Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.

மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்..விசுகு

அந்தக் குறிப்பிட்ட ஒரு சிலரில் நானும் ஒருவன் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

காலம் ஒன்றையும் மறக்காது

மறைக்காது

பார்க்கலாம்

நீங்கள் தங்களுக்கு தானே இப்பொறுப்பை தீர்மானித்திருந்தால்.....

அதையும் தமிழினம் மறவாது

மன்னிக்காது

  • Replies 86
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஒன்றையும் மறக்காது

மறைக்காது

பார்க்கலாம்

நீங்கள் தங்களுக்கு தானே இப்பொறுப்பை தீர்மானித்திருந்தால்.....

அதையும் தமிழினம் மறவாது

மன்னிக்காது

விசுகு உங்களிற்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தால் இன்றைய திகதி நேரத்தை போட்டு இந்த வாசகங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..காலப்போக்கில் மறந்துவிடாமலிருப்பதற்காக..அதே நேரம் முடிந்தால் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுதுங்கள் தமிழினத்தின் பற்றி பேசுவதற்கு நீங்கள் என்ன தமிழினத்தின் குரல் தரவல்ல அதிகாரியா??அல்லது தமிழினத்தின் பிரதிநிதியா..

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரதிநிதிகள் பற்றி எழுதவில்லை

தமிழ் மக்கள் பற்றியே எழுதுகின்றேன்

அதில் நானும் ஒருவன்

அவ்வளவுதான்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரதிநிதிகள் பற்றி எழுதவில்லை

தமிழ் மக்கள் பற்றியே எழுதுகின்றேன்

அதில் நானும் ஒருவன்

அவ்வளவுதான்...........

தமிழ் மக்களில் ஒருவன் விசுகுஆகிய நான் சாத்திரி ஆகிய உன்னை மன்னிக்கமாட்டேன்என்று எழுதுங்கள்..அதை ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால்..தமிழினம் மறவாது மன்னிக்காது என்று ஒட்டு மொத்த தமிழினத்தின் சார்பிலும் எழுதியதால்தான் நான் கேட்டிருந்தேன் நீங்கள் தமிழினத்தின் பிரதிநியா?? ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தை நீங்கள் பிரதி பலி;க்கின்றீர்களா??நானும் பிரதிநிதிகளைப்பற்றி எழுதவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தாங்கள் இப்படி எழுதுவதற்கு

நன்றி

ஃ.சாத்திரி

தலைமைச் செயலகம்

தமிழீழம்(பிரான்ஸ்)

நாங்கள் தமிழர்கள் என்று எழுதமுடியாதா...???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தாங்கள் இப்படி எழுதுவதற்கு

நன்றி

ஃ.சாத்திரி

தலைமைச் செயலகம்

தமிழீழம்(பிரான்ஸ்)

நாங்கள் தமிழர்கள் என்று எழுதமுடியாதா...???

விசுகு பொதுவாகத் தமிழர்களிற்கு தமிழீழம் என்றால்..யாழ்ப்பாணம்..இந்தியா என்றால் தமிழ்நாடு..அதுவும் திருச்சி;..சேலம்..சென்னை எக்மோர்..அதோபோல பொதுவாக பிரான்ஸ் என்றால் பரிஸ்..இங்கிலாந்து என்றால் லண்டன்..மட்டும்தான் தெரியும்...அதே போல தலைமைச் செயலகம் என்றதும் புலிகள் அமைப்பில் மட்டுமதான் இருப்பாதாக நினைக்கிறீர்கள்...தலைமைச் செயலகம் எல்லாநாடுகளிலும்..எல்லா அமைப்புகளிலும் எல்லா நிறுவனங்களிம்..தமைiயாக இருப்பது தலைமைச் செயலகம்... அடுத்ததாக ...அண்மைக் காலங்களின் வருகின்ற புலிகள் சார்ந்த அறிக்கைகள்.அனைத்தும் பிரான்சிலோ இங்கிலாந்திலோ கனடாவிருந்தோதான் விடப்படுகின்றது..அதற்கு கீழே தலைமைச் செயலகம் தமிழீழம் என்று மட்டும்தான் போடுகிறார்கள்..எந்த அறிக்கையும் தமிழீழத்திருந்து..வருவதில்லை அதற்கான எந்த சாத்தியங்களும் இல்லை..அதுவும் யாரென்றே தெரியாத பெயர்களில் மாறி மாறி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தங்கள் இணையத்தளம் தான் புலிகளின் அதிகார்வபூர்வ இணையத்தளம் என்று வேறு புலிகள் அமைப்பினை சொந்தம் கொண்டாடுகிறார்கள்...இப்படி புலிகள்அமைப்பின் பெயரிலேயே பெரிய மோசடிகள் நடக்கும் பொழுது என்னுடைய கடிதமும் அப்படி யாரோ ஒரு மோசடி பேர்வழி வெளிநாடென்றில் இருந்து எழுதிவிட்டு யாழில் இணைத்ததாக யாரும் நினைக்கக்கூடாது என்கிற அக்கறையில்தான்... நான் என்னுடைய கடிதத்தினை என்னுடைய தலைமைச் செயலகத்திலிருந்து எழுதிவிட்டு நான் கனவுகண்ட தமிழீழத்தில் வாழ்வதாக நினைத்து பிரான்சில் வாழ்வதால் அதே நேரம் பிரான்ஸ் என்றும் தெளிவாக எழுதி..யாராவது தொடர்பு கொள்ள வேண்டுமானால் தொ.பே இலக்கத்தையும்..எழுதியுள்ளேன்...இது எனது கடிதத்திற்கு நான்தான் பொறுப்பாளி என்:கிற நேர்மையையும்...அதனால் வரும் அனைத்து சாதக பாதகங்களிற்கும் நானே பொறுப்பாளி என்கிறது மட்டுமல்லாமல்..என்னுடைய இருப்பையும் உறுதி செய்துள்ளேன்.. இனியும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தாராளமாகக் கேளுங்கள்..கருத்தாடுதல் என்பது இன்று இன்றியமையாதது..

