Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை வரியிலே தேவையான இடத்தில் சரியான வார்த்தையை துணிந்து பாவித்த நெடுக்கருக்கு எனது வாழ்த்துக்கள். கவிஞர் நெடுக்கர் முதல்காதலியின் செயலை விபச்சாரியுடன் ஒப்பிட்டு கவிதை எழுதியிருக்காரேயொழிய அவளை நீங்கள் நினைக்கும் விபச்சாரி போன்று பலருடன் செல்பவளாக சொல்லவில்லை. வித்தியாசமென்ன? என கேட்டு வாசகரை சற்று யோசிக்க வைக்கிறார். வாசகர்கள் பிழையாய் விளங்கியதால் வந்த விமர்சனங்கள் வாஸ்தவம்தான்

கவிஞரோ அடுத்தவரியிலே தன் பழையகாதலியை பத்தினியாக சித்தரிக்கிறார்..விமர்சகர்களுக்கு அது கண்ணிலே இன்னும் பிழையாகவே படுது.

அருகில் நகர்ந்து

"காய்" என்றேன்.

அவளோ

முகத்தைத் திருப்பியவளாய்

நடை போட்டாள்

அவன் பின்.

தாலி கட்டியவன்தான் காதலனை விட மேல் என்று காதலனுக்கு இந்த பெண் உறைக்க வைத்து செல்கின்றாள்..உதுதான் தமிழ் பத்தினி.

எல்லாத்தையும் விட கவிஞர், கவிதை, காதலன், காதலி என்று நோக்குங்கள். கவிஞர் தனது கவிதையில காதலனின் மனக்குமுறலை நண்றாக வெளிப்படுத்துகின்றார். காதலியை பத்தினியாகவும் சித்தரிக்கிறார்.

வாசகருக்கு நல்ல கவிதையை தந்த கவிஞர் நெடுக்ஸ் அவர்களை பாராட்டுகிறேன்..மென்மேலும் உங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டும் கவிதைகளை எதிர்பார்க்கின்றோம்.

நன்றி. கவி நயப் பார்வை இது. எழுதியவனை விட வாசகனே கவிதைக்கு அதிக நயம் கொடுக்கிறான் என்பதற்கு இது சான்று.

மற்றவர்கள் அட இந்தக் கவிதைக் கண்ணாடி நம்மளையும் பிரதிபலித்து எங்கள் விம்பத்தையும் காட்டிடுமோ என்ற பயத்தில் கவிதையின் நயத்தை நோக்காமல் மனப் பயத்தை முன்வைத்து கருத்துரைப்பதால்.. எப்படியாவது இதனை நிராகரித்துக்காட்ட வேண்டும் என்று நிற்பதால் அவர்களுக்கு நயம் தெரிய வாய்ப்பில்லை. அதற்காக அவர்களைக் குறை சொல்லவும் முடியாது. :D

அதுமட்டுமல்ல.. அந்தக் காதலனைக் கூட கண்ணியமானவனாகவே காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கும் ஒரு வரி சேர்த்திருக்கிறேன்.

அடுத்தவன் பொருளைத்

தொடர்வது அழகல்ல.

இந்தச் சமூகத்தில் அடுத்தவன் பொண்டாட்டியையே மடக்கிறவனும்.. காதலியைக் கொத்திறவனும் இருக்கிற நிலையில்.. அந்தக் காதலனின் கண்ணியத்தை காக்க எண்ணி அதைப் புகுத்தினேன். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சமூகத்திற்கான செய்தியும் அடங்கி இருக்கிறது. :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 146
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்போட்டு களவா வேலி பாயிறதை விட இது எவளவோ மேல்.

அது சரி ஒழுங்கா ஒன்னுக்கு போகத்தெரியாத வயதில் வாற காதலை

எல்லாம் சீரியசாக எடுத்து அது மண்டையை போடும் வரை தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் ஓவர்.அளவுக்கதிகமான எதிர்பார்ப்புதான் பல பிரச்சனைகளுக்கு காரனம்.கடைக்கண் பார்வை வீசுகிறவர்கள் எல்லாம் காதலி என்றால் கோவிந்தாதான் :D மற்றும் படி இந்தப்பிரச்சனைகள் இரு பாலாருக்கும் பொருந்தும் :)

இதுக்கே மூளையக் கசக்கிறீங்கண்ணா.. எப்படி குடும்பம் நடத்துறீங்க.. மூளையே இல்லாமலா..! :(:lol:

நான் மூளையக் கசக்கிறது மனைவிக்கு கொடுக்கவல்ல.எனது காதலிக்கு கொடுக்க :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசா சிறீலங்கன் புத்தக்கத்தில் குத்தி.. லண்டனில் புதுப்பிக்கப்படட்டும் அது அல்ல பிரச்சனை. தந்தைக்கு விசா வந்ததும்.. தனக்கு கிடைத்து விட்டது என்பதால்.. அருகிருந்தவனை அடியோடு மறப்பதும்.. லண்டனில் இன்னொருவனோடு திருமணம் செய்வதிலும் என்ன நியாயம் இருக்கிறது... விசா இருக்கிறது என்பதற்காக 10 ஆண்களையும் காதலிக்கலாம் கலியாணம் செய்யலாம்.. என்றால் அது விபச்சாரம் இன்றி வேறேன்ன. அதுதான் இங்கு முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி இப்படி விசாவில் வருபவர்கள் இலகுவாக இலங்கையில் இருக்கும் காதலனை அழைத்துக் கொள்ளலாம். ஏன் அந்தப் பெண் செய்து கொள்ளவில்லை..??! விசா வந்ததும்.. லண்டன் ஸ்ரைலில் ஒரு மாப்பிள்ளை கேட்டிச்சுதோ..??!

இந்த விசா பத்தியம் ஒரு வகை என்றால் இன்னும் இன்னும் இன்னும் பல வகைகள் உண்டு. விசா எடுப்பதற்காகவே திருமணம் என்று உடலைக் காட்டும் பெண்கள் எமது சமூகத்தில் மிக அதிகம். இதே பெண்கள் ஊரில் தாங்கள் விரும்பியவரோடு வாழ்வார்களா என்றால்.. விசாவுள்ள கலியாணம் கட்டினவனைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள். இப்படி விசாவிற்காக கலியாணம் கட்டி ஏமாந்த பெண்களும் உளர். ஏன் எதனால்...???! அவர்களின் பேராசைகளால் இல்லையா..???!

இது இட்டுக்கட்டுகை அல்ல.. இந்தப் பெண் ஒரு வகை என்றால் இப்படி இன்னும் பல வகைகள் உள்ளன என்பதைச் சொல்ல உங்கள் கருத்தும் உதவியது நன்றி. :D

எனது கருத்து எனவென்றால் இக்கவிதையில் கூறபட்ட பென் விசாவிற்காக திருமணம் முடித்து இருக்க மாட்டாள் என்பதுதான் எனது வாதம். :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா,

நீங்க காதலி,காதலரைப்பற்றி எழுதுங்க நியாயம். ஆனால் விபச்சாரிகளை ஒப்பிட்டு எழுதுவது தான் எனக்கு சரியாகப் படவில்லை. ஒட்டுமொத்த சமூகத்தில் ஆண்கள் நல்லவர்களாக இருப்பதற்கு அல்லது இருப்பது போல் காட்டுவதற்கு பாலியல் தொழிலாளர்கள் தான் காரணம்.(அது தான் நெடுக்ஸ் எல்லாரும் சொல்கிறார்களே இராமன் போல என்று(அப்படியாருமே இல்லைப்பா) அதற்கு இவர்கள் தான் காரணம்)

பாலியல் தொழிலாளர்கள் இல்லாவிடின் ஆண் சமுதாயத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்?? கூடவே எத்தனை குற்றச்செயல்கள் பெருகி இருக்கும். ஏன் இன்னும் சிங்கப்பூர் போன்ற சில நாடுகள் விபச்சாரத்தை அங்கீகரித்திருக்கிறார்கள் தனிய அன்னியச்செலாவணியை ஈட்டிக்கொள்வதற்காகவா இல்லையே????குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்காகவே.

நெடுக்கு,

பாலியல் தொழிலாளர்களிடம் போகாமல் விட்டால் அவர்கள் யாரையாச்சும் கட்டாயப்படுத்தி இழுக்கிறார்களா?

நீங்களாகத்தானே விரும்பிப் போகிறீர்கள் அப்படி இருக்க அவர்களை எப்படி கேவலமாக சித்தரிக்க முடியும்.??

செய்யும் தொழிலே தெய்வம் நெடுக்கு அண்ணா அவர்கள் நீங்கள் கொடுக்கும் காசுக்கு வேலை செய்கிறார்கள்.

எனவே அவர்களை எப்படி காதலியுடன் ஒப்பிட முடியும்??

அப்படிப்பார்த்தால் மேலே கவிதையில் சொன்ன காதலியைவிட விபச்சாரி மேலல்லவா?? :D

(ம்...விபச்சாரிக்காகவும் எழுதவேண்டி இருக்கு :lol: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து எனவென்றால் இக்கவிதையில் கூறபட்ட பென் விசாவிற்காக திருமணம் முடித்து இருக்க மாட்டாள் என்பதுதான் எனது வாதம். :D

தனக்கு விசா இருந்தும்.. விசா அற்றவனை மறந்து.. இன்னொருவனை மணக்க விசா காரணம் என்பதுதான் கவிதையின் தொனிப் பொருளும். தனக்கு விசா உள்ளவள்.. விசா அற்ற காதலனை இலகுவாக தன்னோடு அழைக்கலாம். ஆனால் அவள் செய்யவில்லை.

