Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்

Featured Replies

தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது.

http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45BPde4a43AYAQ6e2ce2acpdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd20dvlmAK4d0

குறிப்பாக - தமிழீழ மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் முடிவையும் - இன்னொரு காலத்தி்ன் தொடக்கத்தையும் அறிவித்துச் சென்றுள்ளது 2009.

No :wub:

Edited by kalaivani

பிரபாகரனியத்தின் முடிவை அறிவித்த ஆண்டென்றும் இதனைக் குறிக்கலாம்.

No :wub:

"தேசியத் தலைவர்" என சிறப்பிக்கப்பட்ட இரண்டாமவர் - மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாய்க்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமலேயே மறைந்து போனார்.

you are wrong :wub:

Edited by kalaivani

"தேசத் தந்தை" என சிறப்பிக்கப்பட்ட முதலாமவர் - "தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்ற வாக்குமூலத்துடன் அமைதி வழிப் போராட்டத்திற்கு முடிவுரையை எழுதிச் சென்றார்.

"தேசியத் தலைவர்" என சிறப்பிக்கப்பட்ட இரண்டாமவர் - மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாய்க்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமலேயே மறைந்து போனார்.

நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் கனடா உதயனுக்கு தெரிவித்துள

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

புதினப் பலகையும் மூடுவிழாக் காணப் போகிறது போல.புதினத்தில் வழுதி எழுதிய ஒரு கட்டுரையே புதினத்திற்கு ஆப்படித்தது.அதுவும் புதினத்தின் செய்தியில் சொல்லப்படாத செய்தியை கட்டுரையில் எழுதியது.மீண்டும் புதினப்பலகை மூலம் வசைப்பாடத் தொடங்கி விட்டார்.ஒருவரும் புதினப் பலகை பார்க்கிறார்கள் இல்லையென்று யாழில் லிங்க் கொடுக்கிறார்கள்.

புதினத்திற்குப் பின்னால் இருந்தவர்கள், இப்போது புதினப்பலகையை இயக்குகின்றார்கள், இவர்களுக்கு யாரும் ஆப்படிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில ஆண்டுகள் மீது கறுப்பு ஒட்டப்பட்டிருக்கிறதாம். எந்த ஆண்டுகள் என்று சொல்வதற்கு சப்புப் பலகைக்கோ அல்லது அதை பின்னாலிருந்து இயக்கும் விலைபோனவர்களுக்கோ துணிவில்லை. அவர்கள் சொல்ல வருவது 2009 ஐப் பற்றித்தான். ஆனால் எமது வரலாற்றின் கறுப்பு அத்தியாயங்கள் நீண்டகாலமாகவே எழுதப்பட்டு வருகின்றன. இந்திய மாயைக்குள் அள்ளுப்பட்டு விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த நாளிலிருந்து எமது கறுப்பு ஆண்டுகள் ஆரம்பிக்கின்றன. பின்னர் புலியெதிர்ப்பு எனும் பசப்பல்கள் மூலம் தமது வயிற்றை வளர்க்கும் துரோகத்தனங்கள் தொடர்ந்து இடம்பெறும் இன்றைய நாட்களும் கூட கறுப்பு அத்தியாயங்கள்தான். அதற்கு சப்புப்பலகையும் அதன் விலைபோன ஆட்டுவிப்பாளர்களும் விதிவிலக்கல்ல. புலிகள் இருக்கும் வரையிலும் தேசியத்தலைவரையும் போராளிகளையும் தெய்வங்களாக வழிபடும் அளவிற்கு எழுதித்தள்ளிய இந்தச் சப்புப்பலகை இன்று ஒரு குத்துக்கரணமே அடித்திருக்கிறது.போராளிகளின் படங்களும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், கொல்லப்பட்ட சிங்களச் சிப்பாய்களின் படங்களும் தனது இணையத்தில் இணைப்பதுமட்டும்தான் தனது தேசியக் கடமை என்றியங்கி வந்த சப்புப்பலகை இன்று பிரபாகரனீயம் பற்றிப் பேசுகிறது. போராட்டமே பிழை என்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டு எம்மைப் பொறுத்தவரை அழிவு நிரம்பிய ஆண்டுதான். ஆனால் நாங்கல் தோற்கவில்லை. எமது போராட்டத்தின் ஒரு வடிவம்தான் மவுனித்திருக்கிறது. ஆனால் போராட்டமோ இன்னொரு வடிவத்தில் இன்னொரு தளத்தில் அதே எழுச்சியுடன் முன்னேறிக்கொண்டுதானிருக்கிறது. இப்போராட்ட வடிவ மாற்றத்தையும், எழுச்சியையும் காணச் சகியாத இந்தச் சப்புப்பலகையும் அதன் விலைபோன ஆட்டுவிப்பாளர்களும் இன்று ஒற்றைக்காலில் நிற்பது போராட்டமே முடிவிற்கு வந்துவிட்டது என்பதை தாங்களும் நம்பி மக்களையும் ஏற்க வைப்பதற்காகத்தான்.நாடுகடந்த தமிழீழ அரசு, வட்டுக்கோட்டைத்தீர்மானம் போன்ற புலத்தில் நடக்கும் அரசியல் எழுச்சிகளை "வரலாற்று அவமானம்" என்று வசைபாடும் இந்த விலைபோன துரோகங்கள் ஆசைப்படுவதெல்லாம் போராட்டத்தின் முற்றான தோல்வியும் ஒட்டுமொத்தச் சரணாகதியும்தான். அதற்காகத்தான் இன்று இந்த இனையத்தளமே ஆக்கிரமிப்பாளர்களால் வாங்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

