Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர்' - இரா. சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர்' - இரா. சம்பந்தன்

[ சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2010, 14:04 GMT ] [ புதினப் பணிமனை ]

புலம்பெயர்ந்த எமது மக்கள் தந்த பின்புல ஆதரவும் பலமும் தான் தேர்தலுக்கு முன் நாம் எதிர்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளினை துணிவுடனும் தெளிவுடனும் கையாள்வதற்கு உதவியது என புதினப்பலகையிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

திருக்கோணமலை முடிவுகள் அறிவிக்கப்படாத பரபரப்புக்கும், தனது தலைமைக்கு கிடைத்த வெற்றியின் உற்சாகத்திற்கும் இடையில், தனது பழுத்த அரசியல் முதிர்ச்சியுடன் தற்போதைய அரசியல் நிலமை, தேர்தல் நிலவரங்கள் பற்றி 'புதினப்பலகை' ஆசிரியர்களுடன் உரையாடினார்.

குரல்வழியான அவரது உரையாடலின் எழுத்துவடிவம் இது. அதிலிருந்து முக்கிய பகுதிகள்:

இம்முறை வாக்களித்த தமிழ்மக்களின் அளவு எதிர்பார்த்ததினைவிட குறைவாக இருந்துள்ளது? இந்நிலைமை குறிப்பாக யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தது. இதற்கு குறிப்பான காரணங்களினை எதனையும் கூறமுடியுமா?

நீங்கள் கூறுவதில் வெளிப்படையான உண்மை உண்டு.

யாழ்ப்பாண மாவட்டத்தினைப் பொறுத்தவரை மாவட்டத்தின் மக்கள் முழுமையாக மீண்டும் அங்கு வந்து குடியமரவில்லை. இது மிகமுக்கியமான விடயமாகும்.

இதற்கு மேலாக நடந்து முடிந்த தேர்தலின்போது அதிக எண்ணிக்கையான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தெளிவான அரசியற் கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ இல்லாமல் போட்டியிட்டமையும், ஏற்படுத்தப்பட்ட குழப்பகரமான பரப்புரைகளும் மக்களினை விரக்தி நிலைக்கு தள்ளி தேர்தலிலிருந்து தூர நிற்பதற்கு தூண்டியுள்ளதாகவே உணர்கின்றோம்.

திருகோணமலையைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் தங்களது அடிப்படைச் சனநாயக உரிமையான வாக்குப் பிரயோகத்தினை பயன்படுத்துவதற்கு எதிராக மிகத்திட்டமிட்டு செயற்பாடுகள் மேற்கோள்ளப்பட்டிருந்தன.

குறிப்பாக ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகரும், அவரது குண்டர்கள் அணியும் மிகமோசமான அச்சுறுத்தல்களிலும் தடைகளினை ஏற்படுத்துவதிலும் தமிழ்மக்களினை வாக்களிக்கச் செய்யவிடாமல் தடுப்பதிலும் ஈடுபட்டனர்.

தமிழ்மக்களின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டன. திருகோணமலை வடக்கில் சலப்பையாற்றுப் பகுதியில் தமிழ்மக்களிடமிருந்து வாக்காளர் அட்டைகள் பறித்துக் கிழிக்கப்பட்டன.

வாக்காளர்களின் போக்குவரத்திற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடமுடியாமல் தடுக்கப்பட்டன. அதன் சாரதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர்.

திருகோணமலையின் தொலைதூர கிராமங்களுக்கு இடையில் ஏற்கனவே காணப்படும் போக்குவரத்து தொடர்பாடல்களின் மட்டுப்பாடுகளுக்கு மேலாக மென்மேலும் திட்டமிட்டு சிரமங்கள் உருவாக்கப்பட்டன.

மூதூர், ஈச்சிலம்பற்று, நிலாவெளி, குச்சவெளி, திரியாய் ஆகிய இடங்களில் வாழ்ந்திருந்த மக்கள் இன்னமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்மாறியும் சிதறியும் வாழுகின்றார்கள்.

அவர்கள் மிகுந்த சிரமங்களினைத் தாண்டி வாக்களிக்க வேண்டிய நிலை இங்கு காணப்பட்டது.

இத்தகைய நிலைமைகளினைத்தான் அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்களும் எதிர்நோக்கவேண்டி இருந்தது.

வன்னி மாவட்டத்தினைப் பொறுத்தவரை ஏற்கனவே இடம்பெயர்ந்து பலதிக்குகளிலும் தற்காலிக இடங்களிலும் முகாம்களிலும் தங்கியுள்ள மக்களினை ஒருங்கிணைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் குறைபாடுகள் அதிகம் காணப்பட்டன.

குறிப்பாக உரிய வாக்குச் சாவடிகளுக்கு மக்களினை பேருந்து வண்டிகளில் அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மக்கள் ஆர்வம் கொண்டிருந்தும் உரியநேரத்திற்குள் அவர்களால் வாக்குகளினை அளிக்க முடியவில்லை. இதனை தற்செயல் நிகழ்ச்சியாக நாங்கள் கருதமுடியாது.

இவற்றுக்கு மேலாக பெருமளவில் பணபலமும் அதிகாரபலமும் பிரயோகிக்கப்பட்டது. பலமுனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மத்தியிலேயே மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது.

இம்முறை நடந்த தேர்தல் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக எம்மால் கொள்ளமுடியாது.

எனினும் நாம் தெளிவான குறிக்கோள்களுடனும் உறுதியான தீர்மானத்துடனும் எம்மக்களுக்காக எவ்வித தடுமாற்றமுமின்றி செயற்பட்டோம்.

தேர்தலினை அண்டிய காலங்களில் சில கட்சிகளும் குழுக்களும் மிகத்தவறான முறையில் மக்களினை திசை திருப்புவதற்கு முற்பட்டன.

