Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை தர முடியுமா?

Featured Replies

தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை இங்கே தர முடியுமா?

  • தொடங்கியவர்

இலங்கையில் முன்னாளில். நாகர் மற்றும் இயக்கர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. இவ்விரு இனப்பிரிவினரும் எந்த மொழிகளை பேசினார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?

நாகர், இயக்கர் காலத்தில் தமிழும் எலு மொழியும் வழக்கத்தில் இருந்தன, நாகர்கள் நாகவழிபாட்டை மேற்கொள்ளும் தமிழர்களாக இருந்தனர், இயக்கர்கள் இயற்கையை வழிபடும் எலு மொழிபேசுபவர்களாக இருந்தனர், ஆனால் அனைவரும் திராவிட இனம்தான். லெமூரியாகண்டம் கண்டங்களாக பிளவுபட்டபோது இலங்கைத்துண்டும் இந்தியத்துண்டில் இருந்து பிளவுபட்டது.

காலப்போக்கில் விஜனின் வருகையுடன் பாளி மொழியுடன் எலுகலந்து சிங்களம் உருப்பெற்றது. எலு மொழி பேச்சுவழக்கின்றி போனதால் காலப்போக்கில் அழிந்துபோனது. விஜயனின் வெள்ளைத்தோலில் மோகம் கொண்ட குவேனியினால் இயக்கர்களில் ஒருபகுதியினர் கொண்றொழிக்கப்பட்டனர். விஜயனின் தலைமையை ஏற்காத திராவிடர்கள். காலத்தின் மாற்றத்துக்கு ஈடுகொடுத்து நல்லவற்றை உள்வாங்கி புதுப்பொழிவுடன் வீறுநடை போடுகிறது தமிழ். விஜயன் ஆரிய இனத்தவன் தன் நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக அவனது நண்பர்களுடன் சேர்த்து நாடுகடத்தப்பட்டவன். அதைவைத்துதான் சிங்களவர் தாம் ஆரியர் என்கின்றனர். இதைத்தான் நாம் சொல்கிறோம் "வந்த இனம், வருந்தி நின்ற இனம் சிங்களம்."

இலங்கை திரவிட நிலம், எம் தந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்ததும் இன்நிலமே, எம் தந்தையர் நாடு எனும்போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.

நீங்கள் கேட்ட மக்கள் பற்றிய ஆய்வுகள் தெளிவாக இல்லை இருவிழி

அதுகும் மகவம்சத்தை அடிப்படையாக கொண்டது தான் இயக்கர், நாகர் எண்டது என நினைக்கிரேன்.

ஆனால் கற்கால மக்கள் வாழ்க்கை புதை பொருட்கள் கிடைத்தாக சொல்கிறார்கள்,அவை பற்றி சரியாக கதிர் காபன் திகதியிடல் செய்து அப்பொருகளில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடிந்தால் தான் தெளிவாக தெரியும். அப்பொருட்களை கண்ணால் பார்த்து ஒப்பிட்டு ஆய்வு செய்த காலம் மலைஏறிவிட்டது, அப்படியான ஆய்வுகளை எவ்வளவு தூரம் நம்பமுடியும் என்பது ஒரு கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒரு மொழியின் சொற்கள் எப்படி அமையவேண்டும் என இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர், நாலடியர் போன்றவர்கள் எழுதி வைத்துள்ளார்கள் என்றால் அதன் தொன்மை அதிலும் பல ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். இதை விட தமிழ் சங்கங்கள் பல அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன என அறிகின்றேன். எனவே இதன் தொன்மை பற்றி எல்லோரிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் இணையத்தளங்களில் பாருங்கள்.

[*] தமிழ் மின் நு}லகம்

[*] Tamil Nation

[*] Project Madurai

  • தொடங்கியவர்

அனைவரின் தகவல்களிற்கும் நன்றிகள் பல. அத்தோடு உங்கள் அனைவரின் தகவல்களும் பெறுமதி மிக்கவை என்பதனை உணர்ந்து, முடிந்தால் ஆதாரங்களுடன் தாருங்கள் கள உறவுகளே.

நன்றி தல நல்லா இருக்கு.

  • 3 weeks later...

