Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்கள் அழிவடையும் நிலை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.

இந்துமாமன்றப் பிரதிநிதிகள் குழுவினர் ஆளுநரைச் சந்தித்த போது திருக்கேதீஸ்வர ஆலய புனருத்தாரண வேலைகளைத் துரிதப்படுத்துமாறும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சிற்ப வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைப்பதற்கும், மாணவர்களுக்குப் போதிய விடுதி வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், இடம்பெயர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்து மாமன்றத் தலைவரும், ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வி.கயிலாயபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளர் திருமதி அ.கயிலாயபிள்ளை ஆகியோர் கொண்ட குழுவே ஆளுநரை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.

http://www.varudal.com

27 ஐயர் மார் எம்பிளோயின்மன்ற் எக்சேஞ்சிலை பதிஞ்சு வேறை வேலை பாக்க வேண்டியதுதானா...??

ஐயர்மாரை விடுங்கோ, பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிப்படைந்து போச்சுது என்று 10 விகாரையக் கட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை...

ஐயர்மாரை விடுங்கோ, பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிப்படைந்து போச்சுது என்று 10 விகாரையக் கட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை...

ஐயர் மார் எல்லாம் அங்கை பூசை செய்ய போகட்டுமன்...

விகாரைகள் கட்ட பட்டால் நாங்கள் அதிலை பிள்ளையாரையும் உள்ளை வச்சு கும்பிடலாம் தானே...??? நாங்கள் கொழும்பிலை கோயில் கட்டேக்கை அவன் இங்கை வந்து கட்டுறான்...

நான் சொல்லும் விடயத்தை பகிடியா எடுக்காமல் கொஞ்சம் ஆழமாக யோசிச்சு பாருங்கோ...! எங்கை பிழை எண்டு...

Edited by தயா

ஐயர் மார் எல்லாம் அங்கை பூசை செய்ய போகட்டுமன்...

சிங்கள மந்திரங்கள் (ஓமம் ஓதுறது என்றா சொல்லுறது? ^_^ ) எல்லாம் படிக்க வேண்டி வருமே? இனி அதைச் சாட்டி மகிந்தா ஐ.நாவில கடன் கேட்க போறான் :(

ம்ம்ம் நீங்கள் சொல்லுறதும் ஒரு விதத்தில சரி தான் தயா

சிங்கள மந்திரங்கள் (ஓமம் ஓதுறது என்றா சொல்லுறது? ^_^ ) எல்லாம் படிக்க வேண்டி வருமே? இனி அதைச் சாட்டி மகிந்தா ஐ.நாவில கடன் கேட்க போறான் :(

ம்ம்ம் நீங்கள் சொல்லுறதும் ஒரு விதத்தில சரி தான் தயா

[

ஒரு விடயத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் ,காவத்தையில் கடை போட்டவன் தமிழன் இப்போதல்ல 70பது வருடங்களுக்குமேல்.புலம்பெயர் நாடுகளிலெல்லாம் வழிபாட்டுத்தலங்களை உருவாக்கியிருக்கின்றோம் .இது எந்த விதத்தில் ஞாயம்?

கொஞ்சம் சிந்தியுங்கள்.

27 இல்லை 100 கோவில்கள் இடிச்சாவது வீதிவிஸ்தரிக்கப்டும் ஆனால் ஒரு சேர்ச் இடிச்சு ஒரு மசிரும் நடக்காது .. :(^_^

27 இல்லை 100 கோவில்கள் இடிச்சாவது வீதிவிஸ்தரிக்கப்டும் ஆனால் ஒரு சேர்ச் இடிச்சு ஒரு மசிரும் நடக்காது .. :(^_^

சரியான இடத்தை பிடித்துக் கொண்டீர்கள். அது யேசு சம்பந்தப் பட்ட விடயமல்லவா.

எங்கடை கடவுள்மாரை விட அவங்கட கடவுள்மாருக்கு பவர் அதிகம். ஆனபடியால் கோவில இடிப்பதால எந்த பாதிப்பும் தமிழ் மக்களுக்கு வராது. பண்டிக்குட்டிக்கு பால் கொடுக்கவும், ஆத்தில போட்ட பொன்னை குளத்தில எடுக்கவும், நரியை பரியாக்கவும் தான் எங்கட கடவுள்மார் லாயக்கு. இதுக்கு மேல அவைக்கு ஒண்டும் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் எல்லாம் பறிபோனாலும் இந்த நையாண்டி மட்டும் போகாது

