Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் சொரூபம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் இப்பிடி சொல்கிறார் என்பதல்ல செய்தி. ஆனால் இப்பிடிச் சொல்லித்தான் சிங்கள மக்களிடம் ஓட்டுக் கேட்கவேண்டுமெனில் இப்படி சொன்னால்த்தான் சிங்கள மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனில் என்ன மயிருக்கு இன ஐக்கியமும் மண்ணாங்கட்டியும்

---------------

தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம்

இரண்டாம் போர்....

என் அன்பார்ந்த இலங்கை மக்களே, முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை.

அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனாலேயாகும்.

நான் இத் தேர்தலுக்கு போட்டியிட காரணம், நாட்டை ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை மீண்டும் அமுல்படுத்தி ஊழல் அற்ற அரசினை உருவாக்கி அபிவிருத்தியை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வது எனது இரண்டாம் போர்.

தற்சமயத்தில் கடமை புரியும் ஜனாதிபதியவர்களுக்கு சவால் விடுவதற்கு இயலுமான அரசியல் தலைமைத்துவம் இன்று எமது நாட்டில் இல்லை. அதற்கு காரணம் போர் வெற்றியின் உரிமை, அவர் தானே செய்தாரென கூறிக்கொண்டு பிரபல்யம் பெற்றுள்ளார்.

போர் வெற்றியின் சொந்த உரிமையாளர் நானே ஆவேன். அவருக்கு சவால்விட இருக்கும் ஒரே நபர் நானே ஆவேன். நான் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். அதேபோலவே கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நம்பிக்கை வைக்கக்கூடிய பயமில்லாத தலைவனை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

வரலாற்றில் எமது நாடு பல்வேறு எச்சரிக்கைகளுக்கும், யுத்தங்களுக்கும் முகம் கொடுத்துள்ளது. சிங்கள மக்கள் வாழ்ந்த இலங்கையில் இலங்கையில் பல்வேறு ஆக்கிரமிப்புக்களின் பின் தென் இந்தியாவிலிருந்து வந்த தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் குடியேறி இருப்பது பல காலத்துக்கு முன்பேயாகும்.

அதன்பின் ஆங்கிலேயரால் மலைநாட்டில் தேயிலைத் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட தென் இந்திய தொழிலாளர்களுக்குப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் வியாபார ரீதியாக இங்க வந்த இஸ்லாமிய மக்களும் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இலங்கை சமூகத்தில் ஒரு பங்காளிகள் ஆவார்கள்.

சிங்களவர்கள் இலங்கையில் மாத்திரமே வாழ்கின்றனர். இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் 75%ம் ஆவார்கள். ஆகையால் இந்நாடு சிங்கள பெளத்த நாடு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களாகிய சிங்களவர்களுக்கு நிபந்தனை போட உரிமை இல்லை. இந்நாடு ஒன்றிணைந்த நாடாக பெரும்பான்மை சிங்களவர்கள் ஆட்சி புரிய வேண்டும். நான் இதை பயமின்றி உலகத்துக்கு கூறியுள்ளேன்.

யுத்தம் ஆரம்பத்திலிருந்து பயங்கரவாதத்தை தோல்வியாக்கலாம் என கூறியவர்களில் நானும் ஒருவன். பல இராணுவ தலைவர்கள் இந்த யுத்தத்தை காட்டிக்கொடுத்தார்கள்.

அரசியல் தலைவர்கள் அடிக்கடி சமாதான ஒப்பந்தங்கள் மூலமாக புலி பயங்கரவாதிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்தது, தைரியமுள்ள இராணுவ தலைமை இல்லாததனாலேயே ஆகும்.

இந்நாட்டில் யுத்தம் செய்யாத ஒரு ஜனாதிபதி இல்லாமல் இல்லை. எல்லோரும் யுத்தம் செய்தார்கள். ஆனால் வெற்றியடையவில்லை ஏன்? இராணுவ தலைமைத்துவம் பலவீனமானவர்களாகவும், அவர்கள் அரசியல் தலைவர்கள் முன்னில் அணிபணிந்துள்ளதனாலேயாகும்.

2002 ஆண்டு சமாதான ஒப்பந்தம் ஆரம்பத்திலிருந்து அது முடியும் வரை அதை எதிர்த்த சிரேஷ்ட இராணுவ அதிகாரி நான் ஆவேன்.

யாழ்ப்பாண பிரதேசம் பாதுகாப்பு வலயமாக பிரித்துக்கொள்வதற்கும், தீவுகள் எல்லாவற்றையும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எனக்கு இயலுமாக இருந்தது. இல்லாவிடில் பலாலி விமான நிலையமும் அதன் இராணுவ முகாமும் காங்கேசன்துறையும் எமக்கு இல்லாமல் போவதற்கு இடம் இருந்தது.

மஹிந்த சிந்தனை நூலில் 28ம் பக்கத்தில் நான்கு பக்கங்கள் முழுவதும் சமாதான பேச்சு வார்த்தைதான். புலிப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வதென கூறப்பட்டுள்ளது. நிகழ்கால ஜனாதிபதியவர்களுக்கு யுத்தத்தால் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தேவை இருக்கவில்லை.

அவர் வேறு பயணத்தை எடுத்தார். யுத்தத்தை ஆரம்பிக்க கட்டாயப்படுத்தி அதற்கான சக்தியும் திட்டங்களையும் நானே பெற்றுக்கொடுத்தேன். எனக்குப் பின்னால் இருந்த பெளத்த துறவியர்களுடைய சக்தியும் மக்கள் முன்னணி (JVP) யினரும் செய்த கட்டாயத்தால் ஜனாதிபதிக்கு தனது விருப்பத்திற்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை.

வெளிநாடுகள் போலவே தென் இந்திய வற்புறுத்தலுக்கு இணங்க யுத்தத்தை நிறுத்த முயன்றாலும் அச்சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இராணுவ தலைமைத்துவமாகும்.

தென் இந்திய அரசியல் தலைவர்களை ஒரு சதத்திற்கு கணக்கெடுக்காமல் அவர்கள் நகைச்சுவையாளர்கள் என கூறுவதற்கு முன்வந்தது ஜனாதிபதி ராஜபக்ஷ அல்ல நானேதான். ஆனால் ஜனாதிபதி கருணாநிதியின் மகளாகிய கனிமொழியை இங்கு வரவழைத்து தனது கோழைத்தனத்தை காட்டினார்.

மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் மக்களை கொல்லாமல் யுத்தம் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவைப்பட்டது. அது சுருட்டையும் தாடியையும் பாதுகாத்துக் கொள்வதாகும்.