பொய்யான தகவல்களினையும், பிழையான வாதங்களினையும் மக்கள் மத்தியில் பரப்பி மக்களினை குழப்பத்தில் ஆழ்த்தின. இது ஏற்கனவே துன்பத்தில் வாழுகின்ற மக்களினை மேலும் குழப்புவதற்கும் தேர்தலில் பங்கேற்கும் ஆர்வத்தினை குறைப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தது.

புலம்பெயர் தமிழர்கள் நடந்துமுடிந்த தேர்தல் தொடர்பாக எத்தகைய செல்வாக்கினை அல்லது தாக்கத்தினைச் செலுத்தியிருந்தனர்?

முதலில் உங்களுடைய கேள்விக்கு செல்வதற்கு முன்பு புலம்பெயர் மக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் பாரிய கடமை எனக்குண்டு.

மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர்.

அவர்கள் தந்த பின்புல ஆதரவும் பலமும் தான் தேர்தலுக்கு முன் நாம் எதிர்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளினை துணிவுடனும் தெளிவுடனும் கையாள்வதற்கு உதவியது.

அவர்களுக்கு எங்கள் மக்கள் சார்பான நன்றிகள்.

பலமுனைகளிலும் நெருக்கடிகளினை உருவாக்கியிருந்த இந்த தேர்தலினை, வெற்றிகரமாக கையாளுவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்மக்கள் தனியாட்களாகவும் குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் உதவி செய்தனர்.

புலம்பெயர் சமூகத்து பொதுசனத் தொடர்பு ஊடகங்களும் மக்களுக்கு உண்மைகளினைத் தெரிவிப்பதிலும் ஆரோக்கியமான விவாதங்களினை உருவாக்குவதிலும் துணைநின்றன.

அவைகளின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட என்னால் முடியாது. ஆனால் அவர்களின் பணி முடிந்துவிட்டது என திருப்திப்பட இயலாது.

குறிப்பாக தாயகத்தின் கிராமங்களும் மக்களின் வாழ்வும் யுத்தத்தினாலும் சிங்கள ஆட்சியாளரின் தொடர்ந்த தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் சிதைந்து போயுள்ளன.

மீள்கட்டமைப்பும் இயல்பு வாழ்க்கையும் கூட அம்மக்களுக்கு மிகப்பாரிய சவால்களாக உள்ளன.

எல்லா விடயங்களுக்கும் அரசாங்கத்தினையும், அரசுசாரா தொண்டர் நிறுவனங்களினையும் நம்பி காத்திருக்க முடியாது. அதுவும் ஒருவிதமான அடிமைத்தன நிலைக்கே இட்டுச்செல்லும்.

இத்தகைய நெருக்கடியிலிருந்து தாயகத்து மக்களினையும் அவர்களது கிராமங்களினையும் மீட்டெடுக்க புலம்பெயர் தமிழர்களின் பொருள்வளமும், மனிதவளமும் மூளைவளமும் அவசியமாக உள்ளது.

கடந்த காலத்தில் அவர்கள் செய்த பங்களிப்பு அளப்பரியது எனினும், வேறுபட்ட பரிமாணத்தில் தேசியப் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்கு புதிய சவால்களினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

புலம்பெயர் தேசத்து தமிழ்மக்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து தாயகத்து மக்களால் இன்று உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் கைகோர்த்து ஆக்கபூர்வமாக செயற்படுவார்கள் என்பதில் எங்களுக்கு துளியளவும் சந்தேகம் இல்லை.

நடந்து முடிந்த தேர்தலினூடாக சிறீலங்கா பாராளுமன்றத்தின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கப்போகின்றது. இந்நிலையில் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படப் போகின்றீர்கள்?

இங்கு நாங்கள் இரண்டு விடயங்களினைக் கவனிக்கவேண்டும்.

சிறீலங்கா பாராளுமன்றத்தில் மூன்றாவது தனிப்பெருங்கட்சி என்பதனைவிட முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிக்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ்மக்கள் தெரிந்தெடுத்து ஆணைப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதுவே மிகமிக முக்கியமான விடயமாகவுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல தமிழ்க்கட்சிகளும் சுயேட்சைகளும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தினை சரியான திசையில் பொருத்தமான அணுகுமுறைக்கு ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் முன்னெடுக்கும் என்ற தங்களுடைய அசையாத நம்பிக்கையினை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

எங்களது தேர்தல் அறிக்கையில் [விஞ்ஞாபனத்தில்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படும் என்பது மிகத்தெளிவாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

எமது தமிழ்த் தேசியவிடுதலையின் அடிப்படைகளிலிருந்து எவ்விதத்திலும் பிறழாமல் உறுதியாக நின்றுகொண்டு நாங்கள் செயற்படுவோம்.

அதன்பொருட்டு நிலைமைகளினை புரிந்துகொண்டு எங்களுடன் இணைந்து செயற்படவிரும்பும் சகல தமிழ் சக்திகளினையும் அணைப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை.

அமையப்போகும் புதிய அரசாங்கமும் குடியரசு அதிபர் [ஜனாதிபதி] மகிந்த இராஜபக்சவும் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக பேசவேண்டிய ஓரேயொரு தரப்பாக நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

விரைவில் எங்களுடன் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளினை திருப்திப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளினை குடியரசு அதிபர் [ஜனாதிபதி] மகிந்த இராஜபக்ச ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கின்றோம்.

ஆரம்பிக்கவேண்டும்.

சர்வதேசநாடுகளினதும், சிறப்பாக இந்தியாவினதும் ஆதரவுடன் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சிகளினை முன்னெடுக்க இருக்கின்றோம்.

தாங்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கு கூறவிரும்புவது....?

தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடியே வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தின் அரசியல் அடையாளமும், சமூக இருப்பும், பொருளாதாரச் செழுமையுமாகும். இது மூன்று பரிமாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

தமிழ்மக்களினை அரசியல் தெளிவுள்ளதும் விழிப்புடன் தொடர்ச்சியாக ஜனநாயக செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டக்கூடியதுமான பலம் வாய்ந்த மக்கள் கட்மைப்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வளப்படுத்த வேண்டியுள்ளது.

