Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு 12 எம்.பிகளுக்கு கல்தா இம்முறை இந்தியாவின் ஆலோசனையின் படி புதிய மொந்தையில் பழைய கள்ளு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதனையும்

அவர்கள் சுயநலமாகச்செயற்படுகின்றார்கள் என்பதனையும் வன்மையாக எதிர்க்கின்றேன்

தம்பி!

கூட்டணியின் கால கட்டத்தை பலவித கட்டங்களாக பிரித்துத்தான் பதில் கூறமுடியுமே தவிர பொதுப்படையாக அல்ல.

நாங்கள் விவாதித்துக் கொண்டிருப்பது அல்லது விமர்சித்துக் கொண்டிருப்பது இன்றைய கூட்டணியின் தலைமையையும் அதன் செயல் பாடுகளைப்பற்றியும் தான் என்பதில் தெளிவாக இருந்தால் இங்கு ஏற்கெனவே கருத்தெழுதியவர்கள் தங்களை தாங்களே திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

கூட்டணியின் கடந்தகால செயல்பாடுகளையும், தியாகங்களையும் நாங்கள் மதிக்கிறதாலை தான் அவர்களிடம் இருந்து ஏதோ நல்ல விடயங்களை எதிர்பார்க்கின்றோம், அவர்களை திசை மாறவேண்டாம் என்று வற்புறுத்துகின்றோம்.

அப்படி பாதை மாறும்போதுதான் எங்களது அதாவது தமிழ்த்தேசிய அபிமானிகளின் அடுத்த நகர்வு எப்படி அமையவேண்டும் என்பதைப்பற்றித்தான் கருத்து பறிமாறுகின்றோம் என்பது எனது கருத்து.

Edited by Valvai Mainthan

  • Replies 76
  • Views 4.6k
  • Created
  • Last Reply

புதுவையின் நண்பன் பொ.ஐ என்ற இந்துவின் மைந்தன் ஒருவருக்கும் சீற்றாம்.இது எனக்கு கசிந்த ரகசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி!

கூட்டணியின் கடந்தகால செயல்பாடுகளையும், தியாகங்களையும் நாங்கள் மதிக்கிறதாலை தான் அவர்களிடம் இருந்து ஏதோ நல்ல விடயங்களை எதிர்பார்க்கின்றோம், அவர்களை திசை மாறவேண்டாம் என்று வற்புறுத்துகின்றோம்.

அப்படி பாதை மாறும்போதுதான் எங்களது அதாவது தமிழ்த்தேசிய அபிமானிகளின் அடுத்த நகர்வு எப்படி அமையவேண்டும் என்பதைப்பற்றித்தான் கருத்து பறிமாறுகின்றோம் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தாங்கள் மதிப்பவராக இருந்தால்

பணம் வாங்கிவிட்டதாகவும் வக்காலத்து வாங்குவதாகவும் இந்தியாவுக்கு அடிமை சேவகம் செய்வதாகவும் தமிழ்மக்களை விற்கப்போவதாகவும் அதற்காகவே இன்று அவர்கள் தீவிரமாக உழைப்பதாகவும் எழுதப்படும் கருத்துக்களை ஏன் மறுக்கவில்லை

மாறாக நாங்கள் சொல்கின்றோம்

நாங்கள் சொல்வதை கேளுங்கள் திருந்துங்கள் என திருட்டுப்பட்டமும் துரோகப்பட்டமும் நீங்களாகவே வழங்கிவிட்டு எப்படி எமக்காக உழையுங்கள் என்று கேட்கின்றீர்கள்.....

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம், இதற்குரிய காரனம் கூட்டணியினர் பல விடயங்களை மக்களுக்கு தெரிவிக்கின்றார்கள் இல்லை.

ஒவ்வொரு உறுப்பினர்களும் மாறுபட்ட அறிக்கைகளையும், தெளிவில்லாத கருத்துக்களையும் வெளியிடுகின்றனர்.

இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையுமே மக்கள் மத்தியில் சந்தேகத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

முதலில் தாங்கள் தெளிவுபடவேண்டும் அதற்குப்பின் மக்களை தெளிவாக்க முயற்சிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் குழப்பம்

காரணங்கள்.

