Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரித்திரியா எமக்கு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது, குமரன் பத்மநாதன் புலனாய்வுத்துறையின் பொக்கிசம் - கோத்தபாய ராஜபக்ச தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

எரித்திரியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நாம் அங்கு தூதரகத்தை அமைப்பதற்கு முற்பட்டிருந்தோம். ஆனால் எரித்திரியா தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவது மிகவும் பின்னடைவான விளைவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது. எரித்திரியா தொடர்பில் நாம் சில கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளோம்.

எரித்திரியாவில் விடுதலைப் புலிகள் பலமான வலையமைப்பை கொண்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் ஊடகங்கள் எமது நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் எம்மால் எரித்திரியாவின் ஆதரவை பெறமுடியவில்லை. தற்போது நாம் மீண்டும் அவர்களுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகின்றோம். பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பல்வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அது அந்த நாடுகளுக்கு தெரியாது. நாம் தான் அதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.சில நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவது பயனற்றது, ஏனெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை.

சில நாடுகள் தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் செயற்படுகின்றனர் என தெரிவிப்பதை விரும்புவதில்லை. இது தொடர்பில் எமக்கு உள்ள சிறந்த உதாரணம் எரித்திரியாவாகும். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு மேற்குலக நாடுகள் எம்முடன் ஒத்துழைப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள மிகப்பெரும் புலம்பெயர் தமிழ் சமூகமாகும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அழுத்தங்களை மீறி எம்மால் மேற்குலக நாடுகளை (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை) எமது பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நாடுகளின் உதவிகள் இன்றி விடுதலைப் புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது என்பது கடினமானது.

இராணுவ மோதல்கள் மூலம் பெறமுடியாததை, சில நாடுகளின் உதவிகளுடன் அடைந்துவிட விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் பெரும்பாலான தமிழ் சமூகம் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் சிறீலங்காவுக்கு மீண்டும் வந்து வாழ விரும்புகின்றனர். குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை. அவர் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பயனுள்ளவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி தன் சொந்தச் சரக்காக அவித்து தரும் செய்தியின் மூலம், டெயிலி மிரர் ஆகும். சங்கதி தன் சொந்த புலநாய்வுச் செய்தியாக தன் குழுநிலை வாதத்தையும் கலந்து தந்துள்ளது

========

The Sri Lankan government’s attempt to establish diplomatic ties with the state of Eritrea have diminished due to certain media reports published in recent times, Defense Secretary Gotabhaya Rajapaksa told Daily Mirror online.

“It came out in the papers and now Eritrea has completely shut down everything; they don’t talk to us and they completely cut us off,” the Defense Secretary said in an interview with the website.

Further all plans to establish a Sri Lankan consulate in Eritrea, in order to monitor various LTTE elements within that nation, have also failed. “There were plans to open a consulate there; but even that they refused,” the Defense Secretary said.

He further emphasized that the exposure of defense matters via the media was counter productive, in gathering information.

“We had very bad experiences with Eritrea. We know that there are certain assets that belong to the LTTE; but because it came out in a newspaper they refused to cooperate with us. Now we are in the process of redeveloping our ties with them, from scratch,” Rajapaksa said.

The Secretary of Defense made these statements in response to the questions of whether elements of the LTTE were trying to regroup and what intelligence was being gathered through the chief LTTE arms procurer Kumaran Padmanadan (KP) who is now in government custody.

Rajapaksa noted that a number of countries were unaware that operations taking place within their boundaries were fueling the interests of the LTTE. “There are different businesses they (LTTE) were running and for those countries these were legitimate business. Therefore if we had not given the information these governments would not know; that these are LTTE businesses,” he said.

However he claimed that western countries were affronted if the Sri Lankan government made public the fact that such elements were operating within their borders. “Naming countries is of no use, because when we name the country those countries don’t like it. Those countries don’t want to know that certain LTTE groups were operating within their borders and we had a very bad experience with Eritrea,” he said.

When asked about confronting LTTE elements internationally the Secretary explained that the western block was not always cooperative. “With most countries it is easy but with the western countries it is very difficult because there is a very big pro-LTTE Tamil Diaspora and we don’t get much cooperation from western countries; especially the European countries. So without their cooperation it is very difficult to catch these people,” he said.

He further noted that the LTTE was trying to legitimize itself in order to deceive certain governments and gain their support. “Therefore what they (the LTTE) could not achieve through military means they will try to achieve through other means with the help of these governments. And this is why they are trying to establish this Transnational Government of Tamil Elam,” he said.

He conceded however that a large majority of the Diaspora was hoping for reconciliation within the island. “But what I see is that although there is a big Tamil Diaspora, the majority of them are moderates and don’t support the Elam concept. Most of them want to come back to Sri Lank and live peacefully,” he said.