இரண்டாவது தமிழ்த் தேசிய விடுதலைக்கான முயற்சிகளில் முழுமையான பலத்துடனும் தீர்க்கமான பார்வையுடனும் உறுதியான முன்னெடுப்புக்களினை சாத்தியமான நெகிழ்வுகளுக்கூடாக சகல தளங்களிலும் முன்னெடுப்பது.

மூன்றாவதும் முக்கியமானதும் தமிழர் தாயகத்தின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு அபிவிருத்தி ஆகியவிடயங்களினை சிறப்பாகவும் உரித்துடனும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவது.

இவற்றினை மேற்கொள்வதற்கு வேண்டிய தலைமைத்துவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித கேள்விக்கும் அப்பாற்பட்ட வகையில் வழங்கும்.

அதனோடு இணைந்து தோள் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தேசத்து மக்களுக்கும் குறிப்பாக அறிவாளிகள், வல்லுனர்கள், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரினதும் தவிர்க்க முடியாத கடமையாகும்.

அதனை அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி நிறைவேற்ற வேண்டும்.

http://www.puthinappalakai.com/view.php?20100410100889

வெளிநாட்டில உள்ள 99வீதமான தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கம் தான் நின்றார்கள். ஆனால் ஒரு வீதமான .........( நானே தணிக்கை செய்திருக்கிறேன்) அதுகள்தான் சும்மா கொக்கரிச்சுக்கொண்டு திரிஞ்சதுகள். அதுகளும் எனி அடங்கிப்போடுங்கள்.. உந்த புளொட், ஈ.பி.டி.பி குப்பை கூட்டங்கள் மாதிரி இதுகளும் லுசுக்கூட்டங்கள். இதுகளைப்பற்றி கணக்கெடுக்ககுடாது . ஐயா உங்கட பணியை நீங்கள் நல்லாச்செய்யுங்கோ. வெளிநாடுகளில உள்ள தமிழ் மக்கள் உங்களுக்கு ஒத்துழைப்பை தருவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் மட்டுமல்ல

தாயகத்திலும் தான்

நீங்கள் தங்களால் முடிந்ததை அந்தஇ மக்களுக்கு பெற முயலுங்கள்

புலம் நிச்சயம் கை கோர்க்கும்

இங்கையும் மக்கள் சொல் கேட்காதோர் இருக்கினம்

மிகவும் அரிது

கணக்கெடுக்காதீர்கள்.

கொஞ்ச நாளைக்கு தங்களுக்கு எதிரா கதைப்பினம்

பின்

தமழர்களுக்கு எதிரா கதைப்பினம்

அடுத்து

சிங்களவனுக்கு சார்பா அவன் நல்லவன் என்பார்கள்

இந்த முடிவு முதலே தெரிவதால்...

கணக்கிலெடுக்காதீர்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தன் ஐயா கூறிய விடையம்

சர்வதேசநாடுகளினதும்இ சிறப்பாக இந்தியாவினதும் ஆதரவுடன் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சிகளினை முன்னெடுக்க இருக்கின்றோம்.

முப்பது வருடமாக தீர்க்காமல் இறுதியில் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் போராடும் சக்தியினை புதைத்துவிட்டு. இனிமேல்தான் தீர்வுகாணப்போயினமாம். இந்தியாவின் ஆசியுடன் முள்ளிவாய்கால்வரை தமிழின அழிப்பத் தொடர்ந்து சென்றபோது, இறுதிகஇகட்டத்தில் இந்திய அரசுஇருபதுக்கும் மேற்பட்ட பெயர்களடங்கிய பட்டியலை கொடுத்து இவர்களது உயிருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை யாராலும் மறுக்கமுடியுமா? அவர்கள் அனைவரும் வன்னியில் கடியேற்றப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களது இரண்டாவது தலைமுறையினராக, சிறீமா சா9;திரி ஒப்பந்தத்தின்போது இந்தியா சார்பில் உள்வாங்கிய மலையகத் தோட்டத்தொழிலாளர்களது வழித்தோனறல்கள். தமிழ்நாட்டில் வாழகின்ற அவர்களில், வன்னிநிலப்பகதியில் வாழபவர்களது உறவினர்களைத் தெரிவுசெய்து சமாதான காலத்தில் உள்நுழைத்தவர்கள் ஆவர்.

இது டாம் அவர்களது கருத்து

ஆனால் ஒரு வீதமான .........( நானே தணிக்கை செய்திருக்கிறேன்)

டாம் அவர்களே தணிக்கை செய்த வாக்கியத்துக்குள் என்னையும் அடக்கிவிடுங்கள் காரணம், தமிழின விரோத இந்தியாவின் அடிவருடிக் கூட்டத்தின் ஆதரவாளராக இருப்பதைவிட நீங்கள் தணிக்கை செய்த அதுவாக இருக்கவே விரும்புகிறேன்.

சொல்லி விளங்குற கூட்டம் உது இல்லை எழுஞாயிறு... இவர்களுக்கு ஞாபகமறதி எண்டது கூட பிறந்தது... இந்தியா இவர்களுக்கு தேனும் பாலும் கொடுக்க தயாராக இருந்தது... கொலைகாறன் சித்தார்த்தன் கூட நல்லவன் எண்டவர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி சம்பந்தர் ஐயா அவர்களே,

இடைத்தங்கல் முகாம்களுக்கு எப்போது உங்கள் பயணம்?

செட்டிக்குள முகாமில் சனிக்கிழமை ஏதோ பிரச்னையாம்

அதைப்பற்றி ஒரு உடனடி அறிக்கையை எதிர்பார்க்கலாமா?

