Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபி ஆயுததாரியும் யாழ்ப்பாண துணை முதல்வருமானவர் சிறையிலிடப்பட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு இதுகாள் வரை புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் சேவகம் புரிந்து வந்த, வந்து கொண்டிருக்கும்.. ஈபிடிபி எனும் தமிழ் ஆயுதக் கும்பலின் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேஜர் என்று சொல்லப்படும் இளங்கோ அல்லது ரேகன் என்பவரை சாவகச்சேரி நீதிமன்ற நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் போட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக ஈபிடிபி ஆயுதக் கும்பல் மீது சிறீலங்கா படையினர் கடுமையாக நடந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு பின்னர் அவர்களைக் கொண்டும் தமது சிங்களக் காடைகள் அடங்கிய புலனாய்வுத்துறையைக் கொண்டும் மக்கள் விரோத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-----------

EPDP Jaffna Deputy Mayor placed in remand prison

[TamilNet, Monday, 10 May 2010, 16:57 GMT]

Jaffna magistrate Mr. Anantharajah ordered Monday the second suspect Ilango alias Regan, Eelam People’s Democratic Party (EPDP) Deputy Mayor of Jaffna, for alleged involvement in threatening Chaavakachcheari magistrate K. Pirabakaran, to be placed in Jaffna remand prison until 24 May, when he was arrested and produced in Jaffna magistrate court, sources in Jaffna said. Meanwhile, ruling party Jaffna Mayor announced that all employees of Jaffna Municipal Council (JMC) are to abstain from duties Tuesday in protest against the arrest and detention of the Deputy Mayor, the sources added.

JMC Commissioner had sent an announcement of the above protest in the form of an advertisement to local dailies for publishing.

The dailies, however, said that the advertisement will not be published as it will amount to contempt of court.

The inquiry into the alleged complaint against death threat issued to Chaavakachcheari magistrate K. Pirabakaran was transferred from Chaavakachcheari court to Jaffna court as Regan was absconding in JMC area.

Earlier, on 02 May Chaavakachcheari police arrested the EPDP coordinator of Thenmaraadchi zone, Alexander Soosaimuththu alias Charles, for allegedly threatening Chaavakachcheari Magistrate K. Prabakaran for having issued arrest warrant on EPDP suspects involved in the abduction and murder of student Kapilnath.

Edited by nedukkalapoovan

.

சிங்களத்தில் துணை மேயர் என்றால் துணை ஆயுதக்குழு என்று சொல்லிகொடுத்திட்டாங்கள் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்கவுண்டர் தேவையெண்டா அதுவும் நடக்கும். கிழக்குக்கு ஒரு நீதி வடக்குக்கு ஒரு நீதியல்ல. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்கவுண்டர் தேவையெண்டா அதுவும் நடக்கும். கிழக்குக்கு ஒரு நீதி வடக்குக்கு ஒரு நீதியல்ல. :D

இது சும்மா உள்ளுக்குள்ளே போடுவது போல ஒரு கண் துடைப்பு. சில வாரங்களில் சாவகச்சேரியில் இந்த பரதேசியை காணலாம். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கள நிலைமைகளை கருத்தில் கொள்ளாமல் கொள்கை பிரசார நிலைபாட்டில் பிரச்சினைகளை கற்பனையாக அணுகியது போதும். மீண்டும் நாம் உயிர்ப்பதானால் யதார்த்ததை உணர்ந்து அரசியல் ஆயவும் பேசவும் செய்யவும் ஆரம்பிக்க வேண்டும்.