Meanwhile, there are no plans to present KP before court; however information provided by him has been invaluable to government intelligence. “We are yet to decide on the matter of presenting him before court. We are still in the process of gathering information, from him because he was a person who was working with the LTTE especially on international affairs, business and procurement. Therefore we want to get as much information as possible and especially to break into their (the LTTE) network and get their assets,” the Secretary said. (Daily Mirror online)

www.dailymirror.lk

Edited by பிழம்பு

சங்கதி தன் சொந்தச் சரக்காக அவித்து தரும் செய்தியின் மூலம், டெயிலி மிரர் ஆகும். சங்கதி தன் சொந்த புலநாய்வுச் செய்தியாக தன் குழுநிலை வாதத்தையும் கலந்து தந்துள்ளது

========

He conceded however that a large majority of the Diaspora was hoping for reconciliation within the island. “But what I see is that although there is a big Tamil Diaspora, the majority of them are moderates and don’t support the Elam concept. Most of them want to come back to Sri Lank and live peacefully,” he said.

www.dailymirror.lk

ஐரோப்பாவுக்கு வந்து வாக்கெடுப்பு நடத்தியோ இந்த முடிவுக்கு வந்தவர் கோத்தபாய.

ஜனாதிபதி தேர்த்லுக்கு முன்னன் ஏதோ வெட்டிப்புடுங்கினாங்கள்... 10 விமானம் நிக்குது அதை கொண்டுவரபோகிறோம் அதுக்கு தமது விமானப்படை புறப்பட தயாரா இருக்குது எண்டு... இதெல்லாம் பீலாவா.............

நாடு கடந்த தமீழழ அரசுக்கான தலமையகம் எரித்ரியாவில் அமைக்கப்படுவதே, தமிழர்களுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும்.சீனவுடனான உறவுக்கும் மேற்குலகம் சார்ந்த உறவுக்கும் இது அவசியம்.மேற்குலகம் சார்ந்து மட்டுமே இயங்குவது எங்களது நலன் சார் நகர்வுகளுக்குத் தடையாக இருக்கும்.

. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

எல்லா நாடுகளும் தங்களுக்கு வாலாட்டும் என நினைத்திருந்தார்போலும்

. குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை. அவர் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பயனுள்ளவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.

யோசிக்க வேண்டிய விடயம்

மேற்குலக நாடுகள் எம்முடன் ஒத்துழைப்பதில்லை......மேற்குலக நாடுகளை (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை) எமது பக்கம் திரும்ப முடியவில்லை

இலங்கையின் உண்மையான முகத்தை புரிந்துகொண்டதுதான் காரணம்

பத்மநாதன் துரோகியா நண்பனா எதிரியா என்பது இப்போது பிரச்சனையல்ல. புலம் பெயர் தமிழர்களுடைய எதிர்காலம் அவர்களுடைய பலம் அவர்கள் கடந்த காலத்தில் விட்ட தவறுகள் என்பவற்றை அலசி ஆராய்ந்து எதிர்காலத்தில் அந்தத் தவறுகளை திருத்தி அரசியல் ரீதியாக சர்வதேச சமூகத்துடன் பேரம்பேசக் கூடிய சக்தியாக நாடுகளை கடந்து ஈழத் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் புலம்பெயாந்த தமிழ் சமூகம் ஒன்றுபட வேண்டியது வரலாற்றுக் கட்டாயம் ஆகும்.

சிறீலங்கா அரசு கேபிவை வைத்து புலம் பெயர் தமிழர்களுடைய அரசியல் பலத்தை அழிக்க முற்படுமாக இருந்தால் அது முதலில் நாடுகடந்த தமிமீழம் என்ற அமைப்பு உருவாவதை என்ன விலை கொடுத்தும் தடுக்க முற்படும்.ஏனென்றால் பல்வேறு நாட்டு குடியுரிமைகளையும் வதிவிட உரிமைகளையும் கொண்ட ஒரு குறிப்பிட்ட இனக்குழுத்தை சேர்ந்த மக்கள் அந்த இனக் குழுமம் என்ற ஒன்றை அடையாளத்தின் கீழ் (யுதர்களைப் போல) ஜனநாயக விழுமியங்களை கடைப் பிடித்து ஒன்றுபடும் போது அது அந்த இனத்தை அடக்கி ஒடுக்கிவரும் அடக்குமுறை அரசுகளுக்கு பெரும் இருக்கடியை ஏற்படுத்தும். இவ்வாறான ஒரு அமைப்பை தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களை பயங்கரவாத முத்திரை குத்தி ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செயற்பட விடாமல் மடக்கியதை போல அவ்வளவு சுலபத்தில் முடக்கிவிட முடியாது.இது புலம் பெயாந்த தமிழர்கள் அரசியல் பொருளாதார மறறும் ஊடக ரீதியாக பலம்பெற வேண்டிய ஒரு காலகட்டமாகும்.

மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதத்தது தவறு.அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. மேற்குலகம் விடுதலைப்புலிகள் மீது விதித்த தடைதான் பல்லாயிரக் கணக்கான மக்கள் இனப் படுகொலை செய்ப்பட்டதற்கும் இலட்சக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக திறந்தவெளிச் சிறைச்சாலைகளுக்குள் அடைக்கப்பட்டதற்கும் காரணமாகும் என்பதை .புலம்பெயாந்த தமிழ் மக்களாகிய நாங்கள் சர்வதேச சமூகத்தக்கு ஜனநாக முறைப்படி தெரிவிக்கின்றோம் என்பதற்கான சர்வசன வாக்கெடுப்பே இப்போதைய தேவையாகும்.

தமிழீழம் என்பது மாற்றமுடியாத முடிவு.தமிழ் மக்கள் எற்கனவே அதற்குரிய ஆணையை தெளிவாக வழங்கிவிட்டார்கள்.30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவிரச் செல்வங்கள் தமிழிழத் தாயகம் என்ற அந்த இலட்சியத்துக்காகத் தான் தங்களது இன்னுயிர்களை அர்பணித்தார்கள். இந்த நிலையில் வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீதான மீழ் வாக்கெடுப்புக்கான தேவை ஏன் ஏற்பட்டது?யார் மீது நம்பிக்கை இல்லாமல் அல்லது யாருக்கு காண்பிக்க நாங்கள் இந்த வாக் கொடுப்பை நடத்தினோம். இந்த வாக்கெடுப்பால் யாருக்கு லாபம்?

மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் தமிழீழம் என்ற கேரிக்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுகிறோம் என்று சொன்னால் இந்த நாடுகள் தங்கள் தவறை உணாந்து விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழழம் என்ற இலக்கை நாங்கள் அடைவதற்கு உறுதுணை புரிவாhர்களா என்ன?

மறுபுறத்தில் சிறீலங்கா மற்றும் இந்திய அரசுகள் என்ன சொல்கிறன. தமிழழும் என்பது பிரிவினைவாதம்.அதற்கான ஆயுதப் போராட்டம் உட்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் பயங்கரவாதம்.இலங்கைத் தீவிலுள்ள மக்கள் தழிழீத்தை ஆதரிக்கவில்லை.வடக்கு சிழக்கு பகுதியை விட அதற்கு வெளியில் தான் அதிகளவு தமிழ் மக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிங்கள் மக்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசாங்கத்தில் இணையத் தொடங்கிவிட்டார்கள்.புலம் பெயாந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் தான் பிரிவினைவாதத்துக்கு உயிர்கொடுக்க முற்படுகிறார்கள்.பயங்கரவாத செற்பாடுகளை தொடர்வதற்கான முயற்சிக்காக ஒன்றிணைகிறார்கள்..இந்த முயற்சி சிறீலங்காவின் இறையாண்மைக்கும் தெற்காசியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறத்தலான அமைகிறது என்று இந்த இரண்டு நாடுகளும் தங்களது இராஜதந்திர வலைப் பின்னலை பயன்படுத்தி பாரிய பரப்புரையை முன்னெடுத்துள்ளன.

மறுபுறத்தில் இந்த வாக்கெடுப்பை விடுதலைப்புலிகளை பயங்கரவாதம் என்று அறிவித்தது தவறானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல என்பதற்காக வாக்கெடுப்பாக நடத்தியிருந்தால் புலம் பெயாந்த நாடுகளில் விடுதலைப்புலிகள் மக்களை மிரட்டி பணம் பறித்தர்கள் மக்களை மிரட்டினார்கள் என்று கடந்த காலத்தில் இந்த மேற்குலக நாடுகளால் கட்டமைக்கப்பட்ட ‘பயகரவாத பிரம்மை’ கலைந்து பேவதற்கு சாத்தியக் கூறுகள் ஏறபட்டிருக்கும்

கடந்த காலத்தில் இந்த உலகம் ஒரே நாளில் எங்கள் மீதான தடையை கொண்டுவரவில்லை.அதே போல ஒரே நாளில் எங்களை நசுக்கும் முடிவை எடுக்கவில்லை.

