Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குழந்தைகளை அடிக்கலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்

விசுகு அவர்களின் நடைமுறையில் நல்ல கருத்துக்கள் உள்ளன.

நான் பல பிள்ளைகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் பல. அப்போ பலருக்கு ஏதும் கருத்தினை அன்பாக சொல்வதை விட கண்டிப்புடன் சொல்வதை அதிகமாக கவனத்துடன் ஏற்பார்கள்.

ஆனால் ஒன்று இரண்டு பிள்ளைகள் அன்பாக சொன்னால் மட்டுமே கேட்பார்கள். கண்டித்தால் இல்லாத வருத்தங்கள் அவர்களிற்கு வந்துவிடும்.

கண்டிக்கவேண்டி நேரங்களில் கண்டிப்பது அவசியம்.

  • Replies 51
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளைகளை நான் அன்பால்தான் கட்டிப்போட்டுள்ளேன். விடிய ஒருவர் ஒருவராக எனது கட்டிலுக்கு வந்து 2 நிமிடம் சூடு எடுத்தே பாடசாலை செல்வார்கள். விடுமுறை நாட்களில் எல்லோரும் வந்து சில நிமிடங்கள் ஒன்றாக பிணைந்து பல விடயங்களையும் இரை மீட்போம். இது எனதுநடைமுறை. இதை நான் அவர்கள் பிறந்ததிலிருந்து செய்துவருகிறேன்.

எனது அம்மா வந்து பார்த்து விட்டு நல்ல அப்பன் பிள்ளைகள் என்பார்.

அதற்கு எனது பிள்ளைகள் அப்பம்மாவுக்கு பொறாமை என்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஒரு விடயத்தில் மட்டும் கண்டிப்பாக சொல்லியுள்ளேன் அவர்களுடைய சம்மதத்துடன்...

அது என்னுடைய வீட்டுக்கூடையில் நாலு தக்காளிப்பழங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கெட்டுவிட்டால் அதை வெளியே எடுத்து எறிவதுதானே மற்றதைக்காக்க வழி என்று அவர்களைக்கேட்டதற்கு அவர்களும் ஆமாம் என்று பதில் தந்தார்கள்.

எனவே அப்பாவும் அதே ஒரு நிலைவரும்போது இருப்பதையாவது காப்பாற்றத்தான் முயல்வேன் எனவே கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அப்பாவுக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன அவற்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நானும் தங்களது வயதைத்தாண்டி வந்தவன்தான். படிக்கும் இதே வயதில்தான் காதலும்வரும் என்று எனக்கும் தெரியும். ஆனால் தற்போதைக்கு எவருக்கும் இடம் கொடாதீர்கள். இந்த FRANCE மண்ணில் தாங்கள் இருப்பது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அதை எந்தளவு பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு பயன்படுத்தவேண்டும். அதை என் நாட்டுக்கு தாங்கள் பங்கிடவேண்டும் என்பதுதான் நான் அவர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்.

ஒருவர் பல்கலைக்கழகத்தில் கணணி பொறியிலாளர் முதலாம் ஆண்டு படிக்கின்றார்

அடுத்தவர் இந்தவருடம் பரீட்சை. அடுத்தவர் இன்னும் இரு வருடத்தில்...

இந்த படத்தில் இருப்பவர் எனது கடைக்குட்டி.

எங்கள் வீட்டு இளவரசி

Edited by விசுகு

செவ்வந்தி அக்கா ரொம்ப நல்ல பிள்ளை + ரொம்ப நல்ல அம்மா போல.

  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளைகளை நான் அன்பால்தான் கட்டிப்போட்டுள்ளேன். விடிய ஒருவர் ஒருவராக எனது கட்டிலுக்கு வந்து 2 நிமிடம் சூடு எடுத்தே பாடசாலை செல்வார்கள். விடுமுறை நாட்களில் எல்லோரும் வந்து சில நிமிடங்கள் ஒன்றாக பிணைந்து பல விடயங்களையும் இரை மீட்போம். இது எனதுநடைமுறை. இதை நான் அவர்கள் பிறந்ததிலிருந்து செய்துவருகிறேன்.

வெரி குட் விசுகு, நீங்களுமா.......

பிள்ளைகளுடன் கட்டிலில் பிரண்டு விளையாடுவது ஒரு இன்பம்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வெரி குட் விசுகு, நீங்களுமா.......

பிள்ளைகளுடன் கட்டிலில் பிரண்டு விளையாடுவது ஒரு இன்பம்.

