Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி

Featured Replies

போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி

தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்,

அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அரசு முனைப்பு காட்டுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடித்து அவர்களுக்குரிய பணியை நிறைவேற்றி விட்டனர். இனி அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு. நாமே அதை நிறைவேற்ற வேண்டும்.

இந்த நிலையில் ராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதியை தூக்கிலிடப் போவதாக பாதுகாப்பு செயலாளர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருக்கிறார். தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீண்டகால சமாதானத்திற்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது அவசியம் ஆனால், இன்று வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றனர். அரசியல் தீர்வு பற்றி அக்கறைப்படாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். எனினும் அரசாங்கமோ தமிழ் மக்களின் விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாய்ச்சுவதையே குறியாகக் கொண்டுள்ளனர்.

நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தால் நாட்டை பிளவுப்படுத்துவதற்காக மீண்டுமொரு போராட்டம் ஆரம்பமாகக் கூடும். எனினும் அந்த போராட்டமானது வன்னிக்காட்டில் ஆரம்பிக்காது. நியூயார்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும்.

போராட்டத்தில் ஆயுதங்களின்றி தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும். போராளிகள் சயனைட் குப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டவர்களாக இல்லாமல் நன்கு கல்வியறிவுடைய புலம்பெயர் வாழ் மக்களாக இருப்பார்கள். அதை இந்த அரசால் தாக்குப்பிடிக்க முடியாது. " என்றார்.

http://www.pathivu.com/news/7089/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். 2 ரீமாக நமக்குள்ளே நடத்துறமே

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியறிவுடைய தலைமைகளினால் தமிழரின் இனவிடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதை விட சுய நலமற்ற தெளிவான சிந்தனையுடைய எங்களுடைய இலக்கு என்ன என்பதை உலக நாடுகளிடம் வற்புறுத்தும் தலைமையே இன்றைய ஈழத்தமிழருக்கு அவசியமானது.

வாத்தியார்

..............

  • தொடங்கியவர்

உண்மை தான். 2 ரீமாக நமக்குள்ளே நடத்துறமே

ஓண்டு எங்கட குறூப்... மற்றது பெயரை வெளியிலை சொல்லாட்டாலும் பின்னாலை நிற்பது KP குறூப்... ஆழமாய் போனீர்கள் எண்டால் தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஓண்டு எங்கட குறூப்... மற்றது பெயரை வெளியிலை சொல்லாட்டாலும் பின்னாலை நிற்பது KP குறூப்... ஆழமாய் போனீர்கள் எண்டால் தெரியும்...

2 குறுப்பும் இருக்கட்டும். மற்றய குறுப் நாடு கடந்த அரசு என்று சொல்லுது! உங்களின் குறுப் என்ன சொல்லுது செய்யுது??

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில மூன்றாவது குரூப் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

வெட்கப்படவேண்டும் நாம் இப்படி விவாதிப்பதற்காய்..............

இத்தனை ஆயிரம் போராளிகளின் ரத்தத்திலும் சதையிலும் நின்று கொண்டு என்ன பேசுகின்றோம்.....................

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த உலகத்தாலும் சடங்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதில் வெட்கமென்ன மானமென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வெட்கம். அடிபடுகின்ற ஆட்களுக்கே வெட்கம் என்று எதுவுமே கிடையாது. அதைப் பற்றி கதைக்கின்ற நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

நாம் யார் தூயவன்.................?

திருத்தவேண்டும் இக்கழுதைகளை

நாம் நினைத்தால் முடியும்

என்னுடைய சக்தி எனக்கு தெரியும்

அந்த அளவை வைத்து அவர்களை என்னால் ஒரு எல்லைக்கு கொண்டுவரமுடியும்.

இவ்வளவு காலமும் படிக்காதவர்கள் போராட்டம் நடாத்தினார்கள் என்று சொல்லாமல் சொல்லுகின்றாரா?

சிங்கள அரசு ஏதோ தப்பு கணக்கு போட்டு பயப்படுகின்றது. இவர்கள் பதவி கொண்டு ஆசை தங்களுக்குளேயே அ(க)டிபட்டு அழிந்துவிடுவார்கள். :):D:huh:

Edited by விடிவெள்ளி

  • தொடங்கியவர்

2 குறுப்பும் இருக்கட்டும். மற்றய குறுப் நாடு கடந்த அரசு என்று சொல்லுது! உங்களின் குறுப் என்ன சொல்லுது செய்யுது??

