Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ம.ம.முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று காலை காலமானார்

Featured Replies

ம.ம.முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று காலை காலமானார்

by வீரகேசரி இணையம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இன்று அதிகாலை காலமானார் என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://beta.virakesari.lk/article.aspx?id=17638&channel=Important

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

UPF leader P. Chandrasekeran dies following a brief illness

Up Country Peoples Front (UPF) leader and Community Development and Social Inequity Minister P. Chandrasekeran passed away at a private hospital in Colombo this morning, a party spokesman told Daily Mirror. The Minister was in hospital following a brief illness.

Source

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் மரணம்

பதிந்தவர்_மீனகம் on January 1, 2010

பிரிவு: முதன்மைச்செய்திகள்

[படம் இணைப்பு]சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும். இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர்பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

leader-with-chandrasekar.jpg

மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார்.

1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.

இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்து, புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவுளித்தார் என்ற வகையில் இவர் சில காலம் சிறையும் சென்றார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், தற்போது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார். மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளியுலகிற்கும் கொண்டு சென்றது.

http://meenakam.com/?p=1558

  • கருத்துக்கள உறவுகள்

.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், சமூக அபிவிருத்தி அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன், புத்தாண்டு நாளான இன்று அதிகாலை மாரடைப்பினால் மரணமானார்.

http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45BB2cd2ePdZAA22dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து தேசியத்தலைவருடன் அவர் இருக்கும் படத்தினை நீக்கிவிடவும். வன்னியில் தமிழரழிப்பு நடைபொற்றுக்கொண்டிருந்தபோது மகிந்தவின் நடவடிக்கைகள் தமக்கத் திருப்தியளிப்பதாக அறிக்கைவிட்டிருந்தவர் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவருக்கு கை கொடுத்தவர்கள் எல்ராம் மகிந்தவைக் கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறார்கள்.

சந்திரசேகரனுக்கு எனது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கருணாவையும் தேசியத்தலைவருடன் இணைத்துப் படம் போடுவியள் அதுதானே. இப்போது யாழ் களம் மெல்ல மெல்லத் தமிழின விரோதிகளது சரணாலையமாக மாறிக்கொண்டுவருகின்றதாக உணர்கிறேன்.

இலங்கை அரச புலநாய்வு துறைக்கு சிறப்பாக சேவை செய்த ஒருவரின் இழப்பானது இலங்கையின் பேரிழப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Elugnajiru' date='01 January 2010 - 11:57 AM' timestamp='1262347026' post='558271']

அப்போ கருணாவையும் தேசியத்தலைவருடன் இணைத்துப் படம் போடுவியள் அதுதானே. இப்போது யாழ் களம் மெல்ல மெல்லத் தமிழின விரோதிகளது சரணாலையமாக மாறிக்கொண்டுவருகின்றதாக உணர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில் கைவிட்டவர்களில் முக்கியமானவர்

எனது மனம் இடம்தரவில்லை அஞ்சலிக்க.....

மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.