Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா

Featured Replies

மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா

மோசடிப் பேர்வழியான அதிபர் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தாமல் விடப் போவதில்லை என்று மீளவும் சூளுரைத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ள ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

100 சதுர அடி கொண்ட படுக்கை அறை, 150 சதுர அடி பரப்பளவுள்ள வரவேற்பு அறை, தனியான குளியலறை ஆகிவற்றைக் கொணட குடியிருப்பு ஒன்றிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தக் குடியிருப்பின் அனைத்து யன்னல்களும் அடைத்து மூடப்பட்டிருப்பதுடன், அவரது அறைகளுக்கு குளிரூட்டி வசதிகளோ, குளியலறையில் காற்றோட்ட வசதியோ அல்லது சுடுநீர் வசதிகளோ இல்லை.

அங்கிருந்தவாறு பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு எழுத்து மூலமான செவ்வி ஒன்றை வழங்கியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா.

மிகவும் இரகசியமாக அவர் வழங்கியுள்ள இந்தச் செவ்வியிலேயே, மோசடிப் பேர்வழியான அதிபர் மகிந்த ராஜபக்சவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“அதிபர் தேர்தலில் எனது வெற்றியைத் திருடிய மகிந்த ராஜபக்சவுக்கு நான் அதிக வாக்குகளைப் பெற்றதால் பொறாமை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே சட்டத்துக்கு முரணான வகையில் என்னைத் தடுத்து வைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் அவரை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்.

எனது தேர்தல் வெற்றியை மகிந்த ராஜபக்ச மோசடிகளின் மூலம் திருடிக் கொண்டதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இடிஅமீன் போன்று அவர் செயற்படுவதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20100317100716

channel4.jpg

channel41.jpg

channel42.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்தவாறு பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு எழுத்து மூலமான செவ்வி ஒன்றை வழங்கியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா.

காற்று புக முடியாத இடத்திலும் , சனல் 4 தொலைக்காட்சி புகுந்துவிடும் போல்.......

சனல் 4 செய்திகளை எடுக்கும் விதம் பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னரும் ஓஞ்ச பாடு இல்லை..பொன்னட்ட முதல் எதிரி மகிந்தா தான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னரும் ஓஞ்ச பாடு இல்லை..பொன்னட்ட முதல் எதிரி மகிந்தா தான் :lol:

பொன்னரும் ஓய்ஞ்சபாடில்லை தான்......, ஆனால் மறியலுக்குள்ளை இருந்து சவுண்டு விடுறாதாலை......,

பொன்னற்ரை மனிசி ஒவ்வொரு நாளும், வீட்டிலை இருந்து கொண்டு போற மத்தியானச் சாப்பாட்டுக்கு தடை வரப்போகுது.

பாவம் பொன்னர், அவருக்கு இப்ப கிரகநிலை சரி இல்லைப்போலை கிடக்குது. :lol::wub:

பொன்னர் சொல்லுவது போல் மஹிந்த ஊழல்க்காரன் என்றாலும் இன்று இலங்கையில் ஓர் சகஜ நிலை ஏற்பட காரணமானவர். பொன்னர் என்ன பெரிசா செய்து கிழிச்சவர். வன்னியில் போட்டு மோட்டுதனமாக செல் அடித்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததை விட இவர் என்ன பெரிசா செய்துவிட்டார். ஏதோ தேர்தலில் வெல்வதற்காக இவர் சில வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருக்கும் மக்களை வெளியே விட அன்று பாதுகாப்பு சபை கூட்டத்திலே பலத்த எதிர்ப்பு காட்டியவரும் இவரே. பின்னர் குட்டிகரணம் அடித்து நான் தேர்தலில் வென்றால் உடன் தமிழர் பகுதிகளில் இருக்கும் அநாவசிய இராணுவ நிலைகளை அகற்றுவேன் என சும்மா தமிழன் காதில் பூ சுத்தினார்.

Edited by vidivelli

உண்மை தான்

என்ன மருதங்கேணி இல்லை என்று மறுக்கின்றீர்களா? முன்னர் நாம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் போது எவ்வளவு இடையூறுகளை சந்தித்தோம். இன்று அவ்வாறான இடையூறுகள் ஏதும் இருக்கின்றதா? அல்லது இதற்கு முன் யாழ் குடாநாட்டில் காலநேரம் இல்லாமல் சென்று வர முடிந்ததா? எது எப்படியோ இன்று அது முடிகின்றதே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

70, 80லும் ஒரு இடையூறும் இல்லாமல் புகையிரத்தில் போய் வந்து கொண்டுதான் இருந்தனாங்கள். :wub::lol::lol:

பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பது இதுதானோ?.எமது போராட்டம் தொடங்கி ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகின்றது.5 அல்ல, 10 அல்ல, 30 வருடங்கள்.

30 வருடங்களுக்கு முதல் இருந்த நிலை வந்தாலே போதும் என்ற மனநிலைதான் பலருக்கு இப்போது இருக்கின்றது.சிங்களவன் மாறவுமில்லை மாறப்போவதுமில்லை.விடுதலை என்று வெளிக்கிட்டு சிங்களவனை விட கேவலமாக எம்மில் அடக்குமுறையைத் திணித்த எமது இயக்கங்கள் போய் துலைந்ததே மக்களுக்கு பெரு நிம்மதி.இப்போது போய் ஆயுதப்போராட்டம் பற்றி மக்களுடன் கதைத்துப்பாருங்கள் விளக்குமாற்றுடன் தான் வருவார்கள்.அவர்கள் பட்ட பாடும் அனுபவித்த துன்பங்களும் சொல்லி மாளாது.

