Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்

Featured Replies

.காவி உடை போட்டவர்கள், கோவணத்தையும் காவி நிறத்தில் தான் கட்டுவார்கள் என்று இவ்வளவு நாளும் நான் ினைத்திருந்தேன்,

நித்தியானந்தரின் கோவணம் வெள்ளை நிறத்தில் உள்ளதை பார்த்த பின், நான் நினைத்தது தவறு என்று இப்போ புரிந்து கொண்டேன்.

முற்றும் துறந்தவர்கள் கோவணமும் கட்டுவதில்லை எண்டுதான் நான் நினைத்தேன்... கடவுளுக்கே ஹைரோசல் பிரச்சினை வருமோ...??

  • Replies 99
  • Views 25.6k
  • Created
  • Last Reply

முற்றும் துறந்தவர்கள் கோவணமும் கட்டுவதில்லை எண்டுதான் நான் நினைத்தேன்... கடவுளுக்கே ஹைரோசல் பிரச்சினை வருமோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணாசை யாரை விட்டது, ரண்டு மூண்டு பிள்ள பெத்த நிழலியே இப்பிடி அம்மணக்கட்டையா அலையேக்க, பாவம் பிரம்மச்சரிய விரதம் இருந்து காயுற சாமிக்கு எப்பிடி இருக்கும் என்டு ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன்! :D^_^

பாவம் சாமி. பாக்கிற எங்களுக்கே எவ்வளவு பரவசமாய் இருக்குதெண்டால் ரஞ்சிதாவின் லீலையை நேரில் அனுபவித்த சாமி என்ன தான் செய்வார் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

baba-karuna.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Print | E-mail : Email this Article

சனிக்கிழமை, 6, மார்ச் 2010 (12:31 IST)

நடிகை ரஞ்சிதா தற்கொலை முயற்சி?

நடிகை ரஞ்சிதா ஆந்திராவை சேர்ந்தவர். நித்யானந்தாவுடன் டெலிவிஷனில் வெளியான ஆபாச காட்சிகளால் மனம் உடைந்த ரஞ்சிதா ஆந்திராவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை முயற்சியில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் அவர் இப்போது என்ன நிலையில் இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை என்கிறது தெலுங்கு திரையுலகம்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்

சென்னை: பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்ற நித்ய தர்மானந்தா புகார் [^] தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோவை ரகசியமாக எடுத்த இவர் மேலும் நித்யானந்தாவின் மேலும் லீலைகள் அடங்கிய வீடியோக்கள் அடங்கிய சிடிக்களை இன்று சென்னை நகர போலீஸ் கமிஷ்னரிடம் தந்தார்.

பின்னர் அவர் அளித்த புகாரில், ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா சீரழித்துள்ளதாகவும், ஒரு கனடா நாட்டுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் நித்யானந்தாவிடம் சீடர்கள் ஏமாறுவதைத் தடுக்கவே இந்த வீடியோவை எடு்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:

இந் நிலையி்ல் நித்யானந்தா மீது தமிழகத்தில் தரப்பட்ட புகார்கள், தாக்கலான வழக்குகள் அனைத்தையும் பெங்களூர் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

நித்யானந்தா மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், நில மோசடி, பண மோசடி, இந்து மத நம்பிக்கையை புண்படுத்தியது என்று பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், குற்றங்கள் அனைத்தும் பெங்களூர் ஆசிரமத்தில் தான் நடந்தன என்பதால் அவை அனைத்தும் பெங்களூர் காவல்துறைக்கு மாற்றப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் மீது பாலியல் வல்லுறவு, கூட்டுச் சதி, மோசடி, ஆள் கடத்தல் உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

thatstamil.com

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்க முடியாது - நடிகை ரஞ்சிதா

நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது.

நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா.

32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.

இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறத

thatstamil.com

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

thatstamil.comஎ

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா

நித்யானந்த சாமியார் ஒரு மோசடிப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

இன்று தாராவின் பிறந்த நாள்!

