Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீய கொலஸ்ரோல்(LDL) - குறைக்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீய கொலஸ்ரோல்(LDL) - குறைக்க முடியுமா?

கொலஸ்ரோல் என்றால் என்ன?

கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளைä நரம்பு தசை ஈரல் குடல் இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

எமதுடல் பல ஓமோன்களையும் விற்றமின் டி கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போதுமானதாகும். மேலதிகமான கொலஸ்ரோல் நாடிக்குருதிக் குழாய்களில் படிகின்றது. இதயத்திற்கு குருதியை வினியோகிக்கும் குருதிகுழாயும் இதற்கு விலக்கல்ல. படிவுகளினால் குழாயின் விட்டம் குறைவடைவதோடுää இரத்தோட்ட தடை ஏற்ப்படுவதனால் இதய வருத்தத்திற்குரிய அறிகுறிகள் தோன்றக் காரணமாகின்றன. குருதியிலுள்ள கொழுப்பினளவை (கொலஸ்ரோல); அறிந்துகொள்ளää 8 - 12 மணிநேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தபோதுää காலையில் பெறப்பட்ட குருதியிலிருந்து அளக்கப்படுகின்றது.

குருதியில் கொழுப்பு அகத்துறிஞ்சப்பட்டதிலிருந்துää கொழுப்பு உடலில் பேணப்படுவதற்கான நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன. உறிஞ்சப்பட்ட கொழுப்பு ஈரலை நோக்கிப் புறப்படுகின்றது. கொழுப்பு ஏனைய உடற்கலங்களால் உடனடியாகப் பயன்படுத்தபடுவதற்காக ஒரு எடுத்துச்செல்லும் வழிமுறை ஒன்றை வேண்டி நிற்கிறது. எஞ்சிய கொழுப்பு பின்னைய தேவைக்காக கொழுப்புக் கலங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. கொழுப்பு எடுத்துச் செல்லும் வழிமுறைக்குள் உட்புகு முன்னர் ஈரலில் உள்ளபொழுதேää இரண்டு வகையான கொழுப்பாக – கொலஸ்ரோல் ற்ரைகிலிசெரைட்ஸாக பிளவடைகின்றது. இந்த பிளவு ஏற்ப்பட்ட பின்னர்ää இருவகையான கொழுப்புகளும் கொழுப்பு காவிகளில் ஏற்றப்பட்டுää குருதி சுற்றோட்டம் வழியாக உடல் முழுவதும் காணப்படும் கொழுப்புக் கலங்களிற்கு வினியாகிக்கப்படுகின்றது. இந்தக் கொழுப்புக் காவிகள் கொழுப்புப் புரதங்கள் (லிப்போபுறோரீன்ஸ்) என அழைக்கப்படும்.

மூன்று வகையான கொழுப்பு புரதங்கள்:

1. மிகவும் குறைந்த அடர்த்தியுடைய கொழுப்புப் புரதங்கள் (வி.எல்.டி.எல்).

2. குறைந்த அடர்த்தியுடைய கொழுப்பு புரதங்கள் (எல்.டி.எல்).

3. அடர்த்தி கூடிய கொழுப்புப் புரதங்கள் (எச்.டி.எல்.). இது தீய கொலஸ்ரோலை (வி.எல்.டி.எல் எல்.டி.எல்) ஐச் சேகரித்து ஈரலுக்கு அனுப்புவதனால் நல்ல கொலஸ்ரோலாக அறியப்படுகின்றது.

சாதாரண நிலைகளில் எல்.டி.எல் எச்.டி.எல் கொழுப்புப் புரதங்களை உடல் முழுவதும் எடுத்துச்செல்வதில் குருதிச் சுற்றோட்டம் மிகவும் நன்றாகவே தொழிற்படுகினறது.

கொலஸ்ரோல் சேதப்பட்ட நாடிக்குழாய்களின் உட்புற சுவர்களில் மட்டுமே இணைந்து கொள்ளும். நாடிக்குழாயின் உட்சுவரின் சேதமேற்படும் பொழுதுää அப்பகுதிக்கு குருதி வெண்குழியங்களும் அதைத் தொடர்ந்து கொலஸ்ரோல்ää சுண்ணாம்பு சத்து (கல்சியம்) சிதைவடைந்த கலச்சிதறல்களும் விரைவில் சென்றடையும். இந்த நாடிக் குழாயைச் சூழ்ந்த தசைக் கலங்களில் மாற்றமேற்படுவதுடன்ää கொலஸ்ரோல் படிவடைகிறது.

இந்த கொழுப்பு படிவுகள் தொடர்ச்சியாக ஏற்படும்பொழுது நாடிக்குழாய்கள் வீக்கமடைகின்றன. இந்த தடிப்படை சுவரில் மேற்பகுதி தடிப்படைந்துää கொலஸ்ரோலும் கலச்சிதைவுகளும் கலந்த ஓரு தடிப்பான தளிம்பொன்றை ஏற்படுத்துகின்றது. இவ்வகையான கொழுப்பு சேர்ந்து தடிப்படைந்து தளிம்பொன்றினால் மூடப்பட்ட நிலையை ‘பிளாக்’ என்று கூறப்படுகின்றது.

இப்படியான படிவுகள் நாடிக்குழாய்களின் விட்டத்தைக் குறைப்பதனால்ää குருதி ஓட்டம் குறைவதனால் குருதி காவிச் செல்லும் ஒட்சிசனினதும்ää ஏனைய போசாக்குப் பொருட்களினதும் அளவு குறைவாகவே சென்றடைகின்றது. இது குருதிக் கலன்களால் இழையங்களுக்கு வழங்கப்படும் குருதிஇ ஒட்சிசன் ஆகியவற்றின் அளவு குறைவடைந்துபோகின்றது.

நாடிக் குருதிக் குழாய்களின் மீள்தன்மை குறைவடைவதோடுää நாடிக்குழாயின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் மாற்றத்திற்குள்ளாகிறது. ஒடுக்கமான நாடிகளினூடாக இதயத் தசைக்குப் பாயும் குருதியில் போதியளவு ஒட்சிசன் இல்லாதபோது இதயம் ‘நோவு’ என்னும் சமிக்ஞை அறிவிக்கிறது. இந்நிலை ‘அஞ்சைனா’ எனக் கூறப்படும்.

இந்த நோ உடற்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படுகினறது. ஏனெனில் இவ்வேளையில்தான் இதயத்திற்கு ஒட்சிசன் கூடுதலாக தேவைப்படுகிறது. இது வழமையாக இடது மார்பின் இடது கைää தோள் மூட்டுப் பக்கமாக உணரப்படும். சிலசமயம் எதுவித அறிகுறி இல்லாமலே ஏற்ப்படக்கூடும்.

கொழுப்புப்படை (பிளாக்) அளவிலும்ää அமைப்பிலும் வேறுபட்டிருக்கலாம். இதய நாடிக் குழாய்களில் அரைவாசிக் குழாயை மூடக்கூடிய கொழுப்பு படிவு இருந்த பொழுதிலும்ää பெரும்பான்மையான படிவுகள் வெற்றுக் கண்ணிற்குப் புலப்படாதவையாகும்.

மருத்துவ சமூகம் பெரிதான கொழுப்புப்படிகள்ää இதய நாடியை முற்றாக அடைத்துவிடக்கூடும் என்பதனால் மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையாக இருந்த பொழுதிலும் ää தடிப்படைந்து மூடப்பட்டிருக்கும் சிறிய கொழுப்புப் படிவுகள் மேலும் ஆபத்தானவையாகும். இவை வெடித்துச் சிதறி இரத்தவோட்டத்தில் கொழுப்பு படிவுகளின் சிதறல்களை விட்டுவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் நாடிக் குழாயினுள்ளே குருதி உறைவு உடனடியாக ஏற்படுகின்றது. உறைந்த குருதி நாடிக்குழாயில் குருதிப் பாய்ச்சலை முற்றாகத் தடுக்கää இதயத்திற்கு குருதி கிடைக்காத பொழுது மார்படைப்பு (காட் அற்ராக்) ஏற்படுகின்றது.

குருதி உறைவு ஏற்ப்பட்ட இடத்திற்கு தொலைவாக உள்ள தசைக்கலங்களிற்கு ஒட்சிசன் (பிராணவாயு) கிடைக்காமல் போவதனால்ää அவை இறக்க ஆரம்பிக்கின்றன. இவ்வகையான சேதங்கள் நிரந்தரமானவை.

இப்பொழுது நீங்கள் உங்கள் கொலஸ்ரோல் அளவுகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். உங்களின் குடும்ப வைத்தியரினூடாக அளவுகளைப் பெற்றுக் கொண்ட பின்னர்ää பின்வரும் அட்டவணையுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

இரத்த சுற்றோட்டத் தொகுதி நோய்நிலை அபாயநிலை குறிகள்:

கொலஸ்ரோல்(மி.மோல் - லீற்றருக்கு)

உச்ச அபாயம் ;: 3.1க்கு மேல் 8.5க்கு கீழ்

மத்திய நிலை அபாயம் : 6.2 க்கு கீழ்

ஆரோக்கியம்: 4.9 இலிந்து 5.4 வரை

கொலஸ்ரோல் அல்லது எச்.டி.எல்

உச்ச அபாயம்; 8:1 க்கு கீழ்

மத்திய நிலை அபாயம்: 5:1 க்கு கீழ்

ஆரோக்கியம் : 3.5:1 க்கு மேல்

என்ன செய்யலாம்?

வுழமையாக உயர்வான கொலஸ்ரோல் அளவு குருதியில் இருக்குமாயின் அதைக் முடிந்த அளவுக்கு குறைக்கவேண்டும். விஞ்ஞான ஆய்வுகள் என்னத்தை எடுத்துக்கூறிய பொழுதும்ää கொலஸ்ரோலின் அளவை மிகவும் குறைக்கும் பொழுது எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. (உதாரணமாக ஸ்ரோக்ää மனவழுத்தம்ää வலுச்சண்டைக்குப் போதல்ää சிலசமயங்களில் தற்கொலை முயற்சி). இப்பொழுது எங்களது நோக்கம் உடலின் கொலஸ்ரோல் அளவை ஆரோக்கிய நிலைக்குரியதான 4.9 – 5.4 மி.மோல் - லீற்றருக்கு அளவில் வைத்திருப்பதாகும்.

