Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சே அனுப்பிய ரகசிய தூது.. தூக்கியெறிந்த ரஜினி!!

Featured Replies

ராஜபக்சே அனுப்பிய ரகசிய தூது.. தூக்கியெறிந்த ரஜினி!!

இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை.

சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழாவுக்குப் போகமாட்டேன் என்றும் கூறிவிட்டார். புதிய தூதராக சல்மான் கான் பொறுப்பேற்றுள்ளார்.

அமிதாப் குடும்பத்திலிருந்து அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என யாருமே இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என் அறிவித்துள்ளனர்.

இதனை இலங்கை அரசு முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, முன்னணி இந்தியக் கலைஞர்கள் அனைவரும் கொழும்பு வருவார்கள் எனக் கூறி வருகிறது.

இந் நிலையில், உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த விழாவுக்கு வருமாறு இலங்கை அரசு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பிதழ் கொடுத்தது.

பொதுவாக, ஒரு மரியாதைக்காகவாது இதுபோன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் ரஜினி, இந்த அழைப்பிதழைப் பெறவும் மறுத்துவிட்டார். அவரது அலுவலகமும் இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெளியில் தெரிந்த பிறகுதான், தமிழ் திரையுலகம் வேகத்துடன் செயல்பட்டு விழாவைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தது.

இந் நிலையில் அதிபர் ராஜபக்சேவே ரகசியமாக தூது அனுப்பியுள்ளார் ரஜினிக்கு. எப்படியாவது இந்த விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளவர், கவிஞர் தாமரை. அவர் கூறுகையில்,

“தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு ஒன்றும் நடவாததுபோல இருக்க இலங்கை அரசு முயல்கிறது. இதை இப்படியே விட்டுவிட முடியாது. இவ்வளவுக்கும் பிறகும், இலங்கை அரசுத் தரப்பில் திரை உலகினரைத் தனிப்பட்டரீதியில் தொடர்புகொண்டு வசப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

இந்த ‘ஐஃபா’ விழாவில் கலந்துகொள்ளுமாறு ரஜினிகாந்த்துக்கு ராஜபக்சே தூதுவிட்டார். ஆனால், ரஜினி அதை வந்த வேகத்தில் நிராகரித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ரஜினியின் அலுவலகத்தில் நாம் தொடர்பு கொண்டபோது, “இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம் என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்

Edited by நிழலி
மூலம் ஜூனியர் vikatan

ரஜனிக்கு ஒரு சபாஸ்!

  • கருத்துக்கள உறவுகள்
:D ஏன், காசு காணாதாமோ??
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்

தங்களிடமிருந்தா இந்த எழுத்து....?

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் திரையுலகத்தினர் இந்த விடயத்தில் ஒருமித்த முடிவுடன் இருப்பது வரவேற்கத்தக்கது.

பாராட்டுக்கள் ரஜனி சார்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

திரு.ரஜனிகாந்த் அவர்களுக்கும் இது விடயத்தில் அக்கறை காட்டும் இந்தியத் திரைப்படக் கலைஞர்களுக்கும் நன்றி.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு நகைச்சுவைக்காக எழுதினேன். ஆனால் விழுந்திருக்கும் சிவப்புப் புள்ளிகளைப் பார்க்கும்போது நிலமை உக்கிரம் எண்டு தெரியுது.

ஆனாலும், அவர் அழைப்பைப் புறக்கணித்தார் என்பதற்காக நாம் அவரை ஆகா ஓகோ என்று புகழ வேண்டுமா??

உங்களுக்கு அண்மையில் சென்னையில் நடந்த திரைப்படக் கலைஞர்கள் நிகழ்ச்சி ஒன்றுபற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.

கருநாநிதியை வாழ்த்துவதற்காக திரைப்படக் கலைஞர்களால் நடத்தப்பட்ட நிகழ்வு அது. அதில் அஜித்(மலையாளி) எனப்படும் நடிகன் பேச எழுந்தான். "இங்கே தமிழன், தமிழன் என்று பேசுகிறார்கள். தமிழன் என்று சொல்லியே ஆட்டிப் படைக்கிறார்கள், எங்களின் சொந்தக் கருத்துக்களைக் கூறக் கூட சுதந்திரமில்லை. அரசியல் சினிமாவுக்கு வேண்டாம், தமிழர்களை(ஈழத்து)ஆதரித்துக் குரல் கொடுக்கவில்லை என்பதற்காக எங்களைப் புறக்கணிக்க பார்க்கிறார்கள். இது மாற வேண்டும்" என்று சொல்ல ரJஇனி தனது ஆசனத்திலிருந்து எழுந்து முதலாவதாகக் கை தட்டினார், அவரைத்தொடர்ந்து கமலும் பின்னர் முழு அரங்கும் எழும்பிக் கைதட்டியது.