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்...!" என்றார்.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

'நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

அவர் கூறுகையில், "என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இது என்ன கேள்வி,

சூடு கண்ட பூனை மீண்டும் அடுப்பங்கரை நாடுமா?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார்.

thrisha.gifthrisha_3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

திரிஷா போலை எல்லா நடிகைகளும் புத்திசாலிகளாக இருந்தால், ஒரு வில்லங்கமும் வராது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

சென்னை: நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா லீலைகளை படம் பிடித்தவர் அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த வீடியோவை கடந்த டிசம்பர் மாதம் எடுத்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின், சாமியாரின் உல்லாசங்கள் அடங்கிய சிடிக்களை அவர் கொடுத்தார். மேலும் சாமியாரால் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த பல அந்தரங்கத் தகவல்களையும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 2006ம் ஆண்டு முதல் பெங்களூர் நித்யானந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தேன். ஆசிரமத்திற்கு வரும் அப்பாவி பெண்களை தான் கிருஷ்ணர் அவதாரம் என்று கூறிக் கொண்டும், அவர்களை கோபியர் என்று கூறிக் கொண்டும் நித்யானந்தா கட்டிப்பிடிப்பார்.

நடிகை ரஞ்சிதாவிடம் அவர் அடிக்கடி உல்லாசமாக இருப்பதை பார்த்தேன். அப்போது தான் நான் உள்பட எல்லா பக்தர்களும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றும் நித்யானந்தாவின் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் ரஞ்சிதாவிடம் உல்லாசமாக இருப்பதை படம் எடுத்தேன்.

இது எப்படியோ நித்யானந்தாவுக்குத் தெரிந்துவிட்டது. சேலம், சீரகப்பாடியில் புது ஆசிரமம் திறப்பு விழாவிற்கு வந்தபோது என்னை அவருடைய வேனுக்குள் அழைத்து, நீ ஆசிரமத்தில் படம் ஏதாவது எடுத்தாயா? என்று கேட்டு மிரட்டினார். உன்னை கொலை செய்து விடுவேன் என்று அவரும் அவருடன் இருந்த சீடர்களும் மிரட்டினர்.

அப்போது அவர்களிடமிருந்து சமயோஜிதமாக தப்பிவிட்டேன். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து லெனினுக்கு போலீ்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவரது பெயர் முதலில் பிரேமானந்தா என்று கூறப்பட்டது. ஆனால், தனது பெயர் லெனி்ன் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா என்று போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம ஆத்தூரைச் சேர்ந்த இவர் நித்யானந்தாவுக்கு உதவியாளராகவும் டிரைவராகவும் சீடராகவும் இருந்தவர் ஆவார்.

ரஞ்சிதாவுடனான உல்லாசக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதையடுத்து இதை லெனின் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று நித்யானந்தா தரப்பு புகார் [^] கூறியது நினைவுகூறத்தக்கது.

இந்த வீடியோவையே ரஞ்சிதா தான் தனது ஏற்பாட்டில் எடுத்ததாகவும் முதலில் கூறப்பட்டது. இது உண்மையா இல்லையா என்பது லெனினை முழுமையாக விசாரித்தால் தான் தெரியவரும்.

thatstamil.com

உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்?

விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் [^] சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்து மதத்தின் தீவிர நம்பிக்கையாளர்களையும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது நித்தியானந்தா- ரஞ்சிதாவின் லீலைகள் அடங்கிய வீடியோ.

இந்த சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவை விட தற்போது ரஞ்சிதாதான் அதிகம் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளார். காரணம், ரஞ்சிதாதான் நித்தியானந்தா மீது விழுந்து புரளுகிறார். அவரை டிவி கூட பார்க்க விடாமல் வேறு செயலுக்கு அழைப்பது போல காட்சிகள் உள்ளன.

ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். நாடோடித் தென்றலில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார்.

தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்னர் மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கினார். பாரதிராஜாவின் தெக்கித்திப் பொண்ணு தொடரில் நடித்து வந்தார். தற்போது மணிரத்தினத்தின் ராவணன் படத்திலும் நடித்து வந்தார்.

இந் நிலையில்தான் நித்தியானந்தாவுடன் சல்லாபம் செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.

முன்பு புவனேஸ்வரி விபச்சாரம் செய்து போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது அது குறித்து செய்திகள் [^] வெளியிட்ட பத்திரிக்கை உலகம் மீது திரையுலகம் கடுமையாகப் பாய்ந்தது.

இன்னின்னார் விபச்சாரம் செய்கிறார்கள் என்று ரேட் வாரியாக ஒரு செய்தியை வெளியி்ட்ட நாளிதழ் மீது சட்டம் பாய்ந்து கைது வரை போய் நின்றது.

கூடவே, கூட்டத்தைக் கூட்டி கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தங்களது கோபத்தையும் தீர்த்துக் கொண்டது நடிகர் சங்கம்.

