Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை பேசி நாசமாய்ப்போவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பணியைச் செய்ய வேண்டுமென்றது எனது வாதமல்ல. இன்று எம்முன் உள்ள உடனடிப் பணிகள் பற்றிய கரிசனை எந்தளவில் இருக்கிறது ? பசியில் உள்ளவனுக்கு பழங்கஞ்சியானாலும் முதலில் ஊற்றிவிட்டு புரியாணி சோற்றை யோசிக்காலம் என்பது எனது கருத்து. (இது எனது கருத்து மட்டுமே)

தண்டனை வாங்கிக்கொடுத்த பின்தான் உங்களுக்குச் சோறுபோடுவோம் என்பது வெறும் பேச்சுக்குத்தானே சரியானது. உலகமே சேர்ந்து நின்று எங்களைத் தெருவுக்குக் கொண்டு வந்தது. இது எல்லாரும் அறிந்ததே. காலம் இந்தக்கயமைகளை நிச்சயம் சொல்லும். அதுவரை அவசிய தேவைகளை நாம் செய்வதே சிறந்தது. அதிலிருந்து விடுபட்டு உதாரணங்களைச் சொல்லி நடந்து முடிந்த யாவற்றையும் நியாயப்படுத்துவது சரியானதா ? இதில்தான் முரண்பாடு.

புரிந்து கொண்டமைக்கு நன்றி சாந்தி. ஆனால் கொஞ்சம் தவறான புரிதல் என்று நினைக்கிறேன். என் கருத்து மனிதாபிமானப் பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள் என்று வாதிடுவோருக்கு எதிரானது மட்டுமல்ல. சமாந்தரமாகப் பணி செய்யாமல், " நீ என் வழிக்கு வா, அது தான் முக்கியம்" என்று வாதிடும் யாருக்கும் நான் சொல்ல நினைக்கும் கருத்துத் தான் அது. நீங்கள் அப்படியான மன நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் காட்டி நிற்கின்றன. "போராட்டம் எல்லாம் இப்ப மூட்டை கட்டி வைக்க வேணும்" என்கிற மாதிரி நீங்கள் எழுதுவதாக எனக்குப் படுகுது (அது உங்களுக்கு புரியாணி மாதிரித் தெரியுது இல்லையா?). தமிழர்கள் சிறி லங்காவுக்கோ அல்லது இந்தியாவுக்கோ எதிராக செய்யும் எதுவும் புரியாணி மாதிரி வசதி வரும் போது செய்யும் வேலைகள் அல்ல என்பது எனது கருத்து. காலம் பதில் சொல்லும் என்கிறீர்கள். காலம் எங்களுக்குத் தரப்பட்டிருக்கிற ஒரு முதலீடு மட்டும் தான், அதில் இலாபமீட்ட எங்கள் உழைப்பு வேணும். ஒரு வரலாற்று உதாரணம் தருகிறேன்: முதலாம் உலகப் போர் காலத்தில் ஆர்மேனியர்களை துருக்கியர்கள் இனக் கொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலை இன்றைக்கு வரலாற்று நூல்களில் மட்டும் தான் இருக்குது. அதுக்குப் பிறகு யூதர்களை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியர்கள் இனக் கொலை செய்தார்கள். இன்றைக்கு holocaust எனப் படும் இந்த யூத இனக்கொலை என்னென்ன வழிகளில்லாம் உலகத்தை மாற்றி விட்டிருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. காலத்திற்காக காத்திருந்த ஆர்மேனியர்களால் தங்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதைக் கூட உலக அரங்கில் அங்கீகாரத்துடன் இன்னும் நிரூபிக்க இயலவில்லை. நாதியற்றுப் போன நம்மவர்கள் வாழ மனிதாபிமானப் பணி நடக்க வேணும். அதே நேரம் அநியாயமாக கொல்லப் பட்ட ஆயிரக்கணக்கான எங்கள் தமிழ்க்குழந்தைகளுக்காகவாவது கொலைஞர்கள் அழிக்கப்படும்/ஒதுக்கப் படும் பணியும் அதே முக்கியத்துவத்துடன் நடக்க வேணும். இதில் யாரும் இரண்டு கருத்து வைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாதியற்றுப் போன நம்மவர்கள் வாழ மனிதாபிமானப் பணி நடக்க வேணும். அதே நேரம் அநியாயமாக கொல்லப் பட்ட ஆயிரக்கணக்கான எங்கள் தமிழ்க்குழந்தைகளுக்காகவாவது கொலைஞர்கள் அழிக்கப்படும்/ஒதுக்கப் படும் பணியும் அதே முக்கியத்துவத்துடன் நடக்க வேணும். இதில் யாரும் இரண்டு கருத்து வைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

