Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவு.

தமிழர் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்கள ஜனாதிபதியை தேர்வு செய்ய என்றும் போரின் பின்னர் ஜனநாயகம் மலரச் செய்யப்படுகிறது என்ற உலக நாடுகளின் ஆர்ப்பரிப்போடும் திணிக்கப்பட்ட தேர்தலில் வெறும் 20% இற்கும் குறைவான மக்களே வாக்களித்துள்ளனர்.

சிறீலங்காவின் இதர பகுதிகளில் 70 சதவீதமான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணி வாக்கில் நிறைவுக்கு வந்துள்ளது.

வவுனியா யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடந்த கைக்குண்டு வீச்சுக்களைத் தவிர தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்ததாக தேர்தல் தொடர்பான செய்திகள் கூறுகின்றன.

வவுனியாவில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வாக்களிக்க வாகன ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும் பின்னர் வாகன வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்படவும் இல்லை.. அந்த மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவும் இல்லை.

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முகமாக வாக்குகளை எண்ணும் பணிகளும் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.

------

A voter turnout of more than 70 percent was recorded island wide at the Presidential elections held today. Election monitors said that less than 20 percent of voter turnout was recorded in the North and East. Voting ended at 4 this evening. (SR)

- dailymirror.lk

---------

இது டெயிலிமிரர் செய்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தி.

Edited by nedukkalapoovan

வாக்குகளை என்னும் முன்னமே வாக்களிப்பு வீதம் தெரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்குகளை என்னும் முன்னமே வாக்களிப்பு வீதம் தெரியுமா?

வாக்களிப்பு நிலையத்துக்கு வந்து வாக்களித்தவர்களது தொகையைக் கொண்டு முன்கூட்டியே எவளவு பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர், என்பதூடாக எத்தனை வீதமெனக் கணித்துள்ளார்கள். இது ஒரு சாதாரண விடயமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சிங்கள தரைப்படைத்தளபதியும் கூட்டுப்படை தலைமை அதிகாரியும் அமெரிக்க பிரஜையுமான சிறீலங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாக சிறீலங்காவில் இன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாங்களிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

வாக்காளர் பதிவேட்டில் அவருடைய பெயர் இடம்பெறாததால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

எனினும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் ஜனாதிபதியாக எந்தச் சட்டப்பிரச்சனையும் இல்லை என்று சிறீலங்கா தேர்தல் ஆணைய பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8478386.stm

வாக்குகளை என்னும் முன்னமே வாக்களிப்பு வீதம் தெரியுமா?

வாக்காளர் ஏட்டில் இருந்து பதியப்பட்ட வாக்குகளின் சதவீதத்தைக் கணிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல..! :huh:

சிங்களவனில் நம்பிக்கை இல்லை எண்டு சொன்னதோடு அவர்களில் ஒருவனுக்கு காவடி தூக்கின கூட்டணிக்கு முகத்தில் கரியை பூசின வடபகுதி( வன்னி ,யாழ்) மக்களுக்கு நண்றி... :)

குத்தி முறிஞ்ச கனபேர் ஏதாவது காரணத்தோடை வந்து உளறவும்..

யாழில் 10% கொஞ்சம் அதிகம் எண்று BBC தமிழ்(றோ) சொல்லுது...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்தது

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. தற்போது வாக்கு எண்ணும் பணி துவங்கியுள்ளது. முடிவுகள் புதன் மதியம் அளவில் தெரியவரும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியடைந்ததை அடுத்து இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளதன் பின்னர் அங்கு நடக்கும் முதல் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக தலைநகர் கொழும்பிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பெருமளவான மக்கள் திரண்டுவந்து வாக்களித்துள்ளனர்.

வாக்குப் பதிவை ஒட்டி தலைநகர் கொழும்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார்.

ரத்தினபுராவில் வாக்களிக்க வந்த மக்கள் கூட்டம்

ரத்தினபுராவில் வாக்களிக்க வந்த மக்கள் கூட்டம்

தேசிய அளவில் பார்க்கையில் 71 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றாலும் தமிழர்கள் அதிகம் வாழும் வட பகுதியில் வாக்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது என சுயாதீன கண்காணிப்புக் குழு ஒன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

வட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .

யாழ்ப்பாணத்தில் குண்டுவெடிப்பு

யாழ்பாபாணத்தில் திங்கள் இரவும், செவ்வாய் அதிகாலையும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும். இது பொதுமக்களை பெரிய அளவில் அச்சுறுத்தியதாகவும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடக்கே வாக்களிப்பு மந்தமாக இருந்தது

வட பகுதியில் வாக்குப் பதிவு பத்து சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக உள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரு எண்ணிக்கையானோர் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக வாக்களிக்க முடியாமல் போயுள்ளது .

யாழ்ப்பாணத்தில் இன்று குறைந்தது ஆறு வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. நாட்டின் மையப் பகுதியிலும் தெற்கிலும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களிலும் சில கையெறி குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன.

வவூனியா முகாம்களில் உள்ளவர்களில் பலர் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததாகவும், சரியான ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரால் வாக்களிக்க முடியவில்லை என்று ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளரான எம் கே சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினரை வெற்றிக்கு இட்டுச்சென்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுமே முக்கியப் போட்டியாளர்களாக அமைந்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

Edited by தயா

இது நல்ல விடயந்தானே தயா. வாக்களித்தாலும் வாக்களிக்காது பகிஷ்கரித்தாலும் தமிழர்கள் ஓரணியில் நின்றிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பாடு பெரும் திண்டாட்டம் தான்.தமிழரைக் கொண்டவர்களோடு இந்தியாவின் பேச்சை நம்பி கூட்டு வைச்சதுக்கு தமிழ் மக்கள் வேட்டு வைத்து விட்டனர்.

இது நல்ல விடயந்தானே தயா. வாக்களித்தாலும் வாக்களிக்காது பகிஷ்கரித்தாலும் தமிழர்கள் ஓரணியில் நின்றிருக்கிறார்கள்.

இதுக்கு பிறகு எனக்கு சரத் வெண்டால் என்ன மகிந்த வெண்டால் என்ன.. எனக்கு எல்லாம் ஒண்டுதான்... :)

இனி ஒருவேளை சரத் வெண்டாலும் ஒரு புண்ணாக்கும் தமிழ் மக்களால் தான் சரத் வெண்றான் எண்று சொல்லி ஒட்டு மொத்த தமிழர்களையும் கேவலப்படுத்த மாட்டாங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தயாதான் வெற்றியாளர்.

உண்மையில் தயாதான் வெற்றியாளர்.

எங்கட மக்கள் இனமானத்தை மதிப்பவர்கள் எண்டதிலை எனக்கு பெருமை அவ்வளவுதான்... வெற்றி எல்லாம் கிடையாது...

அதிலை நீங்களும் கூட பெருமை பட வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மக்கள் இனமானத்தை மதிப்பவர்கள் எண்டதிலை எனக்கு பெருமை அவ்வளவுதான்... வெற்றி எல்லாம் கிடையாது...

அதிலை நீங்களும் கூட பெருமை பட வேண்டும்...

அது தான் என்ர கருத்தும்..தமிழ் மக்கள் இன்னொரு படி மேல போய் இந்தியாவுக்கும் சரத்துக்கும் காவடி தூக்கின "கூட்டத்தை" பொதுத் தேர்தலில விளக்கு மாறு கொண்டு விரட்ட வேணும்! இதுவும் நடக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.