தமிழ்பற்றி மேலும் சில தகவல்கள்.

http://www.penkatali.org/tamilwords.html

விஜயனும் அவனது நண்பர்களும் ( 4000 பேர் என்று நினைக்கின்றேன்) நாடு கடத்தப்பட்ட போது வந்தடைந்தது இலங்கையில் அங்கு வேடுவ(இயக்கர் இனம்) பெண்ணான குவேனி விஜயனின் அழகில் மயங்கி அவனைத் திருமணம் செய்தாள். பின் குவேனியை விஜயன் கலைத்து விட்டு தனக்கும் தன் நண்பர்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்தே பெண்களை (இவர்கள் பாளி மொழி பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல) வரவழைத்துத் திருமணம் செய்தனர். குவேனியின் வழித்தோன்றல்கள் இப்போதும் வேடர்களாக இலங்கைக் காடுகளில் வாழ்கின்றனர். விஜயனின் வழித்தோன்றல்களே தற்போதய சிங்கள இன மக்கள். நாகர் இன மக்களே தற்போதுள்ள தமிழர்கள். இது இராவணனின் காலத்திற்கு பிற்பட்ட சரித்திரம்.

ஓகோ அதுவோ சினாவுகள் கொஞ்சம் தங்களை ஆரியர் எண்டு சொல்லுறவை?

சிங்களவரிலும் உயர் சாதி கீழ் சாதி எண்டு பேசபடுவதன் வரலாற்றுப்பின்னணி பற்றி தெரிந்தவை எழுதுங்கோ. கண்டி உயர்சாதியாக மாத்தறறை கீழ் சாதியாக பார்க்கப்படுபவதாக கேள்வி...

அப்ப சிங்களவர்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று மகாவம்சம் சொல்லுறது...விடுகையா...??! :wink: :lol: :idea:

சிங்களவர்களில் சாதிப் பிரச்சனை மட்டுமல்ல.

பிரிவுப் பிரச்சனைகளும் உண்டு.

பிரிவு என்று கூறுவது

1.உட ரட்ட (மேல் நாடு)

2.பகத்த ரட்ட (கீழ் நாடு)

உட ரட்ட (மேல் நாடு) : அதாவது கண்டி ராஜ்யத்தை......

இவர்கள் நாயக்க (பண்டாரநாயக - சேனாநாயக - போன்ற உயர்சாதி பெயர்களை உடையவர்களாகவும்

பகத்த ரட்ட (கீழ் நாடு) : அதாவது காலி - மாத்தறை பகுதி.........

(சரியான தகவல்களைத் தேடி இணைக்கிறேன்)

கரையோரப்பகுதி மக்கள் போர்த்துக்கேயருடன் இணைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

சாதிப்பெயர்கள்:

சிங்கள மக்களின் பெயர்களிலேயே சாதிப் பெயர் இணைந்து செல்கிறது.

அதாவது:-

திஸாநாயக்க - பகுதி நாயக்கர் (தலைவர்)

சேனாநாயக்க - சேனையின் தலைவர்

தாஸ - வேலைக்காரன்

அப்புகாமி - கமக்காரன்

இப்படி அவர்களது பெயர்களிலேயே அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆரம்ப இலங்கை மூன்று பகுதிகளாக இருந்ததே?

அப்ப சிங்களவர்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று மகாவம்சம் சொல்லுறது...விடுகையா...??! :wink: :lol: :idea:

இந்த பாளி மொழி இந்தியாவில் எங்கே யாரால் பேசப்பட்டது? பாழிமொழிக்கும் வங்காள மொழிக்கும் தொடர்புகள் ஏதும் உண்டா? இதனைப்பற்றி அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

அநேகமாக நான் நினைக்கின்றேன் இந்தப் பாளி மொழி பேசியவர்களின் ஒரு பகுதியினர் தான் தற்போதய மலையாள மக்கள் என்று காரணம் எழுத்துக்களில் மலையாள மொழிக்கும் சிங்கள மொழிக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. அதேபோல் உச்சரிப்புகளில் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. மலையாள மொழி என்பது 20 ம் நு}ற்றாண்டில் உருவான மொழியேயாகும்.

Kuruvikal wrote:

அப்ப சிங்களவர்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று மகாவம்சம் சொல்லுறது...விடுகையா...??! :wink: :lol: :idea:

அதே மகாவம்சம்தான் விஜயனின் சரித்திரத்தையும் சொல்கின்றது. அப்போது இலங்கையிலிருந்த இயக்கர் இனமக்களை விட விஜயனும் அவனது கூட்டாளிகளும் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள். அத்துடன் மகாவம்சம் குவேனியையும் அவளது சகோதரர்களையுமே சிங்கத்தின் வாரிசாக குறிப்பிடுகின்றது.

தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்

தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்

தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்

எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,

தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழி" தமிழ் மொழி, எலுமொழி ஆந்திராவில் இருந்ததாகக் கூறுவார்கள். ஆதாரங்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

அநுராதபுரவை ஆண்ட தேவநம்பிய திஸ்ஸவின் காலத்தில் இந்தியாவிலிருந்து மிஹிந்தலைக்கு ஆகாய மார்க்கமாக வந்து, யுசயாயவ ஆயாiனெய பௌத்த போதனையைச் செய்து, அநுராதபுரவின் இராணி அனுலா, அவரின் பரிவாரங்கள் உட்பட அரச ஆட்சியாளர்களையும், மக்களையும் பௌத்தத்தைப் பின்பற்ற வைத்து, புதியவொரு தேசத்தினை அன்று உருவாக்கியிருந்ததுபோல், இன்று சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் மஹிந்த சிந்தனையினைப் புகுத்துவது}டாக இலங்கைத் தீவானது புதிய தேசமாக ஆக்கப்படுகிறது என்ற ஒருவித அலவா இன் அடிப்படையில்தான், மஹிந்த சிந்தனை என்ற பெயரில் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமானது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரணில விக்கிரமசிங்க பராக்கிரமபாகு கால ஆட்சி பற்றிப்பேசி வருகின்றார்.

இன்றைய மஹிந்தவின் சிந்தனை எப்படியானது என்பதைப் பார்க்குமுன்னர், இலங்கையின் தேரவாத பௌத்த வரலாற்றினைக் கூறுவதாகப் பௌத்த பேரறிஞர்களால் கூறப்படும் தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகள் யுசயாயவ ஆயாiனெய வின் வருகை, ஏனையவைகள் பற்றிக் கூறியிருப்பவைகளின் உண்மைத் தன்மை பற்றிப் பார்ப்பது சிறந்தது.

ஒருவர் மணிமேகலை என்ற தமிழ் இலக்கியத்தினை ஆராய்தால், அதில் இலங்கைக்குப் புத்தபெருமான் வியத்தை மேற்கொண்டிருந்த கதை குறிப்பிடப்பட்டிருப்பதையும

  • 5 months later...

பிரயோசனமான தகவல்

விஜயனும் அவனது நண்பர்களும் ( 4000 பேர் என்று நினைக்கின்றேன்) நாடு கடத்தப்பட்ட போது வந்தடைந்தது இலங்கையில் அங்கு வேடுவ(இயக்கர் இனம்) பெண்ணான குவேனி விஜயனின் அழகில் மயங்கி அவனைத் திருமணம் செய்தாள். பின் குவேனியை விஜயன் கலைத்து விட்டு தனக்கும் தன் நண்பர்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்தே பெண்களை (இவர்கள் பாளி மொழி பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல) வரவழைத்துத் திருமணம் செய்தனர். குவேனியின் வழித்தோன்றல்கள் இப்போதும் வேடர்களாக இலங்கைக் காடுகளில் வாழ்கின்றனர். விஜயனின் வழித்தோன்றல்களே தற்போதய சிங்கள இன மக்கள். நாகர் இன மக்களே தற்போதுள்ள தமிழர்கள். இது இராவணனின் காலத்திற்கு பிற்பட்ட சரித்திரம்.

விஜயனும் 400 தோழர்களும் நாடு கடத்தப்பட்டாதாகவே பள்ளிகளில் படிப்பித்தார்கள். :roll: :roll: :roll:

இலங்கையில் ஒர் தபாற்தலை வெளியிட்டுவிட்டு மீளப் பெற்றுக் கொண்டார்கள். அத்தபாற்தலை நாடுகடத்தப்பட்டு இலங்கையை வந்தடையும் விஜயனை குவேனி வரவேற்பது போல் இருந்தது. :idea:

இலங்கையில் ஒர் தபாற்தலை வெளியிட்டுவிட்டு மீளப் பெற்றுக் கொண்டார்கள். அத்தபாற்தலை நாடுகடத்தப்பட்டு இலங்கையை வந்தடையும் விஜயனை குவேனி வரவேற்பது போல் இருந்தது. :idea:

நல்லவேளை திரும்ம பெற்றார்கள் இல்லாட்டா மகாநாயக்க தேரர்கள் எல்லாம் தாபால்க்கந்தோருக்க ஆர்ப்பாட்டம் எண்டு பூந்து ஆட்டையை போட்டிருப்பாங்கள்... தப்பிச்சுது தபால்க்கந்தோர்... :P :P :P

விஜயனும் 400 தோழர்களும் நாடு கடத்தப்பட்டாதாகவே பள்ளிகளில் படிப்பித்தார்கள். :roll:  :roll:  :roll:

சுளியத்துக்கு பெறுமதி இல்லை எண்டும் படிப்பீச்சவை அதுதான் ஒரு சுளியை சேத்திட்டார்... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கேயும் பாருங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=10425

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியர் கொடுமை - மகா வம்ச காலம்

(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)

விசயனென்றொரு முரடன் - தான்

விரும்பியபடி அவன் நாட்டினிலே

தசையினில் ஆசைகொண்டே - இளந்

தளிர்களைக் கசக்கிப் பின் தரையெறிந்தான்

வசை வருமெனப் பயந்தே - அந்த

வம்பனை அவனது தோழருடன்

திசையறியாக் கடலில் - என்றும்

திரும்பி வராவண்ணம் மரக்கலத்தில்

தந்தை அரசனவன் - உயர்

தர்மத்தைக் காத்திட அனுப்பிவைத்தார்

விந்தையில் விந்தையடா - எங்கள்

வினைப்பயனோ இல்லை விதியதுவோ

முந்தையர் கொடுமைகளோ - அந்த

மூர்க்கனைச் சுழற்புயல் கொணர்ந்தெமது

செந்தமிழ் ஈழத்திலே - கரை

சேர்த்ததடா மறை வேர்த்ததடா

மண்டலத்தரசியவள் - உயர்

மறத்தினள் ராவணன் வழியில் வந்தாள்

வண்டமிழ்ப் பொற் 'குவை நீ"- எனும்

வாயினி லினிக்கிற பெயருடையாள்

புண்டரிகத் தெழிலாள் - அந்தப்

புலையனைப் புணர்ந்திட ஆசை கொண்டாள்

பண்டைய பெருமையெல்லாம் - அந்தப்

பாவியினால் எமக் கழிந்ததுவே

ஆயிரமாயிரமாய் - இளம்

அனிச்சைகள் தனை முகர்ந் தெறிந்தவனை

நாயினை அவள் புணர்ந்தாள் - நாம்

நாடிழந்தே நடுத்தெருவில் நின்றோம்

தேயத்து வன்னியர் நாம் - தலை

திருப்பிய புறமெங்கும் அன்னியர்கள்

பேயெனச் சிரித்து நின்றார் - எங்கள்

பெருமையெல்லாம் அன்று எரித்து நின்றார்

துட்டனைப் புணர்ந்ததனால் - அவள்

துயரினை அதன் பின்னர் சுமந்ததுவும்

கெட்டவன் எமதரசைத் - தன்றன்

கீழ்க் கொண்டு வந்திட முயன்றதுவும்

பட்டத்து அரசியென - ஒரு

பாண்டிய மங்கையை மணந்ததுவும்

பொட்டெனத் தமிழ் நிலங்கள் - அந்தப்

புலையனின் கை வசமானதுவும்

நாட்டினை இழந்ததனால் - வெறும்

நடைப்பிணமாகிய தமிழரினம்

காட்டினி லுறைந்ததுவும் - தீவின்

கரைகளில் ஒதுங்கியே வாழ்ந்ததுவும்

வேட்டுவரானதுவும் - சிலர்

வெஞ்சினமுற்றுக் குவை நீ தனை

ஈட்டியில் முடித்ததுவும் - எங்கள்

ஈழத்தை இந்தியத் தமிழர்களாம்

பாண்டிய மன்னர்களும் - பலம்

பொருந்திய புலிக் கொடிச் சோழர்களும்

ஆண்டதும் விதிவலியால் - தமிழ்

அன்னையைத் தவிக்கவிட்டவர் நிலமே

மீண்டதும் பழைய கதை - பின்னர்

மேற்குலகத்தினர் எமைப்பிடித்தே

வேண்டிய பொருள் பறித்தார் - சுவை

மேவிய தமிழுக்கும் குழி பறித்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.