Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெருவில் படுத்துறங்கும் ஒரு முன்னையநாள் கரும்புலிப்போராளியின் இன்றைய நிலையை கேளுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நேசக்கரம் அவனிற்கான ஆரம்ப உதவிகளை வழங்கிருந்தது. ஆனால் மனஅழுத்தத்தால் பாதிக்கபட்டு தனக்கு வாழ விருப்பம் இல்லை எனவே தற்கொலை செய்யப்போகிறேன் என்று நேச்கரம் தொடர்பாளர் சாந்தி அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான்..உடனடியாகவே நேசக்கரம் அவனை பொறுப்பெடுத்து அவனிற்கான வைத்திய மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அவனது நிலையை அவனது குரலியே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..

Edited by sathiri

உள்ளத்தை உருக்கும் வேதனையான கதைகள். உன்னைச்சொல்லி குற்றம் இல்லை என்னைச்சொல்லி குற்றம் இல்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்று குற்றத்தை கடவுள் தலையில போட்டுவிட்டு நாங்கள் உண்டு எங்கள் வாழ்க்கை உண்டு என்று எல்லாரும் தப்பிக்கொள்ள வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மச்சான்' date='13 May 2010 - 09:50 PM' timestamp='1273783834' post='587187']

உள்ளத்தை உருக்கும் வேதனையான கதைகள். உன்னைச்சொல்லி குற்றம் இல்லை என்னைச்சொல்லி குற்றம் இல்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்று குற்றத்தை கடவுள் தலையில போட்டுவிட்டு நாங்கள் உண்டு எங்கள் வாழ்க்கை உண்டு என்று எல்லாரும் தப்பிக்கொள்ள வேண்டியதுதான்.

எம்மவர் 99 சதவீதம் பேர் இந்த நிலைக்குள்தான் வந்துள்ளனர்.. :rolleyes::blink:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தலைப்போடு குறிப்பாக முன்னாள் கரும்புலி என்ற தகவலோடு செய்தி இடுவதும் அவருக்கு நேசக்கரம் உதவுகிறது என்பதும் இரு தரப்பையும் பாதிக்காதா..??!

போராளிகள் பற்றிய தகவல்களை வெளியிடும் போது அவர்கள் வாழும் சூழ்நிலை கருதி வெளிப்படையாக செய்தி இடுவதால் நேரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் சரணடைவின் பின் காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிப்பட்டவர்களே அதிகம். வெளியில் வந்த பின்னும் அவர்களை காட்டிக்கொடுக்க வேண்டுமா..??!

நேசக்கரம் தனது பணியை போராளி பொதுமகன் என்று பிரித்துப் பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற நிலையில் வைத்து எல்லோருக்கும் பாகுபாடற்ற பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இந்த வகையான தலைப்பிடல்கள் அந்தப் போராளிகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கலாம்.. நேசக்கரம் பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்று சொல்லவும் பயன்படலாம்.. உண்மையை சொல்ல வேண்டும் நிஜத்தை காட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகின்ற போதும்.. மக்களின் போராளிகளின் பாதுகாப்பும் நேசக்கரத்தின் சேவை நீடிப்பும் அதை விட அதிகம் முக்கியமளிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்று நினைக்கிறேன்.

இப்படியானவர்களை மீட்டெடுக்க சில அமைப்புக்கள் செயல்படுவதாக சொல்லுகிறார்கள்.அவுஸ்ரேலியாவில் பட்ச் வேர்க் என்ற அமைப்பு செயல்படுகிறது.

தாயகத்தில் இந்த கொடிய போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதுகாக்க புலம்பெயர் சமூகமும், தமிழ் கூட்டமைப்பும் , தமிழ் காங்ரஸ் , எல்லாரும் சேந்து வேலை செய்யவும்.. அத்துடன் இயக்கத்திக்கு மக்கள் கொடுத்த காசு (பயன் படாமல் இருக்கும் அல்லது சிலர் பதிக்கு வைத்திருக்கும் ) இதற்குப் பயன் படுத்தலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கூறுவது சரியாகத்தான் எனக்குப் படுகிறது! :rolleyes::blink:

கடைசி முள்ளிவாய்காலோடயாவது முடிந்த்திதே என்று சந்தோசப் பட வேண்டியதுதான்.உண்மையும் அதுதான்.இல்லாவிடில் இந்த அனர்த்தங்கள் காலம் காலமாக தொடர்ந்திருக்கும்.நாங்களும் இங்கிருந்து வீரம் பேசிக்கொண்டிருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கருத்தோடு உடன்படுகிறேன். வெளியில் விட்டவர்களையும் பின்னர் பிடித்து கொன்றும் உள்ளார்கள்.நாம் கவனமாக இருப்பது நல்லது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி, நெடுக்காலபோவான் சொல்வதை தயவு செய்து கவனத்தில் எடுக்கவும். ஏனேனில் குரலும் விபரமும் பதிவு செய்கிறீர்கள். சாடை மாடையாக சொன்னாலே போதுமல்லவா? குறிப்பிட்ட நபர் பிடிபட்டபோது அப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வெளியில் வந்திருந்தால் பிரச்சினையில்லை. நீங்கள் எதையும் குறிப்பிடலாம். அல்லாத பட்ச்சத்தில் அவசியப் படும்பட்ச்சத்தில் முன்னைநாள் ஆர்வலர் அல்லது போராளி என்று சொல்லலாம் அல்லவா.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தலைப்போடு குறிப்பாக முன்னாள் கரும்புலி என்ற தகவலோடு செய்தி இடுவதும் அவருக்கு நேசக்கரம் உதவுகிறது என்பதும் இரு தரப்பையும் பாதிக்காதா..??!