  • கருத்துக்கள உறவுகள்

.யாராவது தொடர்பு கொள்ள வேண்டுமானால் தொ.பே இலக்கத்தையும்..எழுதியுள்ளேன்...இது எனது கடிதத்திற்கு நான்தான் பொறுப்பாளி என்:கிற நேர்மையையும்...அதனால் வரும் அனைத்து சாதக பாதகங்களிற்கும் நானே பொறுப்பாளி என்கிறது மட்டுமல்லாமல்..என்னுடைய இருப்பையும் உறுதி செய்துள்ளேன்.. இனியும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தாராளமாகக் கேளுங்கள்..கருத்தாடுதல் என்பது இன்று இன்றியமையாதது..

நன்றி

இதற்கு இப்படி ஒரு பகுதியுண்டா?

அந்த வகையில் நான் சிந்திக்கவில்லை

ஏற்றுக்கொள்கின்றேன்

நேர்மையான தங்களது இக்கோணத்தை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரிக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு...

இப்படி ஒரு கருத்தை எழுதி வாங்கிக்கடுவதைபார்த்து மனதுக்கு சிரித்துக்கொண்டு...எனது கருத்துகளை சொல்லவிளைகிறேன்

மகாஜனங்களே....

முதல் தப்பு, ஏன் எப்பபார்த்தாலும் வட்டுக்கோட்டை...யாரோ சொன்னவை அது வட்டுகோட்டை அல்ல பண்ணாகம் என்று...எப்படியோ இனிமேல் தென்மராச்சிதான்..ஏன் நாவற்குழி தீர்மானம் எண்ட வாய்க்க போகாதோ..இஞ்சாலை கைதடி, சாவகச்சேரி , கச்சாய் ,கிளாலி , உசன் , மிருசுவில், எழுதுமட்டுவாள், கொடிகாமம், பளை.....மட்டுவில், மட்டுவில் கத்தரிக்காய் வேணும் சட்டம் போடேலாதோ? ...

வன்மையாக கண்டிக்கிறேன்...அதென்ன அராலி..விடமுடியாது :huh: -----------( சும்மா பகிடிக்குத்தான்...)

மற்றது ராஜபக்ச கஞ்சிக்கு வழியில்லாமல் இருந்ததெண்டு ஒராள் சொன்னது, அவன் ஒரு மந்திரியினது மகனாக்கும்.. தவறு என்று நினைக்கிறேன்..

""எந்த நாடும் உதவி செய்யாத போதும் புலம் பெயர் மக்களின் பண உதவியால் புலிகள் 30 வருடங்களாக போர் நடாத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.""

நான் நினைக்கிறன் இது ஒரு தவறான கருத்தை சொல்லவருகிறது என்று..முன்பும் ஒருமுறை குறிப்பிட்டேன்..ஆகக்குறைந்தது 1990 வரைக்கும் தன்னும் புலிகள் மக்கள் புலம்பெயர விரும்பவில்லை/ அவர்கள் ஒரு தங்களுடன் இணைத்து போராடுவார்கள் என எண்ணவில்லை,...இவ்வாறான கட்டமைப்புகள் இருக்கவில்லை...நினைவுபடுத்தி பாருங்கள் 2 / 3 பவுன் நகைக்காக புலிகள் எவ்வளவு கடினப்பட்டார்கள் என .அது நடந்தது 1993 /1994 /1995 பகுதியில்...நான் நினைக்கிறன் 30 வருடமாக புலம் பெயந்தவர்கள் உதவினார்கள் என்பது மிகைபடுத்தப்பட்ட தகவல் என...எனக்கு தெரிய 2000 முன் ஒரு ஒழுங்ககமைக்கப்பட்ட முறையில் இங்கு நிகழ்வுகள் இருக்கவில்லை என-----யாரும் தெரிந்தவர்கள் சொல்லவும்

மற்றது மிக முக்கியம், வேருஒரிடத்தில் இன்னுமொருவர் குறிப்பிடிருந்தார் இவ்வளவு காலமும் புலம்பெயர்ந்தவர்கள்தான் தாயகத்தையும் பார்த்து போராட்டத்தையும் நடத்தினதென...நான் நினைக்கிறேன் அர்ஜுன் நல்ல விளக்கமான பதில் தந்திருக்க வேண்டும்...பிரபாகரனுக்கும் கூட சாப்பாடும் மருந்தும் அனுப்பினது இலங்கை அரசாங்கமே...இங்கே பலர் சொல்லுவது நடைமுறை அரசு ....ஆனால் நடைமுறையில் இருந்தது என்னவே சிங்களவன் அனுப்பியதை பிரித்து பங்குபோட்டு உண்டதே...இது எப்படிஎண்டால் சிவாஜிலிங்கம் பிரபாகரனின் தாயாரை வெளிநாட்டுக்கு / இந்தியாவிற்கு அனுப்புவத்ர்ற்கு இலங்கை அரசின் அனுமதி தேவையில்லை என்பது போல...யார்சரி இலங்கை குடிமகன் வெளிநாடு செல்வது என்றால் இலங்கை அரசின் பாஸ்போர்ட் வேண்டும்..அதுவே ஒரு அனுமதி ..

புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் அம்மா அப்பா அண்ணன் தம்பிக்கு அனுப்பிய பணம்தான் போராட்டத்தை (நேரடியாக ) தாங்கிப்பிதது என்றால் யார் இதற்கு என்ன பதில் சொல்ல...(புலிகளின் வலையமைப்புகள் முதலே இருந்தன அவை தங்களுடைய வர்த்தகத்தையும், பொருள் கடத்தல்களையும் செய்தன ஆனால் அவையெல்லாம் புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புகள் என்பதன் வரையறைக்குள் வருமா என தெரியவில்லை ?)

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது ராஜபக்ச கஞ்சிக்கு வழியில்லாமல் இருந்ததெண்டு ஒராள் சொன்னது, அவன் ஒரு மந்திரியினது மகனாக்கும்.. தவறு என்று நினைக்கிறேன்..

ஆமாம். அவர் இன்னும் 1000 வருடத்துக்கு அமைச்சராக இருந்தாலும் தற்போது கோத்தபாய வாங்கியுள்ள வீட்டின் பெறுமது 1 பில்லியன் டொலர் பெறுமதியான வீட்டை வாங்க முடியாது. இதனை தான் நான் அவர் கஞ்சிக்கு வழியில்லாதவன் என்ற கருத்து பட குறிப்பிட்டிருந்தேன்.ஆயுத வாங்கலில் தான் இவ்வளவு பணமும் பெறப்பட்டது. :huh::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றது ராஜபக்ச கஞ்சிக்கு வழியில்லாமல் இருந்ததெண்டு ஒராள் சொன்னது, அவன் ஒரு மந்திரியினது மகனாக்கும்.. தவறு என்று நினைக்கிறேன்..