ஈபிடிபிக்கும் அரசுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. தமிழர் கூட்டமைப்பு தமிழ் காங்கிரஸ் உட்பட இன்று செயல்படும் எந்த தமிழ் அமைப்புகளிடத்திலும் சரியான தலித் கொள்கையோ தலித் மக்களுக்கு இடமோ இல்லாததால் வளரும் எதிர்ப்பு கணிசமான வாக்கு வங்கியையும் ஈபிடிப்பிக்கு உருவாக்கி உள்ளது. யாழில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பகுதியினர் மேட்டுக் குடியினரானதால் தலித் மக்களின் விகிதாசாரம் பலமடங்கு உயர்ந்துள்ளது ஆனால் யாழ்ப்பாணம் கொழும்பு தலைமைகளின் காமாளைக் கண்களுக்கு இன்னமும் தலித் மக்கள் தெரியவில்லை. ஈபிடிபியை ஓரம்கட்டி அந்த வாக்கு வங்கியைக் கைப்பற அரசு நினைக்கிறது. thesiya paddiyalil aavathu thamizar kuddamaippu thalith pirathi nithi oruvarukku idam kodukka thamizar thalaimai virumpavillai. இந்த பின்னணியை புரிந்துகொள்வது கள நிலைமையை புரிந்துகொள்ள உதவும்.

Edited by poet

முன்னர் திருட்டுத்தனமாக யாழ் நூலகத்தை திறக்க முயற்சித்து, அது பிழைத்ததும் இந்திய கைப்பொம்மையாக இயங்கிய ஆனந்த சங்கரியார் சாதிப் பிரச்சினையை கையிலெடுத்தார்.

இப்ப யாழில் உள்ள EPDP கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டதும், ஒரு சிலர் இந்திய சாதிப் பிரிவிகளை இலங்கைக்குள் புகுத்தி குளிர் காய நினைப்பது தெளிவாகிறது. இந்திய ஓநாய்களின் நிகழ்ச்சி நிரல்களின்படி தமிழினத்தை அழிக்க முனைபவர்களே இலங்கையில் இல்லாத புதிய சாதிப் பிரச்சனைகளை யாழ் சமூகத்திற்குள் புகுத்த நினைக்கிறார்கள்.

தலித்துக்கள் யாழ்பானத்திக்ல இருக்கினமோ இருந்தால் எந்த ஊர்மக்களை தலித்துகள் என்று சொல்லுகினம் குறிப்பா ஒரு ஊரை சொல்ல முடியுமா? சொல்லியிட்டு அந்த ஊர்பக்கம் போக முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தலித்துக்கள் யாழ்பானத்திக்ல இருக்கினமோ இருந்தால் எந்த ஊர்மக்களை தலித்துகள் என்று சொல்லுகினம் குறிப்பா ஒரு ஊரை சொல்ல முடியுமா? சொல்லியிட்டு அந்த ஊர்பக்கம் போக முடியுமா?

தலித் என்கிற வட இந்திய சொற்பதத்துக்கும் தமிழினத்துக்கும் என்ன சம்பந்தம்? ஊரின் முன்னாள் பிரச்சினைகளை ஏன் வட இந்திய சாதிப் பிரச்சினைகளோடு கோர்க்கப் பார்க்கினம்? எல்லாமே புதுமையா இருக்கு..! :lol::rolleyes:

மீண்டும் நாம் உயிர்ப்பதானால் யதார்த்ததை உணர்ந்து அரசியல் ஆயவும் பேசவும் செய்யவும் ஆரம்பிக்க வேண்டும்.

ஈபிடிபிக்கும் அரசுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

அரசு EPDP யுடன் முறுகலாம்.... ஆனால் EPD P யால் அரசுடன் முறுகமுடியுமா...?? அப்படி நடக்க சாத்தியமாவது உண்டா...?? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலித் என்கிற வட இந்திய சொற்பதத்துக்கும் தமிழினத்துக்கும் என்ன சம்பந்தம்? ஊரின் முன்னாள் பிரச்சினைகளை ஏன் வட இந்திய சாதிப் பிரச்சினைகளோடு கோர்க்கப் பார்க்கினம்? எல்லாமே புதுமையா இருக்கு..! :D:o

