Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

அங்கிள் முகத்தார் வீடு அங்கம் 13 சூப்பர். அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதாவது ஒரு பிள்ளையை வேலைகளை செய்விப்பதற்காக கூட்டி வராமால் அவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் மனத்தாக்கங்களை அறிந்து செயற்படவேண்டும். அத்துடன் தமது சொந்த பிள்ளைகள் மாதிரி வளர்த்தால் தான் அது கடவுளுக்கும் பொறுக்கும் என்று. நன்றி அங்கிள்.. வாழ்த்துக்கள்

ஆனால் பாவம் சாத்திரியார் உங்களுக்கு உதவி செய்ய வந்தவரையே மாட்டி விட்டீர்களே?????

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்,,, செய்தி, சமகால கண்ணோட்டம், விளக்கம் எல்லாத்தையும் அரசியல் ஆலோசகர் மாதிரி நகைச்சுவையாக சொல்லுறீங்க, முகம்ஸ்,,, நல்லா இருக்கு,,, :idea: :lol:

இப்படி நகைச்சுவையா சொன்னால்த்தான் பொதுவாக மனிதரின் மனதை விரைவில் சென்றடையும், அது தத்துவ ஆசிரியர், படித்த மேதைகளுக்கு புரியும், ஆனால் சில பன்னாடைகளுக்கு (பன்னாடை என்ன செய்யும், நல்லதுகளை விட்டுட்டு, கஞ்சல், தும்பு, எண்டு கூடாதவற்றை எடுத்து வைச்சிருக்கும்) அதுகளை வைச்சு கதைச்சுக்கொண்டு இருக்கும் (உதாரணத்துக்கு நம்மட சோமுராஜனிண்ட அலட்டல் அரட்டை வானொலி மாதிரி).. :evil: :evil:

தொடருங்க முகம்ஸ்ஸ்ஸ்ஸ்,,,,, :wink: :P

இளமையில் கல்வி சிலையில் எழுத்து எண்டு படிச்சு வைச்சிருந்ததுக்கு நீண்டதா ஒரு விளக்கம் தந்திருக்கிறீங்க .... ஆனால் காரம் குறைவாய் எல்லாருக்கும் விளங்கிறமாதிரி இருக்கு முகம்ஸ்... குறிப்பாய் எனக்கு....

முகத்தார், சிறு வயது பிள்ளைகளை அவர்கள் கல்வி கற்கும் காலத்தில் வீட்டில் வேலைக்கு வைப்பது தவறு என்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். முன்பு மலையகத்திலிருந்து வந்து சிறு வந்த சிறு பிள்ளைகள் யாழிலும் கொழும்பிலும் வீட்டு வேலைகள் செய்வதை பார்த்துள்ளேன். அவர்களை பார்ப்பதற்காக எப்போதாவது ஒரு முறை வரும் தந்தையை பார்த்தவுடன் வீட்ட போகலாம் என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள் ஆனால் அவரோ காசை வாங்கி கொண்டு போய் விடுவார். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் அவர்கள் வீடு செல்ல விரும்பினாலும் அந்த சமயம் அதிகம் வேலை இருக்கின்றது என்று சொல்லி வேலைக்கு வைத்திருப்பவர்கள் வீடு செல்ல முடியாமல் தடுத்து விடுவார்கள். இது போல வீட்டு வேலை செய்பவர்களின் நிலைமையை சித்தரிக்கும் நாடகங்கள் சிலவற்றை ரூபவாகினியிலும் பார்த்துள்ளேன்.

  • தொடங்கியவர்

முகத்தார் வீடு 14

(வாசிச்சு சிரியுங்கோ சீரியசாக எடுக்க வேண்டாம் )

தூரத்தில் எங்கையோ சங்கு ஊதிற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழும்புகிறார் முகத்தார் என்னஇது சங்குசத்தம் அபசகுணமெண்டெல்லோ சொல்லுவினம். . . .என்ற படி எழும்பி முன்னுக்கு வருகிறார் கேட்டும் திறந்திருக்கு. . .வாசலிலை வாழைமரம் வேறை கட்டியிருக்கிறாங்கள் கதிரைகளும் போட்டிருக்கு என்ன விசயம் எனக்குத் தெரியாமல் என்ரை வீட்டிலை பக்கத்திவீட்டு அன்னம்மா வாறா என்னவெண்டு கேப்பம் . . .என்னைக் கண்டும் காணாமல்போகுது மனுசி எல்லாம் பொண்ணம்மாவைச் சொல்லனும் இப்ப அயல் சனங்களும் மதிக்குதுகள் இல்லை எங்கை உள்ளுக்கை பிச்சுகொண்டு போற எண்டு ஒருக்கா போய்ப் பாப்பம் . . .அட ஹாலுக்கை நிறையச் சனங்கள் இருக்கு அதென்ன நடுவிலை பெட்டியொண்டு பொண்ணம்மா வேறை அதுக்குப் பக்கத்திலை இpருந்து அழுது கொண்டிருக்கிறா. . .ஆர் அது பெட்டிக்கை. . . . .ஜயோ. . . முகத்தார். . அப்ப இது. . . .