1.சம்பந்தரின் இந்திய நட்புறவு

2.தனது சொந்தக்கருத்தை? மற்றய உறுப்பினர்களிடம் திணிப்பது

3.கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர்களின் கருத்தை அவமதித்தல்.

4.இளையவர்களை முன் வரவிடாமல் அடக்குமுறை செய்தல்

5.ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாமை

ஒற்றுமைக்கான வழிகள்

1.இரட்டை ஆட்சி வலியுறுத்தல்

2.கூட்டமைப்பிற்கு ஒரு மத்திய குழு

3.இளையோருக்கு முன்னுரிமை

4.சம்பந்தர் இவற்றை ஏற்காவிட்டல் தலைமைப்பதவியிலிருந்து அவரை அகற்றல்

வாத்தியர்

.............

Edited by vathiyar

கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதனையும்

அவர்கள் சுயநலமாகச்செயற்படுகின்றார்கள் என்பதனையும் வன்மையாக எதிர்க்கின்றேன்

அப்படி எண்டால் அவர்கள் செய்த நன்மைகளையும் பொது சேவை செய்ததுகளை பட்டியல் இட உங்களாலை முடியுமா...???

எங்கை பாப்பம் எடுத்து விடுங்கோ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் போக்கு சரியான திசையில் இல்லை.இன்று கூட்டமைப்பை நாம் சரியான திசையில் பயணிக்க வைக்கத் தவறுமோமாயின் எமது எதிர்காலம் இன்னும் 5 வருடங்களுக்கு பின் தள்ளப்படும் 5 வருடம் முடிய எல்லாமு; மறந்து போய் அடிமை வாழ்வுக்கு பழக்கப்பட்டு போய் விடுவோம்.தாயகத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகம் இந்தக் கிழட்டு அரசியல் வாதிகளால் மறக்கடிக்கப்படும்.கூட்டமைப்பு ஒதுக்கி வைக்கும் எம்பிமார்களில் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் கிசோர் கனகரெத்தினம் தவிர மற்றயவர்களில் கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரைச் சேர்த்து துடிப்பும் திறமையும் உள்ள இளைஞர்களைச் சேர்த்து புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.யாழ் மட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விடயத்தில் தீவிரம் காட்டவேண்டும்.இன்று செய்யத் தவறின் 5 வருடம் கவலைப்பட நேருடும்.அதற்காக உடனடியாக கூட்டமைப்பைக் கலைக்க வேண்டிய தில்லை. அவர்களிடம் பேசி இந்தியாவின் தாளத்திற்கு ஆடுவதை நிறுத்தச் சொல்ல வேண்டும்.ஈபிடிபியில் இருந்து தமிழர் விரோத நடவடிக்கைகளைச் செய்தவர்களை இந்தியாவின் ஆலோசனைப்படி உள்வாங்குவதை தவிர்க்கச் சொல்ல வேண்டும்.தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற திம்புக்கோட்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும்.இதை மறுத்து ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் யாராயிருந்தாலும் (சம்பந்தாராய் இருந்தாலும்)வெளியேற்ற வேண்டும்.இதெல்லாம் நடக்காத பட்சத்தில் மாற்று இயக்கம் காணுவது தவிர்க்க முடியாதது.ஏனெனில் வாக்களிப்பு வீதம் குறையுமாயின் விகிதாசார முறைப்படி ஈபிடிபிக்கு கணிசமான ஆசனங்களும் ஏன் சிங்களக் கட்சிகள் கூட ஒரு சில ஆசனங்கள் பெறு; சாத்தியம் கூறுகள் உருவாகலாம்.

உங்களால் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் நடைமுறைச் சாத்தியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாராட்டுக்கள்!!!

துரோகிகளையும் உற்சாகமாக வேலை செய்ய தெரியாதவையையும் சம்பந்தன் வெளியேற்றுகிறார்...