அவர்கள் திட்டமிட்ட “மானுட போர்” ஒரு பதராகி விடுமென நான் அறிந்தேன். ஆகையால் யுத்தம் நடக்கும் போது வெற்றி பெறவேண்டுமாயின் இருபக்கத்திலும் மரணமடைவோரை கவனம் செலுத்த முடியாது. எனவே இராணுவத்தை இரு மடங்காக பலப்படுத்தியதே நான்தான்.

யுத்தத்தில் பாவிக்கும் ஆயுதங்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு கட்டளையிட்டாலும் தேவைப்படுகின்ற ஆயுதங்கள், குண்டுகள் இறக்குமதி செய்வதற்கும், அவை வரையறையற்று சுடுவதற்கும் கட்டளையிட்டது நானே ஆவேன். மல்டி பெரல், ரொக்கட் லோன்சர்களை அறிமுகமாக்கிக் கொடுத்து விமான குண்டுத் தாக்குதல்களின் பெறுமதியை விளக்கி விமான குண்டுத் தாக்குதல்களை அதிகரிக்க வைத்தது நான்.

இறுதி நாட்களில் ஜனாதிபதி சர்வதேசத்திற்கு பயந்து புலித் தலைவர்களை உயிருடன் பிடிக்க ஆலோசனை வழங்கினார். பிரபாகரனை பிடித்து அவருடன் பேசவும் அவருக்குத் தேவைப்பட்டது. அப்படியாகிவிட்டால் பிள்ளையான், கருணா அம்மான் போல் பிரபாகரனுக்கும் முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

சரணடைந்த பிரபாகரனையும் ஏனைய தலைவர்களையும் கொல்ல கட்டளையிட்டது நான் என மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள். இந்த கொடூரமான கொலையாளியுடைய சாவின் உரிமையை ஜனாதிபதிக்கு அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு என்னிடமிருந்து பறிக்க ஷிநிகி!ஜி.

வெளி நாடுகளின் தாளத்திற்கு ஜனாதிபதி ஆனால் ஆயிரக் கணக்கான பயங்கரவாதிகளை இன்னும் முகாம்களில் பாதுகாக்க அரசுக்கு வேண்டியதாக இருக்கும்.

இப்பிரச்சினை அப்போது நான் எடுத்த தீர்மானத்தால் முடிவடைந்து விட்டது. யுத்தத்தின் பின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் என்னுடன் கோபமுற்றனர். ஏன்? நீண்டகாலமாக எமது நாட்டில் பாதுகாப்புக்கு தடை ஏற்பட்ட காரணங்களுக்கு நான் சம்மதிக்கவில்லை அவைகள் வருமாறு :-

* அகதி, முகாம்களிலுள்ள புலிகளை இனங்கண்டு அவர்களை சிறையில் அடைக்க அல்லது கொலை செய்ய வேண்டும் என்ற எனது ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

* வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன் மீளக் குடியேற்றம் செய்ய வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுத்தாலும், அரசியல் செல்வாக்குக்காக அவர்களை மீள்குடியேற்றம் செய்தார்கள்.

* ஒளித்து நின்று உதவி வழங்கிய பயங்கரவாதிகளின் பற்றுள்ளவர்கள் இன்னும் வடக்கில் மறைந்து இருப்பதனால் எனது ஆலோசனைகளை முறியடித்து வடபகுதிக்கு ஏ9 பாதை திறந்தார்கள். அதை இதுவரை தாமதப்படுத்தியதே நான் ஆவேன்.

* வட பகுதிக்கு அனுப்பும் பொருட்கள், பசளை, பெட்டரி போன்றவற்றால் குண்டு தயாரிக்க முடியுமென அறிந்த போதிலும் அதற்குள்ள தடைகளை நீக்கி அவை வடபகுதிக்கு அனுப்ப அனுமதி வழங்கியது எனது விதந்துரைத்தலை கவனம் கொள்ளாமையினாலாகும்.

* நான் எவ்வளவு எதிர்த்தாலும் மீன் பிடிப்பதற்கு சட்டங்களை நீக்கி பாதுகாப்புக்கு ஏற்படும் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

* தமிழ் முஸ்லிம் மக்கள் மீன்பிடிப்பதற்குச் செல்லும் கடலில் இராணுவ முகாம்களை அமைக்குமாறு விதந்துரைத்தாலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

* எதிர்வரும் காலத்தில் இவ்வாறாக நாடு பிரிக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கு பாதுகாத்துக்கொள்ளவும், தென் இந்திய இடையூறுகளுக்கு முகம் கொடுக்கவும் இலங்கை இராணுவத்தை 4 இலட்சம் வரை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தாலும் அற்கு இவர்கள் உடன்படவில்லை.

* இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பல்வேறு பிரதேசங்களிலும் நகரங்களிலும் இராணுவ கிராமங்கள் உருவாக்க விதந்துரைத்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

* வடக்கிலும் கிழக்கிலும் சகல பொலிஸ் நிலையங்கள் அருகில் இராணுவ முகாம்கள் உருவாக்குவதற்கு அவர்கள் உடன்படவில்லை.

இன பிரிவினைவாதம் இன்னும் முடியவில்லை.

ஆகையால் எமது நாட்டில் இராணுவத்தை தயார் செய்திருக்க வேண்டும். சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவங்கள் பலமாக இருக்கின்றன.

நான் ஜனாதிபதியாகிய உடனே நாட்டு இராணுவத்தை அதிகரித்து எல்லா இளைஞர்களையும் இரு (2) ஆண்டுகள் இராணுவத்தில் சேரவேண்டுமென கட்டாயப்படுத்துவேன்.

நான் அதில் அடக்கமுள்ள சமூகத்தினரை உருவாக்கவும் அவசர காலத்திற்கு இராணுவத்தை பலப்படுத்தவும் எதிர்பார்க்கிறேன்.

நாடு முன்னேற வேண்டுமாயின் கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்று முன்னேற்றம் அடைந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு காரணம் இராணுவ அதிகாரிகள் ஒரு தடவை அங்கு ஆட்சி புரிந்ததனாலேயாகும். சமுதாயத்தைத் திருத்துவதற்கு நல்ல வழி, நாட்டின் சட்டங்களை இராணுவ சட்டமாக உருவாக்கி அவை நன்றாக செயல்படுத்த வேண்டும்.

