்னொரு விதத்தில் பார்த்தால், செத்ததன் பின்னர் ஆரும் தனது படத்திற்கு விளக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் சமூகம் சொல்லிக் கொடுத்த ஒரு பெறுமதியைக் காவிக்கொண்டிருந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம். மேலும், அவ்வாறு வைக்கப்படும் படம், சமூகம் தன்னை இறுதியாக ஏற்றுக்கொண்ட வடிவத்தின் படமாகவே இருக்கவேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை விரும்பியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ரெயில் முன் பாய்ந்து, பொலிஸ் வந்து விசாரிச்சுச் சென்ற மறு வெள்ளி, வெள்ளிக்கிழமை மீண்டுவருகிறார் என்பது சிலசமயம் சில வாசகரிற்குக் குழப்பமாய் அமையலாம். ஆனால் ரெயில் முன் வெள்ளிக்கிழமை பாய்ந்தபோது, “சக்” என்று ஒரு சத்தம் வயலின் பெண்ணிற்குக் கேட்டதாய் மட்டும் தான் கதாசிரியர் சொன்னார். எனவே “யேய் சரா சரா” என்ற் பாடலைப் போல, எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தி எம்மிடம் இல்லை, நடக்கிறது நடந்து தான் தீரும். வெள்ளிக்கிழமை சாக முடிவெடுத்துப் பாய்ந்திருக்கலாம், ஆனால் அவர் அன்று சாகமுடியாது போனது அவரை மீறியது. மற்றவர்களிற்கு, ரயில் முன் பாய்ந்தவர் மீண்டு வந்தது அதிர்ச்சியாய் இருக்கையில் அன்னாவிற்கு மட்டும் அது புரிகிறது. அவளும் ரெயில் முன் பாய்ந்தவள் தானே. புhய்வது பாய்பவரின் கையில் இருப்பினும், ரெயில் மோதி இறப்பது எமது கையில் இல்லை.

நீளமாய் பதிவு போட்டு யாழ்கள வாசகரைக் கடுப்பேற்படுத்தக்கூடாது என்ற புரிதலில் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். ஆனால் இக்கதையின் ஒவ்வொரு வரி பற்றியும் ஒரு பந்தி எழுதலாம். அத்தனை அற்புதமான கதை.

இன்னுமொருவன் கதையை எழுதியவர் உங்கள் கோணத்திலிருந்து வரும் பார்வையை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். உங்களுடைய இப்புரிதலுடைய விமர்சனத்தை வாசித்தபின் இக்கதையை வாசித்தேன். அன்னாவைப் போல் வெளிப்படையாக புன்னகைக்கா விட்டாலும்.... தேர்ந்த படைப்பாளி... இன்னுமொருவன் உங்களுடைய விமர்சனத்தை நான் வாசிக்காது இக்கதையை வாசித்திருந்தால் இக்கதையைப் பற்றிய புரிதலை பத்தோடு பதினொன்றாகவே விட்டிருப்பேன். நிச்சயமாக இச்சிறுகதை பலருக்குச் சிதம்பர சக்கரத்தை பூதம் பார்த்ததுபோன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தும். :lol: "நடக்கிறது நடந்தே தீரும்".

  • தொடங்கியவர்

சுகன், மச்சான், வல்வை சகாரா உங்கள் அனைவரது கருத்துக்களிற்கும் மிக்க நன்றி.

சுகன் நீங்கள் பார்க்கும் கோணமும் சரியாகவே படுகிறது--ஏற்கனவே கூறியதைப் போல இக்கதையின் ஒவ்வொரு வரிகளும் ஆழமாய் ஆராயப்படக்கூடியன. அதீத ஆழுமை மிக்க இந்த எழுத்தாளர் கொட்டிவிட்டிருக்கும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் அனுபவிக்கும் போது தான், இக்கதையின் வாசிப்புப் பூரணம் பெறுகிறது.