உண்மையாகத்தான் இந்த சந்திரகந்தன்(மாமனிதர் சந்திர நேருவின் மகன்)பல தடவை இரகசியமாக மகிந்தவை சந்தித்திருக்கிறார் அத்துடன் இவர் திருமணம் முடித்திருக்கும் சிங்கள பெண்ணின் அண்ணா ஒரு உயர் பதவி வகிக்கும் புலநாய்வு அதிகாரி,இந்த பெண்ணின் அப்பா ஒரு கடற்படை வீரர்,இவ்வாறான ஒரு பின் புலம் உள்ள ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாமா...

அத்துடன் அம்பாரை மாவட்டத்தில் இம்முறை சரியாக வேட்பாளர் தெரிவு செய்யப்படாவிட்டால் ஒரு ஆசனம் நிச்சய்மாக இழக்கப்படும்,ஏனேனில் கருணா குழுவினரால் மக்கள் விரும்பியோ/ விரும்பாமலோ சில வாக்குகளை அவர்களால் எடுக்க முடியும்.

இங்கை பிரச்சினை ஜனாதிபதியோடை பேசினது இல்லை... மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த நீங்கள் பாராளுமண்றத்துக்கு அந்த மக்களை பிரதிநிதிப்படுத்துபவராக இருந்தால் ஆட்ச்சியில் இருப்பவர்களை சந்தித்துதான் இருக்க முடியும்... அங்கை மக்கள் அத்திவாரமே ஆடிப்போய் இருக்கும் போது ஆட்ச்சியிலை இருப்பவர்களோடை மோதல் எண்டு முகத்தை திருப்பி கொண்டு இருப்பது மக்களுக்கு எதையும் கொண்டு வராது...

நீங்கள் விரும்புறீயளோ இல்லையோ உண்மை என்ன எண்டால் வடக்கு கூட்டமைப்பு உறுப்பினர்களை விட கிழக்கின் உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட்டு மக்களுக்கு ஓரளவாவது செய்து இருக்கிறார்கள்...

அதிலை என்ன கூட்டமைப்பிலை இருந்து இப்ப மக்களுக்காக ஓரளவாவது எண்டாலும் வேலை செய்தவர்கள் பலர் விலக்க படுகிறார்கள்... கூட்டமைப்பின் பிரச்சினை ஏது எண்டால் தலைமை பண்பும் தனித்து முடிவெடுக்கும் ஆக்கள் கூட்டமைப்புக்குள் தேவை இல்லை என்பது... தாங்கள் சொல்வதை கேட்டு ஆடும் ஆக்கள் அவர்களுக்கு போதும்... ஆனால் தமிழ் மக்களுக்கு அதனாலை பயன் இல்லை...

அது சரி உங்க இலண்ண்டனில இருந்தும் 2,3 பெட்டிகடைக்காரர் தொழில் அதிபர் எண்டு சொல்லி கொண்டு ராஜபக்சே கூட்டனியில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்க போட்டினம் எண்டு கேள்வி. பேப்பரிலும் வந்த்திருக்காம்.

யார் அந்த கோடாரிகள் எண்டு எங்களுக்கும் தெரிந்தவை அறிமுகப்படுத்துங்களேன்.

சம்பந்தன் ஒரு அறிக்கை விட்டிருந்தார் ,அரசாங்கமும் சில ஊடகங்களும் கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்காக முயற்சி செய்து வருவதாக .வேட்பாளர்களை அறிவிக்க முதலே ஏன் நாம் கருத்து சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஒரு அறிக்கை விட்டிருந்தார் ,அரசாங்கமும் சில ஊடகங்களும் கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்காக முயற்சி செய்து வருவதாக .வேட்பாளர்களை அறிவிக்க முதலே ஏன் நாம் கருத்து சொல்ல வேண்டும்

ஊர் இரண்டுபட்டால்தானே...

இங்கு கூத்தடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எண்டால் அவர்கள் செய்த நன்மைகளையும் பொது சேவை செய்ததுகளை பட்டியல் இட உங்களாலை முடியுமா...???

எங்கை பாப்பம் எடுத்து விடுங்கோ...

கனக்க எழுதத்தேவையில்லை

கடைசி நிமிடம்வரை...

தலைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டார்கள்

கூட்டமைப்பில் குழப்பம்

காரணங்கள்.

1.சம்பந்தரின் இந்திய நட்புறவு

2.தனது சொந்தக்கருத்தை? மற்றய உறுப்பினர்களிடம் திணிப்பது

3.கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர்களின் கருத்தை அவமதித்தல்.

4.இளையவர்களை முன் வரவிடாமல் அடக்குமுறை செய்தல்

5.ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாமை

ஒற்றுமைக்கான வழிகள்

1.இரட்டை ஆட்சி வலியுறுத்தல்

2.கூட்டமைப்பிற்கு ஒரு மத்திய குழு

3.இளையோருக்கு முன்னுரிமை

4.சம்பந்தர் இவற்றை ஏற்காவிட்டல் தலைமைப்பதவியிலிருந்து அவரை அகற்றல்

உண்மை தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு இப்போது இருப்பதுபோன்றே வருங்காலத்திலும் இருக்கப்போகின்றது என்றால்,

அதனுடைய இப்போதைய நிலைப்பாடே எதிர்காலத்திலும் தொடரப்போகின்றது என்றால்,

இந்தியாவே தமிழர்களின் உரிமைகளையும்,விடுதலையையும் எடுத்துத்தரப்போகின்றது என்ற அதன் பகல்கனவு தொடரப்போகின்றது என்றால்,

கூட்டமைப்பு என்ற ஒன்றே தேவையில்லை.

அடிவருடி அரசியல்தான் இனிச்செய்யப்போகினம் என்றால் கூட்டமைப்பு எதற்காக,,,?

இந்தியவெளிவிவகார பேச்சாளர்போல சம்பந்தன் இனியும் தொடருவாரானால் எதற்காக அவரும் கூட்டமைப்பும்...??

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உங்க இலண்ண்டனில இருந்தும் 2,3 பெட்டிகடைக்காரர் தொழில் அதிபர் எண்டு சொல்லி கொண்டு ராஜபக்சே கூட்டனியில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்க போட்டினம் எண்டு கேள்வி. பேப்பரிலும் வந்த்திருக்காம்.

யார் அந்த கோடாரிகள் எண்டு எங்களுக்கும் தெரிந்தவை அறிமுகப்படுத்துங்களேன்.

இம்முறை அருளர் அருள்பிரகாசம் ஈரோஸ் சார்பில் யாழில் கேட்கப் போறாராம் என அறிந்தேன்...ஒர் மாற்றுக்கருத்து ஊடகத்தில் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில பி;.ரி.எவ் காரருக்கும் சிறீலங்காத் தேர்தல் திருவிழாவிலை தீர்த்தமாட விருப்பம்.

அதுக்காக மறைமுகமாக டக்கியோடையும் கதைக்கினம்.

எல்லாம் அந்த ஸ்கந்தனுக்கு (முருகனைத்தான் சொன்னேன்) வெளிச்சம்.

கூட்டமைப்பு இப்போது இருப்பதுபோன்றே வருங்காலத்திலும் இருக்கப்போகின்றது என்றால்,

அதனுடைய இப்போதைய நிலைப்பாடே எதிர்காலத்திலும் தொடரப்போகின்றது என்றால்,

இந்தியாவே தமிழர்களின் உரிமைகளையும்,விடுதலையையும் எடுத்துத்தரப்போகின்றது என்ற அதன் பகல்கனவு தொடரப்போகின்றது என்றால்,

கூட்டமைப்பு என்ற ஒன்றே தேவையில்லை.

அடிவருடி அரசியல்தான் இனிச்செய்யப்போகினம் என்றால் கூட்டமைப்பு எதற்காக,,,?

இந்தியவெளிவிவகார பேச்சாளர்போல சம்பந்தன் இனியும் தொடருவாரானால் எதற்காக அவரும் கூட்டமைப்பும்...??

நிச்சயமாக

கூட்டமைப்பு அப்படித்தான் இருக்கபோகிறது. அதுதான் அவர்களின் தெரிவு. நாங்கள் எங்களின் தெரிவாக கூட்டமைப்பை நிராகரிப்போம். அடிவருடி அரசியல் தேவையில்லை.