பண்டியை எப்படி குளிக்க வார்த்தாலும் சேத்தை பற்றிதான் சிந்திக்கும்... அதுமாதிரித்தான் தாங்களும்...

நான் எந்த குறூப்பும் கிடையாது... ஆனால் சரியானவர்கள் யார் என்பதை தெரிந்து வைத்து இருக்கிறேன்... யாரால் எங்களின் உடமைகள் சூறையாட படுகின்றன என்பதையும் நன்கு அறிந்து வைத்து இருக்கிறேன்...

தாயகத்தில் இருக்கும் போராளிகளுக்கு யார் உதவுகிறார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்தும் இருக்கிறேன்...

மற்றும் படி KP யின் தலைமையை ஏற்க்கவில்லை KPயின் அறிக்கைகளை மதிக்கவில்லை எண்றதும் உங்களை போல நாங்கள் யாரையும் திட்டி தீர்ப்பது இல்லை...

உருத்திரகுமார் அவர்களுக்கு நிலைமை விளங்கப்படுத்த பட்டு இருக்கிறது... KP யால் உருவாக்க பட்ட நிர்வாக குழுக்கள் பற்றிய எச்சரிக்கையும் வழங்கப்பட்டு இருக்கிறது...

நாடுகடந்த அரசின் உருவாக்கலில் KP க்கு எந்த சம்பந்தமும் கிடையாது... உருத்திர குமார் அண்ணாவின் முன்மொழிவை கேட்டு அதுக்கு தனது ஆக்களை உட்புகுத்தியமையை தவிர....

எதையும் அரைகுறையாக தெரிந்து கொண்டால் இப்படிதான்...

Edited by தயா

சிங்கள அரசு ஏதோ தப்பு கணக்கு போட்டு பயப்படுகின்றது. இவர்கள் பதவி கொண்டு ஆசை தங்களுக்குளேயே அ(க)டிபட்டு அழிந்துவிடுவார்கள். :):D:huh:

நீங்கள் சிங்கள அரசு பயப்படுவதாக பொய் எல்லாம் சொல்லுறீங்கோ! ... உங்களுக்கு தெரியாததா? 2001 யுத்த நிறுத்தத்துக்கு பின்னம் எத்தனை முகமூடிகள் உள்ளுக்குள் சொருகப்பட்டார்கள், எத்தனை பேர் வாங்கப்பட்டார்கள், .... வன்னியிலும்/புலத்திலும்!!!! ... வன்னியிலை அப்படி புகுத்தியவர்களும்/வாங்கப்பட்டவர்களும் கடைசி நேரத்தில் செய்ததெல்லாம் நீங்களும்/நாங்களும் சேர்ந்து புலியின் புதுக்கதைகள் கட்டினோம்! இன்று அவர்களில் பலர் கொழும்பில் அனுபவிக்கிறார்களாம் ... பாவங்களுக்கு தெரியாது, உதே சிங்களம் இவர்களையும் புதைக்க நாட்கள் கனகாலமில்லை என்பது ... சொல்ல வந்ததை விட்டுட்டன் ... இங்கு புலத்திலும் நமோ நமோ முதலே பாடத்தொடங்கியவர்களை விட இன்னும் சிலர் இருக்கிறார்கள், அதுவரை சிங்களத்துக்கு செய்வதை அவர்கள் செய்யத்தான் செய்வார்கள்! சிங்களம் ஏனுங்கோ பயப்பட வேணும்? நாமோ நாமோ மாதா பாடுபவர்கள் இருக்கும் மட்டும்!!!!!!!அவர்களும் விரைவில் பாடுவார்கள், ... இல்லிங்களோ????

