Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபமா ராவ் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆசானும் இப்படி எழுதமாட்டான்

நன்றி

தங்களை தாங்களே ஆசான் ஆக்கியதன் அறிவு தெரிகிறது

நன்றி

தங்களது நேரத்திற்கு....

  • Replies 59
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆதாரம் கேட்பது கைப் புண்ணிற்கு கண்ணாடி கேட்பது போன்றது.முள்ளி வாய்க்கால் அவலத்திற்கு இந்தியாவின் பங்கு என்ன என்று கேட்டாலும் ஆதாரம் கேட்பீர்கள் போலுள்ளது.1981 இல் இளைஞராக இருந்த பொழுது தவறான தீர்மானம் எடுத்ததாக 30 வருடம் கழித்துச் சொல்லும் நீங்கள்(உண்மையில் நீங்கள் அன்று எடுத்த முடிவு சரியானதே)அன்று எடுக்கும் முடிவும் தவறானதே என்று இன்னும் சில வருடங்களில் சொல்லமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்.தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் பிழையான நபர்களைத் தெரிவு செய்வது தமிழினத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்.தங்களோடு இந்த விடயத்தில் முரண்பட நேரந்தமைக்கு வருந்துகிறேன்.

ஆமாம் சம்பந்தர்; எப்போதிலிருந்து இந்தியத் தூதுவரானார்?புலிகளை ஆதரித்த காலத்தில் சம்பந்தரை சந்திப்பதை முடிந்த அளவில் தவிர்த்த இந்தியத் தலைமைகள் இப்போது அடிக்கடி சந்திப்பதன் மர்மம் என்ன? இவை எமக்கு எதை உணர்த்துகின்றன?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றி புலவர்

எதுபற்றி எழுதினாலும் அது எம்மையே திரும்பித்தாக்கும் என்பதனாலேயே நான் அதிகம் எழுதுவதில்லை.

அதேநேரம் நாங்கள் 1981இல் எடுத்த முடிவு பிழை என்று எங்கும் எழுதவில்லை

ஆனால் பிழை என்பவர்களின் வாதம்தானே இன்றையநாள்வரை உயர்வாக இருக்கிறது.

ஆனால் ஆபத்தானபாதை என்பதை அன்று சிலர் எச்சரித்தனர் என்றே சொன்னேன்

அதேநேரம் போராடாது விட்டிருந்தாலும் இந்த நிலை வந்து தானிருக்கும் என்கின்ற வாதமும் சரியென்றாலும் அதற்கு சாட்சியில்லை

அதைவிட முக்கிய இன்றைய காலநிலையில் நாம் அவசரப்பட்டோ அல்லது ஆத்திரத்திலேயோ முடிவுகளை எடுக்கக்கூடாது என்பதற்காகவே அவர் சொன்னதை எழுதினேன்.

அவருக்கு இதில் ஈடுபாடு இல்லாதபோதும் அவருடைய வாழ்க்கை எப்படி சீரழிந்தது என்பதற்கே அதை எழுதினேன்.

மனச்சாட்சி உள்ளவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.

கனக்க எழுதவிரும்பவில்லை

அது என்னையே மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்

கூட்டமைப்பு பற்றிய தங்கள் எல்லோரது பார்வைக்கும் சந்தேகம் ஒன்றே மூலதனம்

காலம் பதில் சொல்லும்

அப்படி அவர்கள் எவரையாவது அரவணைத்துப்போவதுவும் இன்றையநிலையில் மன்னிக்கமடியாத பெரிய பாவமல்ல.