தமிழ்க் கூட்டமைப்பு என்னுடன் இணைவதையிட்டு பிழையான கருத்துக்கள் கொடுத்து நாட்டை காட்டிக்கொடுக்க முயல்கின்ற பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தன் அவர்கள் முன்வைத்த காரணங்களுக்கு நான் உடன்படவில்லை. அவர் என்னுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.

வடக்கு, கிழக்கை ஒன்றிணைக்கவோ தமிழ் மக்களுக்கு இந்நாட்டுக்குள் பிரிக்கப்பட்ட சுய நிர்வாகம் பெற்றுக் கொடுத்து நாடு பிரிப்பதற்கு நான் எப்போதும் உடன்படவில்லை. அதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

யுத்தம் வெற்றியடைவதற்கு 27,000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுடைய உயிரைப் பறிகொடுத்து 50,000 இற்கும் அதிகமானோரை அங்கவீனர்களாக்கி ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்று பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை எப்போதும் திருப்பிவிடுவதற்கு இடமளித்து விடக்கூடாது.

நாம் கொண்டுசென்ற போரை நிறுத்தாமல் எதிர்காலத்தில் அதை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதை முகாமைத்துவம் செய்ய வேண்டும். அது எனது இரண்டாவது போராகும். சுதந்திர, அடிமையற்ற, சுபீட்சமான, பிரியாத இலங்கையை உருவாக்குவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பீர்களென எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு நம்பிக்கையுள்ள

சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளர்

http://www.thinakaran.lk/2010/01/20/_art.asp?fn=f1001203

Edited by காவடி

சரத் இப்பிடி சொல்கிறார் என்பதல்ல செய்தி. ஆனால் இப்பிடிச் சொல்லித்தான் சிங்கள மக்களிடம் ஓட்டுக் கேட்கவேண்டுமெனில் இப்படி சொன்னால்த்தான் சிங்கள மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனில் என்ன மயிருக்கு இன ஐக்கியமும் மண்ணாங்கட்டியும்

உண்மையில் எனது கேள்வியும் இதுதான்...

சிங்களவன் இனவாதியாக தான் இருப்பானாம்... அதிலை அவன் மாற மாட்டான்...

  • கருத்துக்கள உறவுகள்

தயா, சிங்களவன் இனவாதியாகவே இனவாதியாக இருக்கட்டும். அதேவேளை தமிழனும் இனவாதியாக இருக்கவேண்டும். யாதுமூரே வாவரும் கேளீர் என்று இருந்தால் எதிர்காலத்தில் தீதையே தமிழின எதிரிகள் எமக்குத்தருவார்கள்

//சரத் இப்பிடி சொல்கிறார் என்பதல்ல செய்தி. ஆனால் இப்பிடிச் சொல்லித்தான் சிங்கள மக்களிடம் ஓட்டுக் கேட்கவேண்டுமெனில் இப்படி சொன்னால்த்தான் சிங்கள மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனில் என்ன மயிருக்கு இன ஐக்கியமும் மண்ணாங்கட்டியும்/////

காவடி சிறிலங்காவின் இனச் சிக்கல் ஏன் இவ்வளவு காலமும் தீர்க்கப்படாமால் இருக்கிறது என்பதற்க்கு நாங்கள் அதன் வரலாற்றையும் சிறிலங்கா அரசு என்பது எத்தகையது என்பதையும் பார்க்க வேணும்.சிங்கள அரச அதிகாரதிற்க்கு வரும் எவரும் சிங்கள பவுத்த பேரின மேலாண்மை வாததை அடிப்படையாக வைத்தே ஆட்ச்சிக்கு வர முடியும்,வந்தவர்களும் அதை வைத்தே தொடர்ந்து ஆட்ச்சி செலுத்த முடியும்.இத்தகைய நிலையில் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பெற அவர்கள் சுய நிற்ணயத்தின் அடிப்படையில் தனியான ஒரு அரசுக்காகாப்போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.இது காலாம் காலமாக நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை.அதனாலையே தமிழர்களிடம் இருந்து விடுதலைப் புலிகளும் ஆயுதப் போராட்டமும் உருவாகியது.

இன்னும் இரண்டு வருடங்களிற்குள் விடுதலைப் புலிகள் மீள எழுந்து போராடுவதைத் தவிர ,தமிழருக்கு சிறிலங்காவில் வாழ்வதற்கான வழிகள் வேறு ஒன்றும் இல்லை.

கடுமையான சீரழிவுக்கு உள்ளாகி இருக்கும் மக்களை மீள இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே எதற்போதைய தேவை,அதனை ஜனாதிபதித் தேரதலினூடாக நிறைவு செய்ய முடியும் என்றால் அதனை அவ்வாறே செய்ய வேண்டும்.புலிகள் அற்று திறந்து விடப் பட்டிருக்கும் களத்தில் ,புலிகளை விமரிசித்தவர்கள் எல்லாரும் இபோது இறங்கி விளையாடலாம்.ஆனால் அவர்களால் எந்தத் தீர்வையும் தமிழருக்குக் கொண்டு வர முடியாது இருக்கும் என்பதே சிறிலங்காவின் வரலாறு.அது மீள நிரூபிக்கப்பட்டு தமீழத்திற்கான போராட்டாம் மீள நிகழும்.

நன்றி நாரதர்

  • கருத்துக்கள உறவுகள்

காவடி சிறிலங்காவின் இனச் சிக்கல் ஏன் இவ்வளவு காலமும் தீர்க்கப்படாமால் இருக்கிறது என்பதற்க்கு நாங்கள் அதன் வரலாற்றையும் சிறிலங்கா அரசு என்பது எத்தகையது என்பதையும் பார்க்க வேணும்.சிங்கள அரச அதிகாரதிற்க்கு வரும் எவரும் சிங்கள பவுத்த பேரின மேலாண்மை வாததை அடிப்படையாக வைத்தே ஆட்ச்சிக்கு வர முடியும்இவந்தவர்களும் அதை வைத்தே தொடர்ந்து ஆட்ச்சி செலுத்த முடியும்.இத்தகைய நிலையில் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பெற அவர்கள் சுய நிற்ணயத்தின் அடிப்படையில் தனியான ஒரு அரசுக்காகாப்போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.இது காலாம் காலமாக நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை.அதனாலையே தமிழர்களிடம் இருந்து விடுதலைப் புலிகளும் ஆயுதப் போராட்டமும் உருவாகியது.

இன்னும் இரண்டு வருடங்களிற்குள் விடுதலைப் புலிகள் மீள எழுந்து போராடுவதைத் தவிர இதமிழருக்கு சிறிலங்காவில் வாழ்வதற்கான வழிகள் வேறு ஒன்றும் இல்லை.