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தலைமை தாங்க முயலும் எவரும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பார்கள் என்று தோன்றவில்லை. எப்படியாவது சமரசம் (எவருடனாவது) செய்ய முயல்பவர்களாக அல்லது கடுமையான "தேசிய வீரர்"களாக காட்டிக் கொள்பவர்களாக உள்ளனர். குறைந்த பட்சம் ஒரு ஐந்து வருடங்களில் இவர்கள் ஆடி ஓயும்போது தமிழினத்தின் மேல் அக்கறையுள்ள தலைமை யாரென்று தெரியவரும். அதுவரை வேறு வேலை பார்ப்பதுதான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

:) நெல்லைய்யன்,

உங்களுக்குச் சுவாரிசியமான கதை ஒன்று சொல்ல்ப் போகிறேன். அப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு இங்கு அவுஸ்த்திரேலியாவில் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த காலம். இங்கு சிட்னியில் உள்ள பிரபல் தமிழ் வானொலி ஒன்றில் இத்தீர்மானத்தின் மீதான் மீள்வாக்கெடுப்புப் பற்றி 3 மணிநேர நேயருடனான் வானொலி மூலக் கலந்துரையாடல் ஒன்றுக்கு என்னையும் எனது நண்பர் ஒருவரையும் வானொலி சார்பாக அழைத்திருந்தார்கள்.

பலர் அதன் அவசியம் பற்றி பேசினார்கள், சிலர் சந்தேகங்களைக் கேட்டார்கள், எம்மாலான விளக்கங்களைச் சொன்னோம், ஒரு நபர், பெயர் சொல்லாமல், "உதெல்லாம் தேவையில்லாத வேலை, வட்டுக்கோட்டையும் வேண்டாம், ஆனைக்கோட்டையும் வேண்டாம், அம்பாந்தோட்டைக்கு ஒரு சந்தர்ப்பம் குடுத்துப் பார்ப்போம். மனுசன் ஏதோ செய்யிறதாச் சொல்லுகிறார், ஏன் நாங்கள் அவருக்கு ஆதரவு குடுக்கக் கூடாது? இன்னொரு 4 அல்லது 5 வருசத்தில மனுசன் எங்களுக்குச் சரியான தீர்வொன்றைத் தரும். நீங்கள் எல்லோரும் உப்பிடி அந்தப் போராட்டம், இந்தப் போராட்டம் எண்டு சொல்லி மனுசனைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்களே??" என்று ஆதங்கப்பட்டார். இதற்கு நாங்கள் பதிலளிக்கு முன்னரே வானொலி நிகழ்ச்சி நடத்துனருக்கு கடும் கோபம் வந்து, "இத்தனை லட்சம் சனத்தைக் கொன்று புத்தைத்தவன் இனியும் உங்களுக்குத் தீர்வு தருவான் எண்டு எதிர்பார்க்கிறீர்களே, நீங்கள் எந்த உலகத்திலிருக்கிறீர்கள் " என்று பேசி விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.

நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், இவ்வளவு ஏமாற்றங்களுக்கும், இனவழிப்பிற்குப் பின்னரும் கூட சிங்களவன் எமக்கு நியாயமான தீர்வொன்றைத் தருவான் என்று நம்புகிற மனிதர்கள் எம்மில் இருக்கிறார்கள்.

சிங்களவர்கள் எந்த தீர்வையும் தரப் போவதில்லை. அப்படி அவர்கள் ஏதாவது தந்தால் அது எமக்கான கணிசமான சுதந்திரமாகவும் இருக்கப்போவதில்லை. இவற்றை எல்லாம் விட தமிழர்கள் உண்மையில் எந்த தீர்வையும் எதிர்பார்க்கவும் இல்லை என்பதே உண்மை. தமிழர்கள் எதிர்பார்ப்பது உயிர்ப்பாதுகாப்பு தவிர இன அடிப்படையிலான தனித்துவமான உரிமைகள் இல்லை. இன அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனித்துவமான உரிமைகளை வரையறுக்க முடியாது என்பதே யதார்த்தம். தமிழர்கள் வாழும் பிரதேச அடிப்படையிலும் சரி மதம் கலாச்சார அடிப்படையிலும் சரி எந்த ஒரு தீர்வையும் வழங்க முடியாது. நாம் ஒரு தீர்வை எதிர்பார்க்கவும் அல்லது பெற்றுக்கொள்ளவுமான தகுதியை இழந்து நிற்கின்றோம். நாமே இனத்தை சிதைத்து இனத்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் இனத்தை மையப்படுத்தி ஒரு தீர்வை எதிர்பார்ப்பது அபத்தமானது.