மச்சான்,

உங்களது கனிவான வார்த்தைகளிற்கு நன்றி. இந்த எழுத்தாழர் எழுதி பிரசுரித்த அத்தனை பிரசுரங்களையும் நான் வாசித்துள்ளேன். ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுவதாகவே எனது பார்வையில் அமைகிறன. வெள்ளிக்கிழமை கதை இவரது சிறுகதைகளில் உச்சமாக எனக்குப் படுகிறது. ஒரு துரதிஸ்ரம் என்னவெனில் இவரது அரசியல் நிலைப்பாடு காரணமாகப் பலர் இவரது கதைகளைக் கூட வாசிக்காது விட்டுவிடுகிறார்கள். தங்கள் அரசியலில் தெளிவுள்ள எவரிற்கும் எப்போதும் இன்னொருவரது அரசியலைப் பார்;த்துப் பயம் வராது என்பது எனது கருத்து நிலை. நாம் பிறந்த அதே நாட்டில் பிறந்து, நமது தாய் மொழியில் இத்தனை சீராக எழுதும் ஒரு எழுத்தாழரின் திறமை அரசியல் காரணமாக அனுபவிக்கப்படாது கிடக்கிறது என்பது வருத்தத்திற்குரியது.

வல்வைசகாரா,

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. குறியீடுகள் நிரம்பிவழியும் இக்கதை உண்மையில் சற்றுக் சிக்கலாய்த்தான் இருக்கின்றது. எனக்கும் முதல் வாசிப்பில் எனது இப்போதைய புரிதல் வந்துவிடவில்லை. வாசித்து விட்டு ஒரு அரைமணிநேரம் இக்கதையை இரைமீட்கவேண்டி இருந்ததது. பின்னர் மீண்டும் வாசித்தபோது பலமடங்கு இனிப்பாய் இருந்தது.

ஷோபா சக்தியின் 'வெள்ளிக்கிழமை' சிறுகதையினை ஏற்கனவே அவரின் சிறுகதைத் தொகுப்பொன்றிலோ அல்லது அவரின் இணையத்திலோ வாசித்திருக்கின்றேன். அந்த முறை வாசிக்கும் போது 'அன்ன கரீனினா' என்ற பெரும் நாவலை வாசித்திருக்கவில்லை. அப்போது 'வெள்ளிக்கிழமை' ஏற்படுத்திய மன அதிர்வுகள் வேறானதாக இருந்தன. அன்று வாசிக்கும் போது, 'வெள்ளிக்கிழமை' பாத்திரம் ஷோபா சக்தியின் இன்னொரு வடிவமாகவும் 'வெள்ளிக்கிழமை' யின் இறப்பும், அதனை தடுக்காது அன்னா பார்த்துக் கொண்டு இருப்பது என்பதும் தன்னுடைய (எதிர்கால) இறப்பும், தன் இறப்பை தன்னை எதிர்க்கும் இந்த உலகம் விரும்புகின்றது என்றும், ஆனால் ஒரு வெள்ளிக்கிழமை இறப்பினும் பல வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பதை சொல்கின்றார் என்றும் அதனை உள்வாங்கியிருந்தேன்

ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்ன கரீனினா நாவலை வாசித்த பின் இன்று மீண்டும் 'வெள்ளிக்கிழமையை' வாசிக்கும் போதும், இன்னொருவனின் புரிதலை வாசித்த பின்பும் வேறு மாதிரியான மறுவாசிப்பை என் மனம் நிகழ்துகின்றது

ஒரு காட்சி எம் மனதை பாதிக்கும் போது, அதற்கான மனதின் வெளிப்படுத்தல்கள் பலவிதமாக இருக்கும். அதே நிகழ்வை உள்வாங்கி அன்றோ, அல்லது பிறிதொரு நாளிலோ வரும் கனவு முற்றிலும் வேறான சம்பவங்களுடன் ஆனால் அந்த பாதித்த நிகழ்வின் இன்னொரு வடிவில் வெளிவரும். அதே போன்றே ஒரு உணர்வை தாக்கிய ஒரு நிகழ்வு இலக்கிய படைப்பாக மலரும் போதும், சம்பவங்கள், கதைப்படுத்தல்கள் முற்றிலும் வேறானதாக அமைவினும் உட்கருத்து என்பது அந்த பாதித்த நிகழ்விற்கான படைப்பாளியின் மனம் வெளிப்படுத்தும் இன்னொரு வடிவான வெளிப்பாட்டாக அமையும்.