உணவு குருதியில் கொலஸ்ரோலின் அளவை எவ்வாறு பாதிக்கும்?

உணவு:

உணவிலிருந்து 20மூ கொலஸ்ரோல் மட்டுமே கிடைக்கிறது. எஞ்சிய 80சதவீதம் கொலஸ்ரோல் ஈரலினால் உற்பத்திசெய்யப்படுகின்றது. ஆயினும் அதிகளவு நிரம்பிய கொழுப்புகளும்ää கொலஸ்ரோல் அளவில் கூடிய உணவுகளை உண்ணும் பொழுது ஈரல் மேலும் எல்.டி.எல் ஐ உற்பத்தி செய்ய தூண்டக்கூடும். உணவின் மூலம் உற்பத்தியாகும் எல்.டி.எல்லின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபாடானதாக காணப்படுவதோடுää பரம்பரையாக கடத்தப்படுவதாகவும் கருத இடமிருக்கிறது. உணவில் அதிக கொழுப்புணவை உட்கொண்ட சிலருக்கு உயர் கொலஸ்ரோல் அளவு காணப்பட்ட பொழுதிலும்ää வேறு சிலருக்கு அதே உணவிற்கு சாதாரண அல்லது குறைந்தளவு கொலஸ்ரோல் காணப்படுகின்றது.

- உணவில்; கொழுப்பை குறைக்கவேண்டும்:

கொழுப்பு குறைந்த இறைச்சியைத் தெரிவு செய்யவேண்டும். சிவப்பு நிற இறைச்சிக்குப் (சிவப்பு இறைச்சி) பதிலாக கோழியிறைச்சி (தோல் நீக்கிய)ää மீன்வகைகளை உணவாக கொள்ளவேண்டும். குறைந்தளவு கொழுப்பைக் கொண்ட பாற்கட்டி (சீஸ்)ää தயிர்ää கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம்ட் மில்க்) போன்றவற்றை உணவில் சேர்க்கவேண்டும்.

- பொரித்த உணவை தவிர்க்கவேண்டும்:

கொழுப்பு குறைந்த எண்ணையில் ஆரம்பத்தில் பொரிக்கலாம். பின்னர் சமையல் முறையில் கொழுப்பு தவிர்ந்கும் முறையைக் கையாளவேண்டும். இதனால் கொலஸ்ரோல் மீண்டும் உணவினூடாக உடலைச் சென்றடைவதைத் தவிர்க்கலாம். கோழிää ரேக்கி கோழி போன்வற்றின் தோலை அகற்றவும். பொரித்த உணவை தவிர்க்கவும். பதிலாகää கொழுப்பை வடிக்கக்கூடிய முறையில் (பேக்ää றோஸ்ற்ää கிறில்ää போச்) சமைப்பதோடு. தாளிப்பதற்கு ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம்..

-மரக்கறிவகைகளையும் சிக்கலான காபோவைதரேற்றுக்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்:

உணவில் புதிதாக தருவிக்கப்பட்டää மரக்கறி வகைகள்ää பழங்கள் போன்றவற்றுடன் புறவுன் அரிசிää பச்சைப்பருப்புää விதைகள்ää ரேக்கி கோழிää மீன்ää முழுத்தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்டää அவசரமாக தயாரிக்கப்படும் உணவு வகைகளை முற்றாகத் தவிர்க்கவேண்டும். கொலஸ்ரோல் அளவைக் குறைக்கக்கூடிய அப்பிள்ää வாழைää கரட்ää நன்நீர் மீன் வகைகள்ää உலர்த்திய அவரைவகைää உள்ளிää திராட்சைப்பழம்ää ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

- நார்ச்சத்துணவு (பைவர்):

பழங்களிலிருந்தும்ää முழுத்தானியங்களிலிருந்தும்ää மரக்கறிகளிலிருந்தும் போதியளவு நார்;ச்சத்து உணவில் சேரவேண்டும். நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து குருதியிலுள்ள கொலஸ்ரோலைக் குறைக்க முக்கியமானதாகும்.

- உடனடியாக பிளிந்த சாறுகள்:

குறிப்பாக கரட்ää சிலெறிää பீற்றூட்டின் சாறுகள் மிகவும் நல்லது. கரட் சாறு ஈரலிலிருந்து கொழுப்பை தள்ளிவிடுவதால் கொலஸ்ரோலின் அளவைக் குறைக்க உதவுகின்றது.

- எடைக் குறைப்பு:

உடல் எடை அதிகமானவர்களில் பலருக்கு உயர்ந்த கொலஸ்ரோல் அளவு காணப்படுகின்றது. இவர்கள் எல்.டி.எல் கொழுப்பளவைக் குறைத்து எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்க வேண்டும்.

- கொட்டை விதை வகைகள்:

உப்பு சேர்க்காத வோல்நட் ஆமண்ட்ஸ் விதைகள் கொட்டைகள் மிகவும் நல்லது. 3 அவுன்ஸ் வோல்நட்ஸ் தினமும் உண்பதால் கொலஸ்ரோல் அளவு குறைவதாக அறியப்பட்டுள்ளது. வோல்ந்ஸ் பல நிரம்பிய கொழுப்புகளைக் கொண்டிருப்பதால் கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதாக செயற்படுகின்றது. ஆமண்டில் தனிவகை நிரம்பிய கொழுப்பைக் கொண்டிருப்பதோடு எல்.டி.எல்லின் அளவை குறைக்கிறது. அத்துடன் ஆஜினின் என்னும் அமினோ அமிலத்தையும் கொண்டிருக்கின்றது.

- உள்ளி:

உள்ளி கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதாக பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. போதியளவு உள்ளியை உணவில் சேர்க்க வேண்டும். உள்ளி எச்.டி.எல்லின் அளவை உயர்த்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

- புகைத்தலை முற்றாக நிறுத்தவும்:

புகைத்தலை எப்படி அணுகினாலும் மிகவும் பாதகமான விளைவுகளையே தருகின்றது. புகைத்தல் நுரையீரலைப் பாதிப்பதை விட இதயத்தையே பாதிக்கின்றது. புகையில் எரியும் போது கிடைக்கும் புகையில் காபன் மொனொக்சைட் இதயத்தைப் பாதிக்கின்றது. அத்துடன் நிகோரின் என்னும் இரசாயனப் பதார்த்தம் இதய துடிப்பு நடைபெறுவதற்கான கணத்தாக்கங்களுடன் குறுக்கிடுகிறது. இதனால் இதய துடிப்பு அதிகரிப்பதோடுää ஒழுங்கற்ற துடிப்பும் ஏற்ப்படுகின்றது.

- சீனியினளவைக் குறைக்கவேண்டும்:

உடலின் சீனியினளவு கொலஸ்ரோலின் அளவை பாதிக்கின்றதுää அத்துடன் நிட்சயமாக ற்றைகிளிசரைட்ஸை பாதிக்கிறது. குருதி வெல்ல அளவு இன்சுலின் சுரப்பை தூண்டுவதனால் ற்றைகிளிசரைட்ஸ் அளவும் அதிகரிக்கிறது. குறோமியம் என்னும் குருதி வெல்ல அளவை சமநிலைப்படுத்தப் பயன்படும் கனிப்பொருள் (மினறல்)ää எச்.டி.எல் கொழுப்பையும் அதிகரிக்கிறது.

- தினந்தோறும் உடற்பயிற்ச்சி :

போதியளவு உடற்பயிற்ச்சி எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து எச்.டி.எல் கொழுப்பை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. வேகமான நடை நீந்தல் துவிச்சக்கரவண்டி ஓடுதல் மெதுவான ஓட்டம் (ஜொக்கிங்) போன்றன கொலஸ்ரோல் மட்டத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகின்றது.

- கோப்பி மதுபானம் காபனேற்றற் பானங்கள் போன்றவற்றோடு கேக் வகைகள் இனிப்புப் பண்டங்களையும் முன் தயாரித்த உணவுகளையும் முற்றா தவிர்க்கவேண்டும்.

- உப்பினளவைக் குறைத்து பொட்டாசியத்தினளவைக் கூட்டவேண்டும்:

நாளொன்றிற்கு 2300மி.கி. க்கு ( ஏறக்குறைய 1 தேக்கரண்டி) குறைவாக உப்பு உணவினூடாக உட்கொள்ளப்படும் பொழுது உயர் குருதி அழுத்தம் தோன்றுவதற்கான அபாயம் குறைவாகவுள்ளது. முன் தயாரிக்கப்பட்ட உணவிலிருந்தே அதிகளவு உப்பு உட்கொள்ளப்படுகிறது. பொட்டாசியத்தினளவு கூடுதலான உணவுகள் நன்மைபயக்கும்இ ஏனெனில் இது உப்பின் (சோடியம்) செயற்பாட்டிற்கு எதிராக குருதி அழுத்தத் செயற்பாட்டில் தொழிற்படுகிறது.

- மனவழுத்தம் - மனச்சுமை (ஸ்றெஸ்) குறைத்து வையுங்கள்:

மனவழுத்தமும் உயர் குருதி அழுத்தத்திற்கு காரணமாகலாம் என விஞ்ஞான ஆய்வுகள் கருதுகின்றன. உடல் மனவழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும் பொழுது மனவழுத்த ஓமோன்கள் வழமைக்கு மாறான இரசாயன தாக்கங்களில் ஈடுபடுவதனால்ää கொலஸ்ரோல் இலகுவில் நாடிக் குழாய்களில் படிய வாய்ப்பளிக்கிறது. மேலும் வெளிவிடப்படும் ஓமோன்கள்ää கொலஸ்ரோல் சமிபாட்டை ஏற்படுத்த தேவையான அமினோ அமிலங்களில் அமைப்பு மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. உயர் இரத்தவழுத்தத்தையும்ää உயர் கொலஸ்ரோல் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் மனவழுத்த நிலையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். தினந்தோறும் உடல் அப்பியாசம்ää சுவாசக் கட்டுப்பாடுää தியானம்ää யோகப் பயிற்ச்சி போன்றன மனவழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகவும் சிறந்த சாதனங்களாகும்.

