Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன், மார்ச் 10, 2010 08:52 |

கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம்

கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதானது அங்குள்ள வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமெனக் கூறப்படுகிறது.

அதிகளவிலான உல்லாசப் பயணிகளின் வருகையையடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கருத்திற் கொண்டு வடக்கிலுள்ள புராதன நகரங்கள் மற்றும் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகுபடுத்துமாறும் திருத்தியமைக்குமாறும் உல்லாசத்துறை அமைச்சு அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் அவ் வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

pathivu

நாய்கள் அங்க ஒண்டும் உல்லாசம் இல்லை ஆணவத்தை காட்ட சிங்களவர் மிருககாட்சி சாலைக்கு போவது போல் அங்க உள்ள மக்களை போய் பார்க்கினமாம்.

புலிகளின் காலத்தில் இப்படியோ வாழ்ந்தனீங்கள் எண்டு கேட்கினமாம்.

வேற்று கிரகத்தில இருந்து வந்த காட்டு வாசிகள் போல் றோட்டு முழுக்க அலைகினமாம்.

அவங்களுக்கு ஒரு சட்டம் ஒழுங்கு இல்லையாம். எங்கயும் எதுகும் செய்யலாம் எண்ட நிலையாம்.

இதை கண்டித்த பத்திரிகைக்கே வெருட்டல் தானாம்

A9 பாதையில் யாழ்நகரம் நோக்கிய தென்பகுதி சுற்றுலாப்பயணிகள்

25745244.th.jpg

யாழ் முனியப்பர்கோவிலுக்கு அருகில் ஓய்வெடுக்கும் தென்பகுதி சுற்றுலாப்பயணிகள்

99704250.th.jpg

முறிகண்டியில் தென்பகுதி சுற்றுலாப்பயணிகள்

img2369p.th.jpg

img2372b.th.jpg

ஒரு நாளைக்கு சராசரியாக 50,000 பேர். இது சத்தியமாக இருக்காது. அல்லது சிங்களவன் வேலை-வெட்டி இல்லாதவனாக இருக்க வேண்டும்

யாழ்ப்பாண தமிழர்களையும் உல்லாச பயணிகளாக கணித்து ஏமாற்றினாலும், மேற்படி விபரம் பிழையானதாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போன சனிக்கிழமை( 06-03-10) மட்டும் எனது ஊரான புங்குடுதீவுக்கு வந்தோர்(நயினாதீவுக்கு செல்வதற்காக) தொகை 957 வாகனங்களில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்

ஒரு நாளில் 85,000 பேரை நயினாதிவுக்கு கொண்டு சென்று, திருப்பி கொண்டுவரும் சக்தி அங்குள்ள அனைத்து படகு சேவைகளுக்கு உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமாக எழுதியுள்ளேன்

நயினாதீவுக்கு போவதற்காக புங்குடுதீவுக்கு வந்துள்ளனர் என்று...

அங்கு தங்கி பின்னர்தான் செல்கின்றனர்

அதை விட நயினாதீவுக்கு அவசரமாக செல்லதற்காக குறிகாட்:டுவான் துறைமுகமும் இறுப்பிட்டி துறைமுகமும்

யாழிலிருந்து அவற்றிற்கு செல்லும் வீதிகளும் பல மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

நானறிந்து இதுவரை 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்

பண்ணைப்பால புனரமைப்பும் (இங்கு புனரமைப்பில் ஈடுபடுவது தென்பகுதி மக்கள்) தென்பகுதி பேரூந்துக்களும்.

img2479l.th.jpg

img2476kg.th.jpg

img2475qf.th.jpg

img2477x.th.jpg

Edited by vidivelli

யாழ்பாணத்தில் இருந்து என் மாமா (தாய் மாமா) வந்து இப்போது என்னுடன் தான் தங்கி நிற்கின்றார். கனடாவில் 18 வருடம் வசித்து பின் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று வாழும் ஒருவர் அவர். ஒவ்வொரு வருடமும் பென்சன் விடயமாக வந்து போவார்

அவர் சொல்லும் யாழ்ப்பாண செய்திகள், நாம் வாசிக்கும் புலம்பெயர் ஊடகங்களில் இருந்து வரும் செய்திகளிலிருந்து உணர்திறனடிப்படையில் வேறானவை.

யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் வந்து தங்கிப் போக மூன்று அறையுள்ள வீட்டின் வாடகை மட்டும் 6000 இல் இருந்து 10,000 வரை போகின்றது. அது வந்து தங்கி நிற்கும் சனத்தின் அளவைப் பொறுத்து. ஒரு பஸ்சில் வந்தவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு இரவு தங்கினால் 20,000 வரை போகுமாம். இதற்கென புரோக்கர்களும் இருக்காம். ஆனால் அடுத்த நாள் வீட்டு மலத்தொட்டியை சுற்றிகரிக்க வேண்டியும் வருமாம். பொதுவாக வருகின்ற சனத்தால் சன நெரிசலைத் தவிர பெரியளவு தொந்தரவு இல்லை என்கின்றார். ஆனால் உள்ளூர் பொருட்களின் விலைதான் மிகவும் அதிகரித்து உள்ளதாம். கதலி வாழைப்பழம் ஒரு கிலோ 70 வரை போவதுடன், நல்ல வாழைக் குலைகளை தோட்டத்திலேயே சனம் போய் வாங்குவதால், நல்ல தரமான பழங்கள் கிடைப்பது அரிதாம். தென்பகுதி மக்கள் பெருவாரியாக வந்து வழிபடுவதால் நல்லூர் கோயிலில் அரிச்சனை செய்யத்தான் மிகவும் நேரம் போகிதென்று சலித்துக் கொண்டார். ஒரு நாளில் அதிகமாக 50 பஸ்களாவது தெற்கில் இருந்து வருகின்றதாம். அநேகமாக சிங்கள கிராமங்களில் இருந்து தான் வருகினமாம்.

கனடா, இங்கிலாந்து போன்ற இடங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் வந்து வீடுகள் வாங்க முற்படுவதால் காணி விலை அறாவிலையில் போகின்றதென்கின்றார். ஒரு பரப்பு 2 இலட்சமாக இருந்த கைதடியில் இப்ப 5 இலட்சத்தை விட அதிகம் என்கின்றார். டவுன் பக்கம் எல்லா மீன் சந்தைகளையும் திறந்து இருப்பதையிட்டு அவருக்கு சந்தோசம். எத்தனை பார்கள் (Bar) வந்தாலும் கள்ளுக் கடைகளிலும் இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கு என்ற தகவலைக் கேட்க ஆனந்தமாகவும் இருக்கு. வெளிநாட்டு காசால், ஒவ்வொரு இளைய வயதினரும் எவரையும் மதிக்காமல் மோசமாக திரிகினம் என்று பெரிய கவலை அவருக்கு. முடுக்குகள் இருக்கும் ஒழுங்கைகளில் எல்லாம் சின்ன பிள்ளைகள் போக முடியாமல் இருக்காம் (எனக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சாலாக இருந்தது..)..மோட்ட சைக்கிளில் வைத்தே காரியம் நடக்குதாம் (இப்ப புகை வந்தது வயிற்றில்).

வீடுகள் கட்டுவதில் இருந்து பற்பல வேலைகள் செய்ய ஊரில் இளவயதினர் இல்லையாம். இருக்கும் கொஞ்ச பேரிலும் வெளிநாட்டுக் காசால் உழைப்பு என்பதையே மறந்தவண்ணம் இருப்பவர்கள் தான் அதிகமாம். அதனால் வீட்டு வரைபடம் கீறுவதில் இருந்து, கட்டிடங்கள் கட்டுவது, மேசன் வேலை செய்வது, வீதிகள் திருத்துவது, விற்பனை நிலையங்களில் நிற்க வைப்பது போன்ற அனைத்துக்கும் தென்பகுதியில் இருந்துதான் ஆக்களை கூட்டி வரவேண்டுமாம்.

மாமா, புலிகள் பற்றி என்ன சொல்லினம் என்று கேட்க அவர் சொன்னதை மட்டும் என்னால் இப்ப எழுத முடியாது இங்கு. ஆனால் இளம்பருதி பற்றியும் பாப்பா அண்ணை பற்றியும் அவர் சொல்லும் போது பத்திக் கொண்டு வந்தது எனக்கு

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

போன சனிக்கிழமை( 06-03-10) மட்டும் எனது ஊரான புங்குடுதீவுக்கு வந்தோர்(நயினாதீவுக்கு செல்வதற்காக) தொகை 957 வாகனங்களில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்

சராசரியா ஒரு வாகனத்தில் 88பேரை ஏற்றி வந்துள்ளார்கள். லொறிகளில் அடைந்து ஆடுமாடுகள்போல் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்போல?

