Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் - ஆயுதப் போராட்டம் - மூன்றாவது யோசனை

Featured Replies

எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள்.

அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன்.

என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தக் கூடாது” இப்படியான கோரிக்கைகளோடு மூடநம்பிக்கைகளை வளர்க்கின்ற கட்டுரைகளையும் எழுதக் கூடாது என்பது போன்ற என்னுடைய வழமையான நிபந்தனைகளையும் கூறினேன். அவர்களும் சம்மதித்திருக்கிறார்கள். உண்மையிலேயே எழுதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னோடு தொடர்பு கொண்ட இன்னும் ஒருவர் செய்திகளை எழுதித் தருவதாகக் கூறினார். வெப்ஈழத்தை ஆரம்பித்த பொழுது தொடர்ந்து செய்திகளையும் இணைத்து வந்தேன். செய்திகளை முந்தித் தருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தேன். போர் ஆரம்பித்த பொழுது செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் தருகின்ற பணியையும் மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு நேரத்தில் வன்னியில் இருந்து போர் குறித்த செய்திகளை பெறுவது கடினமாகிப் போனது. தமிழர் தரப்பில் பல நேரங்களில் மௌனம்தான் நிலவியது. தமிழர்களின் செய்தி ஊடகங்களை விட “டிபென்ஸ்.எல்கே” இணையத்தளம் நம்பகரமானதாக மாறிப் போன துர்ப்பாக்கிய நிலையும் நேர்ந்தது. இப்படியான ஒரு நேரத்தில் செய்திகளை இணைப்பதை நிறுத்திக் கொண்டு கட்டுரைகளை மட்டும் வெப்ஈழத்தில் வெளியிட்டு வந்தேன்.

தற்பொழுது ஒருவர் செய்திகளை தொடர்ந்து வழங்குவதாக கூறியிருக்கிறார். போர் நின்று போய் ஸ்கோர்களும் வெளிவராத ஒரு நிலையில் மக்கள் செய்திகளை ஆர்வமாக வாசிப்பார்களா என்பது தெரியவில்லை. ஆயினும் இலங்கைத் தீவில் அரசியற் களம் சற்று சூடு பிடித்திருப்பதாலும், நான் கட்டுரைகள் எழுதுவதற்கு எடுக்கின்ற இடைவெளிகளை நிரப்பும் என்பதனாலும் செய்திகளை தருவதாக அவர் சொன்னதை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

………………………..

முள்ளிவாய்க்காலில் போர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் நான் என்னுடைய தொடர்பு வட்டத்திற்குள் விவாதித்த மூன்று யோசனைகளைப் பற்றி மீண்டும் தொடர்கின்றேன். இதிலே புறநிலை அரசு ஒன்றை அமைக்கின்ற திட்டத்தைப் பற்றித்தான் பலர் ஆர்வமாகப் பேசினார்கள். இந்த யோசனை பலருக்குள் முன்னமேயே இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இரண்டாவது யோசனையாகிய “குடியேற்றத் தமிழீழ நாடு” அமைப்பது பற்றி பலர் ஆதரவாகப் பேசினாலும் அதை நடைமுறையில் செயற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பதாகவே அவர்கள் கருதினார்கள்.

“குடியேற்றத் தமிழீழ நாடு” பற்றி நான் கடந்த முறை தந்த இணைப்பை படிக்காதவர்களுக்கு இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். பரப்பளவில் பெரிதாக இருக்கின்ற மூன்றாம் உலக நாடு ஒன்றிடம் “சிங்கப்பூர் அல்லது யாழ் குடா” அளவிற்கான ஒரு சிறிய நிலப் பகுதியை வாங்கி, அதில் குறிப்பிட்டளவிலான தமிழர்கள் குடியேறி, அங்கேயிருந்தபடி தமிழீழத்தை மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்வதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தத் திட்டம்.

