Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த + த.தே.கூ = 150+

Featured Replies

மகிந்த + த.தே.கூ = 150+

140 + 14 = 154 [எனது கணிப்பு]

முதல் முறையாக இன பிரச்சினையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது.

த.தே.கூ இன் உதவியுடன் இலங்கை அரசியல் யாப்பை மாற்றலாம்.

செய்வாரா மகிந்த. இனி என்ன சாட்டு சொல்லுவார்?

மகிந்த + த.தே.கூ = 150+

140 + 14 = 154 [எனது கணிப்பு]

முதல் முறையாக இன பிரச்சினையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது.

த.தே.கூ இன் உதவியுடன் இலங்கை அரசியல் யாப்பை மாற்றலாம்.

செய்வாரா மகிந்த. இனி என்ன சாட்டு சொல்லுவார்?

ஒரு சாட்டும் சொல்லமாட்டார் .வெயிற் பண்ணுங்கோ செய்வார்.

சம்பந்தரை துரோகி எண்டு கத்திறவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு......

சம்பந்தரை துரோகி எண்டு கத்திறவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு......

அப்படியா கிசோரும் தங்கேஸ்வரியும் போன போது துரோகிப் பட்டம் கொடுத்தார்களே இப்ப சம்பந்தர் அதே குதிரையில் ஏறப்போகின்றார் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரை துரோகி எண்டு கத்திறவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு......

சம்பந்தரை துரோகியாக்கிப் பார்க்க வேண்டும் என்று எவரும் ஆசைப்படவில்லை. சம்பந்தர் நடந்து கொண்ட விதங்கள் சில மக்களில் ஒரு சாராரிடம் அவர் தொடர்பான சந்தேகங்களை எழுப்பியது.

இப்போது கூட பிரேமச்சந்திரன் சொல்கிறார் எல்லோரும் பிளவு பட்டு நின்றதால் தான் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று. இதனைத் தெரிந்து கொண்டும் ஏன் கூட்டமைப்பு பிளவை ஆழப்படுத்த முற்பட்டது என்பதுதான் கேள்வியே..???!

எதுஎப்படி இருப்பினும்.. இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு 8 இடங்களை இழந்து பிந்தங்கியுள்ளது. மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தில் வன்னியில் திருமலையில் தமிழ் மக்கள் சரியாக வாக்களிக்கக் கூடிய தேர்வை கூட்டமைப்பு முன்னிறுத்தி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் காலம் கடந்து உணர்கிறார்கள்.

இந்த நிலையை மீண்டும் சிங்கள நாடாளுமன்றம் போயும் உருவாக்காமல் சொல்லுக்கும் செயலுக்கும் மக்களுக்கு வழங்குகின்ற உறுதிமொழிக்கும் தொடர்பு வைத்து சத்தியத்தோடு சம்பந்தனும் கூட்டமைப்பினரும் செயற்பட வேண்டும்.

தேசிய தலைவர் சம்பந்தன் மீது பெரிய நம்பிக்கை வைத்தே அவர் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். இருந்தாலும் கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சி என்று தமிழ் தேசிய அடையாளத்தை விடுத்து தேர்தலில் நின்றிருப்பதையும் கவனிக்க வேண்டும். இப்படியே சிறிகச் சிறிக போலிக் காரணங்களை சொல்லிக் கொண்டு தமிழ் தேசியத்தை விட்டு ஒதுங்கிப் போகாமல்.. மக்களின் எதிர்பார்ப்புக்களை தீர்க்க கூட்டமைப்பு முற்பட வேண்டும். அதற்கு மற்றவர்களும் முரண்பாடுகளை தவிர்த்து ஒத்துழைப்பதே நன்று. எல்லாம் கூட்டமைப்பின் செயற்பாட்டு நம்பகத்தன்மையில் தான் தங்கி இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த + த.தே.கூ = 150+

140 + 14 = 154 [எனது கணிப்பு]

முதல் முறையாக இன பிரச்சினையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது.

த.தே.கூ இன் உதவியுடன் இலங்கை அரசியல் யாப்பை மாற்றலாம்.