உண்மைதான் சிறி

அதேநேரம் அவர்களுடன் மனம் விட்டும்பேசமுடியும் இந்த நேரங்களில்

ஆனந்தம் விளையாடும் வீடு - இது

ஆனந்தம் விளையாடும் வீடு

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது..

அந்த நண்பர் சொன்னார்

தனது பெண் பிள்ளை அவளது கைத்தொலைபேசியில் ஒரு மாதத்துக்கு கதைத்தநேரம் 108 மணித்தியாலங்கள்

அனுப்பிய குறு எழுத்துக்கள் SMS நாலாயிரத்துக்கு மேல்

ஆனால் அவரிடம் எந்த கெட்டபழக்கமும் கிடையாது என்று......

எனது மக்கள் 3 பேரிடம் கைத்தொலைபேசியுள்ளது

எவ்வளவும் கதைக்க கூடியதாகவும் குறு எழுத்துக்கள் எவ்வளவும் அனுப்பக்கூடியதாகவும்தான் அனுமதி எடுக்கப்பட்டுள்ளது

ஆனால் ஒவ்வொரு மாதமும் பில் பார்ப்பேன்

மாதத்தில்கதைப்பது 10 மணித்தியாலத்துக்கு மேல் போகக்கூடாது

SMS குறு எழுத்து 1000

இதை மீறினால் அப்பா நண்பராக இருக்கமாட்டார்.

அப்பா என்ற கடமைக்கு மாறிவிடுவார் என்று சொல்லப்பட்டிருக்கு...

என்னிடமோ...... எனது பிளைகளிடமோ கைத்தொலை பேசி இல்லை. தனிய வீட்டில் உள்ள தொலை பேசி மட்டும் தான்.

ஏதாவது அவசரம் என்றால் மட்டும், வேலை இடத்து தொலைபேசிக்கு எடுப்பார்கள்.

பிள்ளைகளும் கைத்தொலைபேசியில் ஆர்வம் காட்டவில்லை, அத்துடன் பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு போகப் படாது என்று சட்டமும் உள்ளது.

கைத்தொலைபேசியால் தனிமனித சுதந்திரத்துக்கு இடைஞ்சல் என்பது எனது கருத்து.

கைத்தொலைபேசியால் தனிமனித சுதந்திரத்துக்கு இடைஞ்சல் என்பது எனது கருத்து
:lol::D

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது பிள்ளைகள் சிறியவர்கள் என்று நினைக்கின்றேன்

இ ங்கு 10 வயதுக்காறர்களே கைத்தொலைபேசி வைத்திருக்கின்றனர்.

எனது இரண்டாவது மகனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவனது 16வது பிறந்ததினத்துக்குத்தான் எடுத்துக்கொடுத்தேன்

முடியுமானவரை தவிர்த்தேன்

அவனும்தான்.

ஆனால் ஒரு நாள் காரில் வரும்போது எனது பிள்ளை சொன்னது

அப்பா வகுப்பில் என்னிடம் மட்டும்தான் கைத்தொலைபேசி இல்லை. நண்பர்கள் உனது நம்பரைத்தா என்று வேண்டுமென்று கேட்டுவிட்டு சேர்ந்து சிரிக்கின்றனர் என்று சொல்லிவிட்டு தலையைக்குனிந்து கண்ணை துடைத்துக்கொண்டான்.

இதற்கு பிறகு நல்ல அப்பனால்..................????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடமோ...... எனது பிளைகளிடமோ கைத்தொலை பேசி இல்லை. தனிய வீட்டில் உள்ள தொலை பேசி மட்டும் தான்.

ஏதாவது அவசரம் என்றால் மட்டும், வேலை இடத்து தொலைபேசிக்கு எடுப்பார்கள்.

பிள்ளைகளும் கைத்தொலைபேசியில் ஆர்வம் காட்டவில்லை, அத்துடன் பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு போகப் படாது என்று சட்டமும் உள்ளது.