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்குத்தான். கொஞ்சக்காலம் பொறுத்திருங்கள் எஸ்எம்எஸ் கூட்டத்தின் வண்டவாளம் வெளியில்வரும். அவர்கள் தமிழர்விரோததேசம் இந்தியாவின் அடிவருடிகள் என்பது விரைவில் அனைவர்ககும் புரியும். இவர்களால தமிழர்கட்கு ஒன்றையுமே பெற்றுத்தரமுடியாது. காரணம் இவர்கள் இந்திய கைக்கூலிகள் எதிர்காலததில் இவர்கள் தங்கள் நிலையிலிருந்து மாறினால் ஈழத்து அரசியலில் இவர்களால் பயனிருக்கும் அன்றேல் சித்தார்த்தன், வரதராஜப்பெருமாள,; டக்ளஸ் ஆகியோராகவே காலம் இவர்களைக் கணித்துநிற்கும். இந்தியா தமிழர்விரோததேசம் தமிழனின் அனைத்துத் துன்பங்கட்கும் இழிநிலைக்கும் இந்தியாவே காரணம். தமிழர்விரோத தேசமாம் இந்தியாவுடன் கைகோர்ப்பவர்கள் அனைவரும் தமிழின எதிரிகளாவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில நிண்டுகொண்டே இந்தியாவோட டீல் போட்டவர்கள்தானே!!!

காங்கிரஸ் வெண்டதால பிழைச்சது வேற கதை.... ஆனால் அம்மாவோட டீல் விஜேபி யோட டீல்.....

முள்ளிவாய்க்காலில நிண்டுகொண்டே இந்தியாவோட டீல் போட்டவர்கள்தானே!!!

காங்கிரஸ் வெண்டதால பிழைச்சது வேற கதை.... ஆனால் அம்மாவோட டீல் விஜேபி யோட டீல்.....

உந்த டீலுகளுக்கு எல்லாம் விளக்கு பிடிச்ச அப்ப கோப்பை சொல்லுறார் எல்லாரும் வந்து படியுங்கோ...! :):mellow::) :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, சம்பந்தனை விமர்சித்தவர்களை துரோகிகள் கூட்டத்தில் சேர்த்தாச்சு??அப்படித்தானே?? வாழ்த்துக்கள்.

இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் விசுகு போன்றவர்கள் எப்படி ஒரு ரெட்டைகொள்கையை பின்பற்றுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?? இந்தியா ஆதரிக்கின்றன் சம்பந்தனைப் பிடிக்குது, ஆனால் இந்தியா பிடிக்குதில்லை?? இதை எப்படி விளன்கிக்கொள்வது? இந்தியா பற்றி ஒரு செய்தி வந்தால் உடனேயே துள்ளிக்குதித்துக்கொண்டு , இந்தியன் அழிய வேண்டும், துலைய வேண்டும் என்று கொக்கரிக்கும் இந்த சம்பந்த விசுவாசிகள், சம்பந்தன் என்று வந்தவுடன் அவரை ஆட்டுவிப்பது இந்தியா என்று தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு, மன்னிக்க வேண்டும் கண்ணை மூடிக்கொண்டு சம்பந்தர் பால் குடிக்கிறார்கள்.

இந்திய எதிர்ப்பையும் சம்பந்தர் விசுவாசத்தையும் ஒன்றாகச் செய்ய முடியாது. ஏதாவது ஒன்றைக் கைவிடுங்கள். சம்பந்தரை ஆதரிப்பதென்றால், இந்தியாவையும் சேர்த்தே ஆதரியுங்கள். அப்போது எல்லாம் தெளிவாக இருக்கும்.

ஆக நீங்களே சொல்லியதுபோல, சம்பந்தர் நல்லவர், ஆகவே அவரை ஆதரிக்கும் இந்தியாவும் நல்லது என்கிற முடிவிற்கு வெகு விரைவில் நீங்கள் வந்து நிற்பீர்கள். மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி வருவோம், என்ன, மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னுமொரு 30 வருடங்கள், அவ்வளவுதானே?? என்ன குடியா மூழ்கிவிடப்போகுது??

  • கருத்துக்கள உறவுகள்
:) என்பெயரால் சம்பந்தர் இந்தியா மூலமாக வாங்கித்தரவிருப்பதாகக் கூறும் எந்தத் தீர்வுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அதை அந்த 99 வீதமான சம்பந்த விசுவாசிகளே ஏற்றுக்கொள்ளட்டும். நான் இந்த விடயத்தில் துரோகியாக இருப்பது பற்றிக் கவலைப்படவில்லை. சம்பந்தரை விமர்சிப்பவர்கள் துரோகிகள் என்றால் அதை நான் சந்தோஷமாகவே செய்கிறேன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்குத்தான். கொஞ்சக்காலம் பொறுத்திருங்கள் எஸ்எம்எஸ் கூட்டத்தின் வண்டவாளம் வெளியில்வரும். அவர்கள் தமிழர்விரோததேசம் இந்தியாவின் அடிவருடிகள் என்பது விரைவில் அனைவர்ககும் புரியும். இவர்களால தமிழர்கட்கு ஒன்றையுமே பெற்றுத்தரமுடியாது. காரணம் இவர்கள் இந்திய கைக்கூலிகள் எதிர்காலததில் இவர்கள் தங்கள் நிலையிலிருந்து மாறினால் ஈழத்து அரசியலில் இவர்களால் பயனிருக்கும் அன்றேல் சித்தார்த்தன், வரதராஜப்பெருமாள,; டக்ளஸ் ஆகியோராகவே காலம் இவர்களைக் கணித்துநிற்கும். இந்தியா தமிழர்விரோததேசம் தமிழனின் அனைத்துத் துன்பங்கட்கும் இழிநிலைக்கும் இந்தியாவே காரணம். தமிழர்விரோத தேசமாம் இந்தியாவுடன் கைகோர்ப்பவர்கள் அனைவரும் தமிழின எதிரிகளாவர்.

இந்தியாவை தவிர்த்து ஒரு தீர்வைப் பெற முடியும் என நினைத்தால் ஏன் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 2008 மாவீரர் தின உரையில் கூட இந்தியாவின் ஆதரவை கேட்டிருந்தார். அதாவது எமது போராட்ட இலட்சியத்தை புரிந்து கொண்டு இந்தியா எம்மை அங்கீகரிக்க வேண்டும் என கேட்டிருந்தார்??