ஜஸ்ரின் நீங்களும் சாந்தியும் ஓரே திசையில்தான் பயனிக்கீறீர்கள்.வெறும் வார்த்தைகளின் குழறுபடியால் குழம்பாமால்.ஒற்றுமையாய் பயனிப்போம். :o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்து மனிதாபிமானப் பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள் என்று வாதிடுவோருக்கு எதிரானது மட்டுமல்ல. சமாந்தரமாகப் பணி செய்யாமல், " நீ என் வழிக்கு வா, அது தான் முக்கியம்" என்று வாதிடும் யாருக்கும் நான் சொல்ல நினைக்கும் கருத்துத் தான் அது. நீங்கள் அப்படியான மன நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் காட்டி நிற்கின்றன.

மனிதாபிமானப்பணிகளின் அவசியத்தை செய்திகளாகப் பார்த்து அழுதுவிட்டுப் போகின்ற மனநிலைகளில் உள்ள மனங்களின் மாற்றங்களை எதிர்பார்த்தே மனிதாபிமானப்பணிகளை வலியுறுத்துகிறேன்Justin. அது 'நீ என் வழிக்கு வா என்ற அர்த்தமில்லை' . தினமும் வருகின்ற தொலைபேசியழைப்புகள் துயரங்கள் நிறைந்த அழுகைகள் யாவற்றையும் கேட்டுக்கொண்டு வீரமாகப் பேச முடியாத இயலாமையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். சமாந்தரமாக பயணித்தில் பணி செய்தல் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் சமாந்தரமாக நாம் போக முதல் செத்துப்போகின்ற உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என் ஆதங்கமே அண்மைய கவிதைகள்.

அது உங்களுக்கு புரியாணி மாதிரித் தெரியுது இல்லையா?

புரியாணி என்று குறிப்பிட்டது ஒரு உவமையே தவிர எங்கள் இனத்து விடுதலையை புரியாணியாக்கும் எண்ணமில்லை. பசிக்கு உணவு அதன்பின்தான் மற்றவை சிந்திக்கும் மனநிலையில் உள்ள மனிதர்களின் குரல்களை கேட்கின்ற போது நாங்கள் காணுகின்ற கனவுகளின் எல்லையில் அவர்கள் இல்லையென்ற உண்மை புரிகிறது.

. காலம் பதில் சொல்லும் என்கிறீர்கள். காலம் எங்களுக்குத் தரப்பட்டிருக்கிற ஒரு முதலீடு மட்டும் தான், அதில் இலாபமீட்ட எங்கள் உழைப்பு வேணும்.

கட்டாயம் எங்களது கண்ணீருக்கும் எங்கள் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலியெடுப்புக்கும் பதில் கிடைக்கும் அது ஆர்மேனியர்கள் போல முடியாது. காலம் தந்திருக்கிற முதலீட்டை இலாபமாக்கக் கூடிய வல்லமையை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கக் கூடிய தெளிவை அவர்களுக்கான தேவையை செய்ய வேணும். நாங்கள் இலாபக்கணக்கை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் உலகப் போர் காலத்தில் ஆர்மேனியர்களை துருக்கியர்கள் இனக் கொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலை இன்றைக்கு வரலாற்று நூல்களில் மட்டும் தான் இருக்குது. அதுக்குப் பிறகு யூதர்களை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியர்கள் இனக் கொலை செய்தார்கள். இன்றைக்கு holocaust எனப் படும் இந்த யூத இனக்கொலை என்னென்ன வழிகளில்லாம் உலகத்தை மாற்றி விட்டிருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. காலத்திற்காக காத்திருந்த ஆர்மேனியர்களால் தங்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதைக் கூட உலக அரங்கில் அங்கீகாரத்துடன் இன்னும் நிரூபிக்க இயலவில்லை.