முகத்தாருக்கு இப்பதான் சங்குச் சத்தம் விளங்குது கடவுளே .வாழவேண்டிய என்னை இடையிலை எடுத்து ஏன் இந்தச் சோதனை. .பாவம் பொண்ணம்மா என்னமாதிரி அழுகிறாள் இவ்வளவு நாளும் ரிவிலை நாடகங்கள் பாத்தது இப்பதான் அவளுக்குப் பிரயோசனப்படுகுது. வந்திருக்கிற பெண்டுகள் அவளுக்கு ஒரு ஆறதல் சொல்லுவம் எண்டில்லாமல் என்னதான் தங்களுக்குள்ளை கதைக்குதுகளோ தெரியலை. .திடீரெண்டு பொண்ணம்மா எழும்பி உள்ளுக்கை போறா . . கடவுளே ஒருவரும் அவளைக் கவனிக்கவில்லையே எதாவது தற்கொலைக்கு முயற்சி செய்யப்போறாளோ தெரியேலையே. . பின்னாலை நான் எண்டாலும் போய் தடுக்கவேணும். . .என்னது அறைக்கைபோய் கதவைவேறை சாத்திகிறாள் . ஆ. . .யன்னல் இஞ்சை திறந்திருக்கு இதுக்கிலாலை பாப்பம் என்ன செய்யிறாள் எண்டு . . ஜயோ அலுமாரிக்குப் பின்னாலை ஏதொவை எடுக்கிறாள் புூச்சி மருந்தோ தெரியவி;ல்லையே ..தற்கொலை தான் கன்போம். . .சா. . புருஷன் இல்லை எண்டவுடனை தற்கொலைக்குப் போற பொண்ணம்மா உண்மேலையே பத்தினித் தெய்வம்தான் முகத்தார் தன்னையே அறியாமல் கண் கலங்குகிறார். .சாக முன்னம் அவளின் முகத்தை ஒருக்கா பாப்பம் எண்டு எட்டிப் பாக்கிறார். இதென்ன கூத்து முழுசா ஒரு நெக்ரோ சோடாவை ஒரு இழுவெலை எல்லோ குடிக்கிறாள். . .கொஞ்சநேரம் நானும் தடுமாறிட்டன்தான் சரி. . சரி. . நான் போணா அவளும் வரவேணும் எண்டு சட்டமேயில்லையே.

.வெளியிலை சொந்தங்கள் என்ன செய்யுது எண்டு பாப்பம். . .ஹாலுக்கை வந்த முகத்தார் தனது உருவத்தையும் பாக்கிறார் சா. . என்ன ஒரு வடிவான ஆம்பிளை. . .முகத்திலை இருக்கிற மகிழ்ச்சி. . பெரிய விடுதலை கிடைத்ததுபோல. . . மச்சான் காரன் சாறம் அவிழுறதும் தெரியாம என்ன பண்ணுறான். . .10ரூபா காசுக்கு அலைஞ்சு திரியிறவன் இண்டைக்கு பொக்கட் நிறையக் காசு அக்காகாரியை நல்லாத்தான் ஏமாத்திறான் . . இவளுக்கு வேணும் இவனை வீட்டுப்பக்கம் சேக்காதை எண்டனான் இப்ப நான் போனது அறிஞ்சதோடை வந்து ஒட்டிட்டான் போல. .நீ அடிக்கிற கசிப்புக்கு கிட்டடிலை வந்து சேருவாய்தானே அப்ப வைச்சுக்கிறன். இதென்ன தம்பியன்ரை பெடியொண்டு கோடிப்பக்கம்(வீட்டு பின்பக்கம்) போகுது என்னண்டு போய்ப் பாப்பம். . அட அன்னம்மான்ரை பெடிச்சிவேறை இதுக்கை நிக்குது. இரண்டு பேரும.;. அட கறுமாந்திரமே. . . எங்கை வந்து என்ன பண்ணுதுகள் தடி எடுத்து இரண்டு குடுப்பமெண்டு பாத்தால் ஏலாமல் கிடக்கு. . .