இந்தியாவை புறந்தள்ளி எம்மால் எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என நினைக்கிறேன்.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும், எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

[தொகு] இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன
.

எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும், அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே
எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள்.
எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதான் 2008 மாவீர் நாளில் தலைவர் இந்தியாவை நோக்கி சொன்னது....

சொன்னதின் மிக முக்கியமான காரணம் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இந்தியாவே முன் நிண்று செயற்பட்டு கொண்டு இருந்தது என்பதினால். இலங்கை அரச படைகளால் புலிகளை விழுத்த முடியாது என்பது உண்மை அது போல இந்திய உதவி புலிகளை பலவீனப்படுத்தும் என்பதும் உண்மை...

இந்த மாவீரர் நாள் உரைக்கு பிறகு ஆனந்த புரம் சண்டையே போரின் திசையை மாற்றியது... ஆனந்த புரத்தில் நண்றாக அடிவாங்கிய சிங்களப்படையினரை வெளியேற்றி , இரசாயன ஆயுதம் பாவிப்பில் பயிற்றப்பட்ட இந்திய சிறப்பு படையினரை நிறுத்தி விசவாயு தாக்குதல் நடத்தப்பட்டதின் பின்னர் தான் எல்லாவகையான உறுதியும் தமிழர்களிடம் குலைந்து போனது..!

Edited by தயா

தமிழ் கூட்டமைப்பு ஒரு அரச மரம் , அதன் கிளைகளாக பரம்பி நிற்பதுதான் அதனது அரசியல் , அதன் கீழ் புத்தர்கள் அமர்ந்து ஞானம் பெறலாம். அதன் வளத்தை உறிஞ்சி குருவிச்சைகள் வளரலாம். அதன் கிளைகளிலே திசை மாறிப்பறக்கும் பறவைகள் சரணாலயம் தேடலாம் . பருவத்தால் இலைகள் சருகாகலாம் , ஆனால் அது தமிழர்களுக்கு செய்த /செய்யப்போகும் சேவை ஆயிரம் ஆண்டுகள் வாழும்.

Edited by தராக்கி

ஒ அரச மரம் தான் 50 வருசமா தமிழருக்கு விடுதலை பெற்று தந்தது . உமக்கு வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை பெற்று தந்தது

இல்லை சம்பந்தர் செய்தது தவறு என்று சொல்வதில் என்ன தப்பு.

தவறுதான்.

எனக்கு தெரிந்த யு.ன்.பி வேட்பாளரே சொல்கிறார் சம்பந்தன் யாழ்ப்பாண்ணத்தில் செய்த பிழை தான் யு.ன்.பி.

ஒரு சீட் வந்தது என்று

இ.பி.டி.பி யும் வர காரணம் சம்பந்தர் என்று யு.ன்.பி காரனே பேசுறான்.

கஜேந்திரனையும் பத்மினியையும் வெளியேற்றி இருக்காவிட்டால். நிச்சயம் 8 சீட் சம்பந்தருக்கு கீடைத்திருக்கும்.

அதை பிழை என்று சுட்டி காட்டினால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயலாற்றுவதாக சொல்வது தவறு.

ஆக, சம்பந்தனை விமர்சித்தவர்களை துரோகிகள் கூட்டத்தில் சேர்த்தாச்சு??அப்படித்தானே?? வாழ்த்துக்கள்.

இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் விசுகு போன்றவர்கள் எப்படி ஒரு ரெட்டைகொள்கையை பின்பற்றுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?? இந்தியா ஆதரிக்கின்றன் சம்பந்தனைப் பிடிக்குது, ஆனால் இந்தியா பிடிக்குதில்லை?? இதை எப்படி விளன்கிக்கொள்வது? இந்தியா பற்றி ஒரு செய்தி வந்தால் உடனேயே துள்ளிக்குதித்துக்கொண்டு , இந்தியன் அழிய வேண்டும், துலைய வேண்டும் என்று கொக்கரிக்கும் இந்த சம்பந்த விசுவாசிகள், சம்பந்தன் என்று வந்தவுடன் அவரை ஆட்டுவிப்பது இந்தியா என்று தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு, மன்னிக்க வேண்டும் கண்ணை மூடிக்கொண்டு சம்பந்தர் பால் குடிக்கிறார்கள்.

இந்திய எதிர்ப்பையும் சம்பந்தர் விசுவாசத்தையும் ஒன்றாகச் செய்ய முடியாது. ஏதாவது ஒன்றைக் கைவிடுங்கள். சம்பந்தரை ஆதரிப்பதென்றால், இந்தியாவையும் சேர்த்தே ஆதரியுங்கள். அப்போது எல்லாம் தெளிவாக இருக்கும்.

ஆக நீங்களே சொல்லியதுபோல, சம்பந்தர் நல்லவர், ஆகவே அவரை ஆதரிக்கும் இந்தியாவும் நல்லது என்கிற முடிவிற்கு வெகு விரைவில் நீங்கள் வந்து நிற்பீர்கள். மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி வருவோம், என்ன, மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னுமொரு 30 வருடங்கள், அவ்வளவுதானே?? என்ன குடியா மூழ்கிவிடப்போகுது??

நீங்கள் கடந்த வருடம் மே-19 இற்கு பிற்பாடு எத்தினை ஆர்பாட்டம் மேற்கொண்டனியல்....நீங்களேல்லாம்(நானும்தான்) மக்களுக்காக போலியாக போராடினீர்களா? இல்லை பு7லிகளுக்காக போராடினீர்களா? எதுவாக இருந்தாலும் உங்கள்(நமது) போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டது ஏன்......

இறிதியாக எங்கே மக்களை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் நடந்தது.....பல காலம் ஆகி விட்டதல்லவா....ஏன்?

ஒ அரச மரம் தான் 50 வருசமா தமிழருக்கு விடுதலை பெற்று தந்தது . உமக்கு வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை பெற்று தந்தது

இல்லை கஜேந்திரன் செய்தது தவறு என்று சொல்வதில் என்ன தப்பு.