கைத்தொலைபேசியால் தனிமனித சுதந்திரத்துக்கு இடைஞ்சல் என்பது எனது கருத்து.

confused0006.gif

எனது நண்பர்களின் வீடுகளில் அறைக்கு ஒரு tv & dvd player வைத்து இருப்பார்கள்... பெற்றோர் வீட்டில் இல்லாத சமையம், அல்லது அவர்களுக்கு நித்திரை வராத சமையம், பிள்ளைகள் எந்த சனல் பார்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. பிள்ளைகள் கேட்டார்கள் என்று நான் வாங்கிக் குடுக்காட்டி நான் எந்த வகையில் ஒரு நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்பதை சிலர் நினைகிறார்களே தவிர, பிள்ளைகளில் போதிய கவனமின்மையால் அவர்கள் வழி தவறிப் போவதற்கு சில பெற்றோரே காரணமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து செயல்படும் பெற்றோர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள் என்பது எனது தனிப்பட்ட கணிப்பு.

கையடக்கத் தொலைபேசியும் அப்படி ஒரு நிலைமையத் தான் உருவாக்கக் கூடியது... விசுகு அண்ணா நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தையும் கொடுத்து, அதே நேரம் அந்த சுதந்திரத்தால் உங்கள் பிள்ளைகள் வழி தடுமாறாமல் இருக்கிறார்களா என்பதையும் அவதானிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் அன்பையும், கண்டிப்பையும் அறிந்து செயல் படுவதற்கு சந்தர்பம் கொடுத்து இருக்கிறீர்கள். இது வரவேற்கத்தக்க விடையம்.

...

கைத்தொலைபேசியால் தனிமனித சுதந்திரத்துக்கு இடைஞ்சல் என்பது எனது கருத்து.

சிறி அண்ணா நீங்கள் சொன்னதும் லண்டனைப் பொறுத்தவரை உண்மை! பெரும் பாலான பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி, இவற்றுடன் தான் வீதிகளிலும், பஸ்களிலும் ரயில்களிலும் காணக் கூடியதாக இருப்பதால், சில வழிப்பறி திருட்டுக்களும், அதனால் வேறு பல சிரமங்களுக்கும், ஏன் உயிரே போற அளவுக்குக் கூட சில மாணவர்களுக்கு நடந்து இருப்பது உண்மையே!

அதே நேரம் சில பாடசாலைகளில் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், ஏன் கோவிலில் கூட திடீர், திடீர் என்று கையடக்கத் தொலைபேசி மணியடிக்கும் சத்தம் எரிச்சலை உருவாக்கும். அதனால் பல பாடசாலைகள், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி இவற்றை தடை செய்து இருக்கிறார்கள். அதை உணர்ந்து பெற்றோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

. விசுகு அண்ணா நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தையும் கொடுத்து, அதே நேரம் அந்த சுதந்திரத்தால் உங்கள் பிள்ளைகள் வழி தடுமாறாமல் இருக்கிறார்களா என்பதையும் அவதானிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் அன்பையும், கண்டிப்பையும் அறிந்து செயல் படுவதற்கு சந்தர்பம் கொடுத்து இருக்கிறீர்கள். இது வரவேற்கத்தக்க விடையம்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசியால் தனிமனித சுதந்திரத்துக்கு இடைஞ்சல் என்பது எனது கருத்து.

சிறி இதுக்கெல்லாம் புறக்கனிப்பா :blink: அந்த நேரத்தில் offபன்னி வைகிற வசதியும் இருக்கு. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இன்ரனெற்...... என்பன இதுவரை தடை செய்யப்பட்டுவந்தன.

தொலைக்காட்சி தொடர்ந்து ஒன்றுதான்

போனவருடம் மகன் பல்கலைக்கழகம் சென்றதால் இன்ரனெற் அவர் மட்டுமே பாவிக்கக்கூடியதாக.. மற்றவர்களுக்கு தேவைக்கு மட்டும் அவரது அனுமதியுடன் அவரது இரகசிய இலக்கம் அவரால் இடப்பட்டால் மட்டுமே பாவிக்கக்கூடிய தடையுடன்.

இவை அனைத்தும் எல்லோரும் சேர்ந்து பேசி கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகள்.

ஆனால் ஒரு கணணி உண்டு.

பாடசாலை வேலைகள் செய்ய ......