- கொலஸ்ரோலும் ஆண்மையின்மையும்:

கொலஸ்ரோலின் அளவு உயர்வாகவுள்ள ஆண்களில்ää சாதாரணமான அளவு அல்லது குறைவாகவுள்ளவர்களைக் காட்டிலும் இருமடங்காக அளவில் ஆண்மையின்மை இருக்கலாம் என அண்மையான ஆய்வுகள் கூறுகின்றன. கொலஸ்ரோலின் அளவு அதிகரிக்கும் பொழுதுää உடலுறவின் போது ஆண்குறியை விறைப்பாக தக்கவைப்பது குறைவடைந்து போகின்றது. எச்.டி.எல்லில் அளவு குறைவாக உள்ளவர்களும் ஆண்மைத் தன்மைக் குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். உணவில் அதிக கொழுப்பு உள்ளபோது இது நாடிகளில் படிந்து குருதி ஓட்டத்தைக் குறைப்பதனால்ää இதயத்திற்கும்ää ஆண்குறிக்குமான குருதியனளவு குறைவாகவே கிடைக்கின்றது. வேண்டிய அளவிற்கு குறைவாக குருதி ஆண்குறிக்கு கிடைக்கும் பொழுதுää உடலுறவின் போது விறைப்புத் தன்மையைத் தக்கவைக்க முடியாமல் போகிறது.

மூலிகை கலவை: கூகுல் பிளஸ்:

இதுவொரு சிறப்பான மூலிகைக் கலவையாகும். இதில் உள்ள மூலிகைகள்ää உடலில் ஆரோக்கியமான கொலஸ்ரோல் அளவைப் பேணுவதற்காக கலக்கப்பட்டுள்ளன. நல்ல ஆரோக்கியத்தைத் தரவல்ல உணவுää தினந்தோறும் உடல் அப்பியாசத்துடன் கூடவே இந்த மருந்துக் கலவையையும் எடுப்பதனால் எச்.டி.எல் (நல்ல) கொழுப்பினளவை அதிகரித்து எல்.டி.எல் (தீய) கொழுப்பினளவைக் குறைக்கலாம். மேலும் நாடிக் குழாய்களின் உட்சுவரில் ஏற்படக்கூடிய சேதத்தையும் குறைக்கலாம். கொலஸ்ரோலைக் குறைப்பதற்காக மருந்தெடுக்கும் பலருக்கு இதுவொரு மூலிகையாலான மாற்று மருந்தாகும்.

மூலிகை கலவை: கூகுல் பிளஸ் பின்வரும் மூலிகைகளைக் கொண்டுள்ளது :

கூகுல் (கொமிபோறா முக்குல்):

கூகுல் உடலில் நடைபெறும் கொழுப்பின் ஆக்கச்சிதைவு (மெற்ராபோலிசம்) நடைமுறையை ஒழுங்காக்கி வைத்திருப்பதனால் கொலஸ்ரோல்ää ற்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றின் அளவுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் இது ஈரல் கலங்களை தூண்டி ஆக்கச் சிதைவினை அதிகரிப்பதால் எல்.டி.எல் (தீய) கொழுப்பினளவு அகற்றப்படுகின்றது. இதன் விளைவாக நாடிக் குழாய்களில் சேதம் குறைவாகவே ஏற்படுகின்றது. மேலுமிது குருதிப் பாயத்திலுள்ள கொலஸ்ரோல்;ää ற்ரைகிளிசரைட்ஸ்; எல்.டி.எல் வி.எல்.டி.எல் ஆகியவற்றின் அளவைக் குறைக்கின்றது. இதனால் குருதிக் குழாய் உட்சுவர் தடிப்படைதல் தவிர்க்கப்படுகிறது. கூகுலில் காணப்படும் கூகுலிப்பிட் என்னும் இரசாயனமானது; குழாய்களில் முன்னேற்பட்டிருக்கும் படிவுகளை அவற்றின் முன்னைய நிலைக்கு எடுத்துச்செல்லவைக்கின்றது. மேலும் குருதிக் குழாயினுள் குருதியுறைவைக் குறைப்பதனால் ஸ்றோக் நடைபெறும் நிலைகளைத் தவிர்க்க முடியும். கொலஸ்ரோல் குருதிக் குழாயில் படிந்து ஒட்சியேற்றம் பெற்று தடிப்படைதலை கூகுல் தடுக்கிறது. அத்துடன் உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைக்கவும்;ää உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

மூலிகை: ஆட்டிசோக் (சயனாரா ஸ்கொலிமஸ்):

ஆட்டிசோக் என்னும் மூலிகையானதுää ஈரலில் கொலஸ்ரோல் இன் உற்பத்தியைக் குறைக்கவும்ää கொலஸ்ரோல் பித்தநீராக மாற்றப்படுவதையும் தூண்டக்கூடும். கொலஸ்ரோலை பித்தநீராக உடலினால் மாற்றமுடியாமல் போகும்போதுää குருதிப் பாயத்தில் கொலஸ்ரோலின் அளவு அதிகரிக்கிறது. ஆட்டிசோக் கொலஸ்ரோல் சமிபாட்டைத் தூண்டி கழிவை சமிபாட்டுக் கால்வாயினூடு வெளியகற்றுவதோடுää ஈரலில் குறைந்தளவு கொலஸ்ரோல் மட்டுமே உற்பத்தியாகுமாறு கட்டுப்படுத்தி இரு வழிகளில் செயற்படுகிறது.

மூலிகை: உள்ளி (அலியம் சற்றைவம்):

உள்ளி மூலிகையானது குருதிப்பாய கொலஸ்ரோல் அளவைக் குறைவாக செய்வதனால்ää சிறந்த குருதிச் சுற்றோட்டத்தைப் பேணுகிறது. அத்துடன் எல்.டி.எல் கொழுப்பினளவைக் குறைத்து எச்.டி.எல் இன் அளவை உயர்த்துகிறது. உள்ளியில் கிடைக்கும் செலேனியம் என்னும் கனிப்பொருள் நாடிக்குழாய்களில் கொலஸ்ரோல் ஒட்டாவண்ணம் கவனித்துக்கொள்கிறது. அலிசின் என்னும் உள்ளியில் காணப்படும் இரசாயனப் பதார்த்தம் எச்.டி.எல் கொழுப்பை பித்தப்பையிற்கு கொண்டு செல்லும் காவிகளினளவை உயர்த்துகிறது.

மூலிகை: கீ சோ வு ( பொலிகோனம் மல்ரிபுளொறம்):

இந்த மூலிகையில் காணப்படும் பல இரசாயனங்கள் சேர்ந்து கொலஸ்ரோல் இன் அளவை குறைப்பதாக செயற்படக்கூடும். குருதிக் குழாக்களை வலுப்படுத்தி அகலப்படுத்துவதனால் உடலில் குருதிச் சுற்று ஆரோக்கியமடைகிறது. இவ்வேளையில் குருதியழுத்தம் குறைக்கப்படுவதனால்ää இதயம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன் குருதி உறைவும் தவிர்க்கப்படுகிறது. மேலும் நாடிக் குழாய்களில் கொழுப்புப் படிவை இல்லாதொழித்தால்ää நாடிக்குழாய் தடிப்படைதல் நோய் தோன்ற வாய்ப்பு இல்லாது போவதோடு இரத்தோட்டம் சம்பந்தமான நோய்களின் அபாயமும் குறைவடைய உதவக்கூடும்.

மூலிகை: அர்யுனா (ரெமினேலியா அர்யுனா):

அர்யுனா பட்டையின் பிளிவு பலகாலமாகää நல்ல குருதிச் சுற்றோட்டத் தொகுதியைப் பேண பயன்படும் மூலிகையாகும். இது ஈரலில் கொலஸ்ரோல் உருவாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் கொலஸ்ரோல்ää ற்ரைகிளிசரைட்ஸ் அளவைக் குறைவடைய செய்யக்கூடும்.

இம் மூலிகைகள் யாவும் கூட்டுச் சேர்ந்தால் கிடைக்கும் விளைவுச் சேர்மானமானதுää கொலஸ்ரோலின் அளவைக் குறைவடையச் செய்வதோடுää குருதிச் சுற்றோட்ட தொகுதியின் ஆரோக்கியத்தை நன்றே பேணக்கூடும். இதற்காகவேää இதிலடங்கிய மூலிகைகள் அதியுச்ச பலனைத தருமாறு வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

குறைநிரப்பிகள் (சப்பிலிமென்ஸ்): லிச்சதின்

லிச்சதின் என்பது ஒரு தொகுதி உடலாரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்புப் பொருட்களாகும். மூளையின் செயற்பாட்டை மேன்மைப்படுத்துவதோடுää பித்தப்பைக் கல்லகற்;றலிலும் பயன்படுகிறது. மேலும்ää உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்ரோலை குடலில் குறைவாக அகத்துறிஞ்ச செய்வதனால்ää உடலில் கொலஸ்ரோலின் அளவு குறைவடைகிறது.

குறைநிரப்பி: வன் ஏ டே பிளஸ்:

உயிர்ச்சத்து: ‘சி’

கல்சியம்ää உயிர்ச்சத்து ஈ உடன் கூட உயிர்ச்சத்து சி யும் முக்கியமானதாகும். உயிர்ச்சத்து சி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை தூண்டுவதற்கு முக்கியமானதோடு எச்.டி.எல் அளவையும் கூட்டுகிறது.

