Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிஞ்சால் சொல்லுங்கோ

Featured Replies

வணக்கம், வெளிநாடுகளில இருந்து சிறீ லங்காவுக்கு போற தமிழ் ஆக்கள் சிறீ லங்கா காவல்துறை அல்லது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற வேண்டிய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக இங்கு யாருக்கும் தகவல்கள் தெரியுமோ? குறிப்பாக, "வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை - வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி பெறவேண்டும்" எனப்படும் தகவல் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமோ? மற்றையது, சிறீ லங்கா காவல்துறையில் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமது வதிவிடம், பயண நோக்கங்கள் பற்றி பதிவு செய்யவேணுமோ? இதுபற்றிய தகவல்களை பெறக்கூடிய சிறீ லங்கா அரசாங்க வலைத்தள தொடுப்புக்களை அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள். நன்றி.

எப்ப யார் போகிறார்கள் எண்டு சொன்னியள் எண்டால் பிள்ளையான் அண்ணையிட்ட சொல்லி உங்களை ஏர்போட்டிலை வைத்து வான் விட்டு ஏத்தி அனுப்ப சொல்லுகிறன்... :wub::lol: :lol:

வேறை ஒண்டும் நீங்கள் என்னை கேட்டுப்போடாதேங்கோ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தெரிஞ்சாலும் சொல்லமாட்டினம்.

களவாய்ப் போய் களவாய் வந்து விடுவினம் மச்சான்

எல்லாரும் அமுசடக்கியள் :unsure:

வாத்தியார்

............................

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் சிறிலங்கா போய் வெற்றியுடன் மீண்டு வந்த விடிவெள்ளி இன்னும் சற்று நேரத்தில் இங்கு தோன்றி இது பற்றி விளக்கமளிப்பார் என்பதை பணிவன்புடன் அறியத் தருகிறோம்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

.

.

stolper.gif graben.gif

gassi.gif

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

வாற ஜனவரி மட்டும் சிறீ லங்காவுக்கு போறதுக்கு விமானச்சீட்டுக்கள் எல்லாம் விற்று முடிஞ்சிது என்று சொல்லப்படுகிது. பயணங்கள் சம்மந்தமாக அங்கு கடைப்பிடிக்கப்படும் நிருவாக நடைமுறைகள் பற்றிய தகவல்கள் இஞ்ச ஒருத்தருக்கும் தெரியாதோ? தகவல்கள் தெரிஞ்சவர்கள் பகிர்ந்துகொண்டால் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்குமே.

  • கருத்துக்கள உறவுகள்

அவசர பயணமாக இலங்கை சென்று நேற்றுத்தான் திரும்பியிருந்தேன்!

கொழும்பு போவதென்றால் விசேடமாக எதுவும் தேவையில்லை. வழமையான arrival card மட்டும் நிரப்பவேண்டும். கொழும்பில் இருப்பதற்கு பொலிஸ் அனுமதிப் பத்திரம் தேவையில்லை.

வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதற்கு அங்கு பிறந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை. பாஸ்போட்டில் உள்ள பிறந்த இடம் வடக்கு-கிழக்குப் பகுதியாக இருந்தால், உறவினர்களைப் பார்க்கப் போவதாக மதவாச்சியில் செக் பண்ணும்போது சொன்னால் போதும். பிள்ளைகள் வெளிநாட்டில் பிறந்தவர்கள் தனியே பிரயாணம் செய்ய அனுமதிப் பத்திரம் தேவைப்படும். எனினும் பெற்றோருடன் சென்றால் தேவை வராது என்றே நினைக்கின்றேன். எனினும் சரியான சட்ட நடைமுறைகள் தெளிவாக இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு விடையம் அறிந்தேன் உண்மையா? கடந்த வாரம் கனடா நாட்டிலிருந்து திருமணத்திற்காக ஒரு தமிழ் வாலிபர் கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வநதிறங்கியதாகவும் அப்போது சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவு அவரை விசாரணைக்குட்படுத்தி அதன் பின்பு அங்கு இருந்த தொலைக்காடசியில் கனடாவில் நடைபெற்ற ஆhப்பாட்டங்கள் ஏதாவதில் அவர் பங்குபற்றியருக்கிறாரா என ஆராயப்பட்டு அதன்பின்பு தலையாட்டி ஒருத்தரை வரவழைத்து அவர் அடையாளம் காணாதவிடத்தே நாட்டுக்கு உள்நுழைய அனுமதியளிக்கப்பட்டதென்றும் ஆனால் அவர் பயம் காரணமாக கெஞ்சிக் கூத்தாடி வந்த வானூர்தியிலேயே திரும்பவும் கனடாவுக்குத் திரும்பிவிட்டாரென அறிந்தேன். இப்படி கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் நடப்பது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தனது சொந்த மண்ணுக்குப் போய்வருவது நல்ல விடையமே. ஆனால் அங்கு போவதால் தேவையில்லாத பிரச்சனைகளை வாங்கிக்கட்டிக் கொள்ளுவதாகவிருந்தால் போகாதுவிடலாம் எனது நண்பர் ஒருத்தரது தந்தையார் கடும் சுகவீனமாகிருக்கிறார் தான் போய்பார்க் முடியாதுபோலுளஇளது எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார் ஆகவேதான் தாங்கள் அண்மையில் போய் வநதவராகவிருந்தால் அங்கு எதாவது பிரச்சனைகள் இருக்குதா? விபரம் சொல்லவும் பிரச்சனையில்லையேல் அவர் தனது தந்தையை ஒருக்கால் பார்த்துவரட்டும்