சிங்களவர்களை பொறுத்தவரையில் தமிழர்கள் என்பவர்கள் அனைத்து மதத்தையும் பிரதேசத்தையும் (மலயகம் உட்பட) சேர்ந்தவர்கள். எமது நாடுகடந்த அரசு, அனைத்துலக தொடர்பகம் கே பி நெடியவன் என்னும் எத்தனை பூரான்களோ தெரியாது ஆனால் இவை அனைத்தும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பில்லை மாறக சிறு சிறு தொகுதி மக்களின் உணர்வுநிலையும் அதற்குள்ளான போட்டிநிலையும். எமக்குள்காக நாம் மோதி முரண்படுவதென்பது முடிவுக்கு எப்போதும் வரமாட்டாது. எமக்குள் மோதிக்கொள்வதே எமது தனித்துவம். அது சேர சோழ பாண்டியன் காலமாகட்டும் அதற்கு முற்பட்ட காலமாகட்டும் பின்னர் சாதி மத பிரதேசவத ஏற்றதாழ்வுகள் அடிப்படையிலான மோதலாகட்டும் பின்னர் இயக்கங்களுக்கு இடையிலான மோதலாகட்டும் நாம் திருத்தமின்றியே பயணிக்கின்றோம். இனியும் அப்படியே தொடரும்.

எமக்கும் தனியரசு சுயாட்சி இவ்வாறானவறறுக்கும் தொடர்பில்லை. அது எமக்கு சரிவரவும் மாட்டாது. தேசியவாதம் பற்றி நாம் கதைக்கவேண்டும் என்றால் சாதி மதம் பிரதேசவதம் வர்க்க பேதங்களை துறந்தே கதைக்கவேண்டும். எமக்குரிய பூர்விக பிரதேசங்களில் இருந்து கதைக்கவேண்டும். அவ்வாறில்லாமல் நாம் இனம் தேசியம் என்று பினத்துவோமாக இருந்தால் அது தற்கொலைக்கு சமமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டியை எப்படி குளிக்க வார்த்தாலும் சேத்தை பற்றிதான் சிந்திக்கும்... அதுமாதிரித்தான் தாங்களும்...

நான் எந்த குறூப்பும் கிடையாது... ஆனால் சரியானவர்கள் யார் என்பதை தெரிந்து வைத்து இருக்கிறேன்... யாரால் எங்களின் உடமைகள் சூறையாட படுகின்றன என்பதையும் நன்கு அறிந்து வைத்து இருக்கிறேன்...

தாயகத்தில் இருக்கும் போராளிகளுக்கு யார் உதவுகிறார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்தும் இருக்கிறேன்...

மற்றும் படி KP யின் தலைமையை ஏற்க்கவில்லை KPயின் அறிக்கைகளை மதிக்கவில்லை எண்றதும் உங்களை போல நாங்கள் யாரையும் திட்டி தீர்ப்பது இல்லை...

உருத்திரகுமார் அவர்களுக்கு நிலைமை விளங்கப்படுத்த பட்டு இருக்கிறது... KP யால் உருவாக்க பட்ட நிர்வாக குழுக்கள் பற்றிய எச்சரிக்கையும் வழங்கப்பட்டு இருக்கிறது...

நாடுகடந்த அரசின் உருவாக்கலில் KP க்கு எந்த சம்பந்தமும் கிடையாது... உருத்திர குமார் அண்ணாவின் முன்மொழிவை கேட்டு அதுக்கு தனது ஆக்களை உட்புகுத்தியமையை தவிர....

எதையும் அரைகுறையாக தெரிந்து கொண்டால் இப்படிதான்...

ஒன்று எ ங்கட குறூப் ... என்று எழுதியதே நீங்கள் தானே. அதன் பிறகு ஏதோ நான் ஒரு குறுப்பும் கிடையாது என்று பல்டி அடித்தால் என்ன செய்ய! யோசிக்காமல் எழுதுவது பழக்கப்பட்டு விட்டது என்ன??

சொல்லப் போனால் உங்களைப் போன்று எல்லா விடயங்களையும் அறிந்த ஞானி நான் கிடையாது. ஆனால்சேர்ந்து இயங்குவது என்பது வேறு. அல்லது சேர்ந்து இயங்குவது போலப் படம் காட்டுவது வேறு என்பதையும் புரிந்து கொண்டிருக்கின்றேன்.

கேபி எவ்வளவு சிறிலங்காவில் சுதந்திரமாக இயங்குகின்றார் என்பது தெரிந்த விடயமே. ஐரோப்பாவில் பிள்ளைகளோடு இணைந்துள்ள இறுதிநாள்வரை வன்னியில் இருந்த ஆய்வாளர் கொழும்பில் சுதந்திரமான கேபியின் நடமாட்டத்தைக் கண்டதாகச் சொன்னதாக தகவலும் வெளிவந்திருந்தது.

