Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்.............

Featured Replies

முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்.............

முன்னர் சில பெண்கள் அமைப்பும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் என்ற பேர்வழிகளும், பின் சிங்கள அரசினரும் புலிகள் தலிபான் போன்ற அடக்கு முறையை பெண்கள் மற்றும் கலாச்சாரம் மீது பிரயோகிக்கீன்றனர் என்று பிரச்சாரம் செய்து தலிபான் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பையும் புலிகளையும் சமன் செய்தனர்

இவர்கள் இனி இந்த மகிந்த அரசின் நடவடிக்கையை என்ன என்று சொல்லப் போகின்றனர்?

இவை போன்ற செய்திகள் தான் மேற்குலகினரின் வெறுப்பை சம்பாதிக்கும்... முடிந்தால் இதனை பரப்பவும்

Sri Lanka police detain young couples for kissing

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்மோ நல்லவிடயமாகதான் தெரிகின்றது.

பல்கலைகளகத்திற்கு போனால் ஏதொ கொம்பு முளைத்தவர்கள்போல்தான். இலங்கையை பொறுத்தவரையில் பல்கலைகழக மாணவர்களின் செயற்பாடு உள்ளதை நான் பல முறை நேரிலேயே பாhத்திருக்கிறேன்.

எனது கிராமத்திற்கு ஒரு முறை யாழ்கல்கலைகழகத்தில் இருந்து சுற்றுலா வந்தார்கள். வந்த ஆண்மானவர்கள் அனைவரும் ஒரு கள்சீவுவவரிடம் எல்லா கள்ளையும் விலைக்குவாங்கி குடிக்க தொடங்கினார்கள். அந்த இடத்தால் தற்செயலாக வந்த எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது இது என்ன பொம்பிளைபிள்ளைகளெல்லாம் அருகில் நிற்கிறார்கள் இவர்கள் அரட்டை அடித்துகொண்டு கள் அருந்துகிறார்கள் என்று ஓரே வியப்பாக இருந்தது. உடனேயே ஒடிகொண்டு வந்த சைக்கிளால் இறங்கி முன் சில்லின் காற்றை திறந்துவிட்டு சைக்கிளை மெதுவாக உருட்nடிகாண்டு நடப்பதை உன்னிப்பாக பார்த்தேன். பின்பு சுவையை அருந்திபார்க்கும்மாறு சில பொம்பிளைபிள்ளைகளையும் அவர்கள் வற்புறுத்த அவர்களும் அருந்தினார்கள். எனக்கு என்னமோ வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களை பார்ப்பதுபோல் இருந்தது. உண்மையிலேயே நான் கிராமத்தில் வாழ்ந்தவன் எனக்கு எல்லாமே புதியதாகவே இருந்தது.

உடனேயே ஊர் முழுதுமாக ஒடி ஓடி நடந்ததை எல்லோருக்கும் தெரியபடுத்தினேன். அவர்கள்தான் சொன்னார்கள் அது கம்பஸ் பெடியள் அப்டிதான் என்று.

அப்படி என்றால் அதை கம்பஸில் வைத்துகொள்ளலாமே? அதையேன் எமது ஊரில் வந்து செய்யவேண்டும் என்ற எரிச்சலே எனக்கு அப்போது தோன்றியது.

இத்தனைக்கும் யாழ்பாணத்திற்கும் எனது ஊருக்கும் உள்ள இடைவெளி வெறும் 22மையில்கள். 22மையில் கடந்து வந்தவுடன் அவர்கள் காட்டிய திரைபடம் அது.

இப்போது இன்ரர்நெற் ஒன்லைன்சொப்பிங் அது இது என்று இந்த படித்தவர்கள் காட்டும் பந்தாவிற்கு ஒரு எல்லையே இல்லாது போய்கொண்டிருக்கினறது.

கொண்டுபோய் சிறையில்போட்டால்தான் இவர்களுக்கு படிப்பதற்கு பல்கலைகழளம் சென்றது ஞாபகத்திற்கு வரும்.

தவிர நிழலி அண்ணா சொல்வதுபோல் இதை எமக்கு சாதகமாக நாம் பயன்படுத்தலாம்........... மேலை நாடுகளை பொறுத்தவரையில் இவை சாதாரணமான விடயங்கள் அதற்கு சிறையில் இடுவது என்பது மிகவும் பிற்போக்காளர்களாலேயே முடியும் என்ற பதம் உடனடியாகவே ஒரு பரபரப்பு செய்தியாக அவர்களை சென்றடையும்.

அது சரி நாட்டு புறத்தாருக்கு இவை புதுசு தான் :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்.............