என்னால் வெள்ளிகிழமை பாத்திரத்தை 'அன்னா' வின் பாத்திரமாக பகுதியாக ஏற்றுக்கொள்ள முடிகின்றது. 'அன்னா' சமூகத்தின் கட்டுப்பாடுகளை எதிர் கொண்டு போராடி இறுதியில் எந்த நெறிகளுக்காக முரண்பட்டாரோ அந்த நெறிகளின் பாற்பட்ட சமூக விதிகளை தானும் நம்பியதால் ஏற்பட்ட மன குழப்பத்தில் வாழ விருப்பின்றி தற்கொலை செய்கின்றார் (இது என்னுடைய அன்ன கரீனா மீதான வாசிப்பு மட்டுமே). எந்த நெறிகளை ஆரம்பத்தில் மிக விரும்பி கடைப்பிடித்து (தன் அண்ணன் அன்றூவின் திருமண வாழ்வில் ஏற்படும் அன்றைய 'நெறி' மாறிய வாழ்வால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்தல்) பின் அதே நெறிகள் தனக்கு பொய்யான வாழ்வை தருகின்றது என உணர்ந்து மீறுகின்றார். ஆனால் மீண்டும் அதே போன்ற நெறிகளை தன் காதலன் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதனால் ஏற்படும் மனக்குழப்பத்தினால் தற்கொலை செய்கின்றார். இங்கும் 'வெள்ளிக்கிழமை' அதே போன்ற ஒரு பாத்திரமாகத் தான் இருக்கின்றார் என்று அவரையும் அன்னாவையும் ஒரே புள்ளியில் இணைத்த இன்னொருவனின் புரிதல் சிறப்பாக இருக்கின்றது. அதே நேரத்தில் அன்னா தன் சாவு மற்றவருக்கு வேதனை தரவேண்டும் என்ற நோக்கத்துக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. அது அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு சமூகத்தில் இருந்த இரு வேறுபட்ட பார்வைகளினூடாக வந்த உணர்வு. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு தன் சாவு பற்றிய வேதனையை மற்றவருக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியமு இருக்கவில்லை, அவரின் சாவு மற்றவருக்கு வேதனையையும் தரவில்லை (வயலின் 'அன்னா' உட்பட). வெள்ளிக்கிழமையின் மீள் வருகை என்பது சமூகத்துக்கு இயற்கை விதித்துள்ள நியதி. எதனை சமூகம் அதிகம் வெறுக்கின்றதோ, அதனை இயற்கை மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்யும், இறுதியில் எதனை வெறுக்கின்றதோ அதுவாகவே சமூகம் மாறிவிடும்

இன்னொருவன் கூறியது போல், இன்னும் இதனை மிக நீட்டி அலச முடியும்...ஆனால் எழுத நேரமும், வாசிக்க காலமும் அதிகம் தேவையாக இருக்கும்

Edited by நிழலி
எழுத்துப் பிழைகளை கூடியவரையில் சரிசெய்தல்

  • தொடங்கியவர்

நன்றி நிழலி. நீங்களும் இக்கதையை மனமொருமித்து ஆழமாக வாசித்துள்ளீர்கள்.

அனா கரினினாவை வாசிக்கு முன் உங்களிற்கு வந்த ஆரம்பப் புரிதலும் மிகவும் சுவாரிசயமாகவும் சிறப்பாகவும் தான் உள்ளது. ஒரு சிறந்த படைப்பை எவ்வாறு புரிந்தாலும் புரிதல் அழகாய்த் தான் இருக்கும் போலும்.