இது பற்றி கடந்த கட்டுரையில் தந்திருக்கின்ற இணைப்பில் பலர் பலவிதமான தகவல்களை தந்திருக்கிறார்கள். ஒருமுறை கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இப்படி முதலாவது யோசனைக்கு வரவேற்பும், இரண்டாவது யோசனைக்கு கொள்கை அளவிலான ஆதரவும் இருந்த நிலையில் முன்றாவது யோசனைக்கு என்னுடைய நட்பு வட்டாரத்தில் பெரிதளவான வரவேற்பு இருக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்கள். இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

இந்த மூன்றாவது யோசனை பற்றி எனக்குள்ளேயே நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தன. தமிழினம் போரினால் பேரழிவை சந்தித்திருக்கின்ற ஒரு நிலையில் இதைப் பற்றி பேசலாமா என்கின்ற தயக்கம் எனக்குள் பெரியளவில் அன்றைக்கு இருந்தது. இன்றைக்கும் இருக்கின்றது. எங்கே என்னை ஒரு “மொக்கன்” என்று நினைத்து விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது.

சரியோ, தவறோ, சாதகமானதோ, பாதகமானதோ, நல்லதோ, கெட்டதோ, எதுவாயினும் தமிழீழப் போராட்டத்தை உயிரோடு வைத்திருக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய யோசனைகளும் விவாதங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற இன்றைய நிலையில் என்னுடைய தயக்கங்களை தள்ளி வைத்து விட்டு அந்த மூன்றாவது யோசனை பற்றியும் சொல்கிறேன்.

புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற குடியுரிமை பெற்றுள்ள தமிழ் இளைஞர்கள் அந்தந்த நாடுகளில் இராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சில நாடுகளில் கட்டாய இராணுவப் பயிற்சி என்பது நடைமுறையில் இருக்கின்றது. சில நாடுகளில் சுயவிருப்போடு குறிப்பிட்ட கால இராணுவப் பயிற்சி எடுப்பதற்கான வழிவகைகள் இருக்கின்றன. இளைஞர்கள் இராணுவப் பயிற்சி எடுத்திருப்பதை பெரும்பாலான நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.

உதாரணமாக ஜேர்மனியை எடுத்துக் கொள்வோம். ஜேர்மனியில் கட்டாய இராணுவப் பயிற்சி நடைமுறையில் இருக்கின்றது. பதினெட்டு வயது நிரம்பிய ஜேர்மனிய இளைஞர்கள் இராணுவப் பயிற்சி எடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவப் பயிற்சி எடுக்க விரும்பாதவர்கள் அதற்கான காரணங்களை விளக்கி ஒரு மனு கொடுப்பதோடு, ஒரு சமூக சேவை சார்ந்த நிறுவனம் ஒன்றில் தொண்டாற்றி இராணுவப் பயிற்சி எடுப்பதிலிருந்து விலக்குப் பெறலாம்.

இராணுவப் பயிற்சி எடுப்பதலிருந்து விலக்குப் பெறுவதற்கான மனுக்களை குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞர்களுக்கு பலமுறை நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன். “என்னுடைய மதம் ஆயுதம் ஏந்துவதை தடுக்கிறது, எனக்கு காந்தி மீதும் அகிம்சை மீதும் பெரும் பற்று இருக்கிறது” என்று பொய்களை அடுக்கியபடி அந்த மனுவை எழுத வேண்டும்.

இப்பொழுது அப்படியான மனு ஒன்றை எழுதித் தரும்படி வருகின்ற இளைஞர்களிடம் இராணுவப் பயிற்சி எடுப்பது பற்றி சிந்திக்கும்படி மெதுவாக கூறி வருகின்றேன்.

மீண்டும் விடயத்திற்கு வருகிறேன். உலகில் பல இனங்களும் மதங்களும் சில செயற்பாடுகளை ஒரு கடமையாக மேற்கொண்டு வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் எமது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெறுவதை ஒரு இனக் கடமையாக ஆக்குவோம். பதினெட்டு வயது நிரம்பிய தமிழ் இளைஞர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் என்றாலும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்பதை ஒரு சட்டமாக ஆக்குவோம்.

கட்டாய இராணுவப் பயிற்சி நடைமுறையில் உள்ள நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மனுப் போட்டு சமூக சேவை செய்யப் போகாது இராணுவப் பயிற்சியை எடுக்கட்டும். சுய விருப்போடு படைப் பயிற்சி எடுக்கும் வசதி உள்ள நாடுகளில் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து பயிற்சியைப் பெற்றுக் கொள்ளட்டும். இந்த வசதிகள் ஏதும் இல்லாத நாடுகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இணைந்து பயிற்சிகைளப் பெற்றுக் கொள்ளட்டும்.

தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நிகழ்த்திய பேரழிவை எமது இளைஞர்களுக்கு சொல்லி சொல்லி தமிழீழக் கனவோடு அவர்களை வளர்த்தெடுத்து இராணுவப் பயிற்சி பெற வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் உலகம் உள்ள தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஒன்று கூடி தமிழீழம் அமைக்கின்ற உறுதிமொழியை எடுப்போம்.

இப்பொழுது ஒரு அண்ணளவான கணக்கைப் பார்ப்போம். ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். இதில் ஒரு இலட்சம் பேர் இளைஞர்களாக இருப்பார்கள். இதில் ஒரு பத்தாயிரம் பேர் இராணுவப் பயிற்சி பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பத்து ஆண்டுக்குள் இராணுவப் பயிற்சி பெற்ற ஐம்பதினாயிரம் இளைஞர்களை உருவாக்க முடியும்.

இதில் பெரும்பாலானவர்கள் அடிப்படையான இராணுவப் பயிற்சிகளைப் பெற்றிருக்க, குறிப்பிடத்தக்க அளவினர் நிச்சயமாக அதையும் தாண்டி உயர் பயிற்சிகளும் பெற்று, அதிகாரிகள் தரத்திலான நிலையையும் அடைந்திருப்பார்கள். சிலர் கள அனுபங்களையும் பெற்றிருப்பார்கள். தரைப்படை, கடற்படை, வான்படை போன்றவற்றில் அனுபவம் வாய்ந்தவர்கள் உருவாகியிருப்பார்கள்.

சரி! இவர்களை கொண்டு சிறிலங்கா மீது படையெடுப்பதா அடுத்த திட்டம் என்று யாரும் அவசரப்பட்டு கேட்க வேண்டாம். பொருளாதார வளத்தோடு “இராணுவப் பயிற்சி பெற்ற பெரும் இளைஞர் படை” என்ற பலத்தையும் துணையாகக் கொண்டு சிறிலங்காவை எம்மோடு “பனிப் போருக்குள்” இழுத்து ஒரு “மிரட்டல் அரசியல்” நடத்துவதுதான் அடுத்த திட்டம்.

தமிழர்கள் தமிழீழக் கனவை கைவிடவில்லை என்பதும் இராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்பதும், அதில் சில ஆயிரம் இளைஞர்களாவது தம்பாட்டில் திடிரென்று இலங்கைத் தீவில் நுழைந்து கிளர்ச்சியை ஆரம்பிக்கின்ற சாத்தியங்கள் இருக்கின்றன என்பதும் சிறிலங்கா அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் நெருக்கடியாகவும் அமையும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

ஈழத்தில் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் அதிகரித்தால் மீண்டும் ஒரு முறை ஈழப் போருக்கான சாத்தியங்கள் உடனடியாகவே உருவாகிவிடும் என்கின்ற அச்சம் சிறிலங்காவிற்கு என்றைக்கும் இருக்க வேண்டும். தாம் போரில் வென்று விட்டோம் என்ற மமதையில் இருக்கின்ற சிறிலங்காவை ஒரு தற்காப்பு நிலைக்குள் தள்ள வேண்டும். பேரம் பேசுகின்ற பலம் தமிழர்களுக்கு இருக்கின்றது என்பதை சிறிலங்கா அரசு நம்பும்படி செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு ஓரளவாவது உரிமைகளை வழங்குவதற்கு சிறிலங்கா அரசை தூண்டக் கூடிய இப்படியான ஒரு மிரட்டல் அரசியலுக்கோ அல்லது தமிழீழத்தை விடுவிக்கும் போராட்டத்திற்கான ஒரு படிநிலைக்கோ இந்த மூன்றாவது யோசனை பயன்படும் என்று நம்புகின்றேன். கடந்த கட்டுரையில் கூறியது போன்று மூன்று யோசனைகளில் ஏதாவது ஒன்றை செயற்படுத்துவது என்றாலும் தமிழர்களுக்குள் இனப் பற்றும், ஓர்மமும், ஓற்றுமையும் மிக அவசியம். இல்லையென்றால் சராணாகதி அரசியல் செய்வதே எமக்கு உள்ள வழியாக மிஞ்சும்.

இந்த மூன்றாவது யோசனையின் சாதக பாதகங்கள் பற்றி நாம் தொடர்ந்து பேசவோம். சில நாட்கள் கழித்து இது பற்றி மீண்டும் எழுதுகிறேன்.