வாழ்க தழிழன் பண்பு

கே.கே.எஸ் வீதியை விஸ்தரிப்பு செய்யவேண்டிய முக்கிய தேவை இருக்கிது. விஸ்தரிப்பு செய்யேக்க கோயில் இருக்கிற பக்கமாய் விஸ்தரிப்பு செய்யாமல் கோயிலுக்கு முன்பக்கத்தால வீதியை அகலப்படுத்தலாம். இதனால பாதிக்கப்படக்கூடிய பெரிய கோயிலுகள் என்று பார்த்தால் வண்ணை வைத்தீஸ்வரம், நாச்சிமார் கோயில் ரெண்டையும் சொல்லலாம். மிச்சம் ஏராளம் கோயிலுகள் தெருவோட இருக்கிது. கே.கே.எஸ் வீதி வலிகாமம் வடக்கு மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு நெடுஞ்சாலை. கே.கே.எஸ் வீதியை மட்டும் அல்ல... யாழ்ப்பாணத்தில எந்த வீதியை அகட்டினாலும் அதுக்கை இருவது கோயிலாவது வந்து மாட்டுப்படத்தான் பார்க்கும். எங்கடை ஆக்களுக்கு கோயில் எண்டாலே வழமையாய் பிடிக்காது. பிறகு ஏன் உந்தக் கவலை.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன் துறை வீதி மிக பழமையானது. அது புதுப்பிக்கப்படுவது இன்றியமையாதது.27 கோவில்களையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது தானே. எது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என்று யோசிப்பதை விட்டு கோவில்கள் அழிகின்றன என்று கூக்குரல் இடாமல் அவற்றை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை எடுப்பது தான் புத்திசாலிதனமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கேசன் துறை வீதி மிக பழமையானது. அது புதுப்பிக்கப்படுவது இன்றியமையாதது.27 கோவில்களையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது தானே. எது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என்று யோசிப்பதை விட்டு கோவில்கள் அழிகின்றன என்று கூக்குரல் இடாமல் அவற்றை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை எடுப்பது தான் புத்திசாலிதனமானது.

மிகசரியாக சொன்னீர்கள் nunavilan மக்களின் வாழ்வே முக்கியம்

காங்கேசன் துறை வீதி மிக பழமையானது. அது புதுப்பிக்கப்படுவது இன்றியமையாதது.27 கோவில்களையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது தானே. எது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என்று யோசிப்பதை விட்டு கோவில்கள் அழிகின்றன என்று கூக்குரல் இடாமல் அவற்றை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை எடுப்பது தான் புத்திசாலிதனமானது.

இது மிகவும் நல்ல முடிவு. புலம் பெயர் நாடுகளில இப்ப கடவுள்மாரும் ஒவ்வொருத்தராக வந்து கையை தூக்க தொடங்கியிருக்கினம். இப்ப ஒவ்வொரு ஊருக்கையும் ஒவ்வொரு கோயில். கோயில் வந்தால் நல்ல விசயம் தானே. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை, கோயில் அமைப்புக்கு என்று ஒரு முறை இருக்குது அதுகளை எல்லாம் மீறித்தான் இங்கு கோயில் அமைக்கினம். பழய 'பப்'(தவறணை), பேக்கரி இப்படி ஒன்றை வாங்கி கோயில்களாக உருமாற்றி வைச்சிருக்கினம். இதுக்கிடையில தேர்த்திருவிழா வேற.தேர் இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்தால் கோயிலை சுற்றி பழையபடி இருப்பிடத்தை அடையமுடியாது. இங்குள்ள கடவுள் எல்லாம் ஓடியா விட்டார்கள்.

தமிழனின் எல்லாம் பறிபோனாலும் இந்த நையாண்டி மட்டும் போகாது

வாழ்க தழிழன் பண்பு

தமிழனிடம் என்ன இருந்தது பறிபோனதற்கு? என்ன இருக்குது பறிபோவதற்கு? கண்ணீர் மட்டும் தான் எமக்கு சொந்தம். இது நையாண்டியல்ல,வேதனை! கடவுள் மீது கொண்ட அவநம்பிக்கை!வேதனை!

Edited by muruga

யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது .. என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ......

ஒரு பகுதியின் அபிவிருத்திக்கு சிறந்த வீதியமைப்பு உட்பட்ட உட்கட்டுமான அமைப்பு அவசியம். காங்கேசன்துறை பெரிய துறைமுகமாக வரவேண்டும் என்றால், குறைந்தது 100 அடி அகல போக்குவரத்து வீதி அவசியம். இதன் போது வீதியோடு உள்ள கோவில்கள் உட்பட பொதுமக்கள் காணிகளின் ஒருபகுதி கையகப்படுத்தப்படும். இது தவிர்க்க முடியாது என்பதை யாழ் அபிவிருத்தியில் அக்கறையுடையவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு கோவில்கள் தடையாக இருக்குது என்பது கேலிக்கூத்து.