போராளிகள் பற்றிய தகவல்களை வெளியிடும் போது அவர்கள் வாழும் சூழ்நிலை கருதி வெளிப்படையாக செய்தி இடுவதால் நேரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் சரணடைவின் பின் காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிப்பட்டவர்களே அதிகம். வெளியில் வந்த பின்னும் அவர்களை காட்டிக்கொடுக்க வேண்டுமா..??!

நேசக்கரம் தனது பணியை போராளி பொதுமகன் என்று பிரித்துப் பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற நிலையில் வைத்து எல்லோருக்கும் பாகுபாடற்ற பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இந்த வகையான தலைப்பிடல்கள் அந்தப் போராளிகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கலாம்.. நேசக்கரம் பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்று சொல்லவும் பயன்படலாம்.. உண்மையை சொல்ல வேண்டும் நிஜத்தை காட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகின்ற போதும்.. மக்களின் போராளிகளின் பாதுகாப்பும் நேசக்கரத்தின் சேவை நீடிப்பும் அதை விட அதிகம் முக்கியமளிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்று நினைக்கிறேன்.

முன்னையநாள் போராளிகள் அது கரும்புலியாக இருந்தாலும் தற்சமயம் அனைவருமே பாதிக்கப்பட்ட பொது மக்களாகத்தான் நேசக்கரம் பார்க்கின்றது.மற்றும்படி சம்பந்தப்பட்ட குரலிற்குரியவர் உடலால் மிகவும் பாதிக்கப்பட்டதொரு நிலையில் இனி அவரால் எதுவுமே செய்யமுடியாததொரு நிலையில்தான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை நேச்கரம் பொறுப்பெடுத்துள்ள நிலையில் அவரிற்:கான பாதுகாப்பினை முடிந்தளவு உறுதிப்படுத்தியுள்ளோம்.மற்றும்படி இந்த ஒலிபரப்பு வெளியாகியதிலிருந்து எமக்கு வெளிநாடுகளிலிருந்து சில தமிழர்களால்தான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது அதுபற்றியதொரு விவாதமும் ரி.ஆர்.ரி வானலையில் இடம் பெற்றது வழைமைபோல அவற்றையும் இனிவரும் காலங்களில் வருகின்ற இடர்களையும் எதிர்கொண்டு எமது பணிகள் தொடரும்.

அந்த போராளி இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கின்றார்.அவருக்கு உதவி செய்ய வேண்டித்தான் அவருடைய கடந்த காலத்தை கூறுகின்றார்கள்.சும்மா கேட்டால் ஒருவரும் கொடுக்க மாட்டார்கள்.அதுதான் இன்றைய புலம் பெயர்ந்தவர்களின் நிலை பாடு.முடிந்தால் உதவி செய்யுங்கோ அதைவிட்டு இனித்தான் அவருக்கு நடக்கக் கூடாதது ஏதோ நடக்கப் போவது போல் சிலர் இங்கு படம் காட்டுகின்றார்கள்.

அந்த குழந்தைகளை பிடித்துக் கொண்டுபோகும் போது உலகமே எங்களை குற்றம் சாட்டியது, பிழையென தெரிந்தும் தெரியாததுபோல் போராட்டத்தில் இதுவெல்லாம் சகஜம் என்று இருந்த இனமல்லவா?. இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்

தமிழா நீ வாழ்க்கை முழுக்க சிவாஜியாக இருக்க வேண்டியதுதான்.

இங்கு வந்து மாவீரர், போராளிகள் என்று முன்னர் கதை அளந்தவர்கள் இதற்கு என்ன சொல்ல போகின்றனர் ? காசு கேட்டால் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி ஒழித்து விடுவார்கள். :):):lol::D:D

அமைதியாய் இருந்து பணி செய்யும் சாத்திரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

நேசக்கரத்துக்கு இவ்வளவு நாளும் உதவியவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது.தெரியவும் வேண்டாம். நேசக்கரம் பற்றி யாழில் பங்களித்தவர்களுக்கு மட்டுமே நான் பேசுவது விளங்கும்.நன்றி விடிவெள்ளி.

தனிப்பட்ட பங்களிப்புகள் பற்றி இங்கு கதை அளக்க வேண்டிய அவசியமும் இல்லை.தேவையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.