வெள்ளிக்கிழமை தன் இறப்பால் ஆரிற்கும் தண்டனை கொடுக்க நினைத்தாரா என்பதை நிறுவது கடினமாய் இருந்தாலும் கதாசிரியர், சாம்சனுடனான தனது நறேற்றிவ் வழியாக, வெள்ளிக்கிழமையின் இறப்பால் தான் நித்திரை கொள்ள முடியாது துன்பற்றதாயும் அந்நிகழ்வை கதையாக்கியதாயும் எழுதி உள்ளமை, ஒரு வேளை இச்சமூகத்திற்கும் வெள்ளிக்கிழமை போன்றவர்களின் தற்கொலை ஒரு மன உறுத்தலை உண்டுபண்ணுமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது--அந்தவகையில் அது வெள்ளிக்கிழமையின் சமூகத்திற்கான தண்டனை தானோ என்றும் தோன்றுகின்றது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நான் சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு வலைப்பதிவுக்கு சென்ற போது அதில் இந்த கதையை தனக்கு வாசித்ததில் பிடித்தது என அந்த பதிப்பாளர் இனைத்திருந்தார்...கதை வாசிக்கையில்சுவராசியமாக செல்கிறது ஆனால் எனக்கு முதலில் வாசித்தவுடன் முடிவு விளங்கவில்லை நான் நினைத்தேன் செத்துப் போனவர் திரும்பி வருகிறார் அப்படி என்றால் கனவாகத் தான் இருக்கும் என இன்று இன்னுமொருவனின் விமர்சனத்தை படித்த பின் தான் முடிவு விளங்கியது.கதாசிரியருக்கும்,விமர்சனத்தை எழுதியவருக்கும் எனது பாராட்டுகள்.[இருவரும் ஒரு ஆள் இல்லைத் தானே]

  • தொடங்கியவர்

....கதாசிரியருக்கும்,விமர்சனத்தை எழுதியவருக்கும் எனது பாராட்டுகள்.[இருவரும் ஒரு ஆள் இல்லைத் தானே]

நன்றி ரதி.

இல்லை. கதாசிரியரும் நானும் ஒருவரில்லை. நான் அறிந்தவரை கதாசரியர் Franceசில் வசிப்பவர்--எனக்கு அவரது எழுத்துக்களை மட்டும் தான் தெரியும். அவரைத் தெரியாது.

"வெள்ளிக்கிழமை" மட்டுமா இன்னொருவனை இவ்வளவு பாதித்தது.

முருகன் புத்தகசாலையில் போய் தற்செயலாக இலங்கை எழுத்தாளரின் என்பதற்காக வாங்கிய கதைப்புத்தகம் தான் "கொரில்லா".(5,6 வருடங்களுக்கு முதல்)

பின்னர் இரண்டு மூன்று நாட்களின் பின் தான் புத்தகத்தைப் திறந்தேன்.படித்து முடித்துதான் இருக்கையை விட்டு நேற்று இரவு பாட்டி ஒன்றுக்கு போய் விட்டு என்ன மனநிலையில் வீடு திரும்பினேனோ அதே மனநிலையில் எழுந்தேன்.ஏன் என்ற கேள்வியை விட எதுவுமே மிஞ்சவில்லை.

பின் யாரிந்த "சோபா சக்தி" எனும் ஒரு தேடலுடன் அவரின் அனைத்து ஆக்கங்களையும் படித்தேன்.குமுதத்தில் வந்த பேட்டிகள் உட்பட.