ஆனால் இன்று ஒரு நடிகை விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து சிக்கியுள்ளார். இவர் மீது நடிகர் சங்கம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்சிதாவை நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது தெரிவிப்பார்களா என்றும் தெரியவில்லை.

thatstamil.com

உறுப்பினராகவே சேரவில்லை

பிறகெப்படி நீக்குவதாம்?

-ரஞ்சிதா விவகாரத்தில் நடிகர் சங்கம்

சாமியார் மேட்டரில் சிக்கிய ரஞ்சிதா இப்போது எங்கிருக்கிறார்? ஆளாளுக்கு ஒரு யூகத்தை கிளப்பிக் கொண்டிருக்க, நடிகைகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசும் பல நடிகர்கள் கப்சிப் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கம் ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்குமா? அவரை சங்கத்திலிருந்து நீக்குமா?

நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. "அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. அப்படியிருக்கும் போது அவரை எப்படி நாங்கள் நீக்க முடியும்?" என்றார் சரத்.

இது ஒருபுறம் இருக்க, ராவணா படத்திலும் நடித்திருக்கிறார் ரஞ்சிதா. இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. அப்போது ஐந்து நாட்கள் முழுசாக அங்கே இருந்தாராம் ரஞ்சிதா. உடன் நடிக்கும் விக்ரமுக்கும் இவருக்கும் அந்த சில நாட்களுக்குள்ளாக ஒரு திடீர் கெமிஸ்ட்ரி ஏற்பட்டதாக கிசுகிசுக்கிறார்கள் யூனிட்டில். அந்த ஐந்து நாளும் இருவரும் இணைபிரியாமல் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு ரஞ்சி(த்) டிராபி விளையாடியதை பற்றிதான் காது வலிக்க பேசிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

Tamilcinema.com

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

உறுப்பினர் பொறுப்பிலிருந்து ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்?

விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் [^] சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஞ்சிதா என்ன காசு வாங்கிக்கொண்டோ செஞ்சவர்? வெறும் மன சாந்திக்காகத் தானே செஞ்சவர்.. அதெப்படி விபச்சாரம் ஆகும்? :D

thrisha.gifthrisha_3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

திரிஷா போலை எல்லா நடிகைகளும் புத்திசாலிகளாக இருந்தால், ஒரு வில்லங்கமும் வராது.

சாமிகள் வேண்டாம் எண்டால், அப்ப எங்களைமாதிரி ஆசாமிகளை ஆதரிப்பாராமா திரிசா? :D

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகள் வேண்டாம் எண்டால், அப்ப எங்களைமாதிரி ஆசாமிகளை ஆதரிப்பாராமா திரிசா? :D

அதுக்கும் பொறுத்த இடத்திலை, மச்சம் இருக்க வேணும். :D

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

சென்னை: நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா லீலைகளை படம் பிடித்தவர் அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது.

யாழ் களத்திலுள்ள கறுப்பனும், நித்தியானந்தரின் லீலைகளை வீடியோ எடுத்த கருப்பனும் ஒன்றா.....? :D:D

------

இந்த நிலையில் நடிகர் சங்கம் ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்குமா? அவரை சங்கத்திலிருந்து நீக்குமா?

இதுக்கு எல்லாம் ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வெளிக்கிட்டால், நடிகர் சங்கத்திலை ஒரு ஈ, காக்காய் கூட மிஞ்சாது. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

.

SwamijisFreeDarshanInTheMorning.jpgSwami_Paramahamsa_Nithyanandaswamiji_3.JPG1197643356_vedic_california.jpgSwamiji%20felicitates%20organizers.JPGKumbh_Mela_2007_USA.jpgWelcome.jpg101.jpgDSC_0130.JPG

எப்படி இருந்த நான், இப்படி ஆயீ............

nithyanandha_swami.jpg

.

இதில வெள்ளைக் கள்வரும் சேர்ந்துள்ளார்கள், இவர்கள் தமது நாடுகளில் தேடப்படுபவர்களாகவிருக்கலாம்.

அதுக்கும் பொறுத்த இடத்திலை, மச்சம் இருக்க வேணும். :blink:

இதுக்கு எல்லாம் ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வெளிக்கிட்டால், நடிகர் சங்கத்திலை :unsure:

அவருக்கு மச்சம் இருக்குதோ யாருக்கு தெரியும்?