எமது சமூகத்தில் விசா உள்ள சென்ற தசாப்தங்களில் வந்த ஆண்கள் அநேகம் பேர் விசா அற்ற பெண்களுக்கு வாழ வைக்கப்பட்டார்கள். ஆனால் விசா இருந்த பெண்கள் எத்தனை விசா அற்ற ஆண்களுக்கு வாழ வைக்கப்பட்டார்கள். விசா உள்ள பெண்கள்.. தங்கள் விசாவுக்கு மேலதிகமான ஒருவனை தேடும் நிலைதான் இருக்கிறது. அதுதான் கவிதையில் தொனிக்கிறது.

விசாவுக்காக நேரடியாக உடலை காட்டுபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு விசா கிடைத்தும் இன்னொரு "விசாவுக்கு" தம்மை விற்பவர்களும் இருக்கிறார்கள்..!

இரண்டும் சரியான செயலா என்பதே கேள்வி..???! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா...

தாய்க்குலங்களுக்கு சிகப்பு குத்தி அழகு பார்த்திருக்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

நீங்க காதலி,காதலரைப்பற்றி எழுதுங்க நியாயம். ஆனால் விபச்சாரிகளை ஒப்பிட்டு எழுதுவது தான் எனக்கு சரியாகப் படவில்லை. ஒட்டுமொத்த சமூகத்தில் ஆண்கள் நல்லவர்களாக இருப்பதற்கு அல்லது இருப்பது போல் காட்டுவதற்கு பாலியல் தொழிலாளர்கள் தான் காரணம்.(அது தான் நெடுக்ஸ் எல்லாரும் சொல்கிறார்களே இராமன் போல என்று(அப்படியாருமே இல்லைப்பா) அதற்கு இவர்கள் தான் காரணம்)

பாலியல் தொழிலாளர்கள் இல்லாவிடின் ஆண் சமுதாயத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்?? கூடவே எத்தனை குற்றச்செயல்கள் பெருகி இருக்கும். ஏன் இன்னும் சிங்கப்பூர் போன்ற சில நாடுகள் விபச்சாரத்தை அங்கீகரித்திருக்கிறார்கள் தனிய அன்னியச்செலாவணியை ஈட்டிக்கொள்வதற்காகவா இல்லையே????குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்காகவே.

நெடுக்கு,

பாலியல் தொழிலாளர்களிடம் போகாமல் விட்டால் அவர்கள் யாரையாச்சும் கட்டாயப்படுத்தி இழுக்கிறார்களா?

நீங்களாகத்தானே விரும்பிப் போகிறீர்கள் அப்படி இருக்க அவர்களை எப்படி கேவலமாக சித்தரிக்க முடியும்.??

செய்யும் தொழிலே தெய்வம் நெடுக்கு அண்ணா அவர்கள் நீங்கள் கொடுக்கும் காசுக்கு வேலை செய்கிறார்கள்.

எனவே அவர்களை எப்படி காதலியுடன் ஒப்பிட முடியும்??

அப்படிப்பார்த்தால் மேலே கவிதையில் சொன்ன காதலியைவிட விபச்சாரி மேலல்லவா?? :D

(ம்...விபச்சாரிக்காகவும் எழுதவேண்டி இருக்கு :lol: )

எனக்கு விபச்சாரத்தினை ஒரு தொழில் என்று அழைப்பதில் உடன்பாடில்லை. நாம் அப்படி ஒரு விபச்சார கலாசாரத்தை ஆரம்பித்து வைத்திராவிட்டால் மனிதன் இன்னொரு வகையான வாழ்க்கை முறைக்கு தன்னை தயார்ப்படுத்தி இருப்பான்.

விபச்சாரிகள் இருக்கிற துணிவில்.. பல ஆண்கள் சொந்த மனைவியரையே ஒதுக்கி வைக்கும் நிலை இருக்கிறது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கும் விபச்சாரம் காரணமாக இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த சமூகத்திலும் விபச்சாரம் ஒரு கெளரவமான தொழிலாக நோக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு யதார்த்த வடிவில் நோக்க வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சமூகத்திலும் விபச்சாரம் ஒரு கெளரவமான தொழிலாக நோக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு யதார்த்த வடிவில் நோக்க வேண்டும். :lol:

ஒமோம் பகிரங்கமாக போர்டு மாட்டி தொழில் செய்தால் கொரவம் இல்லைத்தான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு விபச்சாரத்தினை ஒரு தொழில் என்று அழைப்பதில் உடன்பாடில்லை. நாம் அப்படி ஒரு விபச்சார கலாசாரத்தை ஆரம்பித்து வைத்திராவிட்டால் மனிதன் இன்னொரு வகையான வாழ்க்கை முறைக்கு தன்னை தயார்ப்படுத்தி இருப்பான்.

விபச்சாரிகள் இருக்கிற துணிவில்.. பல ஆண்கள் சொந்த மனைவியரையே ஒதுக்கி வைக்கும் நிலை இருக்கிறது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கும் விபச்சாரம் காரணமாக இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த சமூகத்திலும் விபச்சாரம் ஒரு கெளரவமான தொழிலாக நோக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு யதார்த்த வடிவில் நோக்க வேண்டும். :lol:

நெடுக்ஸ் அண்ணா,

கலாச்சாரம்,பண்பாடு எல்லாம் நாகரீகவளர்ச்சியில் மாறிக்கொண்டே இருக்கும்.

மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.

நான் இப்படி எழுதக்காரணம் நேற்றுமுந்தினம் இரவு சும்மா ரீ.வி பார்ப்பம் என்று சனல்(புரோக்கிராம்) ஸ்கான் பண்ணிட்டு இருக்கும் போது தமிழில் புதிய நிகழ்ச்சி என பார்த்த போது அது வயது வந்தோருக்கான சனல் தமிழ் பெண்கள் தமிழில் உரையாடுகிறார்கள் தங்கள் தெரிவுகள்,தொலைபேசி இலக்கம்,கட்டணம் முதல் சகல விடயங்களும் இருக்கு(முடிந்தால் நீங்களும் ஒருக்கா பாருங்கோ)

நெடுக்கண்ணா இதை எல்லாம் பார்க்கும் போது கலை,கலாச்சாரம்,பண்பாடு,நாகரீகம் எல்லாம்........???????

என்னத்தை சொல்ல?? :D

  • கருத்துக்கள உறவுகள்

Pழளவநன வுழனயலஇ 10:17 யுஆ

நாங்க கண்ணகி காலத்தில வாழவில்லை.இந்தக் காலம் அதுவும் ஈழத்தமிழருக்கு எதுவுமே நிச்சயமற்ற காலம்.கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி இலன்டன் வருவதை குற்றமாகக் கருத முடியாது.சின்ள வயதில் வருவது இனக்கவர்ச்சி அது காதலாக மாறலாம்.இல்லாமலும் போகலாம்.அவள் ஒரு நிச்சயமற்றவள் என்று பழகிய காலத்தில் புரிந்து கொள்ள முடியாது இருந்தது.அந்த ஆணின் குற்றமே!அந்த ஆணிற்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.தான் இலண்டன் வந்திருந்தால் தனது குடும்பத்தையும் மற்றவர்களையும் நல்ல முறையில் கவனிக்கக் கூடிய சந்தர்பத்தை அவளுக்காக இழப்பாரா?அவரை எப்படி அழைக்கலாம்?விபச்சாரிக்கு ஆண்பால் தமிழில் இல்லாதிருப்பதால் பெண்களைத் திட்டி கவிதை எழுத வசதியாக இருக்கிறதோ?நல்ல நாகரீகமான உவமானங்களை புகுத்தி எழுதுவதை விடுத்து மிகவும் காட்டமான பொருள் தரக் கூடிய வார்த்தைகளைப் புகுத்தியது சம்பந்தப் பட்டவரின் பெண்கள் மீதான ஒரு சைக்கோ தனமான வெறுப்புணர்வையே வெளிப்படுத்துகிறது.ஆகவே சிவப்புக்கு குத்துகிறேன்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பெண்களும் குற்றமற்றவர்கள் என்றோ அல்லது எல்லா ஆண்களும் குற்றவாளி என்றோ நான் சொல்லவில்லை...நீங்கள் எழுதிய கவிதையில் உள்ள காதலன்,காதலி பற்றி தான் நாங்கள் இங்கு விவாதிக்கிறோம்..அக் கவிதையில் அப் பெண் தனது தந்தைக்கு விசா கிடைத்தவுடனேயே தனது நண்பிகளுடன் சேர்ந்து வெளிநாட்டு கனவில் முழ்கி இருக்கிறார்,தன்னை ஒதுக்கியிருந்தார் என எழுதியிருக்கிறீர்கள்...ஆகவே அப் பெண் வெளிநாட்டுக்கு வந்த பின் அவரை ஏமாற்றவில்லை..இதே செயலை அந்தக் காதலன் செய்திருந்தாலும் நான் இதைத் தான் சொல்வேன்...ஒரு ஆணோ,பெண்ணோ வாக்கு கொடுத்து விட்டு ஏமாற்றினால் தான் அது பிழை[உதாரணமாக நான் வெளிநாடு போய் உன்னை கூப்பிடுகிறேன்]நான் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் அப் பெண்ணை எப்படி விபச்சாரி எனச் சொல்லாம்....நான் மேலே எழுதிய பதிவுகளில் கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை...கேட்டால் பெண்கள் விசாவிற்காக உடம்பை விற்றகவில்லையா என பதிலுக்கு எழுதுகிறீர்கள் ஒரு சிலர் செய்கிறார்கள் தான் சில ஆண்களும் தான் எத்தனையோ விதமாக ஏமாற்றுகிறார்கள் அதற்காக எல்லா ஆண்களும் கெட்டவர் என்றா நாங்கள் சொல்கிறோம்...ஆனால் நீங்கள் எழுதிய கவிதையில் அப் பெண் அப்படி செய்யவில்லை என்று தான் சொல்கிறேன்.