குறைநிரப்பி : றெட் ஈற் றைஸ்

இது ஈரலில் உற்பத்தியாகும் கொலஸ்ரோலின் அளவை மட்டுப்படுத்துகிறது. மேலும் எச்.டி.எல் லினளவை உயர்த்துவதோடு எல்.டி.எல் ற்றைகிளிசரைட் அளவைக் குறைக்கிறது. இந்த மருந்து கிறேப் புறூட் பழரசத்துடன் எடுக்கக்கூடாது.

குறைநிரப்பி: கோமோசிற்ரீன் மொடியுலேற்ரஸ்:

கோமோசிற்ரீன் என்பது புரத ஆக்கச்சிதைவுத் தாக்கங்களின் போது விளைவாகிறது. மெதியோனின் தாக்கங்களின் போது விளைவாகிறது மெதியோனின் என்னும் அமினோ அமிலம் புரதக் கட்டமைப்பின் ஒரு கூறாகும். இது கோமோசிற்ரீனாக மாற்றப்படுகிறது. உயிர்ச்சத்து ‘பி6’ போலிக் அமிலம்ää உயிர்ச்சத்து ‘பி12’ ஆகியன கோமோசிற்ரீனின் அளவைக் குறுகிய காலத்தில் குறைப்பதாக ஆய்வுகள் முறைமாறாமல் காட்டி நிற்கின்றன. மேலும் பல ஆய்வுகள்ää மார்படைப்புää ஸ்ரோக் போன்ற நிலை தோன்றக் காரணமான நாடிக்குழாய்கள் ஒடுங்குவதற்கு கோமோசிற்ரீன் காரணமாகின்றது என்பதைக் காட்டிநிற்கின்றன. ஆழ் நாளக் குருதியுறைவுட் (டீப் வெயின் த்திறொம்போசிஸ்) உட்பட்ட பல குருதிக் கலன் குழறுபடிகளுடன் கோமோசிற்ரீன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அல்சைமேர்ஸ் நோய்ää ஞாபக இழப்பு (டிமென்சியா) கல மாறல்கள் சிறு நீர் தட குறைபாடுகளிலும் கோமோசிற்ரீன் ஒரு அங்கம் வகிக்கிறது. பீற் கிழங்கில் கிடைக்கும் ற்றைமெதைல் கிளிசைன் ஒரு றீமெதைலேசன் ஊடாக கோமோசிற்ரீனை மெதியோனினாக மாற்றுவதற்கு மிகவும் சிறந்ததாகும்.

நன்றி: மருந்து.

  • Replies 77
  • Views 34.4k
  • Created
  • Last Reply

-

நன்றி , மிகவும் நன்றி ! . . .

நிறைய எழுதி இருக்கறீங்கள், கொலிஸ்றோல் ஒரு மிகவும் கெட்ட சாமான் . . . !

ஆனால் உந்தத் துறையில ஆங்கிலத்ததை கலக்காமல் ஆக்கபூர்வமாக் எதையும் சொல்ல முடியது . . . !
:o

அதோட இதைவைத்து ஆக்கபூர்வமாக எதையும் எல்லாராலும் செய்யவும் முடியது ...

அது அப்படி இருக்க ,

என்னைப் பொறுத்த வரையில உந்த வியாதி சாப்பிட்டிற்கு முன் தண்ணி கூடிக்காததால வருகிற வியாதி,

ஒவ்வரு நாளும்
, மீன் மீனாச் சாப்பிட வேண்டும் . . .

அதோட
. ... ஓம்... ஓம் ... ஒவ்வரு நாளும் !
:rolleyes:

இது
காரணமான கோர்திஸோலை(
) கூடக் குறைக்கும் ...

முக்கியமாக கணீனி முன்னால இருந்து சீவிப்பவர்கள் . . .!

அதோட கெட்ட கொலிஸ்றோல் கூட இருப்பவர்கள் ...?

ஒவ்வரு வேளை சாப்பிடும் போதும்
அல்லது
(
) நிறைய சேர்துச் சாப்பிட வேண்டும்.

கவணம் !... கவணம் !... அவித்த முட்டை 100% கெட்ட கொலிஸ்றோல் !!
:blink:

குறைநிரப்பி :
றெட் ஈற் றைஸ்
... இது என்ன ? ... ஸ்தத்தீனா
(
) ... ??

உயிர்சத்து டீ
சரியா இருக்குதா என்று அடிக்கடி பார்ததுக்கொள்ள வேண்டும் !

அடிக்கடி ஒரு கால் குவளை நல்லெண்ணைய (சுண்ணாம்புச் சத்து) குடித்துப்போட்டு, வெள்ளைக்காரண போல

வெய்யில போய் இருந்து கொண்ணடு ஒன்டிரண்டு தோடம்பழத்தை (உயிர்சத்து சீ) சாப்பிட வேண்டும்...

அதோட ... உடம்பை நெழித்து முறுக்கி முறிவெடுக்கவும் வேண்டும், ... இது
தீர்கக் கூடும் ...

கொலிஸ்றோல் நிபுனராக ஆஙாங்கே உள்ள நீல நிற இணைப்புகளில் கிளிக்க
:)

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நீங்கள் சொல்லுகிறமாதிரி ஒவ்வொருநாளும் இதினை மில்லி குடித்தால் எப்படி இருக்கும் என்பதர்ர்காக எழுதுகிறேன்,,,நாளை சில வேளை தூக்க கூடும்...

சின்னனாய் சொன்னால் ...

கொலச்டோல் எங்களுக்கு தேவை ....உந்த HDL LDL நல்ல விஷயம் ....HDL நல்லம் LDL கூடாது :rolleyes: HDL LDL உண்மையிலே புரதங்கள் கொழுப்பல்ல... HDL ஈரலக்கு எடுத்து செல்லும்..மற்றது மாறி ...so HDL நல்லம் :blink:

மற்றது wine குடித்தால் நல்லது ..மீன் சாப்பிட்ட நல்லது ..அது சாப்பிட்ட கூடாது ...எனக்கு தெரியாது ....கூடின , மிதமிஞ்சிய கொழுப்பு . மாப்பொருள் ...ஆக்கள் சொல்லுவினம் கூட புட்டு , சோறு சாப்பிட கொலச்டோல் வருமென... உண்மைதான் ...மேலதிக சக்தி கொழுப்பாக சேமிக்கப்படும்...அது கொலஸ்ட்ரோல் அகவும் :o

மற்றது கொலஸ்ட்ரோல் இரத்த குழாயில் படிவது இல்லை ....அது ஒரு பலபடி கொண்ட செயல்முறை ...எனக்கு தெரிந்த வகையில் சொல்லுவதானால் " காயம் மாறுவது போன்றது .....இது ஒரு தழும்பு போன்றது " நேற்று புட்டு சாப்பிட்ட இன்று செஸ்ட் பெயின் வராது ..இது பல படி செயன்முறை...

சரி நாளைக்கு வரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த கொழுப்பு சம்பந்தமாகவும், கொலஸ்ட்ரோல், அதிரோச்ச்லேரோசிஸ், மற்றது வேறுவேறு வகையான செஸ்ட் பெயின் பற்றியும் எழுத விருப்பம்...மக்களுக்கு விளங்குகிறமாதிரி ...அப்படிஎன்றால் மற்றாக்கள் இணைப்பது எழுதுவது ஏனையவர்களுக்கு விளாங்காமல் இருக்குமென்றோ அல்லது விளங்காத வகையிலோ சொல்லியிருக்கேரோ அர்த்தமல்ல...எனக்கு தெரிந்த வகையில் சொல்லாம் என்றுதான் பார்கிறேன்...

மற்றது இப்ப வசிக்க மேலுள்ள இணைப்பு நன்றாக இருக்கிறது...நான்தான் இந்தனை லீட்டர் தண்ணிஎன்பதை கொஞ்சம் மாறி விளங்கி போட்டேன்...

மக்கள்/ அன்பர்கள்/ அதாரவாளர்கள் உங்கள் கேள்விகளை வைத்தால் அதில் இருந்து தொடங்க இலகுவாக இருக்கும்...

இந்த கொழுப்பு / கொலஸ்ட்ரோல் பற்றி சொல்லுவதானால் ...5 / 6 சுகாதார கல்வியில் இருந்து தொடங்கினால், எமது உணவில் மாப்பொருள் /காபோவைதேர்று, புரதம் / ப்ரோடீன், கொழுப்பு /லிபிட், நிகுகிக்கமிலம் , வைட்டமின், கனியுப்புகள், மற்றது நீர்...

இதில் உள்ள கொழுப்பை எடுத்தால் (லிபிட்), நிறைய விதமாக வகைபடுத்தியுள்ளார்கள். என்னவோ அதில ஒன்றுதான் இந்த கொலஸ்ட்ரோல்...இது ஒரு தாவரத்தில் இருந்து வருவதில்லை ..என்றபடியால் யாரும் சன்பிளவர் ஆயில் , கனோல ஆயில் , வேகிடபில் ஆயில் , தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் .. என்பவற்றில் .கொலஸ்ட்ரோல் இல்லை என்றால் வாயை பிளக்க கூடாது .. ஏனெனில் அவற்றில் இல்லைதானே. சில பேருக்கு தலை சுத்தும் ..இவன் யாரடா தேங்காய் எண்ணையில் கொலஸ்ட்ரோல் இல்லையென்று சொல்லுகிறான், சுத்த கேனையனா இருப்பானோ? ஆனால் அது உண்மைதான் ...Mr .தே.எ இல் கொலஸ்ட்ரோல் இல்லை ...

அப்ப எப்படி இந்த கொலஸ்ட்ரோல் வருகுது அல்லது எங்கேயிருந்து வருகிறது ...