இந்தியாவில் இருகிறதால் இந்தியாகாறன் மாதிரி எழுத வேண்டுமாம், இந்தியர்களை கண்டா, என்னா சாரு எப்படி கீறீங்க.... என்று விசாரிப்பது போல.......இடைகிடை கம்யூனிஸியன், முதலாத்துவம் பொதுவுடமை இப்படி எடுத்து விட வேணும், பொதுவாக புரியாத வார்த்தைகளாய் எடுத்து விட வேண்டும். அப்பத்தான் அண்ணைக்கு அதிகம் என நினைப்பினம். :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருகிறதால் இந்தியாகாறன் மாதிரி எழுத வேண்டுமாம், இந்தியர்களை கண்டா, என்னா சாரு எப்படி கீறீங்க.... என்று விசாரிப்பது போல.......இடைகிடை கம்யூனிஸியன், முதலாத்துவம் பொதுவுடமை இப்படி எடுத்து விட வேணும், பொதுவாக புரியாத வார்த்தைகளாய் எடுத்து விட வேண்டும். அப்பத்தான் அண்ணைக்கு அதிகம் என நினைப்பினம். :blink::D:rolleyes:

உங்கள் ஆய்வுகளோடு என் ஆய்வுகள் மாறுபட்டால் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைதேட வேண்டுமே ஒழிய சப்பைக் கட்டு நியாயங்கள் பேசுவது சரியில்லை. நம் மத்தியில் சாதி இன்னமும் ஏற்றத் தாழ்வுகளின் மையமான பெரிய பிரச்சினைதான். கம்யூனிஸ்ட் போல தலித் என்ற சொல்லும் சர்வதேச மட்டத்தில் புளக்கத்துக்கு வந்துள்ள சொல்.

  • கருத்துக்கள உறவுகள்

கள நிலைமைகளை கருத்தில் கொள்ளாமல் கொள்கை பிரசார நிலைபாட்டில் பிரச்சினைகளை கற்பனையாக அணுகியது போதும். மீண்டும் நாம் உயிர்ப்பதானால் யதார்த்ததை உணர்ந்து அரசியல் ஆயவும் பேசவும் செய்யவும் ஆரம்பிக்க வேண்டும்.