செய்வாரா மகிந்த. இனி என்ன சாட்டு சொல்லுவார்?

நான் நினைக்கவில்லை இந்த சமன்பாடு வேலை செய்யும் என்று.

மகிந்த சமஸ்டி அமைப்பு முறையை முற்றாக நிராகரித்துவிட்டுள்ள நிலையில் சிங்கள பாராளுமன்ற அரசியலமைப்புச் சீர்திருத்ததிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மகிந்த தங்கி இருக்க விரும்புவாரா என்பது கேள்விக் குறியே.

- Mr Rajapaksa has spoken of adding a second chamber of parliament to accommodate minorities better - but he has ruled out the federalism many Tamil politicians want. ( http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8610705.stm )-

அதுமட்டுமன்றி இன்றைய பலமான நிலையில் 13 ஐ தே க வினருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் அவர்கள் மகிந்த கூட சேர்வார்கள். மக்கள சமரவீர போன்றவர்கள் அதற்கு தயாராகவே இருக்கிறார்கள். ஐ தே கட்சி ரணிலின் தலைமையின் கீழ் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறது. இப்படி ஒரு எதிர்கட்சியையே மகிந்த விரும்புகிறார். இன்றேல் அவரால் இந்த அளவுக்கு மோசடிகளோடு ஆட்சியை தக்க வைக்க முடியாது.

( அரச பேச்சாளரின் இந்தக் கருத்து ஒன்றே போதும் மகிந்தவின் திட்டங்களைச் சொல்ல. "We may be short of 12 or 13 seats to get two-thirds but that will not be a challenge for us," said Transport Minister Dullas Alahaperuma, who is a spokesman for the United People's Freedom Alliance (UPFA). -பிபிசி.)

அதுமட்டுமன்றி அரசியலமைப்புச் சீர்திருத்தம் இன்றோ நாளையோ நடக்கப் போவதும் இல்லை. தனது ஜனாதிபதி ஆட்சிக்காலம் நிறைவடையும் தறுவாயில் இந்திய பாணியில் பிரதமருக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பைக் கொண்டு வந்து இன்னும் ஒரு 5 ஆண்டுகள் பிரதமராக சிறீலங்காவை ஆழ்வதையே மகிந்த விரும்புவார். இதையே சந்திரிக்காவும் செய்ய விளைந்தார். ஆனால் அவருக்கு போதிய ஆசனங்கள் கிடைக்காத நிலையில் அந்தத் திட்டத்திலிருந்தும் அவர் பின்வாங்கினார்.

ஆனால் மகிந்தவிற்கு எல்லாமே சரியாக அமைகிறது. அவர் அதனைப் பாவிக்காமல் விடப் போவதும் இல்லை.

இந்த தேர்தல் வெற்றியால் ஏற்படும் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் என்பது மகிந்தவிற்கு சவால் குறைந்த ஒரு விடயமாகவே இருக்கும். இந்தியாவோ ஏனைய மேற்கு நாடுகளோ மகிந்த அரசு மீது காட்டமாக நடந்து கொள்ள முடியாத நிலைக்கு மகிந்தவிடம் ஆசன பலம் இருக்கிறது. பலவீனமான ஒரு எதிர்கட்சியை வைத்துக் கொண்டு தமிழர்களும் எதனையும் பெற முடியாது. அல்லது ரணிலே தனது கட்சியினரை தாவவிட்டு தமிழர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கவும் தயங்கமாட்டார்.

தேவையற்ற கற்பனைகளை நிறுத்தி.. கூட்டமைப்பு வெளிநாடுகளின் உதவியோடு புலம்பெயர் மக்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளோடு ஒத்திசைந்து சில நகர்வுகளைச் செய்து சிங்கள ஆளும் பீடத்திற்கு இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகித்தால் அன்றி.. வெறும் 14 ஆசனங்களை வைத்துக் கொண்டு பெரிதாக சாதிக்க முடியும் என்பது பகற் கனவாகவே அமையும்.