நான் மதிப்பது அவர்களது எமது மக்கள் மீதான இதுவரை கால ஈடுபாடு மற்றும் தலைவரால் எமக்காக ஒழுங்கமைக்கப்பட்டதுஅவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரால் எமக்காக ஒழுங்கமைக்கப்பட்டது மாற்றமில்லாமல் இருந்திருந்தால் நாங்கள் விமர்சிக்க மாட்டோம் மாறாக அந்தத் தலைவரையே விமர்சித்ததும் அவரால் உள்வாங்கப்பட்டவர்களையும் வெளியேற்றியவர்கள் தலைவரின் கொள்கைக்கு ஏற்ப நடப்பார்களா? கூட்டமைப்பு உடைவதற்குக் காரணம் கூட்டமைப்பின் தலைமைப்பீடமே.இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லைஇனியாவது அவர்கள் ஒற்றுமைப்பட்டால் எமக்குச் சந்தோசமே. அதற்கும் தேர்தல் மூலம் மக்கள் தங்கள் விருப்பத்தைக் காட்டவேண்டிய நிலைக்கு வந்துள்ளது கவலைக்குரிய விடயமேயாயினும் தவிர்க்க முடியாததே.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் காட்டிய கூட்டமைப்பை ஒரு சொத்தாகவும்

ஒரு வலுவான மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டதாக தாயகத்தில்வைத்துக்கொண்டு

புலத்திலும் ஒரு வலுவான மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அமைப்பை உருவாக்கி

இவ்விரு அமைப்பினூடாக எமது கனவை அடைவதே எனது நோக்கமாக இருந்தது

இதற்காகவே இவ்வளவும் எழுதினேன்

அது தற்போது அழிக்கப்பட்டுள்ளது

அதற்கு காரணம் கூட்டமைப்பு என்று என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை

இதற்கு எனக்கு கிடைத்தது முட்டாள் அறிவற்றவன் பட்டம்

நான் அறிவாளி என்று வாதிட எனக்கு அவசியமும் இல்லை நேரமுமில்லை

பலமான பணிகள் எம்முன் காத்திருக்கின்றன.

இப்படி எழுதும் அறிவாளிகள் இனிமேல் தமிழரது ஒற்றுமை பற்றி கதைப்பது என்பது மிகவும் பலவீனமானது......

இப்படி எழுதும் அறிவாளிகள் இனிமேல் தமிழரது ஒற்றுமை பற்றி கதைப்பது என்பது மிகவும் பலவீனமானது......

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் யாரையும் முட்டாள்கள் என்று தீர்மானிக்க முடியாது.அவரவர்;களின் செயல்களே அவற்றைத் தீர்மானிக்கும்.மக்களை யாரும் முட்டாள்களாக்க முடியாது.நமக்குள் பகைமை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சி!

ஆக தேர்தலில் அவர்கள் நின்றுதான் ஆகவேண்டும்................. வருபவர் போபவர்களுடன் கூட்டுசேர்ந்து பேசித்தான் ஆகவேண்டும்.

ஆனால் இலங்கiயின் தேர்தலில் அனதை;து ஓட்டுகளையும் பெற்று வெற்றி பெறுவதால் தமிழருக்கு ஏதாவது பயன் உண்டா?

இந்தியா தனது முகத்தை அவ்வப்போது காட்டியும் விழங்காத நபர்களுக்கு முள்ளிவாய்காலில் வைத்து தனது முகத்தை அப்படியே காட்டிய பின்பும். இந்தியாவுடன் பேசி பெறுவதற்கு என்ன இருக்கின்றது.

அவர்கள் தமது போலி ஜனநாயகத்திற்கு உயிர்கொடுக்க கூட்டமைபுடன் பேசுகின்றார்கள். இந்தியாவுடன் கூடினால் ஏதும் கிடைக்கும் என்று கூட்டமைப்பு சொல்வது வீண் புரளி. ஏன் இதை கூட்டமைப்பு செய்ய வேண்டும்?

இங்கே தந்திரோபாய அரசியல் என்று ஏதுமில்லை.

ஆக்கிரமிப்பாளனும் அவன் தோழனும். அடிமைகளும் அவர்களை பாhத்து பாவபட கூடியவர்களும்தான் இருக்கின்றார்கள்.