ஈபிடிபிக்கும் அரசுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. தமிழர் கூட்டமைப்பு தமிழ் காங்கிரஸ் உட்பட இன்று செயல்படும் எந்த தமிழ் அமைப்புகளிடத்திலும் சரியான தலித் கொள்கையோ தலித் மக்களுக்கு இடமோ இல்லாததால் வளரும் எதிர்ப்பு கணிசமான வாக்கு வங்கியையும் ஈபிடிப்பிக்கு உருவாக்கி உள்ளது. யாழில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பகுதியினர் மேட்டுக் குடியினரானதால் தலித் மக்களின் விகிதாசாரம் பலமடங்கு உயர்ந்துள்ளது ஆனால் யாழ்ப்பாணம் கொழும்பு தலைமைகளின் காமாளைக் கண்களுக்கு இன்னமும் தலித் மக்கள் தெரியவில்லை. ஈபிடிபியை ஓரம்கட்டி அந்த வாக்கு வங்கியைக் கைப்பற அரசு நினைக்கிறது. thesiya paddiyalil aavathu thamizar kuddamaippu thalith pirathi nithi oruvarukku idam kodukka thamizar thalaimai virumpavillai. இந்த பின்னணியை புரிந்துகொள்வது கள நிலைமையை புரிந்துகொள்ள உதவும்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பிற்படுத்தப்பட்ட சாதி என சொல்லப்பட்ட மக்களின் கணிசமான ஆதரவு 'ஈபிடிபி'யிற்கு உண்டு. இந்த மக்களின் வாக்குகளைக் குறிவைத்தே இக்கட்சி செயற்பட்டுவருகின்றது. இந்த நிலைமையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கூட்டமைப்பும் மற்றைய தமிழ்க் கட்சிகளும் தமது செயற்திட்டங்களை தொடங்காதவரை, ஈபிடிபியின் செல்வாக்கு யாழில் மேலும் அதிகரித்து செல்லும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்தின் தலைவனது மௌனத்தின் வெளியில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளையும் அதன் கபடநாடகங்களையும் இனங்கானவும், பழைய முறுகல் நிலைகளைக் கடந்து ஒரு புதிய முறைமைக்குள் பிரவேசிக்கவும், தமிழினம் தன்னைத் தயார்படுத்தக் கிடைத்திருக்கும் சூழலமைவைத் தகவமைத்துத் தனக்கான இருப்பை உறுதிப்படுத்தவும், உழைக்க வேண்டிய பாரிய கடப்பாட்டில் உள்ள சூழலில் இந்தியக் குப்பைத்தனமான சாக்கடை அரசியல் பாணியில் முளைவிடும் சாதிய முரண்நிலை என்பது சிங்களத்துக்குச் சாதகமான சூழலையே ஏற்படுத்தம் என்பதில் ஐயமில்லை. எனவே ஈழத்தீவிலுள்ள சிறுபான்மைக்கட்சிகள் (தமிழ் முஸ்லிம்) அனைத்தும் ஒன்றிணைந்து ஒற்றைத் தேசியமாக நிமிர்வதை விடுத்து வடக்கரின் பாணியிலான அரசியல் செய்ய முற்படுவோரே உங்களை தமிழினம் கலைத்து கலைத்து அடித்துத் துரத்தும் நாளொன்று மலருமென்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ்த் தேசியம் என்ற ஆண்ம இருப்பிற்காககத் தம்மை ஆகுதியாக்கியோரது கருவறைகளின் நினைவுகளை தகர்க்கிறது சிங்களம். ஆனால் நீங்களோ தம்மை ஆகுதியாக்கியோரல் உளவியல் ரீதியாக ஒருங்கமைக்கப்பட்ட தேசிய இருப்பைக் குலைத்துவிடத் துடிப்பதானது மிகவும் கீழ்த்தரமான அரசியல் கபடத்தனமாகும். சிங்களமும் இதையேதான் விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுச் சிங்களத்துக்கு உதவும் கைங்கரியத்தை விடுத்து முதலில் உங்களுக்குள், அது யாராக எந்தக் கட்சியாக இருப்பினும், ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து வேலைசெய்வதற்கான களத்தை திறப்பதே இன்றைய தேவையாகும். இல்லையேல் தற்போது சிங்களவனிடம் கையேந்தும் நாம், நாளை சிங்களவனோடு சேர்ந்து வடவரிம் கையேந்த வேண்டிய நிலையொன்று வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

பள்ளி மாணவனை படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்த ஒரு கொலைகாரன் சிறையில் இடப்பட்டதே இங்கு செய்தி.

இதற்குள் இந்தியாவில் இருக்கும் சாதியத்தை (தலித்) இந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலியாக உள்நுழைத்து ஈழத்தமிழரை குளிர்காய நினைக்கும் இலக்கியவாதிகளுக்கு குடைபிடிக்கும் ஒரு சிலர் யாழ் நிர்வாகத்தில் உள்ளனரோ என்ற சந்தேகம்.

இத்தகையவர்களுக்கு எதிராக நான் எழுதிய பல கருத்துக்கள் சில நிமிடங்களில் தூக்கப்பட்டுவிடும். சிங்கள பயங்கரவாத வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பற்றிய ஒரு செய்தித் தலைப்பில் தவறுதலாக "ஒருமை" வந்துவிட்டது. அதற்காக எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதை பெரும் பாலும் நிழலியே செய்வதாக கருதுகிறேன். நீங்கள் இலக்கிய இரசனை உள்ளவர் என்பதற்காக தமிழருக்கு ஆதரவாக காட்டிக்கொண்டு, பொய்ச் சுயபுராணம் பாடி தமிழர்களை சிதைப்பதற்கு உழைக்கும் இலக்கியவாதிகளுக்கு முண்டு கொடுக்காதீர்கள். அவர் உங்கள் உறவிரோ, நண்பரோ - எனக்குத் தெரியாது. மட்டுறுத்துனர்களுக்கு நடுநிலைமை முக்கியம். இவற்றை கூற நீண்ட நாட்கள் பொறுமையாக இருந்தேன்.

