Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டமிடப்பட்ட ரீதியில் சீரழிவுக்குள்ளாகும் நல்லூர் புனித பிரதேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் என்பது தமிழர்களின் பூர்வீக பூமியாகும். என்றென்றும் அழியாத வரலாறு செழுமை மிக்க பண்பாடு மறையாத கலாச்சாரம் என்பவற்றை தன்னகத்தே கொண்ட புனித இடமாகும். இதற்கு அணிசேர்ப்பதாக அமைவது யாழ் நகருக்கு அண்மையாக அமைந்துள்ள நல்லூர் பிரதேசமாகும்.

இந்த நல்லூர் பிரதேசமானது புனித இடமாக போற்றப்பட வேண்டிய இடமாகும். அதுமட்டுமின்றி தமிழர்களுடைய வரலாற்றுப்பூமியாகவும் போற்றப்படவேண்டியது. இவ்வாறான பெருமையும் செழுமையும் நிறைந்த நல்லுர் பிரதேசமானது இன்று கலாச்சாரம், பண்பாடு, வரலாறு திட்டமிடபட்ட ரீதியில் சீரழிவுக்குள்ளாகி வருவது என்பது ஒரு வேதனை தரும் விடையமாகும்.

photo: நல்லுர் கந்தன் ஆலய வளாகத்தில் சிங்கள பிக்குமார்

புனித இடம் எனறு சொல்லப்படுவதற்குக் காரணம் இப்பிரதேசத்தில் எழுந்தருளி அருளாட்சி புரிகின்ற நல்லுர் கந்தன் ஆலயமாகும். புனித இடமாகக் புசிக்க வேண்டிய இவ்விடம் தென்னிலங்கையில் இருந்து வருகை தருகின்ற பெரும்பான்மையினத்தவர்களால் திட்டமிடப்பட்ட வகையில் பாரிய கலாச்சார சீரழிவுகளுக் உட்படுகின்றது. குறிப்பாக 2006.08.11 இற்கு பின்னர் யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு தென்னிலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, பின்னர் 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மீண்டும் பாதை திறக்கப்பட்டதால் சுற்றுலா என்ற போர்வையில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் நல்லூர் போன்ற புனித இடங்களில் தங்கி அவ்விடங்களை சீரழிவுக்கு உள்ளாக்குகின்றார்கள். அண்மையில் கூட தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த சிங்களவர்கள் கோயிலின் அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்து மாட்டிறைச்சி சமைப்பது தெரியவந்தது. இதனைத் தட்டிக் கேட்பதற்கு கூட திராணியற்றவர்களாய் அப்பகுதி மக்கள் உள்ளார்கள்.

photo: நல்லுர் பின் வீதியில் அமைந்துள்ள சிங்கள நடைபாதை கடைகள்.

அதுமட்டுமின்றி கந்தபெருமான் பவனிவரும் வெளிவீதியை அன்டியபகுதியில் சிங்களவர்களால் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு, ஆலயத்தின் அமைதி என்நேரமும் சீர்கெட்டுக்காணப்படுகின்றது. இதனால் இவர்கள் அப்பகுதிகளிலேயே தங்கி தமது கடமைகளை முடிக்கின்றனர். இதனால் அதன் சுற்றுசூழல் மாசு படுத்தப்படுகின்றது. அடுத்து நல்லுர் என்றவுடன் தமிழர்களாகிய எமக்கு ஞாபகம் வரும் இன்னொரு விடையம், நல்லுர் பின்வீதியில் அமைந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒர் நினைவுத்துபி ஆகும்.

அதாவது 1987.9.15 அன்று தமிழர்களின் விடிவுக்காக அகிம்சையாக பேராடிய தியாகச்செம்மல் திலீபனின் நினைவுத்துபி ஆகும். இவ் நினைவுத்துபி ஆனது 2002ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் பின் தமிழ்த்தேசியபற்றாளர்களால் அமைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலையால் அரசு ஆதரவுக்குழுக்களால் இடிக்கப்பட்டது. இருந்தபோதும் இதன் எஞ்சிய பகுதி கூட மாவீரனின் தியாகத்தை பறைசாற்றி நின்றது. இதனையும் பொறுக்கமுடியா தமிழ் இனத்துரோகிகளும், இனவாதிகளும் சேர்ந்து அண்மையில் மீண்டும் எஞ்சிய நினைவுத்துபியையும் இடித்து எச்சங்களை தூர போட்டுவிட்டனர்.

