Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் புலிகள் பாணியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் சிங்கள மயமாக்கலுக்கு எதிரான கோசங்களுடன் விநியோகம் பெரும் பரபரப்பு‐ படையினரின் திட்டமிட்ட நடவடிக்கையா? ‐யாழ்ப்பாணத்தில் இருந்து GTN விசேட செய்தியாளர்‐

Featured Replies

யாழில் புலிகள் பாணியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் சிங்கள மயமாக்கலுக்கு எதிரான கோசங்களுடன் விநியோகம் பெரும் பரபரப்பு‐ படையினரின் திட்டமிட்ட நடவடிக்கையா? ‐யாழ்ப்பாணத்தில் இருந்து GTN விசேட செய்தியாளர்‐

29 April 10 10:45 am (BST)

தமீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அணியென காட்டிக்கொள்ள முற்படும் தமிழ் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகங்களுக்கு இந்த துண்டுப்பிரசுரம அனுப்பப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் சுவர்களிலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் வித்தில் செயற்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தொணியில் அமைந்துள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டவற்றை முழுமையாக தருகிறோம்.

எச்சரிக்கின்றோம்

இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிடப் பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மைச் சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு .இன்று எமது மக்களிடம் உண்டு. ஆனால் இதற்கு மக்களில் சிலர் துணைபோவது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் விதத்தில்

01. வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழியில் எழுதுதல்

02. சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு வாடகை வீடுகளை வழங்குதல்

03. சிங்களவர்களுக்கு வீடுகள், காணிகள், கடைகளை விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல்

04. தனியார் சிற்றூர்திகளில் ( மினிபஸ் ) சிங்கள மொழிப்பாடல்களை ஒலிபரப்புதல், சிங்களப் பேரினவதத் தலைவர்களின் படங்களை வைத்தல்

போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தல் வேண்டும். இந்த நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியேற்றப்படும்

அதி உச்ச தண்டணையை பெறுவீர்கள்

அன்பார்ந்த தலைவர்களே!

எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இவ்வேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்கள மயமாக்கலில் இருந்து எமது தாய் மண்ணையும் தாய் மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்.

சிங்கள மக்களே உங்கள் இராணுவத்தை நம்பி யாழ்ப்பாணம் வராதீர்கள் இனியும் வந்தால் கடும் துன்பங்களை எதிர்கொள்வீர்கள்.

தணியாத தாகத்துடன் . . .

தளராத வேகத்துடன் . . .

தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்.

யாழ் மாவட்டப் பிரிவு.

இவ்வாறு அமைந்ததிருக்கும் சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது யாழ்ப்பாணத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடத்தல்கள் கொலைகள் கப்பம் கோரல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவற்றை காரணம் காட்டி இராணுவம் மற்றும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த நிலையில் அவசர காலச் சட்டத்தை அகற்றுதல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தல் யாவும் முடிவுற்ற நிலையில் அரசாங்கத்துள்ள அமச்சரவை தெரிவில் பல முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் அரசியல் காய்நகர்த்தல்கள் நாடுகடந்த அரசின் தீவிர செயற்பாடு என்ற பல காரணிகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் அரசு மீண்டும் புலிப் பீதியை ஏற்படுத்தி அனைத்தையும் திசைமாற்றவும், தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காகவுமே அரசாங்கம் இவ்வாறான பல நடடிக்கைகளை தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தும் தமிழ் மக்களிடையே பரவலாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=23721&cat=1

Edited by தயா

தமிழர் இல்லாவிட்டால் சிங்களப் பகுதியில் அரசியல் இல்லை. புலிகள் இல்லாவிட்டால் சிங்கள அரசியல்வாதிகளே இல்லை.

குடாநாட்டில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளைகள் மக்களின் நன்மைகருதி மீண்டும் சோதனைநிலையங்கள் ஏற்படுத்தப்படும்: யாழ் இராணுவ தளபதி சரத் விஜயசிங்க.

http://seithy.com/listAllNews.php?newsID=27365&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே ...... பாவமும் நானே....

