Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீஎம்ஆர் -ரிவிஐ -சிரீஆர் -உள்ளிட்ட நிறுவனங்களை தமிழ் மக்களின் பொதுடமை ஆக்குதல் வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com>

Date: 2010/6/1

Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்

யூன் 01, 2010

அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!

உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்

கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.

இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.

தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.

இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.

மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.

ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.

ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.

குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.

எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.

- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.

www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com

குறிப்பு: இம்மின்னஞ்சலிலுள்ள கருத்துக்களிலில் அனைத்திலும் உடன்பாடு இல்லை எனினும் பொது நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதை விரும்புபவர்களிற்கான ஆதரவாக இங்கே பதிவு செய்கின்றேன்.

நான் எவரினதும் மனதை புண்படுத்த விரும்பவில்லை. எனினும் தமிழ்விசன் தொலைக்காட்சியின் ஓர் நீண்டகால நேயர் - அது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதை பார்த்து வருகின்றேன் - என்கின்ற வகையில் எனது அபிப்பிராயத்தை கூறலாம் என்று நினைக்கின்றேன்.

கனடா நாட்டு சட்டதிட்டங்களுக்கு எது சரியான முடிவோ அதையே இங்கு செய்ய இயலும். தமிழ்விசன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது யார் யாருக்கு அதில் பங்கு உண்டு, இது யாரின் சொத்து என்பது சட்டவரைவுகளுக்கு அமைய தீர்மானிக்கப்பட்டு இருக்கவேண்டும். கனடா நாட்டில் வியாபாரம் என்பது விளையாட்டு அல்ல. இது எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் நன்கு தெரிந்து இருக்கும். ஆனால்.. இப்போது மக்களே ஆதரவு தாருங்கள், பொதுச்சொத்து ஆக்குங்கள் என்று எல்லாம் கேட்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்துவிட்டு இப்போது நிருவாகி அப்படிப்பட்டவர், விக்கினேஸ்வரன் இப்படிப்பட்டவர் என்று எல்லாம் கூறுவதை என்ன என்று சொல்வது.

தமிழ்விசன் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் பாடுபட்ட அனைத்து கலைஞர்களும் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆக்கப்பட்டால் மகிழ்ச்சியே.

Edited by மச்சான்

உங்களுக்கு ஒத்துபாடாவிட்டால் அவன் துரோகி,கைகூலி,ரோ,சிறீலங்காவின் எலும்பு நக்கி, இன்னும் எத்தனையோ எல்லாம் சொன்னீர்கள்.இவர்களுக்கு யாழ் வாசகர்களும் சளைத்தவர்களல்ல.கடைசியாக ஒண்டுக்க ஒண்டு அடிப்பட்டுவிட்டு இப்ப எல்லோருமே ஓட்டுமொத்தமாக ஆளை ஆள் துரோகியென்கின்றார்கள்.

எமது போராட்டதில் முக்காவாசி நேரம் மற்றவனை துரோகியாக்குவதிலேயே கழித்தோம்.இன்னமும் சில மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.காலப்போக்கில் இவர்களும் தொலைந்து போவார்கள் என நம்புவோம்.

மனித சுதந்திரத்தை போல் கருத்து சுதந்திரத்திற்கும் களம் அமையுங்கள்.

  • 1 month later...

உங்களுக்கு ஒத்துபாடாவிட்டால் அவன் துரோகி,கைகூலி,ரோ,சிறீலங்காவின் எலும்பு நக்கி, இன்னும் எத்தனையோ எல்லாம் சொன்னீர்கள்.இவர்களுக்கு யாழ் வாசகர்களும் சளைத்தவர்களல்ல.கடைசியாக ஒண்டுக்க ஒண்டு அடிப்பட்டுவிட்டு இப்ப எல்லோருமே ஓட்டுமொத்தமாக ஆளை ஆள் துரோகியென்கின்றார்கள்.

எமது போராட்டதில் முக்காவாசி நேரம் மற்றவனை துரோகியாக்குவதிலேயே கழித்தோம்.இன்னமும் சில மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.காலப்போக்கில் இவர்களும் தொலைந்து போவார்கள் என நம்புவோம்.

மனித சுதந்திரத்தை போல் கருத்து சுதந்திரத்திற்கும் களம் அமையுங்கள்.

தோழரின் கருத்துகளுக்கு எனக்கு மாறாக கருத்தெழுத முடியவில்லை!