அதுசரி என்ரை பிள்ளைகள் ஒண்டும் வெளியிலை இருந்து வரேலைப் போல கிடக்கு. பொண்ணம்மாட்டை எப்பிடிக் கேக்கிறது. . பேசாம கிட்டப் போய் நிப்பம் யாராவது அவளிட்டை கேப்பினம் தானே. இவ்வளவு தூரம் முன்னுக்கு நிக்கிறன் மனுசிக்கு என்னை தெரிய மாட்டன் எங்குதே. .உயிரோடை திரியேக்கையே அவளுக்கு என்னைத் தெரியிறேலை இனி இப்ப எப்பிடித் தெரியப் போகுது. . .இரண்டு பெடியள் பாக் ஒண்டோடை வாறாங்கள் எதாவது சாப்பாட்டுச் சாமானோ தெரியலை இப்ப என்னத்துக்கு பொண்ணம்மாவை அறைக்கை கூட்டிக் கொண்டு போகினம். . .இண்டைக்கு இந்த இடத்தை விட்டு அசையாமல் என்ன நடக்குதெண்டு பாக்கிறன். . .இஞ்சை பார்டா. . பொண்ணம்மா வேறை சீலை உடுத்து பவுடர் போட்டுக் கொண்டு வாறதை அடடா.. . .வந்த பெடியள் வீடியோகாரப் பெடியள் என்னைப் படமெடுக்கப் போறாங்கள் போல. . .பொண்ணம்மா பாத்தியே சிங்கிள் போட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சுபோகும் எண்டு தடுத்தியே இப்ப வீடியோ எடுக்க வெளிக்கிட்டுட்டாய். .பிள்ளையள் வரமாட்டினமாம் அதுதான் விடீயோ எடுத்து அனுப்பப் போறன் எண்டு பக்கத்திலிருந்தவர்களுக்கு பொண்ணம்மா சொல்வது எனக்குக் கேக்கிறது. . . .வீடியோ காரப் பெடியன் நல்லா அழுங்கோ. . அழுங்கோ எண்டு சொல்லி படம் எடுக்க எனக்கு சிரிப்புத்தான் வந்தது. . .இருந்தாலும் பெடியன் தன்ரை கமரை லென்ஸ் பழுதாகிவிடும் எண்டு ஒரு துணியால் எனது தலையையும் நெற்றியையும் மறைத்தது எனக்கு அவமானமா போய்விட்டது. எனக்கு கம்பீரத்தை குடுக்கிறதே அந்த வழுக்கைத் தலைதான் இது தெரியாம. .இவங்கள் எல்லாம் ஒரு கமராமன். ஆனாலும் முகத்தாற்ரை விடீயோ லண்டனிலை ஓடப்போவதை நினைக்க முகத்தாருக்கு பெருமையாகதான் இருந்தது. .

.என்ரை கூட்டாளிமார் யார் யார் வந்திருக்கினம் எண்டு ஒருக்கா வெளியிலை போய் பாப்பம். வெத்திலையும் சுருட்டும் ஓசிலை கிடைக்கிதெண்டு தெரியாச மூஞ்சையெல்லாம் வந்திருக்கு. சரி. . .சரி. . புண்ணியமாப் போகட்டும் என்ரை கூட்டாளி இரண்டு பேரையும் காணேலையே. .எங்கை போட்டாங்கள் சா . . வந்தாங்கள் எண்டால் பேசிக் கொண்டிருக்கலாம் முகத்தார் சலிச்சுப் போய் அதிலை குந்துகிறார். தூரத்தில் சாத்திரியும் புல்லிலை வாறது தெரியுது. அடடா. . நண்பன்கள் எண்டா இப்பிடியெல்லோ இருக்கனும் என்ரை இழப்பு துக்கம் கவலையை மறக்க தண்ணியடிச்சிருக்கிறாங்கள் போல பாவங்கள். . .நல்லா பழகினவைக்கு என்னை தெரியுமாமே எதுக்கும் கிட்டப் போய் பாப்பம். சாத்திரியும் சின்னப்புவும் இருந்த கதிரைக்கு முன்னால் போய் நிக்கிறார் முகத்தார் அவர்களுக்கும் இவரைத் தெரியவில்லை. என்ன கதைக்கிறார்கள். . .

சாத்திரி : சின்னப்பு முகத்தான் பாவம் என்ன உன்னை விடவே சின்ன வயசு போய் சேர்ந்திட்டான்

சின்னப்பு : வாழ்க்கேலை பொய் சூடு வாது எதுவும் இல்லாமல் என்னைப் போல இருந்தா 100 வருஷம் வாழலாம் கண்டியோ இது முகத்தான் எங்களோடை ஒரு கதை மனுசியோடை ஒரு கதை இனி தொழிலும் சுத்துமாத்து கொண்டு போட்டுது. .