எனக்கு என்னவொன்றும் புரியவில்லை இங்கு கருத்தெழுதும் ஆண்கள் எதிராகத் தான் கருத்து எழுதுகிறார்கள் அப்படி இருந்தும் பெண்களுக்கு எப்படி இவ்வளவு மைனஸ் புள்ளிகள் வந்தது!

ரதி அக்கா..இங்கை சிவப்பு,பச்சை எல்லாம் சும்மா விளையாட்டுக்கு குத்தி வடிவு பார்க்கிறாங்க.

பெண்களுக்கு குத்தினால் அவங்க வைக்கிற பொட்டு போல ரொம்ப அழகா இருக்காம் அது தான் சிவப்பை அதிகமா குத்திறாங்க. :D

சரி இப்ப உங்களுக்கு ஒரு பச்சை குத்தி இருக்க்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு விசா இருந்தும்.. விசா அற்றவனை மறந்து.. இன்னொருவனை மணக்க விசா காரணம் என்பதுதான் கவிதையின் தொனிப் பொருளும். தனக்கு விசா உள்ளவள்.. விசா அற்ற காதலனை இலகுவாக தன்னோடு அழைக்கலாம். ஆனால் அவள் செய்யவில்லை.

எமது சமூகத்தில் விசா உள்ள சென்ற தசாப்தங்களில் வந்த ஆண்கள் அநேகம் பேர் விசா அற்ற பெண்களுக்கு வாழ வைக்கப்பட்டார்கள். ஆனால் விசா இருந்த பெண்கள் எத்தனை விசா அற்ற ஆண்களுக்கு வாழ வைக்கப்பட்டார்கள். விசா உள்ள பெண்கள்.. தங்கள் விசாவுக்கு மேலதிகமான ஒருவனை தேடும் நிலைதான் இருக்கிறது. அதுதான் கவிதையில் தொனிக்கிறது.

விசாவுக்காக நேரடியாக உடலை காட்டுபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு விசா கிடைத்தும் இன்னொரு "விசாவுக்கு" தம்மை விற்பவர்களும் இருக்கிறார்கள்..!

இரண்டும் சரியான செயலா என்பதே கேள்வி..???! :lol:

கவிதையின் பொருள் பற்றியே நான் பேசுகிறேன், சொற்பிழை இருக்கலாம், பொருளில் பிழை இருக்கலாகாது என்பதே சித்தனின் வாதம். விசாவை விடுத்து பணத்துக்காக, காரிற்க்காக,சொத்துக்காக, தாய்தகப்பனின் வற்புறுத்தலுக்காக, தகப்பன் பட்ட கடனுக்காக இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம், அதில் பிழையான காரண்ம் இருந்தால் அந்த பெண் தப்பானவள், சரியான காரணம் இருந்தால் தியாகி, காரணம் தெரிந்த பின் தான் சரி பிழை பேசமுடியும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

கலாச்சாரம்,பண்பாடு எல்லாம் நாகரீகவளர்ச்சியில் மாறிக்கொண்டே இருக்கும்.

மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.

நான் இப்படி எழுதக்காரணம் நேற்றுமுந்தினம் இரவு சும்மா ரீ.வி பார்ப்பம் என்று சனல்(புரோக்கிராம்) ஸ்கான் பண்ணிட்டு இருக்கும் போது தமிழில் புதிய நிகழ்ச்சி என பார்த்த போது அது வயது வந்தோருக்கான சனல் தமிழ் பெண்கள் தமிழில் உரையாடுகிறார்கள் தங்கள் தெரிவுகள்,தொலைபேசி இலக்கம்,கட்டணம் முதல் சகல விடயங்களும் இருக்கு(முடிந்தால் நீங்களும் ஒருக்கா பாருங்கோ)

நெடுக்கண்ணா இதை எல்லாம் பார்க்கும் போது கலை,கலாச்சாரம்,பண்பாடு,நாகரீகம் எல்லாம்........???????

என்னத்தை சொல்ல?? :D

அதுதான் கலாசாரம்.. பண்பாடு மாறிக் கொண்டிருக்கும் என்று சொல்கிறீர்களே. ஆனால் இந்த விபச்சாரக் கலாசாரம் மட்டும் ஏன் இன்னும் மாறாமல் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். அல்லது இல்லாது ஒழிக்க வேண்டும். அப்போ தான் ஆண் - பெண் உறவில் உண்மைத் தன்மை நிலைக்கும். சமூகம் பலமான கட்டமைப்பைப் பெறும் என்பது என் வாதம்..! :lol:

Pழளவநன வுழனயலஇ 10:17 யுஆ

நாங்க கண்ணகி காலத்தில வாழவில்லை.இந்தக் காலம் அதுவும் ஈழத்தமிழருக்கு எதுவுமே நிச்சயமற்ற காலம்.கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி இலன்டன் வருவதை குற்றமாகக் கருத முடியாது.சின்ள வயதில் வருவது இனக்கவர்ச்சி அது காதலாக மாறலாம்.இல்லாமலும் போகலாம்.அவள் ஒரு நிச்சயமற்றவள் என்று பழகிய காலத்தில் புரிந்து கொள்ள முடியாது இருந்தது.அந்த ஆணின் குற்றமே!அந்த ஆணிற்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.தான் இலண்டன் வந்திருந்தால் தனது குடும்பத்தையும் மற்றவர்களையும் நல்ல முறையில் கவனிக்கக் கூடிய சந்தர்பத்தை அவளுக்காக இழப்பாரா?அவரை எப்படி அழைக்கலாம்?விபச்சாரிக்கு ஆண்பால் தமிழில் இல்லாதிருப்பதால் பெண்களைத் திட்டி கவிதை எழுத வசதியாக இருக்கிறதோ?நல்ல நாகரீகமான உவமானங்களை புகுத்தி எழுதுவதை விடுத்து மிகவும் காட்டமான பொருள் தரக் கூடிய வார்த்தைகளைப் புகுத்தியது சம்பந்தப் பட்டவரின் பெண்கள் மீதான ஒரு சைக்கோ தனமான வெறுப்புணர்வையே வெளிப்படுத்துகிறது.ஆகவே சிவப்புக்கு குத்துகிறேன்.

புலவர் உங்கள் நிலைப்பாடு எனக்குப் புல்லரிக்க வைக்கிறது. லண்டனுக்கு வர இருக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று போதிக்கும் நீங்களே ஊரில் உள்ள மக்களைக் கொண்டு தமிழீழமும் வேண்டும் என்கிறீர்கள். இது முற்றிலும் சுயநல சைக்கோ தனத்தின் வெளிப்பாடு என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்கப்போவதில்லை. அதுபோக லண்டனுக்கு வந்தவளுக்கு தனக்குரியவனை லண்டனுக்கு எடுப்பதில் ஏன் அக்கறை இல்லை என்பதுதான் கேள்வியே. அவளுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் அவள் இன்னொருவனுக்கு அளிக்கக் கூடாது.. ஏன் இந்தக் கேள்வியை உங்கள் மூளை கேட்க மறுக்கிறது.. என்பதும் விநோதமாக இருக்கிறதே புலவர். உங்கள் சிவப்பு உங்களின் தெளிவற்ற நிலைப்பாட்டிற்றே ஆகும்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பெண்களும் குற்றமற்றவர்கள் என்றோ அல்லது எல்லா ஆண்களும் குற்றவாளி என்றோ நான் சொல்லவில்லை...நீங்கள் எழுதிய கவிதையில் உள்ள காதலன்,காதலி பற்றி தான் நாங்கள் இங்கு விவாதிக்கிறோம்..அக் கவிதையில் அப் பெண் தனது தந்தைக்கு விசா கிடைத்தவுடனேயே தனது நண்பிகளுடன் சேர்ந்து வெளிநாட்டு கனவில் முழ்கி இருக்கிறார்,தன்னை ஒதுக்கியிருந்தார் என எழுதியிருக்கிறீர்கள்...ஆகவே அப் பெண் வெளிநாட்டுக்கு வந்த பின் அவரை ஏமாற்றவில்லை..இதே செயலை அந்தக் காதலன் செய்திருந்தாலும் நான் இதைத் தான் சொல்வேன்...ஒரு ஆணோ,பெண்ணோ வாக்கு கொடுத்து விட்டு ஏமாற்றினால் தான் அது பிழை[உதாரணமாக நான் வெளிநாடு போய் உன்னை கூப்பிடுகிறேன்]நான் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் அப் பெண்ணை எப்படி விபச்சாரி எனச் சொல்லாம்....நான் மேலே எழுதிய பதிவுகளில் கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை...கேட்டால் பெண்கள் விசாவிற்காக உடம்பை விற்றகவில்லையா என பதிலுக்கு எழுதுகிறீர்கள் ஒரு சிலர் செய்கிறார்கள் தான் சில ஆண்களும் தான் எத்தனையோ விதமாக ஏமாற்றுகிறார்கள் அதற்காக எல்லா ஆண்களும் கெட்டவர் என்றா நாங்கள் சொல்கிறோம்...ஆனால் நீங்கள் எழுதிய கவிதையில் அப் பெண் அப்படி செய்யவில்லை என்று தான் சொல்கிறேன்.

எனக்கு என்னவொன்றும் புரியவில்லை இங்கு கருத்தெழுதும் ஆண்கள் எதிராகத் தான் கருத்து எழுதுகிறார்கள் அப்படி இருந்தும் பெண்களுக்கு எப்படி இவ்வளவு மைனஸ் புள்ளிகள் வந்தது!