முன்னர் சில பெண்கள் அமைப்பும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் என்ற பேர்வழிகளும், பின் சிங்கள அரசினரும் புலிகள் தலிபான் போன்ற அடக்கு முறையை பெண்கள் மற்றும் கலாச்சாரம் மீது பிரயோகிக்கீன்றனர் என்று பிரச்சாரம் செய்து தலிபான் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பையும் புலிகளையும் சமன் செய்தனர்

இவர்கள் இனி இந்த மகிந்த அரசின் நடவடிக்கையை என்ன என்று சொல்லப் போகின்றனர்?

இவை போன்ற செய்திகள் தான் மேற்குலகினரின் வெறுப்பை சம்பாதிக்கும்... முடிந்தால் இதனை பரப்பவும்

Sri Lanka police detain young couples for kissing

எல்லாம் சரி நிழலி.. "தலிபான்கள் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பு" என்று மேற்குலம் சொல்வதைத்தானே நீங்களும் உச்சரிக்கிறீர்கள்.

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த சில நண்பர்களை சந்தித்த போது சில உரையாடல்களை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களில் ஒருவர் சொன்னார் தலிபான்கள் மக்களிடம் ஒழுக்கத்தை பேண விளைகின்றதில் காட்டும் கடுப்போக்கையே மேற்குலகம் தவறாக அர்த்தப்படுத்தி அவர்களைப் பற்றி தவறாக பிரச்சாரம் செய்கிறது என்று. உண்மையில் ஆப்கானிஸ்தானிலும் சரி பாகிஸ்தானிலும் சரி தலிபான்களுக்கு நல்ல மக்கள் ஆதரவு உண்டாம்.

நாம் எமது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்க அல்லது அதில் உள்ள நியாயத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை என்று ஆதங்கப்படும் நிலையில் இருந்து கொண்டு இந்த உலகம் மற்றவர்கள் மீது செய்யும் அநியாய பொய் பிரச்சாரங்களை அப்படியே ஆராய்தல் இன்றி ஏற்றுக் கொள்வதை தானே செய்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் எங்களை பயங்கரவாதிகள் என்று காட்டும் இந்த உலகின் கருத்தை மற்றவர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டு உங்களைப் போலவே திட்டி எழுதினால்.. அதில் உள்ள தவறை எப்போது சுட்டிக்காட்டுவது.. அல்லது உணர்த்துவது. இதனால் தான் மேற்குலகம் மிக இலகுவாக பிரச்சார ரீதியில் மக்களை குழப்பி பிளவுபடுத்தி தனக்கு சார்ப்பான மனவோட்டங்களை விதைத்து தான் நினைத்ததை சாதித்து வருகிறது.

நாம் எம்மைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது. மற்றவர்கள் பற்றி வரும் செய்திகளுக்குள் உள்ள உண்மைகளையும் ஆராய்ந்து அறிய வேண்டும். சகட்டு மேனிக்கு மேற்குலக பிரச்சார பாணியில் மற்றவர்கள் மீதான குற்றம் சுமத்தல்களை ஏற்றுக் கொள்வதானது எம்மை நாமே தாக்குவதற்குச் சமன்.

சிறீலங்கா அரசின் புலிகள் பாணியிலான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதில் இருந்தாவது புலிகள் நல்லவர்கள் என்பதை சிங்கள மக்கள் உணரச் செய்ய வேண்டும். புலிகள்... தமது அரசின் நீதி நிர்வாக சேவைகளை நிறைவு செய்ய நல்ல ஒத்துழைப்பு நல்கியதாக சிறீலங்காவின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருமுறை குறிப்பிட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டுதல் நன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 10, ஜூன் 2010 (11:50 IST)

இலங்கை போலீசார் அதிரடி: 200 காதலர்கள் கைது

இலங்கையில் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்ள தடை உள்ளது. ஆனாலும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

இதைத்தடுக்க குருனகேலா, மதாரா ஆகிய நகரங்களில் போலீசார் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பூங்கா மற்றும் பஸ் நிலையங்களில் முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடிகளை கைது செய்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 200 ஜோடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவ- மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சிலர் 15 வயதுக்கு குறைவானவர்களும் இருந்தனர்.

nakkheran

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு முத்த்மிட்டால் தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு முத்த்மிட்டால் தப்பு

LTTE_Atrocities_20061201_Gotabhaya_Rajapaksa_09.jpg

  • கருத்துக்கள உறவுகள்

.

அது சரி நாட்டு புறத்தாருக்கு இவை புதுசு தான் :):D

ஆகா...... மருதங்கேணியிட்டை வாங்கிக் கட்ட ரெடியாய் இருங்கோ....

.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதால் சிங்களப் பாதுகாப்புப் படையினருக்கு வந்த வேலையில்லாத் திண்டாட்டம் செய்யும் வேலை.

அது சரி நாட்டு புறத்தாருக்கு இவை புதுசு தான் :):D

அதென்ன நாட்டுப்புறத்தார் நீங்கள் மட்டும் என்னவாம்??