இது தமிழர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகவே இருக்கும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா கிசோரும் தங்கேஸ்வரியும் போன போது துரோகிப் பட்டம் கொடுத்தார்களே இப்ப சம்பந்தர் அதே குதிரையில் ஏறப்போகின்றார் :rolleyes:

பாருங்கள்

அவர் தமிழனுக்கு ஏதாவது தீர்வைத்தருவது என்றால் 3/2 வந்திருக்கு

செய்யலாம் என்கிறார்

இவர் அதுக்குள் எதையோ செருகுகிறார்

தமிழனுக்கு அழிவு கோடாரிகளால்தான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்துபாருங்கள்: த.தே.கூ. வின் 14 உம் அவசரகாலநீடிப்புக்கு மட்டும்தான் பயன்படும்.

மகிந்த இராசபச்ச தமக்கும் சிங்களத்துக்கும் சார்பான ஒரு அரசியலமைப்பையோ இல்லையெண்டா இப்பைருக்கிற தேர்தல் முறைய மாத்தவோ ஏதும் முயற்சி எடுக்கலாம். அப்ப ஐதேக மறுத்தால் எங்கட ததேகூ 14 பேரோட, தமிழருக்கும் ஏதாவது பெடரலை/மாநிலசுயாட்சிய உள்ளடக்கினால் ஆதரவுதர பரிசீலிப்போம் எண்டு சொல்லலாம். இதெல்லாம் நெடுக்ஸ் சொன்னதுபொல கற்பனயில் மட்டும்தான் நடக்கலாம். தமிழனுக்கு ஒண்டும் குடுக்ககூடாது எண்டதில சிங்கள கட்சிகள் தெளிவாயிருக்கினம். சரி தமிழருக்கு பெடரல் தந்தாலும் மகிந்தரரோட மோன் வந்து கிழிக்கமாட்டானெண்டு என்ன நிச்சயம்?

மகிந்த இராசபச்ச தமக்கும் சிங்களத்துக்கும் சார்பான ஒரு அரசியலமைப்பையோ இல்லையெண்டா இப்பைருக்கிற தேர்தல் முறைய மாத்தவோ ஏதும் முயற்சி எடுக்கலாம். அப்ப ஐதேக மறுத்தால் எங்கட ததேகூ 14 பேரோட, தமிழருக்கும் ஏதாவது பெடரலை/மாநிலசுயாட்சிய உள்ளடக்கினால் ஆதரவுதர பரிசீலிப்போம் எண்டு சொல்லலாம். இதெல்லாம் நெடுக்ஸ் சொன்னதுபொல கற்பனயில் மட்டும்தான் நடக்கலாம். தமிழனுக்கு ஒண்டும் குடுக்ககூடாது எண்டதில சிங்கள கட்சிகள் தெளிவாயிருக்கினம். சரி தமிழருக்கு பெடரல் தந்தாலும் மகிந்தரரோட மோன் வந்து கிழிக்கமாட்டானெண்டு என்ன நிச்சயம்?

இதென்ன புதுசா? காலாகாலமாக நடந்ததுதானே?

பாராளுமன்றத்தில நூறு ரூபக்கடன் தமிழருக்குத் தாங்கோ என்றாலே எதிர்ப்பார்கள் சிங்களவர்கள். இதுக்குள்ள தீர்வை பெற்றுத் தரவென்று தங்களுக்குள்ளே அடிபட்டு இருந்த பலத்தையும் சிதைத்தவர்கள் தான் நாம்.

யார் என்ன கேட்டாலும் தான் நினைத்ததைத்தான் மகிந்த செய்வான் அதுதான் அவனின் குணம். அதுமாத்திரம் இல்லை இன்று அவனுக்கு எல்லாமே சாதகமாக அமைந்திருக்கு. எலும்புத் துண்டை எறிந்தால் அந்த பதின் மூன்றோ அல்லது பதினான்கு எம்பிமாரை யுஎன்பி ல இருந்து வடிவா பிடிக்கலாம்.

அப்பிடி இருக்க கூட்டமைப்பிட்ட வந்து நிச்சயம் கேட்கமாட்டான். நியாயம் கேட்டு சிங்களத்தை வெளி சக்திகளின் அழுத்தம் கொடுத்தால் தான் உண்டு. இதுக்கு இந்தியாவுக்குப் போனால் என்ன அமெரிக்காவுக்குப் போனால் என்ன? எங்களுக்கு தேவையானதை எய்யவேண்டியதுதான்.