இதே யாழ் களத்தில் இலங்கை போய்வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதியிருந்தார்கள். அதற்காக நானும் வெள்ளிக்கொடிக்குப் போட்டியாக "அங்கு பிரச்சினை எதுவுமில்லை, தாரளாமாகப் போய் வாருங்கள்" என்று சொல்லப் போவதில்லை. அவசர தேவையாகத்தான் போயிருந்தேன். எதுவித பாதுகாப்புக் கெடுபிடிகளும் ஏற்படவில்லை. நான் அவதானித்த வகையில் வேறு யாருக்கும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. கொழும்பில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அறவே இல்லை என்று கூறலாம் (IIFA விருது விழா நேரத்தில் போனதால் கெடுபிடிகளை நீக்கியிருக்கலாம்). எனினும் வடபகுதி போகும்போது அவதானமாகப் போகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அவங்களுக்கு நாங்கள் தேவை.காசில்லாமலும் வடபகுதிக்கு அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் நாங்கள் போகலாமோ?

எதற்காகப் போகின்றொ என்று யோசிக்க வேண்டாமொ?

எங்களைக் காட்டியே எங்களை விலை பேச அனுமதி அளிக்கலாமோ?

வாத்தியார்

.........................

  • தொடங்கியவர்

தகவல்களுக்கு நன்றி கிருபன்.

எனது நண்பனொருவர் லண்டனில் இருந்து இலங்கை போய் செட்டிலாகியிருகின்றார்.கொழும்பில் ஒரு லக்ஸறி அப்பாட்மென்ட் அதைவிட ஊரில் ஒரு வீடு மிக சந்தோசமாக இருக்கின்றார்.

இப்போது எனது வேறொரு நண்பனும் லண்டனில் இருந்துபோய் அவருடன் நிற்கின்றார்.இப்போது போன் பண்ணினார் தண்ணியடித்துக் கொண்டு உதைபந்தாட்டம் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.அதற்காக நாட்டில் பிரச்சனை இல்லை என்று இல்லை.அது ஒரு பக்கம் இவர்கள் ஒரு பக்கம் .இலங்கையில் செட்டிலாகிய எனது நண்பர் 76, 78 யாழ்ப்பாணத்தை கலக்கிய உதை பந்தாட்ட வீரர்.ஒரு வானும் மோட்டர்பைக்கும் வைத்திருக்கின்றார்.எமது நண்பர்கள் யாராவது இலங்கை போவதென்றால் அவர்தான் வந்து கூட்டிக் கொண்டுபோவார்.இரண்டு கிழமைக்கு முன்பு எனது மனைவியின் அக்கா இலங்கை போக அவர்தான் வந்து கூட்டிக்கொண்டுபோய் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.வெளிநாட்டுப் பயணத்தால் வந்த வித்தியாதரனையும் கையோட கூட்டிக் கொண்டு போனதாக சொன்னார்.

மச்சானுக்கு உதவி தேவை எனில் சொல்லவும்.