சபேசன்,

உங்கள் மூன்றாவது யோசனையுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. நானும் இங்கு ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சியை முடித்திருக்கிறேன். இதில் ஆயுத, சண்டைப் பயிற்சிகளுடன் சட்டம், முதலுதவி, பாதுகாப்பு, ... போன்றனவே முதன்மைப்படுத்தப் படுகின்றன. இராணுவ சேவையை முடித்துக் கொண்டு வெளியேறும்போது சேவை மனப்பான்மைதான் தோன்றுமே தவிர புரட்சி போராட்டம் போன்றவற்றை நினைக்கவே தோன்றாது. காரணம் சட்டப்படி இராணுவத்தினர் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட முடியாது. இதுதான் முதலில் சொல்லித் தரப்படுகிறது. அத்துடன் இராணுவத்தில் இருக்கும்போது மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு அவர் நில் என்றால் நிற்கவும் இரு என்றால் இருக்கவுமே சொல்லித் தரப்படுகிறது. சிந்தித்துச் செயல்பட அல்ல.

.

அரசியல் ரீதியான போராட்டம் தமிழீழத்தை தராது என்னும் அநுமானம் பிழை.

அண்மையில் சுத‌ந்திர‌ம் அடைந்த‌ கிழ‌க்கு தீமோர் இற்கு அர‌சிய‌ல் தான் செல்வாக்கு செலுத்தியிருக்கிற‌து. ஆக‌வே ச‌ர்வ‌தேச‌ ரீதியாக‌ எப்ப‌டி த‌னி நாட்டுக்கான‌ வேலைக‌ளை முன்னெடுப்ப‌து என்று ஆய்வுக‌ளைச் செய்ய‌லாமே ?

உ+ம்: மூன்றாவ‌து ச‌க்திக‌ளை அடையாள‌ங்காணல், சர்வதேச அங்கீகாரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளுதல்..

ந‌ன்கு க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌ வி.பு அமைப்பை சிதைத்த‌ சிங்க‌ள‌வ‌ர் வெளிநாட்டில் இருக்கும் "இராணுவ இளஞர்களை" க‌ண‌க்கிலும் எடுக்க‌ப் போவ‌தில்லை!

இராணுவ‌ முனைப்புக‌ள் தாய‌க‌த்திலேயே முன்னெடுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். ஆய‌த‌ப் போராட்ட‌ வ‌டிவ‌ மாற்ற‌ம் தேவை. க‌ர‌ந்த‌டி, ம‌ர‌பு என்று உல‌கிற்கு ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌ன‌ போல‌ல்லாது தாய‌க‌ சூழ்நிலைக்கு ஏற்ப‌, குறுகிய‌ ஆள் ப‌ல‌த்துட‌ன் ப‌ல‌த்த‌, தொட‌ர்ச்சியான‌ பொருளாதார‌ சேத‌ங்க‌ளை சிங்க‌ள‌த்திற்கு ஏற்ப‌டுத்த‌வ‌ல்ல‌ அணுகுமுறை கொண்ட‌ வ‌டிவ‌ம் தேவை. இத‌ற்குத் தேவையான‌ வ‌ள‌ங்க‌ளை (ஆயுத, தொழிநுட்ப) புல‌த் த‌மிழ‌ர் வ‌ள‌ங்க‌லாம்.

தமிழீழத்தை அடக்கி வைத்திருக்கும் மட்டும் சிங்களவருக்கு உய்வில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும்.( நிலங்களைப் பிடிப்பதல்ல)

பலமான ச‌ர்வ‌தேச‌ அர‌சிய‌ல் அமைப்பும், அத‌ன் அர‌சிய‌ல் முன்னெடுப்புக‌ளும், சிங்க‌ள‌த்திற்கு ஆயுத‌ப் போராட்ட‌ம் கொடுக்கும் இம்சையும், சாத‌க‌மான‌ ச‌ர்வ‌தேச‌ அர‌சிய‌ல் சூழ்நிலையும் ஒரு க‌ட்ட‌த்தில் ச‌ந்திக்கும்.

இதன் படி சாத்தியங்கள் உடனடியாக இல்லை எண்றாலும் நீண்ட கால நோக்கில் சில உண்மைகள் புதந்து கிடக்கின்றன. இந்த வெளி நாட்டு இராணுவத்தில் இணைந்து பணி புரிய வேண்டும் எனும் கருத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாமே.