கொழும்புக்குப் சிங்களப் பாராளுமன்றம் போகலாம் என்றால் டெல்லிக்குப் போனால் ஏன் போகக்கூடாது? போகட்டும் போய் முடிந்ததை செய்யட்டும்.

ஒற்றுமையா இருந்திருந்தால் குறைந்தது மேலும் மூன்று ஆசனங்களையாவது பெற்றிருந்திருக்கலாம். அப்படி பெற்றால் அது நிச்சயம் மகிந்தவின்ர ஆசன எண்ணிக்கையைத்தான் பாதித்திருந்திருக்கும்.

நாம் நமக்குள் அடிபட்டு யாருக்கு நன்மை பெர்ருக்கொடுத்திருக்கிறோம் பாருங்கள்.

பாருங்கள்

அவர் தமிழனுக்கு ஏதாவது தீர்வைத்தருவது என்றால் 3/2 வந்திருக்கு

செய்யலாம் என்கிறார்

இதற்காகத் தான் மகிந்தா இவ்வளவு நாளும் காத்திருந்தவரா ? அல்லது பொதி சொதி ஏதாவது தருவதாகச் சொன்னவரா ? .

இவர் அதுக்குள் எதையோ செருகுகிறார்

தமிழனுக்கு அழிவு கோடாரிகளால்தான்.....

விசுக்கோத்து தனமான கதை ஏன் துப்பாக்கிகள் எல்லாம் கொத்தி எரித்து விட்டீர்களா ?

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....பாடை கட்ட கூட ஆக்களில்ல. :rolleyes:

இருந்துபாருங்கள்: த.தே.கூ. வின் 14 உம் அவசரகாலநீடிப்புக்கு மட்டும்தான் பயன்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் குழு கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களுக்கு செய்யாததை இனி செய்வார்கள் என்பது எமது மடமை. அப்படி செய்ய நினைத்தாலும் இனவாத சிங்கள அரசு விடவே விடாது.அரசு வழங்கும் சுக போகங்களை மட்டுமே கூட்டமைப்பால் அனுபவிக்க முடியும்.இதனை உணர்ந்தே 80% க்கு மேற்பட்ட மக்கள் வாக்களிக்கவில்லை.

டக்கிளஸின் தாதாக்கள் அளித்த வாக்குகள் அவரின் வாக்குகளாக கொள்ளப்பட முடியாது.ஜனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட வாக்குகளாக கொள்ளவே முடியாது. என்றாலும் ஒரு உண்மையையை ஒத்து கொள்ள வேண்டும் டக்கிளஸ் தமிழ் மக்களுக்கு செய்த அளவு கூட கூட்டமைப்பால் செய்ய முடியவில்லை அல்லது செய்ய முடியாது.

மீண்டும் கொலைகார டக்கிளஸ் கும்பலுடன் வாழ்வது தான் குடாநாட்டு மக்களின் விதி போலும்.

இந்த தேர்தலில் 80 வீதமான தமிழ் மக்கள் சொல்ல வரும் செய்தி என்பது தான் மில்லியன் டொலர் கேள்வி.உண்மையான ஜனநாயக நாட்டில் வாக்களிக்காதவர்கள் பற்றி அக்கறை கொள்ளாதது ஜனநாயகத்தின் மிக பெரிய ஓட்டை.

இத்தேர்த்தலில் மிகவும் சுவாரசியமானது கிழக்கின் விடி வெள்ளிகள் எந்த ஒரு ஆசனத்தையும் பெறவில்லை என்பது தான். அத்தோடு கிழக்கு மக்களின் விடுதலை வேட்கையை மீண்டும் ஒரு முறை பறை சாற்றியுள்ளார்கள்.

மீண்டும் தமிழ் மக்களின் ஒற்றுமையை இந்த தேர்த்தல் சொல்லி நிற்கிறது. ஆகவே எவ்வளவுக்கு நாம் ஒன்று பட முடியுமோ அது எந்த வேலை திட்டமாக இருக்கட்டும் அல்லது கொள்கை அடிப்படையிலாக இருக்கட்டும் ஒற்றுமையின் அத்தியாவசியத்தை உணர்த்துகிறது.