கடுமையான சீரழிவுக்கு உள்ளாகி இருக்கும் மக்களை மீள இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே எதற்போதைய தேவைஇஅதனை ஜனாதிபதித் தேரதலினூடாக நிறைவு செய்ய முடியும் என்றால் அதனை அவ்வாறே செய்ய வேண்டும்.புலிகள் அற்று திறந்து விடப் பட்டிருக்கும் களத்தில் இபுலிகளை விமரிசித்தவர்கள் எல்லாரும் இபோது இறங்கி விளையாடலாம்.ஆனால் அவர்களால் எந்தத் தீர்வையும் தமிழருக்குக் கொண்டு வர முடியாது இருக்கும் என்பதே சிறிலங்காவின் வரலாறு.அது மீள நிரூபிக்கப்பட்டு தமீழத்திற்கான போராட்டாம் மீள நிகழும்.

மிகவும் சரியாகச் சொன்னீர்கள். நன்றி

தயா, சிங்களவன் இனவாதியாகவே இனவாதியாக இருக்கட்டும். அதேவேளை தமிழனும் இனவாதியாக இருக்கவேண்டும். யாதுமூரே வாவரும் கேளீர் என்று இருந்தால் எதிர்காலத்தில் தீதையே தமிழின எதிரிகள் எமக்குத்தருவார்கள்

சிங்களவர்கள் மாறுவார்களா...??? ஐம்பது அறுபது ஆண்டுகள் பழக்கம்... எப்படி மாறுவார்கள்... குழந்தையில் இருந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கும் பிக்குக்களால் போதிக்க பட்டவை மாறிவிடுமா...??

காவடி இணைத்த செய்தியின் சரத் சொன்னது ஒரு சுருக்கமான விபரிப்பு கீழே இருக்கிறது...

சிங்களவர்கள் இலங்கையில் மாத்திரமே வாழ்கின்றனர். இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் 75%ம் ஆவார்கள். ஆகையால் இந்நாடு சிங்கள பெளத்த நாடு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களாகிய சிங்களவர்களுக்கு நிபந்தனை போட உரிமை இல்லை. இந்நாடு ஒன்றிணைந்த நாடாக பெரும்பான்மை சிங்களவர்கள் ஆட்சி புரிய வேண்டும். நான் இதை பயமின்றி உலகத்துக்கு கூறியுள்ளேன்
.

இப்படி சொல்லி சிங்களவரிடம் வாக்கு கேட்டாத்தான் போடுவார்கள் எண்றால் எதுக்காக இன ஐக்கியம் எண்று பேசிக்கொண்டு இன்னும் அந்த சிங்களவன் பின்னால் எங்களவர்கள் போகிறார்கள்....??? இதுதான் காவடி கேட்டது எனது ஆதங்கமும்...

சிங்களவன் எப்போதும் மாறவில்லை.... எங்களவர்கள்தான் அவனுக்கு சார்பாக மாறிவருகிறார்கள்...

Edited by தயா

வாசிக்க பயமாகக் கிடக்குது,

இதற்குள் நாங்கள் திரும்ப போராட்டம் தொடங்குவம் என்று இங்கிருந்து நாங்கள் வேறு.

ஒரு தமிழனையும் விட்டு வைப்பதில்லை என்றுதான் ஆக மொத்தம் எல்லாற்ற முடிவும்.

  • கருத்துக்கள உறவுகள்

* அகதி, முகாம்களிலுள்ள புலிகளை இனங்கண்டு அவர்களை சிறையில் அடைக்க அல்லது கொலை செய்ய வேண்டும் என்ற எனது ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

* வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன் மீளக் குடியேற்றம் செய்ய வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுத்தாலும், அரசியல் செல்வாக்குக்காக அவர்களை மீள்குடியேற்றம் செய்தார்கள்.

* ஒளித்து நின்று உதவி வழங்கிய பயங்கரவாதிகளின் பற்றுள்ளவர்கள் இன்னும் வடக்கில் மறைந்து இருப்பதனால் எனது ஆலோசனைகளை முறியடித்து வடபகுதிக்கு ஏ9 பாதை திறந்தார்கள். அதை இதுவரை தாமதப்படுத்தியதே நான் ஆவேன்.

* வட பகுதிக்கு அனுப்பும் பொருட்கள், பசளை, பெட்டரி போன்றவற்றால் குண்டு தயாரிக்க முடியுமென அறிந்த போதிலும் அதற்குள்ள தடைகளை நீக்கி அவை வடபகுதிக்கு அனுப்ப அனுமதி வழங்கியது எனது விதந்துரைத்தலை கவனம் கொள்ளாமையினாலாகும்.

* நான் எவ்வளவு எதிர்த்தாலும் மீன் பிடிப்பதற்கு சட்டங்களை நீக்கி பாதுகாப்புக்கு ஏற்படும் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

* தமிழ் முஸ்லிம் மக்கள் மீன்பிடிப்பதற்குச் செல்லும் கடலில் இராணுவ முகாம்களை அமைக்குமாறு விதந்துரைத்தாலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

* எதிர்வரும் காலத்தில் இவ்வாறாக நாடு பிரிக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கு பாதுகாத்துக்கொள்ளவும், தென் இந்திய இடையூறுகளுக்கு முகம் கொடுக்கவும் இலங்கை இராணுவத்தை 4 இலட்சம் வரை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தாலும் அற்கு இவர்கள் உடன்படவில்லை.

* இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பல்வேறு பிரதேசங்களிலும் நகரங்களிலும் இராணுவ கிராமங்கள் உருவாக்க விதந்துரைத்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

* வடக்கிலும் கிழக்கிலும் சகல பொலிஸ் நிலையங்கள் அருகில் இராணுவ முகாம்கள் உருவாக்குவதற்கு அவர்கள் உடன்படவில்லை.

http://www.thinakaran.lk/2010/01/20/_art.asp?fn=f1001203

இப்பிடியெல்லாம் சொன்னமாதிரி கீழே உள்ள ஆங்கில இணைப்பில் தெரியேல்லையே.. :lol:

http://indi.ca/2010/01/sarath-fonsekas-election-manifesto/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினகரன் என்னும் அரச ஊடகம் குழப்பம் விளைவிக்க எழுதிய துண்டுப்பிரசுரமாகக் கூட இருக்கலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லி சிங்களவரிடம் வாக்கு கேட்டாத்தான் போடுவார்கள் எண்றால் எதுக்காக இன ஐக்கியம் எண்று பேசிக்கொண்டு இன்னும் அந்த சிங்களவன் பின்னால் எங்களவர்கள் போகிறார்கள்....??? இதுதான் காவடி கேட்டது எனது ஆதங்கமும்...