நாங்கள் ஏன் நாட்டை விட்டு ஓடிவந்தனாங்கள் என்று ஒருக்கா நினைச்சுப் பாருங்கோ விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மருதங்கேணி இல்லை என்று மறுக்கின்றீர்களா? முன்னர் நாம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் போது எவ்வளவு இடையூறுகளை சந்தித்தோம். இன்று அவ்வாறான இடையூறுகள் ஏதும் இருக்கின்றதா? அல்லது இதற்கு முன் யாழ் குடாநாட்டில் காலநேரம் இல்லாமல் சென்று வர முடிந்ததா? எது எப்படியோ இன்று அது முடிகின்றதே?

நீங்கள் குறிப்பிடுவது சிங்களவருக்குத்தானே...

அப்படியாயின் உண்மைதான்

ஆனால் நாம் என்று தழிழரைக்குறித்தால்

தங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை

நீங்கள் குறிப்பிடுவது சிங்களவருக்குத்தானே...

அப்படியாயின் உண்மைதான்

ஆனால் நாம் என்று தழிழரைக்குறித்தால்

தங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை

ஒன்றும் செய்ய முடியாது விசுகு நிலமை அங்கு அப்படி இருகின்றது. யாழ்ப்பாணத்து இளைஞர்கள் கஸ்டபட்டு சிங்களத்தில் தமிழர்களுடன் பேச முற்படுகின்றனர். உதாரணத்துக்கு பிரான்ஸில் தமிழன் தமிழனுடன் பிரெஞ்சு கதைப்பது போல் தான். என்ன செய்வது பாடசாலை புத்தகத்தில் படித்த தேசிய கீதத்தை படித்துகொண்டு. அப்பே ரட்ட என்று சொன்னால் அங்கு வாழலாம். கொழும்பில் இருந்து புறப்படும் தமிழரோ சிங்களவரோ ஓமந்தை சோதனைச்சாவடியில் இறங்கி சோதனைக்கு உட்பட்டு தான் ஆகவேண்டும். அது தவிர்ந்தால் யாழ்பாணத்தில் இருக்கும் எமது வீடுவரை தடை இல்லாமல் செல்லலாம் அது தான் உண்மையும்.

  • கருத்துக்கள உறவுகள்

. என்ன செய்வது பாடசாலை புத்தகத்தில் படித்த தேசிய கீதத்தை படித்துகொண்டு. அப்பே ரட்ட என்று சொன்னால் அங்கு வாழலாம். கொழும்பில் இருந்து புறப்படும் தமிழரோ சிங்களவரோ ஓமந்தை சோதனைச்சாவடியில் இறங்கி சோதனைக்கு உட்பட்டு தான் ஆகவேண்டும். அது தவிர்ந்தால் யாழ்பாணத்தில் இருக்கும் எமது வீடுவரை தடை இல்லாமல் செல்லலாம் அது தான் உண்மையும்.

இதை அந்த இளைஞர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்கின்றீர்களா?

எனக்கு கிடைக்கும் தகவல்கள் அவர்கள் மனதில் மேலும் மேலும் வெறுப்பை உருவாக்குவதாகவே அறிகிறேன்

பிரெஞ்சில் யாரும் புகுத்தவில்லை பிரெஞ்சை எமக்கு...?

Edited by விசுகு

வடபகுதி இளைஞர்கள் இப்போ தென்னிலங்கை மோகத்திலும், வெளிநாட்டு மோகத்திலும், குறிப்பாக பெண்கள் விடயத்தில் சொல்லத்தேவை இல்லை என்று நினைக்கின்றேன். நான் விரும்பி பிரெஞ்சு பேசாமல் என்னால் பேச முடியுமா? இன்னும் சில விடயங்கள் இந்த இடத்தில் எழுத முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கின்றேன். இவைகள் யாவும் நான் நேரே பார்த்த விடயங்கள். எமது வாய் நாற்றத்தை நாமே கிளறுவதாக நினைக்க வேண்டாம். உண்மைகளை சில இடங்களில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி தேர்தல்மூட்டம் இருந்த சரத் சப்போட் கானேல்ல! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பது இதுதானோ?.எமது போராட்டம் தொடங்கி ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகின்றது.5 அல்ல, 10 அல்ல, 30 வருடங்கள்.

30 வருடங்களுக்கு முதல் இருந்த நிலை வந்தாலே போதும் என்ற மனநிலைதான் பலருக்கு இப்போது இருக்கின்றது.சிங்களவன் மாறவுமில்லை மாறப்போவதுமில்லை.விடுதலை என்று வெளிக்கிட்டு சிங்களவனை விட கேவலமாக எம்மில் அடக்குமுறையைத் திணித்த எமது இயக்கங்கள் போய் துலைந்ததே மக்களுக்கு பெரு நிம்மதி.இப்போது போய் ஆயுதப்போராட்டம் பற்றி மக்களுடன் கதைத்துப்பாருங்கள் விளக்குமாற்றுடன் தான் வருவார்கள்.அவர்கள் பட்ட பாடும் அனுபவித்த துன்பங்களும் சொல்லி மாளாது.

நாங்கள் ஏன் நாட்டை விட்டு ஓடிவந்தனாங்கள் என்று ஒருக்கா நினைச்சுப் பாருங்கோ விளங்கும்.

ஓ அப்ப நாங்க சும்மா முசுப்பாத்திக்கோ சிங்களவனோடை சண்டை பிடித்தனாங்கள் என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்?mad0009.gifmad0009.gif

பொன்சு அடங்க மாட்டுதுதாம்...

இந்தியாவிலை இருந்து ஒரு மூக்கணாங்கயிறு கொண்டு வந்தால் தான் ஆகும் போல...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.