கவிதையின் படி கூட அவர்கள் இருவரும் நெருங்கிய காதலர்கள். அதுவும் பள்ளிக்காலம் முதல் காதலர்கள் என்பதைக் காட்டி இருக்கிறேன். தனக்கு விசா கிடைத்ததை சொல்லி விடத் துடித்தவளுக்கு அது நாள் வரை தன்னோடே வந்தவனுக்கு அந்தப் பிரிவில் இருக்கும் வலி உணரத் தெரியவில்லை என்பதும்.. விசா அந்தளவுக்கு அவளை மதி இழக்கச் செய்திருக்கிறது என்பதும்.. போன பின் கூட அவனை பற்றிய எண்ணமின்றி வாழத் தலைப்பட்டிருக்கிறாள் என்பதும்.. அவளை விபச்சாரிக்கு நிகராக்கிக் காட்டுகிறது. விபச்சாரிதான் தினமும் வெவ்வேறு வாடிக்கையாளரோடு போவாள். அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதோடு அவள் அவர்களை மறந்தே விடுவாள். அந்த நிலையில் தான் இந்தக் காதலியும்.. விபச்சாரிக்கு பணம் இலக்கு. இவளுக்கு விசா இலக்கு. என்பதுதான் அப்படி காட்டச் செய்துள்ளது. இது யதார்த்தமாகவும் நிகழ்ந்தே வருகிறது..! :lol:

கவிதையின் பொருள் பற்றியே நான் பேசுகிறேன், சொற்பிழை இருக்கலாம், பொருளில் பிழை இருக்கலாகாது என்பதே சித்தனின் வாதம். விசாவை விடுத்து பணத்துக்காக, காரிற்க்காக,சொத்துக்காக, தாய்தகப்பனின் வற்புறுத்தலுக்காக, தகப்பன் பட்ட கடனுக்காக இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம், அதில் பிழையான காரண்ம் இருந்தால் அந்த பெண் தப்பானவள், சரியான காரணம் இருந்தால் தியாகி, காரணம் தெரிந்த பின் தான் சரி பிழை பேசமுடியும். :D

சித்து உங்களுக்குமான பதில் மேலே ரதிக்கு வழங்கியதில் அடங்கி இருக்கிறது. என்னதான் கட்டாய சூழல் எழுந்தாலும் காதலனோ காதலியோ ஒருவர் மற்றவரை ஒரு தரப்பின் விருப்பின்றி கழற்றி விடுவதை ஏற்க முடியாது. இரு தரப்பும் மனமொத்து பிரிந்து செல்வது வேறு. ஒருவனை நம்ப வைத்து ஏமாற்றிச் செல்வது மன்னிக்க முடியாத வலியையே ஏற்படுத்தும்..! அதை எதையும் காரணமாக்கி ஈடு செய்ய முடியும் என்று நம்பவில்லை..! இப்படிப் பலர் ஏமாற்றப்பட்டு வாடியதைக் கண்டிருக்கிறேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவொன்றும் புரியவில்லை இங்கு கருத்தெழுதும் ஆண்கள் எதிராகத் தான் கருத்து எழுதுகிறார்கள் அப்படி இருந்தும் பெண்களுக்கு எப்படி இவ்வளவு மைனஸ் புள்ளிகள் வந்தது!

எமது சமூகம் தாய்க்குலம் என்று பெண்களை மன்னிக்கக் கற்றுக் கொடுத்த அளவிற்கு பெண்கள் பற்றிய அறிவூட்டலை செய்யத் தவறிவிட்டது. பெண்கள் பற்றிய சரியான அறிவூட்டல் சமூகத்திற்கு அவசியம். அப்படி இருக்கும் என்றால் பலரின் வாழ்வும் நிர்கதியாகும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கும்..!

தாய்க்குலம் என்று வெளிப்படையாக ஆதரித்தாலும் பெண்களின் அநியாயத்தனமான செயற்பாடுகளை உள்ளூர எதிர்க்கும் மனநிலை ஆண்கள் இடத்தில் நிறைந்தே இருக்கிறது. ஆனால் தாய்மை என்பதைக் காட்டி பெண்கள் அதிலிருந்து இலகுவாக விலக்குப் பெற்றுவிடுவதும் காலம் காலமாக நடந்தேறி வருகிறது. இதனால் தான் பெண்களும் திரும்பத் திரும்ப ஒரே தப்பை சந்ததி சந்ததிக்கும் செய்கின்றனர். இது மாறனும்.. இல்ல மாற்றப்படனும்.! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களிலும் காத்திரமான கருத்துக்களை எழுதும் நெடுக்கர் பெண்களைச் சரியாய் படிக்கவில்லையோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.ஒரு மேசையில் அரைவாசி கிளாசுக்குள் தண்ணியிருப்பதை 2 வகையாகக் கூறலாம்.எதிர்மறையாகச் சிந்திப்பவர் அரைவாசி கிளாஸ் வெறுமையாய் இருக்கிறது என்பார்.அதையே நேர்மறையாய்; சிந்திப்பவர் அரைவாசி கிளாஸ் நிறைந்திருக்கிறது என்பார்.நெடுக்கர் எதிர்மறையாகச் சிந்திக்கிறார்.