சிங்களவன் எப்போதும் மாறவில்லை.... எங்களவர்கள்தான் அவனுக்கு சார்பாக மாறிவருகிறார்கள்...

தயா,

எந்த சிங்களவன் பின்னால் யார் இன ஐக்கியம் என்று போகிறார்கள் என்று விளக்கமாக கூறுவீர்களா?

  1. சிவாஜிலங்கம் விக்கிரமபாகு கருணாரட்ணவின் பின்னால் போவதையா குறிப்பிட்டீர்கள்?
  2. அல்லது ஈழத்தமிழர் பலநாடுகளிலும் பிரையன் செனவிரத்தின பின்னால் போவதை குறிப்பிட்டீர்களா?
  3. சம்பந்தனை குறிப்பிட்டிருந்தால் அவர் இன ஐக்கியம் என்ற காரணத்தால் பொன்சேகா பின்னால் போவதாக தெரிவித்தாக அறியப்படவில்லையே?
  4. அல்லது நீங்கள் எங்களவர்கள் என்று குறிப்பிட்டது டக்ளஸ் தேவானந்தாவையும், கருணாவையுமா?

எனக்கு நேரம் போதவில்லை விரிவாக எழுதுகிறேன்... அதுக்கும் முன்னம் ஒரு சிறு தகவலை சொல்லி விடுகிறேன்...

2004 ம் ஆண்டு பாராளுமண்ற தேர்தலுக்கு பின் 22 எம்பிக்களுடன் கூட்டமைப்பினர் வன்னிக்கு வந்து தலைவர் பிரபாகரனை சந்தித்த போது இன்னும் 11 தமிழ் எம்பிக்கள் வெளியில் இருக்கிறார்கள் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் ஒண்றாக்க எதாவது நடவடிக்கை எடுங்கள் எண்று கேட்டு கொண்டாராம்.... அப்போது ததன் தமிழர்கள் ஒரு பலமான நிலையில் அரசியல் அடித்தளத்தில் இருந்து நகர முடியும்.... ஆனால் வெளியில் இருந்த தமிழ் எம்பிக்களை மட்டுமே தமிழர்களின் பிரதிநிதியாக சர்வதேசம் ஏற்று கொண்டது... அவர்களையே பிரதி நிதிகளாக அரசும் காட்டிக் கொண்டது...

இண்று என்ன நடை பெறுகிறது என்பதை பாருங்கள்...

Edited by தயா

தயா,

எந்த சிங்களவன் பின்னால் யார் இன ஐக்கியம் என்று போகிறார்கள் என்று விளக்கமாக கூறுவீர்களா?

  1. சிவாஜிலங்கம் விக்கிரமபாகு கருணாரட்ணவின் பின்னால் போவதையா குறிப்பிட்டீர்கள்?
  2. அல்லது ஈழத்தமிழர் பலநாடுகளிலும் பிரையன் செனவிரத்தின பின்னால் போவதை குறிப்பிட்டீர்களா?
  3. சம்பந்தனை குறிப்பிட்டிருந்தால் அவர் இன ஐக்கியம் என்ற காரணத்தால் பொன்சேகா பின்னால் போவதாக தெரிவித்தாக அறியப்படவில்லையே?
  4. அல்லது நீங்கள் எங்களவர்கள் என்று குறிப்பிட்டது டக்ளஸ் தேவானந்தாவையும், கருணாவையுமா?

இந்தியாவின் மகாத்மா காந்தி நல்லவர்தான்... அதுக்காக இந்தியர்கள் எல்லாரும் காருண்யம் மிக்கவர்கள் எண்று உங்களால் சொல்ல முடியுமா...??? அப்படித்தான் இருக்கிறது ஓரிரு சிங்களவர்கள் ஒட்டு மொத்த சிங்களத்தின் அடையாளமாக்க நீங்கள் முனைவது...

சம்பந்தன் சொல்லும் ஆட்ச்சி மாற்றம் எண்றது எண்றாலும் இந்தியாவில் இருந்து வந்து சொன்னது ஒற்றையாச்சியின் கீழ் தீர்வு என்பதே... அதாவது அண்ணன் தம்பிகளாக தமிழர்களும் சிங்களவர்களும் என்பது...

சரி ஆட்ச்சி மாற்றம் என்பது மட்டும் உண்மையா எண்டால் அதுவும் இல்லையே..... போன மாதம் வரைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக சரத் பொன்சேகாவும் சேர்ந்து நடத்திய ஆட்ச்சிதான் நாங்கள் பார்த்தது... இதை சரத் பொன்சேகா ஆட்ச்சிக்கு வந்து மாற்றுவான்...?? அதை நீங்கள் நம்புகிறீர்களா...??

நீங்கள் மேற்கு நாடுகளின் ஆதரவு தமிழர்களுக்கு வேண்டும் எண்று வெளிப்படையாக சொல்பவர்தானே...??? அப்படியானால் உங்களிடமே ஒரு கேள்வி...!

மேற்கு நாடுகளின் அதிர்ப்தியுக்குள் இருக்கும் மகிந்த காலத்தில் தமிழர்கள் மேற்கு நாடுகளின் ஆதரவை பெறுவதோ அங்கீகாரத்தை பெறுவதோ சாத்தியமா..?? அல்லது மேற்கு நாடுகளின் ஆதரவு ஆட்ச்சியான சரத்பொன்சேகாவின் ஆட்ச்சிகாலத்தில் சிங்களவர்களின் எதிரிகளான தமிழர்கள் ஆதரவை பெறுவதும் அங்கீகாரம் பெறுவதும் சாத்தியமா....??

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதொரு பயம் இருக்குத்தான். தமிழ்சனம் சரத்துக்கு வாக்களித்து ஆனா கடைசியில மகிந்த வந்தால்.. அங்கையிருக்கிற சனத்துக்கு கதை கந்தல்தான்.