உலக வரலாறுகளை மட்டுமே நினைவுபடுத்துவது நாங்கள் யூதர்கள் போலென்று கதைபடிப்பது ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாத கதைதான். எங்கள் மீது நடைபெற்ற அநீதியை வெளிக்கொணரும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு அதனை நாங்கள் சரிவரச் செய்யாதுள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சமாந்தரப் பயணத்தை அனைவரும் உணராத வரை சத்தமில்லாது சாகின்ற தமிழ் உயிர்களை இளைய சமூகத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.

நன்றிகள் Justin இத்தோடு இத்திரியை நீட்டி எதையும் சாதித்துவிட முடியாதென்பது புரிகிறது. நீங்கள் சமாந்தரமாகவே நில்லுங்கள். ஒரு முனையில் யாவரும் சந்திப்போமென்ற நம்பிக்கைகளுடன் அவரவர் கடமையை செய்வோம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முனையில் யாவரும் சந்திப்போமென்ற நம்பிக்கைகளுடன் அவரவர் கடமையை செய்வோம்.

ஆமென்.........

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்ரின் உங்கள் கருத்துக்கள் படித்தேன் இதே எமது மக்கள் மீதான படுகெலைகள் பற்றிய விடயங்களையும் நீண்டகால கிட்டத்தட்ட 5ஆண்டுகாலமாக சேகரித்து 3உயிர்களை பலிகொடுத்து வடகிழக்கு மனிதவுரிமை மையம் தாயரித்த தமிழின படுகொலைகளின் விபரங்களை நாங்கள் சிலர் மட்டுமே சாந்தி உட்பட இறுதிவரை பொறுப்பெடுத்து இரவுபகலாக உழைத்து மனிதப்படுகெலைகள் 1956 தொடக்கம் முள்ளிவாயக்காலவரை சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியுடன் ஆவணமாக்கி புத்தகமாக்கி கூவி கூவி எம்மவர் மத்தியில் கொண்டுவந்தோம் பல சர்வதேச அமைப்பிற்களிற்கும் அனுப்பி வைத்தோம் இன்றும் பலஇ;லாயிரக்கணக்கான பிரதிகள் எங்கள் நிலஅறைகளில் தூங்கிக் கிடக்கிறது பணம் தேவையில்லை எமக்கு ஆனால் எமதினத்தின் அழிவுகள் ஆவணமாக்கப்படவேண்டும் என்று மட்டுமே உழைத்தோம் ஆனால்: அதை இலவசமாக தபால் செலவுடனேயே எவரும் எடுப்பதற்கு முன்வரவில்லை காரணம் அவர்களும் அடுத்த விடுமுறைக்கு சிறிலங்கா போகவேண்டுமாம்.எதற்கு வம்பாம் இதற்குள் நானும் தேசியமும் விடுதலையும் பேசத் தயார். நீங்கள் தயாரா???