Edited by நிழலி
வசை

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுடன் போராட்டமும் மக்களும் இருட்டினுள் விடப்பட்டுள்ளனர், பிரபாகரனீயம் மறைந்து விட்டது, போராட்டம் வரலாறாகிப்போனது ........என்று தனது ஆசைகளையும், கற்பனைகளையும், ஏக்கங்களையும் கொட்டித் தீர்த்திருக்கிறது. சப்புப்பலகைக்கும் அதன் கோழைத்தனமான ஆட்டுவிப்பாளர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றைத்தான். பிரபாகரனீயம் நீங்கல் விரும்புவதுபோல இறந்துவிடவில்லை. எமது போராட்டத்திற்கான தேவை இருக்கும் வரை பிரபாகரனீயம் எங்களுடந்தானிருக்கும். எமது போராட்டம் வரலாறாகிப் போகாது, அது இன்னும் பூரண இயங்குநிலையிலுள்ள ஒரு நிரந்தரப் பொருள். அது துரோகிகளுக்கும் , விலைபோன தேச விரோதிகளுக்கும் என்றுமே விளங்கிக் கொள்ளமுடியாத ஒரு புதிராகத்தானிருக்கும். நீங்கள் சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு விலையாகிப்போவதுபோல எமது போராட்டமும் அழிந்து போகப் போவதில்லை. மக்களுடன் எமது போராட்டமும் முன்னோக்கிச் செல்லும், அதைத் தடுக்க நீங்கள் எடுக்கும் எல்லா அநியாயங்களுக்கும் பலியாகப்போவது நீங்கள்தானே ஒழிய எமது போராட்டமோ அல்லது தேசிய உணர்வோ அல்ல. நீங்கள் புதினமாகலாம், சிலகாலம் மறைந்தும் போகலாம், பின்னர் சப்புப்பலகை என்ற பெயருடன் ஆட்டுவிக்கப்படலாம், நாளையே மீண்டும் அழிந்தும் போகலாம்...பின்னர் எப்போதுமே வெளியில் வர முடியாமல் மறைந்தும் போகலாம். அப்போது நீங்களும் வரலாறு......தமிழ்த்தேசியம் கசக்கி எறிந்துவிட்டுப் போன குப்பைகளின் வரலாறு !!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியைப் பொறுத்தவரை நாம் இன்று பயணிக்கும் திசை எதிர்மறை. ஏனென்றால் இலங்கைக்குள் நசுக்கிவிட்ட எமது தேசிய விடுதலைப் போராட்டம் புலத்தில் வீறுகொண்டெழும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. -- விலைபோன மரத்துப்போன மண்டைகளுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது போராட்டத்தின் ஆரமபத்திற்குச் செல்வது போலத்தானிருக்கும். அதன் இன்றைய தேவையும் நியாயங்களும் தெரிந்திருக்க இந்த விலைபோன துரோகிகளுக்கு வாய்ப்பில்லை.