நான் முதலே சொன்னதுதான். நான் சரத் வரலாம் என விரும்பிறது மகிந்த இல்லாமல் போவான் என்ற ஒரு திருப்திமட்டும்தான். மற்றும்படி பெரிய ராசதந்திரப்புரட்டல்கள் எதுவும் இல்லை. ஆனால் எனக்குத் திருப்தியெண்டதுக்காக அங்கை சனம் அடிவாங்கேலாதுதானே.. எது நடக்கமுடியாது என்றிருந்தமோ அது நடந்து ஆறு மாசத்திலேயே அதைப்பற்றின ஒரு கதையுமில்லாமல் வேற சோலியைப்பாக்க போனவர்கள் நாங்கள். மகிந்த வந்தால் கூட 4 நாள் சே என்றுட்டு சோலியை பாக்கப் போயிடுவம். ஆனா பெருவாரியா சரத்தை ஆதரிச்சு மகிந்த வந்தால் - சனத்துக்கு அடி நிச்சயம்.. பழிவாங்கல் கொடூரமா நடக்கும்.

அதனால சனம்.. தங்கட இயல்பு வாழ்வை மீளப்பெறுகிறமாதிரியான வழி எதுவென்று நினைக்கினமோ - காணமற்போனவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை எவ்வாறு மீட்கலாம் என நினைக்கினமோ கைதுசெய்யப்பட்ட போராளிகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை எப்பிடி விடுவிக்கலாம் என நினைக்கினமோ (இதைப்பற்றி வெளிய இருந்து ஆட்லறிக்குழலுக்கை அறிக்கையைப்போட்டு அடிச்சுக் கொண்டிருக்கிற எல்லாப் புலிகளுக்குமே சிரத்தை இல்லை..) அதற்கான வழி எதுவென்று நினைக்கினமோ அவைக்கே வாக்களிக்கட்டும்.

நாங்கள் நா.க.அரசுத்தொண்டர்களாவும் வட்டுகோட்டை மக்களவை தொண்டர்களாகவும் மாறி அடிபிடிப்பட்டு பொழுதைப் போக்குவம். இந்த 2 அமைப்பில ஏதோ ஒன்றுதான் மக்களிடம் செல்வாக்குப் பெறப்போகிறது. அதனால மற்ற அமைப்பு ஓட்டமெட்டிக்கா துரோகியாகிடும். பிறகென்ன.. வரலாறு திரும்புது

சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அவன்தான் ஆட்சி செய்வான் என்ற முடிவுடன் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள், அப்படித்தானே?

அங்கே தான் நானும் நீங்களும் வேறுபடுகிறோம். சரத் பொன்சேகா வெற்றி பெற்றால், அவன் இந்தியாவின் அழகுராணி ஜனாதிபதி பிரதீபா பட்டேல் போல காட்சிபொருளாக மாற்றப்படுவான். யூ.என்.பி. ரனில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிக்கு வருவதாகவே திட்டம் என்பது எனது கருத்து. அமெரிக்க அரசு ரனிலுக்கு ஆதரவே தவிர, தனது நிர்ப்பந்தத்தால் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப தன்னுடன் ஒத்துளைக்க முன்வந்திருக்கும் சரத்துக்கு அல்ல. மகிந்தவின் போர் வெற்றியையும் மீறி, ரனிலை ஆட்சிக்கு கொண்டுவர சரத் ஏணி மட்டுமே.

ரனில் பிரதமராக இருந்தபோது அவரின் ஆட்சி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. அது ஏன் கலைக்கப்பட்டது? எப்போது கலைக்கப்பட்டது என்பதை பாருங்கள். விடுதலைப்புலிகளுக்கு இடைக்கால நிருவாகத்தை அவர்கள் கேட்டுக்கொண்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு கையளிக்க இணங்கிய ஒரு சில நாட்களில், அந்த காரணத்தை காட்டி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணித்து அதன்மூலம் மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த அவலநிலை உருவாக காரணமானது. விடுதலைப்புலிகளின் இடைக்கால நிருவாகம் உருவாகியிருந்தால் இந்த அழிவு தவிர்க்கப்பட்டிருக்க கூடுமல்லவா?

மேற்குலக நாடுகள் தமது திட்டங்களை மாற்று திட்டங்களால் தகர்ப்பவர்கள் மீது பரிதாபம் கொள்வதில்லை. இன்று தமிழ்மக்களை மேற்குலக நாடுகள் பெருமளவில் கைவிட்டு இருப்பதற்கு ஒரு காரணம் ரனிலை நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்ததும் ஆகும். மீண்டும் இதை நாம் செய்துவிட்டு மேற்குலகின் ஆதரவை எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். மகிந்த சீன, ஈரான், இந்திய எடுபிடியாக வேலை செய்வான் என்பது மேற்குலகு அறிந்ததே. அது மேற்குலக நாடுகளுக்கு மிகவும் பாதகமானது. அந்த பாதகத்தை மேற்குலக நாடுகளுக்கு செய்து அவர்களின் பரிதாபத்தை நாம் பெற்று கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்காலாக இம்முறை யாழ்ப்பாணத்தில் முடியலாம்.

மறுவளமாக பார்த்தால், மேற்குலக நாடுகள் தமது திட்டங்களுடன், அவற்றை தெளிவாக புரிந்து கொண்டு, மேற்குலக நாடுகளின் நலன்களையும் கருத்தில் எடுத்து செயற்படும் நாடுகளையும் மக்களையும் மேற்குலகு கைவிட்டதில்லை. ஜப்பான், சிங்கப்பூர், இஸ்ரேல், தாய்வான் என்று இந்த நாடுகளை நிரல்படுத்த முடிகிறது. முடிவை எமது மக்களும், தலைவர்களும் தான் எடுக்க வேண்டும். சம்பதன் சரியான முறையில் சிந்திப்பதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முடிவை எமது மக்களும், தலைவர்களும் தான் எடுக்க வேண்டும். சம்பதன் சரியான முறையில் சிந்திப்பதாகவே தெரிகிறது.

நன்றி JUDE

என்னத்த எழுதி..

என்னத்த சொல்லி...

என்னால் தொடரடந்து எழுதமுடியல..

அததான் வெட்டி ஒட்டுகிறேன்

தமிழன் ராணுவ சமபல நிலையில் நின்று கேட்டதை மறுத்து ஏதொ ஒன்றை தருவதற்கே,அவன் மனது இடம் கொடுக்காமல் தமிழரை நச்சு குண்டு பொழிந்து அழிதுவிட்டு,அதை சிங்களரை தேசிய விழாவாக கொண்டாட செய்தவர்கள் தான் இந்த இருவரும்.

ஒன்று மட்டும் யதார்த்தம்,எங்களுக்கு தேவையானது(அரசியல் தீர்வு) என்று, ஒன்று இருப்பதாக சிங்களத்துக்கு புரிய வாய்ப்பேயில்லை,இன்னுமோர் ஆயுத போராட்டம் வெடிக்கும் வரை.யதார்த்தத்திற்கு முரணாக கூட இது தோன்றலாம்.

