Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலுக்காக தியாகம்

Featured Replies

காதலுக்காக எத்தனையோ விடயங்கலை பலர் தியாகம் செய்வார்கள், ஆனால் எமது வாழ்வியல் முறையை மாற்றி நாம் யார் என்ற அடையாலத்தை இழந்து நாம் காதலித்து திருமணம் செய்ய வேண்டுமா? அதனால் வரும் பிரச்ச்கனைகளை எம்மால் எதிர் கொள்ள முடியும்மா?

நான் குறிப்பிடப்போவது எமது வீட்டு அயலில் வசித்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், எனது நண்பியும் கூட, 2002- 2005 காலப்பகுதியில் அவர் யாழ்பாணத்தில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார், அங்கு தமிழ் நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த, கொஞம் அங்கு உயர்வ்குப்பினர் என் கருதப்ப்டும் பின்னனியைக் கொண்ட ஒருவரும் பணி புரிந்து வந்தார், இருவருக்கும் காதல் மலர்ந்து டிருமணம் செய்யும் தருவாயும் வந்தது ஆனால் காதலனின் குடும்பதிற்கு தமது மகன் தமது இனத்தில் அல்லாத ஒருவரை மணம் செய்வது விருப்பம் இல்லை.இவர்கள் இன்னமும் பழமையைக் கொஞம் கடுமையாக கடைபிடிப்பவர்கள், என்றாலும் மகனின் விருப்பதிற்கு ஏற்ப திருமணதிற்கு சம்மதிதனர் ஆனால் சில கண்டிப்பான விதிகளை பெண் கடை பிடிக்க வேண்டும் என சம்மதம் வாங்கினர். இத்திருமணம் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என எனது நண்பியின் பெற்றோரும் பெரிதாக விரும்பவில்லை ஆனால் வழக்கம் போல இறுதியில் 2006ம் ஆண்டு மார்கழி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து.ஆனால் 3 வருடங்களுக்குப் பின் அவரை கிட்டத்தட்ட அவரது அடையாலத்தை முழுதாக மாற்றி விட்டனர். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை மகிழ்சியானதாக தான் இருக்கிறது. ஆனால் எமது அடையாலத்தை இழந்த வாழ்க்கை தேவையா????. நான் அண்மையில் இந்தியா சென்ற போது சில நாட்கள் அவருடன் கழித்தேன் அப்போது அவரை அடையால்ம் காண்ப்தேகொஞம் கஷ்டமாக இருந்தது, ஊரில் நீளப்பாவாடை அல்லது ஷல்வார் என வித்ம் விதமாக வலம் வந்தவர் இப்போது சீலையால் இழுத்து மூடியபடி நெற்றியில் பெரிய கும்குமத்துடனும் கழுத்தில் பெரிய தாலிச் சங்கிலி சகிதம் எனக்கு இதுவா தர்ஷி என ஆச்சர்யம் தான் ஏற்பட்டது.

இப்போது அவரது நிலை இது தான்

1. அவர் இப்போது புடவை மட்டுமே அணிய அனுமதி, அதுவும் 24 மணித்தியாலமும். இவர் அணியும் சாரியின் பிளவுஸ் முதுகுபுறம் முழுவது மூடி கிட்டத்தட்ட முழங்கை வரை நீண்டு இருக்கும். யன்னல் வைத்த் பிளவுஸ் எல்லம் அணிய அனுமதி இல்லை.அவற்றுடன் இருப்பது பெரிய கஷ்டம் என்றார், இவர் முன்னர் எல்லாம் ஷல்வார் அணிவதில் பிரியம் கொண்டவர்,இப்பொது படுக்கைக்குப் போகும் போது கூட புடவை தான் அணிகிறார். அதுவும் வியர்க்கும் போது பெரும் துன்பம் என்றார்

2.மூக்கின் இரண்டு பக்கமும் 5- 6 வைரக் கற்கள் பதித்த மூக்குத்திகள் அணிவித்து உள்ளனர். மூக்குக் குத்திய போது தன்க்கு ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் இருததாம், அதுவும் சில நிமிட இடைவெளியில் இரு மூக்குகளும் குத்தப் பட்டது. அதைவிட தான் வலி தாங்க முடியாமல் அழுத போது அவரது குடும்ப அங்கத்தவர்கள் தன்னப் பார்த்து சிரித்து நையாண்டி செய்தனராம். அத்துடன் அவற்றை அணிவதற்கு வெட்கமாக இருக்கிரது என்றார்.ஆனால் அவரது கணவரின் குடும்பத்தில் அது சாதரணம், ஆனால் வேறு எங்கேயாவத் வெளியில் போகும் போது மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் ஏளனப் பார்வை, சில வேளைகளில் அழத் தோன்றும் என்றார்.