தவறுதான்.

எனக்கு தெரிந்த யு.ன்.பி வேட்பாளரே சொல்கிறார் கஜேந்திரன் யாழ்ப்பாண்ணத்தில் செய்த பிழை தான் யு.ன்.பி.

ஒரு சீட் வந்தது என்று

இ.பி.டி.பி யும் வர காரணம் சம்பந்தர் என்று யு.ன்.பி காரனே பேசுறான்.

கஜேந்திரனையும் பத்மினியும் வெளியேறி இருக்காவிட்டால். நிச்சயம் 8 சீட் சம்பந்தருக்கு கீடைத்திருக்கும்.

அதை பிழை என்று சுட்டி காட்டினால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயலாற்றுவதாக சொல்வது தவறு.

இதில் சிறிய திருத்தம்.... நானே கரும் பகுதியில் திருத்தியுள்ளேன் பார்க்கவும்.......இண்டைய நிலமைக்கு காரணம் லண்டனிலுள்ள ஒரு சில பெருச்சாளிகள்தான் இவர்களின் கூத்துக்களால் தான் இன்று ஈ.பி.டீ.பி 3 சீட் யாழிலை எடுத்திருக்கு....இன்னுமொன்று கிழக்கான் துரோகி கருணாட ஆள் எண்டு எல்லாம் கிழக்கு மக்களுக்கு நெருடலான விடயங்களை பேசிய யாழ்பாணத்தார்..இன்று டக்லசோட சேந்தாச்சு.....

நீங்கள் கடந்த வருடம் மே-19 இற்கு பிற்பாடு எத்தினை ஆர்பாட்டம் மேற்கொண்டனியல்....நீங்களேல்லாம்(நானும்தான்) மக்களுக்காக போலியாக போராடினீர்களா? இல்லை பு7லிகளுக்காக போராடினீர்களா? எதுவாக இருந்தாலும் உங்கள்(நமது) போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டது ஏன்......

இறிதியாக எங்கே மக்களை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் நடந்தது.....பல காலம் ஆகி விட்டதல்லவா....ஏன்?

இதில் சிறிய திருத்தம்.... நானே கரும் பகுதியில் திருத்தியுள்ளேன் பார்க்கவும்.......இண்டைய நிலமைக்கு காரணம் லண்டனிலுள்ள ஒரு சில பெருச்சாளிகள்தான் இவர்களின் கூத்துக்களால் தான் இன்று ஈ.பி.டீ.பி 3 சீட் யாழிலை எடுத்திருக்கு....இன்னுமொன்று கிழக்கான் துரோகி கருணாட ஆள் எண்டு எல்லாம் கிழக்கு மக்களுக்கு நெருடலான விடயங்களை பேசிய யாழ்பாணத்தார்..இன்று டக்லசோட சேந்தாச்சு.....

இது ஒரு பிரதேசவாதியில் இன்னும் ஒரு வேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, சம்பந்தனை விமர்சித்தவர்களை துரோகிகள் கூட்டத்தில் சேர்த்தாச்சு??அப்படித்தானே?? வாழ்த்துக்கள்.

இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் விசுகு போன்றவர்கள் எப்படி ஒரு ரெட்டைகொள்கையை பின்பற்றுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?? இந்தியா ஆதரிக்கின்றன் சம்பந்தனைப் பிடிக்குது, ஆனால் இந்தியா பிடிக்குதில்லை?? இதை எப்படி விளன்கிக்கொள்வது? இந்தியா பற்றி ஒரு செய்தி வந்தால் உடனேயே துள்ளிக்குதித்துக்கொண்டு , இந்தியன் அழிய வேண்டும், துலைய வேண்டும் என்று கொக்கரிக்கும் இந்த சம்பந்த விசுவாசிகள், சம்பந்தன் என்று வந்தவுடன் அவரை ஆட்டுவிப்பது இந்தியா என்று தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு, மன்னிக்க வேண்டும் கண்ணை மூடிக்கொண்டு சம்பந்தர் பால் குடிக்கிறார்கள்.

திரு. ரகுநாதன் அவர்கட்கு

வி. சு. கு. எழுதிக்கொள்வது

தாங்கள் எனக்கு எழுதிய மடல் பார்த்தேன்.

தங்களது விமர்சனத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் தங்களது ஆவேசமும் அசட்டை செய்யக்கூடியதல்ல. அது எனக்கும் உண்டு என்பதால். இன்னொன்றும் சொல்லவேண்டும் இதைவிட ஆவேசம் எனக்கு இப்பவும் வரும். ஆனால் அதற்கான பெறுபேறு பூச்சியம் என்பதால்தான்....

ஆவேசமோ தடியோ எந்த ஒரு முடிவையும் தராது என்பதால்தான் அது மௌனிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தங்களது கைநீட்டலில் உள்ள விடயம்

நான் சம்பந்தரை தூக்கி பிடிக்கின்றேன் என்பது.

ஒரு இடத்தில் அப்படி நான் எழுதினேன் என்று காட்டுங்கள்

எனவே இது வீண் ஆதாரமற்ற சோடிக்கப்பட்ட தாக்குதல்

இது எந்த பலனையும் தராது எம் இனத்துக்கு.....

அடுத்தது

நான் கூட்டமைப்பு என்றால் நீங்கள் சம்பந்தரை அதற்குள் இழுப்பதன் மர்மம் என்ன....???

சரி

இன்று நீங்கள் ஒதுக்கும் அதே சம்பந்தன் தங்களது குற்றச்சாட்டுக்களை எல்லாம் செவிமடுத்த திருமலைமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதை ஏற்கின்றீர்களா..??? ;அதுவும் இல்லை. அப்போ தப்பு யாரிடம்.....???

அடுத்தது இந்தியா பற்றியது

கூட்டமைப்பு தெளிவாக சொல்லியுள்ளது

இந்தியா உட்பட என்று......