உலகின் இன்றைய நிலையில் அல்கைதா பூரணமாக தாம் சரண்அடைவதாகவும் அனைத்து பயங்கரவாத செய்ல்களையும் நிறுத்துவதாகவும் அறிவித்தால்....? அதனால் பெரிதும் பாதிக்க கூடிய நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் அனதை;து வழிபறிப்பு கொள்ளையாவும் அல்கைதாவின் பெயராலேயே நடக்கின்றது என்பது உலகறிந்த உண்மை.

சிங்களம் தமிழர் மீது எத்தனையோ பயங்கரவாதங்களை கட்டவிழ்த்துவிட்டபோதும் புலிகள் தர்மம் பற்றி பேசியதன் விளைவே இன்றைய நாட்கள். புலிகள் அதே ஆயுதத்தை கையிலெடுத்திருந்தால் ஒட்டியிருந்த ஒட்டுகுழுக்களையும் தமிழன் என்று அவனே வெட்டி தள்ளியிருப்பான்.

சாணக்கிய அரசியல் என்று இந்த உலகில் ஏதும் இல்லை. வெறும் ரௌடிதனம்தான் இங்கே நடக்கின்றது இது புரியாது கூட்டமைப்பு இந்தியாவுடன் பேசும் என்று இருந்தால்................ அவர்களது பிழைப்பே பேசுவதில்தான் உள்ளது ஆக அவர்கள் பேசுவார்கள். எமக்கு ஆவது என்ன?

இத்தாலி சோனியா வந்து இந்திய இறையாண்மை எனது முந்தானைக்குள் இருக்கு நீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லிபோக. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று முதிர்ந்த ஒரு அரசியல் வாதியான இந்திய அரசியல்வாதி கருணாநிதி அறிக்கைவிடுவதைதான் இப்போதைக்கு சாணக்கியம் என்று வேண்டுமானால் கூறிகொள்ளலாம்.

ஆனால் சாணக்கியம் என்பதன் தமிழ் அர்த்தம் வேறக உள்ளதால்.......... இப்போதைக்கு உள்ள அதிகாரங்களை வைத்து அகராதிகளை கைது செய்து சிறையில் அடைத்தவிடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்நாடு தந்தைநாடு எண்டு சொல்லுறதும் துன்பியல் நிகழ்வுகளுக்கு வருந்திறதும் ஒரு பிழைப்பாவே போச்சுது. :blink:

.... யாரும் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ ............ எமக்கு "வாழ்வோ, சாவோ| , அது இந்தியாவால்தான்!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.... யாரும் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ ............ எமக்கு "வாழ்வோ, சாவோ| , அது இந்தியாவால்தான்!!!!!

அண்ணை நீங்கள் சொல்லுவீங்கள் , நான் செல்லேலாது. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவோட சேர்ந்ததாலே தமிழன் பிரிஞ்சு சின்னா பின்னமாகி முடிஞ்சுது இப்ப சிங்களவனின்ற டர்ண் பேசாம ஒதுங்கி நிற்பதுதான் தமிழனுக்கு நல்லது அதை விட்டுப்போட்டு இந்தியாவோட சேர்ந்து பேசி கும்மாளம் போட்டால் தமிழனைக் கடவுளாளும் காப்பாற்ற ஏலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசு மற்றும் ஏனையோருக்கும்...

எனக்கும் தெரியவில்லை ஏன்தான் இங்குள்ளவர்கள் சம்பந்தர், அவருடைய கட்சி தேர்தலில் வெல்லக்கூடாது என்று இந்தளவு பாடுபடுகிறார்களோ தெரியவில்லை. இங்குள்ள குற்றம் ககேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன் போட்டியிட இடம் கொடுக்காதது, இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவது, தேசியத்திர்ற்கு முரணாக இயங்குவது/கைவிட்டது...