3.சிவதர்ஷினி என்ற அவரது பெயர் இப்போது மரகதவள்ளி என் மாற்றப்பட்டது. மரகதவள்ளி என்பது தந்து கணவரின் பாட்டியின் பெயராம் அவர்களது வழக்கப்படி மருமக்ளின் பெயர் விருப்பம் இல்லை என்றால்பெரும்பலும் பாட்டியின் பெயரயே வைப்பார்களம். அத்துடன் எக்காரணம் கொண்டும் தந்து பழைய பெயரை பாவிக்கக் கூடாது என்று உத்தரவாம். ஒரு தடவை தனது தாயாரே நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டாரம். எனக்கு அவர் அங்கு செனறவுடன் என்னிடம் கூறிய முதலாவது விடயமே என்னை தர்ஷி என்று அழைக்க வேன்டாம்,என்பதே. அதனால் நான் அவரை மரக்த்ம் என்றே அழைத்தேன்

4.மரக்கறி உணவு வகை மட்டுமே உண்ணுகிறார்.

5.வயது மூத்தவர்களுடன் பேசும் போதும் வெளியில் வீதியால் எப்போதும் தலை குனிந்து தான் போக வேணுமாம்.மாமியாருடன் பேசும் போது கூட தலை குனிந்து தான் பேச வேணுமாம்.

6.தலை மயிரை விரித்து விடவோ அல்லது நீண்ட பின்னலாகவோ போடாமல் கொண்டை மட்டுமே போடலாம். அதை விட நெற்றியில் பெரிய கும்குமம்ப் பொட்டு, ஊரில் இவர் ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே வைப்பார்.

7.வயது மூத்தவர்களுக்கு முன்னால் ஆசனத்தில் அமர முடியாது, ஆனால் அவர்களது வீட்டில் யாராவது ஒரு வயது மூத்த்வர் வீட்டில் எப்போதும் இருப்பர்கள், என்பதால் இவர் காலையில் எழுந்தால் இரவு படுக்கும் வரை ஓரிடத்தில் அமர முடியாது.

8. கட்டிலில் இவர் இப்பொது படுக்கக் கூடாதம் நிலத்தில் தான் படுத்து உறங்குவார், மனைவிக்கு உரிய கடமைகளைச் செய்ய மட்டும் கட்டிலில் படுக்காலாம் மற்றப்படி எல்லம் நிலத்தில் பாயில் தான் உறங்குகிறார்.அவரது கணவர் கட்டிலில் தான் உறங்குவார்

9.காலில் பாதணிகள் அணிய அனுமதி இல்லை வெறும் காலுடன் தான் வெளியில் போவது என்றாலும் போவார்.இவர்து திருமணதிற்குப் பின்னர் இவர் பாதணிகள் அணியவில்லை.

இதை விட எப்போதுமே கொஞ்சம் நகை அணிய வேண்டும், எல்லம் பழைய காலது ஸ்டைல் நகைகள் ஆனால் அதைப் பற்றி அவர் பெரிதாக கவலைப்படவில்லை, ம்ம் உலகதில் எந்தப் பெண் தான் தங்கத்திப் பற்றி குறை கூறி உள்ளார்

10. அதை விட விடியற்காலை 4 மணிக்கு எழும்பி அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும், அதோடு தொலைக்காட்சி சினிமா எல்லாம் பார்க்ககக் கூடாதாம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் எமது அடையாலத்தை இழந்து ஒரு காதல் வேண்டுமா ??

காதல் என்பது ஒருவரையொருவர் புரிந்து, ஒருவரின் விருப்பத்திற்கு, ஆசைகளுக்கு மதிப்புக் கொடுத்து வாழ்வதே. ஆனால், இவரின் வாழ்க்கையோ மிகவும் அடிமைத்தனமானது. காதலித்து மணந்த மனைவியைக் கட்டாந்தரையில் படுக்கவைத்துவிட்டு அந்தக் காதல் கணவனால் எவ்வாறுதான் நித்திரை கொள்ள முடிகிறதோ தெரியவில்லை. அவரது காதல் நிச்சயமாக உண்மைக்காதலாக இருக்க முடியாது. அந்தப் பெண் இப்போதைய நிலையில் எத்தனை அழகிழந்து காணப்பட்டார் என்பதை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது. தனது தன்மானத்தை இழந்து, அடையாளங்களை வாழும் ஒரு வாழ்க்கை தேவையே இல்லை. இதற்கு இவர் தனது காதலைத் துறந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் அவரின் கணவர் ஒரு காதல் கணவனாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு காதல் கணவானக இருந்திருந்தால், தனது மனைவியை இந்த நிலைக்குத் தள்ளியிருக்க மாட்டார். நீங்கள் அறிந்திராத இன்னும் பல விடயங்களும் இருக்கிறது. அவை அந்தரங்கமானவை.