உருத்திரகுமார், நாடு கடந்த அரசு, மக்கள், தேர்தல் என்று எல்லாவற்றையும் விட்டால் இவ்வளவு காலத்தில் எவ்வளவு தூரம் சாதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு என்ன பதில் கூற முடியும்?? அந்த ஆதங்கத்திற்கு நிச்சயம் உங்களால் பதிலளிக்க முடியாது.. (அடுத்தமுறை எருமையைப் பாவியுங்கள். அதுவும் சேற்றுக்குள் இருந்தாலும் கொஞ்சம் மரியாதையாகத் தோன்றும்...)

சென்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா, ஏதோ ஆதரவாகச் சொன்னார் என்பதற்காக அவருக்கு ஆதரவளிக்கலாம் என்ற மாதிரி எழுதிக் கொண்டிருந்தீர்கள். அந்தக் கதையையும் இப்போது மறந்து விட்டீர்கள் போலும்.

பன்றியையும், சேத்தையும் பற்றி என்னவோ எழுதினீர்கள். இதற்குள் எப்படி சம்பந்தம் வருது என்று தெரியவில்லை. எனக்குப் பன்றியை உதாரணம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அதை இழுத்தீர்கள் போலும். நல்லவேளை துரோகியாக்காமல் விட்டுவிட்டீர்களே!

எங்களின் குறூப் எண்று சொன்னதில் நீங்களும் அடக்கமாக தான் இருந்தீர்கள்... அதை இன்னும் விளக்கமாக சொன்னால் சிங்களவனோடை நிண்று தமிழர்களின் அபிலாசைகளை திசை திருப்புவோர், தமிழின ஆர்வலர்கள் என்பன அவை...!

ஆனால் அந்த தமிழின உணர்வாளர்களை இரண்டாக பிரித்தது தாங்கள் தான்... அதில் நாடுகடந்த அரசை ஆதரிக்கும் குழு ஆதரிக்காத குழு எண்று பிரித்தமை தங்களின் தவறு... இதுக்கும் மேலே போய் இன்னும் ஒரு தலைப்பில் புலிகளின் தலைமையால் நியமிக்க பட்டவர்களை சீண்டிய கருத்துக்கள் என்பன உச்சம்...

யாரும் நாடுகடந்த அரசுக்கு எதிரிகள் இல்லை... அது KP குழுவால் இயக்க படாமல் இருக்குமானால்... KP குழு தான் தொடர்ந்து இயக்குமாக இருந்தால் அதை நம்புவதில் அர்த்தமும் இல்லை...

இதில் தமிழர்களை பிளவு படுத்தி நிற்பதாக காட்டும் உங்களுக்கு அறிவு வேண்டும் அப்படி ஒண்று இல்லை... KP யின் கையாட்களின் கூச்சல்களை தவிர எண்று...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். அந்தக் குழுவை இரண்டாகப் பிரித்தது நான் தான். மற்றும்படி ஒற்றுமையாகத் தானே, வானொலிகளில், ஊடகங்களில் போற்றுக் கொண்டு இருக்கப்பட்டது. ஒரே அமைப்பாக இருந்தமையால் தான் வட்டுக்கோட்டைக்கு ஒரு தேர்தல், நாடு கடந்த அரசுக்கு ஒரு தேர்தல், எனி வரும் காலத்தில் மக்கள் அவைக்கான தேர்தல்....

இவ்வளவு காலம் என்ன நடந்தது என்பதை நாங்கள் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டா பார்த்துக் கொண்டிருந்தோம்??

எனக்கு அறிவு இல்லையா இருக்கா என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு நீங்கள் அறிவு பெற்றதை இட்டு மகிழ்வு கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஏமாற்றங்களுக்கும், இனவழிப்பிற்குப் பின்னரும் கூட சிங்களவன் எமக்கு நியாயமான தீர்வொன்றைத் தருவான் என்று நம்புகிற மனிதர்கள் எம்மில் இருக்கிறார்கள்.