என்னுமொரு வேதனைதரும் விடையம் என்னவெனில் நலிலுர் வீதியில் நடைபாதைக்கடை ஒன்றின்பின் ஆடை உலரவிடுவதற்காக நாடா கூட இத்துபியிலேயே கட்டப்பட்டுள்ளது. ஏம்தேசத்தின் விடிவிற்காகவும் மக்களுக்காகவும் தன்னுடைய உடலை உருக்கி மரனித்த இவ்வீரனின் நினைவுத்தூபி கூட சிங்கள அரசினால் திட்டமிட்டரீதியில் அழிக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டும் வருவது ஒவ்வொரு தமிழ் மகனும் வேதனை படவேண்டிய விடையமாகும்.

இத்தனைக்கும் மத்தியில், இவ் நல்லுர் பிரதேசத்துக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. என்னவெனில் தமிழ் மன்னனான சங்கிலியன் இப்பிரதேசத்திலே கோட்டை அமைத்து தன்னுடைய போரினை நடத்தினான் வீரமும் பற்றும் நிறைந்ததினால் நல்லூர் இராசதாணி சிறப்பிற்குரியது. சங்கிலியன் கோட்டை அமைத்த இடத்தில் இன்று அதன் எச்சங்களாக மந்திரி மனையும் கோட்டையின் சில துண்களும் எஞ்சி உள்ளன. ஆனால் இதனையும் அழித்துவிடவேண்டும் என்று இவ்விடத்தில் இருந்து 100 தெலைவில் நான்கு நட்சத்திர கேட்டல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது கூடநல்லுரின் புனிதத்தை சீரழிக்கும் விடையம் ஆகும்.

இவ்வாறாக திட்டமிட்ட ரீதியில் நல்லுர் பிரதேசத்தை சமய, பண்பாட்டு, வரலாற்று ரீதியில் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டு தமிழர் பண்பாடு அழிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் ஒரு இனத்தை தாங்கி நிற்கும் துண்கள் என்று சொல்லப்படும் கல்வி, மொழி, பண்பாடு என்பனவற்றை நசுக்கும்போது ஒரு இனம் தானாகவே அழிந்து விடும். இத்தகைய ஒரு காரியத்தைதான் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் காய் நகர்த்தி வருகின்றது. ஆனால் மனவருத்தம் தரும் விடையம் என்னவென்றால் மேற்கூறப்பட்ட விடையம் அனைத்தும் நடப்பது தெரிந்தும் அதனை தட்டிக்கேட்க திரணியற்று நிற்கின்ற யாழ் மானகரமேயரும் அவரைச்சார்ந்த அரச அதிகாரிகளும் தம்பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக தட்டிக்கேட்காமல் இருப்பது வேதனை தரும் விடையம் ஆகும்.

எனவே எமது இனத்தின் அடையாளமாக உள்ள பண்பாடு, கலாச்சாரம், வரலாறு என்பனவற்றை திட்டம் இட்டு அழிப்பதன் மூலம் எமது இனத்தை அழித்துவிடலாம் என்பது அரசின் எண்ணமாகும். எனவே மேற்கூறிய விடையங்களை கருத்திற்கொன்டு எமது பண்பாடு, கலாச்சாரம், வரலாறு என்பனவற்றை கட்டிக்காத்து பாதுகாப்பது தழிழர்கள் ஒவ்வெருவரினதும் கடமை ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தலுக்கு முன்னம் உத கையில எடுத்திருந்தா முடிவ மாற்றியிருக்கலாம் , லேட்டா தான் எல்லாம் நடக்குது...எங்கட அதிஸ்டம். :rolleyes:

யாழ் குலாம் தெரிவு செய்த தலைவர்கள் கட்டி காப்பார்கள் நமக்கேன் வம்பு

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளைசை தானே அண்ணே நீங்கள் கருதுறீங்க :rolleyes:

டக்கிளைசை தானே அண்ணே நீங்கள் கருதுறீங்க :wub:

மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது தலைவரை இப்படி புறம் சொல்லவோ பழிக்கவோ கூடாது :rolleyes:

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது தலைவரை இப்படி புறம் சொல்லவோ பழிக்கவோ கூடாது :rolleyes:

ஏதோ நீங்கள் கஜேந்திர கவசம் பாடித்தான் கேள்விபட்டேன். அதற்குள் டக்கிளஸ் கவசமா? யப்பா!!! :wub:

ஏதோ நீங்கள் கஜேந்திர கவசம் பாடித்தான் கேள்விபட்டேன். அதற்குள் டக்கிளஸ் கவசமா? யப்பா!!! :rolleyes:

நான் புலிக் கவசம் பாடி நீங்கள் கேள்விப்படவில்லையா ? கயேந்திர கவசம் மட்டும் தான் கேட்டதா ? இனி கருணா கவசம் பாடுவதாக உத்தேசம்

நல்லூர் கந்தன் இருக்கிறான் தானே அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்.

நல்லூர் கந்தன் இருக்கிறான் தானே அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்.