எங்களது உடம்பில் ஒரு செமில்கல் பாக்டரி இருக்கு,எங்கட கெமிகல் மகி மாதிரி ....அவர்தான் (குடிகார ) குமாரசாமி அண்ணைக்கு இல்லாமல் இருக்கிற/எரிஞ்சு போன "ஈரல் " உவருக்கு வேலை சும்மா கோ ( கொலஸ்ட்ரோல் ) உற்பத்தி செய்வது தான். எங்கட உடம்பில இருக்கிற கோ இல 80 % உப்படித்தான் வறது மற்றது நாங்கள் சாப்பிடுகிற மீன் முட்டை , இறைச்சி, பால் ...இப்படி என்னென்ன விலங்குணவு சாப்பிடிகிறோமோ அதில இருந்து வரும்.

அப்ப கேள்வி வரும் ..ரதியிட்ட எண்டு வையுங்கோவன் ...அப்ப ஏன் தே. எ கூடாது? குட் குச்டியன், அதில் கோ தயாரிப்பதர்ற்குரிய மூலப்பொருள் நிறைய இருக்கென்பதால் அதை தவிர்த்தால் நல்லம்,(இதில உது படிப்பித்த எங்கட ஆசிரியர் சொல்லுவர், ஸ்ரிலங்கவில இருக்கிற வெஜிடபிள்ஓயல -சிங்கபூர்/மலேசியவில இருந்துவாறது, விட நம்ம தே .எ திறம் எண்டு ஏனெனில் அங்கத்தேய வெஜிடபிள் ஓயல நல்லா பன்றி ஆயில்(விலங்கு ஆயில் அப்ப நல்லா கோ இருக்கும்) கலப்பாங்க்காலம் ...கனடாவில எல்லாம் 100 % pure எண்டு போடுறாங்கள் என்ன நாசமா தெரியாது ---

சரி இப்படி சொன்னால் கோ ஒரு கேட்ட சாமான் எண்டு முடிவெடுத்து போடுவீங்கள்...அதுதான் இல்லை ..அது கனக்க தேவைகளுக்கு தேவை. இல்லாட்டி எல்லாரும் கு அண்ணைமாதிரி கு போட்டு ஈரல் இல்லாமல் இருக்கலாமே...எனக்கு இப்ப எல்லாம் நினைவில்லை...ஆனால் முக்கியமான ஒண்டு இரண்டு உந்த steroid இன் மூலப்பொருள் ...அதை தான் எங்கட பென்ஜோன்சன் ஓட(தசைகளை விருத்தி செய்ய) பாவிச்சு முத்தாவில பிடி பட்டவர் ...மற்றது எங்கட நெ-க்கு குறைவாக இருகிறதால (பகிடிக்கு தான்) பொண்ணுகளே வேண்டாம் என்று சொல்லுறவர் (செக்ஸ் ஹோர்மோன்ஸ் ). இப்படி பல மற்றது அரும் தலைக்க உள்ள ஆக்களுக்கு (இப்ப என்னை மாதிரி ) நரம்புகளின் கவர் சீட் அக --myelin ---இப்படி பல பல வகை ..

2 பேராவது சொல்லுங்கோ பிரயோசனமாக இருக்கெண்டால் இப்படி எழுதுகிறேன் ..அல்லது மாத்தி எழுதுகிறேன் ...

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் ஒராள் சொல்லிப்போட்டன் நல்லாக்கிடக்கெண்டு.இன்னும் ஒராள் சொன்னால் தொடர்ந்து எழுதுவியளோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி ,....

இந்த கோ அவற்ற அண்ணை தம்பி சொந்தம் பந்தம் ..இருக்கிறார்தானே ஓரிடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு போறது எண்டால் தாங்களா போகமாட்டினம்..அவைக்கு ஒரு வெஹிக்கிள் வேணும் ---(சுகர்/சக்கரை (டயபெடிக் ஆக்களின் /(மற்றது எல்லாருக்கும் இருக்கு))--தானே ரத்ததில கரைஞ்சபடி போகும் --சீனி தண்ணியில கரையும் தானே ..அதல ரத்திலும் கரைந்தது இரத்தம் போற இடமெல்லாம் போகும்..., ஆனால் கொழுப்பு கரையாது தானே அப்ப அவரை வேற வேற இடத்துக்கு கொண்டுபோவதர்காக ...ஈரலில் உற்பத்தி செய்ததை,மற்ற இடங்களில் பாவித்தது போக மிஞ்சினதை.....உடம்பின் மற்ற இடங்களுக்கு கொண்டுபோக புரதத்துடன் சேர்ந்து; இரத்ததில கரைந்தபடி முளைக்கு போகவேனுமேண்டால் முளைக்கு, தசைகளுக்கு எண்டால் அங்கே ...எங்கெலாம் உயிர் இருக்கோ அங்கே எல்லாம் போகும்.அப்படி காவிக்கொண்டு திரியிறவைதான் உந்த லிபோப்ரோடீன்ஸ்(lipoproteins) உண்மையா ப்ரோடீன் அவை சேருவது லிபிட் எண்டபடிய சேர்ந்த பேர்....

அவைகளில (இப்படி லிபிட்டை காவுகிரவை ) நாலஞ்சு வகை ..எல்லாம் கேக்கப்படாது (உதெல்லாம் அப்பப்ப படிச்சு அப்பப்ப மறக்கிற பாடம்...சமுககல்வியில அந்த குளத்தை கட்டினது ஆர் இந்த குளத்தை ஆர் எண்டமாதிரி )

மெயின் ஆனா ஆக்கள் HDL உம் LDL உம்..ஹை டென்சிட்டி லிபோப்றேடீன் மற்றது லோ டென்சிட்டி லிபோப்ரோடீன் ...அவையிண்ட தொழிலை பார்க்க முன்பு ஏன் இப்படி போப்புலறாய் வந்தவை எண்டு பார்த்தால்,

எங்க ரத்தத்தில் கொழுப்பு செக் பண்ண போனால் ...கொழுப்பு எண்டு தனிய செக் பண்ணேலாது, நான் மேல சொன்னமாதிரி அவை லிபோப்ரோடீன் ஆக தான் இருக்கும் ...அப்ப ரிப்போர்ட் வரும் தம்பிக்கு HDL XXXXXXXXXXXX LDL XXXXXXXX எண்டு

அப்ப இந்தமுறை வாதவுரனுக்கு ஒரு குட் குச்டியன் வரும்...

"எங்கட டாக் சொன்னவர் தன்னுடைய அப்பாவுக்கு / சித்தப்பாவுக்கு கோ ( கொலஸ்ட்ரோல் ) இத்தினை எண்டு" ..உண்மையில கோ உடம்பில / ரத்தில நேரடியாக அளப்பதில்லை ...ஒருவிதமான கணக்கு முலம் கணிப்பது...அதேபோல் இன்னுமொன்று TG ...

அப்ப எங்கட கொழுப்பு ரிப்போர்ட் (ஸ்டைல லிபிட் புரோபில் எண்டுவினம் ) LDH , HDL , இரண்டுக்குமான விகிதம்,கோ , TG ஓட வரும் . இதுகளை எப்படி இண்டர்பிர்ட் பண்ணுவது எண்டு நாளைக்கு பார்ப்பம் .

-

நன்றி , மிகவும் நன்றி,

இரத்த குழாயில் ஒட்டி கிடக்கும் கெட்ட கொலிஸ்றோல ஆபத்தில்லாமல் கழட்டி கரைத்து விட ஏதும் வழி இருக்கோ ... ?

Experiments were run on dogs in the early 1900s to test diluted, filtered ocean water as a substitute transfusion liquid. An early experimenter named René Quinton and his team drained all of a dog's blood and replaced it with the seawater solution. The dog lived, and on the second day after the transfusion, half of its normal blood components had returned, regenerated by its body. By the fourth day its blood was back to virtually normal and the dog was active and full of energy and happy. The dog went on to live for many years afterward, with no visible problems as a result of the experiment.

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெய குமார் ..நன்றி ...

உங்களுடைய கேள்விக்கு எனக்கு தெரிந்த மட்டில் வழி இல்லை எண்டுதான் சொல்லுவேன்..முதலாவது பிரச்சனை கொலஸ்ட்ரோல் இரத்த குழாயில் ஒட்டவில்லை ..அது அதனோடு "இரண்டற கலந்து விட்டது" ...திருப்பவும் இவற்றை பற்றி வாசித்து விட்டு பதில் எழுதுகிறேன் ..

இன்று எனக்கு ஒரு வேலை இருப்பதால் இரவு அல்லது நாளை மிகுதியை தொடர்கிறேன்...

மிக முக்கியமாக குறிப்பிட விரும்புவது ...நான் சொல்லுவது இலகுவாக இருப்பதற்காக / இருக்க வேண்டும் என்பதற்காக சில (ஈட்டுக்கட்டின) கதைகளை சொல்லுகிறேன் ...எல்லாம் ஒரு 100 % சரியல்ல ...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான விவாதம்.

ஜெகுமாரும், எரிமலையும் நல்ல ஒரு முடிவை சொல்லுங்கப்பா.....

கொலஸ்ரோல் பயத்திலை ஒண்டையும் வாயிலை ருசிச்சு சாப்பிடேலாமல் இருக்குதே.....

எனக்கு நூறு வயசு மட்டும் வாழ ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான விவாதம்.

ஜெகுமாரும், எரிமலையும் நல்ல ஒரு முடிவை சொல்லுங்கப்பா.....

கொலஸ்ரோல் பயத்திலை ஒண்டையும் வாயிலை ருசிச்சு சாப்பிடேலாமல் இருக்குதே.....

எனக்கு நூறு வயசு மட்டும் வாழ ஆசை.

உதில நிறைய எழுதி.. உங்களைக் குழப்பினம்.

சுருக்கம் இதுதான் நிரம்பாத கொழுப்பு உடலுக்கு நல்லம். நிரம்பிய கொழுப்பு உடலில் கொலஸ்திரோலின் அளவை தேவைக்கு அதிகமாக அதிகரிக்க செய்திடும்.