இன்று எமக்கு தேவையானது ... பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிராமல் .. தொடர்பாடல்கள், விட்டுக்கொடுப்புகள் மூலம் ஓர் பொதுகொள்கையை ஏற்படுத்துவதே!

மக்களின் சொத்து மக்களுக்கே! ... அது மக்களுக்கே சென்றடைய வேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

கலாதரனிடமிருந்து இரவோடு இரவாக அடாவடி தனமாக தூக்கிக் கொண்டு போகும் போது எதுவுமே தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கலாதரனிடமிருந்து இரவோடு இரவாக அடாவடி தனமாக தூக்கிக் கொண்டு போகும் போது எதுவுமே தெரியவில்லை.

அப்படி போடுங்கள் அரிவாளை ஈழபிரியன்.முன்னாள் யாழ் இந்து மாணவனும், பின்னாளில் வோற்ரலூ மாணவனுமாகிய ஒருவன் கட்டி எழுப்பிய ரி வி ஐ அப்பாவியான அவரை வெளியில் பிடித்து விட்டது மேற்படி நிர்வாகம். யாரும் ஏதும் சொல்லவில்லை.ஏன்? ஏன்? ஏன் இப்போ மட்டும்??....

சீஎம்ஆர் -ரிவிஐ -சிரீஆர் -உள்ளிட்ட நிறுவனங்களை தமிழ் மக்களின் பொதுடமை ஆக்குதல் வேண்டும

புரியவில்லை.

மக்களுக்காக ஒன்று பொதுவாக வேண்டும் என்றால் மக்கள் முதலில் பொதுமையாக இருக்கவேண்டும். ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். இந்த மையவாதக் குட்டையில் ஊறின ஊடகங்களால் மக்களையும் ஒன்றுபடுத்த முடியாது மக்கள் விடுதலைக்காக போராடவும் முடியாது. வேண்டுமானால் நாலுபேர் சேர்ந்து இன்ன இன்னது தமிழ்மக்களின் பொதுச்சொத்து என்று தம்பட்டம் அடிக்கலாம் ஆனால் ஏகமக்களும் அதை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. உவங்கட புடுங்குப்பாட்டுக்கும் குத்துப்பாட்டுக்கும் அடயாளப்போட்டிக்கும் மக்களின் பொதுஉடமை ஒரு கேடு? மக்களே ஆளுக்கொரு கருத்தோடு சிதறிப்போய்கிடக்கிறார்கள்.

  • 2 weeks later...

தாங்களும் உயிரை கொடுப்பவர்கள் மாதிரி சவுண்ட் கொடுத்துக் கொண்டு திரிந்த சீ.டீ.ஆர் கோமாளிகள் மக்களும் போராளிகளும் மடிந்து இரத்தவாடை மாறவில்லை அதற்குள் நட்சத்திர திருவிழா என்று கும்மாளம் அடிக்க தொடங்கிவிட்டார்கள்.இப்போ பப்பிளிக்காகவே உங்களிடமிருந்து அடித்த காசுதான் என்ன பண்ணபோறீங்கள் என்று சிங்கள அரசு மாதிரி விலாசம் வேறு தொடங்கிவிட்டார்கள்.

அவர்கள் ரேடியோ,பத்திரிகை எங்கும் அவர்களின் வியாபார நிலையங்களின் விளம்பரமே.மிஸ்டர் திருமா போய் சீமான் வந்து இப்ப சீமான் போய் தாமரை வந்திருக்கின்றா.வன்னியில் மக்கள் சாப்பாட்டிற்கு வழியில்லை,போராளிகள் பாடு கேட்கத்தேவையில்லை ஜ்ப்பா படவிழாவை பகஸ்கரியுங்கள்,அசின்ரை படத்தை பார்க்காதீர்கள் போராட்டம் சார்ந்துதான் இந்த கும்மாளம் என் வியாக்கியானம் வேறு.எனது வீடு நடை தூரத்தில் இருந்தும் எட்டிப் பார்க்கவில்லை ஆனால் அவர்கள் வானொலியில் அடித்தகூத்துகளை கேட்க எனது நண்பன் சொன்னான் ஒரு கூட்டம் வல்மொறினுக்கு,ஒரு கூட்டம் மிட்லான்டிற்கு எஞ்சிய கழிவுகள் நட்சத்திர திருவிழாவிற்கென்று உண்மைதான் போலிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.