இங்கே ஒன்றை சொல்லவிரும்புகிறேன்.. சில காலத்திற்கு முன்பு, தாயகத்தில் உள்ள மக்களுக்கும், புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடைவேளைகள் வரத்தொடங்கியுள்ளது, அவற்றை நிறுத்துகிற அல்லது மேலும் வளராமல் வேலைத்திட்டங்கள் தொடங்கவேண்டும் என்று கதைத்தபோது சொன்னவர்களையே தவறானவர்கள் என்று சொன்னவர்கள். இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்? நாங்களே தாயகத்தில் இதுவரை பெரிய கட்சியாக (தமிழர்) இருந்த கூட்டமைப்பை உடைத்து , அதற்கு ஈமைக்கிரிகைகள் செய்து கொண்டிருக்கிறோம். அவர்கள் நாளைக்கு வெற்றி பெற்றால் என்ன சொல்லப் போகிறோம்? யாருக்கும் தெரியாது கஜேந்திரகுமார் எத்தனை வாக்குகள், சிவாஜிலிங்கம் எத்தனை வாக்குகள், மற்ற கூட்டமைப்பினர் எத்தனை வாக்குகள் பெறப்போகிறார்கள் ஆனால் என..இதனால் யாருக்கு நன்மை? என்ன 22 போன இடத்தில் 10 - 12 போவோமா என்பதே சந்தேகமாகவுள்ளது..

வரதருடைய பேட்டியை - அவர் சொன்ன பலவிடயங்கள் ஏற்ருக் கொள்ளக்கூடியவை ஆனால் அவர் தான்/தன்னை சார்ந்தோர் போட்டியிடுவதர்ற்கு என சொல்லும் காரணத்தை தவிர- கேட்டுவிட்டு கருத்து சொன்னவர்கள், வரதர் தனது உயிரை பணயமாக வைத்து தானே தாயகம் தேசியம் தன்னாட்சி என்று சொல்லுகிறார் ஏன் சம்பந்தர் அப்படி சொல்லக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள்...ஏன் இவர்(சம்பந்தர்) மட்டும் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று சப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள்..இவர்கள் அறியாமல் சொல்லுகிறார்களா அல்லது அறிந்தும் அறியாமல் சொல்லுகிறார்களா? வரதர் கூட்டமைப்பை சிதைக்கும் மட்டும் சிங்களவனின் நண்பன் என்று ஏன் தான் இவர்கள் விளங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஒருவர் சொன்னார்..உயிரில் பயமிருந்தால் வேறு ஆட்களிடம் கொடுக்க வேண்டியது தானே ஏன் இன்னும் தலைமை பதவி வகித்து கொண்டு இருப்பதாக...இன்னுமொருவர் சொன்னார்..அவரை ஆய்வாளர் என்று விளித்திருந்தார்கள்..நாங்கள் இதைப்பற்றி -கூட்டமைப்பின் இன்றைய நிலை பற்றி, தாயகத்தில் உள்ளவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று சொன்னார். என்னவென்றுதான் இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களுக்கு விளக்கப்படுத்தகூயவாறு அரசியல் அறிவை வளர்த்தார்கள் என்று தெரியவில்லை.

சிங்களவன் இந்தியனோடும், சீனாகாரனோடும், பாகிச்தான் காரனோடும் உறவு வைத்திருந்தால் அது ராஜ தந்திரம், அதில் ஒன்றை தமிழன் செய்தால் அது முட்டாள்தானம். இதிலே விசு சொன்னமாதிரி நாங்கள் கூட்டமைப்பை நோக்கி சொல்லுகிற காரணங்கள் ஊகத்தின் அடிப்படையிலானதே இந்த நிலையில் அவர்களை சிதைப்பதர்ற்கு நாங்களே துணைபோவது எந்தள்ளவிர்ற்கு சரி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொண்டால் சரி...

இறுதியாக சம்பந்தரும் கயேந்திரகுமாரும் பிரிந்து பிரிந்து போட்டியிடுவது என்று முடிவு எடுத்தாயிற்று..இந்த நிலையில் இருவரும் போட்டி போடட்டும்..வெல்பவர் வெல்லட்டும் அதற்கிடையில் மற்றவர்களை தூற்றி தங்களுக்குரிய வாக்குகளை கேட்காமல்..தங்கள் தங்களில் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கலாமே...