உங்கள் பிள்ளைகள் வளர்ந்தவர்கள். அவர்களின் பாடசாலை தேவைகளுக்கும், தகவல் திரட்டலுக்கும், தொடர்பாடலுக்கும் இன்டர்நெட் தேவை என்பது எனது கருத்து. நீங்கள் அந்த துறையில் இருந்தும் இன்டர்நெட் க்கு இவ்வளவு கட்டுபாடு வைத்திருப்பது கொஞ்சம் அதிகம் என்பது எனது தாழ்மையான கருத்து. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் சொல்வது உண்மைதான் Sabesh

ஆனால் புலம் பெயர்தேசங்களின் பிள்ளை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான பணி. அத்துடன் கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் ஆபத்தானது. அதற்காகத்தான் இத்திரியை நான் இங்கு கொண்டு செல்கின்றேன். நாம் நிறைய கலந்து பேசவேண்டும். அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

எமது தாயகப்பயணத்தில் எமது அடுத்த சந்ததியின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. நாம் விழிப்புணர்வோடு இல்லாவிடில் இங்கு மேலே ஒருவர் குறிப்பிட்டதுபோல் அவர்கள் நாம் வாழும் நாட்டின் மக்கள் சமூகமாகவும் மாறிவிடுவார்கள் என்பது கொஞ்சம் அதிக எதிர்பார்ப்பு என்றாலும் அதுவும் இல்லாமல் அதாவது அவர்கள் வாழும் நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் எமது மக்களிலிருந்தும் அன்னியப்பட்டு ஒரு இரண்டும் கெட்டான் நிலைக்கு வந்துவிடுவார்கள். இது இரு நாடுகளுக்கும் எந்த நல்ல பலனையும் தராது என்பதுடன் இரு நாடுகளுக்கும் ஆபத்தானது.

அடுத்தது எனது இன்ரனெற் சம்பந்தமான கட்டுப்பாடுகள் பற்றிய தங்களது கருத்து.

எனது தொழிலோடு சம்பந்தபட்டதால் அவர்கள் இங்குவந்து என்முன்னால் தங்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும். வீட்டிலும் அவசர தேவைக்கு இன்ரனெற்றும் மற்றய தேவைகளுக்கு ஒரு கணணியும் உண்டு. இது காணாது என்ற தங்களது வாதம் ஏற்புடையதே.

அதனால் அவர்களது கல்வித்தேவைக்கு சிறு பாதிப்பு உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் கட்டுப்பாடு இல்லாத, பெற்றோர் வீட்டில் இல்லாத கணணிப்பாவிப்பு, பல பிள்ளைகளை ஒரு வெறித்தனமான அல்லது ஒருவித கணணி ஆக்கிரமிப்பாளர்களாக ஆட்கொண்டுள்ளது. சிலபிள்ளைகள் இவற்றிற்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் மீளமுடியாதடிபடி.......

இதை விட எனது இச்சிறு கண்காணிப்புடன் கூடிய பாவனை சரி என்றே தோன்றுகிறது. அதுவும் அவர்களுடன் கலந்து பேசி அவர்களின் அனுமதியுடன்.....

இது பற்றிய தங்கள் கருத்தை தாருங்கள்

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

:blink::)

confused0006.gif

ஈழமகளும், குமாரசாமி அண்ணரும் ஏன் இப்பிடி கடுமையாக யோசிக்கின்றீர்கள் என்று புரியவில்லை.

நீங்கள் பார்க்கும் பார்வையை பார்க்க........ "நிர்வாணமாக இருக்கும் ஊரில் கோவணம் கட்டியிருப்பவனை" பார்ப்பது போல் உள்ளது.

கைத்தொலைபேசி கண்டு பிடித்து ஒரு இருபது வருடம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அதாவது நாம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, அறிமுகமானது தான் கைத்தொலை பேசி. அது இல்லாமல் முன்பு நீங்களோ..... சென்ற தலை முறையோ வாழவில்லையா?

இப்போது உள்ள சமுதாயம் அதற்கு ஏன் அடிமையாகி உள்ளது?

சில வேலைகளுக்கு கைத்தொலைபேசி முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை மறுக்கவில்லை.

ஆனால் தனிப்பட்ட ஆட்கள் குடும்பவிஷயம், நண்பர்களுடன் அரட்டை, ஒருவருக்கு பொழுது போகாவிட்டால்...... மற்றவருக்கு அலுப்பு smiley-talk024.gif கொடுப்பம் என்பதற்காகவே...... பலர் கைதொலைபேசியை பாவிப்பதைத் தான் காணக்கூடியதாக உள்ளது.

வீணாக..... ஏன் பொல்லைக் கொடுத்து அடி வாங்குவான் என்பதற்காகவே நான் கைத் தொலைபேசியை வெறுக்கின்றேன்.

தங்களது பிள்ளைகள் சிறியவர்கள் என்று நினைக்கின்றேன்

-----

விசுகு, ஐந்து வயதில் வழையக்கூடியது தான்...... ஐம்பது வயதில் வழையும்.