அட பாவி சின்னப்பு எத்தனை தரம் கானுக்கை விழுந்து கிடந்த உன்னை கொண்டு வந்து வீட்டிலை சேர்த்திருப்பன். . .உன்னாலை வீட்டிலை மனிசியோடை சண்டை பிடிச்சிருக்கிறன் எல்லாத்தையும் மறந்திட்டு நான் சூடுவாதுகாரன் என்கிறாய் எனக்கு இது வேணுமடா. . . .

சின்னப்பு : சாத்திரி இன்னொரு விசயம் ஒருவருக்கும் சொல்லேலை உனக்கு மட்டும்தான் சொல்லுறன் முகத்தான் என்னட்டை கொஞ்ச காசு வேறை வாங்கினவன் இனி யாரிட்டை கேக்கிறது டீகாயில் கணக்கெண்டு விடவேண்டியதுதான். . .

இதோடா. . ஏன் பொண்ணம்மாட்டை ஒருக்கா கேட்டுப்பாரன் அப்ப தெரியும். . .20ரூபாக்கு வாசலிலை வந்து கிடக்கிற நீ என்னைச் சொல்லுறாய் கடன்காரன் எண்டு சாத்திரி இதையெல்லாம் நம்பாதை மப்பிலை உளறுது. . . .சா. . .என்ன உலகமிது பிள்ளைகள் சாவுக்குத்தன்னும் வராமல் படமெடுக்கிறாங்கள் மனிசிக்காரி என்னடா எண்டால் சோடாவை குடிச்சுக் குடிச்சு அழுகிறாள் கூட இருந்தவங்களும் நான் இல்லை எண்டவுடனை கடக்காரன் சுத்துமாத்து எண்டு சொல்லுறாங்கள் எனக்கு இஞ்சை இருக்கவே பிடிக்கேலை . . . .வாசலிலை கறுப்பா கொம்போடை 2பேர் நிண்டு உன்னைக் கூப்பிற மாதிரி தெரியுது. . .அது எப்பிடி அவங்களுக்கு மட்டும் என்னைத் தெரியுது. . .ஓ. . .இவைதான் என்னைக் கூட்டிட்டுப் போக வந்த தூதரே. ..சரி வாறன். . .

தூதர் : வோய். . .எங்கை நிக்கிறீர் உம்மை கூட்டிட்டுப் போகேக்கை றோட்டிலை வடிவான பிள்ளையள் 2 போக கொஞ்சம் பிராக்குப் பாத்திட்டம் அதுக்கை எங்களையே சுத்திட்டு இஞ்சை வந்திடடீர் சரியா ஆள்தான்

முகத்தார் : ஜயா மனுசியைப் பாக்க ஆசையாக் கிடந்திச்சு அதுதான் ஒருக்கா பாத்திட்டு போவம் எண்டு வந்தனான்

தூதர் : மனிசிலை அவ்வளவு அன்பா. . அப்பிடியெண்டா சொல்லும் டக் கெண்டு கயித்தை வீசி அவவையும் கூட்டிட்டுப் போவம்

முகத்தார் : ஜயா . .சாமி அங்கை யெண்டாலும் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கப் பிடாதே அந்த கயித்தை இஞ்சாலை என்னைவிட வயசான ஒருஆள் கதிரேலை இருக்கிறார் அவருக்கு வீச ஏலுமெண்டா வீசுங்கோ. புண்ணியமாப் போகும்.

தூதர் : வெரி. . .சொறி. . .எங்களுக்கு இண்டைக்கு மனுசரைத்தான் எடுக்கச் சொல்லி ஓடர். . .வாங்கோ போவம். . . .

முகத்தாரை பிடிச்சு இழுத்துக் கொண்டு போகிறார்கள் முகத்தார் கை காலை உதறுகிறார்

பொண்ணம்மா : இந்த மனுசனுக்கு பக்கத்திலை படுக்கேலாது இடிச்சுப் பிடிச்சுக் கொண்டு கிடக்குது. . .இஞ்சரப்பா. . .எழும்புங்கோ ஒருக்கா. . .

திடுக்கிட்டு எழும்பிய முகத்தார் எங்கை ஆட்கள் எங்கை பெட்டி எண்டு தேடுகிறார் தலையிலை ஒரு தட்டுதட்டி சுய நினைவுக்கு கொண்டு வாறா பொண்ணம்மக்கா. .

முகத்தார் : இஞ்சரப்பா பொல்லாத கனவொண்டு கண்டனான் பயமாக்கிடக்கு. .

பொண்ணம்மா : அப்பிடி யென்ன கனவு கண்டனீயள்

முகத்தார் : எங்கடை வீட்டிலை செத்த வீடு ஒண்டப்பா. . .