ஆமாம். அவர் இன்னும் 1000 வருடத்துக்கு அமைச்சராக இருந்தாலும் தற்போது கோத்தபாய வாங்கியுள்ள வீட்டின் பெறுமது 1 பில்லியன் டொலர் பெறுமதியான வீட்டை வாங்க முடியாது. இதனை தான் நான் அவர் கஞ்சிக்கு வழியில்லாதவன் என்ற கருத்து பட குறிப்பிட்டிருந்தேன்.ஆயுத வாங்கலில் தான் இவ்வளவு பணமும் பெறப்பட்டது. :huh::wub:

மகிந்தன் சுவிஸுக்கு வாறதுக்கு ரிக்கட் காசு இல்லாமல் தெருவில் நிண்டவன் எல்லோ :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஒரு அமைச்சரின் குடும்பத்தையே தெரிந்து கொண்டு "கஞ்சிக்கு வழியில்லாதவன் " எண்டு சொல்லுவீங்கள் ஆனால் நாளைக்கு இதைபார்கிற வி.கு கள் அதுவும் உண்மையெண்டு நினைச்சு போடுவினம்..கவனம்...அது எப்படிஎண்டால் இப்ப கதை எழுதிகிற ஆக்கள் எழுதுகிறமாதிரி ...கதைவரும் ராஜபக்ச முந்தி நடுரோட்டில நிண்டு ராபான் அடிச்சு பாட்டுபாடி காசுசெர்த்துதான் கிரிபத் சாப்பிட்டவன் என்று...

மற்றது 2 சிவப்பு புள்ளி போட்டது நல்ல பழக்கம்...ஏன் அதைகொஞ்ச்சம் திருத்தமாய் செய்யக்கூடாது....."ஒய் நீர் எழுதினது இப்படி பிழையாக்கும் :huh: " எங்கட நுணாவில் அண்ணை செய்யிறமாதிரி...

நான் யாழ்களப் பக்கம் கருத்தெழுதி நீண்ட நாட்களாகின்றது இடையிடை வந்து பார்த்து விட்டுப் போவேன். எனவே சாத்திரியண்ணாவின் கடிதத்தை படிக்கவில்லை நேற்றிரவு பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியினை கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தபொழுது சுவிஸ் நேர விவாதத்தில் இடையில் சாத்திரி என்பவர் எழுதிய கடிதம் ஒன்றினை வாசிக்கின்றோம் என்று சொல்லிய பின்னர் வாசித்தார்கள் சில வேளை எங்கள் யாழ்கள சாத்திரியாக இருக்கலாமோ என்கிற நினைப்பில் கேட்கத் தொடங்கினேன் அவர்கள் வாசித்த விதத்திலா அல்லது சாத்திரியண்ணா எழுதிய விதத்திலா என்று தெரியாது கேட்க கேட்க அடக்கமுடியாத சிரிப்பில் வாய் விட்டு சிரித்துவிட்டேன் நல்தொரு கடிதம் ஆனாலும் என்ன பிரயோசனம் எவரிற்கும் புரியமாட்டாது

"மகிந்த சுவிசுக்கு வர காசில்லாமல் றோட்டில நின்றவன்' ஆனால் பின்னர் அவன் ஒரு நாட்டின் ஜனாதிபதி அதனால் பணக்காரன் ஆனான்.

ஆனால் இங்கு சந்தியில் நிண்டவன், ஒரு வேலைக்கும் போகாதவன் மில்லியனராகி விட்டாங்கள் அதுதான் அதிசயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக மக்கள் தமிழீழம் வேண்டாம் என்பது கூட அந்த மக்கள் எமது வீரர்கள் சிந்திய குருதியை, அவர்களது அப்பழுக்கற்ற தியாகதத்தை புரியாதவவர்களாகவும்,அவர்களது தியாகத்தை கொச்சைப்படுத்தியவர்களாகவுமே கணிகக்கப்படுவார்கள்.

இது என்ன அநியாயம்? அந்த மக்களையும் போராளிகளையும் பிரித்துப் பார்க்க முடியுமா? மக்களும் தானே உயிரையும் உடமைகளையும் பிள்ளைகளையும் போராட்டத்திற்காகக் கொடுத்தார்கள்! இப்போது அவர்கள் தமிழீழம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் (அவர்கள் அப்படிச் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. தமிழீழம் என்பது பலருக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால் அவர்கள் ஒரு முழு ஆயுதப் போரை உடனடியாக ஏற்கும் மன நிலையில் நிச்சயம் இல்லை). உடனே அவர்கள் தியாகத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று சொல்ல எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. வெளிநாடுகளில் இருந்து கொண்டு சட்டம்பி வேலை பார்ப்பது சுலபம். அதற்கு முன் போராளிகளுக்கு ஈடான தியாகத்தை அந்த மக்களும் செய்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்!

அங்கு வாழும் மக்களுக்கு என்ன வேண்டுமோ அதைத் தான் நாம் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு "நாங்கள் உங்களுக்கு எங்களுக்கு பிடிப்பதைத் தான் தருவோம். அதை நீங்கள் நாங்கள் உங்களுக்குச் செய்யும் உதவி என எண்ணிக்கொள்ள வேண்டும்" என்று சொல்வது நியாயம் ஆகாது. போரோ சமாதானமோ, அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகிறவர்கள்/அனுபவிப்பவர்கள் அந்த மக்கள் தான். அவர்கள்தான் தமக்கு என்ன வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். நாம் அதற்கு துணையாக மட்டுமே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மகிந்த சுவிசுக்கு வர காசில்லாமல் றோட்டில நின்றவன்' ஆனால் பின்னர் அவன் ஒரு நாட்டின் ஜனாதிபதி அதனால் பணக்காரன் ஆனான்.

ஆனால் இங்கு சந்தியில் நிண்டவன், ஒரு வேலைக்கும் போகாதவன் மில்லியனராகி விட்டாங்கள் அதுதான் அதிசயம்.