மாபெரும் அவலத்தின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நடக்கும் இத் தருணத்திலாவது, தமிழனுக்கெதிராக சதி வேலைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களை நீக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில என்கவுண்டரோட கப்சிப்...யாழ்ப்பாணத்துக்கும் என்கவுண்டர் போகும்....கனகாலமில்ல. :)

கிழக்கில என்கவுண்டரோட கப்சிப்...யாழ்ப்பாணத்துக்கும் என்கவுண்டர் போகும்....கனகாலமில்ல. :)

என்ன ....ஜி, தெரியாததுகள் போல ...? வடக்கில் யுத்த நிறுத்த காலத்திலேயே என்கவுண்டர் தொடங்கீற்றுது அல்லோ!!!! ..... மகேஸ்வரி வேலாயுதம் உட்பட 2000 பேரை அத்தான் டக்கிலசு கும்பல் என்கவுண்டரில் போட்டது தெரியாதோ????? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ....ஜி, தெரியாததுகள் போல ...? வடக்கில் யுத்த நிறுத்த காலத்திலேயே என்கவுண்டர் தொடங்கீற்றுது அல்லோ!!!! ..... மகேஸ்வரி வேலாயுதம் உட்பட 2000 பேரை அத்தான் டக்கிலசு கும்பல் என்கவுண்டரில் போட்டது தெரியாதோ????? :)

அது களையெடுப்பு...எடுத்ததுகூட மக்கள்படை சங்கிலியன் படை எல்லாளன்படை வன்னியன் படை.....உப்புடி கனக்க. என்கவுண்டர் எண்டு சொல்லுறது கிறிமினலுகள போடுறது... :)

Edited by Mathivathanang

மகேஸ்வரி உட்பட பல கொலைகளை இவரே செய்ததாக சொல்லப்படுகிறது? தற்போதைய யாழ் மேயரின் "நெருங்கிய" நண்பராம்! அதனால் தான் கொலைகாரனுக்கு ஆதரவாக யாழ் மாநரக சபை கூட்டத்தை அவ ஒத்தி வைத்துள்ளாவாம். கேவலம் கேட்ட வாழ்க்கை.

யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பிற்படுத்தப்பட்ட சாதி என சொல்லப்பட்ட மக்களின் கணிசமான ஆதரவு 'ஈபிடிபி'யிற்கு உண்டு. இந்த மக்களின் வாக்குகளைக் குறிவைத்தே இக்கட்சி செயற்பட்டுவருகின்றது. இந்த நிலைமையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கூட்டமைப்பும் மற்றைய தமிழ்க் கட்சிகளும் தமது செயற்திட்டங்களை தொடங்காதவரை, ஈபிடிபியின் செல்வாக்கு யாழில் மேலும் அதிகரித்து செல்லும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. யாழ்ப்பாணம் மட்டுமல்ல வன்னி மக்களும் பெரும்பாலானவர்கள் சாதி வேற்றுமை கொண்டு அலைவதை புலம்பெயர் நாடுகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. யாழ்ப்பாணம் மட்டுமல்ல வன்னி மக்களும் பெரும்பாலானவர்கள் சாதி வேற்றுமை கொண்டு அலைவதை புலம்பெயர் நாடுகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

தயவுடன் சித்தன் ஆசான் இசைக்கலைஞன் போன்ற அன்பர்கள் எங்கள் தாய் நாடு பற்றி தெரியாத விடயங்கலை தெரிந்து கொள்ள முனையுங்கள். குருட்டுத் தனமான பார்வை மீண்டும் படுகுழிக்கே இட்டுச்செல்லும். நாம் வெல்ல வேண்டுமாயின் பூசி மறைக்காமல் எங்கள் புண்களுக்கு முதலில் வைத்தியம் செய்ய வேண்டும்.