  • தொடங்கியவர்

இந்த நல்ல கருத்தை வைத்த உங்களிடம் இருந்து, கீழுள்ள கருத்துக்களையும் கேட்கவேண்டியிருப்பது கொடுமை.

நாங்களே தாயகத்தில் இதுவரை பெரிய கட்சியாக (தமிழர்) இருந்த கூட்டமைப்பை உடைத்து , அதற்கு ஈமைக்கிரிகைகள் செய்து கொண்டிருக்கிறோம்.

சிங்களவன் இந்தியனோடும், சீனாகாரனோடும், பாகிச்தான் காரனோடும் உறவு வைத்திருந்தால் அது ராஜ தந்திரம், அதில் ஒன்றை தமிழன் செய்தால் அது முட்டாள்தானம்.

Edited by Aasaan

  • தொடங்கியவர்

தலைவரால் எமக்காக ஒழுங்கமைக்கப்பட்டது மாற்றமில்லாமல் இருந்திருந்தால் நாங்கள் விமர்சிக்க மாட்டோம் மாறாக அந்தத் தலைவரையே விமர்சித்ததும் அவரால் உள்வாங்கப்பட்டவர்களையும் வெளியேற்றியவர்கள் தலைவரின் கொள்கைக்கு ஏற்ப நடப்பார்களா? கூட்டமைப்பு உடைவதற்குக் காரணம் கூட்டமைப்பின் தலைமைப்பீடமே.இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லைஇனியாவது அவர்கள் ஒற்றுமைப்பட்டால் எமக்குச் சந்தோசமே. அதற்கும் தேர்தல் மூலம் மக்கள் தங்கள் விருப்பத்தைக் காட்டவேண்டிய நிலைக்கு வந்துள்ளது கவலைக்குரிய விடயமேயாயினும் தவிர்க்க முடியாததே.

உண்மையை கூறும் யதார்த்தமான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்நாடு தந்தைநாடு எண்டு சொல்லுறதும் துன்பியல் நிகழ்வுகளுக்கு வருந்திறதும் ஒரு பிழைப்பாவே போச்சுது. :blink:

எஜமானிகளுக்கு மக்கள் வாக்குபோட்டால் ஏஜமனி வாழ்வார் என்று கோசம்போடுவதும். எஜமானியின் எச்சில் இலையை நக்குவதும் சிலருக்கு வாழ்வாக இருக்கிறதுபோல். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று வாழ்வு.

இன்னொருத்தியின் கணவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியாதோ கிட்டதட்ட அதுபோன்று.

இந்தியாவின் 60 வருட கனவு(சிறிலன்காவை தனது எண்ணத்திற்கு ஆட்டிப்படைப்பது) நனவடைவதை எந்த கொம்பனாலையும் தடுக்க ஏலாது.

சிங்கப்படை, புலிப்படை,புலபெயர் தமிழ்படை,புலபெயர் சிங்கப்படை எல்லோரும் இனி டயலக் விடத்தான் சரி

  • கருத்துக்கள உறவுகள்

.... யாரும் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ ............ எமக்கு "வாழ்வோ, சாவோ| , அது இந்தியாவால்தான்!!!!!

நீங்கள் நேற்றுதான் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தீர்களா?

இத்தனைகாலமும் சாவை மட்டுமே இந்தியாவால் கொடுக்க முடிந்தது............. அதென்ன இடையில் நித்திரையால் எழும்பியவர்போல் புதுகதை விடுகின்றீர்கள் வாழ்வோ சாவோ?

சாவை இந்தியாவால் கொடுக்க முடியும் கொடுக்கும் கொடுத்தது. இதையேன் இந்தியாவோடு பேச்சுவார்த்தை செய்து பெறவேண்டும் என்ற உங்களின் கருத்துகள்தான் புரியமாட்டேன் என்கின்றது.