வேலைக்கு போகாத பல ஒட்டுண்ணிகள் இங்கே வளமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு எங்கிருந்து மாதா மாதம் பணம் வருகிறது? :lol::lol::lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி ஜயாவிற்கு வணக்கங்கள்..நேதாஜி வெளி நாட்டில் அதாவது மலேசியாவிலும்..சிங்கப்பூரிலும் பர்மாவிலும் தன்னுடைய இராணுவ கட்டமைப்பை கட்;டினார்..அவரது இராணுவ கட்டமைப்பிற்கு அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய இராணுவ பலம் கொண்ட ஜெர்மனியும் ஜப்பானும் பின் புலமாக நின்றது..அவர் கட்டமைத்த இராணுவ அமைப்புடன் தானும் நேரடியாக களமிறங்கி இந்தியாவில் மணிப்பூர் மானிலம் வரை இங்கிலாந்து இராணுவத்துடன் மோதியபடி முன்னேறினார்.அதே நேரம் அவரின் இராணுவ அமைப்பிற்கு இந்தியாவிலும் தொடர்புகளும் உறுப்பினர்களும் இயங்கி வந்தனர்....நேதாஜியின் முன்னேறும் இராணுவத்துடன் அவர்களும் இணைந்து போரிட்டனர்.. வரலாறுஎங்களிற்கும் தெரியும்...அதே போல புலம் நீங்களும் போராடுவதற்கு ஒரு இராணுவ அமைப்பினை கட்டமைத்து இலங்கை இராணுவத்துடன் போரிடுவதற்காக உங்கள் படையணியை இலங்கையில் கொண்டு போய் இறக்குவதற்காக தயாரிப்புக்களை மேற் கொள்ளுங்கள் அதே போல நிலத்தில் வாழும் மக்களையும் இன்றைய காலத்திற்கேற்ப ஆயுதமேந்தி போராட தயார் படுத்துங்கள்.உங்களிற்கு பின்புலமாக ஒரு வல்லரசையாவது உதவிக்கு அழையுங்கள்.. அந்த படையணியின் முதலாவது சிப்பாயாக நான் முதல் வரத் தயார்..முதலாவது சிப்பாயாக எனது பெயரான சிறி என்பதனை இணையுங்:கள்.. விலாசம் தொ.பே இலக்கங்களும் யாழில் பகிரங்கமாக இட்டுள்ளேன்..அதைவிட்டு நீங்களும் முடிந்தால் தெரிந்த தமிழில் ஏதாவது எழுதுங்கள்..வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்கு கேளுங்கள் பிழைப்பை நடத்துங்கள்.இன்று யேர்மனியிலும் சுவிசிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்கு கேட்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வாய்கூசாமல் துரோகிகள் என்று எழுதுதியும் சொல்லியும் வருகிறார்களே அவர்களை விமர்சிக்கும் உரிமையை உங்களிற்கு தந்தது யார்?? அதற்கான உரிமை உங்களிற்கு என்ன உள்ளது?? அவர்களை இணைப்பதற்கான பின்னால் நடந்த பெரும் முயற்கிகள் ஏதாவது உங்களிற்கு தெரியுமா???.??.இறுதியாக எனக்கு விளக்கம் எழுத வேண்டிய தேவை இல்லையென்று நீங்களே எழுதி விட்டு எதற்காக விளக்கம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் நன்றி.

புலம்பெயர் மக்கள் எங்கள்மீது இனியும் சுமைகளை சுமத்தாதீர்கள் என்று தாயகத்து மக்கள் உங்களுக்கு மட்டும் தொலைபேசியுடாக தெரிவித்ததுபோலும். அதன் பாதிப்பில் புலம்பெயர்ந்த மக்களுக்கு அறிவுரை கூற கட்டுரை வடிப்பதாகவும் நினைத்து மேலே எழுதி தள்ளிவிட்டு. இப்போது நான் எழுத வேண்டியவைகளை கைகூசாமல் நீங்கள் எழுதிகொண்டிருக்கின்றீர்கள்.

ஏன் திரும்ப திரும்ப அடுத்தவனையே சாடுகின்றீர்கள்? அவிப்பதற்கு சுயமாக உங்களிடம் பருப்பு ஏதாவது இருக்கின்றதா?

வட்டுகோட்டை வாக்கெடுப்புகாரன் த.தே.கூ வை சாடுவது பிழையாக உங்களுக்கே தெரிகிறது என்றால்? எந்த அடிப்படையில் எந்தவொரு சிறு விளக்கவும் அற்று அவர்களை நீங்கள் சாடுகின்றீர்கள்?

தாயகத்திற்கான போரட்டம் என்பது என்னுடைய சொந்த உரிமை. அதில் புலம்பெயர்ந்தவன் என்று எனக்கு பச்சைகுத்தி அந்த உரிமையில் தலையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை சற்று தெளிவாக கேட்கவே நேதாஜி உதரணமாக வந்தார். நேதாஜியை அப்படியே கொப்பியடிக்க நாம் இந்திய விடுதலைக்கு போராடவில்லையே?

தாயகம் புலம்பெயர் என்று என்னையும் அம்மாவையும் இடையில் நின்று பிரிக்க நீங்கள் யார்? என்ற என்னுடைய கேள்வி விடையகேதும் அற்று அப்படியே தொடர்கின்றது என்பதையாவது சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் புலம்பெயர் என்று என்னையும் அம்மாவையும் இடையில் நின்று பிரிக்க நீங்கள் யார்? என்ற என்னுடைய கேள்வி விடையகேதும் அற்று அப்படியே தொடர்கின்றது என்பதையாவது சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.

http://www.virakesari.lk/Results2010/index.htm

இதற்கான பதில் தற்போதய தேர்தலின் முடிவில் இருக்கிறது

http://img27.imageshack.us/i/eelam.jpg/

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68507&st=0&p=563495&fromsearch=1&#entry563495

Edited by விசுகு

அம்மாவையும் பிள்ளையையும் ஒருவரும் பிரிக்கவில்லை.இங்கிருந்துகொண்டு கொஞ்ச காசை அனுப்பிவிட்டு அங்கு இருக்கின்ற அம்மா என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது.உங்களை பெத்து வளத்து வெளிநாட்டிற்கு அனுப்பின அம்மாவிற்கு தெரியும் தான் என்ன செய்கின்றதென்று,நாலு காசு கையில வந்தவுடன் அம்மாவை ஆட்டிவிக்கப் பாக்கிறதுதான் வேண்டாம் என்று சொல்லுகிறம்.