கந்தனுக்கும் வித்தியாசமா பார்க்கவேண்டும் என்று ஆசை வந்திருக்கும் அதுதான் பிக்குமாரை பார்கிறார் போல கிடக்குது :rolleyes::wub:

நல்லூர் கந்தன் இருக்கிறான் தானே அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்.

முருகனும் ஆண்டாண்டு காலமாக தான் அதிலை இருக்கிறார் புலியாலையே சிங்களவரை பிடுங்க முடியவில்லை முருகனா ? :rolleyes::wub::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பத்தி ஓடிப்போனவர்கள் நாங்கள் என்னத்தைக் கதைக்கிறது.

நான் புலிக் கவசம் பாடி நீங்கள் கேள்விப்படவில்லையா ? கயேந்திர கவசம் மட்டும் தான் கேட்டதா ? இனி கருணா கவசம் பாடுவதாக உத்தேசம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில பிரபாகரனின் படத்தையும் கொடும்பாவியையும் எரிச்ச ஜெயானந்தமூர்த்தியும் லண்டனில இருந்து கொண்டு பம்மாத்து காட்டினவராம். இப்ப அவரும் சொல்லுறாராம் இனி சரிவராது கருணாவோடதான் சேர வேணும் எண்டு....

வோட்டு போட்டு வந்த டக்கிள்ஸ் இடம் சொல்லுங்கள். அவன் தானே தீலிபன் சிலையை உடைத்து துப்பரவாக்கி உள்ளார்.

வோட்டு போடாத யாழ் நகர வாசிகள் கவலை பட இல்லை.

பிறகு நீங்கள் ஏன் குத்தி குறிகிறியள்.

டக்கிளஸே சொல்லி போட்டான் இப்ப 3 பேர் உசாராக வேலை செய்யலாமெண்டு.

நல்லூர் வீதிகளில் மீன்கடை இறைச்சி கடை போடலாமென்று அறிவித்தல் வரும்.

நடக்கும் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருத்தரைக்காணவில்லை

இதெல்லாம் தமிழனது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை

நல்லூரில் அப்படி என்ன தொல்பொருள் கிடக்கு. அவனது இடங்களைவிட என்றும் எழுதுவார் பொறுங்கள்

Posted 05 April 2010 - 01:50 PM

விசுகு, on 05 April 2010 - 02:41 PM, said:

உல்லாச விடுதியில என்ன இருக்கண்ண

ஆனால் உல்லாசத்திலேயே நீங்க குறியா நிற்கிறது தான் எனக்கு புரியாத புதிரா கிடக்கு

அப்ப நல்லூர் மக்கள் யாரும் உல்லாசமாக எப்பவும் இருக்க மாட்டினம் எண்டுறீயளோ...???

இல்லை யாழ்ப்பாணத்திலை இல்லையோ...??

நல்லூர் கேணியிலை யாரும் குளிக்கிறது நீந்துறது இல்லையோ..? இல்லை தரமான உணவை சாப்பிடுகிறதும் இல்லையோ..? நல்ல கட்டில்களிலை படுக்கிறது கூட இல்லையோ...??

இல்லை யாரும் பிள்ளை பெத்துக்கொள்வது கூட இல்லையோ...?? இல்லை நல்லூர் மக்கள் தண்ணி அடிக்கிறதும் இல்லையோ...??

அது எல்லாம் ஒரு இடத்திலை வந்தால் மட்டும் தவறோ...?

நீங்கள் எல்லாம் திருந்துறது கடினம்..

This post has been edited by தயா: 05 April 2010 - 01:51 PM

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70692

Edited by விசுகு

இன்னொருத்தரைக்காணவில்லை

இதெல்லாம் தமிழனது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை

நல்லூரில் அப்படி என்ன தொல்பொருள் கிடக்கு. அவனது இடங்களைவிட என்றும் எழுதுவார் பொறுங்கள்

மற்றவரை தூற்றுறதை தவிர உமக்கு உருப்படியா ஒண்டும் தெரியாது...

Edited by தயா

வோட்டு போட்டு வந்த டக்கிள்ஸ் இடம் சொல்லுங்கள். அவன் தானே தீலிபன் சிலையை உடைத்து துப்பரவாக்கி உள்ளார்.

வோட்டு போடாத யாழ் நகர வாசிகள் கவலை பட இல்லை.

பிறகு நீங்கள் ஏன் குத்தி குறிகிறியள்.

டக்கிளஸே சொல்லி போட்டான் இப்ப 3 பேர் உசாராக வேலை செய்யலாமெண்டு.

நல்லூர் வீதிகளில் மீன்கடை இறைச்சி கடை போடலாமென்று அறிவித்தல் வரும்.