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்ரின் உங்கள் கருத்துக்கள் படித்தேன் இதே எமது மக்கள் மீதான படுகெலைகள் பற்றிய விடயங்களையும் நீண்டகால கிட்டத்தட்ட 5ஆண்டுகாலமாக சேகரித்து 3உயிர்களை பலிகொடுத்து வடகிழக்கு மனிதவுரிமை மையம் தாயரித்த தமிழின படுகொலைகளின் விபரங்களை நாங்கள் சிலர் மட்டுமே சாந்தி உட்பட இறுதிவரை பொறுப்பெடுத்து இரவுபகலாக உழைத்து மனிதப்படுகெலைகள் 1956 தொடக்கம் முள்ளிவாயக்காலவரை சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியுடன் ஆவணமாக்கி புத்தகமாக்கி கூவி கூவி எம்மவர் மத்தியில் கொண்டுவந்தோம் பல சர்வதேச அமைப்பிற்களிற்கும் அனுப்பி வைத்தோம் இன்றும் பலஇ;லாயிரக்கணக்கான பிரதிகள் எங்கள் நிலஅறைகளில் தூங்கிக் கிடக்கிறது பணம் தேவையில்லை எமக்கு ஆனால் எமதினத்தின் அழிவுகள் ஆவணமாக்கப்படவேண்டும் என்று மட்டுமே உழைத்தோம் ஆனால்: அதை இலவசமாக தபால் செலவுடனேயே எவரும் எடுப்பதற்கு முன்வரவில்லை காரணம் அவர்களும் அடுத்த விடுமுறைக்கு சிறிலங்கா போகவேண்டுமாம்.எதற்கு வம்பாம் இதற்குள் நானும் தேசியமும் விடுதலையும் பேசத் தயார். நீங்கள் தயாரா???

நான் தாயக மக்களை மறந்து விட்டு விடுதலையும் தேசியமும் பேசவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் என் குடும்பத்தினர் மட்டும் ஒரு இருபது பேர் இருப்பர். ஆனால் முகம் தெரியாத முப்பதினாயிரம் பேருக்கும் என் உறவுகளுக்கும் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது, மக்களை மறந்து நான் விடுதலை பேச வெளிக்கிட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அரைகுறை புரிதல். அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது. (நான் செய்ததையெல்லாம் இங்கே சொல்லிக் கொண்டும் இருக்க முடியாது, அது எனக்குத் தேவையில்லாத ஒன்று!) நான் பேசுவதெல்லாம், தங்களால் இயன்ற எல்லாவற்றையும் தமிழர்கள் செய்ய வேண்டும். ஒன்று பெரிது, மற்றது சிறிது என்று எள்ளுவதில் எதுவும் எங்களுக்கு நடந்து விடப் போவதில்லை, எங்களுக்குள் பிரிவு மட்டுமே அதிகரிக்கும். தேசியம் பேசுவோரை எள்ளிக் கொண்டு நீங்கள் நிவாரணப் பணி செய்தால் எப்படி உங்கள் நிவாரணப் பணி சிறக்கும் என்று ஒருக்காச் சொன்னால் நான் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறேன். சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அவர்களே இங்கு எள்ளல் எனது நோக்கமல்ல அதே போல் அள்ளலும் எனது நோக்கமல்ல .. துள்ளாய் திரிந்த எமது உறவுகள் துல்லியமிழந்து போன துயரம் மட்டும்தான் ..அது மட்டும் தூரமாக மட்டுமல்ல பெரும் துயரமாகவும்.....தேசியம் பேசுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல நாங்கள் தேசமற்றிருப்பவர்கள்.. தேசத்திலிருப்பவர்கள் பேசட்டும் தேசியம். மற்றையவரகள் பேசுவது தூசியாம்..எள்ளலும் எள்ளளல் நகையும் பேசுவதல்ல எனது தேசியம். துள்ளித்திரிந்த காலத்தில் தூக்கிய தேசியத்தை தூர எறிந்துவிட்டு துஞ்சியும் அஞ்சியும் பஞ்சமே மஞ்சமாய்போன கொஞ்ச நஞ்சமாயுள்ள மிஞ்சிப்போன தமிழனிற்காய் இறைஞ்சி நிற்கிறோம் அவ்வளவுதான். இதனால் நீங்கள் என்னை அரை குறை என்றலாம். அல்லது அரை இல்லாத குறை என்றாலாம்...குறையே இல்லாத அரை என்றலாம்..தமிழில் அரை முக்கியம். மனிதனிற்;கும் அரை முக்கியம்..புரிதல் என்பது புத்தியுள்ளவர்களிற்கு முக்கியம்.வகைத்தல் பற்றி பிரித்தல் குறியீடு Nசுதலாகாது நண்பரே நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.