யதார்த்த பூர்வமாக பார்த்தால்

சுய ஆயுத போராட்டம் அண்மையில் சாத்தியப்படும் என்று தெரியவில்லை...... நீண்டகாலத்தின் பின் ஆயுத போராட்டத்துக்கான கூழல் இருக்குமா என்றும் தெரியவில்லை.

பந்து சிங்களத்தின் பக்கம் தற்போது...

அது தான் தீர்மானிக்கும் அடுத்த கட்டத்தை.....

தயா,

சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அவன்தான் ஆட்சி செய்வான் என்ற முடிவுடன் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள், அப்படித்தானே?

அங்கே தான் நானும் நீங்களும் வேறுபடுகிறோம். சரத் பொன்சேகா வெற்றி பெற்றால், அவன் இந்தியாவின் அழகுராணி ஜனாதிபதி பிரதீபா பட்டேல் போல காட்சிபொருளாக மாற்றப்படுவான். யூ.என்.பி. ரனில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிக்கு வருவதாகவே திட்டம் என்பது எனது கருத்து. அமெரிக்க அரசு ரனிலுக்கு ஆதரவே தவிர, தனது நிர்ப்பந்தத்தால் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப தன்னுடன் ஒத்துளைக்க முன்வந்திருக்கும் சரத்துக்கு அல்ல. மகிந்தவின் போர் வெற்றியையும் மீறி, ரனிலை ஆட்சிக்கு கொண்டுவர சரத் ஏணி மட்டுமே.

ரனில் பிரதமராக இருந்தபோது அவரின் ஆட்சி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. அது ஏன் கலைக்கப்பட்டது? எப்போது கலைக்கப்பட்டது என்பதை பாருங்கள். விடுதலைப்புலிகளுக்கு இடைக்கால நிருவாகத்தை அவர்கள் கேட்டுக்கொண்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு கையளிக்க இணங்கிய ஒரு சில நாட்களில், அந்த காரணத்தை காட்டி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணித்து அதன்மூலம் மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த அவலநிலை உருவாக காரணமானது. விடுதலைப்புலிகளின் இடைக்கால நிருவாகம் உருவாகியிருந்தால் இந்த அழிவு தவிர்க்கப்பட்டிருக்க கூடுமல்லவா?

இலங்கையில் இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜானதிபதி முறைமை.... ஆதலால் பிரதமராக இரணிலில் கட்ச்சி பாராளுமற்றில் வெற்றி பெற்றாலும் அடுத்த பிரதமராக இருக்க போகும் இரணிலை விடவும் அதிகமான நிர்வாக திறனும் ஆழுமையும் கொண்ட சரத் பொன்சேகாவே வடக்கு கிழக்கில் வெற்றியின் போது படைகளை நகர்த்தினவன்... அவனே ஜனாதிபதி எனும் போது நிர்வகிக்க அவனுக்கு பக்க பலமாக பல இராணுவ தளபதிகள் கூட்டுக்கு வந்துவிடுவார்கள்... கூடவே ஒட்டுக்குழுக்களும் பழய மாதிரி ஒட்டிக்கொள்ளும்...

அதோடு இரணில் எனும் அரசியல் பெருச்சாளி... நாங்கள் விழுந்து போனதுக்கு விதைகளை போட்டு தண்ணியும் ஊற்றிய ஒருவன் தான் மேற்கு நாடுகளுடன் சேர்ந்து பாதுகாப்பு, புலநாய்வு ஒப்பந்தங்கள் போட்டு இலங்கையை பலப்படுத்தி இணைத்தலைமை நாடுகளின் ஆதரவை இலங்கை அரசுக்கு பெற்று கொண்டவனும் கூட... இந்த தளத்தில் மகிந்த சீனாவை ( தானாக போய் உதவிய இந்தியாவையும்) தவிர வேறு நாடுகளுடன் ஆதரவை பெறவில்லை...

இந்த இரணில் இருக்கும் போது நடந்த பேச்சுக்களில் இருந்து புலிகள் ஏன் ஒருதலைப்பட்ச்சமாக பேச்சில் இருந்து விலகினர் என்பது இரணிலின் நரித்தனத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு...

அப்படியான இரணில் காலத்தில் தான் துணைப்படைகள் எனும் பெயரின் புலிகளின் முக்கிய நடவடிக்கைகள் தளபதிகள் எல்லாம் தாக்கமும் கொல்லப்படவும் காரணமாக இருந்தது... அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சு சந்திரிக்காவிடம் இருந்ததினால் எண்று காரணம் சொன்னாலும் அந்த உண்மைகளை வெளியில் சொல்லாது தனது நாட்டுக்கு அவப்பெயர் உண்டு பண்ணாது காத்தான் இரணில்.... இதனால் சந்திரிக்காமீது வந்து இருக்க வேண்டிய சர்வதேச அதிர்ப்தி கூட இரணிலால் கையாளப்பட்டது...

சந்திரிக்காவால் இரணில் ஆட்ச்சி கலைக்கப்பட்டது.... அந்த ஆட்ச்சியை கலைக்கும் போது இரணிலின் ஆட்ச்சிக்கு ஏழு மாதங்கள் வரைதான் ஆயுள் இருந்தது... அதாவது அவ்வளவு காலம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இரணில் தமிழர் தரப்பை இழுத்தடித்து காலம் கடத்தி போராட்ட மனநிலையில் இருந்து வெளியில் கொண்டு வந்தான் எண்று சொல்வது சரியாக இருக்கும்...

இதிலை சரத மகிந்த இருவருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது... மகிந்த அரசியலுக்காக கொலைகள் செய்கிறான்... சரத் கொலையை தொழிலாக செய்கிறான்...

மேற்குலக நாடுகள் தமது திட்டங்களை மாற்று திட்டங்களால் தகர்ப்பவர்கள் மீது பரிதாபம் கொள்வதில்லை. இன்று தமிழ்மக்களை மேற்குலக நாடுகள் பெருமளவில் கைவிட்டு இருப்பதற்கு ஒரு காரணம் ரனிலை நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்ததும் ஆகும். மீண்டும் இதை நாம் செய்துவிட்டு மேற்குலகின் ஆதரவை எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். மகிந்த சீன, ஈரான், இந்திய எடுபிடியாக வேலை செய்வான் என்பது மேற்குலகு அறிந்ததே. அது மேற்குலக நாடுகளுக்கு மிகவும் பாதகமானது. அந்த பாதகத்தை மேற்குலக நாடுகளுக்கு செய்து அவர்களின் பரிதாபத்தை நாம் பெற்று கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்காலாக இம்முறை யாழ்ப்பாணத்தில் முடியலாம்.