அகில இலங்கை இந்து மாமன்ற கொழும்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு, எந்த 27 கோயில்கள், எந்த கலாசார சின்னங்கள் அழிவடையும் என்று கேட்டபோது தமக்கு இதுபற்றி தெரியாது என்று கூறினர்.

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் எத்தனை கோவில்கள் அழிந்துள்ளன? வன்னி அளிப்புகளின்போது எத்தனை கோவில்கள் அழிந்துள்ளன? இலங்கை முழுவதும் கடந்த 30 வருடங்களில் எத்தனை கோவில்கள் அழிந்துள்ளன? என்று கேட்டபோது, அதுபற்றிய விபரங்கள் தம்மிடம் இல்லை என்று கூறினர்.

இந்த பின்னணியில்,

காணிகளை இழக்க விரும்பாத மக்கள் சிலர் கோவில்களை சாட்டி, அறிக்கை பிரியர் கந்தையா நீலகண்டன் ஊடாக இந்து மாமன்றத்தை இழுத்து தமது காரியத்தை சாதிக்க முயலுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒரு எதிர்ப்பே - தமிழ் பகுதி அபிவிருத்தியை நிறுத்திவிட்டு, தெற்கு அபிவிருத்தியை தொடர சிங்களவனுக்கு போதும்.

இது வட இந்திய பயங்கரவாதிகள், சீன வீதி அபிவிருத்தியை குழப்ப, கடந்த பல மாதங்களாக இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு அளப்பெரிய சேவை செய்துவரும் இந்து மாமன்றத்தைப் பயன்படுத்துவதாக இன்னும் சிலர் கூறுகின்றனர்.

இதனால் நான் இந்து சமயத்தை எதிர்ப்பவன் என்று கருத வேண்டாம்.

அது ஒருபக்கம் இருக்க, இத் திரியில் கருத்து எழுதிய சிலர் இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு சமயத்தை இழிவுபடுத்த முயன்றது புரிகிறது. அர்த்தமற்ற மூடநம்பிக்கைகள் சகல மதங்களிலும் நிறையவே உண்டு.

அவர்களுக்கு ஒருசில வார்த்தைகள்:

சந்திரிகா, அனுருத்த ரத்வத்தை, லொக்கு பண்டார, மகிந்த, ரணில், ..... முதலிய சிங்களவன் பலர் இலங்கை மட்டுமல்ல, தென் இந்திய இந்துகோவில்களில் பயபக்தியுடன் யாகம் வளர்த்து கும்பிட்டுகொண்டுதான் இனவெறியையும் தமிழின அழிப்பையும் வெற்றிகரமாக மேற்கொண்டவர்கள்.

இவர்கள் சர்ச்சுகோ, பள்ளிவாசளுக்கோ, ஏன் புத்த விகாரைகளுக்கோ இவ்வளவு அக்கறையாக சென்று வணங்கியது இல்லை.

அடிமைத்தன புத்தியுள்ள இந்துக்கள் சிலர் தமது சமயத்தை கேவலமாக பேசுவதை நாகரீகமாக கருதி வாழ்பவர்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் எதேச்சையாக வாசித்த ஒரு புத்தகத்தில், தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்ச்சியற்ற போக்குக்கு பெரியார், திராவிட கழகத்தினரின் பார்பனிய எதிர்ப்பு என்ற போர்வையில், பிற்போக்குத்தனமாக இந்து சமய எதிர்ப்பும் ஒரு முக்கிய காரணம் என்றிருந்தது. அதில் மதம் மாற்றும் பிரியர்கள் எவ்வாறு திராவிட கழக பெரியவர்களுக்கு, வீரமணி உட்பட, மேற்குலக நாடுகள் சிலவற்றின் உதவியுடன் பணவுதவி செய்து இந்து சமயத்தை கொச்சைப்படுத்த, இந்து சமயத்தை இழிவுபடுத்தும் பல புத்தகங்கள் வெளியிட பண உதவிகள் செய்த விபரங்கள் ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருந்தது.

முன்னர் கவிஞர் கண்ணதாசனும் மதம் மாற்றும் பிரியர்களின் கீழ்தர தந்திரங்களை வெளியிட்டிருந்தார். ஈழத்து ஆறுமுக நாவலரையும் கடும்போக்காளராக மாற்றியது மதம் மாற்றும் பிரியர்களின் கீழ்தர தந்திரங்களே.