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா??

சீமான் போன்ற உண்மையான தமிழுணர்வாளர்கள், அன்னிய மொழி நடிகர்கள் ஈழத்தமிழன் கொல்லப்படும்போது காட்டிய அசத்தையைக் கண்டித்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைத்தான் இந்த மலையாளி சொல்கிறான்.

"நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழன் தலையில் மிளகாய் அரைப்போம், காசைக் குடுத்தோமா படம் பார்த்தோமா என்று போவதை விட்டு, தமிழ், மொழி, இனம் அது இது என்று எதுவும் பேசக்கூடாது என்று இந்த அந்நிய நடிகர்கள் சொல்கிறார்கள். கமல், ரஜினி உற்பட.......

நீங்கள் முதலில் கூறியதில் எந்தத் தவறும் இல்லை, இஅவர்களை ஏன் நாம் நம்ப வேண்டும், இவர்களால் எதுவும் ஆகப் போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அமிதாப்பச்சனின் மருமகளுடன் சேர்ந்து நடிக்கும் இந்திரன் வெளிவர இருக்கின்றது..........

பலகோடிகளை கொட்டி எடுக்கும் அந்த படத்திற்கு புறகணிப்பு அச்சுறுத்தல் தமிழகத்திலேயே கிளம்பலாம் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

ரஜபக்சே தனிஅழைப்பு விட்டதை ஆதாரபூர்வமாக நிருபித்தால் ரஜனியை நம்பலாம்.

இது கொஞ்ச நாளக கட்டுகதைகள் போலவே கட்டிவிடபடுகின்றன. இந்திரன் படகுழுவின் கற்பனைகதைகள்போல்தான் எனக்கு தெரிகின்றது.

வெத்திலை வைச்சு அழைத்தார்கள் பாட்டாசு போட்டு அழைத்தார்கள் ஆனால் எல்லாத்தையும் மறுத்தோம் என்பது நம்பும்படியாக இல்லை. ( மறுக்கமாட்டார் என்பது அல்ல எனது கருத்து அவர்கள் அழைத்தார்கள் என்பதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதே எனது சந்தேகம்)

மற்றையபடி சூப்பஸ்டார் மறுத்திருந்தால்........... அவருக்கு நன்றிகளை கூறவும் முன்நிற்போம்!

Blue Bird,

இணைப்புக்கு நன்றி. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட 'மனிதன்.கொம்' அல்ல இதன் மூலம். ஜூனியர் விடனில் இருந்து பிரதி பண்ணப்பட்டது

Edited by நிழலி

இங்கு சினிமா நடிகர் ரஜனியை சரி, பிழை என்று கூறுபவர்களில் எத்தனை பேர் இலங்கைப் பொருட்களையும், சண் ரிவியையும் கலைஞன் ரீவி யையும் புறக்கநிக்கின்றிர்கள்?

:D ஏன், காசு காணாதாமோ??

இரகுநாதன், இன்று ரஜனி "நான் வருகிறேன்" என்று போயிருந்தால் என்ன நடந்திருக்கும், உங்களை என்னைப் போன்றவர்கள் ஒருக்கால் துரோகி, தமிழர்களின் பணத்தில் சீவிக்கிறாய் என ஒருக்கால் சந்தம் போடுவம் அத்தோடு சரி!! ... ஆனால் நிழலி கூறியது போல் அவரின் படங்கள் இங்கு பார்ப்போருக்கு ஒரு குறை வராது., கவுஸ்புல்லாகத்தான் ஓடும்!! ... இவற்றிற்கு நல்ல உதாரணங்கள் சண் ரீவி, கலைஞர் ரீவி, ஜெயா ரிவி!!!

அதுக்கு மேல் இலங்கை அரசுக்கும் ஒரு நல்ல பிரச்சாரமாக போயிருக்கும்! முன்பே சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் ராதிகா, மாதவன், .. போன்றோரெல்லாம் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அதைவிட இன்னும் சில தமிழக நடிகர்கள் ஏற்கனவே கொழும்பு சென்று நிகழ்ச்சிகளும் நடத்தியவர்கள்! ரஜனி ஓமென்றிருந்தாலோ, பதில் கூறாமல் இருந்திருந்தாலோ, அங்கிருந்து பலர் கிளம்பியிருப்பார்கள்!!! அதை எல்லாம்.... ஒருவன் செய்ததை எழுந்தமானத்தில் விமர்சிப்பதா????????????

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.