8. கட்டிலில் இவர் இப்பொது படுக்கக் கூடாதம் நிலத்தில் தான் படுத்து உறங்குவார், மனைவிக்கு உரிய கடமைகளைச் செய்ய மட்டும் கட்டிலில் படுக்காலாம் மற்றப்படி எல்லம் நிலத்தில் பாயில் தான் உறங்குகிறார்.அவரது கணவர் கட்டிலில் தான் உறங்குவார்

இது எல்லாம் உங்களுக்கு சொன்னவாவோ? தனியே சந்தித்து? :rolleyes:

மனுசியை prostituteமாதிரி பாவிக்கற பழமைவாத பன்னாடைகளிண்ட உறவுமுறைகளை காதல், தியாகத்தோட சேர்த்து அலசி ஆராய்கிற தன்மையை பார்த்து தலையை எங்க கொண்டுபோய் முட்டுறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுசியை prostituteமாதிரி பாவிக்கற பழமைவாத பன்னாடைகளிண்ட உறவுமுறைகளை காதல், தியாகத்தோட சேர்த்து அலசி ஆராய்கிற தன்மையை பார்த்து தலையை எங்க கொண்டுபோய் முட்டுறது.

மச்சான் நான் நினைச்சதை எழுதிட்டிங்க‌

அதாலை ஒரு பச்சை புள்ளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எல்லாம் உங்களுக்கு சொன்னவாவோ? தனியே சந்தித்து? :rolleyes:

கந்தனுக்கு எப்போதும் கவட்டுகுள்ளதான் நினைப்பு :):lol::lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கொஞ்சப் பேருக்கு இந்திய மோகம். அந்த நாடே ஒரு காட்டுமிராண்டி நாடு. அதுக்குள்ள இந்தியாகாரனை லவ்வு பண்ணுறதும்.. இந்தியா காரியை லவ்வு பண்ணுறதும்.. எங்கட ஆக்களுக்கு இப்ப ஒரு பசன். அதில இவைக்கு ஒரு இதாம்.

அந்த நாடே சனத்தொகையால பெருகி வழியுது.. இதுக்குள்ள அங்க என்னத்தை தேடி ஓடினமோ. அனுபவியுங்கோ. அப்பதான் விளங்கும். சொல்லி புரிய வைக்கக் கூடிய கூட்டமல்ல.. எங்கட சனக்கூட்டம்.

வாழ்க.. வளமுடன். ஏதோ காஸை திறந்துவிட்டு தீ மூட்டி இன்னும் கொல்லாமல் விட்டாங்களே என்று சந்தோசப்படுங்கோ..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அந்த சகோதரி தானாகத் தேடிக்கொண்டது. அவருக்கு விருப்பமில்லாவிட்டால் தானாகப் பிரிந்து சென்றுவிடப் போகிறார். ஆனால் அவருக்கு ஏதாவது சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பதுதான் கேள்வி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது இரு மன பொருத்தம்!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதில் `ஜஸ்ட் மிஸ்’ ஆனாலும் சிக்கல் ஆகிவிடும். இரு மனங்களும் ஒத்து போகாத நிலையில் விரைவில் சலிப்புகளும், பிரச்சினைகளும் தோன்றும். தற்போது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே மணமகனும், மணமகளும் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதன் முலம் திருமணத்துக்கு பிறகு ஏற்படக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக, துணையைத் தேர்ந்தெடுப்பதில் அழகும், அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. ஆனால், அவற்றை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சிலர், பார்த்ததும் பிடித்து போய் விட்டால் உடனே திருமணத்துக்குச் சம்மதம் சொல்லி விடுவார்கள். ஆனால் இப்படி அவசரபட வேண்டாம். உங்களுக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆதலால் திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்தியம் சிறக்கும். திருமணம் செய்து கொள்ள போகும் இருவருமே தனது துணையாக போகிறவரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். உடல் நலம் குன்றியவரை திருமணம் செய்து கொண்டால் தாம்பத்யத்தில் தோல்வி ஏற்படும். இதனால் பிரச்சினை ஏற்படும். நீங்கள் தேர்வு செய்ய போகும் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் மிகவும் கவனம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள். இருவரில் யாரேனும் ஒருவர், தேவையில்லாமல், சிறுசிறு செலவுகளை அதிகம் செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் உயர்வு பாதிக்கும். சிறுகச் சிறுக சேமிப்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்த விஷயத்தில் இருவருமே ஒருமித்த கோணத்தில் சிந்திபவராக இருக்க வேண்டும். தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் மனக்கோட்டை கட்டியிருப்பான். அதேபோல், பெண்ணும் தனக்கு மாலையிட போகும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி மனக்கோட்டை கட்டியிருப்பாள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி துணை அமையவில்லை என்றால் என்னவாகும்? ஏமாற்றமும், விரக்திம் மட்டுமே மிஞ்சும்.