இதுக்கு ஒரு மாற்று திட்டத்தை சொல்ல விரும்புகின்றேன்.

புலிகள் அமைப்பில் இருந்து கடைசிக்கட்டத்திலும் அதற்கு முதலிலும் வெளியில் வந்தவர்கள் வெளி நாடுகளில் எவ்வளவு பேர் இருப்பார்கள். ஒரு 10 000 இருப்பார்களா.? இல்லை அதிகமாக.? இவர்களில் இன்னும் உணர்வுள்ளவர்களை ஒண்றிணைக்க ஒரு அமைப்பை உருவாக்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த அமைப்பில் உண்மையில் விரும்பும் இளைஞர்களையும் இணைத்து கொள்ளலாமே.? ஒரு இளைஞர்களை கொண்டு ஒரு பெரிய அமைப்பு. அதில் அனுபவம் கொண்ட முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர்கள் கொண்ட அமைப்பு. இது எப்படி. ?????

இராணுவ பயிற்ச்சி என்பது பற்றி சொல்ல வேண்டும். இராணுவ பயிற்ச்சிகளில் உண்மையில் சொல்லிக்கொடுக்க படுவது உடற்பயிற்ச்சிகளும், தற்காப்புக்கான பயிற்ச்சிகளுமே. இதில் இராணுவ நுணுக்கங்களை அதிகாரிகள் பயிற்ச்சியின் போதே சொல்லிக்கொடுக்கிறார்கள். கட்டளை அதிகாரியின் கட்டளையின் கீழ் வேலை செய்யும் சிப்பாய் ஒருவருக்கு குறிபார்த்து சுடும் பயிற்ச்சிகள் மட்டுமே மேலதிகமாக இருக்கும்.

சபேசன் என்னோட வீட்ல மகன் அனுமதி எடுத்து ஒரு வருடமாகப் போகுது கண்டியளே... நீங்க இந்த ஆலோசனையை லேட்டாச் சொல்லுறியள்...

நடைமுறைக்கு சாத்தியமான யோசனைகளை முன்வையுங்கள்.வெளி நாட்டில் பிறந்து வளர்ந்த பெரும்பாலானோரின் சிந்தனைகள் முற்றிலும் மாறுபட்டவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நடை முறை படு்கிறதோ இல்லையோ இளைஞர்களை ராணுவபயிற்சி எடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். நல்ல யோசனை :D

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் பொழுது நான் எழுதிய வெற்றி என்ற கற்பனை கதையை வாசித்துபார்க்கவும்..உங்கள் உஅரசியல் ஆய்வு கட்டுரையும் எனது கற்பனைக்கதையும் ஒரே கருப்பொருள் போல் தொண்றுகிறது http://www.yarl.com/forum3/index.php?showtopic=60839&st=0&p=526495&fromsearch=1&#entry526495

  • தொடங்கியவர்

இணையவன் கூறியது போன்று "இராணுவப் பயிற்சி எடுத்தால் புரட்சி எண்ணங்கள் போய்விடும்" என்பதை நான் நம்பவில்லை. இராணுவப் பயிற்சி எடுத்த இணையவனுக்கு தற்பொழுது தமிழீழம் விடுதலை அடைய வேண்டும் என்கின்ற சிந்தனை இல்லாது போய் விட்டிருக்க மாட்டாது. சுயமாக சிந்திக்கின்ற அறிவு இணையவனுக்கு தாராளமாகவே இருக்கின்றது.

வெளிநாடுகளில் பெறுகின்ற இராணுவப் பயிற்சி பலமான சிறிலங்கா இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானது இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஆயுதப் பயிற்சி எதுவும் பெறாத இளைஞர்கள் திடீரென்று சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதலில் இறங்கிய வரலாறு எம்மிடம் இருக்கின்ற பொழுது, இராணுவப் பயிற்சி பெற்ற தமிழ் இளைஞர்களை சிறிலங்கா அரசு ஒரு அச்சுறுத்தலாகவே நோக்கும்.

ஆதிவாசி சொல்வது எனக்குப் புரியவில்லை. எதற்கு உங்கள் மகன் அனுமதி எடுத்திருக்கிறார்?