நடந்து முடிந்த வன்னிப் பேரவலத்துக்கு எதிராக நாங்கள் இலட்சக் கணக்கில் மேற்குலக வீதிகளில் இறங்கியும் அதை தடுத்துநிறுத்த எங்களால் முடியவில்லை.இதற்கு என்ன காரணம் என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? இந்த உலகம் எங்களது உணர்வுகளை திசை திருப்ப பார்த்ததே அன்றி எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தரவோ அல்லது யுத்தத்தை நிறுத்தி எங்களது உறவுகளை காப்பாற்றவே முயலவில்லை. நெஇத நிலைமை ஏன் என்று நாங்கள் சிந்தித்தோமா?. இந்த உலகில் தமிழர்கான நாங்கள் எந்த விதத்திலும் தீர்மானகரமான சக்கதியாக இருக்கவில்லை. ஒன்றரைக் கோடி சிங்களவனுக்கு உள்ள மரியாதை ஏழரைக் கோடி தமிழனுக்கு இல்லையே ஏன்? நாங்கள் அவன் துரோகி இவன் துரோகி என்று ஆளுக்காள் முத்திரை குத்திக் கொண்டு களத்தில் எங்களது எங்களுக்குள்ளேயே அரசியல் நடத்தி குழிபறித்துக்கொண்டு நாங்கள் உணர்வு புர்வமாக செயற்படுகிறோம் என்று பிலிம் காட்டிக் கொண்டு அறிவு புர்வமாக செயற்படத் தவறியதே ஒரு மாபெரும் விடுதலை இயக்;கம் மாபெரும் பி;ன்னடைவை சந்தித்ததற்கு காரணமாகும்.

அடக்குமுறைகளும் இனப்படுகொலைகளும் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் அழித்துவிடுவதில்லை மாறாக அது இன்னும் வீறு கொண்டெழும்.அந்த வகையில் எமது போராட்டமும் நிச்சயம் வீறு கொண்டெழும்.எப்படி கடந்த தலைமுறையில் ஆரம்பித்து இந்தத் தலைமுறை வரை தொடாந்து மாபெரும் இராணுவ வெற்றிகளை குவித்த விடுதலைப் போராட்டம் புலம் பெயர்ந்த நாடுகளில் அறிவு புர்வமான செயற்படத்தவறிய போக்கினால் அதாவது தமிழர்களுடைய சக்தி வளத்தை ஒருடைமப்படுத்தி உலக ஒழுங்கில் ஒரு சிறய அளவுக்காவது தாக்கத்தை எற்படுத்தத் தவறிய செயற்பாட்டினால் பாரிய பின்னடைவை சந்தித்ததோ இப்போதும் தமிழ் தேசியத்தின் உணர்வபுர்வமான செயற்பாட்டாளர்கள் நாங்களே என்று பிலிம் காட்டடியவாறு தொடரும் இந்தப் போக்கு நிச்சயம் அடுத்தலைக்கு தலைமுறைக்கு தொடரப் போகும் இந்தப்போராட்டத்துக்கு நிச்சயம் துரோகம் இழைக்கும்.இடைஞ்சலாகவும் இருக்கும்

.

இப்போது எமக்குள்ள தேவை தமிழர்களுடைய சக்தி வளத்தை ஒருங்கிணைப்பது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நிருபிப்பதது.அதாவது தடையை நீக்குவிப்பது.

உலகம் எங்கள் விடையத்தில் தவறிழைத்துவிட்டது என்பது உணரவைப்பது.

இதற்கு நாங்கள் எங்களை திருத்த வேண்டும்.எங்களது கடந்த கால செயற்பாடுகளை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும்.

தமிழ் தேசித்துக்கு உழைப்பதாக பிலிம் காட்டிக் கொண்டிக்கும் புலம் பெயர் ஊடகங்களுக்கு பகிரங்கமாக நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பாலியல் தொழிலாளி தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவளை இழிவானவளாக கேவலமாவளாக பாhக்கிறோம் .ஆனால் தாயக விடுதலைக்காக இரத்தம் சிந்தி தங்களது உயிர்களை ஆகதியாக்கிய மாவீர்களின் தியாத்தை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களை என்ன சொல்லி அழைப்பது? தன்னுடைய ஒரு வேளை சாப்பாட்டை பசியோடு இருந்த ஒருவனுக்கு பகிhந்து கொடுத்து சாப்பிட மனமில்லாதவன் தாயக விடுதலைக்கு தங்கள் இனிய உயிர்களை ஆகுதியாக்கிய மாவிரர்களைது ஈகத்தை வைத்து பிலிம் காட்டுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றா?

மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி மக்களை குழப்புவதற்கு முன்னர் நீங்கள் தியாகிகளா என்பதை சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

சிவா சின்னப்பொடி

Edited by navam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசம் கொண்டுள்ள பயங்கரவாத பிரமை நாம் சனநாயகத்துக்கு திரும்பினால் மாறாது.

அவன் மாறுவதற்கு எங்கள்நாட்டில் என்ன லாபம் அல்லது பயன் அவனுக்கு உண்டு.ஒன்றுமேயில்லை.

சனநாயகமுறையில் பாலஸ்தீனியமக்களால் தெரியப்பட்ட கமாஸ் அமைப்புக்கு இந்த சர்வதேசம் கொடுத்த,கொடுத்துவருகிற அழுத்தங்கள் இன்னும்நின்றபாடு இல்லை.