எனது மூன்று நண்பர்கள் முறையே அவூஸ்ரேலியா கனடா டென்மார்க்கில் இருந்து சென்று நிரந்தரமாக செட்டில் ஆகியிருக்கிறார்கள். ஒருவர் கொழும்பு மற்றையவர் வவுனியா மற்றயைவர் கிளிநொச்சி. இதில் கிளிநொச்சியில் சென்று குடியேறிவர் கனடாவில் இருந்து சென்றவர் தற்போதுதான் அங்கே வீடுகாணியுடன் வாங்கி உள்ளார். இராணுவத்தினரே தனது காணிகளை வந்து துப்பரவு செய்து தந்ததாகவும் சொன்னார்....... காலையில் போனில் பேசினினேன் நாளை வீட்டுக்கு வெள்ளையடிக்கவும் வருவார்களாம். கொழும்புக்கு சென்றவர் ஒரே தண்ணியடித்துகொண்டு இருக்கின்றார் அதலால் எல்லாம் துசணத்திலேயே சொல்கிறார். அவர்களுடைய கருத்துகளை எந்த கற்பனையும் எள்ளவும் இன்றி எழுதவேண்டியிருப்பதால் அதை எழுதாமல் விடுவதே நல்லதென்று படுகின்றது. மற்றையவர் வவுனியா அவர் ஒரே சோனியா சோனியா என்று பாடுறார் என்ன புதுசா ஏதும் காதோலோ கிதலோ என்று விசாரித்தால். இல்லை இந்திய காங்கிரஸ்கட்சி தலiவி சோனியாகாந்தி அவர்கள் எல்லாத்தையும் புரணமைக்கவேண்டும் என்று ஒற்ற காலில நிற்கிறாவாம் அதனால் காகத்தை பார்பபதற்கு பஸ்சில பலமைல் தூரம் போகவேண்டுமாம்.

அதற்காக நாட்டிலே பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை..............

முன்பு ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு துன்பம் விளைவித்தவர்கள் சென்றால் இனிமேல் அப்படி செய்ய கூடாது என்று கூப்பிட்டு சொல்லிவிடுகிறார்களாம் என்று கேள்விபட்டேன்.

இது மேலே உள்ள கதைபோல் கற்பனையல்ல..... நிஜம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பனொருவர் லண்டனில் இருந்து இலங்கை போய் செட்டிலாகியிருகின்றார்.கொழும்பில் ஒரு லக்ஸறி அப்பாட்மென்ட் அதைவிட ஊரில் ஒரு வீடு மிக சந்தோசமாக இருக்கின்றார்.

இப்போது எனது வேறொரு நண்பனும் லண்டனில் இருந்துபோய் அவருடன் நிற்கின்றார்.இப்போது போன் பண்ணினார் தண்ணியடித்துக் கொண்டு உதைபந்தாட்டம் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.அதற்காக நாட்டில் பிரச்சனை இல்லை என்று இல்லை.அது ஒரு பக்கம் இவர்கள் ஒரு பக்கம் .இலங்கையில் செட்டிலாகிய எனது நண்பர் 76, 78 யாழ்ப்பாணத்தை கலக்கிய உதை பந்தாட்ட வீரர்.ஒரு வானும் மோட்டர்பைக்கும் வைத்திருக்கின்றார்.எமது நண்பர்கள் யாராவது இலங்கை போவதென்றால் அவர்தான் வந்து கூட்டிக் கொண்டுபோவார்.இரண்டு கிழமைக்கு முன்பு எனது மனைவியின் அக்கா இலங்கை போக அவர்தான் வந்து கூட்டிக்கொண்டுபோய் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.வெளிநாட்டுப் பயணத்தால் வந்த வித்தியாதரனையும் கையோட கூட்டிக் கொண்டு போனதாக சொன்னார்.

மச்சானுக்கு உதவி தேவை எனில் சொல்லவும்.

வெள்ளை வானோ வச்சு இருக்கார் மச்சான் கவனம் கவனம், அவ்வளவுதான் என்னால சொல்ல ஏலும், போன கிழமை எனது நண்பன் போய் இருந்தான் குடும்பத்தோடு, திருமணத்துக்காக வந்த ஒரு கனடா பெடியனை கடத்தி ஜந்து கோடி கேட்டு இருக்கிறாங்கள், ஜந்து கோடிக்கு எத்தனை சைவர் வரும் என்றே தெரியாத பெடியன் காசுக்கு எங்க போவான், துண்டு துண்டாக வெட்டி பாசலில் அனுப்பி இருக்கிறாங்கள், திருமணத்துக்கு எடுத்த கோலிலேயே வச்சு செத்த வீடு செய்தவியளாம். ஆரும் கேள்வி பட்டியளோ தெரியாது, நல்ல காலம் எனது நண்பன் எந்த ஆபத்தும் இல்லாமல் வந்துட்டான், எதாவது நடந்தால் சம்பவம். நடக்காவிட்டால் சும்மா, தேள்வை உள்ளவர்கள் கவனமாக போய்வரவும், தேவை இல்லாமல் போய் ஏன வீண் வம்வு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறக்காதவர்கள் வடக்கு கிழக்கு போவதாக இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் விண்ணப்பித்து அவர்கள் அனுமதி பெற்ற பின்பே செல்லுங்கள்.