பொண்ணம்மா : செத்த வீடு கனவு கண்டால் கலியாண வீடு நடக்குமெண்டு சொல்லுவினம்

முகத்தார் : யாருக்கு. . .எனக்கா. . . .?

(பொண்ணம்மக்கா கட்டிலுக்கு கீழை குனிந்து எதையோ தேடுவது தெரிய சுருண்டு படுக்கிறார் முகத்தார்)

முகத்தார் வீடு...கொஞ்சம் வித்தியாசமா வந்திருக்கு..மரணம் என்பதும் வாழ்வில் ஒரு அத்தியாயம்...அதுதான் முடிவுரை..! அதை இளமையிலேயே உணர வேண்டும்..அப்பதான் சாதிக்க உறுதி பிறக்கும்..! :wink: :P

முகத்தார் கொண்டிட்டீங்க போங்க. அட நான் கதையைத் தான் சொன்னேன். :roll: :roll: :lol::D

ஆகா முகத்தார் சூப்பர்...

சின்னப்பூட்ட வாங்கின காசைக் குடுத்திடுங்கோ... பாவம் அப்பூ...

சின்னப்பு :

ஆகா அங்கிள் உங்களுக்கும் இப்படி ஒரு கனவா ம்ம்ம் எனக்கும் இப்படி ஒரு கனவு வந்தது அப்ப எனக்கு கலியாணம் நடக்கப் போகுதே!!! :P :P :P :P :P :cry: :cry: :cry: :cry: :cry:

அங்கிள் உங்கள் கனவு நல்லா இருக்கு :lol:

அங்கிள் சூப்பர்... ஒரு நாள் கனவிலையாவது பொன்னம்மாக்க உங்களுடன் அன்பாய் இருக்கின்ற மாதிரி கனவு காண மாட்டியளோ?

பாவம் சின்னப்புவை இப்படியெல்லாம் கூடாதவராக கனவு கண்டு இருக்கிறீர்கள்?

கட்டாயம் கலியாணம் நடக்க போகுது தான் அட 60 கலியாணமாய் இருக்கும் அங்கிள். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனம்ஸ் முகத்தார்வீடு சூப்பராப்போச்சு. ஆனா பாவம் பொன்ஸ் தண்ணி விடாய்க்காதா அழ?? அதெப்படி உடன்கட்டை ஏறவேணும் என்றுஉங்களுக்கு நினைப்புவருது. துணை நல்லாய் நின்மதியாய் வாழவேணும் என்டு நினைக்காயளா..?? சின்னா சின்னா தான். :wink: :P

கற்பனை நல்லாயிருக்கு முகத்தார். இருந்தாலும் ஒரு செக்கன் அப்படி யோசித்து பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருந்ததும் உண்மை.

முகத்தார் அவர்களே

சிரிச்சு சிரிச்சு வயிறே நோகுது.

என்னதான் கள உறவுகளுக்காக பொன்னம்மாக்கா பற்றி நீங்கள் கதை அளந்தாலும் நிஜவாழ்க்கையில் எதிர்மாறாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.முகம் தெரியாத உறவுகளையே இப்பிடி சந்தோச படுதுறீங்கள்.

சொந்த வாழ்வில் உங்க மேல எல்லாரும் உயிராதான் இருப்பாங்க என்பது என் நம்பிக்கை!

நல்ல படைப்பாளி நீங்கள் தொடருங்கள். :lol:

முகத்தார் அவர்களே

சிரிச்சு சிரிச்சு வயிறே நோகுது.

என்னதான் கள உறவுகளுக்காக பொன்னம்மாக்கா பற்றி நீங்கள் கதை அளந்தாலும் நிஜவாழ்க்கையில் எதிர்மாறாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.முகம் தெரியாத உறவுகளையே இப்பிடி சந்தோச படுதுறீங்கள்.

சொந்த வாழ்வில் உங்க மேல எல்லாரும் உயிராதான் இருப்பாங்க என்பது என் நம்பிக்கை!

நல்ல படைப்பாளி நீங்கள் தொடருங்கள்

நல்லாச்சொன்னீங்க வர்ணண் ஏன்முகத்தார் சின்னப்புவும் சாத்திரியும் முன்னுக்கிருந்ததால கண்ணுக்குதெரிஞ்சதாக்கும் வீட்டுக்குபின்னுக்க தான்நாங்கள் இருந்னாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் அவர்களே

சிரிச்சு சிரிச்சு வயிறே நோகுது.