நாங்களே எங்களுக்கு காரணங்களை சொல்லி அதற்கு பரிகாரமாக குமரன்பத்மநாதன் சொன்னதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று கங்கணம்கட்டுவது முட்டாள்த்தனம்.

அதுசரி,புலிகள் சனநாயகமாக இருந்திருந்தால் இன்னும்ஒரு ஐந்துநாள் அதிகமாக முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நிற்கவிட்டிருக்குமாக்கும் இந்த சர்வதேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை.

ஆள் இருக்கின்றாரோ இல்லையோ யாருக்குத் தெரியும். இருந்தாலும் அவர் எவர்கையில் என்பதும் தெரியாது. குமரன் பத்தமநாதனை வைத்து சிங்களவர்களையும் தமிழர்களையும் உளவியல் ரீதியில் கையாள முற்படுகின்றனர் என்பது மட்டும் தெரிகின்றது.

குமரன் பத்மநாதன் ஆயுதப்போராட்டம் வலுவாக இருந்தகாலத்தில் முக்கியத்துவமானவர் இப்போது அதே முக்கியத்துவத்துடன் அவரை அணுகவேண்டிய அரசியல் முன்னெடுப்பு தமிழ்மக்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து சிங்கள அரசு குமரனை வைத்து விழையாடுவதை கடந்து செல்ல முற்பட வேண்டும். குமரன் தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கான மையப்புள்ளி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் இருக்கின்றாரோ இல்லையோ யாருக்குத் தெரியும். இருந்தாலும் அவர் எவர்கையில் என்பதும் தெரியாது. குமரன் பத்தமநாதனை வைத்து சிங்களவர்களையும் தமிழர்களையும் உளவியல் ரீதியில் கையாள முற்படுகின்றனர் என்பது மட்டும் தெரிகின்றது.

சில ஊடகங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களில் சிலர் குமரன் பத்மநாதன் விலை போய்விட்டார் என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஒருவருக்கும் அவர் சிறிலங்காவுக்கு கொண்டு சென்றபின் அவருக்கு நடந்தவை தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்றும் தெரியாது. ஆள் உயிரோட இருக்கிறாரா என்பது தெரியாது. எம்மிள் யாரோ ஒருவர் அவர் துரோகியாக இருக்கலாம் என்று சொல்ல அதை பற்றி யோசிக்கமால் அவர் துரோகி தான் என்று கதை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது சிறிலங்கா அரசிற்கு கிடைத்த வெற்றி. இதற்கு உதவி செய்தவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் சிலர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில ஊடகங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களில் சிலர் குமரன் பத்மநாதன் விலை போய்விட்டார் என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஒருவருக்கும் அவர் சிறிலங்காவுக்கு கொண்டு சென்றபின் அவருக்கு நடந்தவை தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்றும் தெரியாது. ஆள் உயிரோட இருக்கிறாரா என்பது தெரியாது. எம்மிள் யாரோ ஒருவர் அவர் துரோகியாக இருக்கலாம் என்று சொல்ல அதை பற்றி யோசிக்கமால் அவர் துரோகி தான் என்று கதை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது சிறிலங்கா அரசிற்கு கிடைத்த வெற்றி. இதற்கு உதவி செய்தவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் சிலர்.

நல்லவர் துரோகியா போட்டார், தானபோய் இருந்தால் துரோகி, போகவைப்பட்டால் என்ன பெயர். :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று தனிமைப் படுத்தி தடைசெய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின்போது சர்வதேசம் தொடற்ச்சியாக எங்கள் மீது வைத்துவந்த குற்றச் சாட்டுகளை அட்டவணைப் படுத்தி அவற்றின் உண்மை பொய் பற்றி விவாதித்து ஆராயாமல் சர்வதேத்துக்கு பதில் சொல்ல வாய்ப்பில்லை. ஆதாரப் படுத்தப் பட்ட தவறுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனெனில் பல நாடுகள் தங்கள் அளவில் பிரதி நிதிகளையும் ஆய்வாளர்களையும் ஈடுபடுத்தியும் சர்வதேச தொண்டு நிறுவனங்களூடாகவும் சர்வதேச தொலைத் தொடர்பு மற்றும் செய்மதி தொலைத் தொடர்புகள் செய்மதிப் படங்களை ஆதரமாக்கியும் தங்கள் படத்தை உருவாக்கி வைத்துள்ளனர். களத்தில் உள்ள மக்களோடு அவர்களுக்கு தங்கள் அமைப்புகளூடாகவும் சர்வதேச பத்திரிகை வலைப்பின்னல்கள் ஊடாகவும் நேரடித் தொடர்புள்ளது. புலம் தமிழர்கள் சர்வதேசத்தை முரண்படலாம் சாட்சிகளாக வாழுகிற களத்தில் உள்ள தமிழர்கலை முரண்படவோ துரோகிகளாக்கவோ முடியாது. சர்வசன வாக்கெடுப்பின் மூலம் களத்துக்கு வெளியில் நிற்க்கிறவர்களின் ஒற்றுமையை காட்டலாம் ஒழிய புகுற்றச் சாட்டுக்களை நிராகரித்துவிட முடியாது. வாக்கெடுப்பு மூலம் ப்லம் பெயர்ந்தவகளது முனைப்பை களத்தில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டமுடியாது. வடக்கு கிழக்கு இரண்டாக உள்ள நிலையில் தனிய வடக்கைச் சேர்ந்தவர்கள் முன்னெடுக்கும் விடயங்களையும் களத்தில் மக்கள் ஆதரவு இல்லாதவர்கள் முன்னெடுக்கும் விடயங்களையும் சர்வதேச ச்சர்வதேச சமூகத்தின் பொருட்படுத்தும் என்று சொல்வதற்க்கில்லை.