வெள்ளிக்கிழமைக்கே இந்தளவு விமர்சனம் என்றால் ம் இற்கும்,கறுப்பிக்கும் பல பக்கங்கள் தேவை.யாராவது சோபா சக்தியின் ஒவ்வொரு படைப்பிற்கும் இப்படி ஒரு விமர்சனம் வைப்பார்களா என்று ஆவலாக இருக்கின்றேன்.எனக்கு மீண்டும் எல்லாவற்றையும் இன்னுமொருமுறை படிக்கவேண்ண்டும் போலுள்ளது.அதுவும் அந்த கொழும்பில் வியாபாரம் செய்யும் தமிழர்களின் கதை பெயர் மறந்து விட்டேன்.எனது கதைகள் வாசிக்காத நண்பர்களுக்கு கூட கட்டாயம் வாசிக்கச் சொல்லி கொடுத்து இப்பவும் அடிக்கடி வேறு எதுவும் சோபா சக்தியின் படைப்புகள் வந்திருக்கா என்று கேட்பார்கள்.இனித்தான் தேடிப் பார்க்க வேண்டும் இரவல் கொடுத்ததில் எத்தனை திரும்பி வந்திருக்கின்றதென்று.

அன்னா கரீனீனா வின் தாக்கம் தான் இன்னொருவனுக்கு "வெள்ளிகிழமை" மட்டும் விசேடமாக இருந்ததோ எனக்கு தெரியவில்லை.இருந்தாலும் மற்ற படைப்புக்களுக்கும் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்

அர்யுன்,

இத்தலைப்பில் ஒரு பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஷோபாசக்தி எழுதி பிரசுரித்து, எனக்குக் கிடைத்த அத்தனையையும் வாசித்து விட்டேன் (கொரில்லா, தேசத்துரோகி, ம் உள்ளடங்கலாக) அத்தனையும் பிரமிப்பூட்டுவனவாகவே உள்ளன...

நீங்களும் இந்த எழுத்தாழரின் படைப்புக்களை இரசித்துப் படித்தவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது பார்வையையும் முன்வையுங்கள், சிறந்த படைப்புக்கள் பற்றிய பல பார்வைகளும் சுவாரசியமாகவே அமையும்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோபா நல்ல எழுத்தாளர். அவரது அரசியல் காரணமாக (அவர் ஒரு முன்னாள் புலி உறுப்பினர்) அவரை புறந்தள்ளி வைத்திருந்தோம். அந்நிலை மாறி அவர் எந்த அரசியலிலும் இருக்கட்டும். ஆனால் அற்புதமான அவரது எழுத்தை கொண்டாடுகிற ஜனநாயகத்தன்மை நமக்குள் உருவாவது கண்டு மகிழ்ச்சிதான்.

அவரது எம் ஜி ஆர் கொலைவழக்கு சிறுகதை தொகுதி வெளியாகியிருக்கிறது. வாசியுங்கள். வெள்ளிக்கிழமை கதை அத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

அர்யுன்,

இத்தலைப்பில் ஒரு பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஷோபாசக்தி எழுதி பிரசுரித்து, எனக்குக் கிடைத்த அத்தனையையும் வாசித்து விட்டேன் (கொரில்லா, தேசத்துரோகி, ம் உள்ளடங்கலாக) அத்தனையும் பிரமிப்பூட்டுவனவாகவே உள்ளன...

நீங்களும் இந்த எழுத்தாழரின் படைப்புக்களை இரசித்துப் படித்தவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது பார்வையையும் முன்வையுங்கள், சிறந்த படைப்புக்கள் பற்றிய பல பார்வைகளும் சுவாரசியமாகவே அமையும்.