விளங்காவிட்டால் இதில் ஒரு உறுப்பினர் எழுதியுள்ளார் பார்க்கவும்

அல்லது 2009 தலைவரின் மாவீரர் உரையைக்கேட்கவும்

தலைவரின் உரையின்போது என்னநிலையைக்கடைப்பிடித்தேனோ அதேநடைமுறைதான் கூட்டமைப்பின் கொள்கைவிளக்க உரைக்கும். இது எனது நிலை.

அடுத்தது

நான் பலமுறை எழுதியுள்ளேன். தமிழரது வரலாற்றை புலிகளைத்தவிர்த்து எப்படி எழுதிவிடமுடியாதோ...

அதேபோல் நாம் விமர்சனம் செய்யும்போதும் அது தாக்கப்போவது அவர்களையே என்று.

புலிகளது நடைமுறையை விமர்சிக்க எனக்கு அருகதையில்லை. ஆனால் இன்று அவர்களே எங்களால் முடியவில்லை நீங்களே பாத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டபின்....

அவர்கள் வருவார்கள் தருவார்கள் என்று எழுதமுடியவில்லை. அதனால் அடுத்த அதாவது மென்மையான பாதையை எடுக்கும்போது அது தங்களுக்கு இடைஞ்சலாக இருந்தால்...

தாங்கள் எமக்கு ஒரு வழியைக்காட்டவேண்டும்.

நானும் மாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் என்றவாதம் நிலைக்காது....

அடுத்தது தமிழீழக்கொள்கையிலிருந்து விலகி இந்தியா தரும் என்று அலைகிறேன் என்பது....

அதற்கும் கூட்டமைப்பு சொல்லியுள்ளது

எந்த கொள்கையிலிருந்தும் விலகவில்லை.

முதலில் இதை நாம் நம்பவேண்டும்.

இந்தியா என்பது பெரும் சக்திதான் அதை எதிர்த்து தற்போது எம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்பதும் உண்மைதான். ஆனால் இந்தியா எம்மை அழித்தது. என் இனத்தை அழித்தது என்பது அதைவிட உண்மை. ஆனால் மலையுடன் மோதி உடைந்துபோனதும் வரலாற்று படிப்பினை. மீண்டும் மோதுவோமா இல்லை இணைந்து போவோமா அது இந்தியாதான் சொல்லவேண்டும்.

தலைவரின் உரையிலிருந்து:-

நாம் இந்தியா உட்பட எல்லோருடனும் அனுசரனையுடன் வாழவே விரும்புகின்றோம். நாம் யாருக்கும் எதிரியல்லர். நாம் எமது மக்களின் அபிலாசைகளுக்காவே போராடுகின்றோம்

அடுத்தது மக்களின் தேர்தலில் பங்கெடுக்காதது பற்றி...

தேர்தலில் தோற்க முன்னர் இந்த அறிவுவந்து தேர்தலில் நிற்கவில்லை. அந்த மக்கள் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாம் ஒதுங்கிக்கொள்கின்றோம் என்று இங்கு எவராவது சொல்லாததன் மர்மம் என்ன...

தோற்றபின் அதை ஏற்காது இன்னொருவழி தப்புவதற்கு கிடைத்துவிட அதைப்பிடித்தபடி அலைபவர்கள்

களத்தில் நிஐத்தில் இல்லை என்றுதான் அர்த்தம்

அதைவிட இவர்கள் தமக்கு ஏற்றதுபோல் எதையும் மாற்றுவார்களே ஒழிய நிஐத்துக்கு உண்மைக்கு தலைசாய்க்கப்போவதில்லை.

இது எமது இனத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று இங்கு எச்சரிக்கவிரும்புகின்றேன்....

நான் ஒன்று கேட்கின்றேன்

வெளிநாடுகளில் புலிகளுக்கு பங்களித்தோர் 10வீதத்தினர் மட்டுமே

அப்போ

90 வீதமானவரும் புலிகளுக்கு எதிரானவர்களா.....???

நீங்கள் கடந்த வருடம் மே-19 இற்கு பிற்பாடு எத்தினை ஆர்பாட்டம் மேற்கொண்டனியல்....நீங்களேல்லாம்(நானும்தான்) மக்களுக்காக போலியாக போராடினீர்களா? இல்லை பு7லிகளுக்காக போராடினீர்களா? எதுவாக இருந்தாலும் உங்கள்(நமது) போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டது ஏன்......

இறிதியாக எங்கே மக்களை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் நடந்தது.....பல காலம் ஆகி விட்டதல்லவா....ஏன்?

இதில் சிறிய திருத்தம்.... நானே கரும் பகுதியில் திருத்தியுள்ளேன் பார்க்கவும்.......இண்டைய நிலமைக்கு காரணம் லண்டனிலுள்ள ஒரு சில பெருச்சாளிகள்தான் இவர்களின் கூத்துக்களால் தான் இன்று ஈ.பி.டீ.பி 3 சீட் யாழிலை எடுத்திருக்கு....இன்னுமொன்று கிழக்கான் துரோகி கருணாட ஆள் எண்டு எல்லாம் கிழக்கு மக்களுக்கு நெருடலான விடயங்களை பேசிய யாழ்பாணத்தார்..இன்று டக்லசோட சேந்தாச்சு.....

சம்பந்தர் அந்த இருவரையும் விலத்தியது தவறு. அதை எநத மொக்கனும் ஏற்று கொள்வான்.

சிவாஜிலிங்கத்தையோ. சிறிகாந்தா விலக்கியதோ ஒருவரும் குறை கூறவில்லை.

வேட்பாளராக வென்ற மற்ற கட்சிகாரனே ஏற்று கொள்கிறான். சம்பந்தர் இப்படி செய்யா விட்டால் யாழ் நிலமையோ வேறு என்று.

சம்பந்தரால் தமிழ் மக்கள் விரும்பும் எந்த தீர்வும் பெற்று தர முடியாது என்பதில் நான் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவனாக இருக்கின்றேன்.