சர்வ தேச சமூகம் பொருட்படுத்தும் பலத்தை புலம் பெயர்ந்த அமைப்புகள் கள செயற்பாட்டாளர்களோடுடனான தொடர்புமூலம் பெறுவதும் குற்றச்சாட்டுக்களின் ஆதாரப் பட்டதை ஒத்துக்கொண்டு ஆதாரப் படாதவற்றை மறுப்பதும் காலத்துக்கேற்ற அரசியல் அமைப்புகள் வடிவங்கள் ஊஉடாக செயல்படுவதும் அவசியம்

சர்வதேசம் முன்வைக்கும் சில பயங்கரவாத குற்றச் சாட்ட்சுகள்’ இவை என்முன்னே சர்வதேச சமூக பிரதிநிதிகள் கேட்ட கெழ்விகளில் சில மட்டுமே.

1.வடபகுதி முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு

2.தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொழீல் நுட்ப்பம் தொடற்ஆஆணாஆஈ

3.சிறுவர்களும் மற்றும் பெரியவர்கள் வலுக்கட்டாயமாகவும் இராணுவத்தில் சேர்ப்பு

4. கருத்து முரண்பட்டவர்களை போர்க்களத்துக்கு வெளியே கொன்றமை. ஜெயதேவன் கொலை முயற்ச்சி.

5, ஜெனீவா பேச்சுவார்தையை உடைத்தது தமிழர் தரப்பு என்பது

6 மேற்க்கு நாடுகளின் சட்டங்களை மீறியது

7. வெளிநாடுகளில் வன்முறையில் ஈடுபட்டது. ராஜீவ் காந்த்iிகொலை

இவை சர்வதேச சமூகப் பிரதி நிதிகளால் என்னிடம் அடிக்கடி கேட்க்கப் பட்டுகிற கேழிவிகளில் முக்கியமான சிலவாகும். இலங்கை இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் அதிகாரிகள் இந்தவிடயங்களின் அடிப்படையிலேயே போரளிகலை தடை செய்யுமாறு சர்வதேச சமூகங்களை நிர்ப்பந்திதனர். இதைவிட சர்வதேச சமூகம் விதித்த நிபந்தனைகள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் இவற்றை ஒரு வரியில் மறுத்துவிட முடியும் என நான் நம்பவில்லை. அது தொடர்பாக நேர்மையான விவாதங்கள் அவசியம். சர்வ தேச சமூகஹ்துக்கு பதில் சொல்ல்லுவதை விட களத்தில் வாழும் மக்களுக்கு உள்ள கேழ்விகளை அட்டவணைப் படுத்தி நேர்மையாக பதில் சொல்லுவது அவசியம். இப்பொழுது அவர்கள் பாஸ் நடைமுறைமூலம் மக்களது சுதந்திரமான நடமாட்டங்களைத் தடுத்தமை இறுதிபோர் நிகழ்வுகள் பற்றிய செய்மதி படங்கள் கள ஆய்வு தகவல்களின் என்று அவர்கள் கருதும் விடயங்கலை பற்றி அதிகம் கதைப்பதாக தெரிகிறது.இவற்றுக்கு உடனடியாக பதில் கூற முடியாவிட்டால் தற்காலிகமாகவேனும் மாற்று வழிகலை கண்டு பிடிக்க வேணும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்தில் விவாதிப்பதில் என்னுடைய நேரங்களில் பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.

விவாதத்தை தொடர ஓவொரு தடவையும் உட்புந்து புகுந்து நான் கலந்துகொண்ட விவாதப் பொருளை தேடுவதில் அதைவிட அதிக நேரம் செலவாகிவிடுகிறது. என் பணிகளை எல்லாம் முடக்கிவிடுகிற இந்த நடைமுறை எனக்கு தொடர்ந்தும் சாத்தியமாக இல்லை.