நானும் சோபாவின் அனைத்து படைப்புகளையும் வாசித்துள்ளேன். நான் வாசித்த எல்லா நாவல்களில் அவரது 'ம்' தான் என்னை மிகவும் பாதித்த, நான் மிக விரும்பும் நாவல். அநேகமாக என் எல்லா நண்பர்களுக்கும், என் தாயாருக்கும், தாய் மாமனுக்கும் கூட அந்த நாவலை கொடுத்து வாசிக்கப் பண்ணியிருந்தேன். நாவலே வாசிக்க விரும்பாத என் பல நண்பர்கள் 'ம்' இனை வாசித்து அதிர்வுக்குள்ளாகியிருந்தனர். என் 'நான் வாசித்த புத்தகங்கள்' தொடரில் அடுத்து எழுதவிருந்ததும் 'ம்' நாவல் பற்றியே (மீண்டும் அந்த தொடரை தூசி தட்டி தொடர வேண்டும்). அவரின் ஏனைய படைப்புகளில் தேசத்துரோகியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சோபாவின் அரசியலும் என் அரசியலும் வேறு வேறானவை, ஆனால் அந்த வேறுபாடுகள் அவரின் அற்புதமான படைப்புகளை ஒதுக்கித் தள்ளி புலம்பெயர் தமிழ் இலக்கியச் சூழலில் அவருக்கு இருக்கும் பிரதான பாத்திரத்தை புறம்தள்ளி வைக்க காரணமாக இருக்கவில்லை

அவரது எம் ஜி ஆர் கொலைவழக்கு சிறுகதை தொகுதி வெளியாகியிருக்கிறது. வாசியுங்கள். வெள்ளிக்கிழமை கதை அத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

தகவலுக்கு நன்றி காவடி...கனடா தமிழ் புத்தகக் கடைகளில் தேடிப்பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சோபாவின் அனைத்து படைப்புகளையும் வாசித்துள்ளேன். நான் வாசித்த எல்லா நாவல்களில் அவரது 'ம்' தான் என்னை மிகவும் பாதித்த, நான் மிக விரும்பும் நாவல். அநேகமாக என் எல்லா நண்பர்களுக்கும், என் தாயாருக்கும், தாய் மாமனுக்கும் கூட அந்த நாவலை கொடுத்து வாசிக்கப் பண்ணியிருந்தேன். நாவலே வாசிக்க விரும்பாத என் பல நண்பர்கள் 'ம்' இனை வாசித்து அதிர்வுக்குள்ளாகியிருந்தனர். என் 'நான் வாசித்த புத்தகங்கள்' தொடரில் அடுத்து எழுதவிருந்ததும் 'ம்' நாவல் பற்றியே (மீண்டும் அந்த தொடரை தூசி தட்டி தொடர வேண்டும்). அவரின் ஏனைய படைப்புகளில் தேசத்துரோகியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சோபாவின் அரசியலும் என் அரசியலும் வேறு வேறானவை, ஆனால் அந்த வேறுபாடுகள் அவரின் அற்புதமான படைப்புகளை ஒதுக்கித் தள்ளி புலம்பெயர் தமிழ் இலக்கியச் சூழலில் அவருக்கு இருக்கும் பிரதான பாத்திரத்தை புறம்தள்ளி வைக்க காரணமாக இருக்கவில்லை

வெள்ளிக்கிழமை இன்னும் படிக்கவில்லை. ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுதியை வாங்கிப் படிக்கமுயல்கின்றேன். அவர் எழுதிய "தேசத்துரோகி" "கொரில்லா", "ம்" ஆகிய புத்தகங்களைப் படித்திருக்கின்றேன். ஈழத்தமிழர் சிறுகதைகளில் ரஞ்சகுமார், உமா வரதராஜன் போன்றவர்களின் பின்னர் ஷோபாசக்தியின் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தன. "ம்" நாவல் அதிர்ச்சியூட்டினாலும் கதையின் கரு திணித்தமாதிரி இருந்தது.

  • தொடங்கியவர்

காவடி உங்கள் கருத்திற்கும் தகவலிற்கும் நன்றி. எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையை வாசித்துள்ளேன், தொகுதி வெளியாகியமை இப்போது தான் தெரிகிறது.

நிழலி, ம் பற்றிய உங்கள் பார்வையைக் கட்டாயம் எழுதுங்கள்.