ஆனால் கடமையின் நிமித்தம் எழுதினால்.............. நல்ல கருத்துகள் என்று நானும் உங்களை வாழ்த்த கடமைபட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் 60 வருட கனவு(சிறிலன்காவை தனது எண்ணத்திற்கு ஆட்டிப்படைப்பது) நனவடைவதை எந்த கொம்பனாலையும் தடுக்க ஏலாது.

சிங்கப்படை, புலிப்படை,புலபெயர் தமிழ்படை,புலபெயர் சிங்கப்படை எல்லோரும் இனி டயலக் விடத்தான் சரி

ஸ்ரீலங்காவை இந்தியா ஆட்டுகிறது என்று நீங்கள் நினைத்தால்...................

ஒன்றில் நீங்கள் அப்பாவி.......... அல்லது விசுவாசம் காரணமாக புகழ்மாலை பாடுபவர்.

ஸ்ரீலங்கா ராஜீவை வரவஅழைத்து அடிபோடடதில் இருந்து இன்றுவரை இந்தியவிற்கு பல ஆப்புகளை வைத்துகொண்டே வருகின்றது. அதை புரிந்து நடக்க கூடிய புத்திசாலி அரசியல்வாதி இந்தியாவில் இல்லை என்பது திண்ணம். சிறுபிள்ளைதனமான பழிவாங்கும் அரசியல்வாதிகளே அங்கு இப்போது ஆட்சியில் உள்ளார்கள். எல்லாம் புரியும்போது காலம் கடந்திருக்கும்.

சிறிலன்காவில் அன்மையில் நடந்த, நடக்க விருக்கும் தேர்தலில் வேட்பாளர்கள் ஏன் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்?எதிர்கட்சிதலைவர்,ஜனாதிபதி ,தமிவேட்பாளர்கள் எல்லாம் ஏன் இந்தியாவின் ஆசிர்வாதம் பெற செல்லினம்.

சிறிலங்கா இறையான்மையுள்ள நாடு என்றால் தாங்கள் தங்கட பாடுகளை பார்க்க வேண்டியதுதானே.

10 வருடங்களுக்கு முதல் நடந்த தேர்தல்களில் இவ்வளவு இட்ந்திய பயணத்த எவரும் செய்யவில்லைசிறிலன்காவில் அன்மையில் நடந்த, நடக்க விருக்கும் தேர்தலில் வேட்பாளர்கள் ஏன் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்?எதிர்கட்சிதலைவர்,ஜனாதிபதி ,தமிவேட்பாளர்கள் எல்லாம் ஏன் இந்தியாவின் ஆசிர்வாதம் பெற செல்லினம்.

சிறிலங்கா இறையான்மையுள்ள நாடு என்றால் தாங்கள் தங்கட பாடுகளை பார்க்க வேண்டியதுதானே.

10 வருடங்களுக்கு முதல் நடந்த தேர்தல்களில் இவ்வளவு இட்ந்திய பயணத்த எவரும் செய்யவில்லை

மேற்குலக ,மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளும் இந்தியா தலையாட்டினா திருப்பி கதைக்கமாட்டினம்

ஒருத்தன் கருத்து சொன்னா அவன் இந்தியாவிசுவாசியாக இருக்க வேன்டும் என்றில்லை :blink:

  • தொடங்கியவர்

சிறிலன்காவில் அன்மையில் நடந்த, நடக்க விருக்கும் தேர்தலில் வேட்பாளர்கள் ஏன் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்?எதிர்கட்சிதலைவர்,ஜனாதிபதி ,தமிவேட்பாளர்கள் எல்லாம் ஏன் இந்தியாவின் ஆசிர்வாதம் பெற செல்லினம்.

சிறிலங்கா இறையான்மையுள்ள நாடு என்றால் தாங்கள் தங்கட பாடுகளை பார்க்க வேண்டியதுதானே.

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், போலிச் சாமியார்கள் ...