அப்படியே முகத்தார் போன டாக்டரிடமே போய் வாருங்களேன் :wink: :lol:

தூயவன் :D:D:D:D

உங்களுக்கு பொறாமை போல அவர் போல எழுத முடியவில்லையே டடடாஆ எண்டு கவுண்டமனி ஸ்ரைல :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முகத்தார் வீடு - அங்கம் - 15

(இந்த முறை புது வருஷத்துக்கு பார்ட்டி வைக்கிறதெண்டு; சொல்லி சின்னப்புவையும்; சாத்திரியையும்; வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார் முகத்தார் காலேலையே மாக்கெட்டுக்குப் போய் ஆட்டு இறைச்சியை வாங்கிட்டு வந்தார் நேற்றே போத்தில் எடுத்து வைச்சபடியால் பிரச்சனையில்லை )

முகத்தார் : இஞ்சரும் இவங்கள் 2பேரையும் சாப்பிட வரச் சொல்லியிருக்கிறன் இதிலை 2கிலோ ஆட்டுறைச்சியிருக்கு காணுமே

பொண்ணம்மா : எப்ப புது வருஷம் வருமெண்டு பாத்துக் கொண்டிருந்தனீங்களே என்னைக் கொல்லுறத்துக்கு. இனி உங்கடை கூட்டத்துக்கும் ஓசியெண்டா பாஞ்சு வருங்கள்

முகத்தார் : இஞ்சை அவங்களைத் திட்டாதையும் நான்தான் கூப்பிட்டனான் இதிலை கத்தரிக்காயும் இருக்கு வேறை என்ன வேணும்

பொண்ணம்மா : பெரிய றோயல் விருந்து மாதிரி நிக்கிறீயள் அதுகளுக்கு தண்ணியை வாங்கிக் குடுத்து அதாலையே கலைச்சு விடுகிறதுக்கு வீட்டையெல்லாம் கூட்டி வாறீயள்

முகத்தார் : என்னப்பா எந்த நாளுமே புதுவருஷம் பிறக்கேக்கை ஒரு சந்தோஷம் தானே

பொண்ணம்மா : இப்பிடியே எல்லா பெருநாளுகளையும் சொல்லிப் போடுங்கோ சரி சரி உங்களை கட்டின தலைவிதி மாரடிக்கத் தானே வேணும்;

(சைக்கிள் மணியடிச்சபடி சின்னப்புவும் சாத்திரியும் டபிள்ஸில் வந்து இறங்கிறார்கள்)

பொண்ணம்மா: இஞ்சை பாருங்கோவன் எப்ப விடியுமென இருந்திட்டு முகமும் கழுவாமல் வாற வடிவை

முகத்தார் : மெல்லமா சொல்லடி அவங்களுக்கு கேக்கப் போகுது இண்டைக்கு மட்டும் ஒரு நாள் பொறுத்துக்கொள்

பொண்ணம்மா : உந்த போத்தில் கறுமாந்திரங்கள் ஒண்டையும் வீட்டுக்கை கொண்டு வந்திடைதைங்கோ வெளியிலை மா மரத்துக்கு கீழை இருந்து கூத்தடியுங்கோ பிறகு வீடெல்லாம் கழுவ என்னாலை ஏலாது

முகத்தார் : சரி சரி சாத்திரி சின்னப்பு நான் ரெடி எல்லாம் வாங்கியாச்சு உந்த மரத்துக்கு கீழை குந்துவம் என்ன

சாத்திரி : ஏன் மனுசிக்காரி வெளியிலை கலைச்சுப் போட்டாவோ

முகத்தார் : சீ சீ வெளிலை காத்துப்பட்டா இன்னும் கொஞ்சம் தூக்கும்தானே

(போத்தல் சோடா கிளாஸ் என சாத்திரியிட்டை குடுக்கிறார் சாத்திரியும் கிளாசைக் கழுவி ரெடியாகிறார் )

முகத்தார் : இஞ்சை பார் கூத்தை சின்னப்பு அரைக்கிளாஸ் அடிக்கேலை தடுமாறுது

சின்னப்பு : ரேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் கிக்கா இருக்கு

சாத்திரி :எட நாசமா போண சின்னப்பு கிளாஸ் கழுவின தண்ணியை குடிச்சுப்போட்டே இந்த பிலிம் காட்டுறாய் இந்தா இதைக் குடி

சின்னப்பு : முகத்தான் தொட்டுக்கிறதுக்கு ஓண்டையும் காணேலை

முகத்தார் : ஏன் சின்னாச்சியை கூட்டியந்திருக்கலாமே கொஞ்சம் பொறு இறைச்சி இறக்கினவுடனை எடுத்து வாறன்

சின்னப்பு : முகத்தான் நீ இருக்கனும் நான் சாகனும் இப்பிடி என்னை கூப்பிட்டு இருத்தி வைச்சு தண்ணி ஊத்தித் தாறதுக்கு நீ நல்லா இருப்பாய்

சாத்திரி :முகத்தான் ஆளுக்கு பட்டுட்டுது கண்டுக்காதை... அது சரி 2 நாளைக்கு முன்னம் வந்தன் வீட்டிலை இல்லை எங்கை போனனீ?