சிங்களவர்கள் எந்த தீர்வையும் தரப் போவதில்லை. அப்படி அவர்கள் ஏதாவது தந்தால் அது எமக்கான கணிசமான சுதந்திரமாகவும் இருக்கப்போவதில்லை. . தேசியவாதம் பற்றி நாம் கதைக்கவேண்டும் என்றால் சாதி மதம் பிரதேசவதம் வர்க்க பேதங்களை துறந்தே கதைக்கவேண்டும். எமக்குரிய பூர்விக பிரதேசங்களில் இருந்து கதைக்கவேண்டும். அவ்வாறில்லாமல் நாம் இனம் தேசியம் என்று பினத்துவோமாக இருந்தால் அது தற்கொலைக்கு சமமானது.

ஜெகத்: உங்கள் காலத்திலேயே ஈழம் மலருமென்ற நம் பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பிரபாகரன்: உங்களது கேள்வியின் கோணத்தில் நான் இயங்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்டமென்பது நீண்ட பயனையும், அதன் இறுதி வெற்றி எங்களது ஆற்றல்களை மட்டுமே சார்ந்ததல்ல, பல்வேறு புறச் சூழல்களையும் சார்ந்தது. என் னைப் பொறுத்தவரை எனக்குப் பின்னரும் ஐம்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒழுங்குகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

  • தொடங்கியவர்

ஆமாம். அந்தக் குழுவை இரண்டாகப் பிரித்தது நான் தான். மற்றும்படி ஒற்றுமையாகத் தானே, வானொலிகளில், ஊடகங்களில் போற்றுக் கொண்டு இருக்கப்பட்டது. ஒரே அமைப்பாக இருந்தமையால் தான் வட்டுக்கோட்டைக்கு ஒரு தேர்தல், நாடு கடந்த அரசுக்கு ஒரு தேர்தல், எனி வரும் காலத்தில் மக்கள் அவைக்கான தேர்தல்....

புலிகளின் குரல் புலிகளின் குரல் எண்டு ஒருவானொலி இப்பவும் இருக்கிறது நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பியளோ எனக்கு தெரியாது... அதில் நீங்கள் சண்டை பிடிப்பதாக சொல்லும் ஒரு தரப்பினரால் நடத்தப்படுவது... மற்றய தரப்பு எண்டு நீங்கள் சொல்லும் உருத்திரகுமார் அண்ணாவுக்கு ஆதரவான செய்திகளும் அவரின் பேட்டிகளும் வருவது மட்டும் எப்பிடி...

கீழை ஒரு உதாரணம்.. நாடுகடந்த அரசின் எதிரிகளாக நீங்கள் வர்ணிப்பவர்களினால் நடத்தப்படும் புலிகளின் குரலில் இருந்து...

"நாடுகடந்த அரசு" ஆசிரியர் கண்ணோட்டம்- புலிகளின் குரலின். உண்மையான கருத்துக்கள்...

http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/24.04/Asiriyar%20kannoddam.mp3

http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/24.04/asiriyar-kanodaam.ram

ருத்திரகுமார் நேர்காணல்

http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/26.04/Uruthirakumar%20annai%20Interview%20OK.mp3

உங்களின் பித்தலாட்டமான தமிழர்களை குழப்பும் கருத்துகளை விதைக்கும் கூட்டத்துக்கு இதுவே போதுமானது...

KP கூட்டத்தால் தூண்டப்பட்டு அவர்களின் கதைகளில் எடுப்பட்டு சொந்த அறிவுக்கு இடம் கொடுக்காமல் நிற்க்கும் நீங்கள் கூட கொடியவர்களோ... !

இவ்வளவு காலம் என்ன நடந்தது என்பதை நாங்கள் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டா பார்த்துக் கொண்டிருந்தோம்??

எனக்கு அறிவு இல்லையா இருக்கா என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு நீங்கள் அறிவு பெற்றதை இட்டு மகிழ்வு கொள்கின்றேன்

உங்களின் அறிவும் ஆராச்சியும் தான் வெளிப்படையாக தெரிகிறதே...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தை நீங்கள் குத்தகைக்கு எடுத்தது போலக் கதைப்பது ஒன்றும் ஆச்சரியம் தரவில்லை. இந்த ஒரு வருட காலத்தில் குழப்பங்களை விதைத்து

கேபி என்ற மனிதனின் கருத்தை உள்வாங்க வேண்டிய தேவை யாருக்குமில்லை. சிங்கள அரசின் காவலில் இருக்கின்ற ஒரு மனிதனின் கருத்துக்குச் சோரம் போகின்ற அளவில் விடுதலையை நேசித்த எவருமில்லை. ஆனால் அந்த மனிதனின் கருத்துக்குச் சோரம் போகின்றார்கள் என்ற வாதத்தை உருவாக்கியோ, அல்லது அந்த சிந்தனையில் இருந்தபடியால் முதன்மை எதிரியான சிங்கள அரசினை மறந்து விட்டு இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கின்ற{ர்கள்.