புலவர் உங்கள் நிலைப்பாடு எனக்குப் புல்லரிக்க வைக்கிறது. லண்டனுக்கு வர இருக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று போதிக்கும் நீங்களே ஊரில் உள்ள மக்களைக் கொண்டு தமிழீழமும் வேண்டும் என்கிறீர்கள். இது முற்றிலும் சுயநல சைக்கோ தனத்தின் வெளிப்பாடு என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்கப்போவதில்லை. அதுபோக லண்டனுக்கு வந்தவளுக்கு தனக்குரியவனை லண்டனுக்கு எடுப்பதில் ஏன் அக்கறை இல்லை என்பதுதான் கேள்வியே. அவளுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் அவள் இன்னொருவனுக்கு அளிக்கக் கூடாது.. ஏன் இந்தக் கேள்வியை உங்கள் மூளை கேட்க மறுக்கிறது.. என்பதும் விநோதமாக இருக்கிறதே புலவர். உங்கள் சிவப்பு உங்களின் தெளிவற்ற நிலைப்பாட்டிற்றே ஆகும்..!

இலனண்டனுக்கு தன்னைக் கூப்பிடவில்லை என்ற கோபத்திற்காக கடுமையான வார்த்தைகளால் திட்டுவதா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலில் ஆண்களும் பெண்களும் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும்

ஏமாந்தவர்கள் அவர்கள் பக்க நியாயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பேசுவதும் இயல்பானதே.....

ஆனால் அதற்காக ஏமாற்றியவளை விபச்சரியுடன் ஒப்பிடுவது ஒரு நல்ல உதாரணம் இல்லை......

ஏமாற்றப்பட்டவனின் வலியை வேண்டுமானால் உங்கள் கவிதை தணிக்கும் ஆனால் ஒரு நல்ல கவிஞனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம்................ வலண்டைன் பரிசாக.. நெடுக்குவின் கவிதை நச்சுனு இருந்தது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமிக்கு என்சார்பில் ஒரு சிவப்பு புள்ளி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமிக்கு என்சார்பில் ஒரு சிவப்பு புள்ளி.

தாத்தா என்ன ஒரு மார்க்கமாவே அலையுறிங்க.. :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

நியாயமான கோரிக்கை. "வலென்ரைன் டே" கொண்டாட முடியாத வயித்தெரிச்சல் வார்த்தைகளாக வந்திருக்கிற மாதிரி இருக்கு.. பிரயோசனமான விசயங்களில் நேரத்தைச் செலவழித்திருக்கலாம்! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கோரிக்கை. "வலென்ரைன் டே" கொண்டாட முடியாத வயித்தெரிச்சல் வார்த்தைகளாக வந்திருக்கிற மாதிரி இருக்கு.. பிரயோசனமான விசயங்களில் நேரத்தைச் செலவழித்திருக்கலாம்! :unsure:

வலண்டைன் டே கொண்டாடுவதை பெரிதாக யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. அப்படி இருக்க இதில் வயிறு எரிய என்ன இருக்குது. இது கவி வரிகளின் யதார்த்ததை குறைத்துக்காட்ட சொல்லப்படும் அநாவசிய குற்றச்சாட்டுக்கள் என்றே நினைக்கிறேன். கவி வரிகள் உண்மையில் பிறருக்கு நடந்த சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவும் தான். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலண்டைன் டே கொண்டாடுவதை பெரிதாக யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. அப்படி இருக்க இதில் வயிறு எரிய என்ன இருக்குது. இது கவி வரிகளின் யதார்த்ததை குறைத்துக்காட்ட சொல்லப்படும் அநாவசிய குற்றச்சாட்டுக்கள் என்றே நினைக்கிறேன். கவி வரிகள் உண்மையில் பிறருக்கு நடந்த சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவும் தான். :)

அதுசரி வலன்ரையின் டேயை ஆரார் கொண்டாடுவினம்??????

பொடிபொட்டையளை வச்சிருக்கிறாக்கள் மட்டும்தானே!

மற்ற ஆக்களுக்கு பூத்தெரிச்சல் தினம் ஆ......டங்கணக்கா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வலன்ரையின் டேயை ஆரார் கொண்டாடுவினம்??????

பொடிபொட்டையளை வச்சிருக்கிறாக்கள் மட்டும்தானே!

மற்ற ஆக்களுக்கு பூத்தெரிச்சல் தினம் ஆ......டங்கணக்கா :)

நீங்களும் தான் வைச்சிருக்கிறியள்.. கொண்டாடுறியளோ. பொடிபெட்டை வைச்சிருக்கிறவை எல்லாம்.. உது கொண்டாடுறதில்ல. காசு மிஞ்சினாங்கள் செலவழிக்க வழி தெரியாட்டி கொண்டாடுவினம்..! இதுக்குப் போய்.. பூத்தெரிச்சல்.. தமிழ் ஆக்களுக்கு நியாயத்தை தேடத்தெரியாது.. உப்படி.. அடுத்தவனை திட்டிக்கொண்டு தாங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று கற்பனையில வாழுறது பழகிப்போட்டுது. அதுதான் முழு உலகிலும் தனித்துவிட்ட ஒரு இனமா நிக்குது. அதுக்க.........! :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.