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறவுகள்
:) முத்தமிட்டால் தப்பு, ஆனால் பத்துப் பதினைஞ்சு சிங்கள மிருகங்கள் சேர்ந்து எங்கள் தாய்மாரையும் தங்கை அக்காக்களையும் கற்பழித்து விட்டு, கொன்று தொங்கவிட்டால் பதவியுயர்வு???!!! இங்கே ஒழுக்கம் பற்றியும் நடத்தை பற்றியும் பேசும் கனவான்கள் ஒரு வரியேனும் இதுபற்றி எழுத நினைக்கவில்லை. போங்கள், சிங்கள் நாய்கள் செய்யும் வேலையை சரவ்தேச அரங்கில் அம்பலப்படுத்துங்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் கள்குடிக்க கூடாது என்ற வரையறையை யார் போட்டது. மருங்தங்கேணி உங்கட உருக்கு பக்கத்து ஊர்தான் நான். ஹட்லிக்கல்லூரியில் படித்த காலத்தில் ஊருக்கு வந்தால் களவாக கள்அடிப்பதுதான் எங்கள் பொழுது போக்கு. பின்னர் கொழும்பிற்கு சென்ற பின் தைமாதத்தில் கட்டாயம் ஊருக்கு வருவேன். ஏனெண்டால் அதுதான் கள்ளுச்சீசன். மருதங்கேணி உங்கட ஊரைச்சேர்ந்த என் உறவுக்கார நண்பரும் இன்னும் சில நண்பர்களும் கள்ளுக்குடிப்பதற்கு கேவிலுக்கே ( வண்ணாங்குளம்) செல்வோம். வடமராட்சி கிழக்கில கேவில் கள்ளுத்தான் ரூசி எண்டு சொல்லுவார்கள்.

அது மட்டுமில்லை கள்ளின் பெருமையைப்பற்றி ஒளவையாரே பெருமையாக பாடியிருக்கிறார். நீங்கள் கள்ளடிப்பது தவறு என்று கள்ளுப்பிரியர்களில் குற்றப்பத்திரிகையை சுமத்துகிறீர்கள். அதுவும் மருதங்கேணியில் இருந்து கொண்டு கள்ளின் பெருமையை தெரியாமல் இருக்கிறீர்களே கவலையாக கிடக்கு.

ஊரில எங்கட அப்பா வாடிக்கை கள்ளு எண்டு தினசரி இரண்டு போத்தல் கள்ளு வாங்குவார். அதில கொஞ்சத்தை எடுத்து குடிச்சுப்போட்டு தண்ணி ஊத்தி வைச்சதை அறிந்து கொண்ட அப்பா வீட்டிலை ஒரு விசாரணை ஆணைக்குழுவையே வைச்சார். ஆனால் மகிந்தவின்ர ஆணைக்குழுமாதிரி பிசுபிசுத்து போச்சுது. ஆணைக்குழுவின்ர தலைவராக இருந்த அம்மா என்னில குற்றம் இல்லை எண்டு விடுவிச்சிட்டா,

என்னைப்பொறுத்தவரை கள்ளடிப்பது தவறே இல்லை. அது எங்கட தேசிய பானம். எனக்கென்னவோ எங்கட தேசிய பானத்தை குறைசொன்னால் கோவம் வரும்.

இப்ப எங்களுக்கு ஊரும் இல்லை. உறவுகளும் அழிஞ்சுபோட்டுதுகள். அந்த நினைவுகள் மட்டும்தான் எங்களுக்கு மிச்சம்.

மருதங்கேணியில் இருந்து கொண்டு கள்ளின் பெருமையை தெரியாமல் இருக்கிறீர்களே கவலையாக கிடக்கு.

________ தெரியுமா கற்பூர வாசனை ?

  • கருத்துக்கள உறவுகள்

________ தெரியுமா கற்பூர வாசனை ?

நீங்கள் எப்பவும் இப்படித்தான் இருப்பீர்களா?

________ தெரியுமா கற்பூர வாசனை ?

வாவ்வ்வ்வ்வ்வ்... விடிவெள்ளியார் நீங்கள் எழுதுங்கோ! நீங்கள் சொன்னால் சரிதான்! ... எத்தனை பேருக்கு குதிரையே என்ன கழுதையே இவ்வளவு காலமும் விட்டனீங்கள்!!! .. நீங்கள் எழுதுங்கோ ... நமோ நமோ ....... :D

  • கருத்துக்கள உறவுகள்
:D அவற்றை கதைய விடுங்கோ நெல்லைய்யன், என்ன எழுதிறம் எண்டு அவருக்கே சில நேரத்தில விளங்குறதில்லை. பாவம், சொன்னதைச் செய்யுது மனுசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.