ரஞ்சிதாவை தடை செய்யும் நடிகர் சங்கத்தை நாம் பகிஷ்கரிக்க வேண்டும்

ஒரு படத்தில் புத்தர் சிலையும் உள்ளது. சிங்களவன் கையாளாக மாறிவிட்டாரோ?

சிங்களவன் பெண்களை கொடுத்து வளைத்துப்போட்ட பண்டாரி, ... தீட்சித், ....., சிவசங்கர் மேனன், நாராயணன், ........ ,இந்து ராம், மணிசங்கர ஐயர், ......, தங்கபாலு, ......., அலோ பிரசாத், வரிசையில் நிதியானந்தாவோ?

  • கருத்துக்கள உறவுகள்

thrisha.gifthrisha_3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

திரிஷா போலை எல்லா நடிகைகளும் புத்திசாலிகளாக இருந்தால், ஒரு வில்லங்கமும் வராது.

தான் சாமியார்களை நம்புவதில்லை என்றுதான் திரிஸா சொல்லியுள்ளாரே தவிர. அவர்களிடம் போவதில்லை என்று உறுதியாக சொல்லவில்லை. அரசியல்வாதிகளைவிடவும் அள்ளி கொடுப்பதில் சாமியார்கள் கர்ணன்கள் என்று நடிகைகளிடம் ஒரு பிசுபிசுப்பு எப்போதும் உண்டு. இதை நம்பி திரிசாவிடம் ஆண்கள் யாரும் ஏமாறாதுபோனாலே நன்று.

அதுக்கும் பொறுத்த இடத்திலை, மச்சம் இருக்க வேணும். :blink:

இதுக்கு எல்லாம் ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வெளிக்கிட்டால், நடிகர் சங்கத்திலை ஒரு ஈ, காக்காய் கூட மிஞ்சாது. :unsure:

பிடிபட்ட கள்வர் பிடிபடாத கள்வர் என்று இரண்டாக பிரித்து வேண்டுமென்றால் நீக்கலாம்.

ravisangar.jpg

ஈழத் தமிழரும் இதற்கு அடிமையா

Edited by சுனாமி

ravisangar.jpg

ஈழத் தமிழரும் இதற்கு அடிமையா

புலத்தில முக்கிய பக்தர்களே ஈழத்தமிழர்தான் அதுவும் படித்த பட்டம் பெற்றவர்கள் அதிகம்

ஜான்சிராணி நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு, சும்மா 5 பக்கங்களை தாண்டி ஓடுது. முள்ளிக்கால்வாய் பிரச்ச்னைக்கு பிறகு போற அடுத்த செய்தி இதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஜான்சிராணி நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு, சும்மா 5 பக்கங்களை தாண்டி ஓடுது. முள்ளிக்கால்வாய் பிரச்ச்னைக்கு பிறகு போற அடுத்த செய்தி இதுதான்

அது சரி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது ?

ர்ம்பா கலியாணம் கட்டினது,நித்தியானந்தா இதுகளைபற்றித்தான் இப்ப செய்தி பிரபல்யம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி' - நித்யானந்தாவுக்கு சிவசேனா புகழாரம்!!

சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.

பிரம்மச்சாரி என்று கூறியும், பிரம்மச்சரியம் காத்தால்தான், உடலை கருவியாக வைத்து நினைத்ததை அடைய முடியும் என்றும் போதனை செய்து ஆன்மீக உலகில் வலம் வந்த நித்யானந்தா, மறுபக்கம் நடிகை ரஞ்சிதாவுடன் காவி உடையில் காம லீலை நடத்தியது முழுமையாக அம்பலத்துக்கு வந்துவிட்டது.

அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பக்தர்களில் பெரும்பாலானோர் நித்யானந்தாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சில இந்து அமைப்புகள் நித்யானந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அதில் சிவசேனாவும் ஒன்று.

இந்த அமைப்பின் சார்பில் சென்னை முழுக்க நேற்றும் இன்றும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

நித்யானந்தா சாமியார் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், இந்து மதத்தை வளர்க்கவும், இந்து இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் அயராது பாடுபட்ட இளம் ஞானி நித்யானந்தாவை களங்கப்படுத்துவதா? என்று அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் சிவசேனா கட்சியினர்.

பாரதிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பும் இது போன்ற போஸ்டர்களை சென்னையில் ஒட்டியுள்ளது.