நிரம்பிய கொழுப்புள்ள (saturated fat) உணவுகள்: பெருபாலான விலங்கு கொழுப்புகள். தேங்காய் எண்ணை.பட்டர். ரான்ஸ் கொழுப்புக் கொண்ட மாஜரீன் போன்றவையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

(நிரம்பிய எண்ணைகள் அல்லது கொழுப்புக்கள் குளிராக்க விரைந்து கட்டியாகிடும். இதைக் கொண்டு சாதாரண மக்கள் நிரம்பிய கொழுப்பை இலகுவாகக் கண்டு பிடிக்கலாம். தேங்காய் எண்ணையை குளிர்நாடுகளில் பாவிப்பது கடினம். காரணம் அது உறைந்துவிடும். அதற்குக் காரணம் அது நிரம்பிய கொழுப்பைக் கொண்டிருப்பதுதான். இப்படி தான் பட்டர் மாஜரீன் வகைகளும். சில மாஜரீன் தாவர கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் அவற்றை இரசாயன முறையில் பகுதியாக நிரம்பச் செய்வதால் ரான்ஸ் கொழுப்புக்கள் உருவாகின்றன. அவையும் உடலுக்கு நல்லமல்ல.)

நிரம்பாத கொழுப்புக்கள் (unsaturated fat): பெரும்பாலான தாவரக் கொழுப்புகள். மீன் கொழுப்பு. தாவரக் கொழுப்பில் சூரிய காந்தி.. ஒலிவ் இப்படியான எண்ணைகள் உடலுக்கு நன்மை.

எதுவும் அளவோடு இருந்தால் நல்லது.

நிரம்பிய கொழுப்புக்கள் தீய கொலஸ்ரோலின் (LDL) அளவை குருதியில் அதிகரிக்க நன்மை தீமை இரண்டின் சமநிலையும் பாதிக்கப்படும். நிரம்பாத கொழுப்புக்கள் நன்மை கொலஸ்ரோனின் (HDL) அளவை அதிகரிக்க சமநிலையும் (balance or ratio) கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் வகையில் அமையும்.

இதுபோக.. அதிக அளவு புட்டு சோறு இறைச்சி சாப்பிடுறதும் நல்லதல்ல. ஏனெனில் அவற்றின் மிச்சம் மீதியும் எமது உடலில் விலங்குக் கொழுப்பாகி சேமிக்கப்படும். நாமும் விலங்கு தானே. தமிழ் ஆக்கள் அரிசியை அள்ளிச் சாப்பிடுபவர்கள் என்பதால்.. அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவது ஒன்றும் புதினம் இல்லை. எதுவும் அளவோடு இருப்பின் நன்று.

உண்டி சுருக்கின்.. உடலுக்கு நன்று.

அதைவிட்டிட்டு.. உந்தப் புதுச் சொல்லாடல்களைக் கேட்டிட்டு பயப்பிடாதேங்கோ. இவை உயிர் இரசாயனம் சம்பந்தப்பட்ட சில சொல்லாடல்கள். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதில நிறைய எழுதி.. உங்களைக் குழப்பினம்.

------

இதுபோக.. அதிக அளவு புட்டு சோறு இறைச்சி சாப்பிடுறதும் நல்லதல்ல. ஏனெனில் அவற்றின் மிச்சம் மீதியும் எமது உடலில் விலங்குக் கொழுப்பாகி சேமிக்கப்படும். நாமும் விலங்கு தானே. தமிழ் ஆக்கள் அரிசியை அள்ளிச் சாப்பிடுபவர்கள் என்பதால்.. அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவது ஒன்றும் புதினம் இல்லை. எதுவும் அளவோடு இருப்பின் நன்று.

உண்டி சுருக்கின்.. உடலுக்கு நன்று.

அதைவிட்டிட்டு.. உந்தப் புதுச் சொல்லாடல்களைக் கேட்டிட்டு பயப்பிடாதேங்கோ. இவை உயிர் இரசாயனம் சம்பந்தப்பட்ட சில சொல்லாடல்கள். :rolleyes:

"உண்டி சுருக்கின் பெண்டிர்க்கு அழகு" என்று தான் தமிழ் வாத்தியார் சொல்லித் தந்தவர்.

அது ஆண்களுக்கு பொருந்துமா?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"உண்டி சுருக்கின் பெண்டிர்க்கு அழகு" என்று தான் தமிழ் வாத்தியார் சொல்லித் தந்தவர்.

அது ஆண்களுக்கு பொருந்துமா?

அதுதான் நான் மாற்றிவிட்டேன். அது அன்றைய காலத்தில் ஆண்கள் விவசாயம் அதுஇதென்று கடின வேலைகளைச் செய்பவர்களாகவும் பெண்கள் இலகு வேலைகளைச் செய்பவர்களாகவும் இருந்த காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால் இன்று அப்படியல்ல. ஆண்களும் பெண்களும் குந்தி இருந்து உடல் நோகாமல் செய்யுறதுதான் கெளரவமான உத்தியோகம் என்று நினைக்க வைக்கப்பட்டிருக்கினம். அப்படி இருக்கேக்க.. பழைய பழமொழியை அப்படியே பேண முடியாதல்லவா..??!

நான் தான் மாற்றிச் சொன்னேன். சம கால தேவைக்கு ஏற்ப. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நான் மாற்றிவிட்டேன். அது அன்றைய காலத்தில் ஆண்கள் விவசாயம் அதுஇதென்று கடின வேலைகளைச் செய்பவர்களாகவும் பெண்கள் இலகு வேலைகளைச் செய்பவர்களாகவும் இருந்த காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால் இன்று அப்படியல்ல. ஆண்களும் பெண்களும் குந்தி இருந்து உடல் நோகாமல் செய்யுறதுதான் கெளரவமான உத்தியோகம் என்று நினைக்க வைக்கப்பட்டிருக்கினம். அப்படி இருக்கேக்க.. பழைய பழமொழியை அப்படியே பேண முடியாதல்லவா..??!

நான் தான் மாற்றிச் சொன்னேன். சம கால தேவைக்கு ஏற்ப. :rolleyes:

ஓகே..... நெடுக்ஸ்,

இப்போ..... சம காலத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் எதைச் சுருக்குவது நல்லது?

அண்மையில் உடலை பூரணமாக பரிசோதித்ததில் என் இரத்ததில் Triglycerides இருக்க வேண்டிய அளவினை விட 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக எச்சரித்தார். என் குடும்ப மருத்துவர் என்பதால் நீண்ட நேரம் கதைத்த பின் இது அதிகரிக்க காரணமாக முக்கியமான மூன்று விடயங்களை கூறினார்.

முதலாவது, உடற்பயிற்சியினை திடீரென நிறுத்தினது

இரண்டாவது, அதிகமாக மாச்சத்து உணவுகளை உண்டது

மூன்றாவது, அதிகமாக முட்டை, சிவப்பு இறைச்சி என்பனவற்றைச் சாப்பிட்டது

இதனை தவிர்க்க, இவற்றை செய்யச் சொன்னார்

1. ஆகக் குறைந்தது 3 நாட்களுக்காகவாவது 40 நிமிடம் உடற்பயிற்சி அல்லது physical activity

2. ஒரு நேரமாவது மாச்சத்து உணவை தவிர்த்து பழங்கள், இலை, fiber என்பனவற்றை உண்ணுவது

3. அசைவம் சாப்பிட வேண்டுமெனில் மீன் / கோழி இறைச்சி என்பனவற்றை அதிகமாக சாப்பிடுவது

4. ஆடு, இறால் போன்றனவற்றை கிழமைக்கு ஒருக்காச் சாப்பிடுமாறு (நான் இரு வாரத்துக்கு ஒரு முறைதான் சாப்பிடுவது வழக்கம்)

Triglycerides என்பது பற்றி கீழே ஆங்கிலத்தில் உள்ளதை தருகின்றேன் (நன்றி: www.healthy-heart-guide.com

What are triglycerides?

Triglycerides are a scientific term for fatty deposits stored in your body. Following is a brief explanation of how they are formed:

Your body transforms the carbohydrates you eat into glucose to be used for energy by your cells. Once the cells have what they need, the excess glucose is sent back to your liver and converted to glycogen. Glycogen can then be stored in your muscles. (Bodybuilders can eat more carbs and be able to store them since their muscles are larger than those of an average person.)

Once you've reached your capacity of glycogen, excess glycogen is sent back to your liver again, where it becomes triglycerides, which are stored as fat. Your body has endless storage space for this fat, as we all know.

Now some of these triglycerides are not stored as fat, but remain in your blood stream, which is where the problem lies. Excess levels of triglycerides thicken your blood, making it sludgy, which increases the possibility of clotting and blockage which could eventually lead to a heart attack or stroke. This is why it is so important to keep your triglyceride levels as low as possible.

என்று விளக்கியுள்ளார்கள்

நாம் தமிழர்கள், அதிகமாக மாச்சத்து உண்பதாலும், உடற்பயிற்சியில் நாட்டம் காட்டாமையாலும் இது ஒரு பொதுவான பிரச்சனை என்றார் (நிறையப் பேர் இதனையும் 'கொலஸ்ரோல் கூடிட்டு' என்று தவறாகச் சொல்வர்). அவர் சொன்னதில் இருந்து மீண்டும் என் உடற்பயிற்சியினை ஆரம்பித்து விட்டேன். இலங்கை/இந்திய மீனை உண்ணக் கூடாது என்பதற்காக தமிழ் கடைகளில் மீன் வாங்குவதைத் தவிர்த்து மற்ற வணிக நிலையங்களில் மாட்டு இறைச்சி / ஆடு அடித்து உண்பது என்று கடந்த 2 வருடங்களாக தொடர்ந்திருந்தேன். இனி இந்திய மீன்களையாயவது உண்ண வேண்டும் என நினைக்கின்றேன்

ஓகே..... நெடுக்ஸ்,

இப்போ..... சம காலத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் எதைச் சுருக்குவது நல்லது?

