Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுஜாதா 25

Featured Replies

என் வாசிப்பின் எல்லைகளை தீவிரமாக்கிய எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி ஆனந்த விடனில் வந்தவை...அவரின் ஜீனோ தான் நான் வாசித்த முதல் நாவல்

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!

முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!

Edited by நிழலி

சுஜாத்தா அவர்களின் ஏன் எதற்க்கு எப்படி ஆனந்த விகடன் பதிப்பு தான் நான் முதலில் படித்த புத்தகம்... ஒண்று எப்போதும் என்னிடத்தில் நீண்டகாலமாக இருந்தது...

அடுத்தது நான் திரும்ப திரும்ப படித்தது தலைமைச்செயலகம் எனும் புத்தகம் மூளை பற்றி அக்குவேறு ஆணி வேறாக பிரித்து எழுதி இருந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்

கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

அதனால் தான் அவரை பிடிக்கும். லியனாடோ டார்வின்சி போன்றவர். அவரை அறிவுலகம் மேலும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டு.

சாக்கடை அரசியல் வாதிகளுக்கு சிலை வைப்பதை விட்டு இவர் போன்றவர்களுக்கு தான் சிலை வைக்க வேண்டும்.

எனது வாழ்க்கையிலும் என்னை ஈர்த்த முதலாவது நபர் சுஜாதா தான் .இவரின் எழுத்தின் முக்கிய கால கட்டத்தில் நாம் வளர்ந்தோம்.பாலம் முதல் எந்திரன் வரை மனுசன் முழுத்தமிழருடன் பின்னி பிணந்து விட்டது.ஈழத் தமிழரிலும் தனி மரியாதை வைத்திருந்தார். எனக்கு பிடித்த பல கதைகள் இவருடையவைகள் தான்.

  • 2 months later...

நேற்றுத்தான் இவர் எழுதிய ஊஞ்சல் கதையை மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வாசித்தேன். இன்னும் நான் அவரின் ரசிகன்.

"மகாபலி "எல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு கதை.

அம்புலிமாமாவும் கல்கியும் வாசித்துக்கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பில் ஜெயராஜ் இனுடைய கவர்ச்சி படங்களுக்காகத்தான் சுஜாதா, புஷ்பா தங்கத்துரை ஆகியோரின் கதைகளை வாசிக்கத்தொடங்கினேன். எல்லோரையும் கவரக்கூடிய எழுத்துநடை. பாமர மக்களுக்கும் கணணி அறிவை புகட்டியவர். மெய்ஜானத்தையும் விஞ்ஞானத்தையும் கலந்தது தந்த மேதை. இவர் எழுத்தின் தாக்கத்தை இந்த தலைமுறை எழுத்தாளர்களிடம் நிறையவே காணலாம். இவர் வாழும் காலத்திலோ, அதற்குப் பின்போ தமிழக, இந்திய அரசுகள் இவரைக் கண்டுகொள்ளாதது வேதனைக்குரிய விடயம்.

அம்புலிமாமாவும் கல்கியும் வாசித்துக்கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பில் ஜெயராஜ் இனுடைய கவர்ச்சி படங்களுக்காகத்தான் சுஜாதா, புஷ்பா தங்கத்துரை ஆகியோரின் கதைகளை

உண்மையை சொன்னதற்கு நன்றிகள்,நான் படத்தைமட்டும் அந்த வயசில பார்த்தன் இப்பதான் கதையை வாசிக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

அம்புலிமாமாவும் கல்கியும் வாசித்துக்கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பில் ஜெயராஜ் இனுடைய கவர்ச்சி படங்களுக்காகத்தான் சுஜாதா, புஷ்பா தங்கத்துரை ஆகியோரின் கதைகளை வாசிக்கத்தொடங்கினேன். எல்லோரையும் கவரக்கூடிய எழுத்துநடை. பாமர மக்களுக்கும் கணணி அறிவை புகட்டியவர். மெய்ஜானத்தையும் விஞ்ஞானத்தையும் கலந்தது தந்த மேதை. இவர் எழுத்தின் தாக்கத்தை இந்த தலைமுறை எழுத்தாளர்களிடம் நிறையவே காணலாம். இவர் வாழும் காலத்திலோ, அதற்குப் பின்போ தமிழக, இந்திய அரசுகள் இவரைக் கண்டுகொள்ளாதது வேதனைக்குரிய விடயம்.

உண்மையை சொன்னதற்கு நன்றிகள்,நான் படத்தைமட்டும் அந்த வயசில பார்த்தன் இப்பதான் கதையை வாசிக்கிறன்

தப்பிலி, ஜில்... நானும் ஜெயராஜின் ஓவியங்களால் கவரப்பட்டுத்தான் கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

:lol:

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போலை.... :lol:

Artist%20Jeyaraj_thumb%5B4%5D.jpgjsexxygirl.jpgsj2.gif

ஜில், சிறி

பருவ வயது கிளர்ச்சிகள் எங்களுக்கு ஒரு நல்ல எழுத்தாளரை அறிமுகபடுத்தியுள்ளது. ஈழத்து எழுத்தாளர்களில் வ செ ஜெயபாலனும் உமா வரதராஜனும் தன்னைக் கவர்ந்தவர்கள் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த எழுத்தளார்களில் சுஜாதாவும் ஒருவர்...அவரது சில கதைப் புத்தகங்கள் என்னிடம் உள்ளன.