இறுதியாக பதில் எழுதப் பட்ட விடயம் மூன்னிலைப் படுகிற வகையில் யாழ்க்களம் ஏற்பாடுகளைச் செய்யும் வரைக்கும் பணிவன்புடன் ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். என் பணிகளும் நடக்க வேண்டும். இப்பிரச்சினை இங்கு பலருக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன் நேர நெருக்கடியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி சயனைட் சாப்பிட்டிருந்தால் இப்போது கேபியை துரோகி எனத் தூற்றித் திரிவோரின் உச்சி குளிர்ந்திருக்கும். அவர் பெரும் தியாகி ஆகியிருப்பார். பாவம்.. விதி ஆரை விட்டது..

கேபியை துரோகி என முத்திரை குத்துபவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசினை முடக்குகின்ற உள்நோக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி சயனைட் சாப்பிட்டிருந்தால் இப்போது கேபியை துரோகி எனத் தூற்றித் திரிவோரின் உச்சி குளிர்ந்திருக்கும். அவர் பெரும் தியாகி ஆகியிருப்பார். பாவம்.. விதி ஆரை விட்டது..

கேபியை துரோகி என முத்திரை குத்துபவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசினை முடக்குகின்ற உள்நோக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்..

இதற்காகத்தான் புலிகள் சயனைட்டை விரும்பி அணிந்தார்கள், அவராக போய் சரனடைந்து அரசுடன் சேர்ந்து இயங்கினால் அவர் கருனா,டக்கிளஸ், பிள்ளையான்,அமிர்தலிங்கம்,மாத்தையா வரிசையில் துரோகியே. வஞ்சகத்தால் அவர் காட்டி கொடுக்கபட்டு, அடிதாங்கமுடியாது தனக்கு தெரிந்தவர்களையும்,உண்மைகளையும் சொல்வார் ஆனால் என்ன செய்வது. அவரை நம்பி எத்தனைபேர் வேலை செய்து இருப்பார்கள், அவர் ஒருவருக்காக மற்றவர்களும் உள்ளே போக வேண்டியதுதானா? இது வலைபின்னலாக முழுப்பேரும் உள்ளே போவதில்தான் முடியும். இப்போதைக்கு அவரில் இருந்து விலகி இருப்பதே புத்திசாலித்தன், இன்னமும் அவர்மீது நம்பிக்கையை வைக்க சொல்லி மற்றவரையும் அந்த வலைக்குள் வீழாமல் இருக்க துரோகிப்பட்டம் உதவுவதாக இருந்தால் அதுவும் ஏற்புடையதே. இங்கே மனிதர்கள் முக்கியம் இல்லை, லட்சியம்தான் முக்கியம். 30000 போராளிகள் எதற்காக தம்மை கொடுத்தார்களோ லட்சம் மக்கள் எதற்காக தம் உயிர்களை இழந்தார்களோ அந்த லட்சியம் முடிக்கபடவேண்டும்.

இங்கே மனிதர்கள் முக்கியம் இல்லைஇ லட்சியம்தான் முக்கியம். 30000 போராளிகள் எதற்காக தம்மை கொடுத்தார்களோ லட்சம் மக்கள் எதற்காக தம் உயிர்களை இழந்தார்களோ அந்த லட்சியம் முடிக்கபடவேண்டும்.

Edited by kalaivani

கே.பிக்கு எதிராக வழக்கு இல்லை அவர் பெறுமதியான தகவல்களை தருகிறார் – கோத்தபாய

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரான கே.பியை நீதிமன்றத்தில் நிறுத்தும் எண்ணம் எதுவுமில்லை. எனினும், அவர் வழங்கும் தகவல்கள் அரசின் புலனாய்வுத் துறையினருக்கு மிகப் பெறுமதியானவையாகக் காணப்படுகின் றன. அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்து வது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. விடுதலைப் புலிகளின் சர்வதேச நட வடிக்கைக்குப் பொறுப்பாக செயற்பட் டவர் என்ற வகையில் அவரிடமிருந்து இன் னமும் தகவல்களைப் பெற முயல்கி றோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலை யமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக் கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மேற் குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கு வதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ் சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தமது நாட்டில் செயற்படும் விடயம் வெளியில் தெரிய வருவதைக்கூட இந்த நாடுகள் விரும்புவ தில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எரித்திரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி அங்குள்ள விடுதலைப் புலி களின் சொத்துகளைக் கண்டறிவதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சியில் அது படுதோல்வி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“டெய்லி மிரர்’ இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனைக் குறிப் பிட்டுள்ள கோத்தபாய, “கே.பி.’ எனப்படும் குமரன் பத்மநாதனை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது குறித்து இன்னமும் சிந்திக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வரு மாறு:

எரித்திரியாவுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு மேற் கொண்ட முயற்சிகள் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் காரணமாகத் தோல்வி கண்டுள்ளன. இந்த விடயம் பத்திரிகைகளில் வெளி வந்தது. இதனால் தற்போது எரித்திரியா அனைத்து தொடர்புகளையும் துண்டித் துள்ளது.