பத்தாததற்கு ஊரில இருந்த வீடு உடைஞ்சு போச்சுதென்றால் அந்தமாதிரி வீடு இப்ப நான் இங்கு கட்டுகின்றேன் அதுவரை பொறு என்ற மாதிரி கிடக்கு.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வோரு அபிப்பிராயம் இருக்கிறது. எவருடைய தீர்மனம்/ அபிப்பிராயம் சரி எவருடைய அபிப்பிராயம் பிழை என்பதை உடனடியாக இப்போது தீர்மானித்து விட முடியாது. அதே போல யாருக்கும் யாரும் உத்தரவிட முடியாது, அதாவது யாருக்கும் யாரும் அடிமை இல்லை. அதைத்தான் யாழ் களத்தின் தற்பொதைய மகுட வாக்கியமும் சொல்கிறது :wub: "நாமார்கும் குடியல்லோம்".

சாத்திரியார் சொல்வதை ஆதரித்து ஒரு பகுதியினரும், எதிராக எப்பிடி உப்பிடி நக்கலடிக்கலாம், புலம் பெயர்ந்தவர்களையும், தாயகத்தில் இருப்பவர்களையும் எப்படி பிரிக்கலாம்? நாங்கள் ஒண்டுமே செய்யேல்லையோ எண்டு பலமாதிரியான கேள்விகள் எதிர்கருத்துக்கள்.

இப்போது ஒரு இடைக்காலம், பலதை இழந்து, எது எப்படி இருக்கிறது என்று தெரியாத நிலை. இதுவரை எமக்காக போராடிய தலமையை இழந்து, யார் யாரை தலைவராக தெரிவது? யார் துரோகி, யார் நண்பன் என பிரித்தறிய முடியாத குழப்பம். இந்த குழப்பம் முடிந்து தெளிவடைய எவ்வளவு எடுக்கும் என்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.

தாயகம் புலம்பெயர் என்று என்னையும் அம்மாவையும் இடையில் நின்று பிரிக்க நீங்கள் யார்? என்ற என்னுடைய கேள்வி விடையகேதும் அற்று அப்படியே தொடர்கின்றது என்பதையாவது சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.

புலம் பெயர்ந்து இருக்கும் நாம் ஊரில் இருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு, அல்லது நண்பர்களுக்கு உதவி செய்யலாம், செய்யாது விடலாம். உதவி செய்யும்/ செய்த காரணத்தால் நீங்களோ, நானோ அவர்களுக்கு இதை தான் செய்ய வேண்டும், இதை செய்ய கூடாது என கட்டளையிட முடியாது.

இங்கிருக்கும் என்னையும் ஊரில் இருக்கும் எனது அம்மாவையும் பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் எனது அம்மா என்ற உரிமை காரணமாக அம்மாவுக்கு இருக்கும் தீர்மானம் எடுக்கும் உரிமையை நான் தடுத்துவிட முடியாது. அம்மா வின் மீது எனது கருத்துக்களை திணித்து இது தான் சரி, இப்படி தான் அம்மா நீங்கள் செய்ய வேண்டும் என்று எனது கருத்தை திணிக்க எனக்கு உரிமை இல்லை என்பதையும் ஏற்று கொள்ள வேண்டும். அம்மாவுக்கு ஊரில் இருக்கும் கால நேரத்துக்கு ஏற்ப, அவருக்கு சரியென்று பட்டதை செய்ய இருக்கும் உரிமையை மறுக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று நான் கருதுகிறேன்.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்கள் எங்கள்மீது இனியும் சுமைகளை சுமத்தாதீர்கள் என்று தாயகத்து மக்கள் உங்களுக்கு மட்டும் தொலைபேசியுடாக தெரிவித்ததுபோலும். அதன் பாதிப்பில் புலம்பெயர்ந்த மக்களுக்கு அறிவுரை கூற கட்டுரை வடிப்பதாகவும் நினைத்து மேலே எழுதி தள்ளிவிட்டு. இப்போது நான் எழுத வேண்டியவைகளை கைகூசாமல் நீங்கள் எழுதிகொண்டிருக்கின்றீர்கள்.

ஏன் திரும்ப திரும்ப அடுத்தவனையே சாடுகின்றீர்கள்? அவிப்பதற்கு சுயமாக உங்களிடம் பருப்பு ஏதாவது இருக்கின்றதா?

வட்டுகோட்டை வாக்கெடுப்புகாரன் த.தே.கூ வை சாடுவது பிழையாக உங்களுக்கே தெரிகிறது என்றால்? எந்த அடிப்படையில் எந்தவொரு சிறு விளக்கவும் அற்று அவர்களை நீங்கள் சாடுகின்றீர்கள்?

தாயகத்திற்கான போரட்டம் என்பது என்னுடைய சொந்த உரிமை. அதில் புலம்பெயர்ந்தவன் என்று எனக்கு பச்சைகுத்தி அந்த உரிமையில் தலையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை சற்று தெளிவாக கேட்கவே நேதாஜி உதரணமாக வந்தார். நேதாஜியை அப்படியே கொப்பியடிக்க நாம் இந்திய விடுதலைக்கு போராடவில்லையே?

தாயகம் புலம்பெயர் என்று என்னையும் அம்மாவையும் இடையில் நின்று பிரிக்க நீங்கள் யார்? என்ற என்னுடைய கேள்வி விடையகேதும் அற்று அப்படியே தொடர்கின்றது என்பதையாவது சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்களின் அனைத்து சந்தேகங்களிற்கான விடைகளும் எனது அடுத்த கட்டுரையில் உள்ளது படிக்கவும்;. நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68536

தாயகத்திற்கான போரட்டம் என்பது என்னுடைய சொந்த உரிமை. அதில் புலம்பெயர்ந்தவன் என்று எனக்கு பச்சைகுத்தி அந்த உரிமையில் தலையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை சற்று தெளிவாக கேட்கவே நேதாஜி உதரணமாக வந்தார். நேதாஜியை அப்படியே கொப்பியடிக்க நாம் இந்திய விடுதலைக்கு போராடவில்லையே?