கிருபன், ரஞ்சகுமார் என்ற ஈழத்துப் படைப்பாளி பெயரை இன்று தான் கேள்விப்படுகின்றேன். இவரது படைப்புக்கள் கடைகளில் கிடைக்குமா? அல்லது இணையத்தில் உள்ளதா? இவரது நூல்களின் பெயரேதும் உங்கள் ஞாபகத்தில் இருந்தால் அறியத்தாருங்கள்.

நன்றி

ரஞ்சகுமாரின் "மோகவாசல்" எனும் சிறுகதைத் தொகுதி 80களின் இறுதியில் வெளிவந்தது (லண்டனில் வாங்கக்கூடியதாகவும் இருந்தது!). எனினும் அவரின் சில சிறுகதைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "திசை" எனும் வாராந்தப் பத்திரிகையில் வந்ததை சிறுவயதில் படித்திருக்கின்றேன். தற்போதும் எழுதுகின்றாரா என்று தெரியவில்லை.

"நூலகம்" இணையத்தில் அவரது "மோகவாசல்" சிறுகதைத் தொகுதி உள்ளது. கோளறுபதிகம் நல்லதோர் சிறுகதை.

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

Edited by கிருபன்

விரைவில் அவரது முழு நீள நாவல் வர இருக்கிறதாம் ..அத்துடன் சாருநிவிதா ,ஜெயமோகன் மாதிரி அவரின் சொந்த வெப்சைட் ஒன்றும் விரைவில் வர இருக்கிறதாம் என்று காற்று வாக்கில் அடிபடுகிறது

ரஞ்சகுமாரின் "மோகவாசல்" எனும் சிறுகதைத் தொகுதி 80களின் இறுதியில் வெளிவந்தது (லண்டனில் வாங்கக்கூடியதாகவும் இருந்தது!). எனினும் அவரின் சில சிறுகதைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "திசை" எனும் வாராந்தப் பத்திரிகையில் வந்ததை சிறுவயதில் படித்திருக்கின்றேன். தற்போதும் எழுதுகின்றாரா என்று தெரியவில்லை.

"நூலகம்" இணையத்தில் அவரது "மோகவாசல்" சிறுகதைத் தொகுதி உள்ளது. கோளறுபதிகம் நல்லதோர் சிறுகதை.

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

ரஞ்சகுமாரின் சிறுகதை தொகுப்பான மோகவாசலை இலங்கையில் கொழும்பில் இருக்கும் போது வாசித்து உள்ளேன். பின் நான் சரிநிகரில் எழுதிய காலகட்டத்தில், அவருடன் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு நண்பனாக மாறி ஒன்றாக தண்ணியும் அடித்துள்ளோம். எனக்கு தெரிந்து பல காலமாக ரஞ்சகுமார் எழுதவில்லை. நான் கொழும்பில் இருந்து 2002 இல் வெளிநாடு போகும் வரை அவர் ஏதேனும் எழுதியதாக நினைவில் இல்லை. ஆனால், இலக்கிய கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொள்வார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் சொந்தமாக ஒரு அச்சகம் வைத்து இருந்தார்

மீண்டும் இந்த திரியின் மூலம் ரஞ்சகுமாரின் தொடர்பை இத்தனை காலமும் (2002 இன் பின்) இழந்து இருப்பது உறைக்கின்றது

ரஞ்சகுமார், உமா வரதராஜனிற்கு பின், ஈழத்தில் திருக்கோவில் கவியுவன் என்பவரும் பல நல்ல சிறுகதைகளை எழுதியிருந்தார். அவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து இருந்தது. காலம் சென்ற இலக்கிய படைப்பாளி 'சு.வில்வரத்தினம்' அல்லது மு.பொ ஒரு முன்னுரை எழுதியிருந்ததாகவும் ஒரு நினைவு (சரியாக தெரியவில்லை)

இன்னும் சில விடயங்கள் சயந்தனுக்கும் தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன் :)

  • தொடங்கியவர்

இணைப்பிற்கு மிக்க நன்றி கிருபன்.

கதையை புரிந்து படிப்பதற்கும் ஒரு அறிவு வேணும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.