Jump to content

நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர ஸ்வரூபா நமோ நம


Recommended Posts

திருப்புகழ் | அருணகிரிநாத சுவாமிகள்

http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3'>http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3

நாத விந்து கலாதி நமோ நம

வேத மந்திர ஸ்வரூபா நமோ நம

ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம

போக அந்தரி பாலா நமோ நம

நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம

கீத கிண்கிணி பாதா நமோ நம

தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்

ஈதலும் பல கோலால பூஜையும்

ஓதலும் குண ஆசார நீதியும்

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை

சோழ மண்டல மீதே மனோஹர

ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர

ஆதரம் பயிலாரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி

ஆதி அந்தவுலாவாசு பாடிய

சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மூலம்: http://www.skandagurunatha.org

Link to comment
Share on other sites

சொல் விளக்கம்:

நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித ஸாமீ நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி,

வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி

போக அந்தரி பாலா நமோநம ... (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம ... தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,

கீத கிண்கிணி பாதா நமோநம ... இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி

தீர சம்ப்ரம வீரா நமோநம ... மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ ... மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி,

தூய அம்பல லீலா நமோநம ... பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம ... தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,

அருள்தாராய் ... உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ... தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ... ஏழு உலகங்களிலுள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும் நாயக ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

வயலூரா ... வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ... தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... நாடியவராய், அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய ... ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ... சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

தகவல் மூலம்: http://www.kaumaram.com/thiru_uni/tpun0170.html

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

.

வெள்ளிக்கிழமை நல்ல பாடலை தந்தமைக்கு, நன்றி கரும்பு. :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் குருஜி வாழ்த்துக்கள்!!! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இனிமையான பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்-

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரு

முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்;

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்-

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது மொருநாளே;

தித்தித்தெய வொத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கநடிக்கக் கழுகொடு கழுதாடக்-

திக்குப்பரி யட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்;

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை-

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.