:wub::lol: :lol:

Edited by sathiri

நகைச்சுவையாக எழுதிய உங்கள் அறிக்கை ஊடாக சிந்திக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக இருக்கின்றது. பின்னூட்டல்கள் ஆதங்கங்களின் வெளிப்பாடாகவும் இயலாமையின் வெளிப்பாடாகவும் அமைகின்றது. தாயகத்துக்காக ஏதோ ஒன்றை செய்யவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இருக்கின்றது. ஆனால் அது எந்தவகையிலானது எப்படி என்பது குழப்பமானது தெளிவற்றது. இந்த பொது எண்ணத்தை ஐக்கியப்படுத்தி வழிநடத்தக்கூடிய அமைப்பு என்று எதுவும் இல்லை. ஒரு நம்பகமான அமைப்பை அல்லது தலமையை இனம்காண்பது சாத்தியப்படாமல் நீண்டகாலம் செல்லலாம். எமது இனத்தில் நம்பிக்கையானதும் ராணுவ பலம்பொருந்தியதுமான ஒரு கட்டமைப்பை உடையகாலத்தை எம்மால் பயன்படுத்தி வெற்றி பெற முடிந்ததில்லை. இப்பேர்து தலமை அமைப்பு பலம் என எதுவுமற்ற ஒரு சூனியநிலையில் எமது எண்ணங்கள் தேசத்தை நிர்மாணிப்பது குறித்து ஆர்வப்படுகின்றது.

நெருக்கடி நிலையில் இருந்து விடுதலை என்றவகையில் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுதல் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் இணைந்து கொள்வதில் இருந்து தப்பித்தல் பொருளாதரா நெருக்கடியில் இருந்து விடுபடுதல் உள்கமாக சமூக நெருக்கடிகளில் இருந்து விடுபடுதல் போன்ற பல கோணங்களில் புலப்பெயர்வு ஒரு விடுதலை என்பதே உண்மையானது.

இவ்வாறு விடுதலை அடைந்தவர்களான நாங்கள் எவ்வாறு தாயகம் சென்று மீள உண்மையான விடுதலையை வென்றெடுக்க முடியும்?

எம்மில் தொற்றியிருக்கும் அடிமைக்குணம் என்பது எம்மால் இனம்காணமுடியாமல் போகின்றது பெரும் தூரதிஸ்டம். இன்று சிங்களவனுக்கு அடிமையாக இருப்பது எமக்கு நெருக்கடியாய் இருக்கின்றது ஆனால் நாம் வெள்ளைகளுக்கு அடிமையாய் இருக்கின்றோம் என்பது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. அடிமைத்தனம் கெளரவமானதாக அமைந்து விட்டது.

முல்லை மாவட்டத்தில் ஒட்டிசுட்டானில் தான் நுறாண்டுகளுக்கு முன்பு பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டான் அதே மண்ணில் தான் புலிகளும் தோற்கடிக்கப்பட்டனர். நூறாண்டுகளுக்கு முன்னர் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற வரலாறு எம்மிடம் இல்லை. நாம் தேவாரம் திருவாசகத்தை தவிர வரலாறு எழுதுவதில் நாட்டம் கொண்டவர்கள் இல்லை. வன்னிக் காடுகளெங்கும் நுற்றுக்கணக்கான சிறு குளங்கள் அழிந்த நிலையில் உள்ளது அங்கு வாழ்ந்த மக்கள் எங்கே என்று யாருக்குத் தெரியும்! வன்னியில் எமக்கு தெரிந்தது சேர சோழ பாண்டியன்கள் தான். கம்பனி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் பட்டிணியால் கொல்லப்பட்டவர்கள் 30 மில்லின் தமிழர்கள் என்று வெள்ளையே எழுதிய வரலாற்றுக் குறிப்பு சொல்கின்றது. தொன்கணக்கில் அரிசி இங்கிலாந்துக்குப் போய்கொண்டிருந்தது.

நாம் ஒரு இயந்திரத்தை இயக்கி அதில் விடுதலை நோக்கி பயணம் செய்ய முற்படுகின்றோம் ஆனால் இயந்திரம் முதலில் பழுதுபார்க்கப்பட்வேண்டிய அவசியம் குறித்து சிந்திக்க மறுக்கின்றோம். இதுவே மாபெரும் தூரதிஸ்டமும் சாபக்கேடும் ஆகின்றது.

சிங்களமும் இந்திய அதிகாரவர்க்கமும் இருப்பில் இருந்த எமது முரண்பாடுகளைத்தான் பயன்படுத்தினார்கள். எமது இனத்துக்குள் மதமுரண்பாடு பிரதேசவாதம் சாதியம் அதனுடன் கூடிய வர்க்கம் புத்திஜீவித மமதை என அனைத்தும் இருந்தது. அவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். இல்லாத ஒன்றை அவர்கள் உருவாக்கவில்லை.

இந்த முரண்பாடுகள் கட்டமைத்திருந்த தனிமனித பிடிவாதக்குணம் ஒருவரை ஒருவர் ஏற்க மறுக்கும் ஜனநாயவிரோத மனநிலை போன்றவற்றை இனம்கண்டு பயன்படுத்திய இந்தியஅதிகாரவர்க்கம் இயக்கங்களுக்குள்ளான பிரிவினைகளை உருவாக்கியதில் பெருவெற்றி கண்டது.

எமது தேசியவிடுதலைப்போராட்டம் பெரும் சிதைவுக்கு உட்பட்டது எமக்குள் இருப்பில் இருந்த முரண்பாடுகளை சரிசெய்ய முடியாத நிலமையாலே.

பெருவாரியான மக்கள் மத அடிப்படையிலான முரண்பாட்டால் விலகிச்சென்றார்கள். வர்க்க அடிப்படையில் அரச அனுசரணையுடன் இணைந்து வாழ்தல் என்ற முடிவுக்கு வந்தவர்கள் பெருவாரியானவர்கள். இரண்டையும் விலத்தி நழுவியவர்களாக பெரும் எண்ணிக்கை புலம்பெயர்ந்த சமூகமாக இருக்கின்றது. எமது இன புத்திஜீவிகள் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கியது மிகப்பெரும் பிரச்சனையாக அமைந்தது. இயக்கங்களுக்கிடையிலான மோதலும் ஒன்றுசேரமுடியாத மனநிலையும் மக்களின் நம்பிக்கையை சிதறடித்தது. பிரதேசவாரியான பிரிவு பெரும் சரிவை ஏற்படுத்தியது. பிரதேசரீதியாக தமிழர்களின் தாயகத்தில் இருந்து பிரிந்து சிங்களவர்கள் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கான தேசியம் எப்போதும் கேள்விக்குறியாக இருந்துவருகின்றது. தென்னிலங்கை வாழ் தமிழர்கள் மலையகத் தமிழர்கள். இவ்வாறு ஒவ்வொன்றாக விலத்தி விலத்தி இறுதியில் வடிகட்டி எஞ்சியது வன்னியின் செற்ப மக்களே.