நித்யானந்த சாமியார் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று வெளிப்படையாகவே இந்த அமைப்பு வக்காலத்து வாங்கியுள்ளது.

போஸ்டர்களில் 9025971867, 9941760340, 9840124044, 9941918645, 9840185002 ஆகிய 5 செல்பேசி எண்களை வேறு கொடுத்துள்ளனர்.

--------

நித்தியானந்தா மீதான ஒரு வழக்கை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கும்

சென்னை சாமியார் நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ள ஆறு வழக்குகளில் ஒன்றை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்படுகிறது.

நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலாக இருந்து சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீது தமிழக போலீஸார் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட ஆறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

குற்றங்கள் நடந்த இடம் கர்நாடக மாநிலத்திற்குள் இருப்பதால், வழக்குகளை மொத்தமாக கர்நாடகத்திற்கு மாற்றுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

தற்போது இதில் சிறிய மாற்றம். ஒரு வழக்கை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கவுள்ளதாம். நித்தியானந்தா, தனக்கு கொலை [^] மிரட்டல் [^] விடுத்ததாக அவரது சீடரும், சாமியாரின் லீலைகளைப் படம் பிடித்தவருமான லெனின் என்கிற நித்ய தர்மானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் [^] கொடுத்துள்ளார்.

இதையடுத்து கொலை மிரட்டல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்து அதை மட்டும் இங்கேயே விசாரிக்கவுள்ளனர்.

இதுதவிர மீதமுள்ள பாலியல் முறைகேடு, கூட்டுசதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் வேலை பார்த்தவர்தான் இந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர்.

-----

எனக்கு எதிராக பொய்ப் பிரசாரம்- ரீதியாக சந்திப்பேன்: நித்தியானந்தா

சென்னை: எனக்கு எதிராகவும், எனது தியான பீடத்திற்கு எதிராகவும் சிலர் விஷமத்தனமான, பொய்யான அவதூறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டவிரோதப் பிரசாரத்தை எதிர்கொண்டு அதை முறியடிப்பேன் என்று கூறியுள்ளார் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுவாமி நித்தியானந்தா.

நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்தியானந்தாவைக் காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

அவர் சார்பில் சென்னை [^]யில் வழக்கு [^] தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக வீடியோ ஒன்றின் மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் நித்தியானந்தா.

அது...

அன்பான பக்தர்களே. சமீப காலமாக எனக்கு எதிராகவும், எனது அமைப்புக்கு எதிராகவும் பல பொய்யான புகார் [^]கள் எழுந்துள்ளதை அறிவீர்கள்.

அதே நேரத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்து இ மெயில்கள் மூலமும், கடிதங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நலம் விரும்பிகள் உலகம் [^] முழுவதுமிருந்து அனுப்பி வருகின்றனர். அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனது போதனைகளால் பலன் பெற்றோர் பலரும் எனக்கு எதிரான புகார்களை நிராகரித்துள்ளனர்.

நான் தற்போது உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நானோ அல்லது எனது அமைப்போ சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எங்களுக்கு சாதகமான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம்.

எனக்கும், எனது அமைப்புக்கும் எதிரான பொய்யான, உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரதத்தை எதிர்கொண்டு முறியடிப்போம்.

விரைவில் உரிய ஆதாரங்களுடன் எனக்கு எதிரான புகார்கள் பொய் என்பதை நிரூபிப்பேன். எனவே அதுவரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறும், அவசரப்பட்டு எந்தத் தீர்ப்புக்கும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். அனைத்து உண்மைகளையும், ஆதாரங்களையும் நான் வெளியிட்ட பின்னர் விரிவாக, கவனமாக ஆராய்ந்து எந்த முடிவுக்கும் வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிக்கலான இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த, ஆதரவு அளித்து வரும் உலகம் எங்கும் உள்ள எனது பக்தர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

ரஞ்சிதா விவகாரத்தைத் தொடர்ந்து தலைமறைவான நித்தியானந்தா தற்போதுதான் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம், ரஞ்சிதா குறித்த விளக்கத்தை அவர் வெளியிடவில்லை. அதேபோல செக்ஸ் புகார்கள், பக்தை கொலை உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கம் தரவில்லை. விரைவில் அவர் விரிவான விளக்கத்தை அளிப்பார் என்று அவரது தியான பீட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறைக்கு தகுதியில்லை: ராமகோபலன்

மதுரை: சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறை மூலம் ஒரு குழுவை அரசு [^] அமைக்கும் நடவடிக்கையை கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் உள்ள சாமியார்களை கண்காணிக்க அறநிலையத் துறை மூலம் ஒரு குழுவை அரசு அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காரணம், குற்றமற்றவர்கள் தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும்.

ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை தண்டிக்க முடியது. அப்படி நினைப்பதே வேடிக்கையானதாகும்.

அறநிலையத் துறையே குற்றவாளிகளின் கூடாரம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். அப்படி இருக்க அறநிலையத் துறைக்கு அதிகாரம் கொடுத்து விட்டால் துறவிகளுக்கு 'லைசென்ஸ்' கொடுப்பதை ஏலம் விட்டு பணம் பார்த்து விடுவார்கள்.

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை, ஆச்சார்ய சபை போன்றவற்றிற்குத் தான் அந்த தகுதி உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.

thatstamil.com

பாலியல் உறவுகளில் தாராள போக்குடையவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள் கூட, தமது நாட்டு தலைவர் ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் (கிளிண்டன் விவகாரம்).

பாலியல் சொர்க்கபுரியாக கருதப்படும் ரோம் மக்கள் ஒரு விலைமாதுவுடன் தமது பிரதமரின் பாலியல் தொடர்பை அவரது தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை!

மேற்குலக கிறிஸ்தவர்கள் தமது போப்பாண்டவர், ஏன் சேர்ச் father / sister, பாலியல் உறவு வைத்திருப்பதை விரும்பப் போவதில்லை.

இருவர் விரும்பி பாலியல் தொடர்பு வைத்திருப்பதை எந்த சட்டமும் கண்டிக்கவில்லை என்றாலும், மேற்குலகிலேயே சட்டத்துக்கு அப்பற்பட்ட ஒன்றை மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். அதைத்தான், சமூக நியதி, தனிமனித நியதி அல்லது விழுமியங்கள் என்று அழைப்பார்கள்.

இது இப்பிடியிருக்க எம்மவர் சிலர், போலிச்சாமி நித்தியானந்த செய்தது தவறில்லை என்று வாதிடுவது, வாதிடுபவர்கள் மீது கீழ்த்தரமான தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நித்தியானந்த செய்தது தவறில்லை என்றால் காவி கட்டாத கருணா செய்தது மட்டும் எப்படித் தவறாகும்?

எம்மவர் கீழ்த்தரமான தமிழ் சினிமா (சின்னத்திரை தொடர்கள்) உலகில் இருந்து விடுபடும்வரை, எமது விடிவு வெகு தூரத்தில் தான்.

காவி உடை தரித்த போலிச் சாமியார் நித்தியானந்தாவின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும். அவரைப் போன்ற ஏமாற்று பேர்வழிகள் சமூகத்திலிருந்து தூக்கி வீசப்படவேண்டியவர்.

அது சரி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது ?

ர்ம்பா கலியாணம் கட்டினது,நித்தியானந்தா இதுகளைபற்றித்தான் இப்ப செய்தி பிரபல்யம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேரளாவில் பெண் பக்தை வீட்டில் நித்தியானந்தா பதுங்கியதாக தகவல் - போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள இளம்பெண் பக்தை வீட்டில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சி வெளியானது. இதையடுத்து நித்தியானந்தாவுக்கு எதிராக பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பல பகுதிகளில் போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நித்யானந்தா மீது பாலியல் வல்லுறவு, மோசடி உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படுக்கை அறை காட்சி வெளியானதை தொடர்ந்து நித்யானந்தாவு்ம், ரஞ்சிதாவும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நித்யானந்தாவின் பக்தையாக இருந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள நித்யானந்தரின் ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இவருக்கு சொந்தமான பங்களா ஒன்று கோழஞ்சேரியில் உள்ளது. அவ்வுப்போது கேரளா வரும் அந்த இளம்பெண் அந்த பங்களாவில் தங்கி விட்டு மீண்டும் அமெரிக்கா செல்வார்.

சமீபத்தில் அந்த பெண் நித்யானந்தாவை கோழஞ்சேரி அழைத்து வந்து அங்கு அவரது பெயரில் ஆசிரமம் ஓன்றை தொடங்கியுள்ளார். இதில் ஏராளமான பக்தர்களும் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள நித்யானந்தா கோழஞ்சேரியில் பதுங்கியிருப்பதாக கேரள தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கோழஞ்சேரி பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.