ஆம் நிழலி நீங்கள் சொல்லும் பருதி மார்கழி மாதம் நான் இலங்கை போகும் போது விமான நிலையத்தில் இன்னும் சிலருடன் (அவர்கள் தமிழரோ சிங்களவரோ தெரியவில்லை) காணக்கூடியதாக இருந்தது. பின் யாழ்ப்பாணம் போகும் போது முகமாலையில் இருக்கும் ஓர் இராணுவ முகாமுக்கு அருகில் உந்துருளி ஒன்றில் இன்னுமொருவருடனும் நிற்க கண்டேன். பேரூந்தில் எனக்கருகில் இருந்தவர் பாவி இப்ப எல்லோரையும்...... கொடுக்கின்றான் என முணுமுணுத்துகொண்டார். அபோது தான் பேச்சுக்கொடுத்ததில் நீங்கள் சொன்ன விடயம் தெரியவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்லும் யாழ்ப்பாண செய்திகள், நாம் வாசிக்கும் புலம்பெயர் ஊடகங்களில் இருந்து வரும் செய்திகளிலிருந்து உணர்திறனடிப்படையில் வேறானவை.

மாமா, புலிகள் பற்றி என்ன சொல்லினம் என்று கேட்க அவர் சொன்னதை மட்டும் என்னால் இப்ப எழுத முடியாது இங்கு.

நீங்கள் புலிகள் பற்றி அவர் சொன்னதை எழுதும்வரை தங்களது இவ்வறிக்கை முழுமை பெறாது.

ஏனெனில் அதைப்பற்றி எழுதக்கூடாது

எழுதினால் தொங்கிநிற்கப்படாது

இது பலருக்கு எம்மீது காறி உமிழ வாய்ப்பாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊரில் இருந்து வந்து நிக்கும் ஒரு வயோதிபர் சொன்னார்.போற போக்கைப்பாத்தால் சிங்களம் தெரியாமல யாழ்ப்பாணத்திலையும் வாழ முடியாதாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊரில் இருந்து வந்து நிக்கும் ஒரு வயோதிபர் சொன்னார்.போற போக்கைப்பாத்தால் சிங்களம் தெரியாமல யாழ்ப்பாணத்திலையும் வாழ முடியாதாம் :lol:

இனி என்ன "அப்பே ஒக்கம எக்காய்" என்று போட்டு சிரிச்சு கொன்டு திரிய வேண்டியதுதான்

போர போக்கை பார்த்தால் யாழிலயும் சிங்கள்த்திலதான் எழுத வேணும் போலகிடக்குது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோட்ட சைக்கிளில் வைத்தே காரியம் நடக்குதாம் (இப்ப புகை வந்தது வயிற்றில்).

என்ன செய்வது மேலை நாடுகளில் நைட் கிளப்புகள் தாரளமாக இருக்கிறது. 18 வயதை தாண்டியவர்கள் பெற்றோரோடு இருப்பதில்லை. எனவே தங்கள் பாலியல் துணையை எதுவித தயக்கமுமில்லாமல் வீட்டுக்கு கூட்டிவரும் சுதந்திரம் இருக்கிறது. ஹொட்டேல்/மொட்டேல் போடக்கூடிய வசதி இருக்கிறது. அவசரத்துக்கு கார் இருக்கின்றது :lol: . பாவம் யாழ்பாணத்து வாலிபர்கள்... மோட்டார் சைக்கிள் தான் அவர்களுக்கு கிடைத்தது. ஆனாலும் ஒரு விடயம் புதிராக இருக்கிறது.. ஏன் யாழ்பாணத்தில் இப்போது பற்றைகள் புதர்கள் ஒதுக்குப் புறமான கட்டடங்கள இல்லாமல் போய் விட்டதோ :lol: ? அல்லது மோடர் சைக்கிள் ரொம்ப வசதியாக இருக்கிறதோ :lol::lol: ? 95 இல் யழ் நூலகம் வீரசிங்கம் மண்டபம் போன்ற ஒதுக்குப்புறமான இடங்களில் பல காதல் சோடிகளைப் பார்த்திருக்கின்றேன். இப்போது அவை மக்கள் பாவனையில் பாவம்.. என்ன செய்வார்கள் காதலர்கள்... :lol:

சராசரியா ஒரு வாகனத்தில் 88பேரை ஏற்றி வந்துள்ளார்கள். லொறிகளில் அடைந்து ஆடுமாடுகள்போல் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்போல?