முகத்தார் : ஓ பின்னேரம் என்ன.. . . ஒரு பகுதி கலியாணம் பெம்பிளை பாக்கக் கூட்டிக் கொண்டு போனனான்

சாத்திரி : முகத்தான் உன்ரை தொழில் விசயம் கேக்கப்பிடாதுதான் இருந்தாலும் இந்த பெம்பிளை போய் பாக்கிறது எல்லாம் இந்தக்காலத்துக்கு சரியோ?

முகத்தார் : நான் கோயிலைதான் ஒழுங்கு பண்ணுறனான்; ஒருமுறை கோயிலை பெம்பிளை பாக்க வந்து பெடி வேறையொண்டைக் கண்டுட்டு அதைப் பேசச் சொல்லி பிரச்சனை வந்தாப் பிறகுதான் இப்ப வீட்டுக்கு கூட்டிப்போறது

சாத்திரி : இல்லையடா கண்காட்சி மாதிரி வீட்டிலை போய் பெண்ணு பாக்கிறது எனக்கெண்டா சரியாப் படேலை நாலு பகுதி இப்பிடி வந்து பாத்திட்டு வேண்டாம் எண்டு போனால் அந்தப் பிள்ளைக்குத்தானே ஊருக்கை அவமானம்

சின்னப்பு : இஞ்சை வீட்டிலை போய் நாலு பலகாரத்தைத் திண்டு பெண்ணு பாக்கிறது எவ்வளவு சந்தோஷம் கண்டியோ இது சாத்திரிக்குத் தெரியேலை

சாத்திரி : எங்கை போனாலும் தின்னுறதிலையே குறியா இரு நான் சொல்லுறது பெம்பிளைப் பிள்ளைக்கு ஏற்படுகிற மனத்தாக்கத்தை

முகத்தான் : சாத்திரி இது சரிதான் அனேகமா படத்தைக்காட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா பிறகுதான் வீட்டை கூட்டிட்டுப் போறது இனி வீட்டுக்குப் போணா வீடு வாசல்களை பாத்தமாதிரியும் கிடக்கும்தானே

சின்னப்பு : பின்னை சீதனம் வேண்டுற சனங்கள் அதுகளைப் பாக்கிறதிலைதான் குறியா இருப்பினம் கண்டியோ?

சாத்திரி : மற்றது முகத்தான் பெண்ணுபாக்க வாறம் எண்டு போட்டு போனால் பெம்பிளையை நல்ல மேக்கப் போட்டு வெளிக்கிடுத்திவிடுவாங்கள் இல்லையோ இதாலை பெடிப்பிள்ளையளுக்கும் கஷ்டம்தானே

சின்னப்பு : நான் சின்னாச்சியை பாக்கபோணது எப்பிடித் தெரியுமே காலேலை கிடுகு இருக்கோ எண்டு கேட்டுக் கொண்டு கூட்டாளியோடை போனன் அப்ப மேக்கப்புகள் இல்லாமல் வடிவாத்தான் இருந்தாள் ஓம் எண்டு கலியாணத்துக்கு சரி சொல்லிட்டன் பிறகுதான் தெரிஞ்சுது நான் பாத்தது சின்னாச்சின்ரை அம்மாவை எண்டு . . .

முகத்தார் : இது என்ன என்ரை கூத்தைக் கேளன் பெண்ணு பாக்கப் போட்டம் அம்மா சொன்ன டேய் குசினியைப் போய் பாத்திட்டு வந்தா பெம்பிளையின்ரை லட்சணம் தெரியும் எண்டு வீட்டைச் சுத்திப் பாக்கிற சாக்கிலை போய் பாத்தம் எல்லாம் அந்த மாதிரி அடுக்கி வலு கிளிணா இருந்திச்சு எனக்கும் அம்மாக்கும் வலு சந்தோஷம்

சாத்திரி : பிறகென்ன குடுத்து வைச்சஆள் எண்டு சொல்லு

முகத்தான் : நீ வேறை பிறகு தான் தெரிஞ்சுது அவங்கள் குசினிலை சமைக்கிறதே இல்லையாம் கடைதானாம் சாப்பாடு

சாத்திரி : சரி இந்த முறையெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரி இப்ப இதுகள் தேவை இல்லை எண்டுதான் நான் சொல்லுறன்

முகத்தான் : அது உண்மைதான் இதுக்கு பெடியளைப் பெத்த சனம் யோசிச்சு திருந்தினால் தான் இதை நிப்பாட்ட ஏலும் நாங்கள் தொழிக்காண்டி கண்டுக்காமல் இருந்திடுவம்