இறுதியாக தாயகத்தில் வாழும் எமது மக்களின் பிரதிபலிப்பாக நாம் இருக்க வேண்டுமே தவிர எமது பிரதிபலிப்பாக அவர்கள் எப்போதுமே இருக்க கூடாது. இருக்கவும் மாட்டார்கள்.

Edited by nunavilan

22 பேர் இருந்த போதே வதை முகாம்களை கூட எட்டிப்பாக்காதவை இப்ப 14 பேர் எதையாவது கிளிச்சிட போகினம்...

முதல் முதல் சம்பந்தர் எப்ப அந்த முகாம்களுக்கு போனார் கடைசியாக எப்ப போனார் எண்டு எனக்கு ஒருக்கா சொல்லுங்கப்பா...

யார் வந்து என்ன செய்துவிடப் போகிறார்கள். விடுதலைப்புலிகளால் ஆகாதது, சம்பந்தர் அணி வென்றதாலோ, கஜேந்திரன் அணி வென்றிருந்தாலோ எதுவும் நடந்திருக்காது. சம்பந்தர் என்ற ஒருவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று முயல்வதும், அவர் வென்றபின்பு இவர்களால் எதுவும் ஆகாது என்று கூறுவதும் சாதாரண அரசியல்தான். சம்பந்தர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி முழுத் தமிழருக்கும் பாதகமான நிலையை ஏற்படுத்தும்.

கூட்டமைப்பிலிருந்து விலகியோர் இன்றைய சூழலில் தோற்றிருக்கிறார்கள் என்றால், அங்குள்ள வாக்களித்த மக்களின் தீர்ப்பினாலேயே அது நடந்தது. சம்பந்தர் அணிமீதுள்ள அபிப்பிராயபேதம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுமானால் ஏனைய குழுக்கள் பலம் பெறுவதற்குத்தான் வழிவகுக்கும்.

ஒன்றுபடுதல்தான் சிறந்த வழி. சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய முடியாதுபோனால் தோல்விதான் எக்காலத்திலும் மிஞ்சும். இது வரலாறு.

களத்தின் தேவைக்கேற்ப புலத்தின் தமிழர் அரசியல் நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டும்.

தனது 40 வருட அரசியலில் உருப்படியாக எதையும் மக்களுக்கு செய்யாத, தனது எதேச்சாதிகரத்தால் கடந்த காலங்களில் பிரிவுகளுக்கு காரணமான சம்பந்தர் என்ற ஒரு தனிநபரின் மீதான கண்மூடித்தனமான பக்தி முழுத் தமிழருக்கும் பாதகமான நிலையை ஏற்படுத்தும். ரணில் UNP தலைமையை இறுகப்பிடித்து, வழிநடத்தி, அழிவுக்கு இட்டுச்செல்வது போல.

ஒன்றுபடுதல்தான் சிறந்த வழி. அதற்கு பொருத்தமானவர்களிடம் தமிழ் பிரதிநிதிகளின் தலைமை இருக்கவேண்டும். இதை உரியவர்கள் தாமே செய்தால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய முடியாதுபோனால் தோல்விதான் எக்காலத்திலும் மிஞ்சும். இது வரலாறு.

புலம் - களம் இருவரும் ஒருவரை ஒருவர் விளங்கி செயட்படவேண்டுமேயன்றி, களத்துக்காக புலமோ, புலத்துக்காக களமோ முழுவதும் மாறுவது விரும்பிய முடிவை கொண்டுவராது. சூழ்நிலை காரணமாக, இருவரின் உடனடி குறிக்கோள்கள் ஒன்றாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் நீண்ட கால இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

நாடு கடந்த தமிழீழ அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சமாந்தரமாக பணியாற்றும் பொழுது சர்வதேச, பிராந்திய நாடுகளின் ஆதரவை தமிழர் பக்கம் திருப்பலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தமது முடிவை தெளிவாக ஒரு தமிழ் கட்சியை தெரிவு செய்ததன் மூலம் தெரிவித்து விட்டார்கள்.