ஆனால் எங்களின் பிரதிநிதிகளாக வேறுயாரும் போகாமல் இருக்கு நாங்கள் யாராவது ஒரு பொருத்தமான தரப்பை அப்படி பொருத்தமான தரப்பாக இப்போதைக்கு ஒன்றும் இல்லாவிடாலும் ஒன்றை உருவாக்கி தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக அனுப்புவோம்.

அங்கு போன அவர்கள் எங்களுக்கு ஏதேதோ எல்லாம் செய்யவெளிக்கிட்டு அரசாங்கத்தோட முரண்பட்டு ஆர்ப்பாட்டம் செய்து அடிவாங்கி நாலைந்து உறுப்பினர்களை இழந்து இறுதியில் வேறுவழியில்லாமல் அவர்களும் அடிவருடிகளாக இருந்தால் என்ன செய்வது?

மீண்டும் ஒரு கால இடைவெளிக்குப்பின்னர் அந்த பொருத்தமான தரப்பை தூக்கி குப்பையில் போட்டு இன்னொன்றை தேடுவோம்.

இப்பிடித்தான் கூட்டணியாக இருந்த மிதவ்வதக் கட்சி ஒன்று மேலும் சில அமைப்புகளுடன் புலிகளின் ஆசீர்வாதத்துடன் கூட்டமைப்பானது. வரலாறு தானாகவே மீள்கின்றதா அல்லது நாங்கள் மீட்கிரோமா தெரியவில்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாக நாமே காரணம்