இவர்களை வளர்பதில் புலம் பெயர்

ஈழத்தமிழன்
முக்கிய பங்கு வகித்துள்ளான் வகிக்கிறான்

இந்த யாழில் 5000 பார்வையாளர்கள்

அப்ப தென் இந்தியன் அச்சாவோ கருனாநிதி பகவத் அச்சாவோ :blink:

Edited by Jil

நீங்கள் நேற்றுதான் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தீர்களா?

இத்தனைகாலமும் சாவை மட்டுமே இந்தியாவால் கொடுக்க முடிந்தது............. அதென்ன இடையில் நித்திரையால் எழும்பியவர்போல் புதுகதை விடுகின்றீர்கள் வாழ்வோ சாவோ?

சாவை இந்தியாவால் கொடுக்க முடியும் கொடுக்கும் கொடுத்தது. இதையேன் இந்தியாவோடு பேச்சுவார்த்தை செய்து பெறவேண்டும் என்ற உங்களின் கருத்துகள்தான் புரியமாட்டேன் என்கின்றது.

ஆனால் கடமையின் நிமித்தம் எழுதினால்.............. நல்ல கருத்துகள் என்று நானும் உங்களை வாழ்த்த கடமைபட்டுள்ளேன்.

....ஜி, ... செவ்வாயால் வந்திட்டம்தான், உண்மை!! ... ஆனால் நீங்கள் மா.க.மாணிக்கங்கள் புலி எதிர்ப்பெனும் போர்வையில் சனிக்கு போனனீங்கள், ஒரே அடியாக அங்கேயே தங்கி விட்டீர்கள்!!!!!!! : :blink: .....உங்கள் கொள்கைகள் புலியெதிர்ப்பு அல்ல தமிழர்களின் வாழ்வெதிர்ப்பு கொள்கை என இப்போது காட்டி நிற்கிறீர்கள்! உங்கள் அரசியல் முடிந்து விட்டது!! ..... புலி முடிச்சுது தானே, ஏன் இப்பவும் புலி பிரமையிலை திரிகிறீர்கள்????? :unsure:

அப்பு, இந்தியா ... அழிவையே கொடுத்தது, கொடுக்கிறது, கொடுக்கும் ... உண்மையே!! ... செய்த பாவம் பூகோல ரீதியில் பக்கத்தில் பிறந்து விட்டோம்!! ..... இந்தியாவின் மனமாற்றமே ... அழிவிலிருந்து வாழ்வையும் கொடுக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

விசு மற்றும் ஏனையோருக்கும்...

இதிலே விசு சொன்னமாதிரி நாங்கள் கூட்டமைப்பை நோக்கி சொல்லுகிற காரணங்கள் ஊகத்தின் அடிப்படையிலானதே இந்த நிலையில் அவர்களை சிதைப்பதர்ற்கு நாங்களே துணைபோவது எந்தள்ளவிர்ற்கு சரி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொண்டால் சரி...[/quote]

அறிவாளிகளின் புலம்பல்களிலிருந்து ஒதுங்குவதாக நேற்றே முடிவெடுத்துவிட்டேன்

தங்கள் கருத்து நன்றி சொல்லவே எழுதுகின்றேன்

தமிழனை கடவுளாலும் எதிரியிடமிருந்தல்ல

இவர்களிடமிருந்தே காப்பாற்றமுடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஜமானிகளுக்கு மக்கள் வாக்குபோட்டால் ஏஜமனி வாழ்வார் என்று கோசம்போடுவதும். எஜமானியின் எச்சில் இலையை நக்குவதும் சிலருக்கு வாழ்வாக இருக்கிறதுபோல். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று வாழ்வு.

இன்னொருத்தியின் கணவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியாதோ கிட்டதட்ட அதுபோன்று.

ம்....ம் சரத்துக்கு வாக்குப்போடு எண்டு சொன்னதெல்லாம் உதுக்குள்ளதான் அடங்கும். :blink::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.