நடக்கும் பாருங்கள்

இல்லை அப்படி நீங்கள் சொல்வது போல் நல்லூரடியில் இறச்சிக்கடையும், மீன்கடையும் திறந்தால் அதற்கு நீங்கள் என்ன செய்துவிட முடியும்? இப்படி இணையங்களில் வந்து சும்மா கத்திக்கொண்டிருக்க தான் முடியும் :)

கருணாவோடதான் சேர வேணும் எண்டு....

நீங்கள் சிபாரிசு செய்தால் தான் கருணா கேட்பாராம் சேர்த்து விடமுடியுமா ?

இப்படி இணையங்களில் வந்து சும்மா கத்திக்கொண்டிருக்க தான் முடியும் :)

இதை விட இங்கே என்ன செய்ய முடியும் அதைத் தானே நீங்களும் செய்கின்றீர்கள்

விசுகு, மற்றவரை தூற்றுறதை தவிர உமக்கு உருப்படியா ஒண்டும் தெரியாது...

:mellow:

Edited by tamilsvoice

திலீபனின் சிலையை உடைத்தவருக்கு 3 ஆசனங்கள் வாய் திறக்காத சம்பந்தருக்கு 5 ஆசனங்கள்

kodikamam_01.jpg

இதில் விளம்பரம் இட்டதால் யாழ் குலாம் மாவீரர்களின் கனவு டக்லஸ் என்று நினைத்துவிட்டார்களோ ? :mellow:

யாழ் குலாம் என்ன சொல்ல வருகின்றது என்று இப்பவாவது தெரிகின்றதே ? :):)

Edited by tamilsvoice

வன்னி அவலத்தின் போது யாழ் கந்தனின் அருள் பாளித்த அடியார்கள்

vanni%2Bpeople.jpg

http://suthumaathukal.blogspot.com/2009/08/blog-post_3226.html

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

இனி கருணா கவசம் பாடுவதாக உத்தேசம்

கிழக்கின் விடி வெள்ளியையே மக்கள் காறி துப்பி விட்டார்கள். ஏதாவது வெல்லுகிற குதிரையில் காசை கட்ட பாருங்கள். :lol::lol:

Edited by nunavilan

கிழக்கின் விடி வெள்ளியையே மக்கள் காறி துப்பி விட்டார்கள். ஏதாவது வெல்லுகிற குதிரையில் காசை கட்ட பாருங்கள். :lol::)

மகிந்தாவின் பக்கம் தான் செல்லவேண்டும் அவரே காசும் தந்து தேர்தலில் நிற்கவும் வைக்கின்றார் :lol:

வன்னி அவலத்தின் போது யாழ் கந்தனின் அருள் பாளித்த அடியார்கள்

vanni%2Bpeople.jpg

http://suthumaathukal.blogspot.com/2009/08/blog-post_3226.html

உண்மையை சொல்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூர் மட்டும்தான் புனித பிரதேசமா?

வடகிழக்கில் உள்ள தமிழர்களது கோவில்கள் , தேவாலயங்கள்,மசூதிகள் எல்லாமே புனிதப் பிரதேசங்கள் தான்.

எத்தனையோ மண்களை இழந்து உள்ளோம். இது பெரிசா . கனடாவில் ஒரு கொப்பி நல்லூர் உருவாக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

சப்புமல் குமரயாவின் ஆட்சிக்குள் இருந்த நல்லூர் பிரதேசம் புனித பிரதேசமாகப் பிரகனடப்படுத்தப்படுவதில் எந்தத் தவறுமில்லை. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி கோயிலில் கப்புறாளைகளைப் பூசை செய்யப் பண்ணவும் வேண்டும் என்று யாழ் மக்களின் அதிவிருப்பத்திற்குரிய மாண்புமிகு (வருங்கால) அமைச்சரை வேண்டிக்கொள்கின்றேன்.

சப்புமல் குமரயாவின் ஆட்சிக்குள் இருந்த நல்லூர் பிரதேசம் புனித பிரதேசமாகப் பிரகனடப்படுத்தப்படுவதில் எந்தத் தவறுமில்லை. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி கோயிலில் கப்புறாளைகளைப் பூசை செய்யப் பண்ணவும் வேண்டும் என்று யாழ் மக்களின் அதிவிருப்பத்திற்குரிய மாண்புமிகு (வருங்கால) அமைச்சரை வேண்டிக்கொள்கின்றேன்.

சம்புமல் குமர எண்டு அவரின் சிங்கள பெயரை சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... செண்பககுமாரன் எண்று தமிழில் அழைக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்வதோடு அவரின் அடுத்த தலைநகராக இருந்த தொண்டமனாற்று துறையை கண்டு பிடிச்சு செல்வச்சன்னதி கோயிலையும் கட்டிக்காக்க வேணும் எண்டு நானும் வேண்டுகிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.