அங்கொன்றும் இங்கென்றுமாக இராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் நிலை மாறி நிறுவனப்படுத்தப்பட்ட முறையில் அனைத்து தமிழ் இளைஞர்களும் இராணுவப் பயிற்சி பெறுவதுதான் இங்கே சொல்லப்படுகின்ற யோசனை.

பொய்கை சொல்வது போன்று முன்னாள் போராளிகளை கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்குவது வெளிநாடுகளில் சட்டச் சிக்கல்களை உருவாக்கலாம். ஓரளவு என்றாலும் வெளிப்படையாக இயங்கக் கூடிய கட்டமைப்புக்கள் பற்றித்தான் நான் பேசுகிறேன். வேண்டுமென்றால் வெளிநாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் கொண்டு உருவாக்கும் கட்டமைப்புக்குள் தம்மை வெளிப்படுத்தக் கூடிய முன்னாள் போராளிகளை "அனுபவப் பரிமாற்றம்" என்னும் பெயரில் இணைத்துக் கொள்ளலாம்.

இரகசியமாக செய்ய வேண்டிய வேலைகளுக்கு முன்னாள் போராளிகள் நிச்சயம் தேவைப்படுவார்கள். இவைகள் பற்றி இங்கே பேச வேண்டியது இல்லை.

நான் சொல்வது உலகத்திற்கு அறிவித்து விட்டு செய்கின்ற வேலைகள் பற்றித்தான். எமது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெறும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்கின்ற அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் பயிற்சி பெற்றார்கள் என்கின்ற அறிவிப்பு, அந்த இளைஞர்கள் ஒன்று கூடி எடுக்கின்ற தீர்மானங்கள், இந்த இளைஞர்கள் ஒன்றிணைக்கின்ற ஒரும் பெரும் கட்டமைப்பு.... இப்படி வெளிப்படையாக இயங்கியபடி சிறிலங்காவிற்கு சவால் விடுவது போன்று வர வேண்டும்.

புத்தன்! உங்கள் கனவும் என் கனவும் ஒன்றுதான். தமிழீழத்து மக்கள் போராடி களைத்து விட்டார்கள். அவர்கள் தம்மை மீளக் கட்டமைத்து எழுகின்ற வரை நாம்தான் போராட்டத்தில் இடைவெளி விழாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன சொல்ல வாறீங்க இன்றைய இலங்கைவாழ் தமிழ் மக்களை கருத்திற்கொண்டு ஏதாவது சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் ஒரு ஆபத்தான விடயம்.

ராணுவப்பயிற்சி பெறும்போதே அவன் அந்த நாட்டு ராணுவக்கட்டமைப்பிற்கு

உட்படுகின்றான்.

அதை மீறிச்செயற்பட்டால் தண்டனை உண்டு.

இதை விட ஈழவிடுதலைக்கு ஆதரவு வழங்கும் ஒரு நாட்டில் அவர்களின்

அனுமதியுடன் அந்த நோக்கத்திற்காக ஒரு பயிற்சி முகாமை ஆரம்பித்தல்

சிறந்தது.

அந்த நாடு இந்தியாவாக இருக்கக்கூடாது.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் எப்போதுமே அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். எனவே மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தால் அது தாயகத்திலேயே முளைவிடும். எனினும் தற்போதைய உலகில் ஆயுதப் போராட்டம் வெற்றியடையக் கூடாது என்பதற்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான இராணுவ பலத்தை உலக நாடுகள் பல சேர்ந்து அழித்தன. இந்த நாடுகள் மீண்டும் இப்படியான ஒரு போராட்டம் ஆரம்பமாவதை சகல வழிகளிலும் தடுக்கும். அது புரியாதமாதிரி அந்த நாடுகளிடம் இருந்தே ஆயுதப் பயிற்சியை எடுத்து இளைஞர்களைத் திரட்டிப் புரட்சி செய்யலாம் என்பது அடிப்படையிலேயே தவறானது. இதைப் போல இன்னமும் கனவு காண்பதை விடுத்து, புலம்பெயர் தமிழர்களையும், தாயகத் தமிழர்களையும் தேசியத்தை வளர்க்கும் அரசியல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நல்லது. தமிழ்த் தேசியம் தொடர்ந்தும் வலுவாக இருந்தால் மாத்திரமே தமிழீழம் சாத்தியப்படும். தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியத்தைக் காப்பவர்களே அதனை அழிக்க முயல்கின்றபோது உங்கள் கனவுகள் வசப்படாமலேயே இருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.