இன்றும் எமது நிலையை உணராது

புடுங்குவோம் என்ற வீராப்புகளுக்கு பஞ்சமில்லை

ஆனால் அதற்கான எந்த திட்டங்களோ பலமோ எம்மிடமில்லை

ஆனால் உள்ளதை இல்லாமல் செய்வதில் மட்டும் மும்மரமாக உள்ளோம்

தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கூட்டமைப்பைப் பிரிக்க விரும்பவில்லை.ஆனால் கூட்டமைப்பின் தலமைப்பீடம் இந்தியாவின் ஆட்டத்திற்;கு ஆடுவதால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணி தமிழ் மக்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.எமக்கான அரசியல் பலம் என்று கூட்டமைப்பை நம்பியிருக்க இந்தியா கூட்டமைப்பைப் பயன் படுத்தி தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைக் காயடிக்க முனைகிறது.அதானால் ஏற்படப் போகும் விளைவுகளைக் கருத்தில் கொண்டே எல்லோரும் கூட்டமைப்பை விமர்சிக்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில் அதிக விருப்பு வாக்கைப் பெற்ற கஜேந்திரனைக் கூட கழட்டி விட முனைவது தமிழ் மக்களின் விருப்புக்கு அவர்கள் மதிப்பளிக்காததையே சொல்கிறது.அதாவது இந்தியாவின் ஆணைப்படி புலிகளால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப் பட்டவர்களை வெளியேற்ற முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது.தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் உறுதியாக இருப்பவர்களைப் புறக்கணித்து பொம்மைகளை வேட்பாளர் ஆக்குவது தமிழர்களை படுகுழியில் தள்ளும் அப்படியான ஒரு நிலமை வராமல் தமிழர்கள் தங்கள் தலமையைத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலமையில் புதிய இளைய அணி ஒன்று தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்கான முழுப்பழியும் தற்போதைய கூட்டமைப்பை வழி நடத்துபவர்களின் மேலேயே விழும்.ஆனந்தசங்கரியின் நிலையே ஏற்படும் அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கூட்டமைப்பு மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துபரிமாறி ஆராய்ந்து அலசுவது ஒரு வழியில் நல்லதுதான், முதலில் சொன்னார்கள் மிகிந்தாவுடன் கூட்டமைப்பு கூட போகிறது என்று, அதற்கு எத்தனை அலசல், ஆராட்சி,கருத்து முறுகல் வந்தன, அது பொய்யான போது எல்லாம் பனிபோல் கரைந்து விட்டது, சில வேளை இந்த கருத்துகள் கருத்தில் கொள்ளப்பட்டே அந்த முடிவு எடுக்கபட்டாதாய் இருந்தால், இப்போது பரிமாறும் கருத்துக்களும் கருத்தில் கொள்ளபடும்தானே, ஆகவே இதுவும் நல்லதுக்கே, கஜேந்திரனுக்கு சீட்டு கிடையாது என கூறப்படுவது தர்கத்துக்குரியதுதான், இந்த கருத்துக்கள் கருத்தில் கொள்ளப்பட்டால் நல்லமுடிவே எடுக்கப்படும், ஏற்கபடும் முடிவு வரும்போது இப்போது கருத்தாடும் கருத்துக்கள் கரைந்து விடும், இப்படி நடந்தால் இதுதான் நடக்கும் என முதலிலியே கருத்தாடுவது நன்மையே, நல்லமுடிவை எடுபதற்க்கு, இக்கருத்துகளும் காரணமாக இருக்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துக்களை அவர்கள் கருத்தில் எடுப்பதற்கு அவர்களை ஆட்டுவிக்கும் சக்தி உடன்படாது.எங்களுக்கு கூட்டமைப்பு உடையாமல் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலைச் சந்தித்தால் தமிழ்மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.ஆனால் நடைபெறும் நிகழ்வுகள் எம்மை அதலபாதாளத்திற்கு தள்ளி விடுமோ என்றே அச்சப்படுகிறோம்.(இங்கே தகுதியான வேட்பாளர் என்பது கொள்கைப் பிடிப்பும் வேகமும் விவேகமும் கொண்ட இளையவர்களையே குறிக்கிறேன்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து கருத்துக்களும் கருத்தில் கொள்ளபடும் என்றே கருதுகிறோம், கூட்டமைப்புக்கு இப்போது புலிகள் இல்லாத நிலமை கிட்டதட்ட லொட்டொ அடிச்ச மாதிரி, புலிகள் எவ்வளவு அர்பணிப்பு செய்து சேர்த்த மக்களின் ஆதரவு அவர்களுக்கு இலவசமாக கிடைத்து இருக்கு, கீரக்கடைக்கு எதிர்கடை போல இன்னொரு கடையை உருவாகுவது பற்றி அவர்கள் பலத்து யோசிப்பார்கள், அத்தோடு எதிர்கடை வந்தால் மக்கள் எப்போதும் ஞயத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள், மக்கள் பலம் போனபின்னர் கூட்டனி இருந்து என்ன இல்லாவிட்டால் என்ன, தேசிபட்டியலில் தேச புனர் நிர்மான அமைச்சும்,இந்துகலாச்சார அமைச்சும் கொடுக்க இவர்கள் என்ன புலிகளை காட்டிக்கொடுத்தார்களா? ஆகவே பலமாக சிந்திப்பார்கள், சிந்தித்து சிறந்த முடிவை எடுப்பார்கள், இப்போது சிந்தியாது விட்டால், அவர்களது எதிகாலம் சூணியமே.

ஆட்டுவிக்கும் சக்திகள் ஒப்புகொள்ளாது என்பது உண்மையே, அச்சக்திகள் சரத்தை ஆதரித்ததையும் ஒப்புகொள்ளவில்லை, இவர்கள் என்ன சொன்னார்கள், மக்கள் விருப்புகிறார்கள் அதனால் அந்த முடிவை எடுத்தோம் என்று சமரசம் பேசிஒப்புகொள்ள வைத்தர்கள், மக்கள் பலம் என்பது அடிப்படையானது, மக்கள் பலத்திற்கு பின்னர்தான் எந்த சக்திகளும், மக்களை புறக்கணித்து ஆட்டுவிக்கும் சக்திகளுக்கு முதல் உரிமை கொடுத்தால் அசாமில்தான் போய் வாழ வேண்டி வரும், இது அனைவருக்கும் வரலாறு சொல்லிதந்த பாடம். கருனா, டக்கி போன்றவர்கள் ஏழு வோட்டுக்கு நாய்பேயாய் இழுவட்டு சிங்கி அடிப்பது இந்த வாரலாற்றுபடியே.

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.