சாத்திரி : அந்தக் காலத்திலை பெம்பிளையள் வெளிக்கிட்டுத் திரியிறேலை அதாலை இப்பிடியொரு சமாச்சாரத்தை உருவாக்ககிச்சினம் இப்பதானே வேலை எண்டு பெண்கள் வெளியிலை வந்திட்டாங்கள் ஆனபடியா இது தேவையில்லாத ஒண்டு;

சின்னப்பு : சாத்திரிக்கு இண்டைக்கு என்ன நடந்தது முகத்தான் நாலு இடத்தை போய் வாய் நனைக்கிறது வயிறு எரியுதுபோல

சாத்திரி : இல்லை சின்னப்பு என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெம்பிளை 5 6 பகுதி வந்து பாத்திட்டுப் போய் ஒரு முடீவும் சொல்லேலை பி;ள்ளையை பாக்கப் பாவமாக் கிடக்கு அதுதான் ஞாபகம் வர கதையைத் தொடக்கினனான்

முகத்தார் : இப்ப வெளிநாட்டுக்கு பேசி முடிச்சுப் போற பிள்ளையளை பெடியங்கள் படத்திலை பாத்து ஓகே சொல்லித்தானே போகுதுகள் இது இஞ்சை இருக்கிற சில கேஸ்சுகள் மாறாமல் எங்கடை உயிரையும் சேர்த்தெடுக்குதுகள்

சின்னப்பு : சாத்திரி இதுக்கு நீ போய் மண்டையை உடைக்காதை இண்டைக்கு வந்த அலுவலைப்பாப்பம் முகத்தான் இனி இருக்கேலாது பசி வயித்தை கிள்ளுது ஒருக்கா சாப்பாடு முடிஞ்சுதோ எண்டு எட்டிப் பார். . ..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு முகத்தார் வாழ்த்துக்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. இதே சாட்டீலே சாத்திரியாரையும், சின்னப்புவையும் வீட்டுப்பக்கம் வராதே என்று சொல்லி விடுகின்றியள் போல கிடக்கே :wink: :D

ம்ம் முகத்தார் நன்றாக இருக்கிறது.

என்ன சாப்பாடு ரெடியோ நானும் வரலாமோ சாப்பிட ? :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் முகத்தார் நன்றாக இருக்கிறது.

என்ன சாப்பாடு ரெடியோ நானும் வரலாமோ சாப்பிட ? :wink: :P

தம்பி என்று நானும் நிற்கின்றேன். எனக்கும் சேர்த்து கேட்கும் எண்ணமே இல்லை :evil: :evil:

அங்கிள் சூப்பர்...

அதுவும் சின்னப்பு கிளாஸ் கழுவிய தண்ணீயை குடித்து விட்டு பிலீம் காட்டியது கொஞ்சம் ஒவர் தான் :D . இடையில் சழுதாய பிரச்சனையும் ஆராய்ந்து இருக்கிறீர்கள். ஆமாம் அங்கிள் வெளிநாட்டில் இருப்பவர்கள் படத்தை பார்த்து அழகு என்று கட்டி விட்டு பின்னார் நேரில் கண்டு கதைக்கமால் பிரிந்தவர்களும் இருக்கிறார்கள் அங்கிள் :cry: .....

எதுஎப்படியோ நல்லாய் எழுதியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு...

தம்பி என்று நானும் நிற்கின்றேன். எனக்கும் சேர்த்து கேட்கும் எண்ணமே இல்லை :evil: :evil:

நான் எப்ப தம்பியை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கன். :wink:

முதல் நான் கேட்டு வீட்டுக்குள்ள போறது பெந்து

என்ன நடக்கும் என்று தெரியும் தானே? :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்ப தம்பியை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கன். :wink:

முதல் நான் கேட்டு வீட்டுக்குள்ள போறது பெந்து

என்ன நடக்கும் என்று தெரியும் தானே? :wink: :P

முந்தியும் உப்படித் தான் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய், பந்தியில் இருந்தது தான். இலையில் கை வைத்து ஒரு பிடி எடுக்கவில்லை. அதுக்குள்ள என் இலையை ஒத்தி எடுத்ததை மறக்கமாட்டேன். ஆமா!!!

நான் எப்ப தம்பியை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கன். :wink:

முதல் நான் கேட்டு வீட்டுக்குள்ள போறது பெந்து

என்ன நடக்கும் என்று தெரியும் தானே? :wink: :P[/quote

பார்சல் எல்லாம் பொன்னம்மாக்கா கட்டி கொடுக்க மாட்டவாம் :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.