இவ்வளவு காலமும் கற்ற பட்டறிவைக்கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறதாம் .அது எப்படியென்றால், ஒட்டுமொத்தச் சரணாகதி அரசியலுடன் சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாகிப்போவதுதான். இந்திய சிறிலங்கா கூட்டுச் சதிக்கு விலைபோய் இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்த அலையும் இந்த சப்புப்பலகையின் ஆயுட்காலமும் புதினம் போலவே சிறிதாகத்தானிருக்கும். இன்று இதை வாசிப்பவர்கள் வெகு சிலரே. விரைவில் இதுவும் வராலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் பத்தோடு பதினொன்றாக தூக்கிக் கடாசப்படும். அதற்கு புத்துயிர் கொடுக்க சிலர் யாழ்க் களத்தில் அதற்கு இலவச இணைப்புக் கொடுத்துள்ளார்கள். புதினம் செய்திகள் யாழில் தங்கு தடையின்றி உலாவியது போல சப்புப்பலகையையும் இங்கே கொண்டுவர முயற்சி எடுக்கப்படுவதுதெரிகிறது. ஆனால் சப்புப்பலகை எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை இங்கே இணைக்கும் தனிநபரோ அல்லது நிர்வாகமோ அறியவில்லை என்றால் ஐய்யோ பரிதாபம் !! ஆனால் எல்லாம் அறிந்துகொண்டுதான் இணைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றால்.......நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

Edited by நிழலி
வசை

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியைப் பொறுத்தவரை நாம் இன்று பயணிக்கும் திசை எதிர்மறை. ஏனென்றால் இலங்கைக்குள் நசுக்கிவிட்ட எமது தேசிய விடுதலைப் போராட்டம் புலத்தில் வீறுகொண்டெழும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. விலைபோன மரத்துப்போன மண்டைகளுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது போராட்டத்தின் ஆரமபத்திற்குச் செல்வது போலத்தானிருக்கும். அதன் இன்றைய தேவையும் நியாயங்களும் தெரிந்திருக்க இந்த விலைபோன துரோகிகளுக்கு வாய்ப்பில்லை.

இவ்வளவு காலமும் கற்ற பட்டறிவைக்கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறதாம் .அது எப்படியென்றால், ஒட்டுமொத்தச் சரணாகதி அரசியலுடன் சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாகிப்போவதுதான். இந்திய சிறிலங்கா கூட்டுச் சதிக்கு விலைபோய் இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்த அலையும் இந்த சப்புப்பலகையின் ஆயுட்காலமும் புதினம் போலவே சிறிதாகத்தானிருக்கும். இன்று இதை வாசிப்பவர்கள் வெகு சிலரே. விரைவில் இதுவும் வராலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் பத்தோடு பதினொன்றாக தூக்கிக் கடாசப்படும். அதற்கு புத்துயிர் கொடுக்க சிலர் யாழ்க் களத்தில் அதற்கு இலவச இணைப்புக் கொடுத்துள்ளார்கள். புதினம் செய்திகள் யாழில் தங்கு தடையின்றி உலாவியது போல சப்புப்பலகையையும் இங்கே கொண்டுவர முயற்சி எடுக்கப்படுவதுதெரிகிறது. ஆனால் சப்புப்பலகை எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை இங்கே இணைக்கும் தனிநபரோ அல்லது நிர்வாகமோ அறியவில்லை என்றால் ஐய்யோ பரிதாபம் !! ஆனால் எல்லாம் அறிந்துகொண்டுதான் இணைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றால்.......நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

யாழ்களம் விழுந்து கட்டி இத்தளசெய்திகளை இணைக்கிறார்கள். யாரும் எதிராக கருக்து எழுதுவதாக தெரியவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதில் பல வாசகர்களுக்கு சந்தேகம் உண்டு.இல்லை இவர்கள் மாற்று கருத்து காரர்களாகவே இருக்கட்டும்.கருத்தால் வெல்வோம்.

பல ஆங்கில ,சிங்கள ஊடகங்கள் பல நாட்டிலும் எமக்கு எதிராக செயற்படுகிறார்கள்.இவர்களும் தகர்க்கப்பட வேண்டியவர்கள்.

Edited by நிழலி
quote பண்ணப்பட்டது நீக்கப்பட்டவை

இல்லை இவர்கள் மாற்று கருத்து காரர்களாகவே இருக்கட்டும்.கருத்தால் வெல்வோம்.

பிரபாகரனியம்??

தோல்வியடையும் வரை இந்த இயத்தில் புதினமும் ஒரு அங்கம். தோல்வியடைந்தபின் அதிலிருந்து புறம்புபட்டு தனிமனிதனின் இழைத்த தவறாக இனம்காட்டுவதால் யாருக்கு எந்தப் பயன்?

பிரபாகரனின் போராட்டம் ஒரு காலத்தின் பதிவு. பிரபாகரன் தனிமனிதனில்லை ஒடுக்குமுறைக்கு உட்பட்ட ஒரு சமூக இயக்கத்தின் வழிநடத்துனர். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் ஏனைய இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள் வைராக்கியம் தனித்துவம் அனைத்தும் இந்த சமூகம் தந்த குணங்கள். எங்கள் சமூகத்தில் இருந்தே அனைவரும் அனைத்தும் தோன்றியது. நேற்றுவரை ஆதரவு தோற்றவுடன் பழி என்ற புதினப்பலகையின் குணமும் இந்த சமூகத்தின் குணங்கள் தான்.