மறுவளமாக பார்த்தால், மேற்குலக நாடுகள் தமது திட்டங்களுடன், அவற்றை தெளிவாக புரிந்து கொண்டு, மேற்குலக நாடுகளின் நலன்களையும் கருத்தில் எடுத்து செயற்படும் நாடுகளையும் மக்களையும் மேற்குலகு கைவிட்டதில்லை. ஜப்பான், சிங்கப்பூர், இஸ்ரேல், தாய்வான் என்று இந்த நாடுகளை நிரல்படுத்த முடிகிறது. முடிவை எமது மக்களும், தலைவர்களும் தான் எடுக்க வேண்டும். சம்பதன் சரியான முறையில் சிந்திப்பதாகவே தெரிகிறது.

மேலே நீங்கள் சிவப்பில் சொல்வதை நான் பூரணமாக ஏற்றுக்கொள்கிறேன்...

கீழே சில நாடுகளை மேற்கு நாடுகளை அனுசரித்து போகும் நாடுகளாகவும் அதனால் மேற்கு நாடுகள் அவர்களை கைவிடுவதில்லை எண்றும் சொல்லி இருந்தீர்கள்... அதையும் ஏற்று கொள்கிறேன்.... அந்த பட்டியலில் இலங்கையும் இலங்கையை ஆழும் சிங்களவர்களும் வந்து விடக்கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்... தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இருக்கும் ஒரு சாதகமான வளி அது மட்டுமே...

இண்று வாழ்வாதரத்துக்கே கஸ்ரப்படும் நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு தேர்தல்.... இதை கூட்டமைப்பு முன் நிண்று நடத்துகிறது... இப்போது தமிழர்கள் இருக்கும் நிலையில் வறுமையில் தேர்தல்களில் பங்கெடுக்க முடியாது அந்த மனநிலையில் என்பதுதான் எல்லாரும் அறிந்த உண்மையும்... மகிந்த படைகளில் பயந்த தமிழர்கள் பலர் வாக்களிக்க வரமாட்டார்கள் என்பதும் கூட உண்மையானது... சிலர் மகிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் சந்தர்ப்ப சூழ் நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை...

இந்த தேர்தலை முன்நிண்று தமிழர்களுக்கு விடிவு, ஆட்ச்சி மாற்றம் எண்று பொய்களை சொல்லி கூட்டமைப்பு நடத்துவது சொந்த நலன்களுக்காக மட்டுமே....

Edited by தயா

அதொரு பயம் இருக்குத்தான். தமிழ்சனம் சரத்துக்கு வாக்களித்து ஆனா கடைசியில மகிந்த வந்தால்.. அங்கையிருக்கிற சனத்துக்கு கதை கந்தல்தான்.

நான் முதலே சொன்னதுதான். நான் சரத் வரலாம் என விரும்பிறது மகிந்த இல்லாமல் போவான் என்ற ஒரு திருப்திமட்டும்தான். மற்றும்படி பெரிய ராசதந்திரப்புரட்டல்கள் எதுவும் இல்லை. ஆனால் எனக்குத் திருப்தியெண்டதுக்காக அங்கை சனம் அடிவாங்கேலாதுதானே.. எது நடக்கமுடியாது என்றிருந்தமோ அது நடந்து ஆறு மாசத்திலேயே அதைப்பற்றின ஒரு கதையுமில்லாமல் வேற சோலியைப்பாக்க போனவர்கள் நாங்கள். மகிந்த வந்தால் கூட 4 நாள் சே என்றுட்டு சோலியை பாக்கப் போயிடுவம். ஆனா பெருவாரியா சரத்தை ஆதரிச்சு மகிந்த வந்தால் - சனத்துக்கு அடி நிச்சயம்.. பழிவாங்கல் கொடூரமா நடக்கும்.

அதனால சனம்.. தங்கட இயல்பு வாழ்வை மீளப்பெறுகிறமாதிரியான வழி எதுவென்று நினைக்கினமோ - காணமற்போனவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை எவ்வாறு மீட்கலாம் என நினைக்கினமோ கைதுசெய்யப்பட்ட போராளிகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை எப்பிடி விடுவிக்கலாம் என நினைக்கினமோ (இதைப்பற்றி வெளிய இருந்து ஆட்லறிக்குழலுக்கை அறிக்கையைப்போட்டு அடிச்சுக் கொண்டிருக்கிற எல்லாப் புலிகளுக்குமே சிரத்தை இல்லை..) அதற்கான வழி எதுவென்று நினைக்கினமோ அவைக்கே வாக்களிக்கட்டும்.

நாங்கள் நா.க.அரசுத்தொண்டர்களாவும் வட்டுகோட்டை மக்களவை தொண்டர்களாகவும் மாறி அடிபிடிப்பட்டு பொழுதைப் போக்குவம். இந்த 2 அமைப்பில ஏதோ ஒன்றுதான் மக்களிடம் செல்வாக்குப் பெறப்போகிறது. அதனால மற்ற அமைப்பு ஓட்டமெட்டிக்கா துரோகியாகிடும். பிறகென்ன.. வரலாறு திரும்புது

ஊரில் இருக்கும் மக்களுக்கு என்ன பிரச்சினை எல்லாம் இருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாமல் சில மேல்தட்டு மக்களால் கூடி ஆராயப்பட்டு எடுக்க பட்ட முடிவுக்கு தமிழர்கள் எல்லாரும் ஆதரவு எனும் மாயை பூ சுத்தப்பட்டு உள்ளது....

கிசோரும், சிவசக்தி ஆனந்தனும், மற்றய சிறீகாந்தா MP க்களும் செய்ய முடிந்த உதவிகளை மற்றய கூட்டமைப்பு MP களால் ஏன் செய்ய முடியவில்லை எண்று கேட்க்கிறார்கள்.... இத்தனைக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஒட்டுக்குழுக்கள், இராணுவத்துக்கும் நல்ல உறவு வேறு இருக்கிறது... இதை எல்லாம் மறைத்து நடிப்பதுதான் தாங்க முடியாதது...

(முதலில் நீங்கள் கேட்ட கேள்வியும் நான் எழுதிய பதிலும் காணாமல் போய் விட்டது... தனித்து இது இருப்பதால் யாருக்கு எழுதி இருக்கிறீர்கள் எண்டதில் குழப்பமாக போயிட்டது..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.