அது போல புலத்தில் இருக்கும் நாமும், மே 02 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்கு பற்றி எமது வரலாற்று கடமையை ஆற்றுவோம்.

சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய முடியாதுபோனால் தோல்விதான் எக்காலத்திலும் மிஞ்சும்.

:rolleyes: அதைத்தான் டக்கிளஸ் அண்ணே செய்யிரார் :wub:

:rolleyes: அதைத்தான் டக்கிளஸ் அண்ணே செய்யிரார் :wub:

இந்திய - சிங்கள பயங்கரவாதிகளுடன் இணைந்து 2007 நவம்பர் முதல் 2009 ஜூன் வரை யாழ் மண்ணில் மட்டும் 6,000 க்கு மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்ததை சொல்லுகிறீர்களா? அல்லது அண்மையில் சாவகச்சேரியில் கப்பம் கேட்டு மாணவனைக் கடத்தி கொலை செய்ததை சொல்லுகிறீர்களா?

இந்திய - சிங்கள பயங்கரவாதிகளுடன் இணைந்து 2007 நவம்பர் முதல் 2009 ஜூன் வரை யாழ் மண்ணில் மட்டும் 6,000 க்கு மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்ததை சொல்லுகிறீர்களா? அல்லது அண்மையில் சாவகச்சேரியில் கப்பம் கேட்டு மாணவனைக் கடத்தி கொலை செய்ததை சொல்லுகிறீர்களா?

அரசியலில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லுறாங்கள்,இது இல்லாவிடில் ஜனநாயகம் இல்லை என்று வாதடவும் மக்கள் உண்டு

அரசியலில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லுறாங்கள்,

இது இல்லாவிடில் ஜனநாயகம் இல்லை என்று வாதடவும் மக்கள் உண்டு

வாதாடுபவர்களை விட்டுவிடுங்கள். நீங்கள் எப்படி?

இந்திய - சிங்கள பயங்கரவாதிகளுடன் இணைந்து 2007 நவம்பர் முதல் 2009 ஜூன் வரை யாழ் மண்ணில் மட்டும் 6,000 க்கு மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்ததை சொல்லுகிறீர்களா? அல்லது அண்மையில் சாவகச்சேரியில் கப்பம் கேட்டு மாணவனைக் கடத்தி கொலை செய்ததை சொல்லுகிறீர்களா?

இனி மேல் இதுதானாம் அரசியலாம். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி அரசியல் செய்யிறது என்று சொல்வது இதைத்தானாம்.

ஒட்டு மொத்த தமிழ் மக்களின் 15% வாக்குக்களை கூட பெறாதவர்கள் எல்லாம் தமிழினத்தின் தலைமை அவர்களுக்கு பின்னாலை ஒற்றுமையாக போவதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதாம்...

வழமையாக பட்டியோடை பட்டியாக போய்க்கொண்டு இருக்கும் செம்மறி ஆடு அறிவுரை சொல்கிறது... 85% மக்களின் கருத்து கணக்கிலை எடுக்க படவேண்டியது இல்லையாம்...

15% ல இருந்து 20% ஆகி 20% இருந்து 50% ஆகி பின்னர் 90% ஆகி பின்னர் 99% தாக்கினாலும் அந்த ஒருவிதம் மக்களும் சொன்னாத்தான் நாங்கள் நம்புவம் இல்லாட்டால் நம்ப மாடம் ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தான் தமிழ் மக்கள் பற்றி கதைக்கலாம்.

மற்றவர்கள் எல்லாரும் திரோகிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான கிண்ற்றுக்குள் வீழ்ந்திருக்கும் யாழ் மக்கள்

பலமான ஒரு கயிற்றைக் கண்டும் இறுகப்ப்பிடித்து

ஏறாமல் இன்னும் கிணற்றுக்குள்ளேயே நிற்கின்றார்கள்.

மாரி காலம் வந்து கிணறு நிறையும் போது

அவதிப்படப்போகின்றார்கள்

வாத்தியார்

................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.