அறுபது வயதானவரை இருபது வயதானவர் திருமணம் செய்து கொள்வது புரட்சிகரமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் இனிமை என்பது இருக்காது. உங்களது துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்க வேண்டும். பெண், ஆணைவிட ஐந்து முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது நல்லது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பையே உருவாக்கும். கணவன், மனைவி இருவரும் இரண்டு விதமான சமுக நிலை உடையவர்களாக இருப்பது சரியானதல்ல. இருவருமே உயர்ந்த சமுக நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். வாழ்க்கைக்கு அதுதான் முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத் தரம் ஆகியவை நமது சமுக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுபவை. வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால் அந்த இடத்துக்கு ஏற்பவே நமது சமுக அந்தஸ்து மதிப்பிடப்படும். ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணைத்தான் மனைவியாக்கிக் கொள்ள விரும்புவார்கள். அதே சமயத்தில் நல்ல குணத்தையும் எதிர்பார்பார்கள். பெண்களுக்கும் இதே எதிர்பார்புதான் இருக்கும். உங்களின் துணை அழகாக, வாட்ட சாட்டமாக இருந்தால் மட்டும் போதாது, நடத்தை குறைபாடு இல்லாதவராக, குணக்கேடு இல்லாதவராக இருப்பதும் முக்கியம். தனக்குரியவர் நல்ல குணங்களோடு இருக்க வேண்டும் என எதிர்பார்பது நல்லது. கணவனும், மனைவியும்தான் மற்றவர்களை விடவும் மிக நெருங்கிய நபர்கள். ஒருவர் துன்பப்படுவதை இன்னொருவர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு அமைய போகும் வாழ்க்கைத் துணை இத்தகைய தோழமை உணர்வு உள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் உதவும் மனபான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்தினால் உறவுகள் ஆழமாகும்

  • தொடங்கியவர்

எல்லாம் அந்த சகோதரி தானாகத் தேடிக்கொண்டது. அவருக்கு விருப்பமில்லாவிட்டால் தானாகப் பிரிந்து சென்றுவிடப் போகிறார். ஆனால் அவருக்கு ஏதாவது சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பதுதான் கேள்வி..! :(

அவருக்கு விருப்பம் இல்லை என்று இல்லை, அவரது குடும்ப வாழ்க்கை மகிழ்சியானது தான், ஆனால் அவரது அடையாலம் மாற்றப்ப்ட்டு விட்டது, அதனால் தான் சில சிக்கல்கள்

  • தொடங்கியவர்

வாழ்க.. வளமுடன். ஏதோ காஸை திறந்துவிட்டு தீ மூட்டி இன்னும் கொல்லாமல் விட்டாங்களே என்று சந்தோசப்படுங்கோ..! :(:D

அவர்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை, ஆனால் நான் மேலே குறிப்பிட்ட சில விடயங்களை கொஞம் இறுக்கமாக, கடைபிடிப்பவர்கள், உதாரணமாக 24 மணித்தியாலமும் சீலை கட்டினால் எப்படி இருக்கும், அல்லது 29 வயது பெண் ஒருவர் இரண்டு மூக்கிலும் கைவிரல் நகத்தின் அளவில், மூக்குதி பொடுவதிப் பார்த்தால் மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்களா இல்லையா? (2 மூக்குத்திகளும் இந்திய ரூபாயின் படி 100,000/=, ஒவ்வொன்றிலும் 6 வைரக் கற்கள் படி 12 வைரக் கற்கள்). அதுக்காக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இல்லை, இப்போது அவருக்கு 1 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது இருவரும் கல்யாணத்துக்கு முன் தமது வாழ்க்கை பற்றி பேசி தீர்மானிப்பது என்பதுதான்.....

இங்கு நீங்கள் கூறும் செய்திகளும் அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து அமுலாக்கல்தான்...

எனவே இதில் வெளியாரின் நுளைவுகளே தற்போது சிக்கலை உண்டு பண்ணும்

எனவே கருத்து எழுதுவது தப்பு...

நன்றி

அவருக்கு விருப்பம் இல்லை என்று இல்லை, அவரது குடும்ப வாழ்க்கை மகிழ்சியானது தான்,

அவர்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை, . அதுக்காக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இல்லை, இப்போது அவருக்கு 1 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. :lol::lol::D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.