எதைச் சுருக்க ஏலுமோ அதை சுருக்குங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் உடலை பூரணமாக பரிசோதித்ததில் என் இரத்ததில் Triglycerides இருக்க வேண்டிய அளவினை விட 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக எச்சரித்தார். என் குடும்ப மருத்துவர் என்பதால் நீண்ட நேரம் கதைத்த பின் இது அதிகரிக்க காரணமாக முக்கியமான மூன்று விடயங்களை கூறினார்.

Triglycerides என்பது கொழுப்பிற்கான இரசாயனப் பெயர். ஒரு glycerol மூலக்கூறும் 3 கொழுப்பு அமிலங்கங்கள் (fatty acids) எனப்படும் நீண்ட சங்கிலி காபொக்சி அமிலங்களும் எசுத்தராகத்தின் மூலம் உருவாக்குவதே இந்த கொழுப்பு ஆகும். அதைத்தான் சுருக்கமாக இப்படி அழைப்பர். உண்மையில் இதுதான் கொழுப்பு (fat).

இந்தக் கொழுப்பு அமிலங்களின் தன்மையில் தான் கொலஸ்ரோலின் அளவும் தீர்மானிக்கப்படுகிறது. அவை நிரம்பிய அமிலங்கள் என்றால் கொலஸ்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்கும். அவை நிரம்பாத கொழுப்பு அமிலங்கள் என்றால் குருதியில் கொலஸ்ரோலின் அளவு குறையும்.

(நாம் 10 கொழுப்பு அமிலங்களை உணவின் மூலம் பெற வேண்டும். ஏனெனில் அவற்றை எமது உடலுக்கு உற்பத்தி செய்யத் தெரியாது. எனவே தாவர உணவுகள் மற்றும் மீன் உணவுகளை உண்பதன் மூலம் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். விலங்கு இறைச்சிகள் முட்டை மஞ்சள் கருவில் அதிகம் நிரம்பிய கொழுப்பி இருப்பதால் அது குருதியில் கொலஸ்ரோலின் அளவைக் கூட்டும். அது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)

உங்கள் மருத்துவர் சரியான விளக்கத்தையே அளித்துள்ளார். அவற்றைப் பின்பற்றுவது சிறப்பானதோடு ஆரோக்கியமானதாக உங்கள் உடலைப் பேண உதவும்.

சிலருக்கு டாக்டர் கொலஸ்ரோல் இருக்கு என்றதும்.. கொழுப்பைக் குறைத்துவிட்டு மாப்பொருளை அதிகம் உண்ணும் பழக்கத்தைக் கொண்டு வருவர். ஆனால் அது நல்லதல்ல. நாம் கூடிய அளவு நார்ப்பொருட்களை உண்பதனால் பசியைக் கட்டுப்படுத்தி நிறை உணவாக இருக்கும் வகையில் குறிப்பிட்ட அளவுகளில் அவசியமான சத்துணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு உணவை முற்றாகக் கைவிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.

குறிப்பாக இறைச்சி உண்ணப்பட வேண்டும். எமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத கொழுப்பு அமிலம் போல புரதத்தை உருவாக்க உதவும் அமினோ அமிலங்கள் 10 ஐயும் உருவாக்க தெரியாது. அவற்றையும் உணவின் மூலமே பெற வேண்டும்.

சிவப்பு இறைச்சியை விடுத்து உங்கள் உள்ளங்கை அளவு உள்ள தோல் நீக்கிய.. கொழுப்பு அகற்றிய கோழி இறைச்சி சாப்பிடலாம். முற்றாக இறைச்சியை கைவிட வேண்டும் என்றில்லை. ஆடு மாடு பன்றி இறால் இவற்றைத் தவிர்ப்பது நன்று. மீன் உணவுகளில் சில கொழுப்பு அதிகம் கூடியவற்றை விடுத்து கொழுப்புக் குறைந்த மீன் உணவுகளை உண்ணலாம். இன்றேல் மீன் எண்ணெய் என்றுள்ள சத்துணவு மாத்திரைகளைக் கூடப் பாவிக்கலாம். :rolleyes:

Edited by nedukkalapoovan

Triglycerides என்பது கொழுப்பிற்கான இரசாயனப் பெயர். ஒரு glycerol மூலக்கூறும் 3 கொழுப்பு அமிலங்கங்கள் (fatty acids) எனப்படும் நீண்ட சங்கிலி காபொக்சி அமிலங்களும் எசுத்தராகத்தின் மூலம் உருவாக்குவதே இந்த கொழுப்பு ஆகும். அதைத்தான் சுருக்கமாக இப்படி அழைப்பர். உண்மையில் இதுதான் கொழுப்பு (fat).

இந்தக் கொழுப்பு அமிலங்களின் தன்மையில் தான் கொலஸ்ரோலின் அளவும் தீர்மானிக்கப்படுகிறது. அவை நிரம்பிய அமிலங்கள் என்றால் கொலஸ்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்கும். அவை நிரம்பாத கொழுப்பு அமிலங்கள் என்றால் குருதியில் கொலஸ்ரோலின் அளவு குறையும்.

(நாம் 10 கொழுப்பு அமிலங்களை உணவின் மூலம் பெற வேண்டும். ஏனெனில் அவற்றை எமது உடலுக்கு உற்பத்தி செய்யத் தெரியாது. எனவே தாவர உணவுகள் மற்றும் மீன் உணவுகளை உண்பதன் மூலம் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். விலங்கு இறைச்சிகள் முட்டை மஞ்சள் கருவில் அதிகம் நிரம்பிய கொழுப்பி இருப்பதால் அது குருதியில் கொலஸ்ரோலின் அளவைக் கூட்டும். அது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)

உங்கள் மருத்துவர் சரியான விளக்கத்தையே அளித்துள்ளார். அவற்றைப் பின்பற்றுவது சிறப்பானதோடு ஆரோக்கியமானதாக உங்கள் உடலைப் பேண உதவும்.

சிலருக்கு டாக்டர் கொலஸ்ரோல் இருக்கு என்றதும்.. கொழுப்பைக் குறைத்துவிட்டு மாப்பொருளை அதிகம் உண்ணும் பழக்கத்தைக் கொண்டு வருவர். ஆனால் அது நல்லதல்ல. நாம் கூடிய அளவு நார்ப்பொருட்களை உண்பதனால் பசியைக் கட்டுப்படுத்தி நிறை உணவாக இருக்கும் வகையில் குறிப்பிட்ட அளவுகளில் அவசியமான சத்துணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு உணவை முற்றாகக் கைவிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.

குறிப்பாக இறைச்சி உண்ணப்பட வேண்டும். எமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத கொழுப்பு அமிலம் போல புரதத்தை உருவாக்க உதவும் அமினோ அமிலங்கள் 10 ஐயும் உருவாக்க தெரியாது. அவற்றையும் உணவின் மூலமே பெற வேண்டும்.

சிவப்பு இறைச்சியை விடுத்து உங்கள் உள்ளங்கை அளவு உள்ள தோல் நீக்கிய.. கொழுப்பு அகற்றிய கோழி இறைச்சி சாப்பிடலாம். முற்றாக இறைச்சியை கைவிட வேண்டும் என்றில்லை. ஆடு மாடு பன்றி இறால் இவற்றைத் தவிர்ப்பது நன்று. மீன் உணவுகளில் சில கொழுப்பு அதிகம் கூடியவற்றை விடுத்து கொழுப்புக் குறைந்த மீன் உணவுகளை உண்ணலாம். இன்றேல் மீன் எண்ணெய் என்றுள்ள சத்துணவு மாத்திரைகளைக் கூடப் பாவிக்கலாம். :rolleyes:

நன்றி நெடுக்ஸ்,

என் மருத்துவர் எனக்கு Bad cholesterol (LDL) அளவு குறைந்தும் Good Cholesterol (HDL) இன் அளவு மாறாமலும் இருக்குது, ஆனால் Triglycerides இல் தான் பிரச்சனை என்றார். எனவே Cholesterol ஒருவருக்கு கூடிவிட்டது என்பது உண்மையில் எதனைக் குறிப்பிடுகின்றது? இவை மூன்றும் சேர்ந்ததா அது? Cholesterol என்பதும் fat என்பதும் வேறு வேறானவையா?

அத்துடன் பல உணவுப் பண்டங்களில் trans fat என்றும், Cholesterol என்றும் இரு விடயங்களை குறிப்பிட்டு இருப்பர். Trans fat என்பதன் அர்த்தம் என்ன (HDL லா?)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்,

என் மருத்துவர் எனக்கு Bad cholesterol (LDL) அளவு குறைந்தும் Good Cholesterol (HDL) இன் அளவு மாறாமலும் இருக்குது, ஆனால் Triglycerides இல் தான் பிரச்சனை என்றார். எனவே Cholesterol ஒருவருக்கு கூடிவிட்டது என்பது உண்மையில் எதனைக் குறிப்பிடுகின்றது? இவை மூன்றும் சேர்ந்ததா அது? Cholesterol என்பதும் fat என்பதும் வேறு வேறானவையா?

அத்துடன் பல உணவுப் பண்டங்களில் trans fat என்றும், Cholesterol என்றும் இரு விடயங்களை குறிப்பிட்டு இருப்பர். Trans fat என்பதன் அர்த்தம் என்ன (HDL லா?)

உங்களுக்கு உள்ள பிரச்சனை கொலஸ்ரோல் அல்ல. குருதியில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதே ஆகும். இரத்தத்தில் கொழுப்பு.. புரதம் என்று கிட்டத்தட்ட எல்லா வகை மூலக்கூறுகளும் உள்ளன. அவற்றின் அளவுகளில் பெரிய மாற்றம் ஏற்படின் அதன் பக்க விளைவுகள் அசாதாரண உடல்நிலையை தோற்றுவிக்கலாம்.