நான் அசைந்தால் அசையும் யாழ்மாவட்டமும் தானே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாகாணசபை லெக்சன் அறிவுப்பும் வருதில்ல, யாழ் களத்து மவுசு குறையிது....பூட்டவேண்டி வந்தாலும் ஏதாவது செய்யுங்கோவன். சுவரில ஒட்டி வினியோகம் செய்யிறது நல்லாயில்ல, செய்யிறது விசிலடிக்க கூடியதா திரில்லிங்கா இருக்கவேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

40,000 சிங்களப் படைகளையும் ஈபிடிபி கொலைகார கொள்ளைக்காரக் கும்பலையும் சிங்கள ரவுடிகளையும் கூப்பிட்டு வைச்சுக் கொண்டு.. கொலை கொள்ளை நடக்குது என்று பதறுறது எங்கையோ உதைக்குதே...!

யாழ்ப்பாணத்தில் சிங்களக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டவையை மக்கள் தட்டிக் கேட்கினமோ இல்லையோ சிங்களவன் கடத்திக் கேட்பான். கொடுத்து அருளட்டும். புலி கப்பம் வாங்குது என்று கதறின கூட்டத்தை காணக் கிடைக்கேல்ல. சிறீலங்காவில் பாலாறும் தேனாறும் ஓடுது என்ற ஈபிடிபி கும்பல்களின் கொள்ளைக்காரத் தோழர்களையும் காணவில்லை. :D:wub::lol:

மாகாணசபை லெக்சன் அறிவுப்பும் வருதில்ல, யாழ் களத்து மவுசு குறையிது....பூட்டவேண்டி வந்தாலும் ஏதாவது செய்யுங்கோவன். சுவரில ஒட்டி வினியோகம் செய்யிறது நல்லாயில்ல, செய்யிறது விசிலடிக்க கூடியதா திரில்லிங்கா இருக்கவேணும். :wub:

இலக்சன் வைக்கிற காசுகள வன்னியில வேலையில்லாம கஸ்டப்படுற பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்ட மக்களுக்கு கொடுக்கலாமே. மாதத்துக்கொரு இலக்சன் வைச்சாத்தான் சன நாய் அகம் வாழுது என்று அர்த்தமாக்கும்..! :lol: :lol: :lol::D

  • தொடங்கியவர்

மாகாணசபை லெக்சன் அறிவுப்பும் வருதில்ல, யாழ் களத்து மவுசு குறையிது....பூட்டவேண்டி வந்தாலும் ஏதாவது செய்யுங்கோவன். சுவரில ஒட்டி வினியோகம் செய்யிறது நல்லாயில்ல, செய்யிறது விசிலடிக்க கூடியதா திரில்லிங்கா இருக்கவேணும். :D

சரி அப்ப யார் தான் சுவரிலை ஒட்டினவையாம்....???

நீண்ட காலமாய் உங்கட ஆக்கள் செய்யும் வேலைதானே இது... நீங்கள் வைச்சு வெடிச்ச குண்டுகளுக்கும், செய்த படுகொலைக்கும் புலியிலை பழியை போட்டியள்... அப்பிடித்தால் சில சிங்களவருக்கு ஆதரவான உங்கட தமிழ் இணையங்கள் வேலை செய்தன...

சிங்களவனோடை நிண்டு வேலை செய்த தமிழன் செய்தவை எல்லாம் புலி செய்தது எண்டுதானே பறைஞ்சு கொண்டு திரிஞ்சனீங்கள்....?? அப்ப எது உங்களிட்டை பஞ்சமாக இருந்தது....??

இப்பவும் சிங்கள ஆதரவு தமிழ் ஊடகங்களுக்கு புலியை சொறியாட்டி வேலையும் இல்லை... நீரும் அதிலை சேர்த்தியோய்...

சரியண்ணை இண்டைக்கும் உங்களுக்கு வெற்றி மிச்சம் நாளைக்கு. :D:wub:

  • தொடங்கியவர்

சரியண்ணை இண்டைக்கும் உங்களுக்கு வெற்றி மிச்சம் நாளைக்கு. :D:wub:

எப்பவும் குனிஞ்சு பிடிச்சு பழகின உமக்கு எப்பிடி வெற்றி வரும்... :wub::lol: :lol: :lol:

வழமையா சிங்களவனுக்கு இடைக்கிடை இங்கை... நாங்கள் நாய்க்கு ஏன் கல் எறியிறனாங்கள் எண்டால் வெறும் பொழுது போக்குக்கு மட்டும் தான்... :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வதனங்,

யாழ் களம் பூட்டுப்படும் போது உங்கள் தரவளி ஆக்கள் இருக்க மாட்டார்கள்.

சைக்கிள் பற்றி................