புலம் பெயர்ந்த நாடுகளிலேயே சாதி பல்வேறு அமைப்புகளுள்ளும் ஊர்சங்கங்களுள்ளும் திருமணங்களிலும் காதலிலும் இன்னும் நம்மைக் கூறுபோடுகிறது என்ற செந்தமிழன் சொன்னதையாவது ஏற்றுக் கொள்கிறீர்களா? அப்படி இல்லை என்று மறுக்கப் போகிறீர்களா? சாதிக் கொடுமையை மறைப்பது சாதிக் கொடுமையை மறைமுகமாக ஆதரிப்பதாகும் அல்லவா? இதனை நீங்களும் ஆதரிக்கிறீர்களா?

புலத்திலேயே இப்படியென்றால் ஊர் நிலமையை யோசித்துப் பாருங்கள். நாம் இந்த புண்ணுக்கு புனுகா பூசப் போகிறோம். அல்லது நாம் இலங்கையர் எமக்குள் வேறுபாடில்லை என்று மகிந்த ராஜபக்ச சொல்வதுபோல சொல்லப் போகிறோமா? போராளிகளின் தலைமைகூட சொல்லத்துணியாத குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள். மண்ணைபோலவே என்னையும் அறியவில்லை போலும். கோபமொன்றுமில்லை. மண்ணையாவது அறியுங்கள். அது மட்டுமே வெற்றிக்கு வழி. இனியாவது தமிழர் கூட்டமைப்பும் தமிழ் காங்கிரசும் இந்த தமிழ்ர் விரோத வெள்ளாள நிலைபாட்டைக் கைவிட்டு விட்டு ஒட்டுமொத்த தமிழர் நிலைபாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Edited by poet

தயவுடன் சித்தன் ஆசான் இசைக்கலைஞன் போன்ற அன்பர்கள் எங்கள் தாய் நாடு பற்றி தெரியாத விடயங்கலை தெரிந்து கொள்ள முனையுங்கள். குருட்டுத் தனமான பார்வை மீண்டும் படுகுழிக்கே இட்டுச்செல்லும்.

குருட்டுத்தனமான பார்வை கற்பனையில் கோட்டை கட்டி அதில் மகிழ்ந்து, அதை உண்மையென நம்பி, தன்னையும் ஊரையும் ஏமாற்றி வாழும் இலக்கியவாதிகளுக்கு உரியது. சித்தன் ஆசான் இசைக்கலைஞன் போன்ற அன்பர்கள் இதுவரை குருட்டுத்தனமாக எதையும் சொன்னதாக நாம் அறியவில்லை. குருட்டுத்தனமான பார்வை உங்களுக்கே உரியது. அதை மற்றவர்கள் மேல் போட்டு கற்பனை செய்வதை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே ஆராஅமுதன், இலங்கைத் தமிழர் மத்தியில் கலாச்சாரத்தில் கல்யாணத்தில் அரசியலில் ஜாதி பேதமில்லை என்கிறீர்கள். அது உண்மையென்றால் நான் குருடன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கூற்று உண்மையென்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். எனது பார்வை பற்றி போராளிகள் அறிவார்கள். உங்கள் அறிவும் பார்வையும் மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தரட்டும். இதன்மேல் விவாதிக்க எனக்கு தகமை இல்லை. விடை பெறுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....இண்டைக்கும் குதிரயோடிக்குத்தான் வெற்றி... :):)

  • கருத்துக்கள உறவுகள்

அது களையெடுப்பு...எடுத்ததுகூட மக்கள்படை சங்கிலியன் படை எல்லாளன்படை வன்னியன் படை.....உப்புடி கனக்க. என்கவுண்டர் எண்டு சொல்லுறது கிறிமினலுகள போடுறது... :)

ஓ மகேஸ்வரி உங்களுக்கு கிறிமினலாக தெரியவில்லையோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ மகேஸ்வரி உங்களுக்கு கிறிமினலாக தெரியவில்லையோ??

உங்களுக்கு கிறிமினலா தெரியிறதுதானே இங்க முக்கியம்.... :):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.