எரித்திரியாவில் தூதரகம் அமைக்கம் முயற்சி தோல்வி அவர்கள் எங்களுடன் தற்போது பேச்சுகளில் ஈடுபடுவதும் இல்லை. எங்களுட னான தொடர்புகளை அந்த நாடு முற்றாகத் துண்டித்துள்ளது.

எரித்திரியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணிப் பதற்காக அந்த நாட்டில் தூதரகமொன்றை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அந்த நாடு அதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளது.

பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதால் விடுதலைப் புலிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. எரித்திரியாவைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் எமக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சொத்துகள் சில அங்குள்ளமை எமக்குத் தெரியும்.

இது பத்திரிகைகளில் வெளிவந்தமை யால் தற்போது அந்த நாடு எம்முடன் ஒத்துழைக்க மறுத்துள்ளது.

இதன் காரணமாக எரித்திரியாவுடன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து உறவுகளைக் கட்டியெழுப்ப முயல்கிறோம்.

விடுதலைப் புலிகளின் நலன்களுக்கு உதவக்கூடிய பல நடவடிக்கைகள் தமது நாட்டு எல்லைக்குள் இடம்பெறுகின்றமை பல நாடுகளுக்குத் தெரியாது.

விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் பலவகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அந்த நாடுகளைப் பொறுத்தவரை இவை சட்டரீதியான வர்த்தக நடவடிக்கைகளாகும். நாங்கள் இது குறித்த தகவல்களை வழங்கியிருக்காவிட்டால் இது விடுதலைப் புலிகளின் வர்த்தக நடவடிக்கைகள் என் பது அந்த நாடுகளுக்குத் தெரியவந்திராது.

இலங்கை அரசு இவ்வாறான சக்திகள் உலக நாடுகளில் செயற்படுவதைச் சுட் டிக்காட்டினால் மேற்குலக நாடுகள் தம்மை அவமானப்படுத்தும் செயலாக அதனைக் கருதுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கம் செயற் படும் நாடுகளின் பெயர்களை வெளியிடு வதால் எமக்கு எந்தவித நன்மையும் கிடைப் பதில்லை.

குறிப்பிட்ட நாடுகள் தமது பெயர்களை நாங்கள் பகிரங்கப்படுத்துவதை விரும்புவதில்லை. விடுதலைப் புலிகள் தமது எல் லைகளுக்குள் செயற்படுகின்றனர் என்ற விவரம் வெளியாவதை இந்த நாடுகள் வரவேற்பதில்லை.

எரித்திரியாவைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் எமக்கு மிகக் கசப்பான அனு பவம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலி களை எதிர்கொள்ளும் நடவடிக்கைக்கு மேற்குலகம் எப்போதும் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை.

ஏனைய நாடுகள் இதற்கு சுலபமாக ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமாகவுள்ளது. இந்த நாடுகளில் பெருமளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளமையே இதற் குக் காரணம்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எமக்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை. அவர்களுடைய ஒத்துழைப்பு இன்றி இவர் களைப் பிடிக்க முடியாது. சில நாடுகளை ஏமாற்றி அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக விடுதலைப் புலிகள் தங்களைச் சட்டபூர்வமான அமைப் பாக மாற்ற முயல்கின்றனர்.

இராணுவ ரீதியில் தங்களால் செய்ய முடியாது போனதை இந்த அரசுகளின் துணையுடன் வேறு வழிகளில் செய்வதற்கு அவர்கள் முயலக்கூடும்.

இதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசை ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர். எனினும், புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் தேசிய நல்லிணக்கத்தையே விரும்பு கின்றனர்.

மிகப் பெரும் எண்ணிக்கையான புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ள போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் மிதவாதிகள். ஈழக் கோரிக்கையை அவர்கள் ஆதரிப்பதில்லை. அநேகமானவர்கள் இலங்கைக்குத் திரும்பிவந்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர்.

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரான கே.பியை நீதிமன்றத்தில் நிறுத்தும் எண்ணம் எதுவுமில்லை.

எனினும், அவர் வழங்கும் தகவல்கள் அரசின் புலனாய்வுத் துறையினருக்கு மிகப் பெறுமதியானவையாகக் காணப்படுகின் றன. அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்து வது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை.

விடுதலைப் புலிகளின் சர்வதேச நட வடிக்கைக்குப் பொறுப்பாக செயற்பட் டவர் என்ற வகையில் அவரிடமிருந்து இன் னமும் தகவல்களைப் பெற முயல்கி றோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.alaikal.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.