"கேக்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டும்" என்றும் கூச்சமில்லாமல் சொல்பவர்களும் யாழ் களத்தில் இருக்கிறார்கள் போல!

மருதங்கேணி அவர்களே! "அத்தகையவர்கள் முயலுக்கு எப்பவும் 3 கால்கள்" என்பதை கேட்டுவிட்டு போய்க்கொண்டிருப்பது மேலானது.

  • கருத்துக்கள உறவுகள்

சராசரியா ஒரு வாகனத்தில் 88பேரை ஏற்றி வந்துள்ளார்கள். லொறிகளில் அடைந்து ஆடுமாடுகள்போல் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்போல?

இந்த செய்தி அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தரப்பட்டது

இ.போ.ச போன்ற BUS களில்தான்அவர்கள் வருகிறார்கள் போலும்

BUS களில் அவர்கள் பயணிக்கும்விதம் அறிந்திருந்தால் கணக்கு பார்ப்பது சுலபம்

என்ன வாகனம் என்று அறிய முயற்சிக்கின்றேன்

நமக்கு தகவல் பிடிக்கவில்லை என்பதற்காக அது பிழையான தகவலாகாது

சராசரியா ஒரு வாகனத்தில் 88பேரை ஏற்றி வந்துள்ளார்கள். லொறிகளில் அடைந்து ஆடுமாடுகள்போல் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்போல?

ஏன் சகோதரரே ஒரு Ashok Leyland Bus இல் எத்தனை பேரை ஏற்றலாம்?

ஏன் சகோதரரே ஒரு Ashok Leyland Bus இல் எத்தனை பேரை ஏற்றலாம்?

56 பேர் இருந்து வரலாம் எண்டு நினைக்கிறன்.குஞ்சு.. குருமன் எல்லாம் சேர்த்தால் வரும்....

சிங்களவன் நல்லா வாழ்க்கய அனுபவிக்க தெரிந்தவன்... அவனுக்கு கதிகாமம் , திஸ்ஸமகாராம பக்கம் போய் போயே அலுத்திருக்கும்.

இப்ப யாழ்பாணத்துக்கு கிளம்பிட்டான்....

அடப் பாவிங்களா அதுக்குள்ள தொப்பி பிரட்டுறீங்களா?

தேசியத்திற்கு துரோகம் செய்யிறீங்கள்.ஒரு நாளைக்கு 10,12 மாணவிகள் கற்பழிக்கப் படுகின்றார்கள்.20,30 இளைஞர்கள் காணாமல் போகின்றார்கள்,வெள்ளை வான் கடத்தல் தொடருகின்றது,பிக்குமாரிட்ட சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும்.எல்லாரும் வெளியில தலை காட்ட பயந்து வீட்டிற்கேயே அடைந்திருக்கின்றார்கள்.30 வருட சுதந்திரத்தை,சந்தோசத்தை கெடுத்துவிட்டாங்களே பாவிகள்.இப்படியல்லவோ எழுதவேண்டும் தேசியத்தை நேசிக்கும் நாங்கள்.

இப்பவும் கொஞ்சபேர்கள் தேசியத்தை இங்கு நேசிப்பது போல.

அடப் பாவிங்களா அதுக்குள்ள தொப்பி பிரட்டுறீங்களா?

தேசியத்திற்கு துரோகம் செய்யிறீங்கள்.ஒரு நாளைக்கு 10,12 மாணவிகள் கற்பழிக்கப் படுகின்றார்கள்.20,30 இளைஞர்கள் காணாமல் போகின்றார்கள்,வெள்ளை வான் கடத்தல் தொடருகின்றது,பிக்குமாரிட்ட சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும்.எல்லாரும் வெளியில தலை காட்ட பயந்து வீட்டிற்கேயே அடைந்திருக்கின்றார்கள்.30 வருட சுதந்திரத்தை,சந்தோசத்தை கெடுத்துவிட்டாங்களே பாவிகள்.இப்படியல்லவோ எழுதவேண்டும் தேசியத்தை நேசிக்கும் நாங்கள்.

இப்பவும் கொஞ்சபேர்கள் தேசியத்தை இங்கு நேசிப்பது போல.

உது எல்லாம் நடந்தது துட்டகெமுனு காலத்தில ,500 வருசத்திற்கு முதல் ,இப்ப நடப்பது மகிந்த சிந்தான் யுகம்

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.