வாத்தியார்

................

ஒருவரின் அருமை அவர் இல்லாதபோதுதான் உணரக்கூடியதாக இருக்கும். அதற்கு முழு சாட்சி இந்த யாழ் மண்.

அன்று புலிகள் இருந்தபோது பிள்ளை பிடிகாரர் காசு பறிக்கிறாங்கள் என்று அழுத யாழ் மக்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றார்கள். புலிகள் இருந்தால் எவ்வளவு பலன் என்று ஏங்கித்தவிக்கின்றார்கள்.

பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் வடிக்கும் கண்ணீர் சொல்லி மாளாது. காரணம் அதிகரித்துவரும் அட்டகாசங்கள். வெளியே தெரியாமல் எத்தனையோ கடத்தல்கள் தினமும் நடைபெறுகின்றன.

காலம் கனியும்போது எல்லாம் மாறும் பொறுமைதான் வெற்றிக்கு அத்திவாரம்.

யார் நோட்டிசு ஒட்டினாலும் இந்த அறிவிப்பு தமிழர் பிரதேசங்களில் கொலை கொள்ளை கப்பம் வாங்குதல் நடைபெறுகின்றது என்பதை உறுதிப்படுத்துகிறது. புலிகளை அழிச்சால் நாட்டில் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விடும் என்று சொல்லிற ஆட்கள் இப்ப என்ன சொல்லப் போகினம்.புலிகள் இன்னும் இருக்கினமோ?இல்லையோ?வெட்கமாயிருந்தாலும் இன்னும் இருக்கினம் என்று சொன்னாத்தான் எல்லாப் பழிகளையும் அவங்க மேல போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களுக்கு சொல்லப்படும் புலி கப்பம் வாங்கிறதை விழுந்தடிச்சு போடும் பிபிசி போன்ற ஊடகங்கள் கடந்த மே திங்களுக்குப் பிறகு வடக்குக் கிழக்கில் நடந்தேறி வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு செய்தியும் போடுவதில்லை.

தேசிய தலைவரின் வீடுடைப்புச் செய்தியைக் கூட இராணுவத்தின் மறுப்பறிக்கையை கையில் வைத்துக் கொண்டுதான் பிபிசி வெளியிட்டுள்ளது.

இந்த மேற்குலக சக்திகள் இரட்டை வேடத்தை நம்பித்தானே புலிகள் ஏமாந்தார்கள். இப்போ மேற்குலக சக்திகள் தங்கள் வியாபாரத்துக்கு வழி தேடித் திரிகிறார்களே அன்றி எமது உரிமை, வாழ்வைப் பற்றியா கவலைப்படுகிறார்கள். சொல்கைம் போன்ற சமாதான தூதுவர்களுக்கு இப்போ யாழில் நடக்கும் கொடுமைகள் தெரிவதில்லையா. வன்முறைகளை பயங்கரவாதத்தை கைவிடச் சொல்லி சிறீலங்கா அரசிற்கும் அதனோடு இணைந்து செயற்படும் ஈபிடிபி போன்ற ஆயுதக் கும்பல்களுக்கும் நோர்வே அறிக்கை சமர்ப்பிக்குமா...??!

இதுதானா சர்வதேசம் எம்மீது காட்டிய அக்கறை..! :D:wub:

Edited by nedukkalapoovan

"ஒருவரின் அருமை அவர் இல்லாதபோதுதான் உணரக்கூடியதாக இருக்கும். அதற்கு முழு சாட்சி இந்த யாழ் மண்.

அன்று புலிகள் இருந்தபோது பிள்ளை பிடிகாரர் காசு பறிக்கிறாங்கள் என்று அழுத யாழ் மக்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றார்கள். புலிகள் இருந்தால் எவ்வளவு பலன் என்று ஏங்கித்தவிக்கின்றார்கள்.

பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் வடிக்கும் கண்ணீர் சொல்லி மாளாது. காரணம் அதிகரித்துவரும் அட்டகாசங்கள். வெளியே தெரியாமல் எத்தனையோ கடத்தல்கள் தினமும் நடைபெறுகின்றன.

காலம் கனியும்போது எல்லாம் மாறும் பொறுமைதான் வெற்றிக்கு அத்திவாரம்."

எந்த யாழ்ப்பாணத்தை சொல்லுகின்றீர்கள்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதர் தியேட்டர் இருக்கிற அதே யாழ்பாணம்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.