அறிவியலை ஒரு நாவல் பாணியில் சுவாரஸ்யமாக சொன்னவர் சுஜாதா.

அவருடைய எழுத்து நடையே ஒரு அலாதியான அனுபவம். நவீன உத்திகளை

நாவல் இலக்கியத்தில் புகுத்தியவர். சுவாரசியமான சில சொல் பிரயோகங்களை கையாண்டவர்.

உதாரணமாக வெயில் எறிக்கிறது என்பதை "வெயில்கிறது" என்று எழுதியவர்.

இலத்திரநியலையும் கணிபொறியியலையும் எல்லா மட்டத்தினருக்கும் எடுத்து சென்றவர்.

மிகவும் சிக்கல் நிறைந்த இன்று மிகவும் பிரபல்யம் பெற்ற அறிவியல் துறையான

மரபணு பொறியியல் பற்றி எவ்வாறு எமது உடலியல் செயற்பாடுகள் அனைத்தும் நீயுகிளிக்

அமிலங்களில் புரோகிராம் செய்யபட்டுள்ளது என்பதை சிறுவர்களுக்கும் விளங்கும் வகையில் விளக்கியவர்.

மிகவும் கடினமான சிக்கல் நிறைந்த மூளையின் செயற்பாடுகள் பற்றி தலைமை செயலகத்தில் மிக எளிமையாக

சுவாரஸ்யமாக அலசி ஆராய்ந்தவர். நான் இந்த இரு துறைகளிலும் பிரவேசிப்பதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்தவர்.

அவரது கடவுள் வந்திருந்தார் சிறு கதை ஒரு அலாதியான ஹைக்கூ கவிதையின் அனுபவத்தை தந்திருந்தது.

நான் அவரது எழுத்தின் தீவிர ரசிகன்.

அவர் பற்றிய தகவலை தந்து அவரை நினைவூட்டிய நிழலிக்கு மிக்க நன்றிகள்.

நிழலி, நீங்கள் அவர் பற்றிய ஒரு திரியை ஆரம்பித்து அவரது படைப்புகளையும் அது தொடர்பான

இணைப்புகளையும் தர முடிந்தால் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முயற்சிப்பீர்களா?

ஓஷோ பாணியில் கிளு கிளுப்பான ஜோக் அடிப்பதில் அவர் ஒரு கில்லாடி.

அது சரி நிழலி நீங்கள் கூட எங்களுக்கு அந்த மெக்சிக்கோ சலவைகாரி ஜோக்கை

சொல்லவே இல்லையே? தங்களுக்கு அந்த ஜோக் தெரிந்தால் தயவு செய்து எமக்கு

உடனடியாக அறிய தரவும். ஆர்வ கோளாறில் மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

கணேஸ், வசந்த் என்ற இரண்டு பாத்திரங்கள் சுஜாதாவின் சில கதைகளில் வரும்.

அது சரி நிழலி நீங்கள் கூட எங்களுக்கு அந்த மெக்சிக்கோ சலவைகாரி ஜோக்கை

சொல்லவே இல்லையே? தங்களுக்கு அந்த ஜோக் தெரிந்தால் தயவு செய்து எமக்கு

உடனடியாக அறிய தரவும். ஆர்வ கோளாறில் மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறது...

சீமான்,

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் தெரியும். யாழ் களத்தில் அதை எழுத முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கெல்லாம் அவரது எழுத்து ஆதர்சம்!

படிகளில் ஏறினான் என்றால் எழுத்துக்கள் படி போல் ஏறியும், இறங்கினான் என்றால் அவை அதே போல் இறங்கியும் இருக்கும்!

வசந்த் துடியாட்டத்துடன் எங்காவது மாட்டிக் கொள்வதும், கணேஷ் ஆர்ப்பட்டமின்றிக் காப்பாற்றுவதும் செம கிக்! அத்துடன் வசந்த் பார பட்சமின்றி எல்லாப் பெண்களையும் சைட் அடிப்பது சூப்ப்பர்!

சயன்சை சாக்லேட் மாதிரி தருவார்!

நன்றி நிழலி!! :D

  • கருத்துக்கள உறவுகள்

சின்னன் சிறிதாக ஒரு v யையும் y யையும் சரியான இடத்தில் பரவி விட்டு சரியில்லாத கற்பனைகளைக் கிளறி விடும் "ஜெ" சொல்லி வேலையில்லை! :D

சீமான்,

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் தெரியும். யாழ் களத்தில் அதை எழுத முடியாது.

தப்பிலி,

புரிகிறது.. யாழில் எழுத முடியாவிடின் தனி மடலிலாவது அந்த ஜோக்கை எனக்கு அனுப்ப முடியுமா.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

தப்பிலி,

புரிகிறது.. யாழில் எழுத முடியாவிடின் தனி மடலிலாவது அந்த ஜோக்கை எனக்கு அனுப்ப முடியுமா.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

சீமான்,

தனி மடலில் மண்டைவெடிக்கு மருந்து அனுப்பியுள்ளேன் .

தப்பிலி,

புரிகிறது.. யாழில் எழுத முடியாவிடின் தனி மடலிலாவது அந்த ஜோக்கை எனக்கு அனுப்ப முடியுமா.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

சீமான்,

தனி மடலில் மண்டைவெடிக்கு மருந்து அனுப்பியுள்ளேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.