மற்ற மாணவர்கள் கைத்தொலை பேசி வைத்திருக்கின்றார்கள் என்பதற்காக எனது பிள்ளைகள் கைத்தொலைபேசி இது வரை கேட்கவில்லை.

-----

சிறி அண்ணா நீங்கள் சொன்னதும் லண்டனைப் பொறுத்தவரை உண்மை! பெரும் பாலான பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி, இவற்றுடன் தான் வீதிகளிலும், பஸ்களிலும் ரயில்களிலும் காணக் கூடியதாக இருப்பதால், சில வழிப்பறி திருட்டுக்களும், அதனால் வேறு பல சிரமங்களுக்கும், ஏன் உயிரே போற அளவுக்குக் கூட சில மாணவர்களுக்கு நடந்து இருப்பது உண்மையே!

அதே நேரம் சில பாடசாலைகளில் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், ஏன் கோவிலில் கூட திடீர், திடீர் என்று கையடக்கத் தொலைபேசி மணியடிக்கும் சத்தம் எரிச்சலை உருவாக்கும். அதனால் பல பாடசாலைகள், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி இவற்றை தடை செய்து இருக்கிறார்கள். அதை உணர்ந்து பெற்றோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடும் கூட.

குட்டி, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. மாணவர்களுக்கு ஏன் கைத்தொலை பேசி. அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போது யார் யாருடன் தொடர்பை smiley-talk041.gif ஏற்படுத்துகின்றார்கள் என்று நெடுக கண்காணிக்க முடியாது.

அத்துடன் எனது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் கைத்தொலைபேசி கொண்டுபோகப் படாது என்று சட்டம் இருந்தும்..... சில மாணவர்கள் கொண்டு சென்றதால் அவர்களது தொலை பேசி ஆசிரியரால் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் தான் திருப்பிக் கொடுக்கப்பட்ட சம்பவத்தின் பின் பாடசாலைக்கு கைத்தொலை பேசி ஒருவரும் கொண்டு செல்வதில்லை.

அத்துடன் அவர்களது வகுப்பாசிரியர் எனக்கு எனது கைத்தொலைபேசி இலக்கத்தை தரும்படி கேட்டார். நான் எங்களிடம் கைத்தொலைபேசி இல்லை என்றவுடன்.... ஆச்சரியமாக பார்த்த போது நான் சொன்னேன் எனக்கு கைத்தொலைபேசியை கண்டால் எனக்கு அலர்ஜி என்று சொல்லி..... அவசரம் என்றால் வீட்டு இலக்கத்துக்கும்,

smiley-talk030.gif வேலை இடத்துக்கும் தொலைபேசச் சொல்லி இலக்கத்தை கொடுத்தேன்.

சிறி இதுக்கெல்லாம் புறக்கனிப்பா :blink: அந்த நேரத்தில் offபன்னி வைகிற வசதியும் இருக்கு. :D

சஜீவனின் உள்குத்து விளங்குது. அந்த நேரத்தில் ஓப் (Off) பண்ண மறக்கிறதாலை தான், அது கண்ட நேரத்தில் மணி அடிக்கும் போது..... smiley-talk031.gif கடுப்பாய் இருக்குது. :D:D

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் புரிகிறது சிறி

இங்கு நீங்கள் நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகின்றீர்கள் என்பதே அது...

ஆனால் உங்களால் முடிந்தவரை இக்கொளகையிலிருந்து விலகவேண்டாம்

அது தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் நல்லதுதான்.....

நானும் முடிந்தவரை தவிர்த்தேன்.

இறுதியில் வாங்கிக்கொடுத்துவிட்டு தவிக்கின்றேன்

விசுகு,நான் ஊரிலை பிறந்த படியால் எதையும் வாங்கிக்கட்ட இந்த உடம்பு தாங்கும். எதுக்கும் ஆயத்தமாக முதுகில் மட்டை கட்டிகொண்டு தான் இருக்கின்றேன். :blink::blink:

நானும் இந்தக் கைத்தொலைபேசி இல்லாமல் என் வாழ் நாளை கழிப்பது என்னும் முடிவில் தான் இருக்கின்றேன்.

பிள்ளைகளும் அதில் ஆர்வம் காட்டாததால் இதுவரை எந்தச் சிக்கலும் இல்லை.

பிள்ளைகள் ஆரம்பத்திலிருந்தே..... தமது பாடசாலை சந்தேங்களை, மற்ற மாணவர்களுடன் வீட்டு தொலைபேசியில் பரிமாறிக் கொள்வார்கள்.

ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை ஒரு பதினைந்து அழைப்புகள், சக மாணவர்களிடமிருந்து பாடங்கள் சம்பந்தமாக வரும்.

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பாடு இல்லாத, பெற்றோர் வீட்டில் இல்லாத கணணிப்பாவிப்பு, பல பிள்ளைகளை ஒரு வெறித்தனமான அல்லது ஒருவித கணணி ஆக்கிரமிப்பாளர்களாக ஆட்கொண்டுள்ளது. சிலபிள்ளைகள் இவற்றிற்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் மீளமுடியாதடிபடி.......

ஏற்கனவே உங்களது மூத்த மகன் அத்துறைக்கு தான் சென்றுள்ளார். :blink::blink:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நுணாவிலான்

ஆனால் அவருக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு

அதேநேரம் அவரது படிப்பும் வயதும் அவருக்கும் சில பொறுப்புக்களை உணர்த்தியிருக்கும் என்பது எனது கணிப்பு.

அவர் படிக்கும் படிப்பை தாங்கள் குறிப்பிட்டிருந்தால்......

வேறுவழி.....???

Edited by விசுகு

"அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் எண்டு சொல்லீனம்."

இந்தப் பழமொழி சரியானதுதானா? ஏனெனில் பல பழமொழிகள் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, 'கஞ்சியிலே மூஞ்சூறு விழுந்தது போல' என்ற பழமொழி, உண்மையிலேயே, 'கஞ்சியிலே முச்சோறு விழுந்தது போல' என்பதுதான் சரியான பழமொழி. அதுபோல, 'ஆயிரம் பொய்யைச் சொல்லித் திருமணம் செய்யவேண்டும்" என்ற பழமொழி, "ஆயிரம் தரம் போய்ச் சொல்லித் திருமணம் செய்யவேண்டும்" என்பதுதான் உண்மையான பழமொழி. அதுபோல், இதுவும், அடி (வருடிகள், அதாவது வாரிசுகள்) உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பதே சரியான பதம் என நினைக்கிறேன். தமிழறிஞர்கள்தான் இதற்கு விளக்கமளிக்க முடியும். தமிழறிஞர்களைத் தெரிந்தவர்கள் யாராவது இதற்கு விளக்கம் பெற்று இங்கு அறியத்தாருங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் உன்பிள்ளை தானாக வளரும்"

உந்தபழமொழிக்கு அர்த்தம் தெரிஞ்சாப்பிறகு என்ரை மனிசியையும் என்ரை பிள்ளை மாதிரித்தான் பராமரிக்கிறன் தமிழச்சி :D

தமிழச்சி,

பழமொழிகளை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியாது.

அது எந்தச் சந்தர்ப்பத்தில், எங்கு பாவிக்கப் படுகின்றது என்பதே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.

பழைய காலங்களில் "முக்கே கால் லட்சணமே..." என்று பாடிய புலவர்களும் நம்மிடையே உண்டு.

"ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் உன்பிள்ளை தானாக வளரும்"

உந்தபழமொழிக்கு அர்த்தம் தெரிஞ்சாப்பிறகு என்ரை மனிசியையும் என்ரை பிள்ளை மாதிரித்தான் பராமரிக்கிறன் தமிழச்சி :D

கு.சா அண்ண, இந்தப் பழமொழி பொதுவாக ஆண்களுக்ககச் சொல்லப் பட்டது என்று தான் நினைக்கிறன். காரணம் மாற்றான் பிள்ளையாகிய தனது மனைவியானவள் கர்ப்பிணியாக இருக்கிற காலத்தில், தனது மனைவிக்கு அவளது கணவன் பணிவிடை மனம் வைத்து செய்வானாயின் அவள் வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் நலமே தானாக வளரும் என்பது தான் சரியான அர்த்தம் என்று நினைக்கிறன்.

தமிழ்சிறி,

மப்பிலே இருக்கிற கு.சா.வே தெளிவாக இருக்கிறார். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே???? :D:lol::lol:

நீங்கள் கூறிய பாடல் எனக்குத் தெரியாது. இவ்வாறு நாம் பாடல்களையும் பழமொழிகளையும் தவறாகப் பயன்படுத்தினால், அர்த்தம் பிழையாகிப் போகும். அப்படித் தவறாகப் பயன்படுத்துவதைவிட, பேசாமலே இருக்கலாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.