தோல்விகளுக்கு ஒவ்வொருவனும் அவனது செயற்பாடும் காரணமாகின்றது. போராடி மாண்டவர்கள் அவர்களது முயற்சியில் மரணம் என்ற ஒன்றைச் சாந்தித்தார்கள் எனவே அவர்கள் தோல்விகளுக்கு பொறுப்பெற்க முடியாது. முயற்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு ஏவலாள் வேலைபார்க்கும் நாங்கள் எல்லாரையும் விட அதிகமாக தோல்விக்கு பொறுப்பாகின்றோம். உண்மைகளை நேர்மையாக ஏற்றுக்கொள்ளாதவரை மயிரளவு வெற்றி கூட கிடைக்கப்போவதில்லை மாறாக இருக்கின்ற காலம் முழுக்க ஒருவர் மீது ஒருவர் பழியை சுமத்திக்கொண்டிருக்கலாம். புலம்பெயர் நாட்டில் இருந்துகொண்டு பழிபோடுவதற்கு அடிப்படையில் எந்தத் தகுதியும் இல்லை.

'வட்டுக்கோட்டைப் பிரகடனம்', தாயகம் - தேசியம் - தன்னாட்சி, "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்", வலுச் சமநிலை - 'நடைமுறை அரசு' -- என முன்னேறி வந்த போராட்டத்தை மேலும் முன்நகர்த்துவதே நாம் பெற்ற பட்டறிவின் விளைவாக இருக்க வேண்டும்.

அதுவே 2010-இன் சவால்களை எதிர்கொள்ளும் வாயில்களையும் திறக்க வல்லது.

அதற்கான திறவுகோல்கள் - வெளிப்படைத்தன்மை, சூழ்ச்சித்திறன், அனைத்துலக இயங்குமுறை பற்றிய புரிதல், கூட்டுவேலைத்திட்டம் என்பவையாகும்.

இதனை முன்னெடுக்க அறிவும் - தெளிவும் - துணிவும் முக்கியமானவை.

புதினப்பலகை இதனையே முன்னெடுக்கும்.

தாயகம் - தேசியம் - தன்னாட்சி, "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்", வலுச் சமநிலை - 'நடைமுறை அரசு' -- என முன்னேறி வந்த போராட்டத்தை மேலும் முன்நகர்த்துவதே நாம் பெற்ற பட்டறிவின் விளைவாக இருக்க வேண்டும். என்று கூறும் பலகை இவைகளில் இருந்து பிரபாகரனீயத்தை எவ்வாறு பிரித்து குறைகாண முடியும்? இதுதான் அறிவு தெளிவு துணிவோ?

புதினம் இணையம், வன்னியில், ஒரு துறையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, செய்திகளை வெளியிட ஆரம்பித்த காலத்திலேயே, குழு நிலை வாதம், ஊடகங்களின் ஊடாக வெளிப்படத்தொடங்கிவிட்டது. செய்திகள் வெளியில் செல்வதற்குத் தடை ஏற்படுத்தத் தேவையில்லை என்ற அடிப்படையில் அனுமதி கொடுத்த தலைமைக்கு ஆப்பு இறுக்கிய ஊடக வீரர்களாம் இவர்கள்.

புதினம், புதினப்பலகைக்குப் பின்னால் இருப்பவர்கள்ஒரு அணியாக செயற்படுபவர்களாகவே தெரிகின்றது. இவர்களின் நோக்கம் வெளிப்படையாகத் தெரிவதாக இல்லை, ஆனால் இவர்களுக்கிடையே உலகம் முழுவதும் தமிழர் ஊடகர்தொடர்பு இருக்கின்றது.

இவர்களில் பெரும்பகுதியினர் கடந்த காலத்தில், களத்திலும், புலத்திலும் செயற்பாட்டாளர்களாக இருந்த பட்டறிவு உடையோராம்இவர்கள். தீட்டிய மரத்திலேயே பதம்பாக்கின்றவர்களின் அரசியல் நிலைப்பாட்டை, அறிந்தும், அறியாமலும் தமிழ் ஊடகத்துறையினர் பலர் துணைபோவது கண்டனத்திற்குரியது.

Edited by kalaivani

தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இன்றைய முடிவு, 2010 புதிய பாதையைத்திறந்து வைக்குமா?

Edited by kalaivani

--------- நீக்கப்பட்டுள்ளது

ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையிலான விடயங்களை தவிர்க்கவும்

Edited by நிழலி
ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையிலான தகவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.