இன்று உலகம் எமது விடுதலைக்கு வழிகோலவில்லை ஆதரிக்கவில்லை என்று நாம் கத்துவது சிங்கள ஒடுக்குமுறையின் வீரியத்தை வைத்தே ஆகும் அதே நேரம் எமக்காக ஒரு தனி அலகை ஏற்கமுடியாத அளவுக்கு நாங்கள் சிதைந்து கிடப்பது என்னுமொரு பிரதான காரணமாகின்றது. இந்தக் காரணம் எம்மால் சாதாரணமாக அலட்சியப்படுத்தப்படுகின்றது. தமிழ்த்தேசியம் குறித்த பெரும்பான்மைச் சிந்தனைகள் யாழ்மையவாதத்தை சுற்றுவதில் இருந்து விலக மறுக்கின்றது. ஆனால் புறநிலையில் இருந்து உற்றுநோக்கப்படும் தமிழ்த்தேசியம் சிதைதந்து பரந்துபோய் உள்ளது.

இன்றயளவில் எமது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான விடுதலை என்பது குறித்து சுதந்திரமாக பேசக்கூடியவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர். எமது பேச்சு தாயக மக்களால் நிராகரிக்கப்படுமாக இருந்தால் அதற்கப்பால் எல்லாம் சுத்த சூனியமாகவே இருக்கும்.

நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த அரசு என இயங்க முற்படும் போது கவனத்தில் எடுக்க மறந்த விடயங்களாக இன்னும் இருப்பது மேற்கண்ட எமது முரண்பாடுகள். இந்த முரண்பாடுகளை கடந்து செல்ல முடியாதநிலையில் எமது முன்னெடுப்புகள் சாதகமான திசையில் செல்வதற்கான பிறிதொரு நம்பிக்கையாக எதுவும் இல்லை.

புலிகளின் இருப்பு என்பது மிகக் கணிசமானவர்களின் அதிஉச்ச தியாகங்களால் ஆனதும் எமது சமூக ஆழுமையை மிக நுணுக்கமாக அணுகிய கடும்போக்கால் ஆனாதும் ஆகும். முரண்பாடுகள் வளர்ந்து பரந்து விரிந்த களமாகவும் அதை செவ்வனே பயன்படுத்திக் கொண்டிருந்த பிராந்திய வல்லரசும் சிங்களமும் என நகர்ந்த காலத்தில் மூன்று தசாப்த கால தக்கவைப்பு என்பதை அவ்வாறு தான் இனம்காணமுடிகின்றது. புலிகளின் அழிவு என்பது சிங்களத் தேசிய எழுச்சியுடனோ பிராந்திய வல்லரசின் நெருக்கடியுடனோ இவை இரண்டின் அழுமைக்கு சாதகமான உலநாடுகளின் போக்குடனோ சம்மந்ப்பட்டது என்பது புறநிலைக் காரணம். அகநிலையில் அழிவு எமது முரண்பாடுகள் சிதைவுகளால் ஆனது.

இப்போது புலிகள் விட்ட இடத்தில் இருந்து புலம்பெயர் சமூகம் தொடரவதன் ஒரு அம்சமே தற்போதைய நகர்வுகள். அகநிலையில் எமது அழிவுக்கான மூலங்கள் இயங்கியவண்ணமே உள்ளது. நாம் அகநிலையில் எம்மை சரிசெய்தாகவேண்டும். எமது முரண்பாடுகளை சரிசெய்தாகவேண்டும்.

எமது முரண்பாடுகளை சரிசெய்வதற்குரிய கால அவகாசம் என்பது எமது இன விடுதலையின் முக்கால் பங்கு பயணத்தை நிறைவு செய்யும் காலமாகும்

நாம் மத பிரதேசவாதங்களை கடந்து சாதிய வர்க்க முரண்பாடுகளை கடந்து புத்திஜீவித மமதையற்று அடயாளத்தேடல்களை தவிர்த்து இனமாக ஐக்கியப்பாட்டுக்குள் வருவதற்கான திட்டமிடல்களும் செயற்பாடுகளும் ஆரம்பகட்டமாக இருக்கவேண்டும். பகுத்தறிவு சார்ந்ததும் உளவியல் சார்ந்ததுமான சிந்தனைகள் அவசியமாகின்றது.

எமது தாயக நிலப்பகுதியில் அபிவிருத்திகளை செய்து தாயகத்தை விட்டு விலகி வாழும் மக்கள் மீள தமது சொந்த நிலங்களுக்கு திரும்புதல் மற்றும் சொந்த நிலங்களில் பொருளாதர தொடர்புகள் வைத்திருத்தல் குறித்த திட்டமிடல்கள். எமது உழைப்பும் பொருளாதார ஒருங்கிணைப்பும் அற்பணிப்பும் அவசியமாகின்றது.

ஒரு காலகட்டத்தில் சிங்களத்தின் அனைத்துக் கட்சிகளும் தமிழின அழிப்பில் ஒருங்கிணைந்தது. ரணில் மகிந்தன் ஒன்றாகினார்கள் பெரும்பான்மை சிங்கள மக்கள் யுத்தத்தை ஆதரித்தார்கள். பொளத்த கிறிஸ்த்தவ மத பேதமின்றி ஒருங்கிணைந்தார்கள். எம்மை ஒடுக்குபவன் இனம் குறித்த விழிப்புணர்வோடும் அவனது முரண்பாடுகளுக்கு எல்லை எது என்பதிலும் தெளிவாக இருந்ததை ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக்கொள்வது அவசியமாகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா, முதல்ல எங்கட யாழ்பாண ஆக்களை "வெளிநாட்டு காசு எங்களுக்கு வேண்டாம்" எண்டு ஒரு தீர்மானம் போட சொல்லுங்கோ பார்ப்பம்? அவியல் அங்க சுதியா 5 இலட்சம் ரூபா செலவில சாமத்திய வீடும், மூண்டு இலட்சத்தில தேக்கு கதவும் போட்டு ஷோக்கா இருக்கினம். அவையளுக்கு அவ்வளவு காசு என்ன சிங்களவண்ட அரசாங்க உத்தியோக காசிலையே வருது?