இதில் சாதாரண மக்கள் கொண்டுள்ள விளக்கங்கள் சரியானவை அல்ல. ஆனால் மக்களுக்கு கொலஸ்ரோல் பற்றிய அடிப்படை விடயத்தை காவ வேண்டும் என்பதையே முதன்மையாகக் கொள்கின்ற படியால்.. இந்தத் தவறுகளை பெரிதுபடுத்துவதில்லை.

Cholesterol என்பது கொழுப்பல்ல. அது Steroid வகை மூலக் கூறு. ஆனால் கொழுப்பிற்கான இரசாயன தாக்கக் கூறுகள் பிறிதொரு வகையில் மாறிச் சென்று உயிர் இரசாயன தாக்க சங்கிலிகளூடு பயணித்து இதை உருவாக்கின்றன. எமது உடலை ஆக்கியுள்ள கலங்களில் கலத்தைச் சுற்றி வேலியாக இடப்பட்டுள்ள கலமென்சவ்வின் கட்டமைப்பில் இதன் பங்களிப்பு முக்கியமானது.

Triglycerides என்பது கொழுப்பை. உடலில் கொழுப்பு அதிகம் இருந்தால் குறிப்பாக நிரம்பிய கொழுப்பு அதிகம் இருந்தால் அது LDL (Lower density lipo-protein)அளவை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் ஈரலில் கொழுப்பில் இருந்து உருவாகும் கொலஸ்ரோலை அளவுக்கு அதிகமாக இரத்தத்தின் வழி உடற்கலங்களுக்கு எடுத்துச் செல்ல நேரிடுவதால் குருதியில் கொலஸ்ரோல் அதிகரித்து.. அதன் பாதக விளைவுகள் நோய்களாக மாறுகின்றன.

கொலஸ்ரோல் கொழுப்பல்ல. கொழுப்பில் இருந்து (அதிகளவில்) ஈரலில் தயாரிக்கப்படும் பிறிதொரு வகை மூலக்கூறு என்பதுடன் பாலுணர்வைத் தூண்டும் ஓமோன்களும் Steroid வகை ஓமோன்கள் தான். ஆனால் அவை கொலஸ்ரோலின் கட்டமைப்பில் இருந்து சிறிது வேறுபடுகின்றன. ஆனால் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான். அதனால் கொலஸ்ரோல் பாலுறுப்பு அங்கங்களில் சிலவற்றிலும் உருவாக்கப்படலாம்.

நிரம்பாத கொழுப்பில் இருந்து மாஜரீன் போன்றவற்றைத் தயாரிக்க.. நிரம்பாத கொழுப்பிற்கு ஐதரசன் ஏற்றம் செய்து பகுதியாக நிரப்புவார்கள். அதன் மூலம் ரான்ஸ் வகை கொழுப்பமிலங்கள் தோன்றி கொழுப்பு மூலக்கூறின் வடிவத்தை சீர்குலைப்பதால் அவற்றை குறை திண்மமாக பேண முடியும். மாஜரீன் பாண் மீது தடவக் கூடியதாக இருக்க இதுவே காரணம். பட்டர் கடினமானது தடவ கஸ்டம். காரணம் அது நிரம்பிய கொழுப்பைக் கொண்டது. இந்த ரான்ஸ் கொழுப்பும் LDL இன் அளவை குருதியில் அதிகரிப்பதால் அதுவும் கொலஸ்ரோல் குருதியில் காவப்படுவதை அதிகரித்து.. கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எதைச் சுருக்க ஏலுமோ அதை சுருக்குங்கோ

அது மட்டும் சுருங்காமல் இருக்குதே.....

உங்களுக்கு உள்ள பிரச்சனை கொலஸ்ரோல் அல்ல. குருதியில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதே ஆகும். இரத்தத்தில் கொழுப்பு.. புரதம் என்று கிட்டத்தட்ட எல்லா வகை மூலக்கூறுகளும் உள்ளன. அவற்றின் அளவுகளில் பெரிய மாற்றம் ஏற்படின் அதன் பக்க விளைவுகள் அசாதாரண உடல்நிலையை தோற்றுவிக்கலாம்.

இதில் சாதாரண மக்கள் கொண்டுள்ள விளக்கங்கள் சரியானவை அல்ல. ஆனால் மக்களுக்கு கொலஸ்ரோல் பற்றிய அடிப்படை விடயத்தை காவ வேண்டும் என்பதையே முதன்மையாகக் கொள்கின்ற படியால்.. இந்தத் தவறுகளை பெரிதுபடுத்துவதில்லை.

Cholesterol என்பது கொழுப்பல்ல. அது Steroid வகை மூலக் கூறு. ஆனால் கொழுப்பிற்கான இரசாயன தாக்கக் கூறுகள் பிறிதொரு வகையில் மாறிச் சென்று உயிர் இரசாயன தாக்க சங்கிலிகளூடு பயணித்து இதை உருவாக்கின்றன. எமது உடலை ஆக்கியுள்ள கலங்களில் கலத்தைச் சுற்றி வேலியாக இடப்பட்டுள்ள கலமென்சவ்வின் கட்டமைப்பில் இதன் பங்களிப்பு முக்கியமானது.

Triglycerides என்பது கொழுப்பை. உடலில் கொழுப்பு அதிகம் இருந்தால் குறிப்பாக நிரம்பாத கொழுப்பு அதிகம் இருந்தால் அது LDL (Lower density lipo-protein)அளவை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் ஈரலில் கொழுப்பில் இருந்து உருவாகும் கொலஸ்ரோலை அளவுக்கு அதிகமாக இரத்தத்தின் வழி உடற்கலங்களுக்கு எடுத்துச் செல்ல நேரிடுவதால் குருதியில் கொலஸ்ரோல் அதிகரித்து.. அதன் பாதக விளைவுகள் நோய்களாக மாறுகின்றன.

கொலஸ்ரோல் கொழுப்பல்ல. கொழுப்பில் இருந்து (அதிகளவில்) ஈரலில் தயாரிக்கப்படும் பிறிதொரு வகை மூலக்கூறு என்பதுடன் பாலுணர்வைத் தூண்டும் ஓமோன்களும் Steroid வகை ஓமோன்கள் தான். ஆனால் அவை கொலஸ்ரோலின் கட்டமைப்பில் இருந்து சிறிது வேறுபடுகின்றன. ஆனால் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான். அதனால் கொலஸ்ரோல் பாலுறுப்பு அங்கங்களில் சிலவற்றிலும் உருவாக்கப்படலாம்.

நிரம்பாத கொழுப்பில் இருந்து மாஜரீன் போன்றவற்றைத் தயாரிக்க.. நிரம்பாத கொழுப்பிற்கு ஐதரசன் ஏற்றம் செய்து பகுதியாக நிரப்புவார்கள். அதன் மூலம் ரான்ஸ் வகை கொழுப்பமிலங்கள் தோன்றி கொழுப்பு மூலக்கூறின் வடிவத்தை சீர்குலைப்பதால் அவற்றை குறை திண்மமாக பேண முடியும். மாஜரீன் பாண் மீது தடவக் கூடியதாக இருக்க இதுவே காரணம். பட்டர் கடினமானது தடவ கஸ்டம். காரணம் அது நிரம்பிய கொழுப்பைக் கொண்டது. இந்த ரான்ஸ் கொழுப்பும் LDL இன் அளவை குருதியில் அதிகரிப்பதால் அதுவும் கொலஸ்ரோல் குருதியில் காவப்படுவதை அதிகரித்து.. கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்கிறது.

நன்றி நெடுக்ஸ்..

Trans fat என்பது hydrogenate செய்யப்பட்ட கொழுப்பு என்று விளங்கிக் கொண்டால் சரியா? அத்துடன் Trans fatஅதிகமுள்ள பொருட்களையும் தவிர்க்க வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்..

Trans fat என்பது hydrogenate செய்யப்பட்ட கொழுப்பு என்று விளங்கிக் கொண்டால் சரியா? அத்துடன் Trans fatஅதிகமுள்ள பொருட்களையும் தவிர்க்க வேண்டும் அல்லவா?

ஆம் அப்படி எடுத்துக் கொள்ளலாம். பகுதியாக ஐதரசன் ஏற்றப்பட்ட கொழுப்பு என்பது கூடிய திருத்தமாக இருக்கும்.

ஆம்.. தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரான்ஸ் கொழுப்பு.. LDL அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால்.

ரான்ஸ் கொழுப்பு மாஜரீனில் அதிகம். அதுமட்டுமன்றி மஜரீன் கொண்டு தயாரிக்கப்பட்ட பிஸ்கட் போன்றவற்றையும் தவிர்ப்பது நன்று. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கோட்டை நலெண்ணையும், பூ நகரி அரிசியும், உரும்பிராய் கிழங்கும் சாப்பிட்ட பின் .......

வயித்தெரிச்சலிலை ...... வயாக்கரா குழுசை திண்டு போட்டு, திமிர் எடுக்கும் தமிழன் ஒழி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உந்த கொலஸ்ரோல் விசயத்திலை பத்துவருச சேவீஸ் இருக்கு.

உங்கை கதைக்கிற ஒருசில ஆக்களை பாக்கேக்கை சிரிப்புசிரிப்பாய் வரூதப்பா :lol:

அது அவரவற்றை உடம்பு வாசி... அதுவும் இந்த அவசர உலகத்திலை உதெல்லாம் சர்வசாதாரணமப்பா :rolleyes:

மாஜரீனிலும் பார்க்க பட்டரில் அதிகம் ரான்ஸ் கொழுப்பு இருக்கும் என்பது உண்மையா?

ஆனைக்கோட்டை நலெண்ணையும், பூ நகரி அரிசியும், உரும்பிராய் கிழங்கும் சாப்பிட்ட பின் .......

வயித்தெரிச்சலிலை ...... வயாக்கரா குழுசை திண்டு போட்டு, திமிர் எடுக்கும் தமிழன் ஒழி.

:rolleyes: உங்களுக்கு என்ன நடந்தது சிறி அண்ண??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.