அதில் மேலும், நெடுமாறன் 5 வருடங்களின் முன் ஒரே நாளில் வெளியிட்ட 4 புத்தகங்களில், 2 ஈழத்தமிழர் பற்றியது, 1 திராவிட பற்றியது, மற்றது "இந்து பயங்கரவாதம்" என்ற தலைப்பை உடையது. ஒரே மேடையில் இவற்றை வெளியிடத்தான் மூலம், அவர் தமிழ் ஈழ மக்களுக்கு உதவிசெய்வதாக கருதி, ஈழமக்களுக்கு இந்தியாவின் 80 % இந்துக்களின் ஆதரவை இல்லாமல் செய்துள்ளார் என்று விரிகிறது அந்த புத்தகம்.

அந்த சிலர் திராவிட கொள்கையென்ற பெயரில் வெளிப்படும் உங்கள் அடிமைப்புத்தி பற்றி சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆசான் அருமையான தகவலுக்கு. சீனா காரனின் ஒவ்வொரு projectயும் தமிழ் மக்கள் மதிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஆசான் அருமையான தகவலுக்கு. சீனா காரனின் ஒவ்வொரு projectயும் தமிழ் மக்கள் மதிக்க வேண்டும்.

சீனாகரனின் ஆயுதங்களகலாதான் தமிழர்கள் அழிந்தார்கள் என்பதை மறந்து விட வேண்ட்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனா காரன் செய்தா சரியாத்தான் இருக்கும், கோயில்கள் இருந்து என்னத்தை கண்டம் ஆயிரம் தெய்வங்கள் இருந்தும் 50000 மக்களை காப்பற்றவில்லயே, இல்லாத கடவுளுக்காக நடக்கிற வேலையை நிறுத்தாமல், வீதி போடுவதை துரிதபடுத்த வேண்டும்,

ஒரு அறிஞரிடம் கேட்கபடும் கேள்வி ஒரு நாடு முன்ணேற என்ன செய்ய வேண்டும், பதில் வீதிகளை போட வேண்டும், அதன் பிறகு பதில் மேலும் வீதிகளை போட வேண்டும், அதன் பிறகு பதில் மேலும் மேலும் வீதிகளை போட வேண்டும். சீனாகாறன் ஏன் முண்ணேறினான், இந்தியன் ஏண் பின்நேறினான் என்று இப்போது புரிந்திருக்கும், இந்தியாகாறன் எத்தனை தடவை வீதி போட்டாலும் அடுத்த மாரிக்கு ஆட்டோகள் தண்ணிக்குளாலதான் ஓட வேண்டும், அவனது வீதி வேலைகள் தரமற்ரவை, சீனாக்கறனின் வேலைகள் தரமானது, எமக்கு எப்பொது தரம்தான் முக்கியம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

-----

இந்தியாகாறன் எத்தனை தடவை வீதி போட்டாலும் அடுத்த மாரிக்கு ஆட்டோகள் தண்ணிக்குளாலதான் ஓட வேண்டும், அவனது வீதி வேலைகள் தரமற்ரவை, சீனாக்கறனின் வேலைகள் தரமானது, எமக்கு எப்பொது தரம்தான் முக்கியம் :unsure:

இந்தியா அமைக்கப் போகும் காங்கேசந்துறை வீதி. roads_clip_image004.jpg

சீனா அமைக்கப் போகும் பலாலி வீதி. road-china.jpg

ஓமோம் எங்களுக்கு தரம் தான் முக்கியம். கிடுகு ஏத்தின வண்டில், ஆடாமல் போகவேணும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='தமிழ் சிறி'

ஓமோம் எங்களுக்கு தரம் தான் முக்கியம். கிடுகு ஏத்தின வண்டில், ஆடாமல் போகவேணும்.

கிடுகு வண்டில் ஆடினால், கிடுகின் பின்னலின் டிசைனில் மாற்றம் வருவதை எம்மால் எப்பொதும் ஏற்று கொள்ள முடியாது :unsure::lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

கிடுகு வண்டில் ஆடினால், கிடுகின் பின்னலின் டிசைனில் மாற்றம் வருவதை எம்மால் எப்பொதும் ஏற்று கொள்ள முடியாது :unsure::lol:

புதிய வீதியை சீனாக்காரன் போட்ட பின், கிடுகின் டிசைனில் மாற்றம் ஏற்படாது.

அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் மச்சான்,நுனா,ஆசான் ஆகியோரின் கருத்தே எனது கருத்தும்.உலகம் எங்கையோ போட்டுது.ஆனால் யாழில் இது வரை ஒரு சமிக்ஞை விளக்கு கூட இல்லை.இப்டியே போனால் இன்னும் 100 வருசத்த்க்கு இதுதான் நிலமை. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.