அது சரி, தலைவரை ஜேசு நாதராக சித்தரிப்பதை நானும் எதிர்க்கிறேன் ஆனால் 30000 உயிரை கொடுத்து மில்லியன் பேரை கொண்ட இந்திய இராணுவத்தையும், 500000 சிங்கள ஆயுத தாரிகளையும் எதிர்த்து போராடியவர்களின் தலைவனை முருக்கன் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது? குடும்பமா இருந்து லவட்டுறவன் எல்லாம் தனக்கு தானே விழா எடுத்து தமிழ் இன தலைவன் எண்டு டைடில் குடுக்கிறான். புலியை குறை கூறும் ஆயுதக்குழு அரசியல் கூட்டம் எல்லாம் எத்தனை பேரை சிங்கள/இந்திய இராணுவத்தை எதிர்த்து இழந்தார்கள்? அவியல் எல்லாம் தலைவர் எண்டு புளுகும் போது எங்கட தலைவனை முருக்கன் எண்டு கூப்பிட கூடாதே?

திரு. வேலுப்பிள்ளை என்று வேறு முருகனின் பெயர்!

இந்தாருங்கள், தமிழரின் முருக்கன்( போர் கடவுள்) பற்றிய தகவல்.

http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவையும் பிள்ளையையும் ஒருவரும் பிரிக்கவில்லை.இங்கிருந்துகொண்டு கொஞ்ச காசை அனுப்பிவிட்டு அங்கு இருக்கின்ற அம்மா என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது.உங்களை பெத்து வளத்து வெளிநாட்டிற்கு அனுப்பின அம்மாவிற்கு தெரியும் தான் என்ன செய்கின்றதென்று,நாலு காசு கையில வந்தவுடன் அம்மாவை ஆட்டிவிக்கப் பாக்கிறதுதான் வேண்டாம் என்று சொல்லுகிறம்.

பத்தாததற்கு ஊரில இருந்த வீடு உடைஞ்சு போச்சுதென்றால் அந்தமாதிரி வீடு இப்ப நான் இங்கு கட்டுகின்றேன் அதுவரை பொறு என்ற மாதிரி கிடக்கு.

உங்களுக்கு கேள்வி விளங்காது உள்ளது. கேள்வி எங்கிருந்து வரகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை வாசித்து பார்க்கவும்.

மற்றையபடி உங்கள் மக்கள் காப்பு சிர்த்தாந்தம் நன்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா, முதல்ல எங்கட யாழ்பாண ஆக்களை "வெளிநாட்டு காசு எங்களுக்கு வேண்டாம்" எண்டு ஒரு தீர்மானம் போட சொல்லுங்கோ பார்ப்பம்? அவியல் அங்க சுதியா 5 இலட்சம் ரூபா செலவில சாமத்திய வீடும், மூண்டு இலட்சத்தில தேக்கு கதவும் போட்டு ஷோக்கா இருக்கினம். அவையளுக்கு அவ்வளவு காசு என்ன சிங்களவண்ட அரசாங்க உத்தியோக காசிலையே வருது?

இதற்காக யாரும் வாக்கெடுப்போ தீர்மானமோ நடத்த/ எடுக்க தேவையில்லை...ஒரு கால் போட்டு உங்கட அம்மாட்டை, அப்பாட்டை, தமிபியிட்ட, தங்கச்சியிட்ட கேளுங்கோ...அவை வேண்டாம் எண்டால் கப்சிப் ...

நீங்கள் காசு அனுப்பி எந்தனின பேர் உங்கட ஊரில தேக்கு கதவு போட்டிருக்கினம்...சிலவேளை ஊர் அம்மாளாச்சி, வைரவர், முருகன் போட்டிருக்கலாம்..அது நீங்கள் வெளிநாட்டுக்கு வாரத்துக்காண்டி நீங்கள் கொடுத்த, கொடுக்கின்ற காணிக்கை/ லஞ்சம்..

சுதியா 5 லட்சத்தில சமத்திய வீடு எண்டு போட்டிருகிரீர்கள்...5 லட்சம் எண்டால் 5000 டாலர்ஸ்..எங்களுக்கு உங்களுக்கு என்னமாதிரியோ தெரியாது...

சமத்திய வீட்டை விடுங்கோ எனக்கும் அது விருப்பமில்லை...அனா இங்கே அதையே பெண்ணாம் பெரிய நிகழ்வாய் செய்கிற ஆட்கள் கன பேர் இருக்கினம்...toronoto வில ஒருக்கா ஹெலி இல "பொம்பிள வந்தது" சமத்திய வீடு ...

மற்றும் படி அந்த 5000 $ அதுகள் நல்ல சந்தோஷபடுங்கள்....இங்கே 30000 $ சிலவளிச்சாலும் அதே சந்தோசம்தான் ...என்ன எங்களுக்கு கூட காலம் ஊரில இருந்த ஆக்களுக்கு இன்னும் இஞ்சத்தைய விளையாட்டுக்கள் கொஞ்சம் திருப்தி இல்லைதான் ...மற்றும்படி 5000 $ நிகழ்வு மிகவும் பொருத்தமானதே..

Edited by Volcano

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

toronoto வில ஒருக்கா ஹெலி இல "பொம்பிள வந்தது" சமத்திய வீடு .....

அண்ணே, ஹெலிகொப்டர்ல வந்து ரங்கினவையோ? எங்கட ஆக்கள் வெளிநாடு போயும் திருந்தவில்லை. சாமத்திய வீடு அந்த காலத்தில பொம்பிளையளுக்கு மாப்பிளை தேட வைக்கும் சடங்கு. யாருக்கு தெரியும், வானத்தில இருந்து மாப்பிளை தேடிச்சினமோ என்னவோ. ஆனால் லண்டன்ல மாப்பிளை குதிரைல வந்து ரங்கினவர்.

எரிமலை அண்ணா, நான் கொஞ்ச காலத்திற்கு முன் போயிட்டு வந்தனான். யாழ்ப்பாணத்தில சிங்கள மேசனை பிடிச்சு வீட்டுக்கு டிசைன் போடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.