  • தொடங்கியவர்

எல்லோர் தகவல்களுக்கும் நன்றி. பிரயாணம் சம்மந்தமான விடயங்கள், நிருவாக நடைமுறைகள் பற்றிய கவல்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சொந்தமான காணி ,வீட்டை கள்ள உறுதிமுடிச்சு தங்கடை பேரிலை நாசமறுப்பார் மாத்திப்போட்டாங்கள்

ஏற்கனவே இருந்த பங்கு பனங்காணி,தரவை,வேலியில்லாத பத்தையள் வயலுகள் எல்லாத்தையும் தங்கடை பேரிலை மாத்திப்போட்டாங்கள்

இதுகளை திருப்பியெடுக்க வழியேதுமிருக்கோ?

  • தொடங்கியவர்

நான் கேள்விப்பட்ட சில விசயங்களில ஒன்று: அங்கை உள்ளூர் சண்டியர்களிண்ட அதிகாரம் அதிகளவில கோலோச்சிது என்கிறது. உதாரணத்துக்கு இப்ப நீதிமன்றத்தில தீர்ப்புக்கூறிய காணி சம்மந்தமான விசயங்களைக்கூட ஏற்றுக்கொள்ளாது உள்ளூர் சண்டியர் தங்கள் அதிகாரப்படி ஒழுங்கைகள் போடுறது, எல்லைகள் போடுறது எல்லாம் நடப்பதாய் சிலர் சொன்னார்கள். காவல்துறையும் ஒன்றும் செய்யாமல் கையைக்கட்டிக்கொண்டு இருக்கிதாம். கையில காணி உறுதி இருந்தாலும்... சண்டியர்கள் யாராச்சும் வந்து உங்க காணிக்கு உரிமைகோரி நிலத்தை ஆக்கிரமிச்சால் பிறகு ஒன்னும் செய்ய ஏலாது. உள்ளூர் சண்டியர்கள் தங்கள் வசதிப்படி எல்லைகள் போடுவதாய் கேள்வி.

உள்ளூர் சண்டியரின் விடயம் உன்மைதான் சண்டியர் கூட சொல்லினம் தான் கருணாவின் ஆள் என்று.

எனது நன்பன் போன நேரம் சண்டியர் இல்லையாம் கடற்படை தளத்தில் சோறு போடுறாங்கள் என்று அங்க போயிட்டாராம், கூட்டாளி உடன தகவல் கொடுக்க திரும்ப வந்திட்டானாம். மூண்று நாளா ஏழுமனிக்கு பிறகு லைட்டை நிப்பாட்டி போட்டு இருட்டுக்குள்ள் இருந்தவியளாம், மனிசி ஒரே புடுங்கு பாடு இவ்வளவு காசு சிலவழிச்சு இருட்டுக்குள்ள இருகிறதுக்கோ வந்தது என்று, பிறகு கொழும்புக்கு வந்திட்டினமாம், அனால் ஒரு வியசம் நடக்குதாம் மாற்று இக்கமாக இருதவியளும், ஆமிக்கு பின்னால வால் பிடித்து கொண்டு இருந்தவையலையும் தமது தேள்வை முடிந்ததும் தட்டி கொண்டு வாறாங்களாம், புலி இல்லாட்டி இவயளின் தேள்வையும் தேள்வை இல்லையாம், கேட்க யாரும் இல்லை சனமும் போய் தொலையுட்டும் என்று சந்தோஸத்தில் கம்முன்னு இருக்காம். :(

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஒவ்வொரு தனிநபர்கள், அவர்களது பின்னணிகளுக்கு அமைய இலங்கை அனுபவங்கள் வித்தியாசப்படக்கூடும். எனக்கு தெரிந்த அளவில் பலரும் தங்கள் இலங்கை அனுபவம் மகிழ்ச்சிகரமானதாக காணப்பட்டதாக சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகள் மிகவும் ஊக்கமுடையவர்களாக ஏதாவது கல்வி, தொழில்துறைகளில் ஈடுபாடு காட்டுவதாகவும் கூறினார்கள். ஓமந்தையில் (சரியாக தெரியவில்லை) மட்டும் பாதுகாப்பு சோதனை சாவடியில் அடையாள அட்டை பார்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதாகவும், வேறு அனுமதிகள் தேவை இல்லை எனவும், அத்துடன் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் அல்லாமல் இலங்கை அடையாள அட்டையை மட்டுமே பாதுகாப்பு படையினர் முக்கியமாக பார்வையிட விரும்புவதாகவும் சொன்னார்கள். இதேபோல் உயர்பாதுகாப்பு வலைய பகுதிகளினுள் செல்லும்போதும் சற்று விரிவாக அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுவதாக கூறினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.