ஆனால் உங்களைப் போன்று டக்ளஸ் தேவானந்தாவை எந்தக் காலத்திலும் நம்பிக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்குக் கேபியை நம்புகின்றவர்கள் என்று போடுகின்ற உங்களின் கோசம் தான் அன்றைக்கு டக்ளஸ் மேலே நீங்கள் போட்டதாகும்.

வாதத்தை நீடிக்கவிரும்பவில்லை ஆதலால் நிறுத்துகின்றேன்

  • தொடங்கியவர்

விடுதலைப் போராட்டத்தை நீங்கள் குத்தகைக்கு எடுத்தது போலக் கதைப்பது ஒன்றும் ஆச்சரியம் தரவில்லை. இந்த ஒரு வருட காலத்தில் குழப்பங்களை விதைத்து

கேபி என்ற மனிதனின் கருத்தை உள்வாங்க வேண்டிய தேவை யாருக்குமில்லை. சிங்கள அரசின் காவலில் இருக்கின்ற ஒரு மனிதனின் கருத்துக்குச் சோரம் போகின்ற அளவில் விடுதலையை நேசித்த எவருமில்லை. ஆனால் அந்த மனிதனின் கருத்துக்குச் சோரம் போகின்றார்கள் என்ற வாதத்தை உருவாக்கியோ, அல்லது அந்த சிந்தனையில் இருந்தபடியால் முதன்மை எதிரியான சிங்கள அரசினை மறந்து விட்டு இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கின்ற{ர்கள்.

ஆனால் உங்களைப் போன்று டக்ளஸ் தேவானந்தாவை எந்தக் காலத்திலும் நம்பிக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்குக் கேபியை நம்புகின்றவர்கள் என்று போடுகின்ற உங்களின் கோசம் தான் அன்றைக்கு டக்ளஸ் மேலே நீங்கள் போட்டதாகும்

வாதத்தை நீடிக்கவிரும்பவில்லை ஆதலால் நிறுத்துகின்றேன்

என்ன கதையை வேறை திசைக்கு மாத்துறீர்...??

எங்கையோ பிரச்சினை இருக்கு எண்டு அடிச்சு வைச்சு KP கூட்டத்தின் குரலால் ஒலித்தீர்.... அனத்துலக தொடர்பகம் மீது சேறு வாரி எல்லாம் திட்டினீர்... நாடுகடந்த அசசுக்கு ஆதரவு குடுக்க இல்லை எண்டது போண்ற கதைகள் எல்லாம் சொன்னீர்... இப்ப ஆதாரங்களை அப்படி இல்லை எண்று தந்ததும் எஸ்கேப்பா..??

சரி நான் எப்போது டக்கிளசை நம்பினேன்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வார்த்தையில் உள்ள சூழ்ச்சியை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றேன். செயற்பாட்டின்மையைச் சுட்டிக் காட்டும்போது அதைக் கேபியின் குரல் என்று இலாவமாக மாற்றுகின்ற செயல் அதில் தெளிவாகவே தெரிகின்றது. கேபி செய்த துரோகத்தில் என்றைக்கு உடன்பாடு இருந்ததில்லை. அப்படி இருக்கும்போது அவனின் குரலாக எவ்வாறு ஒலிக்க முடியும்?

ஏதோ சேறு வாரி எறிந்ததாக கதை முடிகின்றீர்கள். உங்களின் வாதத்திறமையை என்னிடம் வேண்டாமே! முதன்மை எதிரி மேலே நடந்து கொண்ட செயற்பாட்டின் அளவில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் எவ்வித தவறுமில்லை.

இதில் எஸ்கேப் ஆகுவதற்கு ஒன்றுமே இல்லை. தேவை எனில் சம்பந்தப்பட்டவர்கள் கூடவே கதைத்துக் கொள்ளலாமே தவிர, உங்களின் கூட இதைப் பற்றி விவாதிப்பதில் எனக்கு எவ்வித பலனுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.