சம்பந்தர் அணி அன்னிய சக்திகளின் விருப்பிற்கு, நலனிற்கு ஏற்புடைய வகையில் கூட்டமைப்பைக் கைப்பற்றி, அன்னிய சக்தியின் விருப்பிற்கு சிலரை வெளியேற்றியதுதான் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட அனைத்துக் குழப்பத்திற்கும் அடிப்படைக்காரணம் என்பதை மறந்து குழு நிலை அரசியல் பேசிக்காலத்தைக்கரைப்பதை நிறுத்தி சம்பந்தர் ஜயா தலைமையிலான கூட்டமைப்பினர் நம்பிய சக்தி என்ன தீர்வைப் பரிசாகப் பெற்றுத் தருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம். சம்பந்தர் ஐயா அன்னிய சக்திகளின் கரைப்பிற்கு, கரைந்து போகாது இருப்பதற்கு ஜயாவிற்கு கொள்கை வழி துணை நிற்போம். கூட்டமைப்பை ஜயா குழுமம் குத்தகைக்கு எடுத்தது போல, தமிழரின் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து பிராந்திய, சர்வதேச சக்திகளின் நலனுக்கு இலங்கைத்தீவில் ஈழத்தமிழரின் இருப்பை இரையாக்காது இருப்பதற்கு, தமிழராக கொள்கையில் உறுதியாக இருப்போம். குழு நிலை அரசியல் குந்தியிருந்து குதர்க்கம் கதைப்பதற்கு மட்டுமே.

தாயகத்தில் அன்னிய சக்தி விரும்பிய தலைமை உருவாகியுள்ளது.

புலத்தில் கொஞ்சம் பிசகிவிட்டது.

அரசும், அவையும் புலத்தமிழர் தலைமையைக் கைப்பற்றுவதற்கு போராடி வருகின்றன...............?

லண்டனிலுள்ள ஒரு சில பெருச்சாளிகள்தான் இவர்களின் கூத்துக்களால் தான் இன்று ஈ.பி.டீ.பி 3 சீட் யாழிலை எடுத்திருக்கு....இன்னுமொன்று கிழக்கான் துரோகி கருணாட ஆள் எண்டு எல்லாம் கிழக்கு மக்களுக்கு நெருடலான விடயங்களை பேசிய யாழ்பாணத்தார்..இன்று டக்லசோட சேந்தாச்சு.....

யார் ஜயா இந்த ஒரு சில கறுத்த ஆடுகள்?

அரசியல் செய்வதாயின் அரங்கிற்கு வாருங்கள்.

இங்கு இப்போ வெளிப்படை அரசியல் செய்யும் சூழல், காலம்.

கறந்தடிப்படைக்கு காசு சேர்க்கும் காலம் அல்ல இது

வெளியில் வாருங்கள். இல்லையேல் மௌனமாக இருங்கள்.

Edited by aathirai

மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர் - இரா. சம்பந்தன்

சம்பந்தன் சொன்ன பொய்களுக்கெல்லாம் மகுடம் போன்ற பொய் இது தான்.

சம்பந்தன் சொன்ன பொய்களுக்கெல்லாம் மகுடம் போன்ற பொய் இது தான்.

கருத்தியல் ரீதியாக இரு கட்சிகளுடனும் அகதி தமிழராகிய நாம் உடன் பட்டோம். ஆனால் சமபந்தர் செய்த சில நரி வேலைகள் விமர்சனத்துக்கு உட்பட்டன.

சம்பந்தரை விமர்சித்தால் அது தமிழ்தேசிய கூட்டமைப்பை பேசுவதாக அவர் கற்பனை செய்தால் அவர் கொஞ்சம் ஓவர் தான்.

30 வருடம் அல்லல் பட்டு போராடியவன் ஆயுத மவுனம் என்று விட்டு தன்னை தேட வேண்டாம் என்று விட்டு போனவர் போனபோது

உந்தர் சம்பந்தர் எல்லாம் ஒரு செல்லாகாசு.

சமப்ந்தர் என்றால் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்று நினைப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் கருத்தெழுதும் சககருத்தாளனது கருத்துக்கு கருத்தெழுதாது

அவனை

முட்டாள் என்றும்

விசரன் என்றும்

பைத்தியக்காறன் என்றும்

விசுக்கோத்து என்றும்............. எப்போ எழுதத்தொடங்கினார்களோ அன்றே கருத்துக்களம் செத்துவிட்டது.

எதற்கும் அடங்காத மக்களின் தீர்ப்புகளுக்கு தலைவணங்காத மக்களின் நலனைவிட தமது தனிப்பட்ட சில தனிஆதிக்க சக்திகளின்

திணிப்புகளே இங்கே நடக்கின்றன.

இவை ஆரோக்கியமான கருத்தாடலோ அல்லது ஆரோக்கியமான பங்களிப்புகளோ அல்ல.

இவை துளியும் எமது மக்களுக்கோ எமது இலட்சியங்களுக்கோ நன்மை தராது என்பதைவிட இருப்பதையும் பிரித்து சிறுசிறு குழுக்களாக்கி அந்த குழுக்களுக்குள் தமது எழுத்துக்களின் வலிமையை தொடர்ந்து பலப்பரீட்சை செய்ய மட்டுமே உதவும்

எந்த ஆதிக்கசக்திகளுக்கும் அல்லது எந்த தனிக்குழுக்களுக்கும் அல்லது எந்த இதுபோன்ற எழுத்துக்களுக்கும் கருத்து எழுதியோ அல்லது இவர்களின் அடாவடித்தனத்துக்கு எழுதி என்னை நான் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.

எனது மக்களுக்கான எமது தாயகத்துக்கான எனது வழியில் எனது பங்களிப்பு தொடரும்.

நன்றி. வணக்கம்

என்ன

இந்தாள் உண்மையா கோவிச்சுக் கொண்டு போயிட்டுதோ? :rolleyes:

அண்ணோய் போய்கைக்காக பயந்தோ ஓடாதேங்கோ

பொய்கை சும்மா விளையாட்டுக்கு... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.